பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல்?
என்னிடம் நண்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது ‘பொங்கல்தான் ஸ்பெஷல்’ என்பேன். காரணம் அதென்னவோ நம் மனசோடு ‘அட... இது நம்ம விசேஷம்’ என்ற உணர்வு வளர்ந்திருப்பதும் ஒரு காரணம்.
அதுவுமில்லாமல் மற்ற பண்டிகைகளின்போது வரும் எந்த காண்ட்ரவர்ஸியும் தாக்காத பண்டிகை பொங்கல். ‘தீபாவளியா.. பட்டாசு வைக்காதீங்க. சுற்றுப்புறத்துக்கு கெடுதல்’, புத்தாண்டு கொண்டாட்டமா.. ‘தமிழா.. நீ ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா..’ இப்படி எந்தச் சிக்கலிலும் சிக்காத சேஃபஸ்ட் ஃபெஸ்டிவெல் பொங்கல்.. (யோசிச்சுப் பாருங்க.. பொங்கலுக்கு பொங்கல் வைக்காதீங்கன்னு யாரும் சொல்லமாட்டாங்க!)
சரி.. ஒரு வாதத்துக்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை சொல்லலாம். அது பொதுவானதல்லவே. எல்லா ஊர்லயும், எல்லாக் குடும்பத்துலயும் இதுனால உற்சாகம் குறையறதில்லயே!
எனக்குத் தெரிந்து திருப்பூர்வாசிகளுக்கு தீபாவளி, பொங்கல் ஆகிய இரண்டு பண்டிகைகளுமே விசேஷம் வாய்ந்தது. காரணம் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் ஊருக்குப் போய்விட்டால் குறைந்தது ஒரு வாரம், பத்து நாள் திரும்ப மாட்டார்கள். என்னதான் சர்குலர் போட்டு, மீட்டிங் போட்டு MOTIVATE செய்தாலும் அவர்கள் திட்டப்படிதான் திரும்புவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த சமயங்களில்தான் குடும்பத்தினரோடு ஒன்றாய்த் தொடர்ச்சியாய் சிலநாட்கள் இருக்க முடியும். இந்தப் பண்டிகைகளின்போது பஸ் ஸ்டாண்ட் பக்கம் வாகனங்களே செல்லமுடியாத அளவுக்குக் கூட்டம் அம்மும். அதேபோல திரும்பி வரும்போது தஞ்சாவூர், திருச்சி, மதுரையில் திருப்பூர் பஸ் பயணிகளால் வழிந்து இருக்கும். நிறைய நிறுவனங்கள் அவர்களாகவே பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்து ஊழியர்களை அழைத்துச் சென்று, வருவதுண்டு.
பொங்கல் விடுமுறைக்கு முன்தினம் இரவெல்லாம் கடுமையான வேலை இருக்கும். எப்போது ஆட்கள் திரும்புவார்கள் என்பதால் முடிந்தவரை வேலைகளை முடித்து அனுப்புவார்கள். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கமின்றியெல்லாம் பணி புரிவார்கள்.
அப்படித்தான்....
2001ம் வருடப் பொங்கல். ஜனவரி 13. போகி. உமா கர்ப்பமுற்றிருந்தார். உடுமலையில் அவர் வீட்டில் இருந்தார். எனக்கு திருப்பூரில் வேலை முடிய இரவு 10 மணியாகிவிட்டது. 10.35க்கு உடுமலைக்கு கடைசி பஸ். நானும் நண்பர் முருக கணேஷும் (நண்பா.. இதைப் படிச்சிட்டிருக்கீங்களா?) அவசர அவசரமாய்க் கிளம்பி பல்லடம் பஸ் ஸ்டாண்ட் போய் கடைசி பஸ்ஸுக்காக காத்திருந்தோம். அப்போது அங்கே குடித்துவிட்டு வந்த மூன்று ரவுடிகள் எங்களை வேறு யாரோவென நினைத்து சின்ன சண்டை. பஸ் வர தொத்திக் கொண்டு கிளம்பி, வீட்டிற்குப் போனபோது மணி இரவு 12.30க்குப் பக்கம் ஆகியிருந்தது. இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக, சரியான உறக்கமின்றி வேலை பார்த்த களைப்புடன் போனதுமே படுத்துத் தூங்கிவிட்டேன்.
