அந்த உல்லாசப் பயண வாகனம் ஊட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு கொண்டை ஊசி வளைவில் நிறுத்தப் படுகிறது. கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டே, வண்டியில் வந்த ஏழெட்டுப் பேரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிருவர் சிகரெட்டைப் புகைத்தபடி பேசிக் கொண்டே இருக்கும்போது, ஒரு வனக் காவலர் வருகிறார்.
“சார்.. இங்க வண்டியை நிறுத்தி, சிகரெட், வாட்டர் பாட்டில்ன்னு குப்பை போடாதீங்க சார். ஊட்டியே காணாமப் போயிடும் இப்படி எல்லாரும் பண்ணினீங்கன்னா. நீங்க போடற குப்பையை நாலாங்க்ளாஸ், அஞ்சாங்களாஸ் பசங்க பொறுக்கறாங்க சார்... இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா... அவன் சுத்தமா வெச்சுக்கடான்னு காசு தர்றப்ப நாம இப்படி குப்பை போடறது” என்றபடி பேசவே முடியாதபடி சில வாதங்களை எடுத்துவைக்கிறார். எல்லாரும் ‘சாரி’ கேட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாலும், “நம்மளைக் கேள்வி கேட்கத்தான் அவனால் முடியும். இதவிட பெரிய தப்பு பண்றவனையெல்லாம் விட்டுடுவாங்க” என்ற பேச்சு எழும்பியபோது பயணத்தில் வந்த ஒருவர் சொல்கிறார்:
“அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”
அவர்தான் செல்வேந்திரன்!
இந்தப் பதிவுக்கு ‘செல்வேந்திரன்’ என்றுதான் முதலில் தலைப்பிட்டேன். பிறகுதான் ‘செல்வேந்திரன்!’ என்று மாற்றினேன். பெயருக்குப் பின்னால் ஆச்சர்யக்குறி போடும் அளவுக்கு எல்லாரிடமிருந்து வித்தியாசப்பட்டு, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர் என்பதால். செல்வேந்திரர் என்று ‘ர்’ விகுதியில் எழுதவேண்டிய அளவுக்கு உயர் பண்புடையவர் இவர்.
முட்டை சைவமானது போல, கெட்ட பழக்கங்கள் என்று வரையறைப் படுத்தும் பல பழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் நல்ல பழக்கங்கள்தான் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்ட போதிலும், எந்தத் தீய பழக்கத்தையும் பழகாமல், ஒரு தபஸ்வியின் வாழ்வுக்குச் சமமான ஒழுக்கத்துடன் இருக்கிறார் இவர்.
எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன் நான். இவரோ, அதைத் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் செய்வதால் என்னை பிரமிக்க வைக்கிறார்.
பயணம் முழுவதும் எல்லாருமே ‘ஹ்யூமர்’ சென்ஸோடு பலவிஷயங்களைப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தோம். ‘ஹ்யூமன்’ சென்ஸோடு சிந்தித்துக் கொண்டும் வந்தவர் இவர் மட்டும்தான்.
பணியின் நிமித்தம் தவறுகள் நடக்கும் துறைகளுக்கெல்லாம் செல்ல வேண்டியிருப்பினும், பொது இடத்தில் குப்பை போடும் சாமான்யன் முதல், நாட்டையே நாசமாக்கும் பலதரப் பட்ட மக்களைச் சந்தித்தாலும் எதிலும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் தன்னிலையில் வாழும் ஒருவராய் இவர் இருப்பதில் இவர் எங்கோ உயர்ந்து நிற்கிறார்.
இவரது பதிவுகள் இவரது திறமையைத்தான் வெளிக்காட்டும். பழகிப் பாருங்கள்.. இவரது மனிதத்தை நீங்கள் உணரமுடியும்.
இவரை இவ்வளவு நான் சிலாகிக்கக் காரணம், பல இடங்களில் பல பொழுதுகளில் நம்மை ரௌத்ரப் படுத்தும் நிகழ்வுகள் நடக்கையில் மனதிற்குள் வெம்பி, விம்மி அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் என் எண்ணமொத்த நண்பர்களோடு பகிர்ந்து கொள்பவன். இவரோ, அதை அங்கேயே தட்டிக் கேட்டு செயலில் இறங்க முயற்சிப்பவர்.
