Tuesday, November 18, 2008

பதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும்

“சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையப்போ போலீஸ்தான் அப்படி வேடிக்கை பார்த்ததுன்னா பத்திரிகையாளர்கள்கூடவா சும்மா இருந்தீங்க?”

“ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சாவி ஒரு மேடையில பேசிட்டிருக்கும்போது மயங்கி விழறாரு. அப்போ சன் டி.வி. கேமராமேன் அங்க இருக்கார். இயல்பிலேயே புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கற அவன் ‘ஐயையோ.. ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் மயங்கி விழறாரு’ங்கற உந்துதல்ல கேமராவைத் தூக்கிப் போட்டுட்டு அவரைத் தாங்கறார். ஆஃபீஸ் வந்தப்ப கேக்கறாங்க... ‘சாவி மயங்கி விழுந்த விஷூவல் எங்கே?’ இல்லை! ஒரு மாசம் சஸ்பெண்ட்! லாஸ் ஆஃப் பே. சோத்துக்கு என்ன பண்ணுவான்? அவன் அவனுக்கு அவன் அவன் வேலை. அடுத்தவன் வேலையை அவன் எதுக்கு செய்யணும்? இது வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுது. ஹிரோஷிமாவுல அந்த குழந்தை வெளில வர்ற விஷூவல் எடுக்கலைன்னா அந்தப் போரோட கொடுமை வெளிலயே தெரிஞ்சிருக்காதே”

“சரிதான். நீங்க சொல்ற மாதிரி பத்திரிகையாளர்கள் போய் உதவிசெஞ்சு இவங்க அடிவாங்காம இருந்திருந்தா.. இவ்ளோ பெரிய அட்டூழியங்கள் அங்க நடக்கறது வெளியவே வந்திருக்காது. இப்போ இப்படிக் கேக்கற வாய் ‘இவனுக போனமா, நியூஸ் கலெக்ட் பண்ணினோமான்னு இல்லாம எதுக்கு அந்த ரௌடிக் கூட்டத்துக்குப் போய் உதவணும்?’ன்னு கேக்கும்”

“இன்னொரு விஷயம்.. அப்படியும் போலீஸ்கிட்ட ‘என்னவாவது பன்ணுங்கய்யா’ன்னு வாக்குவாதம் பண்ணிகிட்டிருந்தது பத்திரிகையாளர்கள்தான்”

*****************************

“இத்தனை பேர் இந்த மாதிரி கூட்டம் போடக்கூடாதுங்க. என்னங்க நடக்குது இங்கே?”

“நாங்க ஃப்ரெண்ட்ஸ்ங்க. பேசிகிட்டிருக்கோம்”

“அதெல்லாம் கூடாதுங்க”

“சரிங்க. நாங்க உங்களை மாதிரி (போலீஸ்) இருக்கோம்க”

“போலீஸ் மாதிரின்னா?”

“சும்மா நின்னுகிட்டிருக்கோம்ன்னு சொல்ல வந்தேன்”

************************************

“தல.. என்ன இது? தமிழ்நாட்ல பேச்சுரிமை இல்லியா?”

“சட்டக்கல்லூரி ப்ரச்னைக்குப் பிறகு ஓப்பன் ப்ளேஸ்ல கூடக்கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போடப் பட்டிருக்கு. அதுவும் காந்திசிலை தலைவா. ஏதாச்சும் ஆச்சுன்னா சீனாய்டும்க. என்ன பேசுவீங்க? என்ன பேசினாலும் அது அரசுக்கு எதிராத்தான் இருக்கும். சொல்லியாச்சு. அங்க பீச் சைட்ல போய் வட்டமா உக்கார்ந்து பேசலாம்”

***********************************

“நம்ம பாரிஅரசு எல்லாருக்கும் சாக்லேட், பிஸ்கெட் வாங்கிட்டு வந்திருக்காரு. எல்லாரும் சாப்பிடுங்க”

“எல்லாரும் பாரிஅரசுக்கு ‘ஓ’ போடுங்க”

“சரி.. யாராவது ஆரம்பீங்கப்பா”

“45 பேருக்கு மேல வந்திருக்கீங்க. எல்லாருக்கும் வணக்கம். மீடியா முழுக்க அந்தப் பசங்க ரெண்டு பேர் அடி வாங்கினதைப் போட்டுப் போட்டு ஒரு சீனை க்ரியேட் பண்ணீட்டாங்க. முக்கியமா அந்த பாரதிகண்ணன் கடைசிவரைக்கும் கத்தியை சுத்திகிட்டிருந்தது சரியா காண்பிக்கப்படல. கீழ விழுந்து அவன் அடி வாங்கினதுதான் காட்டப்பட்டது. வன்முறை எப்படிப் பார்த்தாலும் தவறுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் மிருகம் மாதிரி சித்தரிக்காங்க”

“மிருகம் மாதிரின்னு சொல்றதையே நான் எதிர்க்கறேன். புலி என்னைக்கும் புலியை அடிச்சதில்லை. இது காடுமிராண்டித்தனத்தையெல்லாம் மீறீன ஒரு செயல்”

“ஆனா அதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்கும்னு யோசிங்க?”

