Saturday, November 22, 2008

வீக் எண்ட் புதிர்கள்



வீக் எண்ட்- டிற்காக நமீதாவையோ, நயன்தாராவையோ.. இருங்கள்... முழுசாகச் சொல்லி விடுகிறேன்... நமீதா ஃபோட்டோவையோ, நயன்தாரா ஃபோட்டோவையோ போடலாம் என்று நினைத்தேன். சரி.. அதுக்குத்தான் பாச்சிலர்கள் சென்ஷி, சஞ்சய் என்று இருக்கிறார்களே என்று புதிர்போடலாம் என்ற ஐடியா வந்தது...

ஒரு குறிப்பிட்ட வகை என்றில்லாமல் கலந்து கட்டி இருக்கும், ஈஸியாக இருக்கும், கஷ்டமாக இருக்கும், கடித்தனமாக இருக்கும், அறிவார்த்தமாக இருக்கும், லூசுத்தனமாக இருக்கும், பொறுத்துக்கோங்க. விடை எப்போ-ன்னு தெரியாது. ஜமாயுங்கள்.


1) இவரு நடிகரு. பேர்ல குளிருக்குத் தேவையானது இருக்கு. இவர் அண்ணன் இவரளவுக்கு ஃபேமஸாகல. (ஆனா வாளமீனை வளைச்சுப்போட்ட மேட்டர்ல மட்டும் ஃபேமஸானாரு.) யாரிவரு?

2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.

3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!

4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?


5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..

அ) டி.வி.காமிராக்கள் ஆன் செய்யப்படவில்லை.
ஆ) பெய்ல் காணாமல் போயிருந்தது
இ) இந்திய காப்டன் தங்கள்மீது சத்தியம் செய்ததாகக் கூறினார்கள்.
ஈ) பாகிஸ்தான் வீரர் ஒருவர் வரத் தாமதமாகியது.

6) இவரும் பதிவர்தான். கார் வெச்சிருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா தேவை.

7) இது கொஞ்சம் ஃபேமஸானதுதான். இருந்தாலும் கேட்கறேன்..

விஜய்க்கு இருக்கு, சூர்யாவுக்கு இருக்கு. ஏன் ஜெமினி ஹீரோயின் கிரணுக்குக் கூட இருக்கு. ஆனா ஜெமினி ஹீரோ விக்ரமுக்கு இல்ல. அது என்ன?

8) இளம் அரசியல்வாதி. ராத்திரில குல்லால இருக்காரு.

9) இதுவும் பழசுதான்.

மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?

10) கொஞ்சம் யோசிக்க வைக்கற புதிர்..

மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

***********************

ஒரு இண்ட்ரஸ்டிங்க் மேட்டர்...

93 டெஸ்ட் மாட்ச்களில் விளையாடி, 50+ பாட்டிங் ஆவரேஜில் இருந்த இவர் ஒரே ஒருநாள் போட்டிதான் விளையாடினார்.. அதில் எடுத்த ரன் - 0!

அவர்: கேரி சோபர்ஸ்!

*****************

மறுபடியும் சொல்றேன். பதிவோட தலைப்பை க்ளிக் பண்ணி, தம்ஸ் அப்ல ஓட்டுப் போடுங்க. ஆமா.....

36 comments:

thamizhparavai said...

1.விஷால்.
3. விஜய்...?
4. 11 சாக்ஸ்
7. மூணெழுத்து...?

மீதி யோசிச்சு சொல்றேன்

Unknown said...

ans for...
1.vishal,
8.rahul gandhi.
namma arivukku avlothan theriuthu.

thamizhparavai said...

9. இது ரொம்பவே யோசிக்க வச்சுடுச்சு..இதுபத்தி http://en.wikipedia.org/wiki/Missing_dollar_paradox
இங்க போய்ப் பார்த்து புரிஞ்சுக்கோங்க...

10. 'ஆப்பிள்' பெட்டியில கைவிட்டுப் பார்க்கணும்.