எல்லாருக்கும் பல விஷயங்களுக்காக ‘நாம் நல்லவன்தான்’ என்ற எண்ணமேற்படும். அப்படி என்னை நானே நல்லவன் என்று சொல்லிக் கொண்டால், நான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை இவரோடு இருந்த இரு நாட்களில் உணரமுடிந்தது.
தனிமனித ஒழுக்கத்தால் தேசத்தில் மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கையில் எப்போதும் மாற்றமில்லை. ஆனாலும் அவ்வப்போது, அங்கங்கே நடக்கும் சில ஒழுக்க மீறல்களும், அந்த ஒழுக்க மீறல்களில் சேராமல் ஒதுங்கி நாம் நிற்கையில் வேற்றுகிரக வாசியைப் போல நம்மீது வீசப்படும் பார்வைகளும் என் நம்பிக்கையின் ஆணிவேரை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முற்பட்டிருக்கிறது. ஆனால் செல்வேந்திரனைப் போல ஒருவரைப் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை பலப்பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார் தேசத்தை மாற்ற. அந்த நூறு இளைஞர்களிடம் இருக்க வேண்டிய கனல், இவர் ஒருவரிடமே உண்டு. ஆனால் காலம் மாறிவிட்டதல்லவா... இப்போது இவரைப் போல நூறு இளைஞர்கள் தேவையாயிருக்கிறது இந்த தேசத்தை மாற்ற.
இவற்றைத் தவிர இவரொரு சிறந்த படிப்பாளி, படைப்பாளி. விகடனில் இவரது படைப்பான ‘முடியலத்துவம்’ பல வாரங்கள் வந்துகொண்டிருந்தபோது, வாங்கியவுடன் படிக்கும் பக்கமாக அது இருந்தது. இவரெழுதிய ‘செல்லெனப்படுவது’ எனும் கதையா... கட்டுரையா என்ற கட்டுக்குள் அடங்காத படைப்பொன்று சுஜாதாவால் கவரப்பட்டு ‘யார்யா அவன்? இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் பண்ணுங்கப்பா’ என்று அவர் அழைத்துச் சொல்லும் வண்ணம் அமைந்தது.
நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிப் படிக்கிறார். பாராட்டுகிறார். ‘நிறைய கவிதைத் தொகுப்புகள் வெளிவருவதை நான் தடுத்திருக்கிறேன்’ என்று இவர் சொல்வதன் மூலம், பிடிக்காத படைப்புகளை காலில் போட்டு நசுக்கத் தயங்காத ஆண்மை இவருக்குண்டு என்பதையும் அறிந்தேன்.
நானெல்லாம் ஏதாவது எழுதவேண்டியிருந்தால் மனதிற்குள் எழுதிப்பார்த்து, கணினியில் ட்ராஃப்ட் எழுதி, படித்துத் திருத்தி வெளியிடுவேன். இவர் பேசுவதெல்லாமே ஒரு படைப்புக்குரிய தகுதியோடுதான் இருக்கின்றன.
ஒருமுறை ‘இப்படிப்பட்ட அறிவியல் சாதனம் வராதா’ என்று ஓரிரு சாதனங்கள் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா... ‘ஹியரிங் ரைட்டர்’ மாதிரி நாம் பேசினாலே கிரகித்துக் கொண்டு எழுத்துக்களாய் எழுதிவிடும் ஏதேனும் கண்டுபிடிப்பு வந்தால் (வந்துடுச்சா?) இவருக்குப் பரிசளிக்கலாம். எக்கச்சக்க படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
யாரோடாவது ஏதாவது கூட்டுவிவாதம் நிகழ்த்தும்போது ‘இல்லல்ல.. அது அப்படியில்ல’ என்று எதிர்வாதம் வருவது வழக்கம். இவர் பேசும்போது மட்டும், நாங்கள் கேட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது.
