Wednesday, February 25, 2009

அவியல் – 25.02.2009

கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டேன். வருடா வருடம் அங்கு செல்வது வழக்கம். இந்தமுறை இயற்கை சூழ்ந்த அந்த மலையடிவாரத்தில் அத்தனை வாகனங்கள் போக்குவரத்தாலும், கூட்டத்தினாலும், சத்தங்களினாலும் என்ன நிகழும் என்ற பார்வையோடு கலந்து கொள்ளுங்கள் என்றார் அண்ணாச்சி (வடகரை வேலன்). அது பற்றித் தனியே.. அப்புறமாய்..

ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது. அத்தனை கூட்டத்தை சமாளிக்க பல வழிகள் செய்யப்பட்டிருந்தாலும் நிறைய குறைபாடுகள். எனக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மட்டும்..

ஆறுமணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று மணிக்கே சென்று சேர்ந்தோம். நானும் நண்பர் ஒருவரும் நின்று பழரசம் அருந்திக் கொண்டிருந்த போது, பத்தடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நீலநிற ட்ரம் ஒன்றில் ஒருவர் A4 சைஸிலான பாதாம்பால் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த ஸ்டிக்கரின் ஒட்டும் பகுதியில் இருக்கும் பேப்பரைக் கிழித்துக் கீழே போட்டுவிட்டு, ட்ரம்மில் அதை ஒட்டுவார். இப்படியே நாலைந்து ட்ரம்களில் அவ்ர் ஒட்டியபோது அவர் அருகில் சென்று அந்த ட்ரம்மைப் பார்த்தேன். குப்பை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்!

“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”

உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.

****************

இன்னொன்று....

அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!

*******************

இங்கே நான் இருக்கும் பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் ஒரு சின்ன போஸ்டர் அங்கங்கே தென்படுகிறது. ராஜபக்‌ஷேவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயாம். தீர்வு என்னவென்பதை தீர யோசிக்காமல் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலைகளை இந்த மாதிரி ஒருசிலர் செய்வதைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இதேபோல தர்மபுரியில் ‘ஒகேனக்கல் 2025’ என்ற அமைப்பை நடத்தும் சிலர் தர்மபுரியை வல்லரசு மாவட்டமாக 2025க்குள் மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களாம். முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் தியேட்டர்களிலெல்லாம் நல்ல பாம்புகளை விடப் போகிறார்களாம். அவர் கவர்ச்சியாக நடிக்கிறார், கலாச்சாரத்தைக் கெடுக்கிறார் என்பதால் இப்படியாம். அடுத்தகட்டமாக நமீதா, அசின், ப்ரியாமணி, தமனா என்று லிஸ்ட் இருக்கிறதாம். இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடும் விஜய், அஜீத் உட்பட எல்லாருக்கும் இதே எச்சரிக்கைதானாம். அப்படியும் அடங்கவில்லை என்றால் அவர்கள் வீடுகளில் நல்லபாம்பை விடுவார்களாம்.

வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது..

“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்கடா.. கப்பித்தனமாப் பேசிகிட்டு....”
**********************

வர வர தொலைக்காட்சியைத் திறந்தால் திகட்டுகிற அளவுக்கு சேனல்கள். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரி, செய்திகள், காமெடி, படங்கள் என்று தங்களுக்குள் பல சேனல்களைக் காட்டி வெறுக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடிவேலுவுக்கு தான் நடித்த காட்சி ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்படும்போதும் ஏதாவது தொகை சென்று சேருமானால் அவர் இந்நேரம் உலக நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருப்பார். அவ்வப்போது மனதைத் தளர்த்திக் கொள்ள பார்த்த வடிவேலுவின் நகைச்சுவைகளைப் பார்த்தாலே திகட்டுகிற அளவுக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். அவருக்கும், சினிமாவிற்கும் இது நிச்சயமாக நல்லதல்ல. எல்லாரும் ஒருவித வெறுப்புதட்டிய மனோநிலையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.

***********************

பிப்ரவரி 15ம்தேதி மகளை ஹிந்தித் தேர்வு ஒன்றில் விட்டுவிட்டு வரும்போது ஒருபக்கம் நல்ல கூட்டம். ‘எப்படீங்க இப்படிப் பண்ணலாம்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கே இப்படிப் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேச்சுகள்!

விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.

ங்கொய்யால!

