Monday, January 5, 2009

காதைக் கொண்டாங்க... மூணு விஷயம் சொல்றேன்..

சம்பளம் குடுக்கற ஓனர் சம்பளத்தை மட்டும் குடுத்துட்டு சும்மா இருந்தா பரவால்லையே.. வேலை செய்யச் சொல்றாங்கப்பா.. ஒரே குஷ்டமப்பா.. ச்சே.. கஷ்டமப்பா... ஒண்ணுமில்ல.. வேலை படு பயங்கர பிஸியா இருக்கு. அதிகமா வலைப்பூ பக்கம் வரமுடியறதில்ல. யாரும் தப்பா நெனைச்சுக்காதீங்கப்பா.

பத்திரிகைகளுக்கு படைப்பு அனுப்பினா, திருப்பி அனுப்பப்படும்போது (ப்...ப.. சரியா இருக்கா...?) ஒரு குறிப்பு இருக்கும்.. ‘இதையே உங்கள் படைப்புக்கான இறுதி விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து முயலுங்கள்’ன்னு. அதே மாதிரி நான் வராதது உங்கள் மீது கோவம் கொண்டோ, படைப்பை பற்றிய மதிப்பின்மையோ அல்ல. நேரமின்மையே.

*************************

புத்தாண்டின் தொலைக்காட்சி நிகழ்சியின்போது அஞ்சாதே படத்தின் க்ளிப்பிங் போட்டார்கள். அதில் POLICE வேலை கிடைத்து ஆட்டோவில் ஹீரோ தாரை தப்பட்டை முழங்க வந்திறங்கி அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லாதபோது நண்பனிடம் ‘நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கச் சொல்லு. மாமூல் வரும்ல’ என்று சொல்வது போல காட்சி.

பார்த்துக் கொண்டிருந்த என் மகள் (6ம் வகுப்பு) கேட்டாள்.. “ஏம்ப்பா.. போலீஸ்காரங்களுக்கு சம்பளம் இல்லையா.. இந்த மாதிரிதான் வாங்கி செலவு பண்ணுவாங்களா?”

கொஞ்சம் விளக்கிவிட்டு அவள் இந்தக் கேள்வி கேட்பதற்கான மூலத்தை புலனாய்ந்த போது, அவ்வப்போது பார்த்த ஒன்றிரண்டு படக் காட்சிகள், பேப்பர் செய்திகள், அவள் முன் நாங்கள் நடத்திய உரையாடல்கள் என்று பலவும் கலந்து அவளை அப்படி நினைக்க வைத்திருக்கிறது என்பது தெரிந்தது.

*******************************

வீக் எண்ட் புதிர்கள் போடாததற்கு திட்டியவர்களுக்காக ஒரு அவசரக் கேள்வி...

ஒரு புத்தாண்டு கொண்டாட்ட பார்ட்டி ஹாலில் செக்யூரிட்டி ஏதோ சொல்ல, வந்தவர்கள் பதிலுக்கு ஏதோ சொல்ல அதைக் கேட்டு அவர்களை உள்ளே அனுப்புகிறார் செக்யூரிட்டி. ஒரு நண்பர் அதை ஒளிந்திருந்து கேட்டு நாமும் பதில் சொல்லி உள்ளே போகலாம் என்று திட்டமிட்டு, ஒளிகிறார்.

ஒரு ஆசாமி வர, செக்யூரிட்டி: “ட்வெல்வ்”

வந்தவன் யோசித்து.. “சிக்ஸ்”

செக்யூரிட்டி அவனுக்கு கதவு திறக்கிறார்.

அடுத்த ஆசாமியிடம் செக்யீரிட்டி: “சிக்ஸ்”

வந்தவன்: “த்ரீ”

அவனுக்கும் கதவு திறக்கப்படுகிறது.

ஒளிந்திருந்தவன் ‘இதென்ன ஜூஜூபி’ என்றவாறே செக்யூரிட்டி முன் நிற்கிறான்.

