Wednesday, December 3, 2008

ஜோக்ஸ்

எல்லாரும் மன்னிக்கணும். சபரிமலைக்கு மாலைபோடற
ஆ-சாமிகளைப் பத்தி ஒரு பதிவு எழுதிகிட்டிருந்தேன். ரொம்ப சீரியஸா இருக்கு. கொஞ்சம் அந்தக் கோவம் தணியட்டும். ஏற்கனவே மு.க - கிட்டேர்ந்து அதிகமா கோவப்படக்கூடாது ன்னு அட்வைஸ் எல்லாம் வந்துகிட்டிருக்கு. அதுனால அப்பறமா அதை வெளியிடலாம்ன்னு நிறுத்தி வெச்சுட்டேன்.

************************************

சரி... இன்னைக்கு ஒண்ணும் எழுதாம இருக்கலாம். ஆனா அதுவும் முடியல. அதெப்படி ஒரு நாளைக்கு உங்களை சும்மா விடறது? அதுனால நான் ரசிச்ச சில நகைச்சுவைகளை போட்டுத் தாக்கலாம்ன்னு ஒரு ப்ளான்.

அவசரத்துக்கு உப்புமா மாதிரி, இதுதான் நம்மகிட்ட நெறைய ஸ்டாக் இருக்கு!

**********************************

ஒரு நேர்முகத்தேர்வில்:

கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?

வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து

நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!

****************************

காதலி: நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?

காதலன்: ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?

**************************
ரொம்ப குண்டான ஒருத்தர் பஸ்சுல போனாராம். ரெண்டு டிக்கெட் புக் பண்ணி, உள்ள ஏறினார். கண்டக்டர் எங்க இன்னொருத்தர்ன்னு கேட்க, எனக்குத்தான் ரெண்டு. குண்டா இருக்கறதால’ ன்னார்.

கண்டக்டர் சொன்னாராம்... “சீட்21, சீட் 37 ரெண்டும்தான் காலி. போய் ஒக்கார்ந்துக்கோங்க”

*************************

“நம்ம கலா பூகோளத்துல டரொமப் ‘வீக்’கா இருக்கா”

“அவங்கப்பா, அம்மா அவளை உலகம் தெரியாம வளர்த்துட்டாங்க”

*****************************

போலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:

“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”

“ஐயையோ.. அப்பறம்?”

“நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்”

**************************

மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”

“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”

“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”

“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”

“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”

“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”


****************************

பத்திரிகை ஆஃபீஸுக்கு வந்த ஒரு பெண்..

“என் கணவர் காலமாய்ட்டார். காலமானர் விளம்பரம் போட எவ்வளவு?”

“வார்த்தைக்கு நூறு ரூபாய்”

“ப்ச்.. என்கிட்ட இருநூறு ரூபாய்தான் இருக்கு. சரி.. ஹென்றி காலமானார்’ அப்படின்னு ரெண்டே வார்த்தை போட்டுடுங்க”

பத்திரிகைகாரருக்குப் பாவமாய்த் தோன்றவே..

“சரி..உங்களுக்கு சலுகை தர்றோம். நாலு வார்த்தை எழுதிக் கொடுங்க. இருநூறு ரூபாய் போதும்”

அந்தப் பெண்மணி எழுதிக் கொடுத்தார்...

“ஹென்றி காலமானார். கார் விற்பனைக்கு..”

***************************

ரெண்டு மருமகள்கள்..

“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப் போய்ட்டாங்க”

“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்”

“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”

*******************************


ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன். அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. ஒரு மந்திரியை கூப்ட்டு பேசச் சொன்னாரு ராஜா. மந்திரி ‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு. அவனும் பயத்துல கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்லமாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

******************************

டிஸ்கி: முதல் பாரால சொல்லிருக்கற மு.க., நம்ம முத்துலெட்சுமி கயல்விழி!

42 comments:

Mahesh said...

ஹி ஹி ஹி ஹி ஹ்இஹ் இஹி ஹ் ஹி ஹி ஹி ஹி.....

Mahesh said...

ஐ... நான் பஷ்டு........

கோவி.கண்ணன் said...

குக்ருஇ லால்ந மேலால்எ ! ... டஅ

கார்க்கிபவா said...

//கோவி.கண்ணன் said...
குக்ருஇ லால்ந மேலால்எ ! ... டஅ//

காலைல மப்புல இருக்கிற‌தால இத சரியா படிச்சிட்டேன்

Unknown said...