வகை.1:
அதுல ஒரு பழம் இருந்து வந்தா அது ஆரஞ்சா இருக்கணும். அப்போ 'ஆரஞ்சு' பெட்டியில கண்டிப்பா ரண்டு பழம் (ஆப்பிளும்,ஆரஞ்சும்) இருக்கும். அப்போ 'ஆப்பிளும்,ஆரஞ்சும்' பெட்டியில கண்டிப்பா ஆப்பிள் மட்டும்தான் இருக்கும். லேபிளைக் கரக்டா ஒட்டிரலாம்.

வகை.2:
அதுல ரெண்டு பழம் இருந்தா, 'ஆரஞ்சு' பெட்டியில கண்டிப்பா ஆப்பிள் இருக்கும். 'ஆப்பிளும்,ஆரஞ்சும்' பெட்டியில் கண்டிப்பா ஆரஞ்சு இருக்கும்.
இதை வச்சு லேபிளை கரக்டா ஒட்டிரலாம்.

இதே போல 'ஆரஞ்சு' பெட்டியில பழம் எடுத்தும் சோதனை செய்யலாம்.
'ஆப்பிள்' அல்லது 'ஆரஞ்சு' அப்ப்டின்னு எழுதியிருக்கிற பெட்டில பழம் எடுத்தா, வேலையை உடனே முடிச்சிடலாம்.

பாபு said...

விஷால்

டாக்டர் ப்ருனோ

பாலபாரதி

3



கார்க்கி

மூன்றெழுத்து

ராகுல்

பதினஞ்சு ரூபால மூன்று ரூபா திருப்பி வந்துடுச்சி,அப்போ அவங்க கொடுத்து 12 ரூபாய்தான்,பத்து ரூபாய் சாப்பிட்டதுக்கு,ரெண்டு ரூபாய் சர்வர் எடுத்தது.அவ்வளவுதான்

ஆரஞ்சு&ஆப்பிள் எழுதியிருக்கிற டப்பா

நாமக்கல் சிபி said...

1. விக் 'ரம்' !?

4. 2

5. ஆ

கார்க்கிபவா said...

1) விஷால்

4) இரண்டு

5) பெல் காணவில்லை

6) ஹிஹிஹி.. நான் தான்

8) ராகுல் காந்தி

9) இதுக்கு பதில் சொன்னா வரலாறு என்னை மன்னிக்காது.

10) ஆப்பிளும் ஆரஞ்சும் ஒட்டி இருக்கிற லேபிள் பாக்ஸுல கை விட்டுப் பார்க்கனும். அதுல இருப்பது ஆப்பிள் என்றால் அதுக்கு ஆப்பிள் லேபிள். இப்போ ஆர்ஞ்சுன்னு ஒட்டி இருக்கிற லேபிளில் இருப்பது ஆப்பிளும் ஆரஞ்சும். சரியா?

கார்க்கிபவா said...

1) விஷால்

2) டாக்டர் ப்ரூனோ

3) பாலபாரதி

4) இரண்டு

5) பெய்ல் காணவில்லை

6) ஹிஹிஹி.. நான் தான்

8) ராகுல் காந்தி

9) இதுக்கு பதில் சொன்னா வரலாறு என்னை மன்னிக்காது.

10) ஆப்பிளும் ஆரஞ்சும் ஒட்டி இருக்கிற லேபிள் பாக்ஸுல கை விட்டுப் பார்க்கனும். அதுல இருப்பது ஆப்பிள் என்றால் அதுக்கு ஆப்பிள் லேபிள். இப்போ ஆர்ஞ்சுன்னு ஒட்டி இருக்கிற லேபிளில் இருப்பது ஆப்பிளும் ஆரஞ்சும். சரியா?

கார்க்கிபவா said...