***********************

பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு

இந்தக் கவிதைக்ககானப் பாராட்டுக்களை பின்னூட்டத்திலும் திட்டுக்களை தனியே மெயிலிலும் சொல்லுங்கப்பா. (மெய்ல் பாக்ஸ் இன்னைக்கு ஃபுல் ஆகப்போகுது!)

மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)

*

38 comments:

தமிழ் said...

/பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு/

பாராட்டைப் பின்னோட்டத்திலே அனுப்பி விடுகிறேன்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

முரளிகண்ணன் said...

அவியல் சூப்பர். உங்களின் அறச்சீற்றத்துக்கு வந்தனம்.

கவிதை அருமை.

எம்.எம்.அப்துல்லா said...

//மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)
//

மனசாட்சியை வழிமொழிகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு

வேலையின் உலைச்சலில்
மகளை மறந்து
வெறும் கையோடு செல்லும்
தந்தையின் கையில்
இயற்கையே தருகின்றது இனிப்பு!

எம்.எம்.அப்துல்லா said...

நான் எழுதுன தொடர்ச்சிக்கும் உங்க மனசாட்சியை வழிமொழிகிறேன்.

Mahesh said...

வெள்ளியங்கிரி மலை மட்டுமா வியாபாரமயமாகியிருக்கு? இன்னிய தேதிக்கு ஹாட் கம்மாடிட்டி "கடவுள்". ஆனா அந்தப் பேர்ல ஏன் இன்னும் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் ஆரம்பிக்கலன்னு புரியல :)))

ஸ்வாமி ஓம்கார் said...

அவியல் அருமை..

ஆனால் சமூகம் பற்றிய ஒருவித மன அழுத்தம் தெரிகிறது.

கலைஞனுக்கு மனம் லேசாகத்தானே இருக்க வேண்டும்?

pudugaithendral said...

பெயர் வாங்கும் வரை வியாபர நோக்கம் இல்லாமல் இருப்பார்கள். அப்புறம் எந்தெந்த வழியில் முடியுமோ அப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். இது அனைத்து மையங்களுக்கும் பொருந்தும்.

அவியல் நன்றாக இருந்தது.

கார்க்கிபவா said...

நானும் காக்டெய்ல் எழுதி தமிழ்மணத்தில் இணைச்சுட்டு பார்த்தா கீழ அவியல். வாட் எ கோ இன்சிடென்ஸ்?

Cable சங்கர் said...

என்னப்பா எப்பவும் நான் தான் பர்ஸ்ட் போடுவேன் பின்னூட்டத்தை. யாரை கேட்டு போட்டீங்க..

கவிதை சூப்பர்.. இப்படித்தான் பழக ஆரம்பிக்கணூம். நாலு பேர், நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் நாம் அசைஞ்சு கொடுக்க கூடாது. அமாம..

கார்க்கிபவா said...

/விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.

ங்கொய்யால//

அச்சச்சோ..அப்புரம் என்ன செஞ்சீங்க சகா?

//“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்க//

அது தேவர் மகன் இல்லையா?


பாரட்டறேன் சகா அந்த கவிதை மேட்டருக்கு. உங்களுக்கு துணிச்சல் அதிகம் :)))

Ramesh said...

Nice அவியல்! வாழ்த்துகள்!

SK said...

பாக்கி இல்லன்னு சாக்லேட் கொடுக்குறப்போ நாம சில்லரை இல்லாம சாக்லேட் கொடுத்தா கடைல வாங்குவாங்களா பரிசல்??????????????

VIKNESHWARAN ADAKKALAM said...

அவியல் அருமைங்க....

//விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.//

கடமை தவறாதவர்கள் :))

ICANAVENUE said...

பரிசல், உங்க கவிதை நடை நன்றாக இருந்தாலும், உங்கள் வலை பூ பலரால் படிக்க படுவதால் உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடகூடதென்பது ஒரு மித். Infact, when thier sugar level goes low, they have to compulsarily take some sweets or high sugar content eatables. Apart from my wife being diabetic for 20 years, i've seen so many other diabetic people getting upset with this kind of remarks. I know you did not mean to offend anybody but atleast you can be careful in future as 5% of the indian population has diabetis.

பரிசல்காரன் said...

நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!

நன்றி முரளி & அப்துல்லா (ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு. ஆனா உங்க கவிதை சொல்ற சேதி. கவிதையை விடக் கவிதையா இருக்கு!)

சரிதான் மகேஷ்!

@ ஸ்வாமி ஓம்கார்

லேசா இருக்கறதால தான் பேசாம வரேன்.. பல இடங்கள்ல!