என் நண்பன் செந்தில் ஒருமுறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதாவது ‘திடீரென்று நீங்கள் பெண்ணாக மாறிவிடுகிறீர்கள் என்றால் உங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களில் யாரைக் காதலிப்பீர்கள்?’ என்று. அப்போதைக்கு அப்படி யாருமே இல்லை என்றேன். இப்போது என்னால் சொல்லமுடியும்!
‘இரண்டுநாள் எங்கே போனீர்கள்’ என்று கேட்பவர்களிடமெல்லாம், டூருக்கு, ஊட்டிக்கு என்பதையெல்லாம் விடுத்து, இவரைச் சந்தித்ததைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் எந்தச் சூழலிலும், எந்த நிலையிலும் இப்போது இருக்கும் வீரியம் குறையாதிருந்து தன்னாலான மாற்றத்தை இந்த இளைஞர் ஏற்படுத்துவார் என்பதை நினைக்கையில் மிகப் பெருமிதமாய் இருக்கிறது.
பயணத்தில் பல முறை நாங்களெல்லாம் பயன்படுத்திய வார்த்தை ‘ச்சான்ஸே இல்ல!’ ஆனால் இவரைப் பார்த்தபின் தோன்றுகிறது.. சான்ஸ் இருக்கு!
இந்தப் பதிவைப் பார்த்தும் அவர் கோபப்படுவார். ‘எதுக்கு இவ்ளோ பாராட்டணும்’ என்பதான கோபமாக அது இருக்காது. ‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சே’ என்பதான கோபமாகத்தான் அது இருக்கும்.
அதுதான் செல்வேந்திரன்!
*
படங்களுக்கு நன்றி: தாமிராவின் காமிரா
*
54 comments:
\\இந்தப் பதிவுக்கு ‘செல்வேந்திரன்’ என்றுதான் முதலில் தலைப்பிட்டேன். பிறகுதான் ‘செல்வேந்திரன்!’ என்று மாற்றினேன்\\
என்ன வித்தியாசம்.
ஓஹ்!
‘!’ இதுதானா ...
//பயணம் முழுவதும் எல்லாருமே ‘ஹ்யூமர்’ சென்ஸோடு பலவிஷயங்களைப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தோம். ‘ஹ்யூமன்’ சென்ஸோடு சிந்தித்துக் கொண்டும் வந்தவர் இவர் மட்டும்தான்.
///
இந்த வரிகளுக்காக பரிசலுக்கு பரிசளிக்கலாம்...
\\இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா..\\
ம்ம்ம் :(
பரிசல், மிகவும் நெகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். உங்களைப் பற்றி எனக்கிருக்கும் அபிப்ராயங்களைத்தான் நீங்கள் என் மனதில் இருந்து திருடி எழுதி இருக்கிறீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் அன்பின் வெளிப்பாடாக அமைந்த இந்த பாராட்டுக்களை என் ஆளுமைக்கு காரணமாக இருந்த இருக்கின்ற என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
\\“அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”\\
சரியாக(ச்) சொன்னார்.
வாழ்த்துக்கள் ‘செல்வேந்திரன்’
நன்றி பரிசல் இப்படி ஒருவரை அறிய தந்தமைக்கு
சாத்தான்குளத்துல பொறந்தாலே மனுசங்க இப்படி ஆச்சரியப்படும்படியாத்தான் இருப்பாங்கடே! செல்வேந்திரப் விதிவிலக்கா என்ன? :-)
ஆசிப்,
சந்தடி சாக்குல சூப்பரா ஒரு பிட்டப் போட்டுட்டீங்களே.
செல்வேந்திரன் இன்னும் நம்ம ஊரு வழக்குலதான் பேசுகிறார். வட்டார பயணம் முழுவதும் அவரு பேசுனதக் கேட்டதுக்கே நம்ம ஊருக்குப் போய்ட்டு வந்த ஒரு உணர்வு வந்துச்சு.
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்!
நன்றி பரிசல்!