சகா,

காலைல என் கவிதைக்கு 18/18 ஓட்டு இருந்தது. சில நேரங்களில் அது 1/50 ஆயிடுச்சு. உங்க பதிவுல பார்த்தா மைனஸ்ல இருக்கு. போன பதிவும் 30 எதிர் ஓட்டு விழுந்திருக்கு உங்களுக்கு. என்ன நடக்குது? ஏதாவது செய்ய முடியுமா? இது தெரியாம போடறது இல்ல. யாரோ செய்யுற சதி மாதிரி தெரியுது.

பரிசல்காரன் said...

பலபேர் சிலதையும், சில பேர் பலதையும் சரியாச் சொல்லியிருக்கீங்க.

இன்னும், எல்லாத்துக்குமான பதில் வரல. அப்படியோ, இதை வெச்சு, நாளைக்கு ஒரு பதிவைப் போட்டு ஒப்பேத்தலாம்-ங்கற நம்பிக்கை வருது.

ஹி..ஹி..

பரிசல்காரன் said...

@ தமிழ்ப்பறவை..

பெட்டிகள்ல நிறையப் பழங்கள் இருக்கு. ஒண்ணோ, ரெண்டோ மட்டுமில்ல. என்னுடைய கேள்வில இது சரியாச் சொல்லப்படாததற்கு மன்னிக்கவும்.

நீங்க எந்தப் பெட்டியைத் திறந்தாலும், ஒரு பழத்தை மட்டுமே வெளியிலெடுத்துப் பார்க்க வேண்டும்!

பரிசல்காரன் said...

@ பாபு

//பதினஞ்சு ரூபால மூன்று ரூபா திருப்பி வந்துடுச்சி,அப்போ அவங்க கொடுத்து 12 ரூபாய்தான்,பத்து ரூபாய் சாப்பிட்டதுக்கு,ரெண்டு ரூபாய் சர்வர் எடுத்தது.அவ்வளவுதான்/

தல... எப்படீங்க இப்படியெல்லாம்? கேக்கறதுக்கு ஆளில்லைன்னா இப்படியெல்லாமா பதில் சொல்றது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்படியே ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்து என்ன பண்றது........




யாராவது ஆன்ஸ்வெர் சொல்லுங்கப்பா

கார்க்கிபவா said...

சகா, அப்பவும் அதே பதில்தான். ஆப்பிள் & ஆரஞ்சு நு லேபிள் ஓட்டியிருக்கிற பாக்ஸுல கை விடனும். அதுல லேபிள் தப்பு என்பதால் கையில் வரும் பழத்திறகான் லேபிளை அதில் ஒட்டி விட வேண்டும்(உதாரனத்திற்கு ஆப்பீல் வருதுனு வச்சுப்போம்). இப்போ மீதி இருப்பது ஆரஞ்சு லேபிள் மற்றும் ஆப்பிள் லேபிள். நம் கையில் ஏற்கனவே ஆப்பிள் பழம் இருப்பதால் ஆப்பிள்னு லேபிள் ஒட்டியிருக்கும் பாக்ஸுலதான் ஆரஞ்சு இருக்கும். மீதி இருப்புது ரெண்டும் இருக்கும் பாக்ஸ்.

உதாரணத்தில் ஆப்பிள்னு சொல்லியிருக்கென். ஒரு வாளை ஆர்ஞ்சு வந்தால் அப்படியே மாற்றிக் கொள்ள் வேண்டியதுதான்.

கார்க்கிபவா said...

ஒன்றைத் தவிர அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கேன். அந்த கிரிக்கட் மேட்டர் தவுர அனைத்தும் சரியன நினைக்கிறேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

1. Vi"shaal"விஷால்
2. Dr." BRU NO"
ப்ருனோ
3.Vijay
4. ஒரு ஜோடி சாக்ஸ் எடுத்தாலே போதும்..
ஜோடி சாக்ஸ் எல்லாம் ஒரே நிறத்துல தானே இருக்கும்
5. ஆ
6. CAR KEY (
கார்க்கி )
7.தொப்பை ?? அல்லது மூன்று எழுத்து ( 3 letter word)
8. Ragul Gandhi
9. கேள்வியே தவறு ...அது எப்படின்னுலாம் சொல்ல மாட்டேன் ..( பதில் தெரியிலனா இப்படி தான் சொல்லுவோம் )( out of syallabus)
10.Same as ABOVE

பரிசல்காரன் said...