“என்ன?”

“டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி-ங்கறது பேரு. அந்தக் கல்லூரில விடுதி இருக்கு. அந்த விடுதி இல்லைன்னா, அந்த மாணவர்கள் எங்கயும் தங்கி படிக்கற அளவுக்கு பொருளாதாரப் பிண்னணி இல்லாதவங்க. ஆனா அந்த கல்லூரி குறிப்பிட்ட அந்த சமூகத்துக்கு எதிரான டீஸிங், அவங்களுக்கு ஏதாவது ஸ்காலர்ஷிப் சம்பந்தமா சர்குலர் வந்தா ஒரு மாதிரியா ட்ரீட் பண்றதுன்னு, அந்த சமூகத்து பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்ன்னு தொடர்ந்துட்டே இருக்கு. அப்பட்டமா தீண்டாமைதான்”

“இதுக்கு வெளி அரசியல்வாதிகளோட சப்போர்ட்....”

“இருக்கு. வெறும் முப்பது மாணவர்களே இருக்கற ஒரு பிரிவைச் சார்ந்த அவங்களுக்கு, ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் பின்புலமா இருக்கறாரு”

“ம்..”

“அன்னைக்கு காலைல சித்திரைச்செல்வன்-ங்கற மாணவரை இந்த ரெண்டு பசங்க சேர்த்து காதை வெட்டிருக்காங்க. அது எந்த மீடியாவும் பெரிசா காமிக்கல. அவனை எந்த அரசியல்வாதியும் பார்க்கல. அடிவாங்கின ரெண்டு பேரையும் பாவம் மாதிரி, தியாகி மாதிரி காமிக்கறாங்க..”

“சரி... இந்த இடத்துல ஒரு கேள்வி. போலீஸின் கடமை என்ன? அவங்க வேடிக்கை பார்த்தது தப்பா இல்லையா?”

“போலீஸ்மீது தப்பு, பத்திரிகையாளர்மீது தப்புங்கறது அவங்க அவங்க புரிதல். இங்கே அப்பட்டமான மனித உரிமை மீறல் நடந்திருக்கு. நான் சொல்றது ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டுமே தாக்குதல் நடந்திருக்குங்கறது மாதிரி காட்டறாங்க. அது தவறுன்னுதான் சொல்றேன். இரு சமூக மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்காங்க. ஆனா ஒரு சமூக மாணவர்கள் கண்டுகொள்ளப் படாமலே இருக்காங்க. அவங்க உரிமைக்காக இவங்க போராடி, இப்போ இந்த அரசியல்வாதிகளோட திட்டமிட்ட காய்நகர்த்தலால் அவங்க உரிமை முழுமையா கிடைக்காம போவதற்கான வாய்ப்புகள் உருவாகிட்டிருக்கு. அம்பேத்கர் பேரை எடுக்கணும், விடுதியை மூடணும்கறதெல்லாம் அதோட விளைவுதான். இது தீண்டாமை அல்லவா?”

“இதுக்கெல்லாம் காரணம் சாதிவெறிதானே?”

“ஆமா. அடிவாங்கி மரத்துல தொங்கின ஆறுமுகம் மேல 17 கிரிமினல் கேஸ் இருக்கு. பாரதிகண்ணன் கல்லூரிலயே சாதி அமைப்பு நடத்தி லீடரா இருந்திருக்கான். இதெல்லாம் சரியா?”

“’இவன்’ படத்துல பார்த்திபன் ஒரு வசனம் எழுதியிருப்பாரு. ‘படிக்காதவன் பண்ற எல்லாத் தப்புமே அவன் படிக்காதவன் –ங்கற தப்புலயே அடங்கீடுது’ன்னு. ஆனா படிச்சவன் இப்படிப் பண்ணினா நம்ம எஜூகேஷனல் சிஸ்டம் அப்படித்தான் இருக்கா?”


“இதுக்கு வலைப்பதிவர்களாகிய நாம என்ன பண்ணணும்?”

“ஏதாவது நடந்தா அதோட பின்புலத்தை தெரிஞ்சுகிட்டு அப்புறமா எழுத்துல கோவத்தைக் காட்டலாம்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்”

“என்னோட ஒரு வேண்டுகோள் இருக்கு”

“என்ன?”

“பசிக்குது. போய் ஒரு டீயோ, பாதாம்பாலோ சாப்பிடலாம் வாங்க”

23 comments:

Nilofer Anbarasu said...

