Tuesday, February 10, 2009

நான் கடவுள் - சபாஷ்!

ஒரு திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை எவ்வாறானதாக இருக்கும்? கொண்டாட்டத்தை எதிர்பார்த்தோ, எந்திரத் தன்மை வாய்ந்த தன் வாழ்வுச் சூழலிருந்து விலகி சற்று மாறுதலான ஒய்வுதேடி தங்கள் இறுக்கத்தைத் தணித்துக் கொள்ளவோதான் இந்நாட்களில் திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை இருக்கும்.

பாலா படத்தைப் பொறுத்தவரை... ‘இந்த மாதிரியெல்லாம் இருக்காது.. இவரு படம் வேறமாதிரி’ என்று ரசிகனை தன் தளத்தை நோக்கி இழுத்துவந்து உட்கார வைப்பதில் பாலா ஜெயிக்கிறார்.

இன்றைய தமிழ்ச்சினிமாச் சூழல் என்பது - ரசிகத்தன்மையைப் பொறுத்தவரை- கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்துவருகிறது. ஒரு திரைப்படத்தின் ஓபனிங் கதாநாயகர்களுக்காகத்தான் இருந்துவருகிறது. பாலாவின் நான் கடவுள் பாலாவுக்காக மட்டுமே இந்த ஓபனிங்கை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல கொஞ்சம் இளையராஜாவுக்காகவும். இருவருமே ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். அதில் இளையராஜா கொஞ்சம் அதிகமாகவே.






நேர்மையாய் இருப்பவர்களுக்கே இந்த ஆடை தெரியும் என்று சொல்லப்பட்டு, நிர்வாண மன்னனை எல்லோரும் பாராட்டியதுபோல நான் பாராட்டத் தயாரில்லை என்கிறார்கள் சில பேர். மெத்தச்சரி.

எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்.

திட்டும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமான புரிதலற்ற படமில்லை நான் கடவுள்.

பல வருடங்களுக்கு முன் ஜோசியர்கள் சொல்கேட்டு தந்தையால் காசியில் விடப்பட்ட நாயகனைத் தேடி வரும் தந்தை, நாயகனைத் தன்னுடன் கூட்டிப் போக விழைகிறார். நாயகனின் குரு, “நீ ஒரு சாதாரண மனிதனல்ல, உனக்கு சொந்த பந்தங்கள் இருக்கக் கூடாது. போய் அவற்றைக் களைந்துவிட்டு வா” என்கிறார்.

குருவிடம் இருந்த காலங்களில் ஒரு அகோரியாக இருந்தவன் நாயகன்.






(வட நாட்டில்... மண்டை ஓட்டில் உணவருந்தும் ஒரு அகோரி)
(படக்காட்சி அல்ல)

(அகோரி என்பவர்கள் நரமாமிசம் உண்டு வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு. ஓரளவு உண்மையாயினும் இவர்கள் தாமாக உயிர்களை அழித்துக் கொல்வதாக எங்கும் சொல்லப் படவில்லை. இன்றளவும் வாரணாசி உட்பட சில வட நகரங்களில் அகோரிகள் சாதாரண மனிதர்கள் போலவே உலாவருகின்றனர் எனச் சொல்லப்படுகிறது.)

அவ்வாறு அகோரியாக இருந்த அவன் சொந்த பந்தங்கள் என்ற பற்றை..., அந்த ஊரில் அவனிருக்கும்போது அவனிடம் ‘சாமி… சாமி..’ என்று பற்று வைக்கும் அம்சவல்லியின் பற்றை, எவ்வாறு அறுத்தெறிகிறார் என்பதே கதை. தனது பற்றை அறுக்க அம்சவல்லிக்கு அவர் அந்த முடிவைத் தரவில்லை... அவளது துன்பங்களிலிருந்து அவளை விடுவிக்கவே அந்த முடிவு என்பதும் ஒரு கோணம்.

