Sunday, November 23, 2008

வீக் எண்ட் புதிர்களின் விடைகள்

நேத்தைக்கு வீக் எண்ட் புதிர்கள் போட்டாலும் போட்டேன்... எக்கச்சக்க மெயில்.. எனக்கு பதில் சொல்லு, எனக்கு பதில் சொல்லு-ன்னு...

இந்த சான்ஸை ஏன் விடுவானேன்னு ஒரு பதிவாவே போடலாம்ன்னுதான் இந்தப் பதிவு..

இனி விடைகள்...

1) இவரு நடிகரு. பேர்ல குளிருக்குத் தேவையானது இருக்கு. இவர் அண்ணன் இவரளவுக்கு ஃபேமஸாகல. (ஆனா வாளமீனை வளைச்சுப்போட்ட மேட்டர்ல மட்டும் ஃபேமஸானாரு.) யாரிவரு?

இதுக்கு விஷால்-ன்னு நிறைய பேர் சொல்லியிருந்தாங்க. அது தப்பான பதில் அல்ல. சரியான பதில்தான். (எதையுமே நேராப் பேசமாட்டியாடா நீ?) குளிருக்குத் தேவையானது = ஷால். (ஒரு மனுஷன் விக்’ரம்’னிருந்தார். அவருக்கு அண்ணன் இல்லாததாத பதில் செல்லுபடியாகல!!!)



2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.

டாக்டர்.ப்ரூனோ.


3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!


ஆமாம் = யெஸ்.
சின்ன = பால
தேசியக்கவிஞர் = பாரதி


இதுக்கு விஜய்-ன்னு ஏன் பதில் சொன்னாங்கன்னு தெரியல. இவர் அஜீத் அல்ல-ன்னு ஏன் சொன்னேன்னா, பதிவுலகில இவர ‘தல’ம்பாங்க. தல-தான், ஆனா அஜீத் இல்லன்னு பொருள் கொள்க!


4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?


இதுக்கு ஏன் சரியா பதில் சொல்லல-ன்னு ஆச்சர்யமா இருக்கு. மூணு சாக்ஸ்தான் சரியான பதில். குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் ஒரே நிறத்தில் ஜோடியாக கிடைக்கும் - என்பதே கேள்வி. ரெண்டை எடுத்தாலும் வெவ்வேறு வர வாய்ப்புண்டு. அதே மாதிரி எத்தனை ஜோடி சாக்ஸ்ன்னு கேக்கல. முதல்ல ஒண்ணு எடுத்து, ரெண்டாவது ஒண்ணை எடுத்தா வெவ்வேற கலராயிருந்தா, மூணாவது எடுக்கும்போது தான் மேட்சாகும். ரெண்டாவதே அதே கலராயிருக்கற சான்ஸ் மிஸ் ஆனாலும், மூணாவது கண்டிப்பா முதல்ல எடுத்த ரெண்டுல ஒண்ணுக்கு மேட்ச்சாகும்.

5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..

அ) டி.வி.காமிராக்கள் ஆன் செய்யப்படவில்லை.
ஆ) பெய்ல் காணாமல் போயிருந்தது
இ) இந்திய காப்டன் தங்கள்மீது சத்தியம் செய்ததாகக் கூறினார்கள்.
ஈ) பாகிஸ்தான் வீரர் ஒருவர் வரத் தாமதமாகியது.


‘இ’ தான் சரியான பதில்! ஆமா.. அப்ப இருந்த கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘உங்க மேல சத்தியமா’ன்னு ஏதோ அம்ப்யர்கிட்ட பேசிட்டார். அதுனால அவங்க புகார் பண்ணி... 11 நிமிஷம் தாமதமா தொடங்கினாங்க.


6) இவரும் பதிவர்தான். கார் வெச்சிருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா தேவை.

CAR KEY = கார்க்கி

7) இது கொஞ்சம் ஃபேமஸானதுதான். இருந்தாலும் கேட்கறேன்..

விஜய்க்கு இருக்கு, சூர்யாவுக்கு இருக்கு. ஏன் ஜெமினி ஹீரோயின் கிரணுக்குக் கூட இருக்கு. ஆனா ஜெமினி ஹீரோ விக்ரமுக்கு இல்ல. அது என்ன?