//போலீஸ்மீது தப்பு, பத்திரிகையாளர்மீது தப்புங்கறது அவங்க அவங்க புரிதல். //
பத்திரிக்கையாளர் மீது தவறா இல்லையா என்பது அவர்களது புரிதலை பொறுத்தது ஆனால் போலீசார் வேடிக்கை பார்த்து நிச்சயம் தப்பு. லத்தி துப்பாக்கிய்டன் நிற்கும் போலிசே தடுக்கலைன்னா யார் சார் தடுப்பா?

Cable சங்கர் said...

//“ஏதாவது நடந்தா அதோட பின்புலத்தை தெரிஞ்சுகிட்டு அப்புறமா எழுத்துல கோவத்தைக் காட்டலாம்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்”

“என்னோட ஒரு வேண்டுகோள் இருக்கு”

“என்ன?”

“பசிக்குது. போய் ஒரு டீயோ, பாதாம்பாலோ சாப்பிடலாம் //

வேண்டுகோள் ஏற்றுக் கொள்ள பட்டது.

Anonymous said...

//சும்மா நின்னுகிட்டிருக்கோம்ன்னு சொல்ல வந்தேன்//

சும்மா இருத்தலே சுகம்னு இருந்தறாதீங்க பரிசல். :):)

ஒருவேளை போலீஸ் இந்த சண்டைக்குள்ள போயிருந்தா , இது போலீஸ் சட்டக்கல்லூரி மாணவர்கள் விவகாரமா மாறியிருக்குமோ.

Anonymous said...

உங்க வீட்டு இளவரசிகளோட புதுப்படம் போடுங்க. இப்ப இருக்கறது ரொம்ப நாளா இருக்கு போலிருக்கு.

வெண்பூ said...

நான் அங்க இல்லாததால என்ன பேசிட்டிங்கன்னு தெரியாம இருந்தது. விரிவா விளக்கமா எழுதிட்டீங்க.. நன்றி பரிசல்..

Bee'morgan said...

//“சும்மா நின்னுகிட்டிருக்கோம்ன்னு சொல்ல வந்தேன்”//
சூப்பர்.. :)

புதுகை.அப்துல்லா said...

நானும்தான் வந்தேன்.... அதை இப்படி கூட எழுதலாம்னு இப்பதான் தெரியுது !

narsim said...

வழக்கமான வளமை வார்த்தைகளில்!

நல்ல விசயங்களைத்தான் பேசி இருக்கிறோம் என்பது இதை படிக்கும் போதுதான் தெரிகிறது..

கார்க்கிபவா said...

இதெல்லாம் நமக்கு வேணாம் சகா.. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கவனம் தராத பல நிகழ்வுகள் நடந்துக் கொன்டுதான் இருக்கின்றன. எஸ்.கே, வெயிலான் போன்றவர்கள் மூலம் நம் பார்வைக்கும் வரும் அத்தகைய பிரச்சனைகளுக்கு நம்மால் ஆன சின்ன சின்ன உதவிகள் செய்தாலே போதும். உதவும் அப்துல்லாக்கள் பலர் இருக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளுக்கு பின்னால் நடக்கும் ஈன அரசியலை கண்டுபிடிக்க முடியாமல் பத்திரிக்கை உலகமே தடுமாறுகிறது. இப்படி சொல்வது பொறுப்பை தட்டி கழிப்பதல்ல. நாம் வேறு பொறுப்பை கையில் எடுப்போம் என்கிறேன். சொல்வது சரியானு சொல்லுங்க நண்பர்களே..

Thamira said...

நம்ப செட்டு(?) அத்தனை பேருக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்..

SK said...

பரிசல் ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப டச் கொடுத்து எழுதி இருக்கீங்க.

ரசித்தேன். வாழ்த்துக்கள்.

Jaisakthivel said...

பதிவர் சந்திப்பு நிகழ்ந்த அந்த சனிக்கிழமை ஒரு விஷேசமான நாள். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் ஒரு வானொலி நிலையம் உள்ளது. அதன் பெயர் ரேடியோ செயின்ட் ஹேலீனா. அது தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அன்றைய தினம் அவர்கள் இந்திய நேயர்களுக்காக ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பினர். அந்த ஒலிபரப்பினைக் கேட்கத் தாயார்படுத்திக் கொண்டு இருந்ததால் எங்களது பதிவுலக நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. நீங்களும் அந்த ஒலிபரப்பினை கேட்க எனது ஆங்கில பக்கத்தினை சொடுக்கலாம் www.dxersguide.blogspot.com

பரிசல்காரன் said...

// cable sankar said...

//“ஏதாவது நடந்தா அதோட பின்புலத்தை தெரிஞ்சுகிட்டு அப்புறமா எழுத்துல கோவத்தைக் காட்டலாம்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்”

“என்னோட ஒரு வேண்டுகோள் இருக்கு”

“என்ன?”