@ கார்க்கி

உன்னை நான் ஒண்ணுமே சொல்லலியேப்பா..

பரிசல்காரன் said...

//3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!//

இதுக்கு விஜய்-ன்னு பதில் சொன்னவங்க அவங்க அட்ரஸை அனுப்பவும். ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்...

என்னா லொள்ளு உங்களுக்கு!

கார்க்கிபவா said...

//தொப்பை//

ங்கொய்யால.. விஜய்க்கு சூர்யாவுக்கும் தொப்பையா? உங்க கண்ணுக்கு கிரண் மட்டும்தான் தெரியும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///பரிசல்காரன் said...

//3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!//

இதுக்கு விஜய்-ன்னு பதில் சொன்னவங்க அவங்க அட்ரஸை அனுப்பவும். ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்...

என்னா லொள்ளு உங்களுக்கு!////



ஹையா ஜாலி..
முடிஞ்சா இங்க நைஜீரியா வுக்கு ஆட்டோ அனுப்புங்க பாக்கலாம்??

http://urupudaathathu.blogspot.com/ said...

///கார்க்கி said...

//தொப்பை//

ங்கொய்யால.. விஜய்க்கு சூர்யாவுக்கும் தொப்பையா? உங்க கண்ணுக்கு கிரண் மட்டும்தான் தெரியும்..///



அப்போ தொப்பை இல்லியா??
கிரணுக்கு தொப்பை மட்டுமா இருக்கு??
எங்க கண்ணுக்கு எல்லாமே நல்லா தெரியும்

narsim said...

எல்லா கேள்விகளுக்கும் சரியான விடை தெரியும் என்பதால்.. இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை தொடர்வதற்காக பதிலை சொல்லவில்லை பரிசல்..

(எப்படி எஸ்கேப்பு ??..)

பரிசல்காரன் said...

//// கார்க்கி said...

ஒன்றைத் தவிர அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கேன். அந்த கிரிக்கட் மேட்டர் தவுர அனைத்தும் சரியன நினைக்கிறேன்//

4, 5 தப்பு.

ஏழுக்கு பதிலே சொல்ல்ல.

9-க்கும் எஸ்கேப்பிஸம்.

இதுல லொள்ளப்பாரு... அனைத்தும் சரியாம்...

வெண்பூ said...

யோசிச்சி பதில் சொல்ல நேரம் இல்லாததால் மத்தவங்க பதில தெரிஞ்சிக்கிறதுக்காக ஒரு ஃபாலோ அப் பின்னூட்டம்.. (எப்படி எஸ்கேப்பு)

விலெகா said...

ஐய்யய்யோ தெரியாம வந்துட்டேன்:))))

விலெகா said...

இப்புடி கேள்வி கேக்கிறாங்கனுதான் நாங்க பள்ளீகூடத்திற்கே போவதில்லை:)))

Athisha said...

:-)

Nice post dear...

Kumky said...

ஹி..ஹி..ஹிஹி...
(மனசாட்சி-அதுக்குதான் நிறைய அறிவு ஜீவிகள் இருக்காங்கள்ல...ஒரு 3 மனி நேரம் கழிச்சு வந்தா பதில தெரிஞ்சிடபோகுது..எதுக்கு வீணா மண்டய உழப்பணும்)

புருனோ Bruno said...

//2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.//

ஹி ஹி ஹி :) :)

//4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?//

3

//5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..//

தேனி தாக்குதல்

புருனோ Bruno said...

//மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?//

அவங்க சாப்பிட்டது ஒருத்தர் 3.33 ரூபாய்க்கு

அவங்க கொடுத்தது ஒருத்தர் 4 ரூபாய்

ஆக ஒவ்வொருவரும் 66 காசு அதிகம் தந்துள்ளார்கள்

3 x 66 காசு = 2 ரூபாய் சர்வருக்கு

புருனோ Bruno said...

நீங்கள் எடுக்கும் போது ஆரஞ்சு என்று வந்தால், அந்த டப்பாவில்

1. ஆப்பிள் இருக்கலாம்
அல்லது
2. ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கலாம்

ஆப்பிள் இருந்தால்
1. ஆரஞ்சு என்ற டப்பாவில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்க வேண்டும்
2. ஆப்பிளும் ஆரஞ்சும் என்ற டப்பாவின் ஆரஞ்சு இருக்க வேண்டும்
(இல்லை என்றால் அது சரி என்றாகிவிடும்)

ஆப்பிளும் ஆரஞ்சும் இருந்தால்
1. ஆரஞ்சு என்ற டப்பாவில் ஆப்பிள் இருக்க வேண்டும்
2. ஆரஞ்சும் ஆப்பிளும் டப்பாவில் ஆரஞ்சு இருக்க வேண்டும்

இதே போல் permutation combination போட்டால் அனைத்து காம்பினேஷன்களுக்கும் விடை கிடைக்கும்.

தேவை என்றால் கூறுங்கள் - விளக்கமாக எழுதுகிறேன்

Sundar சுந்தர் said...

//மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?//

அதத்தான் கவுண்டமணி வாழப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லி செந்தில் கிட்ட கொடுத்தார், உங்களுக்கு அந்த கதை தெரியாதா?

Sundar சுந்தர் said...

//) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?//

ரெண்டு. ஏன்னா எல்லாமே ஒரே நிறம்.

//மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?//

‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ பாக்சை திறந்து பார்க்கணும்,

..அதுல்ல ‘ஆப்பிள்’ இருந்தா, ‘ஆரஞ்சு’ன்னு இருக்கறதுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ இருக்கும்; ‘ஆப்பிள்’ன்னு இருக்கறதுல ஆரஞ்சு’ இருக்கும்.

..அதுல்ல ‘ஆரஞ்சு’ இருந்தா, ‘ஆப்பிள்’ன்னு இருக்கறதுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ இருக்கும்; ‘ஆரஞ்சு’ன்னு இருக்கறதுல ஆப்பிள்’ இருக்கும்.

ரொம்ப நாள் கழிச்சி யோசிக்க வச்சதுக்கு நன்றி.

MyFriend said...

இன்னாதிது?

பதில் சொல்லலாம்ன்னு வந்தா பின்னூட்டம் முழுசும் பதிலா இருக்கு????

பரிசல்காரன் said...

// புருனோ Bruno said...

//2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.//

ஹி ஹி ஹி :) :)
//

தப்பு டாக்டர். டாக்டர்.புருனோதான் சரியான விடை. ஹிஹிஹி தப்பான விடை.

ஹா..ஹா..ஹா~!

/தேவை என்றால் கூறுங்கள் - விளக்கமாக எழுதுகிறேன்//

வேண்டாம் பாஸு. நம்பீட்டோம், உங்களுக்கு விடை தெரியும்.

அப்பறம் க்ரிக்கெட் குறித்த கேள்வியின் உங்கள் பதில் தவறு. ரொம்ப யோசிச்சு ஆப்ஷன்ல இல்லாத பதிலையெல்லாம் சொல்லப்படாது!

விஜய் ஆனந்த் said...

5) இ

சத்தியம் = Swear???

அமர்நாத் follow through-ல பிட்ச் டேமேஜ் பண்றதா அம்பயர் குற்றச்சாட்டு???

cheena (சீனா) said...

வீக் எண்ட புதிரா - மொதப்பாராவிலே சொன்னதேயெ செஞ்சிருக்கலாம்