இதுக்கு பதில் சொல்லாததும் ஆச்சர்யம்! அது அவங்க பேர்ல இருக்கற டி.வி. சேனல்! (3-ங்கறது பொருந்தாது. விக்ரமுக்கு பேர்ல மூணெழுத்து இல்லையா? மூணு எழுத்து ‘மட்டும்’ வேணா இல்ல.)


8) இளம் அரசியல்வாதி. ராத்திரில குல்லால இருக்காரு.


ராகுல்.


9) இதுவும் பழசுதான்.

மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?

15 ரூபா கொடுத்ததுல 3 ரூபா பாக்கி வந்ததா? அப்ப 12 பில். பாக்கி மூணு ரூபாதான் ஆளுக்கொண்ணு வந்துடுச்சுல்ல. 12+3 = 15. சரியா?

புரியலயா...?

சரி.. பத்து ரூபா ஓனர்கிட்ட போயிடுச்சா? 3 ரூபா இவங்களுக்கு வந்துடுச்சா? பாக்கி ரெண்டு ரூபா சர்வர் ஆட்டையப் போட்டாரா... 10+3+2 = 15. சரியா?

(இது ஒரு கூக்ளி கொஸ்டின். அப்படித்தான் கொழப்பும்!

10) கொஞ்சம் யோசிக்க வைக்கற புதிர்..

மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

ஆப்பிளும் ஆரஞ்சும்’ பாக்ஸ்ல கைவிட்டு எடுக்கணும். ஆரஞ்சு இருந்தா, அந்த பாக்ஸ் ஆரஞ்சு. ஆரஞ்சு பாக்ஸ் ஆப்பிள். இன்னொண்ணு ஆப்பிளும் ஆரஞ்சும். ஓக்கே?

24 comments:

முரளிகண்ணன் said...

continue every week

அத்திரி said...

அனைத்து புதிர்களுக்கும் சரியான பதில் சொன்ன பரிசலுக்கு வடகரை அண்ணாச்சி மூலமாக ஒரு கிலோ அல்வா வழங்கப்படும்.

(((((((((()))))))

கார்க்கிபவா said...

/இதுக்கு ஏன் சரியா பதில் சொல்லல-ன்னு ஆச்சர்யமா இருக்கு. மூணு சாக்ஸ்தான் சரியான பதில். குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் ஒரே நிறத்தில் ஜோடியாக கிடைக்கும் - என்பதே கேள்வி. ரெண்டை எடுத்தாலும் வெவ்வேறு வர வாய்ப்புண்டு. அதே மாதிரி எத்தனை ஜோடி சாக்ஸ்ன்னு கேக்கல. முதல்ல ஒண்ணு எடுத்து, ரெண்டாவது ஒண்ணை எடுத்தா வெவ்வேற கலராயிருந்தா, மூணாவது எடுக்கும்போது தான் மேட்சாகும். ரெண்டாவதே அதே கலராயிருக்கற சான்ஸ் மிஸ் ஆனாலும், மூணாவது கண்டிப்பா முதல்ல எடுத்த ரெண்டுல ஒண்ணுக்கு மேட்ச்சாகும்.
//

பரிசல் எனக்கு புரியலையா இல்லை நீங்க தப்பானு தெரியல.. மொத்தம் எத்தனை கலை சாக்ஸ் இருக்குனு நீங்க சொல்லவே இல்ல. அப்புறம் எப்படி மூணுனு சொல்ல முடியும்? அதுமட்டுமில்லாமல்" குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?" என்றுதான் கேட்டிங்க. இரண்டு எடுக்கும்போதே வர வாய்ப்பிருக்குஇல்ல. அதுதானே குறந்தது என்பதற்கு பதிலா இருக்க முடியும்.

கார்க்கிபவா said...

//இது ஒரு கூக்ளி கொஸ்டின். அப்படித்தான் கொழப்பும்!//

ஒன்னுமில்ல.. இத சுந்தர்ராஜன் ஏற்கனவே வடிவேலுகிட்ட கேட்டாரு.. அது எல்லோருக்கும் தெரியும் என்பதால் நான் பதில் சொல்லல..

மோகன் கந்தசாமி said...

//மூணு சாக்ஸ்தான் சரியான பதில்///

சற்று விரிவான விளக்கம் கொடுங்க பரிசல்!

ஏனைய புதிர்கள் யாவும் அருமை.