செக்யூரிட்டி: “டென்”

இவன்: “ஃபைவ்”

கழுத்தைப் பிடிக்காமல், வெளியே போகச் சொல்லிவிடுகிறார்கள்! இவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்.. ஏன்? விடை நாளைக்குச் சொல்லவா? ப்ளீஸ்...

19 comments:

கூட்ஸ் வண்டி said...

mee the firstuuuu

சந்தனமுல்லை said...

//அவளை அப்படி நினைக்க வைத்திருக்கிறது என்பது தெரிந்தது./

ஹ்ம்ம்ம்!!

//இவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்.. ஏன்//

ten - மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையை சொல்லியிருக்க வேண்டும்!

கார்க்கிபவா said...

என்ன வேலை செய்ய சொல்றாங்களா? உங்கள மாதிரி ஆளுங்க பொறுத்து போறதாலதான் முதலாளிகளுக்கு திமிர் வந்து விடுகிறது.. உடனே லேபர் கோர்ட்டில் வ்ழக்கு பதிவு செய்யவும்..

அப்புறம் அந்தக் கேள்வி.. யோசிச்சு நைட் சொல்றேன்

தமிழன்-கறுப்பி... said...

mJ rup...

கார்க்கிபவா said...

பதில்.. மூன்று..(ஆங்கிலத்தில் 12 ந்னா 6 எழுத்து வரும். சிக்ஸ்ன்னா 3 எழுத்து வரும்.. டென்னாலும் மூனு எழுத்துதானே)

தமிழன்-கறுப்பி... said...

\\
சம்பளம் குடுக்கற ஓனர் சம்பளத்தை மட்டும் குடுத்துட்டு சும்மா இருந்தா பரவால்லையே.. வேலை செய்யச் சொல்றாங்கப்பா..
\\

இதுக்கு சொன்ன கமன்ட்டுதான் அது...:)

தமிழன்-கறுப்பி... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிசல்...


(லேட்டா சொன்னா கோபிக்க மாட்டிங்கன்னு தெரியும்...)

:)

Mahesh said...

லேட்டா வந்தாலும்.......

சமத்தா வேலையெல்லாம் ஓய்ஞ்சதும் எல்லாக் கடைக்கும் போய் இருக்கறதை சாப்டுட்டு கணிசமா மொய் வெச்சுடணும். புரிஞ்சுதா அம்பி?

சின்னப் பையன் said...

இதெல்லாம் ரொம்ப அராஜகம்ணே... உங்கள வேல பாக்கச் சொல்லிட்டாங்களா???

வால்பையன் said...

ஆணி அதிகம் எனபது தெரிகிறது!

பதிவுகளை குறைத்து கொள்ளாதீர்கள்

Thamira said...

கார்க்கி said...
என்ன வேலை செய்ய சொல்றாங்களா? // அதானே.. என்ன‌ அராஜ‌க‌ம்?

Anonymous said...

உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் என்ன விதமான சமுதாயச் சூழலை உருவாக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி.

laughs galore said...
This comment has been removed by the author.
A N A N T H E N said...

:D

இவ்வளோ சொல்லிப்புட்டு, மூனு விசயமுன்னு போட்டுருக்கிங்களே?

ரமேஷ் வைத்யா said...

சந்தனமுல்லை அக்கா,
வாழ்க! சூப்பர்!!
பரிசல் என் விடையும் அதே.
(புதிர் போட்டி வைக்கும்போது கமென்ட் மாடரேட் பண்ற பழக்கமே வராதா..?

ambi said...

//தொலைக்காட்சி நிகழ்சியின்போது //

'ப்' சரியாத் தான் இருக்கு. இங்க 'ச்' சை விட்டுட்டீங்க. :))

//ten - மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையை சொல்லியிருக்க வேண்டும்!//

புதிருக்கு பதில் வந்துடுச்சு போல. :)

Kumky said...

:-))

பிஸி...
பிஸி.....
பிஸி......

laughs galore said...

Answer is 4. Look at the analog clock for the reason.

Busy said...

Busy........ Always Busy..............