ஒரு சாதாரணனை வரவேற்க நர்சிம், அப்துல்லா என்ற இரு அசாதாரணமானவர்கள் (EXTRAORDINARY HUMANS!) அதிகாலை நாலேமுக்காலுக்கெல்லாம் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி! அந்த அதிகாலை வேளையில் ரயில் நிலையம் அருகே ரோட்டோரக் கடையில் குடித்த காபியும், அப்போதிலிருந்து கார்பார்க்கிங் வரும் வரை சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருந்ததும் என் சென்னைப் பயணத்தின் முக்கியத் தருணங்களில் ஒன்று.
அங்கிருந்து அப்துல்லாவின் அறைக்குச் செவதென்று தீர்மானிக்கப்பட்டது. கிளம்புமுன் “புத்தகம் ஏதாவது வேணுமா” என்று கேட்டார் நர்சிம். யாரைப் பார்த்து என்ன கேள்வி. உடனே ஓடிச் சென்று அவரது காருக்குப் போனேன். டிக்கி நிறைய சருவின் புத்தகங்கள். ஜீரோ டிகிரி ஏற்கனவே இருந்ததால், ராஸலீலாவை எடுத்துக் கொண்டேன். (ஏண்டா எடுத்தோம்னு இருக்கு இப்போ.. புக்கை கீழ வைக்க முடியல. அவ்ளோ பெரிசா இருக்கறதால ஆஃபீஸுக்கெல்லாம் எடுத்துட்டும் போக முடியல. சிந்தனை எழுத்து எல்லாத்துலயும் கண்ணாயிரம் பெருமாள் ஆக்ரமிக்கறாரு!)
அங்கிருந்து அப்துல்லாவுடன் அவரது அறைக்குப் பயணம். நான் விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன். அவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது. அவருக்கு என் நன்றி.
அதன்பிறகு அங்கிருந்து அவரது அலுவலகம் வந்தோம். கார்க் கதவை திறப்பது முதல் அவருக்கு அத்தனை மரியாதைகள். இதிலெல்லாம் தன்னிலை மாறாமல் இருப்பது அப்துல்லாவின் பண்பு என்றே சொல்லவேண்டும்!
‘வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை செஞ்சுக்கறேனே’ என்று அவர் கெஞ்ச போனாப் போகுது என்று அவரிடம் கேட்டு அலுவலகத்திலிருந்து ஒரு டூ வீலர் வாங்கிக் கொண்டு சிலபேரைச் சந்தித்து விட்டு பிறகு மறுபடி அவரிடமே வந்து அங்கிருந்து வெண்பூ இல்லம் நோக்கிப் பயணம்.
(ஆதர்ஷ் அழகா.. அப்துல்லாவின் சிரிப்பழகா?)
(ஆபீஸுக்குப் போகணும்.. சீக்கிரம் கிளம்புங்கய்யா - அப்துல்லா)
வெண்பூ வீட்டிலும் நான் அதையே உணர்ந்தேன். அடடே வாங்க வாங்க என்ற எந்த ஆர்ப்பரிப்புகள் ஏதுமின்றி இயல்பான வரவேற்பில் மிக மகிழ்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததை விட ஹெவியான சாப்பாடு! (ஆதர்ஷ்க்கு சுத்திப் போடுங்க சிஸ்டர். படுசுட்டி!)
மாலை பதிவர் சந்திப்பு.
(பதிவர் குமுகாயம்)
(கேபிள் சங்கர் - சுஜாதா மன்னிச்சுட்டாரு!!!!)
இரவு _____________________________!
(இரவின் சில சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பை ஓரிரு தினங்களில் பதிவிடுகிறேன்)
அடுத்தநாள் காலை நண்பர் அப்துல்லாவிடமிருந்து விடை பெற்று, ரமேஷ் வைத்யாவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரிடமிருந்து சில பொக்கிஷங்களை அவர் அனுமதியோடு திருடி... நர்சிம் வர அவரோடு அவர் இல்லத்திற்கு பயணம்.
அங்கே இனிய மதிய உணவு. மறுபடி, மறுபடி அதே டயலாக்தான். இங்கேயும் என் வீடு போலத்தான் உணர்ந்தேன்!
லக்கியும் எங்களோடு சேர்ந்துகொள்ள... ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு.. (அரசு நிறுவனம் சில இப்படியெல்லாம் இருக்கும்ங்கறது எனக்குப் புதுசு! இது பத்தி தனிப் பதிவு எழுதணும்!)