காலை ஏழோ, எட்டோ சரியாக நினைவில்லை.
என் ப்ரதர்-இன்-லா பாபு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
“உமாவுக்கு அஞ்சு மணிக்கு நல்லா வலியெடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போனோம். ஆறரைக்கு உனக்கொரு பொண்ணு பொறந்திருக்கா” என்றார்.
(இந்தச் சம்பவத்தை பிற்பாடு உமாவிடம் சொன்னபோது “‘ஏன் என்னை எழுப்பல’ன்னு நீங்க சண்டை போடலியா” என்று கேட்டார். அவர் எழுப்பியிருப்பார்... நான் தூங்கின தூக்கம் எனக்குத்தானே தெரியும் என்று நினைத்துக் கொள்வேன்!)
அவசர அவசரமாக எழுந்து அனிதா மருத்துவனைக்குப் போனேன். ஊரே பொங்கலின் மகிழ்ச்சியில் இருக்க.. எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் – மேகா பிறந்தாள்!
பொங்கல் மாதிரியான ஒரு சிறப்பு தினத்தில் பிறந்தநாள் வருவது விசேஷம்தான். ஆனால் மேகாவுக்கு ஒரு சின்ன சங்கடம். ‘அப்பா.. பொங்கலன்னைக்கு பிறந்தநாள் வருது. மத்த நாள் வந்தா ஸ்கூலுக்கு கலர் ட்ரெஸ் போட்டுட்டுப் போவேன்ல’ என்று புலம்புவாள். போன வருஷத்துலேர்ந்து அதுக்கும் ஒரு ஐடியா பண்ணி பொங்கல் முடிஞ்சு வர்ற ஸ்கூல் டே அன்னைக்கு கலர் ட்ரெஸ் போட்டுட்டு சாக்லேட்ஸ் எடுத்துட்டுப் போக அனுமதி கொடுத்தாச்சு. அதுனால அவளுக்கு டபுள் சந்தோஷம்!
***************************
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
(தமிழ்புத்தாண்டு..... ம்ம்ம்ம். அதைப் பத்தி அப்பறமா பேசலாம்!!!)
.
39 comments:
வாழ்த்துக்கள் ...
பொங்கலுக்கும் உங்க பெண்களுக்கும் வாழ்த்துகள் சகா..(தங்கைக்கு பிறந்த நாள்ன்னா அக்காவுக்கும் புது ட்ரெஸ் உண்டல்லவா?அதான் இருவருக்கும் வாழ்த்துகள்)
வாழ்த்துக்கள் ,
கார்க்கி கமெண்டுக்கு ரிப்பீட்டு
ஒரு நாளைல என்ன முந்திட்டாங்க மேகா..
முதல்ல வாழ்த்தை பிடிங்க.. குமுதம் டாப் டென் பதிவர்களில் உங்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.. ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்..
பொங்கல் வாழ்த்துகள்.
குட்டி பொண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுக்கு டொப் ப்ளொக்கர் ஆனதற்கு வாழ்த்துகள்
:)
பொங்கல் வாழ்த்துக்கள்!!! மேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான் பிறந்த ஊரான பல்லடம் உங்க பதிவில் பார்த்தவுடனே ஒரே குஷியாயிடுச்சு.அதான் உங்களுக்கும் ஒரு ஹலோ சொல்லிட்டேன்
குடும்பத்தாருக்கு பொங்கல் மற்றும் தைத்திருநாள் வாழ்த்துகள் !!
மேகாவுக்கு ஸ்பெஷல் பிறந்தநால் வாழ்த்துகள் !!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
மேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
பொங்கல் வாழ்த்துகள்.
நன்றிங்க...
எல்லாருக்கும் எல்லாத்துக்கும்..
உங்களால்தான் இது சாத்தியமாயிற்று!!!
மேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் மேகாவுக்கும், கிருஷ்ணாவுக்கும்
திரு பரிசல்காரரே,
பொங்கள் வாழ்த்துக்கள்.
