நான் செல்லும் கடைகளில் ஏதாவது குறையிருப்பின் முடிந்தவரை பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஷோ-வாக இருக்கும் கடைகளில் அப்படி இல்லை. சின்ன கடை, பேக்கரிகளில் குறையிருப்பின் கொஞ்சம் பாலிஷாக சொல்ல நினைப்பேன்.
சமீபத்தில் (1970கள் அல்ல. போன வாரம்) உடுமலைப் பேட்டை போயிருந்தேன், தம்பியோடு போய்க்கொண்டிருந்தபோது, ஒரு தெருவின் ஓரத்தில் பெஞ்சில் வைத்து மசால் பொரி போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அதைப் பார்த்ததும் உடுமலையைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களோடு தினமும் செல்லும் (லைப்ரரிக்கு எதிரிலிருக்கும்) செட்டியார் பொரிக்கடை ஞாபகம் வரவே அங்கே காரைச் செலுத்தினேன். அசத்தலான டேஸ்டில் இருக்கும் அங்கே மசால்பொரி.
கடை பூட்டியிருக்கவே... மசால் பொரி ஆசை உந்தவே, மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து பொரி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். மசாலே இல்லை. வெறும் எண்ணையாக இருந்தது. இதற்குத்தான் முன்னபின்ன வராத கடைக்கு போகக்கூடாது என்று தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் “என்னங்க பெரியவரே.. நல்லாவே இல்லையே” என்று சொன்னேன். அவர் முகம் ஒரு மாதிரி ஆகி “என்னது?” என்று செய்திருந்த வேலையை நிறுத்திவிட்டுக் கேட்டார்.
எனக்கு பாவமாக இருக்கவே.. “இல்லீங்கண்ணா.. உங்க டேஸ்டுக்காகத்தான் எப்ப வந்தாலும் தேடி வர்றேன். உங்க வழக்கமான டேஸ்ட் இல்லைண்ணா” என்றேன்.
அவர் சிரித்தபடி “இப்போதான் மசால் கலக்கினேன். லெமன் இன்னும் மிக்ஸ் ஆகல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சா நல்லா மிக்ஸ் ஆகி காரமா வரும். அதுதான் தம்பி வேறொண்ணுமில்ல. நான் உங்ககிட்ட பத்துநிமிஷமாகும் சொல்லிருக்கலாம், என் தப்புதான்” என்றார்.
“ஐயையோ பரவால்லீங்க” என்று இவ்வளவு பொறுமையா விளக்கம் சொல்றீங்களே.. அது போதும்” என்றதற்கு அவர் சொன்னார்...
“‘உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன். உண்மையா நான் இந்த ஊருக்கு வந்தது போனவாரம். கடைங்கற பேர்ல ரெண்டு ஸ்டூலையும், பெஞ்சையும் போட்டு பொரி யாவாரம் ஆரம்பிச்சது இன்னைக்குத்தான்” என்றார்.
சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!
**********************************
வெகுநாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவரது வீட்டிற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றேன். ஊரில் இருக்கும்போதெல்லாம் தினமும் போய்க் கொண்டிருக்கும் வீடென்பதால் அக்கம் பக்கத்தவரையெல்லாம் பழக்கம்.
ஒவ்வொருவராய் வந்து போய்க் கொண்டிருக்க, இவர்கள் முன்பிருந்த ஒரு வீட்டு ஓனரின் மனைவி வந்தார். அந்த அம்மாவைப் பார்த்ததும், நாலைந்து மாதங்களுக்கு முன் அவரது கணவன் இறந்தது நினைவுக்கு வந்தது. அதற்கு நான் போகவில்லை.
என்னைப் பார்த்ததும்... “எப்படி இருக்க கிருஷ்ணா”என்றவாறு வந்தார்.
நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு “சொல்லுங்கக்கா. அண்ணன்தான் இப்படிப் போய்ட்டாரு பாருங்க” என்றேன்.
“அதையேன் கேக்கற? இங்க வரச் சொன்னேன்.. சொன்னாக் கேட்டாத்தானே.. டவுனுக்குப் போய்ட்டு சாயந்திரமா வரேன்னு அடம்பிடிச்சு போய்ட்டார்” என்றார்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரேடியா டிக்கெட் வாங்கீட்டுப் போனவரை, இங்கே எப்படி வரச்சொன்னாங்க இவங்க என்று நினைத்துக் கொண்டேன்.
அவரே உடனே.. “ஆமா.. உனக்கெப்படி அண்ணன் டவுனுக்குப் போனது தெரியும்?”
முகத்தில் ஈயாடாமல் நின்றிருந்த என்னிடம் என் தம்பி ஆங்கிலத்தில் “வீட்டுக்காரம்மாவோட தங்கச்சிண்ணா இவங்க. நீ அக்கான்னு நெனைச்சுப் பேசற” என்று சொன்னபோதுதான் தெளிந்தது.
