Wednesday, October 7, 2009
ரஜினியின் எந்திரன் படப் பாடல்கள் – ஒரு இசை ரசிகன் பார்வையில்
மூணாறு அல்லது வால்பாறை.. சரியாக ஞாபகமில்லை. இதில் ஏதோ ஒரு ஊரில் நண்பர்களோடு சுற்றுலாவில் இருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கடையிலிருந்து அந்தப் பாடல் கேட்டது...
“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நல்லவங்க பேச்சுக்காரன்
நல்லாப்பாடும் பாட்டுக்காரன்...”
எங்களை அந்த இடத்திலேயே நிற்க வைத்து, அந்தக் கடைக்காரரிடம் விசாரிக்க வைத்தது அந்தப் பாடல்.
“பாட்ஷாவாணு. ரஜினி ரஜினிதன்னே. எந்தா ஒரு ஸ்பீடு ஈ பாட்டில” என்றவாறு அந்த மலையாளத்துக்காரர் இசையமைத்த தேவாவை விடுத்து ரஜினியைப் பாராட்டினார். அன்றைக்குத்தான் கேசட் ரிலீஸாகி இருந்தது. தனது அடையாளத்தை மறைத்து சூப்பர் ஸ்டாரை மனதில் கொண்டுவந்த தேவா ஜெயிச்சுட்டாருடா என்று பேசிக்கொண்டோம் நாங்கள். அந்தப் படத்தில் இந்த ஒரு பாடல்தவிர 'பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' என்ற எஸ்.பி.பியின் சிம்மகர்ஜனையில் வரும் பிட் பாடல் மனதைக் கவர்ந்தது. மற்றபடி அழகு அழகு, தங்கமகன் இன்று, ஸ்டைலு ஸ்டைலுதான் போன்ற பாடலுக்கெல்லாம் கிடைத்தது படத்தாலான ஹிட்டே தவிர... பாடலுக்கான ஹிட் ஆகவில்லை. எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ ஓரளவு ஹிட்டானது என்றே சொல்லவேண்டும்.
(ஆட்டோக்காரன் பாடலில் வரும் அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான் ‘அர்த்தமற்ற வரிகள்’ என்று சர்ச்சைக்குள்ளானபோது லியோனி சொன்னார். ‘அர்த்தமற்றதுன்னு சொல்லக்கூடாது, அதான் அவரே அர்த்தம் சொல்லீட்டாரே.. அஜக்குன்னா – அஜக்குதான். குமுக்குன்னா – குமுக்குதான்!’)
அடுத்த படம் முத்து. நான் பெங்களூரில் இருந்தேன் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக தலைவருக்கு இசை. சொதப்புவாரோ என்று பயந்துகொண்டே இருந்தோம். (லேட்டாக 2002ல் சொதப்பினார்!). கேசட் வந்த அன்று காலை வாங்கி, அண்ணனின் வாக்மேனில் கேட்டபோது இரண்டாவது பாட்டை கேட்கவே முடியாமல் அந்த ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாட்டையே திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். குலுவாலிலேயும், கொக்கு சைவக் கொக்கும், பிட் சாங்கான விடுகதையாவும் ஏமாற்றவில்லை. அந்தத் தில்லானா தில்லானா! – இந்தப் படத்திற்குப் பிறகுதான் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இப்படி ரசிகர்களைக் கட்டிப் போட ஒரு பாட்டு வைக்கும் ட்ரெண்டையே கொண்டுவந்ததா? (முரளிகண்ணன் & கேபிள் சங்கர் – ப்ளீஸ் ஹெல்ப்!) என்ன பாட்டு.. என்ன இசை! ஏ.ஆர்.ரகுமானுக்கு சபாஷ் போட வைத்தது!
1995ல் இரண்டே மாத இடைவெளியில் அடுத்தடுத்து வந்து விருந்து படைத்த அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு 1997ல் அருணாச்சலம், 1999ல் படையப்பா. இதில் அருணாச்சலம் படத்தின் ‘அதாண்டா இதாண்டா’ ரஜினிக்காக மட்டுமே ஹிட் ஆனது. ‘சிங்கமொன்று புறப்பட்டதே’வும் அதே மாதிரிதான். மற்றபடி நகுமோ, மாத்தாடு மாத்தாடு, அல்லி அல்லி அனார்கலி எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அண்ணாமலை, பாட்ஷாவில் கூட நல்லாப் பண்ணினாரே தேவா.. இப்படி ஏமாத்திட்டாரே’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.