நாயகியரின், பெண்களின் இடை உடைகளில் சதையைக் காட்டும் படங்களுக்கு மத்தியில் மாற்றுத் திறன் கொண்ட எண்ணற்ற பிச்சைக்காரர்களின் முகங்களைக் காட்டி கலங்க வைத்திருக்கிறார் பாலா. பிச்சைப்பாத்திரம் பாடலை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட என் தோழி ஒருத்தி ‘ஐயோ இந்தப் படத்துக்கு நான் போக மாட்டேன்ப்பா’ என்று சொன்னதுதான் இந்தப் படத்தின் பலமும் பலவீனமுமாய் இருக்கிறது!

அப்புறம் பாலாவின் பாத்திரத் தேர்வுகள்..

ஆர்யாவுக்கும், பூஜாவுக்கு இது வாழ்நாள் முழுதும் சொல்லிக் கொள்ளக் கூடிய படம். மீடியாக்களில் சொல்லவில்லை என்றால் நாயகி பூஜாதான் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

காசியில் ஆர்யாவின் குருஜி-யில் தொடங்கி, பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் அந்தத் தாத்தாவின் (கவிஞர் விக்ரமாதித்யன்) மடியில் மழலை சிரிப்பு சிரித்தபடியே இருந்த குழந்தை உட்பட ஒவ்வொரு கேரகடர்களும் அற்புதம். எந்தக் குறையுமில்லை. அந்த வில்லன் தாண்டவன்... பேச்சிலும், பாடி லாங்குவேஜிலும் ஆர்.பி.விஸ்வத்தை உரித்து வைத்திருக்கிறார். நல்லதொரு வரவு. (பேரு ராஜேந்திரன்-னு படிச்சதா ஞாபகம்!)


பிச்சைக்காரர்கள் வாழ்வைக் காட்டும்போது எங்கே சோக வயலினுடன் தூங்க வைத்துவிடுவார்களோ என்று நினைத்தால் அவர்களுக்குள் இருக்கும், கிண்டல் கேலியை படம் நெடுகிலும் தூவி பார்வையாளர்களை கவர்கிறார் இயக்குனர்.

தன் தந்தையை விட்டு வரும்போது அவருக்காக அழும் அம்சவல்லி, தாண்டவன் & கோ-விடம் சிக்கியதும் இங்கே இவர்களுக்காக அழும்போது, அவர்கள் அவர்கள் வாழ்வை எவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர்.

காசியிலிருந்து படம் மலைக்கோயிலுக்கு வரும்போது கண்ணைமூடிக் கொண்டு படம் வேறு தளத்திற்குப் பயணிக்கிறது என்று சொல்லக்கூடிய பின்னணி இசை அபாரம். நாயகனை அனுப்பும்போது குருஜி பேசுமிடத்திலும், அம்மாவிடம் அப்பா நாயகன் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சொல்லுமிடத்திலும் இசை மூலமாகவே படத்தை விளக்கியிருக்கிறார் ராஜா. அந்த சிவோஹம் பாடலும், வீட்டு மாடியில் உடுக்கையடிக்கும்போதும், தந்தை நாயகனைக் கண்டு கொள்ளும் காட்சியிலும் ஒலிக்கும் பின்னணி இசைக்கு என்ன கொடுத்தாலும் தகும்.

இயக்குனர், இசைக்கு அடுத்து பார்வையாளர்களின் அதிக கைதட்டலை படத்தின் வசனங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் சில ஆழமான வசனங்களுக்கு மக்கள் தரும் கரவொலி அவர்களின் ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்துவதால். வசனகர்த்தா திரு.ஜெயமோகனிடம் இதுகுறித்துப் பேசியபோது “பல இடங்களில் அந்தந்தக் கேரக்டரைப் பேசவைத்துப் பதிவு செய்யப் பட்டது. ஸ்பாட் ரெகார்டிங். அந்த சமயத்தில் அந்த கேரக்டர் என்ன சொல்லும் என்பதைத்தான் வசனமாய் எழுதினேன்” என்றார். என்றாலும் ‘நெருப்புல ஏதுடா சுத்தம், அசுத்தம்’ என்று நாயகன் கேட்பதும், பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் அமைச்சரவை ஒதுக்குவதும், காவல் நிலையத்தில் பூஜா குடும்பத்தினர் ஆடிப்பாடும்போது நடக்கும் சம்பாஷணைகளும் ஜெயமோகனின் ஆளுமையைக் காட்டுகிறது. சபாஷ் ஜெமோ!