சுதாரித்துக் கொண்டு.. “நான்தான் அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசினேனே..” என்றேன்.
“அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”
இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!
***************************
ஆஃபீஸ் விட்டு நேரா, என்கூட வேலை செய்யற நண்பரோட வீட்டுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். அவரோட மகன் அன்னைக்கு வந்த பரீட்சைப் பேப்பர்களை அப்பாகிட்ட காட்டிகிட்டிருந்தான். நண்பர் அவனுக்கு பயங்கர அட்வைஸ் பண்ணிகிட்டிருந்தாரு.
“ஃபர்ஸ்ட் இல்லீனா செகண்ட் ரேங்க்-ன்ன, இப்போ ஃபோர்த் ரேங்க்ல வந்து நிக்கற. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் ரேங்க்கே வாங்கியிருக்கலாம்ல” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லிகிட்டிருந்தாரு. என் மகளும் அவர் மகனும் ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ்தான். இந்த ரேங்க் சமாச்சாரங்களுக்கு நான் அவ்வளவாய் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இருந்தாலும் வேறெதாவது பேசி அவர் மூக்கை ஏன் உடைப்பானேன் என்று பேசாமலிருந்தேன்.
என்னைப் பார்த்ததும் “வா கிருஷ்ணா” என்றுவிட்டு தொடர்ந்து மகனை கொஞ்சம் அட்வைஸ் பண்ணிவிட்டு, என்னுடன் பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர் எதற்கோ வீட்டுக்குள் சென்றுவிட, பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் மகனிடம் “ஏம்ப்பா.. ரேங்க் வர்லீன்னு அப்பா ரொம்பத் திட்டறாரா..” என்று கேட்க “ஆமா அங்கிள்” என்று பாவமாய்ச் சொன்னான். நான் சும்மா இருக்காமல் “என் பொண்ணையெல்லாம் நான் இப்படித் திட்டனதில்லை. வரட்டும் உங்கப்பா” என்றேன்.
“ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே விழுந்திட்டிருக்கு” என்றான்.
‘ஙே’ என்று முழித்தேன் நான்.
*********************
50 comments:
//“ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே விழுந்திட்டிருக்கு” என்றான்.//
ஹா..ஹா..ஹா.. மீ..த.. பர்ஸ்ட்???
எல்லா இடத்திலும் ஙே ந்னு தான் முழிச்சி இருக்கீங்க போல...;)))
ரசிச்சேன் கிருஷ்ணா
ஹிஹிஹி.. நல்லாத்தான் வழியறீங்க..
எல்லார் கிட்டயும் இதமாப்பேசப்போய் மாட்டிக்கிட்டு முழிச்சீங்களா ஹஹஹா
ஹை நல்லா மாட்டிகிட்டு முழிச்சிருக்கீங்க.. :)))) சூப்பர்.. :))))
//சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!//
ஹா..ஹா..ஹா.
அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சியைகூட அழகான பதிவாய் மாற்றும் வித்தயை உங்களிடம்தான் பாஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.
Good One :)
:) அடப்பாவமே...!
மூன்றுமே சிரிப்பை வரவழைத்தது என்றாலும்,
//இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!// சான்சே இல்ல கே.கே. ROTFL
அனுஜன்யா
வணக்கம் பரிசல்காரன்
\\ ஹிஹிஹி.. நல்லாத்தான் வழியறீங்க..\\
நானும் இதை இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்
ஆனால் எல்லாமே நல்ல அனுபவங்கள்தான்
நன்றி
இராஜராஜன்
எல்லா இடத்திலும் ஙே ந்னு தான் முழிச்சி இருக்கீங்க போல...;)))//
முழித்தல் வாரம்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.
ஙேஙே!!!!!! தானா தல..
படித்தேன்,ரசித்தேன்,சிரித்தேன்
அருமை.
சிரிப்பு வருது சிரிப்பு வருது
படிக்க படிக்க
சிரிப்பு வருது
அனைத்துமே கலக்கல்
நல்ல ஒரு அருமையான பதிவுக்கு நெகடிவ் ஓட்டுகள் அதிகமாக விழுந்திருப்பது ஆச்சர்யம் தருகிறது.
நான் சாதாரணமாக யாருக்கும் ஓட்டு போடுவதில்லை, மிகவும் இந்த பதிவை ரசித்ததால் ஓட்டு போட போனேன், அங்கே இப்படி ஒரு காட்சி
நண்பர் பரிசலுக்கு, இதற்கு காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது.
என்னை போல் ஓட்டாவது, மண்ணாவது என்று போகிறவராய் இருந்தால் இதை விட்டு தள்ளுங்கள்.