நன்றி புதுகை தென்றல்!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

தேவர் மகன் ஒரிஜினல். வடிவேலுவும் ஒரு படத்துல (வின்னர்) அவருகிட்ட அபராதம் கட்டுங்கறப்போ இதைச் சொல்லுவாரு!

@கே.சங்கர்

லொள்ளுங்க! (ஆனா நான் இன்னைக்கு உங்களுக்கு மீ த ஃபர்ஸ்ட்தானே?)

நன்றி ரமேஷ்

@ கீர்த்தி

நான் அதப் பண்ணீருக்கேன்!

@ விக்கி

யாரச் சொல்றீங்க?

@ ICANAVENUE

நன்றி.. ! நிஜமாவே நல்ல தகவல்ங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது

ஈஷா மட்டுமா, கடவுள் பெயரை சொல்லி களத்தில் ஈடுபடும் பிறவும் இப்படித்தான் இருக்கின்றன.

கவிதை இனிப்பு.

புன்னகை said...

//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.//
அப்படி ஏதும் கொண்டு வந்தா ரொம்ப நல்லது. வீட்ல ரிமோட்கு சண்டை போட்டு ரொம்ப புளிச்சுப் போச்சு ;-)

Truth said...

//உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.

சரியாச் சொன்னீங்க. நான் ஒரு முறை ஆஃபீசுக்கு போகும் போது, ரோட்டுல ஒரு போலிஸ் காரன் தம் அடிச்சிக்கிட்டு இருந்தான். அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி நின்னுகிட்டு. அப்போ பப்ளிக்ல தம் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்திச்சு (நான் சொல்றது இதுக்கு முன்னாடியும் ஒரு முறை சட்டம் கொண்டாந்தாங்கல அப்போ).
நான் "ஏன் சார் பப்ளிக்ல தம் அடிக்றீங்க. நீங்களே இப்படிப் பண்ணினா, அப்றொம், மத்தவங்க எல்லாம் எப்படி திருந்துவாங்க" அப்படின்னு கேட்டுட்டு ரோட க்ராஸ் பண்ணிட்டு, என்னோட ஆஃபீஸ் பஸ்சுக்காக வெயிட் பண்ணினேன். அவரு வந்து எவ்ளோ முடியுமோ அவ்ளோ கெட்ட வார்த்தைகளாக திட்டிட்டுப் போனாரு. இப்படி பட்ட வார்த்தையெல்லாம் நான் காலேஜ் படிக்கும் போதே நான் யூஸ் பண்ணலெ. எப்படா பஸ் வரும்ன்னு காத்திருந்து நான் பஸ்சுல ஏறிட்டேன்.
போலிஸ் பக்கத்துல இருந்த ஒரு தடி மாடு கூட போலிஸுக்குத் தான் சப்போர்டு. என்ன பண்றது? இனி திருத்தக் கூடாது, திருந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

கே.என்.சிவராமன் said...

பரிசல்,

ஈஷா யோக மையம் வியாபாரமாகிவிட்டதை குறித்து இன்னும் விரிவாக, தனிப் பதிவாக எதிர்பார்க்கிறேன். ஆண்டுதோறும் அங்கு செல்லும் வழக்கம் உங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த அனுபவத்தையே எழுதுங்கள்.

சொல்வதற்கில்லை. அந்தப் பதிவு, வாரம் இருமுறை வெளியாகும் ஏதேனும் ஒரு இதழில் உங்கள் பெயருடன் மறு பிரசுரம் செய்யப்படலாம்.

உங்களை நிருபராக பார்க்க ஆசையாக இருக்கிறது பரிசல்.

எழுதுங்களேன்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ramachandranusha(உஷா) said...

அவியல் சூப்பர் :-)

எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அதில் எதையும் துறக்காத ஒரு சாமியாரின் உபதேசங்கள். அரசியல்வாதிகள் அடிச்ச பணம் எல்லாம் ஜூஜூபி. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, மாதா அமிர்தானந்தா, பங்காரு அடிகள், நாராயணியம்மா... லிஸ்ட் போய்கிட்டே இருக்கு. எல்லாரும் பில்லியன்ர்கள் முதல் இல்லாத வியாபாரம். கொழிக்கிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? ஆடிட்டிங் எல்லாம் உண்டா?

குசும்பன் said...

அவியல் அருமை பரிசல்!

கவுஜ அருமை!

பட்டாம்பூச்சி said...