படையப்பாவில் INTRO SONGஆன ‘எம் பேரு படையப்பா’ ஓகே சொல்லவைத்தது. இந்தப் படத்தில் தன்னைவிட ரம்யாகிருஷ்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ரஜினி. அவர் எண்ணம் போலவே ஏ.ஆர். ஆரும் ரம்யாகிருஷ்ணன்-ரஜினி பாட்டான 'மின்சாரப் பூவே’ பாடலை மிக அருமையாக அமைத்திருந்தார். மற்ற வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, ஓஹ்ஹோஹோ கிக்கு ஏறுதே பாடல்களும் நன்றாகத்தான் அமைந்திருந்தன என்றாலும் ஏ.ஆர்.ரகுமான் தேவாவின் ஸ்டூடியோவில் உட்காருந்து கம்போஸ் பண்ணியிருப்பாரோ என்பது போல இருந்தது பாடல்கள்.
மூன்று வருடம் கழித்து பாபா(2002). ஏற்கனவே சொன்னதுபோல மண்டை காய வைத்துவிட்டார் ஏ.ஆர். ரகுமான். மாயா மாயா பாடல் மட்டும் ஏதோ பரவாயில்லை ரகம். மற்ற பாடல்கள் – கேட்கவே வேண்டாம்!
அதன் பின் 2005ல் சந்திரமுகி. காய்ந்து கிடந்த ரஜினி படப் பாடல் பிரியர்களை விருந்து வைத்துக் கவர்ந்தார் வித்யாசாகர். தேவுடா தேவுடா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், அத்திந்தோம் எல்லாமே ஓக்கே என்றாலும் 'ரா ரா சரசகு ராரா' அள்ளிப்போனது பாராட்டுக்களை. சபாஷ் வித்யாசாகர்!
சிவாஜி. இரண்டு வருட இடைவெளி. பல்லேலக்கா பல்லேலக்காவென்று ரஜினி ஸ்பீட் பாடல். அதிரடிக்காரன் மச்சான், சஹாரா சாரல் தூவுதோ, ஒரு கூடை சன்லைட், வாஜி வாஜி என்று ரஜினி ரசிகனை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் பாடல்கள். ஹிட்டா... ஹிட்டில்லையா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
அதன்பின் குசேலன். சொல்வதற்கே ஒன்றுமில்லாத பாடல்கள். பேரின்பப் பேச்சுக்காரன் பாடல் மட்டும் ஓகே ரகம். ஆனால் இரைச்சலால் அந்தப் பாடலும் காணாமல் போனது. சொல்லம்மா சொல்லம்மா நல்ல மெலடி. ஆனால் டைரக்டர் பி.வாசு ஒட்டு மொத்த படத்தையே சொதப்பியதில் இந்தப் பாடல் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஆட்டுக் குட்டியானது!
இதெல்லாம் எதற்குச் சொல்லவருகிறேன். (அதானே)
'ரஜினி படமா என்ன பாட்டு வேணா போடு என்று நினைக்கிறார்களோ’ என்று நினைக்கவைத்து வைக்கிறார்கள் இப்போதெல்லாம். தளபதி வந்தபோது தினமும் விசாரித்து விசாரித்து கேசட் வந்த அன்று முதல் ஆளாய் வாங்கி அந்த ஜாங்குஜக்கு ஜஜக்கு ஜக்கு என்று ஆட்டம் போட்டதும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்று கத்தியதும், சின்னத்தாயவள் என்று உருகியதும்... அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரஜினிக்காக மட்டுமல்ல இசைப் பிரியர்களுக்காகவும் ஹிட்டானதும் யாராவது மறுக்க முடியுமா?
மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?
2010ல் எப்படியும் வரப்போகிறது எந்திரன். ஒன்றிரண்டு பாடல்கள் கம்போஸ் செய்திருக்கலாம். மற்றவற்றிலாவது இதைக் கருத்தில் கொள்வார்களா ஷங்கரும், ரகுமானும், சூப்பர் ஸ்டாரும் - லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் - சன் பிக்சர்ஸும்?