உல்லாசப் பயணமா? எங்கு சென்றீர்கள் பரிசல்? சொல்லவேயில்ல்ல்ல்ல்ல்ல...
இரண்டாவது படம் ரொம்ப நல்லாயிருக்கிறது.
படம் எடுத்த விரல்களுக்கு செல்வேந்திரனிடம் சொல்லி, ஒரு பவுனில் தங்க மோதிரம் போடச் சொல்லுங்கள்.
//‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சே’ //
சூப்பர் !
மனித நல் இயல்பையெல்லாம் பாராட்டும் அளவுக்கு நிலை தாழ்ந்துவிட்டோம் என்று அடிக்கடி நண்பர்களிடம் நானும் சொல்வதுண்டு !
வழக்கமா டூர் போறவங்க ஞாபகமா ஏதாவது வாங்குவாங்க..அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கனும்னு நினைச்சேன். மறந்துட்டேன்.. இத சாக்க வச்சு அவர் இன்னொரு தடவ சந்திக்கலாம் என்று தேற்றிக் கொண்டேன்.. கலந்து கொண்ட அனைவரின் அனுபவமும், அறிவாற்றலும் என்னை ஆச்சரியப்படுத்த , அவர்கள் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.. எல்லோருக்கும் நன்றி.
உங்களின் பாராட்டுகள் அத்தனைக்கும் தகுதியானவர்தான் செல்வேந்திரன். சொல்லப்போனால் குறைவாகத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொல்வேன். அவரிடமிருந்து இடைவிடாது வந்து விழுந்த அழகிய தமிழ் வார்த்தைகள் இன்றைக்கெல்லாம் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கலாம் என எண்ண வைத்தது. "செல்வேந்திரன் :பார்ட் 2" எழுதலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவரின் நட்பு கிடைத்ததால் பெருமை எனக்கே.!
(ஆமா, அடுத்து "தாமிரா!" என்று பதிவெழுதப்போவதாய் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றனவே.. நெசமா? ஆச்சரியக்குறியை கவனித்தீர்கள்தானே..)
மனிதரின் அழகைப்பற்றி சொல்ல மறந்துவிட்டீர்களே.!
வெயிலான் said...
இரண்டாவது படம் ரொம்ப நல்லாயிருக்கிறது.
படம் எடுத்த விரல்களுக்கு செல்வேந்திரனிடம் சொல்லி, ஒரு பவுனில் தங்க மோதிரம் போடச் சொல்லுங்கள்.///
ரொம்ப புகழறீங்க வெயிலான்.. கூச்சமாயிருக்குது.
(எங்ககிட்டயே அரசியலா? எப்பிடி?)
nice post. Interesting intro
பத்திரிகை நண்பர்களுக்கென்று எல்லா இடங்களிலும் அதிகாரமட்டத்தில் ஒரு செல்வாக்கு இருக்கின்றது.அதை எங்கும் பயன்படுத்த என்னாமல்., முதலில் தாம் ஒழுங்கினை கடைப்பிடிப்பதுதான் தனது பணிக்கு சிறப்பென நினைக்கும் பண்புகளும்., எழுத்தும் பேச்சும் பிரித்தரியமுடியாதபடிக்கு அமைந்த செல்வேந்திரன் பேரிலேயே பதிவிட்டமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பரிசல்.
பரிசல்,
கொஞ்சம் நாளாத்தான் நான் உங்க ப்ளாக்-க படிக்கிறேன். எதையும் விட்டுவிடமுடியாத படி அனைத்தும் சூப்பர்.
'ச்சான்ஸே இல்ல'... 'ச்சான்ஸ் இருக்கு' கான்செப்ட் சூப்பர். யோசிக்க வெச்சிடுச்சு.
செல்வேந்திரன்,
1. என்னாது இது? எங்கிட்ட சொல்லவேயில்ல...
2. அழகர் தாமிராவே பாராட்டும் அளவுக்கு அளகால நிய்யி..?
//அழகர் தாமிராவே பாராட்டும் அளவுக்கு அளகால நிய்யி..?//
சரி... சரி.. தாமிரா உணர்ச்சிவசப்படாதீங்க!!!
