Thursday, February 5, 2009

அவியல் 05.02.09

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி என்றால் என் மனைவிக்கு அவ்வளவு பயம். ஏற்கனவே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு பலமுறை பர்ஸை சோதனை செய்துவிட்டு அனுப்பியும், க்ரெடிட் கார்டு மூலம் செலவழித்துவிட்டு வந்ததில் அவருக்கு ஏமாற்றம். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருப்பதால் நானும் வாங்கும் மனநிலையில் இல்லை.

நண்பர் செல்வேந்திரனுடன் ஞாயிறன்று திரு.ஞானசம்பந்தனின் உரை கேட்கச் சென்றிருந்தோம். ஏதோ கட்சி மீட்டிங்கிற்குப் போனது போல எல்லாருமே அரசியல்வாதிகளாக இருந்தார்கள். ‘முடிஞ்சா ஒக்கார்ந்து கேளுடா’ என்பது போல பேசினார்கள். செல்வேந்திரன் ‘இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கும் பணியை ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே’ என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாம் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ‘................ அவர்களே, .................... அவர்களே’ என்றது மகா அறுவை. ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.

எட்டாம் தேதிவரை நடைபெற இருக்கிறது இந்தப் புத்தகக் கண்காட்சி. கண்காட்சியின் பொருட்டு திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.


*****************************************

கல்கத்தாவின் தெருவோரத்தில் கிடக்கிறார் அந்தப் பெரியவர். உடம்பில் அங்கங்கே புண்களுடம் ரத்தம் வழிய கிடந்தவரை நாள்முழுக்கக் கடந்துசென்ற எவரும் கண்டுகொள்ளாதபோது, அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய அந்த மூதாட்டி, பெரியவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி தான் சார்ந்த மருத்துவமனையில் சேர்க்கிறார். ஓரிரு நாளில் குணமாகிக் கண்விழிக்கிறார் பெரியவர். சிலுவை அணிந்த அந்த மூதாட்டி அன்னை தெரசா என்பதில் சஸ்பென்ஸ் தேவையில்லை. பெரியவரைப் பார்த்து அன்னை தெரசா யாரென்று கேட்க, பெரியவர் சொல்கிறார். “நான் காளிகோயில் பூசாரி அம்மா. இத்தனை வருடங்களாகப் பூஜை செய்கிறேன். காளி உங்கள் வடிவில் காட்சி தந்துவிட்டாளம்மா” என்கிறார்.

‘மதமெனும் பேய் பிடியாதிருக்க..’ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியில் செவ்வாயன்று திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போது இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லி, முடிவில் “கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார். இலக்கியக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதிகளுக்கிடையில் இவர் ஒரு விதிவிலக்கு. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூட்டத்தைக் கட்டிப் போட்டார். பேசிமுடித்து மேடையிலிருந்து இறங்கி காருக்குச் செல்லும் வரை அவரோடு பேசியது ஒரு நல்ல அனுபவம்.

*******************************************
இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.


தோனியின் வீரர்கள் இப்படிப் பாடுபட்டு வெற்றிபெற, ‘மகேந்திரசிங் தோனியா, மச்சக்கார தோனியா’ என்றும், LADY LUCK IS WITH DHONI என்றும் அவரது உழைப்பை அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்படுத்துவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

*********************************************

மகள்கள் ஏதோ எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது என்னையும் செய்யச்சொல்ல, சும்மா ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் ‘அப்படி இல்லப்பா.. இப்படி’ என்று என்னை அமுக்க, முதுகில் பயங்கரமான சுளுக்கு. நேற்று முழுவதும் வலி. சும்மாவே படுத்துக் கிடந்து, நேற்று மாலை பொறுக்க முடியாமல் டாக்டரிடம் போக அவர் ஏதோ சால்டரிங் கம்பிபோல ஒன்றால் ஷாக் குடுத்து, மாத்திரை தைலம் கொடுத்தார். ம்ஹூம். உமாவின் நண்பி ஒருவரது அப்பா சுளுக்கெடுப்பார் என்று கேள்விப்பட்டுப் போனோம். ‘எங்கே வலி’ என்று கேட்டார். வலது முதுகு என்று சட்டையைக் கழட்டப் போக, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று இடது கையைப் பிடித்து, முழங்கைக்கு அருகில் எண்ணையைப் போட்டு சுளுக்கெடுத்தார். ‘முதுகுல பிடிப்பு. இங்க வழிக்கிறாரே’ என்று கேட்டபோது, ‘மாறுகால் மாறுகைலதான் சுளுக்கெடுக்கணும். நிஜமா சுளுக்கா இருந்தா இதுல சரியாய்டும். இல்லீன்னா எக்ஸ்-ரே எடுத்துத்தான் பார்க்கணும்’ என்றார். பிரமிப்பாய் இருந்தது. ஓரளவு சரியாகி, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
*******************************************

சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”

**************************************
"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

-நான் சொன்னது!

*

46 comments:

Cable சங்கர் said...

உங்களுக்கு முதுகுல ப்ராப்ளமா.. எனக்கும் பத்து நாள பேக்ல வலி.. டிரீட்மெண்ட் எடுத்துட்டு வீட்டிலேயே இருக்கேன்.

அவியல் சூப்பர்.

பரிசல்காரன் said...

ஒரு நாளைக்காவது அவியல்ல உங்க கமெண்ட் மொதல்ல வராம இருக்காது போலிருக்கே சங்கர் ஜி....

anujanya said...

எதிர்பார்ப்புடன் வருவோரை ஏமாற்றாத அவியல்.

Take care of your backs - both K.K. & Sankar.

அனுஜன்யா

Cable சங்கர் said...

நல்லாருந்தா எழுதித்தானே ஆகணும்.. பரிசல்.

உங்க அவியல பத்தி கார்க்கி பதிவெழுதியிருக்காரு.

மிக்க நன்றி அனுஜன்யா..

அபி அப்பா said...

முதுகை பார்த்துகோங்க பரிசில்!

ஓ பார்க்க முடியாதோ?

Jenbond said...

\\ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்\\

அவியல் சூப்பர். அருமையான கருத்து. சொந்த சரக்கா? இல்ல சரக்கோட சொன்னதா?. சகா கார்கி காக்டெயில் சொன்னது (ஆனா பரிசலின் அவியல் மூலமாத்தான் இந்த மாதிரி பதிவுகள் அதிகம் வர ஆரம்பிச்சன. காக்டெய்ல், அவியல், துணுக்ஸ், நொறுக்ஸ், கொத்து பரோட்டா, கூட்டாஞ்சோறு இப்படி பல பெயர்களில் எழுதுகிறார்கள். என்ன இருந்தாலும் அவியலின் சுவை எதிலும் இல்லை) சரியாதான் இருக்கு. புதிர்கள் (week end) எப்பொழுது restarat ஆகா போகுது.

முரளிகண்ணன் said...

வழக்கம் போல கலக்கல் அவியல். நாஞ்சில் சம்பத் கலக்கலான பேச்சாளர், மிக ரசித்தேன் உங்கள் மேற்கோள்களை.

பரிசல்காரன் said...

@ Anujanya

Why to worry when Friends like you backing me.. :-)))

@ சங்கர்

ம்ம்.. படிச்சிட்டேன்!

பரிசல்காரன் said...

// அபி அப்பா said...

முதுகை பார்த்துகோங்க பரிசில்!

ஓ பார்க்க முடியாதோ?//

WOW! கலக்கல் சீனியர்! மொதல்லயே இத யோசிச்சிருந்தா தாளிக்கறதுக்கு முன்னாடி அவியல்ல சேர்த்திருக்கலாம்!! :-)

@ JOEBOND

சொந்த சரக்குங்க! நன்றி உங்க பாராட்டுக்கு.

நன்றி முரளிகண்ணன்.

ஆஃபீஸுக்கு நேரமாச்சு... பை..பை...

pudugaithendral said...

முதுகை பார்த்துகோங்க பரிசில்!

ஓ பார்க்க முடியாதோ?//

:)))))))) onnum solla mudiyala

அத்திரி said...