என்னைப் போன்றவர்களுக்கு விருந்தளிப்பார்களா?
பொறுத்திருந்து பார்க்கலாம் – ஸாரி - கேட்கலாம்!
*
நன்றி: முரளிகண்ணன் & டைரக்டர் (கேபிள்) சங்கர்!
*
(இது ஒரு மீள்பதிவு. இன்னும் ஒரு வருஷம் கழிச்சும் எழுதலாம்போல.... அப்பவும் பாடல்கள் வரப்போறதில்ல!)
.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?//
கே கே இளையராஜா எப்ப வருவாருன்னு சுருக்கமா கேட்கறீங்களா? :-))))
அதற்கெல்லாம் வாய்ப்பில்லை :-)))
//என்னைப் போன்றவர்களுக்கு விருந்தளிப்பார்களா?//
நடக்காத காரியம்..காலம் மாறி விட்டது கே கே..மீண்டும் அந்த காலத்திற்கு செல்வது என்பது மிக சிரமமான ஒன்று.. ரஜினிக்கு மட்டுமல்ல எவருக்கும். அந்த இசை காலம் அதோடு முடிந்தது. எப்பாவது அதிசயமாக ஒன்று இரண்டு பாடல்கள்..தப்பி தவறி வரலாம்.
\\1995ல் இரண்டே மாத இடைவெளியில் அடுத்தடுத்து வந்து விருந்து படைத்த அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு \\
பரிசல், பாட்ஷா - ஜனவரி, முத்து - தீபாவளி என நினைக்கிறேன்.
நல்ல பதிவு. கடந்த 5 ஏன் 10 ஆண்டுகளில் எல்லா பாடல்களும் நன்றாக இருந்த படம் என்று பார்த்தால் மிக மிக குறைவே.
எந்திரனில் இந்த குறை களையப்பட்டால் சந்தோசம்
\\இந்தப் படத்திற்குப் பிறகுதான் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இப்படி ரசிகர்களைக் கட்டிப் போட ஒரு பாட்டு வைக்கும் ட்ரெண்டையே கொண்டுவந்ததா? \\
ஜெண்டில்மேன் (9௩3,ஒட்டகத்தை கட்டிக்கோ], காதலன்(94, ஆகிய படங்களிலேயே இந்த ட்ரெண்ட் வந்துவிட்டது. இப்பொழுது இது கிளிசே ஆகிவிட்டது
//குசேலன். சொல்வதற்கே ஒன்றுமில்லாத பாடல்கள். //
அதையெல்லாம் ஏன் ரஜினி பட வரிசையில் சேர்க்கிறீர்கள்.
நாங்கள் நாட்டுக்கொரு நல்லவனையே சேர்த்தது கிடையாது
//பாட்ஷா - ஜனவரி, முத்து - தீபாவளி என நினைக்கிறேன்.//
இருக்கலாம், ஆனால் பாஷா பார்த்துக் கொண்டே இருந்ததால், மறுநாளே முத்து வெளியானது போல் இருந்தது.
அலசல் கலக்கல்.. எஜமான் பாடல்கள் தேன்.. நல்ல பதிவு.. ரகுமான் பார்வைக்கு போகுமா இந்த பதிவு??
கே.கே.
என்ன சிறுபிள்ளைத் தனம்! ரகுமானை, இளையராஜா போல டியூன் போடச் சொல்லுகிறீர்கள். தொண்ணூறுகள் போல ஒரு வறண்ட இசை எப்போதுமே இருந்ததில்லை. பாடல்கள் ஹிட் ஆயின என்றால், பெரிதும் ஹீரோக்களால் தான்.
தேவாவும், S.A.ராஜ்குமாரும் தமிழ் திரைப்பட இசையை ஒரு முப்பது வருடம் பின்னடைவு செய்தார்கள். ரகுமான் ஹிந்தி, ஆங்கிலம் என்று சென்றுவிட, இந்த இருவர் செய்த அசட்டுத்தனங்களை செகித்துக் கொண்டோம். வித்யாசாகர், ஹாரிஸ், யுவன் எல்லாம் வந்த பின்னரே நிலைமை சீராகியுள்ளது.