இல்லையென்றால் என்ன தவறு செய்கிறோம் என்று கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
//பொரியிலிருந்த எண்ணெய்......//
வாக்கியம் இல்லாவிட்டால் ஒரு பக்கக் கதை. சேர்த்ததால் பதிவு.
தேர்ந்த எழுத்து.
(மசால் பொரிக்கடைக்கு நீங்கள் செலுத்திய கார் என்ன நிறம்?)
நன்றி சங்கர் ஜி
நன்றி தமிழ்பிரியன், வேலன், கார்க்கி, சின்ன அம்மணி, ஸ்ரீமதி, நாடோடி இலக்கியன், வெட்டிப்பயல், மு.க, அனுஜன்யா,
முதல் வருகைக்கு நன்றி வனம்.
நன்றி புதுகைத்தென்றல், அத்திரி, நர்சிம்.
முதல் வருகைக்கு நன்றி அமுதா, மு.வேலன் (பாரதியை நினைவுபடுத்தியதற்கு நன்றி வேலன்!!)
@ வால்பையன்
32 ஓட்டுல ரெண்டுபேர் நெகடீவா குத்தீட்டாங்க. ஆக்சுவலா இதை தெரியாம குத்திருப்பாங்கன்னு லூஸ்ல விட்டுடுவேன்!
@ கிழஞ்செழியன்
//கிழஞ்செழியன் said...
//பொரியிலிருந்த எண்ணெய்......//
வாக்கியம் இல்லாவிட்டால் ஒரு பக்கக் கதை. சேர்த்ததால் பதிவு.
தேர்ந்த எழுத்து.//
நன்றிண்ணா.
//
(மசால் பொரிக்கடைக்கு நீங்கள் செலுத்திய கார் என்ன நிறம்?)////
சில்வர் சாண்ட்ரோ. லண்டன் போயிருக்கற என் ஃப்ரெண்ட் செந்திலோடது.
ஏண்ணா, ஏன் திடீர்னு இந்தக் கேள்வி? நான் கார் வாங்கீட்டா உங்ககிட்ட சொல்லாமலா இருப்பேன்?
//32 ஓட்டுல ரெண்டுபேர் நெகடீவா குத்தீட்டாங்க. ஆக்சுவலா இதை தெரியாம குத்திருப்பாங்கன்னு லூஸ்ல விட்டுடுவேன்!//
அப்படின்னா லெப்ட் சைட்ல இருக்குறது நெகடிவ் ஓட்டு இல்லையா?
இது கூட தெரியாம இத்தன நாளா ஓட்டு போட்டுகிட்டு இருந்திருக்கேன்
@ வால்பையன்
//அப்படின்னா லெப்ட் சைட்ல இருக்குறது நெகடிவ் ஓட்டு இல்லையா?
இது கூட தெரியாம இத்தன நாளா ஓட்டு போட்டுகிட்டு இருந்திருக்கேன்//
ங்கொய்யால...
வடிவேலு சீட்டு விளையாடினதுதான் ஞாபகத்துக்கு வருது!!
பொரியில் இல்லாத மசாலா பதிவில் இருந்தது பரிசல்!;)
me the 25TH:):):)
ஹா ஹா ஹா, நீங்களாவது பரவாயில்லை மூணு தரம்தான் பல்பு வாங்கிருக்கீங்க. நானெல்லாம் கிட்டத்தட்ட வாயத்தொரந்தாலே வாங்குவேன்:):):)
//சமீபத்தில் (1970கள் அல்ல//
:):):)
// பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஷோ-வாக இருக்கும் கடைகளில் அப்படி இல்லை//
நாம சொன்னாலும் நம்மளத்தான் நொங்குவாங்க.
//அங்கே காரைச் செலுத்தினேன்//
கார் வாங்கினத்துக்கு வாழ்த்துக்கள்:):):)
மொதோ அனுபவத்தை விட ரெண்டாவதும் மூணாவதும் சூப்பர். அதிலையும் ரெண்டாவது கலக்கலோ கலக்கல்:):):)
பல்பு வாங்கி வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் பல்பம் தின்று பின் செல்பவர்:):):)
அதால பல்பு வாங்காதவங்க யாரும் பெருமைப் பட்டுக்க வேணாம்:):):)
அடாடா... பரிசல்காரன் வழிசல்காரன் ஆகிட்டீங்களே !!
:))
மூணுமே அழகா சொல்லி இருக்கீங்க பரிசல். ரசித்தேன் :-)
குறிப்பு : என்ன அண்ணா இது ஒவ்வொரு தடவை பேசும் போதும் எதாவது ஒரு பிரச்சனை. உங்களை நான் இந்திய வந்து நேரடிய சந்திச்சு பேசறேன்.
பரிசில் ஐயா ....
இது போல பத்து சம்பவங்கள் கொண்ட பட்டியல் கொண்ட புத்தகம் என்னிடம் உள்ளது.