VIKNESHWARAN ADAKKALAM said...

அது சரி.... எப்படிங்க இப்படிலாம் யோசிச்சி கேட்க தோணுது... நீங்க சிந்தனை சின்னசாமி தான் :)))

பரிசல்காரன் said...

@ கார்க்கி

இந்த மாதிரியான லாஜிக்கலான கொஸ்டின்ஸ் கேட்பதன் மிக முக்கியச் சங்கடம் இதுதான். சரியாகப் புரியவைக்கமுடியாது! டாக்டர்.ப்ரூனோ சரியாக விளக்கமளிப்பார்!

மூணாவது சாக்ஸ் எடுக்கும்போதுதானே “சந்தேகத்துக்கிடமில்லாமல்” ஒரே நிறத்தாலான இரு சாக்ஸ் கிடைக்கும்? இரண்டை எடுத்தால் வரும் என்பது லக்கைப் பொறுத்துத் தானே? மிஸ்ஸாக வாய்ப்புண்டல்லவா???

கார்க்கிபவா said...

அது சரி. ஆனால் மொத்தம் எத்தனை நிறம் என்று சொல்லவேயில்லையே... மூன்றிற்கு மேலான நிறங்கள் இருந்தால் மூன்றாம் முறையும் தவற வாய்ப்புண்டு. இரண்டே நிறங்கள் எனில் முன்று முறையும் அதே நிறம் வாய்ப்புண்டு..

கார்க்கிபவா said...

//இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?//

ஒரு மொக்கை. மின்சாரமில்லை. இருட்டு. அப்புறம் எப்படி அவன் எடுத்தது என்ன நிறம்னு அவனுக்கு தெரியும்? எடுத்துகிட்ட இருக்க வேன்டியதுதான்.

புருனோ Bruno said...

//5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..//

விலெகா said...

"வீக் எண்ட்ன்னா" இந்த பக்கம் வரக்கூடதப்பு:))‌

Mahesh said...

வெல்டன்னானாம் வெள்ளக்காரன் !! இனிமே இன்ஃபோஸிஸ், டி சி எஸ் க்கெல்லாம் aptitude test எழுதப் போறவங்களுக்கு "பரிசல் கோச்சிங் செண்டர்" 100% கியாரண்டி :))))

க்ருஷ்ணா... அந்த பாலபாரதி, ராகுல் க்ளூவெல்லாம் ஹிண்டு க்ராஸ்வேர்ட் cryptic clue மாதிரி இருக்கு. உங்க திறமைகளோட இன்னொரு பரிமாணம்.

Athisha said...

nice brother..

பரிசல்காரன் said...

//க்ருஷ்ணா... அந்த பாலபாரதி, ராகுல் க்ளூவெல்லாம் ஹிண்டு க்ராஸ்வேர்ட் cryptic clue மாதிரி இருக்கு. உங்க திறமைகளோட இன்னொரு பரிமாணம்.//

ஐயையோ மகேஷ்ஜி.. நமக்கு ஆதர்சம் சுஜாதா. அவர் இந்த மாதிரி பலது ட்ரை பண்ணிருக்கார்!

@ டாக்டர் ப்ரூனோ

என்ன சொல்ல வர்றீங்க பாஸூ... புரியலியே.. ஏதும் தப்பா சொல்லீட்டனோ..?

நட்புடன் ஜமால் said...

பரிசல் அண்ணே.

மூனு எடுத்தா சரியான சாக்ஸ் வரும் என்பதும் 100% சொல்ல முடியாது.

என்னுடைய பதில் 11 சாக்ஸ் எடுத்தால் நிச்சய்ம் ஒரு சரியான் ஜோடி கிடைக்கும்.

ஒன்னும் சொதப்பலையே ...

பாபு said...

ஹோட்டல் புதிருக்கு நான் சொன்ன பதில் தப்புன்ற மாதிரி சொல்லி இருக்கீங்க ,என் அப்படின்னு சொல்ல முடியுமா?

பாபு said...

சாரி,சாரி
விடை தெரிந்திருந்தாலும் ,சொல்ற அவசரத்துல தப்பா சொல்லியிருக்கேன்

போன கமெண்ட் வாபஸ் பெறப்பட்டது

narsim said...

அறிவுக்கு நல் விருந்து..

rapp said...