குறைகள்?

திரைக்கதை நேர்த்தியில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார். அதேபோல பாலா படம் என்றால் இப்படித்தான் என்ற கட்டுக்குள் பாலா மாட்டிக் கொண்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாயகன் யாருக்கும் அடங்கமாட்டான் (சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள்), அவ்வளவு ஈஸியாக காதலிக்க மாட்டான் (சேது நீங்கலான மற்ற படங்கள்) என்பது போன்ற ரிபீடேஷன்கள்.

சேதுவின் பாண்டிமடம், நந்தாவில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போன்றே இதில் பிச்சைக்காரர்களின் இடமும். நன்றாகத்தான் இருக்கிறதெனினும்... மாற்றமில்லாவிட்டால் ஒருவித லேபிளில் பாலா மாட்டிக் கொள்ளும் அபாயமிருக்கிறது.

அதேபோல இந்தப் படத்துக்காக ராஜா போட்ட இரண்டு நல்ல பாடல்களை படத்தில் சேர்க்காததற்கு பாலாவிற்கு குட்டு!

“ஒண்ணும் புரியல... ஆனாலும் ரெண்டரை மணிநேரம் ஒக்கார வெச்சுட்டாருடா” என்ற கமெண்டை வெளியே வருகையில் கேட்க முடிந்தது.

வெற்றி, தோல்வி என்பதற்கப்பாற்பட்டு பாலா பாராட்டுக்குரியவர் என்பதை நிரூபித்துவிட்டார்.



நான் கடவுள் – எனக்குப் பிடிச்சதுப்பா!

59 comments:

Mahesh said...

மீ த பஷ்ட்... நெம்ப நாளாச்சு !!

Mahesh said...

மீ த பஷ்ட்... நெம்ப நாளாச்சு !!

Mahesh said...

ரெபெடிஷன்ல மக்களுக்கு சலிப்பு வராம இருந்தாச் சரி !!

Cable சங்கர் said...

//அவனிருக்கும்போது அவனிடம் ‘சாமி… சாமி..’ என்று பற்று வைக்கும் அம்சவல்லியின் பற்றை, எவ்வாறு அறுத்தெறிகிறார் என்பதே கதை. தனது பற்றை அறுக்க அம்சவல்லிக்கு அவர் அந்த முடிவைத் தரவில்லை... அவளது துன்பங்களிலிருந்து அவளை விடுவிக்கவே அந்த முடிவு என்பதும் ஒரு கோணம்.//

சில பேரை நமக்கு பிடித்து விட்டால். அவர்கள் தவறு செய்தாலும் சப்பைகட்டு கட்டுவோம். அது போலத்தான் நீங்கள் சொல்லியிருப்பது, பற்று என்பது இருவரும் உண்டென்றால் அது சரி.. இப்போது ருத்ரனுக்கு இருக்கும் பற்று என்று எடுத்துக் கொண்டால் அவனுடய அகோரி வாழ்கையின் மேல் உள்ளதுதான் என்று சொல்லவேண்டும். அம்சவல்லி வேண்டுமானால் அவரை சாமி.. சாமி என்று பற்றை ஏற்படுத்திருக்கலாம். ஆனால் ருத்ரனுக்கும் என்ன கட்டாயம்.. ? அவனுக்கு, அம்சவல்லிக்கும் எங்கே, எப்போது ஒரு பற்று ஏற்பட்டது?. என்னவோ தல உங்களுக்கு மட்டும் இதெல்லாம் புரிந்துவிட்டது..

Cable சங்கர் said...

என்ன தல ஒரு விவாதத்தை ஆரம்பிச்சிட்டேனா..?

எம்.எம்.அப்துல்லா said...