//சட்டையைக் கழட்டப் போக, //

‘நல்ல வேளை நீங்க சட்டய கழட்டலை..........(((((((

Vidhya Chandrasekaran said...

\\ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்\\

பரிசலின் பழமொழிகள் அடுத்த புத்தக கண்காட்சியில் எதிர்பார்க்கலாம் தானே:)

Anonymous said...

//நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்//

வரும்போது கவனிச்சுக்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

//திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.//

சுஜாதா வாசனை அடிக்குதோ?

சிறந்த அவியல். படித்து முடித்தவுடன் எப்பவும் ”அட” போட வைப்பதால்..
அடைஅவியல் நன்றாகவே இருந்தது...

குசும்பன் said...

//இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.//

ஆட்டோகிராப்பை ஒரு 100 ரூபா பாத்திர பேப்பரில் தான் போடனும் ஓக்கேவா? :)

குசும்பன் said...

இந்த வாரம் கொஞ்சம் சுவாரய்யசம் கொஞ்சம் கம்பியாக தெரிகிறது தலைவரரே:(

narsim said...

பரிசல் அவியல் அருமை..அந்த "நான் சொன்னதில்" கா"ரம்" தூக்கல்..

Mahesh said...

கும்க்கியின் வாசகம்.. மிகவும் ரசித்தேன்

உங்களுக்கும் கேபிள் சங்கர் அண்ணனுக்கும் எதோ கேபிள் கனெக்ஷன் இருக்கோ? உங்களுக்கு வலிச்சா அவருக்கும் வலிக்குது. நீங்க பதிவு போட்ட உடனே பின்னூட்டம் போடறாரு !!

சந்தனமுல்லை said...

//ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.//

:-))))

நாந்தான் கடவுள்-னு சொல்லிக்கறவங்அக் மத்தியில்,

//"கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது://

வித்தியாசமா நல்லா இருக்கு!!

அவியல் நல்ல சுவாரசியம்!

Vinitha said...

;-0

Where is the book exhibition in Tiruppur? I am there during this weekend.

பரிசல்காரன் said...

// Vinitha said...

;-0

Where is the book exhibition in Tiruppur? I am there during this weekend.//

டவுன்ஹாலில்.

அழைக்கவும்.

தியாகராஜன் said...

"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"


fantastic

கோவி.கண்ணன் said...

//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

ஹைலைட் பண்ணி இருப்பது எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. வெல்டன் பரிசல் !

:)

அசோசியேட் said...

“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது”
உண்மை - நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறது ! ! !

பரிசல்காரன் said...

// கோவி.கண்ணன் said...

//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

ஹைலைட் பண்ணி இருப்பது எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. வெல்டன் பரிசல் !

:)//

நன்றி ஜி. எங்கே யாருக்கும் தெரியவில்லையோ என்று நினைத்தேன். குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி!!!

சின்னப் பையன் said...

அசத்தல் அவியல்...

கார்க்கிபவா said...

//, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்//

ச்சே.பாவம் பண்ணிட்டாரே.

வால்பையன் said...

//என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.//

ஆட்டோகிராப் பட டீவீடீயா
எங்கிட்ட ஏற்கனவே ஒன்னு இருக்கே!
வேற எதாவது படத்தோட டீவீடீ கிடைக்குமா?

Thamira said...

"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"
//

அழகான வரிகள்.!

வால்பையன் said...

//
சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

நாம் படிக்கும் போது நமக்கும் அவ்வாறே தொன்றுவது தான் இந்த வார்த்தையின் மகிமை!

பழமைபேசி said...

//இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.//

உடுமலையார், நீங்க இந்தப் பக்கமா? இல்ல அந்தப் பக்கமா??
உருபாட்டம் அல்ல இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஆதவா said...

இன்னும் புத்தக கண்காட்சிக்கு போவலை. ஞாயிறுதான் போகணும்....

அவியல் அருமை... அப்ப, எனக்கு டிஃபனும் ஆட்டோ கிராஃபும் கன்ஃபர்ம்...

ஸ்ரீதர்கண்ணன் said...

ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்

Super

VFORU said...

Ore chink chak saththam thaangala da sami.