இந்தப் பாலகனின் பதிவுக்கு ஆசிப் அண்ணாச்சியின் பின்னூட்டத்தைப் பெற்றுத்தந்த செல்வேந்திரனுக்கு மீண்டும் என் நன்றிகள்.
//சாத்தான்குளத்துல பொறந்தாலே மனுசங்க இப்படி ஆச்சரியப்படும்படியாத்தான் இருப்பாங்கடே!//
நம்புகிறேன்! உண்மையாக இல்லாவிட்டாலும் நடக்கும்!
வேலன் அண்ணாச்சி, வெயிலான், கும்க்கி, கார்க்கி & தாமிரா...
இந்தப் பதிவை உடனடியாக எழுதியாக வேண்டிய தாக்கத்தில் நானிருந்தேன் என்பது உண்மை. எழுதி வெளியிட்டபின் உங்கள் கருத்து என்னவாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாருமே வரிசையாகப் பின்னூட்டமிட்டு செல்வேந்திரனைப் பெருமைப்படுத்தியதன் மூலம் என்னை மகிழ்வித்து விட்டீர்கள்!
சரி... யாருப்பா பயணக் கட்டுரையை ஆரம்பிக்கறது?
@ தாமிரா..
பார்ட் டூ- வென்ன? அவரை பார்ட் பார்ட்டா பாராட்டியே எழுதலாமே!
நல்ல பதிவு பரிசல்.. நிறைய யோசிக்க வைத்த/வைக்கும் பதிவு
@ செல்வேந்திரன்
இவ்ளோ அப்பாவியாவா இருக்கறது? இன்னைக்குப் போய் எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கீங்களே.. ஊர் உலகம் என்ன நினைக்கும்!!!
:-))))
// கும்க்கி said...
பத்திரிகை நண்பர்களுக்கென்று எல்லா இடங்களிலும் அதிகாரமட்டத்தில் ஒரு செல்வாக்கு இருக்கின்றது.அதை எங்கும் பயன்படுத்த என்னாமல்., முதலில் தாம் ஒழுங்கினை கடைப்பிடிப்பதுதான் தனது பணிக்கு சிறப்பென நினைக்கும் பண்புகளும்., எழுத்தும் பேச்சும் பிரித்தரியமுடியாதபடிக்கு அமைந்த செல்வேந்திரன் பேரிலேயே பதிவிட்டமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பரிசல்//
அச்சச்சோ கும்க்கி அண்னன் வலையையும் யாரோ ஹேக் பண்ணிட்டாங்க போல..
// பரிசல்காரன் said...
@ செல்வேந்திரன்
இவ்ளோ அப்பாவியாவா இருக்கறது? இன்னைக்குப் போய் எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கீங்களே.. ஊர் உலகம் என்ன நினைக்கும்!!!
:-))))
//
பரிசல், நான் இன்னும் உங்க ஃபாலோயரா சேரலே... ஞாபகம் வெச்சிக்குங்க... :-)))
எனக்கு பிடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். சந்திக்க விரும்பி, பேசாமல் இருப்பது அநேகமாய் இவர்மட்டும்தானாய் இருக்கும்.
முடியலத்துவம் நானும் அங்கிருந்ததான் ஆரம்பித்தேன் அவரை வாசிப்பதற்கு...
:)
அன்புடன்
சிங்கை நாதன்
Forget to tell u .Long time waiting to see his face.Thanks to u now i saw him !!!!!!!!!!!
Chumma !!!!!!!
:)
அன்புடன்
சிங்கை நாதன்
//அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”
அவர்தான் செல்வேந்திரன்!//
அருமை.. இப்போ செல்ஸ் எனக்கும் நண்பர்.. :)
ஒன்னு மட்டும் நல்லா புரியுது.. நான் தான் ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்.. வாழ்க என் தந்தையார்:)
செல்வேந்திரனின் படைப்புகளை படித்திருக்கிறேன்!
செல்வேந்திரனை பற்றி படித்து விட்டேன்!