“பசிக்குது. போய் ஒரு டீயோ, பாதாம்பாலோ சாப்பிடலாம் //

வேண்டுகோள் ஏற்றுக் கொள்ள பட்டது.//

அதுக்கு மட்டுமே வந்துட்டு பேச்சைப் பாரு மனுஷனுக்கு..

Kumky said...

மிக நல்ல அவதானிப்பு..
கருத்துக்களையும்...வார்த்தைகளையும் இம்மியும் மாறாமல் பதிந்துள்ளீர்கள்.அப்படியே பெயர்களையும் குறிப்பிடிருக்கலாமே.

டீ ப்ரேக்கிற்க்கு அப்புறம் ஏதேனும் கருத்துரையாடல் இருந்ததா...?

ஜோசப் பால்ராஜ் said...

வித்தியாசமான நடையில ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
வன்முறை எந்த வகையில் வந்தாலும் தவறுதான்.

வழக்கம் போல ஒரு மதத்தை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்க முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைகள் தற்போது இந்துமத பெண் துறவியும், மற்றும் ஒரு ஆண் துறவியும் குண்டு வைத்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்களே அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? இப்படிப் ஊடகங்களின் நம்பகத்தன்மை பல பிரச்சனைகளில் கேள்விக்குறியாகி நீண்ட நாட்களாகிவிட்டது என்பது தான் உண்மை.

வால்பையன் said...

இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும்?

பரிசல்காரன் said...

//கருத்துக்களையும்...வார்த்தைகளையும் இம்மியும் மாறாமல் பதிந்துள்ளீர்கள்.அப்படியே பெயர்களையும் குறிப்பிடிருக்கலாமே.//

பேரைச் சொல்லவேண்டாம்ன்னு தல ஒருத்தர் சொன்னது காதுல விழலயா?

பரிசல்காரன் said...

@ வால் & கும்க்கி

//டீ ப்ரேக்கிற்க்கு அப்புறம் ஏதேனும் கருத்துரையாடல் இருந்ததா...?//


//இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும்?//

ஞாபகச் செல்களைத் தட்டியெழுப்பி, அவ்வப்போது வெளியிடுகிறேன்.

இதன் தொடர்ச்சியான கருத்துரையாடல் ’கலந்து’ரையாடலாக இருந்தது. சிலர் தண்ணீரும், சிலர் 7-அப்பும் கலந்தார்கள். நானும் கார்க்கியும் எதுவும் கலக்கத்தேவையில்லாததை தேர்ந்தெடுத்தோம்!

Cable சங்கர் said...

//அதுக்கு மட்டுமே வந்துட்டு பேச்சைப் பாரு மனுஷனுக்கு..//

எப்படியோ வந்துட்டோம்ல..

Unknown said...

do u know ur follower loshan arrested by srilankan Security forces......

சிம்பா said...

பெருசு பெருசா மீட்டிங் எல்லாம் போடறீங்க.. அரசியல் வாதி அறிக்கை மாதிரி பதிவுல அறிக்கை பதிவு போடறீங்க.. இந்த சட்டக்கல்லூரி பிரச்சனையை முன்வைச்சு புதுசா எதுனா உண்ணாவிரதம் இருந்தாலும் பிருப்பீங்க போல... :)))

பரிசல் படங்களும் பதிவுகளும் அருமை.. உங்க கட்சிக்கு நான் ஓட்டு போட்டுட்டேன்..

ALIF AHAMED said...

ஹிரோஷிமாவுல அந்த குழந்தை வெளில வர்ற விஷூவல் எடுக்கலைன்னா அந்தப் போரோட கொடுமை வெளிலயே தெரிஞ்சிருக்காதே”
//

வியட்நாம்..??
அல்லது ஹிரோஷிமா தானா..!!!

வியட்நாம் போரில் தான் ஒரு பெண் குழந்தை ஜட்டி இல்லாமல் வெளியில் ஓடி வரும் அந்த போட்டோவுக்கு அவார்ட் கூட குடுத்தாங்கனு நினைக்கிறேன்

ஆட்காட்டி said...

பேசாம ஓர்க்குட்ல குழு அமைச்சு கும்மி அடிச்சு இருக்கலாம். பதிவு எழுதுறன் எண்டு ஒரே குட்டையில் ஊறின மாதி எழுதினா, நல்லாவா இருக்கு? அப்புறம் மத்தவங்கள குத்தம் சொல்ல முடியுமா? நல்ல எழுதுறீங்கள் சிந்திக்கிற மாதிரி புதுமையா எழுதுங்கோ. அப்புறம் குழந்தைகள் நலமா? எனக்கு சொந்தங்களை தழுவ முடியவில்லை. சில படங்களைப் பார்த்தாவது ஆறுதல். கண்ணு படப் போகுது.