தங்களுக்கு அனுப்பி வைக்கவா?
சூப்பரா ஆட்டைய போட்டு எழுதறிங்க ஐயா குட்...
நன்றி
தமிழ் உதயன்
//உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன். உண்மையா நான் இந்த ஊருக்கு வந்தது போனவாரம். கடைங்கற பேர்ல ரெண்டு ஸ்டூலையும், பெஞ்சையும் போட்டு பொரி யாவாரம் ஆரம்பிச்சது இன்னைக்குத்தான்” என்றார்.
சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!//
//அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”
இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!//
//ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே //
வாழ்க்கைல நல்ல நல்ல அனுபவங்கள் எப்படி எல்லாம் கிடைக்குது பாருங்க பரிசல் .
ரசித்தேன்!
//உடுமலையைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களோடு தினமும் செல்லும் (லைப்ரரிக்கு எதிரிலிருக்கும்) செட்டியார் பொரிக்கடை ஞாபகம் வரவே அங்கே காரைச் செலுத்தினேன். அசத்தலான டேஸ்டில் இருக்கும் அங்கே மசால்பொரி.//
நானும் உடலப்பேட்டகாரங்கோ, அந்த செட்டியார் கடைல பொரி சாப்டவாங்கோ.
அருமையா எழுதறீங்கோ, வாழ்த்துங்க.
ஙே ஙே ஙே ஙே ஙே ஙே,rajendrakumarஐ நினைவுபடுத்தியதற்கு நன்றி ..........
ரொம்ப! நல்லா இருந்துச்சுங்க:))
உங்க அனுபவங்க எல்லவற்றையும் பற்றி எழுதுங்கள்...எவ்வளவு அசடு வழிந்து வருகிறீர்கள் என அறிய ஆசை
//
“நான்தான் அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசினேனே..” என்றேன்.
“அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”
இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!
//
செம பாலீஷ்
மினுக்குதுங்ணா!!
மீ தி 40
//சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!//
ஹி ஹி ஹி ஹய்யோ ஹய்யோ
// தமிழ் உதயன் said...
பரிசில் ஐயா ....
இது போல பத்து சம்பவங்கள் கொண்ட பட்டியல் கொண்ட புத்தகம் என்னிடம் உள்ளது.
தங்களுக்கு அனுப்பி வைக்கவா?
சூப்பரா ஆட்டைய போட்டு எழுதறிங்க ஐயா குட்...
நன்றி
தமிழ் உதயன்//
:-(
வருத்தத்தைத் தருகிறது உங்கள் பின்னூட்டம்.
நிச்சயமாக இது ஆட்டையப் போட்டதல்ல என்று சொல்லவே இந்த மறுமொழி.
அடுத்தவன் படைப்பை சொந்தம் கொண்டாடுமளவு தரங்கெட்டோ, சரக்கில்லாமலோ போகவில்லை ஐயா நான்.
Anyway, உங்கள் முதல் வருகைக்கு நன்றி!
ஹீ .. இது முதலாவதுக்கு..
ஹீ ஹீ.. இது இரண்டாவதுக்கு..
ங்கே ??? ஹீ ஹீ.. இது எல்லா வீட்டிலையும் சகஜம் தானே.. ;)
‘உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன்.
சூப்பர் சாரே.....
அவரே உடனே.. “ஆமா.. உனக்கெப்படி அண்ணன் டவுனுக்குப் போனது தெரியும்?”//
எல்லாம் அவன் செயல்
off topic: Relevant to the current situation, please spread.... the word especially about 1090, which will work through out India.
Look at the Terror Pattern below:
13 May -> JAIPUR
June - nothing
26 July -> AHMEDABAD
August - nothing
13 September -> DELHI
October - nothing
26 November -> MUMBAI
December - nothing
13 January -> What Next?
I hope nothing should happen...?
BE VERY CAREFUL & CAUTIOUS
In case you come across any suspicious activity, any suspicious movement or have any information to tell to the Anti-Terror Squad, please take a Note of the new ALL INDIA TOLL-FREE Terror Help-line "1090".
பல்பு வாங்கி வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் பல்பம் தின்று பின் செல்பவர்:):):
ரிப்பீட்டேய்... ;)
அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்ன்னா ....
தொகுத்து வழங்கிய விதம் மிக அருமை.
2 புள்ளிகளில என்ன சொல்ல வாறிங்க..
மூணு 1000 வாட்ஸ் பல்பு வாங்கி இருக்கீங்க .. நல்லா இருக்கு :)
அண்ணா.. முதல் அனுபவத்துல கூட சிரிப்பு வரல..இரண்டாவது, மூன்றாவது அனுபவத்துல விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன். அதுவும் கடைசி வரிகள்.. செம..
Post a Comment