அனுஜன்யா
முத்து படப்பாடல் ரிலீஸ் ஆன அன்று இலங்கை வாலொலியில் ஒரு பட பாடல் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள்,கேட்ட உடனேயே பிடித்து போனது,ஆனால் படையப்பா எனக்கு கேட்க கேட்கத்தான் பிடிக்க ஆரம்பித்தது.
நன்றி பரிசல் பழசெல்லாம் கிளறிவிட்டதுக்கு.
Andhap potkaalam ellam ilayarajavudan malai yeri vittadhu
மலரும் நினைவுகளா .... மீ த எஸ்கேப்பு
பாட்டு நல்லாயிருந்தா சிம்பு பாட்டு கூட ஹிட்டாகும்.. எப்படி இருந்தாலும் ஹிட்டாவறதுதான் தலைவர்..இருந்தாலும் உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு
கிருஷ்ணா,
ட்ரெண்ட் மாறிவிட்டது. பழைய இசை கேட்க ஆளில்லை இப்பொ.
அடியே கொல்லுதேதான் இப்ப ட்ரெண்ட்.
தளபதியில் வந்த ராக்கம்மா கையத்தட்டு மிகச்சிறந்த பாடல். வயலினில் ஒரு சிம்பனி போல ஆரம்பித்து (வெஸ்டர்ன் கிளாசிக்), நம்ம ஊரு கிளாசிக் பாட்டாகி அதினூடே கர்னாடக சங்கீதமும் இழையோடும்(குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும்). நல்லதொரு ப்யூஸன் அந்தப் பாடல்.
அதே போல் ராஜாதிராஜா படத்தில் வரும் வா வா மஞ்சள் மலரே பாட்டும் வித்தியாசமாக இருக்கும்.
பார்க்கலாம், பார்க்கலாம்
ஸாரி
கேட்கலாம், கேட்கலாம்,
//அந்தத் தில்லானா தில்லானா! – இந்தப் படத்திற்குப் பிறகுதான் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இப்படி ரசிகர்களைக் கட்டிப் போட ஒரு பாட்டு வைக்கும் ட்ரெண்டையே கொண்டுவந்ததா? //
எனக்குத் தெரிந்து இல்லை. முதல்வன் படத்தில் 'உப்புக் கருவாடு' பாடலுக்க் முன்பு அந்த இடத்தில் ஒரு மெலடி பாட்டு தான் இருந்தது. வைரமுத்து எழுதி ரகுமான் இசைஅமைத்து முழு பாடலும் முடிந்த பிறகு... ஷங்கருக்கு, அதிரடியான கிளைமாக்சுக்கு முன்பு இப்படி ஒரு மெலடி இருந்தால் நன்றாக இருக்காது, இந்த இடத்தில் ஒரு வித்தியாசமான folk சாங் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி உருவானதுதான் 'உப்புக் கருவாடு' பாட்டு. இதை வைரமுத்து ஒரு மேடையில் சொல்லி, இந்த அளவுக்கு ரசிகர்களின் நாடி தெரிந்தவர் ஷங்கர் என்று சொல்லி பாராட்டினார். அதன் பிறகே இது போல் பாடல் வைப்பது ஒரு trendஆகா உருவானது.
pls correct me if i'm wrong.
நல்லா கேட்டுருக்கீங்க, சாரி சாரி எழுதிருக்கீங்க...:-)
//கார்க்கி said...
பாட்டு நல்லாயிருந்தா சிம்பு பாட்டு கூட ஹிட்டாகும்.. எப்படி இருந்தாலும் ஹிட்டாவறதுதான் தலைவர்..இருந்தாலும் உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு//
சூப்பருங்க :-)
பிழையில்லாமல் எழுத கத்துகோங்க.
//Nagarajan said...
பிழையில்லாமல் எழுத கத்துகோங்க.//
ண்ணா.. யாருங்ணா நீங்க? என்னன்னா பிழை? நீங்க எழுதின ”எழுத - கத்துக்கோங்க” நடுவுல ‘க்’ விட்டுப் போச்சே, அந்த மாதிரி எதுனா சந்திப் பிழையா? சொல்லுங்ணா.. திருத்திக்கறேன்...
பரிசல்,
நம்மள கண்டுக்கவே மாட்டறீங்க.. வச்சாச்சு டைம் பாம்.. வெடிக்கட்டும் அப்ப இருக்கு உங்களுக்கு..