சரி.. பதிவு எனக்கே புடிக்கல. வழவழன்னு இருக்கு. முக்கியமா நான்
ஒரு சிலரைத்தவிர... எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.
அந்த ஒரு சிலர்....
ஒரு பெரிய நிறுவனதோட இயக்குனர். சென்னையின் முக்கியமான ஒரு இடத்துல வீடு. பலதரப்பட்ட பெரிய மனுஷங்களோட பழக்கம். அரசியல்லயும் ஒரு முக்கியப் பொறுப்பு. டூ வீலர்ல போனா.. ‘சார்.. நீங்க ஏன் டூ வீலர்ல போறீங்க’ன்னு ஒரு அதிகாரி பதறி கேட்கற அளவு பெரிய பதவி. இதுல எதிலயும் தன்னோட தனித்தன்மை பாதிக்காத ஒரு மனுஷன் அப்துல்லா. ரம்பாவை வெச்சு படம் எடுத்த டைரக்டர் முரளி அப்பாஸை அறிமுகப்படுத்தினாரு. அவருக்கு நன்றி சொல்ல முடியாது.
நர்சிம். இவரும் அதேமாதிரிதான். ஒரு மிகப்பெரிய நிறுவனத்தோட மிகமிகப் பெரிய பொறுப்பு. சனிக்கிழமை காலைல இரயில்வே ஸ்டேஷனுக்கு இவர் வரவேண்டியதே இல்லை. அப்புறமா கூட சந்திக்கலாம். ஆனா எனக்காகவே வந்து காத்திட்டிருந்திருக்காரு. இவரை ஸ்டேஷன்ல பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேரைக் கஷ்டப்படுத்தறோம்ன்னு. கடைசிவரை இவர் என்கூட இருந்து, எங்க கூப்ட்டாலும் வந்து... (இவருக்கும் எனக்கும் பல விஷயங்கள்ல வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்கு. அதுல எனக்கு சந்தோஷம்)
அழகு, பணம், பதவி, அந்தஸ்து... எல்லாத்தையும் மீறி இவர்... மனுஷன்.
(பாஸூ.. நாளைக்கு நீங்க ஹீரோவானா டிஸ்கஷனுக்காவது என்னைக் கூப்பிடுங்க!)
வெண்பூ...
கலகலப்பான ஆள். இவரோட உடம்பு எனக்கிருந்தா நான் பெரிய ரௌடி ஆகிருப்பேன். ஆனா இவர் அவ்ளோ மென்மையான ஆசாமி. பீச்ல போலீஸ் எங்களை கூட்டம் போடாதேன்னு சொன்னப்ப கேட்ட ஒரே மனுஷன் இவருதான். இவர் வீட்ல சாப்பிடப்போனப்ப சிஸ்டர் பரிமாற வந்தப்ப ‘விடு..விடு.. அவங்களே போட்டு சாப்பிட்டுக்குவாங்க’ன்னு சொன்ன விதம் மத்தவங்களை எந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்காருன்னு ஆச்சர்யப்படுத்திச்சு!
லக்கிலுக்.
ஒரு காலத்துல இவரு கூட பேசமுடியுமான்னு நினைச்சிருக்கேன். ஆனா ‘யோவ்.. நான் உன் செட்டுய்யா’ன்னு சொல்லாம சொல்வாரு தன்னோட பழகும் தன்மைல. இவரோட விஷயஞானம் அளவிடற்கரியது. சினிமா பத்தியும், அரசியல் பத்தியும் எந்த சந்தேகம்ன்னாலும் இவர் விளக்கம் சொல்றாரு. ‘கோயம்பேடிலிருந்து மடிப்பாக்கம் போக ஒரு மணி நேரம் ஆகும். நீங்க போங்க லக்கி’ன்னு சொன்னாலும் கேட்காம என்னை பஸ் ஏற்றிவிட்டுத்தான் சென்றார். பஸ்ல ஏறின பிறகும் என்னால தூங்கவே முடியாம லக்கி எனக்காக அவ்ளோ நேரம் செலவிட்டதுதான் யோசனையாவே இருந்தது.
அப்புறம் கிழஞ்செழியன். இவரைப் பத்தித்தான் நான் நாலைந்து நாட்களாக யோசித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறேன். இதுக்குமேலயும் சொன்னா ‘உதவிழும் ராஸ்கல்’ ம்பாரு. இவரைப் பத்தி தனியா ஒரு ப்ளாக்கே ஆரம்பிச்சு எழுதலாம்னு ஐடியா இருக்கு. பாக்கலாம்.