//நான் கடவுள் – எனக்குப் பிடிச்சதுப்பா//

நீ கடவுள்பா
:))

எம்.எம்.அப்துல்லா said...

//“ஒண்ணும் புரியல... ஆனாலும் ரெண்டரை மணிநேரம் ஒக்கார வெச்சுட்டாருடா” //

இதுதான் இந்த மரமண்டையோட விமர்சனமும் :)

மாசற்ற கொடி said...

"நான் கடவுள்" - பல பதிவர்களின் பார்வையில் பார்த்து விட்டோம். படம் பார்த்து
நாம் கடவுளா இல்லையா என அறிந்து கொள்ளலாம்.

அன்புடன்
மாசற்ற கொடி

Tech Shankar said...

Hi. Great.

ஜோ/Joe said...

//எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்.

திட்டும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமான புரிதலற்ற படமில்லை நான் கடவுள்.
//

சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.

குசும்பன் said...

எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்//

ஏகப்பட்ட பேர் இப்படிதானு ஊருக்குள்ள உலாவிக்கிட்டு இருக்கானுங்க, மற்றவர்களிடம் இருந்து தான் வேறுப்பட்டவன் என்பதை காட்ட, அல்லது தன் பார்வை உங்களை விட எல்லாம் உயர்ந்தது என்று காட்ட. அவர்களை பற்றியான உங்கள் கமெண்ட் நச்!

பட விமர்சனம் அருமை!

முரளிகண்ணன் said...

\\பாலா படத்தைப் பொறுத்தவரை... ‘இந்த மாதிரியெல்லாம் இருக்காது.. இவரு படம் வேறமாதிரி’ என்று ரசிகனை தன் தளத்தை நோக்கி இழுத்துவந்து உட்கார வைப்பதில் பாலா ஜெயிக்கிறார்\

நச்

\\
எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்.\\

பரிசல் டச்

கிரி said...

நீங்களாவது படம் ஓகே னு சொன்னீங்களே!

பதிவர் பிரியா அவர்கள் கூறியது தான் நினைவிற்கு வருகிறது.

ஆந்த்ரா ஹோட்டல் சென்று எக்ஸ்ட்ரா ஸ்பைசி ஆர்டர் செய்து விட்டு .சரவணபவன் மீல்ஸ் மாதிரி இல்லைன்னு சொன்னா யார் குற்றம்?

கார்க்கிபவா said...

//ஏகப்பட்ட பேர் இப்படிதானு ஊருக்குள்ள உலாவிக்கிட்டு இருக்கானுங்க, மற்றவர்களிடம் இருந்து தான் வேறுப்பட்டவன் என்பதை காட்ட, அல்லது தன் பார்வை உங்களை விட எல்லாம் உயர்ந்தது என்று காட்ட. அவர்களை பற்றியான உங்கள் கமெண்ட் நச்//

இதுல நானும் ஒருவனா தல?

கார்க்கிபவா said...

இந்தப் படம் புரியல. நல்லயில்லைனு சொல்றவங்க அதிமேதாவினு காட்டறதா அர்த்தம் இல்ல குசும்பரே. படம் சூப்பர் உனக்கு புரியலனு சொல்றவங்கதான் அப்படி.

கார்க்கிபவா said...

//ஆந்த்ரா ஹோட்டல் சென்று எக்ஸ்ட்ரா ஸ்பைசி ஆர்டர் செய்து விட்டு .சரவணபவன் மீல்ஸ் மாதிரி இல்லைன்னு சொன்னா யார் குற்ற//

அவரிடம் சொல்லுங்கள். படம் எக்ஸ்ட்ரா ஸ்பைசினு தெரிஞ்சுதான் போனோம். அதுக்குனு பச்சை மிலகாய சமைக்காம பச்சையாவே சாப்பிட எதுக்கு ஆந்திரா ஹோட்டலுக்கு போகனும்?

கார்க்கிபவா said...