ஆஜர்.!
முதல்ல ரஜினி அறிமுக பாடலை பாலு அல்லது மனோ பாடவேண்டும் சங்கர் மஹாதேவன் பாடினால் அந்தப்படம் FLAP (பாபா /குசேலன்)மேலும் நீங்கள் பதிவர்கள் ஒரு பின்னூட்டம் போடவேண்டும் உதித் நாராயணன் பாடுவதற்கு தமிழில் வாய்ப்பு கொடுக்க கூடாதென்று அந்த நாதாரி எல்லா பாட்டையும் கடிச்சு கொதருது(வித்யாசாகர்/ஸ்ரீகாந்த் தேவா/யுவன்)
Good one, i think thalapathi was done by rahman in the name of illayaraja during assistant for illayaraja, frm tht only manirathnam took in his roja
ரஜனியின் படங்களின் விலையை ஏகத்துக்கும் ஏற்றி விட்டதால் வந்த வினை இது. இதனால் ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது. எனது கணிப்பில் ரஜினி படங்களில் ரஜனி ரசிகர்களையும் இசை ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தவர்கள் இளையராஜாவும் தேவாவும் தான்
முதல்ல ரஜினி அறிமுக பாடலை பாலு அல்லது மனோ பாடவேண்டும் சங்கர் மஹாதேவன் பாடினால் அந்தப்படம் FLAP (பாபா /குசேலன்)மேலும் நீங்கள் பதிவர்கள் ஒரு பின்னூட்டம் போடவேண்டும் உதித் நாராயணன் பாடுவதற்கு தமிழில் வாய்ப்பு கொடுக்க கூடாதென்று அந்த நாதாரி எல்லா பாட்டையும் கடிச்சு கொதருது(வித்யாசாகர்/ஸ்ரீகாந்த் தேவா/யுவன்) INTHA PADHIVAI EN DELETE SEITHERRHAL
ரஜினிக்கு ராஜா போட்ட பாடல்கள் ஹிட் என்பது ஒரு புறம், ஆனால், ரஜினியின் spl ஸ்டைல் தான், அதை பிரதிபலிப்பது போன்று ஸ்டைல் ஆன இசை ராஜா மட்டுமே தந்திருக்கிறார். உதாரணங்கள் பல...
வள்ளி படம்: ஜிங்கு ஜாங்கு ரப்பப்போ என்ற பாடலில் வரும் கிட்டார் இசை
மன்னன்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் முழு பாடலும் ஸ்டைல் ஆன டியுன்.
இன்றைய ரஜினி அறிமுக பாடல்கல் ஸ்டைல் இல்லை, வெறும் ட்ரம்பெட் தான். உதாரணம், முத்து, தேவுடா போன்ற பாடல்கள். இவற்றில் ரஜினிக்காக பிரம்மாண்டமான ட்ரம்பெட் இசை, வேகமான பீட்ஸ், ரஜினிக்கே உரிய தத்துவ லிரிக்ஸ் தான் ஆனால் ஸ்டைல் கொஞ்சமும் இல்லை. கடைசியாக கொஞ்சமாச்சும் ஸ்டைலான ரஜினி பாடு என்றால் அது படையப்பாவில் வரும் "கிக்கு ஏறுதே" தான். சிவாஜி ஸ்டைலாக இல்லை என்றாலும், ராப், hiphop போன்ற western genres இருந்தன,
ராஜா போட்ட அளவு இன்று stylish இசை எதுவும் பெருசா இல்லை. இப்போ வர்ற ரஜினி பாடல்களும் சரி, படங்களும் சரி, சரக்கற்று போய் இருக்கின்றன..என்திரனில் ரோபோ இருப்பதால் கொஞ்சம் stylish இசை எதிர்பார்க்கலாம்
/அடியே கொல்லுதேதான் இப்ப ட்ரெண்ட். //
அண்ணாச்சி.. அதுகூட அலைபாயுதேவில் ரஹ்மான் போட்ட “என்றென்றும் புன்னகை” யின் இன்ஸ்பிரேஷந்தான்..
// Silicon Sillu said...