நான் ரொம்ப மதிக்கற தல யெஸ்.பாலபாரதி ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா’ன்னு கூப்பிட்டது காதுல கேட்டுட்டே இருக்கு. (ஒரு நல்ல ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்கிட்ட காமிங்கன்னு சொல்லக்கூடாது)
முரளிகண்ணன், தாமிரான்னு நம்ம செட் ஆளுக எல்லாருமே அந்த தினத்தை ஸ்பெஷலாக்கினாங்க. யாருமே தப்பா நினைக்கமாட்டாங்க-ங்கற நம்பிக்கைல சொல்றேன். அங்க சந்திச்சவங்கள்லயே என்னை நானே பார்த்தது கார்க்கிகிட்டதான். பலவருஷம் முன்னாடி எனக்குள்ள இருந்த வேகம், துறுதுறுப்பு எல்லாமே இவன்கிட்ட (சகா.. அப்படித்தான் வருது... ‘ர்’ வர்ல!) இருக்கு. இது நீர்த்துப் போகாம இருக்கவும், இன்னும் பல வெற்றிகளை பத்திரிகைகள்ல எழுதி இவன் பெறவும் எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்!
40 comments:
Appa! Social blogging to the max! Super friends... Great writing Parisal.
//(இவருக்கும் எனக்கும் பல விஷயங்கள்ல வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்கு. அதுல எனக்கு சந்தோஷம்)//
பரிசல் சந்திப்புனு பதிவு எழுதிட்டு இங்க வந்தா.. ஹும்.. இதுதானா வேவ்லென்த்
நல்ல பயணக்கட்டுரை பரிசல்
பரிசல்,
இது போன்றதொரு அருமையான நிகழ்வு, நண்பர்களின் சந்திப்பு போன்றவற்றை தவற விட்டுவிடுவீர்களோ? சென்னை நண்பர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடுமோ என்ற வருத்தம் தான் எனக்கு புகைவண்டி ரத்தானபோது இருந்தது.
உங்களின் மகிழ்வுப் பயணத்திற்கு காரணம், உந்துதல் நண்பர்கள்.
உங்களுக்கு நானும் ஒரு நண்பன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே!
பரிசல் சில நேரங்களில் எனக்குள் இருக்கும் உன்மத்தனை உங்கள் பதிவோ அல்லது நீங்களோ அல்லது உங்களால் அறியப்படும் நிகழ்வுகளோ எழுப்பிவிடுகிறது...இந்த பதிவும் கூட..
இப்போ போய் என்னோட லூசுத்தனம் கவிதைய படிங்க புரியும்
நானும் அங்கே இருந்த மாதிரியே ஒரு பீலிங். ரொம்ப சந்தோசம் நண்பா!
விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன். அவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது.//
விருந்தினர் பதிவெழெத வெச்சது நான்.
அதை மறந்துடாதீங்க.
:)))))))))))))))))
சென்னையில், பெங்களூரில்னு பதிவர் சந்திப்பு நடக்குது. பதிவெல்லாம் போட்டு வயித்தெரிச்சலை கூட்டறீங்க எல்லோரும்.
ஹைதையில் யாரும் இருக்காங்களா? ஒரு முறையாவது சந்திப்பு நடத்துமா?
வலையுலகமே பதில் சொல்.
24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான??)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா??
ஹைதான்னா ஹைதராபாத்தான் நர்சிம்.
எந்த 24, 25 கேக்கறீங்க?
நவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..
அனுபவம் அப்படியே வார்த்தைகளா, பதிவா வந்ருக்கு. Superrr.
(பரிசல் நீங்க இதுக்கு பதில் சொல்லலைனா கூட பின்னூட்டம் போடறேன் பாருங்க.) :D
ஹா ஹா ஹா சூப்பர். நான் இப்போதான் நர்சிம் சார் பதிவு படிச்சிட்டு வந்தேன். கலக்கல்:):):)
//ambi said...
அனுபவம் அப்படியே வார்த்தைகளா, பதிவா வந்ருக்கு. Superrr.
(பரிசல் நீங்க இதுக்கு பதில் சொல்லலைனா கூட பின்னூட்டம் போடறேன் பாருங்க.) :D//
அம்பி...
நீங்க என்னோட ஒரு ஸ்பெஷல் ஆசாமி! உங்க பின்னூட்டங்கள்தான் ஒரு காலத்துல என்னோட பூஸ்ட்.