//சில பேரை நமக்கு பிடித்து விட்டால். அவர்கள் தவறு செய்தாலும் சப்பைகட்டு கட்டுவோம். அது போலத்தான் நீங்கள் சொல்லியிருப்பது//

நீங்க நம்ம சைடு தல. அவங்க அப்பா அம்மா உறவ அறுத்தெரியத்தான் அனுப்பறாரு. அவங்க என்ன ஆனாங்க? படத்துல இருந்து எப்போ எஸ்கேப் ஆனாங்க? ரைட் விடுங்க

கார்க்கிபவா said...

மறுபடியும் படிச்சேன் சகா. நீங்க பாராட்டிய இசை, நடிகர்கள் தேர்வு, வசனம் முதலியவற்றை நானும் பாராட்டியிருக்கிறேன். குறை சொன்ன திரக்கதையைத்தான் நானும் சாடியிருக்கிறேன். மேலும் ஒளிப்பதிவு குறித்து ஒரு வரி கூடா எழுதாதது அதன் தோலிவியைத்தானே காட்டுகிறது? மோனோடான்சா படமெடுப்பதௌ நீங்களும் இடித்திருக்கிறீர்கள். என்ன, என் பதிவில் வார்த்தைகளை அப்படியே போட்டுவிட்டேன். கேபிள் சங்கர் சொன்னது போல நீங்க கொஞ்சம் பூசி மொழுகி சொல்லியிருக்கிங்க. மத்தபடி இருவரின் கருத்துகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றே எனக்கு தோண்றுகிறது

குசும்பன் said...

//இந்தப் படம் புரியல. நல்லயில்லைனு சொல்றவங்க அதிமேதாவினு காட்டறதா அர்த்தம் இல்ல குசும்பரே. //

ஐய்யா கார்க்கி நான் எங்கய்யா அப்படி இந்த படத்தை நல்லாயில்லைன்னு சொல்றவங்க அதிமேதாவின்னு சொல்லியிருக்கேன்.

படம் மட்டும் இன்றி மற்ற எல்லாவிசயத்துக்கும் பொருந்தும்படிதானே சொல்லி இருக்கேன்!

குசும்பன் said...

//நீங்க நம்ம சைடு தல. அவங்க அப்பா அம்மா உறவ அறுத்தெரியத்தான் அனுப்பறாரு. அவங்க என்ன ஆனாங்க? படத்துல இருந்து எப்போ எஸ்கேப் ஆனாங்க? ரைட் விடுங்க//

கடன் கொடுத்த சேட்டு பணம் வாங்க வரும் பொழுது எஸ்கேப் ஆயிட்டாங்க!

Athisha said...

நான் கடவுள் படம் நல்லாலைனு யாருங்க சொன்னா

நல்லாருந்தா நல்லாருந்திருக்கும்னுதான சொன்னாங்க..

(பின்னூட்டம் போட்டுட்டேன் என்னோட அடுத்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க- பதிலுக்கு பதில்)

Athisha said...

பின்னூட்ட அதிமேதாவித்தனம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்..
இந்த பின்னூட்டம் உங்கள் திரைபட விமர்சனத்திற்காக அல்ல. உங்கள் வலைதள விமர்சனத்திற்காக..


5ஆம் தேதி அவியலை போட்டுவிட்டு..நான் கடவுள் பர்த்துவிட்டுதான் அடுத்த பதிவை எழுதுவேன் என விரதம் இருப்பது கடவுளுக்கே பொருக்காது.

உங்கள் பதிவுகள் இயல்பாக தொடரட்டும்.

கோரிக்கையோ.. எதிர்ப்பார்ப்போ..சொல்லத்தெரியவில்லை ஏதோ ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள்.
:))

anujanya said...

லக்கியும் நீங்களும் ஒரு பக்கம். சங்கர் மற்றும் கார்க்கி மறுபக்கம். இடையில் மாதவராஜ். மொத்தத்தில் ரொம்ப வெறுப்பேத்துறீங்க - மும்பையில் இன்னும் வரவில்லை. வருமா என்று தெரியவும் இல்லை.