ரஜினிக்கு ராஜா போட்ட பாடல்கள் ஹிட் என்பது ஒரு புறம், ஆனால், ரஜினியின் spl ஸ்டைல் தான், அதை பிரதிபலிப்பது போன்று ஸ்டைல் ஆன இசை ராஜா மட்டுமே தந்திருக்கிறார். உதாரணங்கள் பல...//
ரிப்பீட்டு....
ராஜா - படைப்பவன்...
சரி, நான் ஒரு ஓரமா போயற்ரேன்.
நீங்களுமா? இப்படி தலைப்பு வைக்கிறீர்கள்?
பாபாவில் “ சக்தி கொடு “ பிடிக்கவில்லையா?
this is my altime favourite
தலைப்பு வேற ஏதாவது வெச்சிருக்கலாம்.
சமீப காலத்தில் நிறைய பேரு கிளம்பியிருக்கீங்க போல இருக்கு இயந்திரன் பத்தி பதிவெழுத :-)
anyways, நல்ல அலசல்.
பாட்டு நல்லாயிருந்தா சிம்பு பாட்டு கூட ஹிட்டாகும்.. எப்படி இருந்தாலும் ஹிட்டாவறதுதான் தலைவர்..இருந்தாலும் உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு
/மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?/
அது தான் நீங்களே கோடிட்டுக் காட்டிட்டீங்களே...அதெல்லாம் ராஜா காலத்து அற்புதங்கள். மீண்டும் அதே கூட்டணிகள் அமைந்தாலொழிய, அந்தக் காலம் திரும்பி வராது.
தலைப்பை பார்த்து ஏமாந்து விட்டேன்.
ஆனாலும் கிருஷ்ணா கலக்கல் தான்.
/*ரஜினி படமா என்ன பாட்டு வேணா போடு என்று நினைக்கிறார்களோ’ என்று நினைக்கவைத்து வைக்கிறார்கள் இப்போதெல்லாம். தளபதி வந்தபோது தினமும் விசாரித்து விசாரித்து கேசட் வந்த அன்று முதல் ஆளாய் வாங்கி அந்த ஜாங்குஜக்கு ஜஜக்கு ஜக்கு என்று ஆட்டம் போட்டதும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்று கத்தியதும், சின்னத்தாயவள் என்று உருகியதும்... அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரஜினிக்காக மட்டுமல்ல இசைப் பிரியர்களுக்காகவும் ஹிட்டானதும் யாராவது மறுக்க முடியுமா?
மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?*/
அண்ணே!!! நீங்க மேலே குறிப்பிட்ட எல்லா படங்களுக்குமே இசையமைத்தது இசைஞானி அதுவும் அவரது பீக் பீரியடில்...
இப்பொழுது சூப்பர்ஸ்டார் அவர்களின் படத்திற்கு அதிக ஸ்டார் வேல்யூ கிடைக்க வேண்டும் என்று இசைப்புயல் அவர்களை சேர்த்து கொள்கிறார்கள்..
என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் அவர்கள் உலக இசைக்கு சென்றுவிட்டார்.. கடைசியாக அவரது இசையில் நான் மிகவும் ஒன்றி போனது ‘ரிதம்’ படம் தான்... அதன் பின்னர் வந்த அவரது பாடல்கள் அனைத்துமே வாத்திய கருவிகளின் ராஜ்ஜியமாக... எனக்கு அந்நியமாகி போனது... :(
நல்ல பதிவு அண்ணா... எந்திரன் படப்பாடல் சிவாஜி ஸ்டைலில் தான் இருக்கும் என்பது திண்ணம்...
சொல்ல மறந்துவிட்டேன்... ‘ரா ரா’ பாடலைத் தவிர்த்து வேறு எந்த பாடலும் எனக்கு சந்திரமுகி படத்தில் பிடிக்கவில்லை...
//(இது ஒரு மீள்பதிவு. இன்னும் ஒரு வருஷம் கழிச்சும் எழுதலாம்போல.... அப்பவும் பாடல்கள் வரப்போறதில்ல!)//
ஆமாம்!
தாமிராங்கிற பேர்ல ஒரு பின்னூட்டம் இருக்குது. அது நான் போடலையே.. லிங்க் என் பதிவுக்குதான் போகுது. என்னாங்கடா இது.? எப்படியோ என் கருத்து அதுதான்.
Post a Comment