Don't you realize that you get more than you deserve?

Test said...

//"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"//

முதல் முறை படிக்கும் போது புரியாமல் குழம்பி உங்களை திட்ட நேரிடுமோ என்று நினைத்து மறுமுறை படித்து புரிந்து பாராட்டுகின்றேன் :)

(ஏதோ நம்மால் முடிந்தது)

பரிசல்காரன் said...

// vforu said...
Ore chink chak saththam thaangala da sami.

Don't you realize that you get more than you deserve?
//

Ofcourse...

Unknown said...

HAi KK..

This is Valli. I read ur blog and its nice...

selventhiran said...

நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன். //
ஹா... ஹா அப்படியே வெயிலான் சார்பில் ஒரு டீயும்னு போட வேண்டியதுதானே

முதுகில் பயங்கரமான சுளுக்கு //
அடடா... இப்ப தேவலையா?

வித்யா, அது ஏன் பரிசலின் பழமொழிகள்... பரிசலின் புதுமொழிகள்னு சொல்லுங்க

குசும்பன், பத்திர பேப்பர் தெரியும். அது என்னய்யா 'பாத்திர பேப்பர்' ?!

ராஜ நடராஜன் said...

//“கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார்.//

// நான் பக்தன்.மற்ற எல்லோரும் கடவுள்//(கும்க்கி)

வந்ததுக்கு ருசியான அவியல்தான் கொடுத்தீங்க.

வெண்பூ said...

அவியல் சூப்பர் பரிசல்..

Sanjai Gandhi said...

//நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

இதுக்கு நான் அவர் மீது வழக்குப் போடப் போறேன்.

“நான் கடவுள்..நீங்க பக்தர்” என்பது பல நூற்றாண்டுகளாக ஆர்க்குட்டிலும் ஜிமெயில் ஸ்டேட்டசிலும் நான் வைத்திருப்பது.. என்னைக் கேட்காமலே உல்ட்டா பண்ணிட்டார்.. :((( :))))

Sanjai Gandhi said...

அண்ணே.. அந்த ஷார்ப்ட்ரானிக்ஸ் பக்கத்துல இருக்கே அது தான புத்த்க கண்காட்ச்சி. அதுவா இருந்தால், உண்மையில் ஏமாற்றமே.. பழய புத்தக கடைக்குள் சென்று வந்த உணர்வு. அதுவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

தமிழ் உதயன் said...

அன்பரே,

நாம எப்ப சந்திக்கிறது??
பதில் சொல்லுங்க பரிசல்..

நன்றி

தமிழ் உதயன்

Kumky said...

SanJaiGan:-Dhi said...

//நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”//

இதுக்கு நான் அவர் மீது வழக்குப் போடப் போறேன்.

“நான் கடவுள்..நீங்க பக்தர்” என்பது பல நூற்றாண்டுகளாக ஆர்க்குட்டிலும் ஜிமெயில் ஸ்டேட்டசிலும் நான் வைத்திருப்பது.. என்னைக் கேட்காமலே உல்ட்டா பண்ணிட்டார்.. :((( :))))

ஹி..ஹி எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாமே..

Kumky said...

முறையாக கற்றுக்கொள்ளாமல் எந்த ஆசனத்தையும் பயன்படுத்த கூடாது கே.கே.
அப்பொழுதே சொல்லியிருந்தால் வீடுவரை விட்டுருக்கமாட்டமே...
மசினகுடியிலயே எல்லா ஆஸ்நாசும் ஒரு ட்ரையல் பார்த்திருக்கலாமே..

(நான் வேற ஆசனா பண்ணிகிட்டிருந்தத வெளில சொல்லபடாது ஆமா.)

Kumky said...

ஆனா என்ன ஆனாலும் உங்க மேடம் உங்கள “விடாசனா” சோதனை செய்துட்டிருக்கறதுதான் வருத்தமா இருக்கு.


சரி ..உங்களுக்கும் கேபிளுக்கும்...ஒயர் இல்லாமலேயே டெலிபதி சமாச்சாரம் எதோ இருக்காமே.. உண்மையா.?