முரளி, குசும்பன், கார்க்கி பின்னூட்டங்கள் பதிவின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

//முரளி, குசும்பன், கார்க்கி பின்னூட்டங்கள் பதிவின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்ற//

இந்த நக்கல்தானே வேண்டாம்னு சொல்றேன். முரளி வழக்கம் போல “நச்” பரிசல் டச்” நு ரென்ஏ வார்த்தைதான் சொல்லியிருக்காரு. அதுல என்ன சுவார்ஸ்யம் தல? :)))))))))))))))))))))))))

குசும்பன் said...

// அதிஷா said...
நான் கடவுள் படம் நல்லாலைனு யாருங்க சொன்னா

நல்லாருந்தா நல்லாருந்திருக்கும்னுதான சொன்னாங்க..

(பின்னூட்டம் போட்டுட்டேன் என்னோட அடுத்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க- பதிலுக்கு பதில்)//

அப்படின்னா ஒவ்வொருத்தரும் எனக்கு 1 கமெண்ட் போட்டாலே ஒரு பதிவுக்கு 100க்குமேல வரும்மய்யா!

அதிஷா அண்ணே மைண்டில் வெச்சுக்கிறேன்!

குசும்பன் said...

ஸ்வாமி ஓம்கார் said...
கோரிக்கையோ.. எதிர்ப்பார்ப்போ..சொல்லத்தெரியவில்லை ஏதோ ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள்.
:))//

எதன் மீதும் ஆசை வைக்காமல் இருக்கும் சாமி ஓம்காரையே உங்கள் பதிவு மேல் ஆசைப்பட வைத்ததால் இனி நீங்களும் ஸ்ரீலஸ்ரீ பரிசல்கார் என்று அழைக்கப்படுவீர்களாக! ஆமென்!

கார்க்கிபவா said...

//ஸ்ரீலஸ்ரீ பரிசல்கார் என்று அழைக்கப்படுவீர்களா//

ஸ்ரீலஸ்ரீஜிங்கனக்கா சுவாமிகள்னு சொல்லுங்க தல

anujanya said...

கார்க்கி,

எப்படி பரிசல் எது எழுதினாலும் சுவாரஸ்யம் ஆகிறதோ, குசும்பன் என்ன கமெண்ட் போட்டாலும் சிரிப்பு வருகிறதோ, முரளி எதை மேற்கோள் காட்டி 'நச்' என்றாலும் சுவாரஸ்யம்தான் :)

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ கேபிள் சங்கர்

//அம்சவல்லி வேண்டுமானால் அவரை சாமி.. சாமி என்று பற்றை ஏற்படுத்திருக்கலாம். ஆனால் ருத்ரனுக்கும் என்ன கட்டாயம்.. ? //

ஐயா.. ருத்ரனுக்கு அம்சவல்லி மீது பற்றிருப்பதாய் படத்தில் சொல்லப்படவில்லையே..., பெற்றோர் மீதே பற்றற்றவன் அவன்.. அவர்கள் தன்மீது கொண்ட பற்றை அறுக்க அவர்களை எவ்வளவு மனச் சங்கடத்துக்குள்ளாக்குகிறான்.. அம்மாவிடம் அவன் கூறும் செய்யுளின் அர்த்தம் தெரிந்து வெறுத்து மகளுக்கு தாய் தண்ணி ஊற்றும் காட்சி மூலம் பெற்றோர் தன் மகன் மீது கொண்ட பற்றை அறுத்துவிட்டதாய்க் காட்டிவிட்டார்.

பூஜா.. இதற்கு முன்பே ஒருமுறை வந்து அழுதபோது இவன் கண்டுகொள்ளவில்லை. மறுபடி வருகையில் இவளுக்கு நான் தரும் மரணம் விடுதலை என்றபடி விடுவிக்கிறார்.

//சில பேரை நமக்கு பிடித்து விட்டால். அவர்கள் தவறு செய்தாலும் சப்பைகட்டு கட்டுவோம். அது போலத்தான் நீங்கள் சொல்லியிருப்பது,//

என்னைப் போயி இப்படிச் சொல்லலமா ஜி?