நல்லாருக்கு அண்ணா :)))

VIKNESHWARAN ADAKKALAM said...

கடைசி நகைச்சுவை புரியலைங்களே... என்ன அர்த்தம் :(... மந்திரி தான் திருடனா?

முரளிகண்ணன் said...

சூப்பர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சிரிச்சாசுங்க இன்னிக்கு ... இப்ப என்னத்துக்கு விளக்கம் முக வுக்கு.. யாராச்சும் என்னை திட்டப்போறாங்க.. :) கோவமா இருக்கும்பொது பதிவிடாமல் நிதானமா அதே விசயத்தை போடத்தானே போறீங்க..? ஓகே

முரளிகண்ணன் said...

\\மாலைபோடற
ஆ-சாமிகளைப் பத்தி \\

சாமி கண்னை குத்தீரப் போகுது, பார்த்து.

pudugaithendral said...

நல்லா இருந்துச்சுங்க.

பரிசல்காரன் said...

நன்றி மகேஷ்.. பல்லு சுளுக்கிக்கப் போவுது..

@ விகோ.ன்ணண்க

!றின்ந

@ கார்க்கி

நன்றி ஏழுமல.

@ஸ்ரீமதி

தேங்க்ஸ்ப்பா.

@ விக்கி

ஜோக்குக்கெல்லாம் விளக்கம் கேக்குறியேப்பா..

அதாவது, பொக்கிஷங்கள் இருக்கற இடத்தை தெரிஞ்சுகிட்டாருல்ல மந்திரி? இப்போ அந்த திருடன் தலையை சீவ வெச்சுட்டு, தான் போய் அதையெல்லாம் ஆட்டையப் போட்டுக்கலாம்ன்னு ப்ளான் பண்றாரு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! முடியல!

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

என்ன ப்ரொஃபைல் படம் மாத்திகிட்டே இருக்கீங்க? டெஸ்டிங்க்கா?

யாரந்த ஃபிகர்? மாதுரி .. மனீஷா???


@ முக

நன்றி!

எப்ப எழுதினாலும் கோவமாத்தான் வரும்போல. மன்னிச்சுக்கணுப்பா!!

Thamira said...

ர‌சித்தேன். குறிப்பா முத‌லும், கடைசியும் ஆன ஜோக்குக‌ள்.!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்லமாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

******************************



அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”




இதெல்லாம்........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிஸினஸ்ல இதெல்லாம் சகஜம்ப்பா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”





குடும்பத்தில இதெல்லாம் சகஜம்ப்பா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”



இதுக்கும் அதே கமண்ட் தான்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவளை உலகம் தெரியாம வளர்த்துட்டாங்க”



இதெல்லாம் சகஜம்ப்பா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்குத்தான் ரெண்டு. குண்டா இருக்கறதால’ ன்னார்.




சண்டேன்னா இதெல்லாம் சகஜம்ப்பா................

ambi said...

Comment for the prev post:

Better Late than never. :)

கேரக்டர்களை அறிமுகப்படுத்திய விதத்தை ரசித்தேன்.

ஒரு சின்ன நெருடல், இவ்ளோ க்ளோஸ் பிரண்ட் இப்படி இப்படி அமுதன் சொன்னான்னு முகத்துக்கு நேர்ல கேப்பாங்க தானே?


ஒரு வேளை இந்த பெண்களே இப்படி தான் எஜமான்ன்னு சொல்றீங்களோ? :p

ambi said...

commetn for this post:

:)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காதலி: நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?

காதலன்: ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?





லவ்வர்ஸ்.. இதெல்லாம் நோட் பண்ணிக்குங்க................

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆ-சாமி




நாங்கல்லா வீஈஈஈஈஈஈறதம்....

பிச்சைப்பாத்திரம் said...

//ஹென்றி காலமானார். கார் விற்பனைக்கு..”//

nice. :-))

பரிசல்காரன் said...

@ sureஷ்

கும்மியதற்கு நன்றி.

@ அம்பி

பெண்களே அப்படித்தான்னு சொல்லவரேன். அதனாலதான் பெண்கள்..பெண்கள்.. -ங்கற வரிய அங்கே சேர்த்தேன்.

@ சுரேஷ் கண்ணன்

வருகைக்கு நன்றி சாரே!!!

பழமைபேசி said...

இஃகி!! இஃகி!!!