குட்டி பரிசல்காரிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அளவில்லா ஆசியுடன் :))
ஸ்வாமி ஓம்கார்
மேகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடின வேலைக்கு பிறகு களைப்பாக இருப்பீர்கள், நாளை அலைபேசுகிறேன்.
(பொங்கல்வாழ்த்தா, அதான் குடும்பத்தோட மெயில் அனிப்பினேனே)
குமுததில் வந்தது யாருக்கும் தெரியாதா?
அடுத்து நியூயார்க் டைம்ஸ் தானா?
குட்டீஸ்க்கு என் அன்பு முத்தங்கள்...
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்/க்கள்.
பாப்பாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
அளவிலா லந்துடன்,
விஜய்கோபால்சாமி
(புதிய தளத்திலிருந்து)
பொங்கல் வாழ்த்துக்கள்!!! மேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாளில் தங்களின் இரட்டிப்பு மகிழ்ச்சியினை எங்களுடன் பகிர்ந்து பல மடங்காக்கி விட்டீர்.
மேகா'வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
//எனக்குத் தெரிந்து திருப்பூர்வாசிகளுக்கு தீபாவளி, பொங்கல் ஆகிய இரண்டு பண்டிகைகளுமே விசேஷம் வாய்ந்தது.//
2006'இல் திருப்பூரில் கொண்டாடினேன். அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.
:((((.
காஸ்-ஸ்டவ் பொங்கல் மட்டுமே
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ... :) நம்ம சொல்ல நினைக்கறத எல்லாம் நமக்கு முன்னாடியே மத்தவங்க சொல்லிட்டதாலே எல்லாத்துக்கும் ரிப்பீட்டிட்டு கொள்கிறேன்... Belated b'day wishes :) to kutty pappa...
Mega தேவதைக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுக்கும் மீரா, உமா அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்
மேகா பிறந்த நாளில் நீங்கள் டாப் டென் ப்ளாக்கரில் ஒருவராக குமுதம் இதழில் வந்திருக்கிறது. அதிஷ்டக்கார குட்டீதான்!!
உங்களுக்கும் உமாவுக்கும் மேகாவுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!!
உங்க வீட்ல மட்டும் ஒவ்வொரு பொங்கலும் ஸ்பெஷலா..
ஆனா குழந்தை பிறந்தப்ப தூங்கிட்டு இருந்த ஒரே ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க.. :))
ஃபோட்டோ சூப்பர்.. கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்குற மாதிரி இருக்கு..
மேகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பரிசல்காரருக்கும்..... க்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மற்றும் குமுதத்தில் 10க்குள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிறப்பு வாழ்த்துகள்.
வாழுத்துக்கள்.... பிரச்சனை இல்லாத பொங்கல் கொண்டாட......
kumudam top 10la select agi irukkinga. congrats
பொங்கலுக்கு வாழ்த்துக்கள்
பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்
குமுதம் மேட்டருக்கு வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்
பொங்கலுக்கு வாழ்த்துக்கள்.....
வாழ்த்த்க்கள் சார். குமுதத்தில் தங்கள் வலைப்பதிவும் பட்டியலிடப்பட்டுள்ளது:)
எல்லாருக்கும் நன்றிங்க... டூர்ல இருக்கேன். வந்து விவரமா நன்றி தெரிவிக்கறேன்...!!!
kumudm idhalil ungal valippoo patri eludhi irundaargal.. rombha nalla irukkungana... Pongal vaalthukkal na
குட்டி பொண்ணு மேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க
நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ
புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய
சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால் சுழல்
பூமி பசுமையாய் விழிபறிக்க
மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!
மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!
பொங்கல் ஓ பொங்கல் !!!!!
தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//பொங்கல் மாதிரியான ஒரு சிறப்பு தினத்தில் பிறந்தநாள் வருவது விசேஷம்தான். //
உண்மைதான் ஊரே கொண்டாடும் அந்த தினத்தை:)! மேகாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!
ரசித்தேன்.!
Post a Comment