இதுக்குத்தான் என்னை மாதிரி அறிவாளிகள் லீவில் இருக்கக்கூடாதுங்கறது. நான் மட்டும் இருந்திருந்தேன்னா, நெலமையே வேற:):):)

பரிசல்காரன் said...

// அதிரை ஜமால் said...

பரிசல் அண்ணே.

மூனு எடுத்தா சரியான சாக்ஸ் வரும் என்பதும் 100% சொல்ல முடியாது.

என்னுடைய பதில் 11 சாக்ஸ் எடுத்தால் நிச்சய்ம் ஒரு சரியான் ஜோடி கிடைக்கும்.

ஒன்னும் சொதப்பலையே ...//

நண்பா..

ரெண்டு கலர்தான் இருக்குன்னு சொல்லீட்டேன்.. பேச்சுக்கு ப்ளூ,ரெட்னு வெச்சுக்கோங்க..

முதல் சாக்ஸ் ப்ளூவா வருது..

ரெண்டாவது ரெட் வருது...

மூணாவது எடுக்கறது இதுல ரெண்டுல ஒண்ணாதானே இருக்கும்? அப்போ ஒரு ஜோடி ஒரே கலர்ல இருக்கும்ல?

வால்பையன் said...

//மூணாவது கண்டிப்பா முதல்ல எடுத்த ரெண்டுல ஒண்ணுக்கு மேட்ச்சாகும்.//

மொத்தம் இருப்பது 20 ஜோடி
ஒரு பேச்சுக்கு மஞ்சள், கருப்பு, பச்சை இன்னும் 17 வண்னத்தில் சாக்ஸ் இருக்குதுன்னு வச்சிக்குவோம்.
நீங்கள் சொல்வது போல் மூணு சாக்ஸ் எடுக்கும் போது நான் சொன்ன மூணு வண்னங்களும் வந்துவிட்டால்?
நீங்கள் சொல்வதில் லாஜிக் உதைக்கிறது.

வால்பையன் said...

//ஆப்பிளும் ஆரஞ்சும்’ பாக்ஸ்ல கைவிட்டு எடுக்கணும். ஆரஞ்சு இருந்தா, அந்த பாக்ஸ் ஆரஞ்சு. ஆரஞ்சு பாக்ஸ் ஆப்பிள். இன்னொண்ணு ஆப்பிளும் ஆரஞ்சும். ஓக்கே?//

இங்கேயும் லாஜிக் இடிக்குது!
ஏன் ஆரஞ்சு பாக்ஸில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்க கூடாதா?

பரிசல்காரன் said...

@ வால்பையன்

பாக்ஸில் இரண்டு நிறம் மட்டும்தாம் இருக்குன்னு சொல்றேன். இதை கேள்வில சரியா சொல்லல. ஸாரி. பின்னூட்டத்துல சொல்லியிருக்கேன்.

ஆப்பிள் ஆரஞ்சு

////ஆப்பிளும் ஆரஞ்சும்’ பாக்ஸ்ல கைவிட்டு எடுக்கணும். ஆரஞ்சு இருந்தா, அந்த பாக்ஸ் ஆரஞ்சு. ஆரஞ்சு பாக்ஸ் ஆப்பிள். இன்னொண்ணு ஆப்பிளும் ஆரஞ்சும். ஓக்கே?////

//ஏன் ஆரஞ்சு பாக்ஸில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்க கூடாதா?//

மூணுமே தப்புத்தப்பா ஒட்டிருக்கேன்னு கொட்டை எழுத்துல சொல்லிருக்கேன் பாக்கலியா? நீங்க சொல்றமாதிரி ஆரஞ்சு பாக்ஸ்ல ஆப்பிளும், ஆரஞ்சும் இருந்தா மூணாவது ஆப்பிள் பாக்ஸ்ல ஆப்பிள்தான் இருக்கும். நாந்தான் சொல்லீட்டேனே, மாறிமாறிதான் ஒட்டிருக்கும்னு.

புரிஞ்சுதா? இல்லீன்னா கூப்பிடுங்க...

கொங்கு நாடோடி said...

கேள்வி; ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன, அவற்றில் 10 வெள்ளை, 10 கருப்பு, அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?
இப்போ என்னமாதிரி அழுகலும் பதில் சொல்லி இருப்போம்