அட இப்பத்தான் வேலன் அண்ணாச்சி பதிவுல நீங்க 94-ல எழுதிய கவிதையை படித்து பின்னூட்டம் இட வந்தேன்.அதற்குள் இங்கும் கவிதைமயம்.
கவுஜ நல்லா இருக்குங்கோவ் :)

சமூகத்தின் மீது உள்ள உங்களது தார்மீக அக்கறைக்கு ஒரு சல்யூட்.

சிவக்குமரன் said...

//அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். ///
இது ரொம்ப நாள இருக்கு!

தமிழ் said...

/நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!/

இன்னும் ஓடையில் தங்களின் பதிவைப் படித்துக் கொண்டு தான் உள்ளேன்.

அன்புடன்
திகழ்

Raju said...

I have written a post of this earlier.

Isha Foundation and biz

- Raju
http://pitbuzz.blogspot.com/

Vetirmagal said...

// நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.//

மிகவும் முக்கியமானது. ஒரு மாதிரியான
மூளை சலவை சாதனம் டீ.வீ.:-)

//ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது//

மிகவுத் வருத்தப்பட வேண்டிய செய்தி. அழகான ஆரம்பத்திலிருந்து, புதுப்பாதை தேடியவர்கள், தேய்ந்த பாதையிலே(beaten track) கலந்து விட்டார்கள். இனி கும்பல் கூடும் இடங்களில், ஆன்மீகம் விலை போகிறது என்று கணிக்க வேண்டியது போல!

Itsdifferent said...

எத்தனை சேனல்கள் இருந்தாலும் அவை அத்தனையிலும் சினிமா என்னும் போது தன் சலிப்பு ஏற்படுகிறது. இங்கு அமெரிக்காவில் அதைவிட அதிகம், ஆனாலும், உங்களுக்கு என்ன சுப்ஜெக்ட் விருப்பம் இருக்கிறதோ, அதை பார்ப்பதற்கு ஒரு சேனல் உண்டு. எனக்கென்னவோ மக்களுடைய ரசனையும் இதற்க்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது. நம் ஊரிலும் இப்போது "National Geographic", "Travel", "Home Building" , என்று எத்தனையோ வருகின்றன, ஆனால் யார் அவற்றை பார்க்கிறார்கள். அழுமூஞ்சி சீரியல்கள் மற்றும் சினிமா தான் மக்கள் விருப்பம், அதைத்தான் அவர்களும் ஒளிபரப்புவார்கள். சமீபத்திய பெட்ரோல் விலை தான் மக்கள் சக்திக்கு ஒரு நல்ல உதாரணம். மக்களை, அவர்கள் ரசனையை மாற்றுவது எப்படி?

Thamiz Priyan said...

கவிதை சூப்பர்ங்ண்ணா!

கோவி.கண்ணன் said...

//“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”//

செல்வேந்திரன் எஃபெக்ட் !
:)

இருவருக்கும் பாராட்டுகள் !

ஷண்முகப்ரியன் said...

உங்கள் ஈஷா யோகா அனுபவத்தைப் பற்றிப் படித்தேன்.இரண்டு வருடங்களாகத் தொலைக் காட்சியில் மட்டும் மஹா சிவராத்திரி விழாவைப் பார்த்து,சத்குருவின் உரையைக் கேட்கும் நான் அந்த நிகழ்வுக்குப் பின்னால் இப்படி ஒரு எதிர் மறையான அனுபவம் இருக்கும் எனத் தெரியாமல் இருந்திருக்கிறேன்.எனினும் எந்தப் பித்தலாட்டமும் கூட நமக்குள ஒரு தெளிவை ஏற்படுத்தினால் நன்றே.
சாமியார்களை ஆராய்வதை விட ,அவர்கள் சொல்வதைக் கேட்ட பின், நம்மை ஆராய்வதே நன்மை பயக்கும்.நன்றி நண்பரே.

butterfly Surya said...

நயன்தாரா... நல்லபாம்பு...

நல்லாயிருக்க்கு...

ஷாஜி said...

அவியல் அருமைங்க....

Admin said...

கவிதை அருமை !!!
http://vetticorp.blogspot.com/

Thamira said...

ஒவ்வொன்றும் ரசனைக்குரியதாய் இருந்தது.. அதுவும் ‘ஒகேனகல் 2025’ ஸூப்பர்.!

Anonymous said...

i have the chance to read avial... its very superb...

enna romba english-nu think panringala..
neenga vera here no tamil fonts...

ur parisalkaran is very very super blog...keep it up..

Anonymous said...

i have the chance to read avial... its very superb...

enna romba english-nu think panringala..
neenga vera here no tamil fonts...

ur parisalkaran is very very super blog...keep it up..