இஃகி!! இஃகி!!!

பரிசல்காரன் said...

@ பழமைபேசி

இந்தச் சிரிப்புக்கான விளக்கத்தை நாளைய பதிவில் போடுவீங்கள்ல??

பழமைபேசி said...

//பரிசல்காரன் said...
@ பழமைபேசி

இந்தச் சிரிப்புக்கான விளக்கத்தை நாளைய பதிவில் போடுவீங்கள்ல??
//

அண்ணாத்த, நெசமாலுமே எனக்கு பதிவைப் படிச்சுட்டு அப்பிடி ஒரு சிரிப்பு... அதை விட தங்கமணி சிரிக்கிறதப் பாத்த எனக்கு, அதிகமாயிடுச்சு... அப்ப இவ்வளவுதான் தட்ட முடிஞ்சது.... இப்ப ரெண்டாவது தடவை படிக்க வந்தேன்....

புதுகை.அப்துல்லா said...

ஹி ஹி ஹி ஹி ஹ்இஹ் இஹி ஹ் ஹி ஹி ஹி ஹி.....

கணினி தேசம் said...

ஹி.ஹி..!! சிரிப்போ சிரிப்பு!!

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

குக்ருஇ லால்ந மேலால்எ ! ... டஅ
//

..டுட்பீப்ரி

Natty said...

யாரந்த ஃபிகர்? மாதுரி .. மனீஷா???
//

வீட்டுல நல்ல பேரு வாங்க எப்படியெல்லாம் பிட்ட போடுறாங்கப்பா....

Natty said...

இஃகி!! இஃகி!!!

இஃகி!! இஃகி!

///

நம்ம பழமைபேசி தமிழில் சிரிக்க முயற்சி செய்வது பாராட்ட பட வேண்டிய ஒன்று... ஆனால், இதை படிக்கும் போதெல்லாம், நல்லாத்தானே இருந்தாரு... இப்படி இருமல் வருதே... அப்படின்னுத்தான் தோணுது...

இஃகி!! இஃகி!!!

இஃகி!! இஃகி!

ரமேஷ் வைத்யா said...

அய்யா,
விஸ்வரூபமய்யா. டுர்ர்ர்ர்ர்ர் ஜோக் நானே (ஆமாம் நானே) படிச்சதில்லை. என் துன்பம் போக்கிய பதிவு.

ரமேஷ் வைத்யா said...

நெற்றிப்பொட்டில் சுடுகிற ஜோக், படர்க்கையில் இருக்க வேண்டும்.

ARV Loshan said...

சில ஜோக்சை முதலிலேயே வாசித்திருந்தாலும் மறுபடி சிரித்தேன்..

ஒன்றிஒரண்டு ஜோக்சை இன்று எனது 'விடியல்' வானொலி நிகழ்ச்சியில் பயன்படுத்தினேன்.. :)

ராயல்டி தரவேண்டியதில்லை தானே..

எல்லாவற்றிலும் நான் அதிகம் ரசித்து அந்த மு.க விஷயம்.. :p

narsim said...

ஹஹஹஹஹா.. பரிசல் மிக ரசித்த ஜோக் அந்த டுர்ர்ர்.. டுப் டுப்..

மனதை லேசாக்கிய பதிவு.. நன்றி

Busy said...

ஹி ஹி ஹி ஹி ஹ்இஹ் இஹி ஹ் ஹி ஹி ஹி ஹி.....

சில ஜோக்சை முதலிலேயே வாசித்திருந்தாலும் மறுபடி சிரித்தேன்..

ஹி ஹி ஹி ஹி ஹ்இஹ் இஹி ஹ் ஹி ஹி ஹி ஹி.....

ஹி ஹி ஹி ஹி ஹ்இஹ் இஹி ஹ் ஹி ஹி ஹி ஹி.....

rapp said...

me the 40TH:):):)

rapp said...

நகைச்சுவை உணர்வுள்ள நீங்க ஏன் புது ஜோக்ஸ் உருவாக்க மாட்டேங்குறீங்க? நீங்க முயற்சி பண்ணுங்க கிருஷ்ணா சார். எல்லாம் நல்ல ஜோக்ஸ்னாலும் இதெல்லாம் பழசாவே இருக்கு.

சந்தர் said...

// டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!//
ரொம்பவே சிரிச்சிட்டேன். எல்லா ஜோக்குகளுமே சூப்பர்!