உங்களுக்கெல்லாம் பதில் சொல்லாமப் போவனா?
வேலை அதிகமா இருக்கு தலைவா..
//அசாதாரணமானவர்கள்//
இதுல நர்சிம் சார உஷாரா சேர்த்துட்டீங்க, இல்லைன்னா ஜாலியா அப்துல்லா அண்ணாவை வெச்சு எதாவது எழுதிருக்கலாம்.
//நான் விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன்//
//இவர் வீட்ல சாப்பிடப்போனப்ப சிஸ்டர் பரிமாற வந்தப்ப ‘விடு..விடு.. அவங்களே போட்டு சாப்பிட்டுக்குவாங்க’ன்னு சொன்ன விதம் மத்தவங்களை எந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்காருன்னு ஆச்சர்யப்படுத்திச்சு//
எல்லாரையும் ஒரு பதிவ போட்டு மெரட்டிட்டு இங்க இப்டி எழுதிட்டா ஒகேவாகிடுமா:):):)
அப்துல்லா அண்ணே, மகேஷ் சார் கவனிக்கலை. கிருஷ்ணா சார் போட்டு ஒடச்சுட்டார்:):):)
அது எந்த ரம்பா படம்?
me the 15th:):):)
//அது எந்த ரம்பா படம்?//
ராசி.
தல அஜீத் படத்தை ரம்பா படம்னு சொல்லி லக்கி சார கலாசரீங்களா?:):):)(சீரியஸா எடுத்துக்காதீங்க)
நவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..//
ம்ம் எனக்கு ஒகே.
எங்க? எப்பன்னு சொல்லுங்க.
எங்க வீட்டுலன்னாலும் சரி.
பரிசல் !
நல்ல அனுபவம், நல்ல தொகுப்பு,
கிளை பதிவுகளுக்கு நிறைய குறிப்பு வச்சிருக்கீங்க போல ...
வாழ்த்துகள் !
அருமையான சந்திப்புக்கள்! அழகா எழுதிட்டீங்க பரிசல்!
:)
Nice to read when somebody writes about their experience about their friends. I miss my friends.
//இரவு திருப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்காக காத்திருந்தபோது//
எனக்கும் திருப்பூர் ரயில் நிலையம் முக்கியமானது .
ஒவ்வொருமுறை நான் பயணம் செல்லும்போது என் நண்பர்கள் வந்து வழியனுப்பிவைத்தது நினைவுக்கு வருகிறது. இரவு கடைசி வண்டியான சேரன் எக்ஸ்பிரஸ்'இல் (11:55 pm) செல்வதே வழக்கம்.
பயணக்கட்டுரை அருமை.
இப்பயணத்தின் மூலம் பதிவர்கள் நண்பர்களாக மாறியிருக்கிறீர்கள். பயணம் தொடர வாழ்த்துக்கள்.
மகரநெடுங்குழைகாதன் எனப்படுவர் யார்..?
பதில் தருக.
நல்ல உண்மையான , நெஞ்சார்ந்த்த பதிவு
காவேரி கனேஷ்
ராசி படம் எங்க ஊரில்(புதுகை) சில காட்சிகள் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்,ஆனால் அதற்கு அப்துல்லா அண்ணந்தான்!!!, தயாரிப்பாளர் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.நன்றி பரிசல் சார்,வழக்கம்போல் சுவராசியமான பதிவு.
தாமதத்திற்கு மன்னிக்கவும் பரிசல். அநியாயத்துக்கு வேலை செய்யுறேன்.. நாலு மாசமா உக்கார்ந்து பதிவு எழுதியதுக்கு இந்த வாரம் என் டவுசர கிழிக்கறாங்க..
//அங்க சந்திச்சவங்கள்லயே என்னை நானே பார்த்தது கார்க்கிகிட்டதான்//
பெருமையும் மகிழ்ச்சியும் தருது சகா...
. //பலவருஷம் முன்னாடி எனக்குள்ள இருந்த வேகம், துறுதுறுப்பு எல்லாமே இவன்கிட்ட (சகா.. அப்படித்தான் வருது... ‘ர்’ வர்ல!) இருக்கு.//
எங்க வந்துடுமோனு பயந்தேன்.. இது இன்னும் நெருக்கமாகவும் உரிமையாகவும் இருப்பது போல் உணர்கிறேன்..