வாய்ப்பு கிடைக்கும் போது செல்வேந்திரனை படிக்க வேண்டும்!
பாராட்டுக்கள் செல்வேந்திரன்!!!! இந்த அளவுக்கு மக்களை இம்ப்ரெஸ் செய்ததற்கு..
பாராட்டுக்கள் பரிசல்!!! அதை அழகாக வெளிப்படுத்தியதற்கு...
//இந்தப் பதிவைப் பார்த்தும் அவர் கோபப்படுவார். ‘எதுக்கு இவ்ளோ பாராட்டணும்’ என்பதான கோபமாக அது இருக்காது. ‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சே’ என்பதான கோபமாகத்தான் அது இருக்கும்.//
சூப்பர் :-))
செல்வேந்திரனை இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட நண்பர்கள் மூலம் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது எழுத்தின் மூலமும் கூட. இந்த பதிவின் மூலம் மேலும் மதிப்பு கூடுகிறது.
நன்றி பரிசல். செல்வேந்திரன்.
சூப்பர் !!
//இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா...
//
வெட்கி தலைகுனியனும் :((((
பலமுறை பொது இடங்களில் பிறர் செய்யும் தவறுகளைப் பார்த்து ஆதங்கப்பட்டதுண்டு. ச்சே..ஏன் இப்படி இருக்காங்க.. படிச்சவங்க படிக்காதவங்க...எல்லோரும் இப்படி பண்றாங்க. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டங்களானு தோணும்.
இந்த பதிவு படித்தபின்.. "தவறுகளை தட்டிக் கேற்காததும் ஒரு தவறுதான்" என புரிகிறது.
பதிவு ‘ச்சான்ஸே இல்ல!’ பரிசல்..பரிசல்தான்.!!
நமக்கு தவறுகளை திருத்திக்கொள்ள இன்னும்.. சான்ஸ் இருக்கு!
நன்றிகள் பல.
செல்வேந்திரனுக்கு வாழ்த்துக்கள்...
vaalththukkal selventhiran !!!
யாறோ ஒரு பதிவர் செல்வேந்திரன் பதிவு பற்றி 2 மாதங்களூக்கு முன்பு எழுதியிருந்தார், அதன் பின்பு செல்வேந்திரன் பதிவுகள தொடர்ச்சியாக படிக்கிறேன்.
உண்மையிலெ பரிசல் சொல்லும்படி ஓரு ஆளூமை தன்மையுடன் எழுதிவருகிறார்.
வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.
அன்புடன்
காவேரி கணேஷ்
செல்வேந்திரனை ஓரளவு நன்றாக தெரியும் என்பதாலும், இரண்டு மூன்று முறை நேரில் சந்தித்துள்ளதாலும், இந்த பதிவுக்கு கண்டிப்பாக நான் பின்னூட்டம் இட வேண்டும்.
பரிசல்காரன் சொன்ன அனைத்துமே உண்மை. ஆனால், செல்வேந்திரனைப் பற்றிய ஒரு பக்கத்து உண்மை. ஒரு நல்ல மனிதன் செல்வேந்திரன். அதே சமயத்தில் கொஞ்சம் கெட்ட மூளைக்காரன்.
// அச்சச்சோ கும்க்கி அண்னன் வலையையும் யாரோ ஹேக் பண்ணிட்டாங்க போல.. //
:)))))
நல்ல
அருமையான
பதிவு!!
:-)
Hi,
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team
'ச்சான்ஸே இல்ல'... 'ச்சான்ஸ் இருக்கு' கான்செப்ட் சூப்பர். யோசிக்க வெச்சிடுச்சு.
ரீப்ப்ப்ப்பீட்டு...
//Blogger செல்வேந்திரன் said...
உங்கள் அன்பின் வெளிப்பாடாக அமைந்த இந்த பாராட்டுக்களை என் ஆளுமைக்கு காரணமாக இருந்த இருக்கின்ற என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.//
well said செல்வேந்திரன்..
விக்கினேஸ்வரியின் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்.
Post a Comment