// இது நீர்த்துப் போகாம இருக்கவும், இன்னும் பல வெற்றிகளை பத்திரிகைகள்ல எழுதி இவன் பெறவும் எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்!//
வார்த்தைகள் வரவில்லை. இதைப் படித்ததும் அலைபேசலாம்னு நெனைச்சேன். எழுத்தே வரல் அப்புறம் என்ன பேச.. இப்போது நான் உணர்வதை இங்கே சொல்ல முடியாது. அப்புறம் சொல்றேன் சகா.. நீங்க வேணாம்னு சொன்னானுலும் ஒருப் பெரிய நன்றிய மட்டும் இப்ப சொல்லிக்கிறேன்..
// narsim said...
24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான??)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா??
//
அடுத்த வாரம்தானே.. நான் ரெடி தல..
//புதுகைத் தென்றல் said...
நவம்பர் தான்.. ஒரு மீட்டிங் இருக்கு.. அப்படியே..//
ம்ம் எனக்கு ஒகே.
எங்க? எப்பன்னு சொல்லுங்க.
எங்க வீட்டுலன்னாலும் சரி.//
பேசி முடிவு பன்னுவோம்.. இங்க பதிவர்கள் அதிகம் இல்லா.. ஆனா ல பார்த்த வரைக்கும் நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்..
// narsim said...
24, 25 உங்க ஊர்(ஹைதைனா ஹைதராபாத் தான??)ல தான்.. கார்க்கி.. நடத்துவமா??
//
// இங்க பதிவர்கள் அதிகம் இல்லை //
கார்க்கி / புதுகைத்தென்றல்,
ஐதராபாத்தில் எனக்கு தெரிந்து இரண்டு பதிவர்கள் இருக்கிறார்கள்.
விஜய்கோபால்சாமி மற்றும் அருட்பெருங்கோ
பரிசலிடம் தொடர்பு எண்கள் இருக்குமென நினைக்கிறேன்.
ஆனால் அதற்கு அப்துல்லா அண்ணந்தான்!!!, தயாரிப்பாளர் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.
//
அடப்பாவமே... இப்படியெல்லாம் புரளியக் கிளப்பாதிக... அந்தப் படம் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வந்தது. தயாரிப்பாளர் பெயர் சக்கரவர்த்தி.
ராப் உன் மருமகன் படத்தப் பார்த்தியா?? எவ்வளவு அழகுன்னு??
திருஷ்டி சுத்தி போடச்சொல்லு உன் சம்பந்திய :)))
பரிசல் அண்ணே அன்று என் காரை தவிர்த்து உங்களோடு வெண்பூ வீட்டிற்கு நீங்கள் டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வழி சொல்லி நான் பயணித்தது மறக்க முடியாத நிகழ்வு.
// புதுகை.அப்துல்லா said...
பரிசல் அண்ணே அன்று என் காரை தவிர்த்து உங்களோடு வெண்பூ வீட்டிற்கு நீங்கள் டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வழி சொல்லி நான் பயணித்தது மறக்க முடியாத நிகழ்வு.//
அதையும் அப்போ நீங்க உங்க தலைவன் வழியைப் பின்பற்றினதையும் சொல்ல விட்டுபோச்சு. நாளைய (இன்றைய..) பதிவுல சொல்லிடறேன்.
பரிசல் படிக்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது.... நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்க்கையில் மிகச்சிறந்த ஒரு பேறு... அப்துல்லாவை நினைச்சா இன்னும் மகிழ்ச்சியா இருக்கு... ரியல் லைஃப் ஹீரோ மாதிரி இருக்காரு...
போட்டோவை மாத்திட்டீங்க.ம்ம்ம்
அருமையான விவரிப்பு! மனத்தில் பட்டதை சொல்லியிருக்கீங்க!
நல்ல நட்புகளை வெகுதூரம் பயணித்து சந்தித்தமைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்! :)
பெரிய ஆட்களோடு எல்லாம் பழக்கம்... நம்மல மறந்துட்டீங்க...ஒரு குறுந்தகவல் அல்லது ஒரு போன் செய்திருக்காலாமே?!
ம்ம் கலக்குறீங்களே தமிழ் பதிவரெல்லாம்! சும்மா கருத்துச்சொன்னோம்ங்குற திருப்திமட்டுமல்லாது, நட்புணர்வோடு சந்தித்தும் உறவாடுகிறீர்களே, வாழ்த்துக்கள், வளரட்டும் இனைய உறவுகள்
I tried to install the NHM writer.But in the middle it shows it encounters a problem and needed to be closed! what should i do now?
Deva.
:))
Post a Comment