ரொம்பப் பிடிச்சிருந்தா குறைகளை சொல்லாம இருப்பேனே தவிர தப்பு செஞ்சா கரெக்டுன்னு சொல்லமாட்டேன். அது நண்பர்கள் கிட்ட மட்டும்.

இருங்க.. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க பதிவுல வந்து வெச்சுக்கறேன்.. :-))))))))

பரிசல்காரன் said...

//கிரி said...

நீங்களாவது படம் ஓகே னு சொன்னீங்களே!//

நெறைய பேர் சொல்றாங்க கிரி..

@ கார்க்கி

//அவங்க அப்பா அம்மா உறவ அறுத்தெரியத்தான் அனுப்பறாரு. அவங்க என்ன ஆனாங்க? படத்துல இருந்து எப்போ எஸ்கேப் ஆனாங்க? ரைட் விடுங்க//

உன் தங்கை வயசுக்கு வந்துட்டா வா’ என்று அழைக்கும் அம்மாவிடம் ஆர்யா கூறும் பாடலின் அர்த்தம் தெரிந்து அவனது அம்மா போய் விடுகிறார்கள். வீட்டில் மகள் ‘அண்ணன் வரலியாம்மா’ என்று கேட்க அம்மா சொல்லும் வசனங்கள் எல்லாம் சென்னைல கட்டா சகா?

பரிசல்காரன் said...

//அதிஷா said...

நான் கடவுள் படம் நல்லாலைனு யாருங்க சொன்னா

நல்லாருந்தா நல்லாருந்திருக்கும்னுதான சொன்னாங்க.//

து மனுஷ்ய நஹி!

உன்னையெல்லாம் ’கால்பைரவ்’தான் காப்பாத்தணும்!

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

//5ஆம் தேதி அவியலை போட்டுவிட்டு..நான் கடவுள் பர்த்துவிட்டுதான் அடுத்த பதிவை எழுதுவேன் என விரதம் இருப்பது கடவுளுக்கே பொருக்காது.//

ஸ்வாமிஜி.. நான் கடவுளை 6ம்தேதியன்றே பார்த்துவிட்டேன். (ஆஹா.. நல்ல அர்த்தம் வருகிறது!) வீட்டில் சிஸ்டம் தகராறு.. அலுவலகத்தில் வேலை என்பதால்தான் எழுத முடியவில்லை.

பரிசல்காரன் said...

//அனுஜன்யா said...

லக்கியும் நீங்களும் ஒரு பக்கம். சங்கர் மற்றும் கார்க்கி மறுபக்கம். இடையில் மாதவராஜ். //

நீயா நானா நடத்தலாம் போலருக்கே சார்.. நடுவரா வர்றீங்களா?

பரிசல்காரன் said...

@ ALL

என்ன சொன்னாலும் சில முகத்திலறையும் உண்மைகள் என்றொன்று இருக்கிறது. இந்தப் படத்தில் காட்டப்படும் முகங்கள் நமக்குள் தரும் அதிர்வுகளைத் தாங்கமுடியாததால் தான் பலருக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை.

ஆனால்.. அது நிஜம். மேக்கப்பில் இந்த மாதிரி காண்பித்தால் “ச்சே.. சூப்பர்டா” என்று பாராட்டும் நம் மனம், உண்மையில் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை ஏற்க மறுக்கிறது.

But Finally.. the real is real! and we've to face it!!!!!!!!!

Nilofer Anbarasu said...

//அகோரி என்பவர்கள் நரமாமிசம் உண்டு வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு. ஓரளவு உண்மையாயினும் இவர்கள் தாமாக உயிர்களை அழித்துக் கொல்வதாக எங்கும் சொல்லப் படவில்லை.//

படைத்தல், காத்தல், அழித்தல் வேலையை செய்யும் சிவனுக்கு வமதேவா, இசான சிவா, அகோர ருத்ரா என்று மூன்று முகம் உண்டு. வலது பக்கம் இருக்கும் முகம்தான் படைக்கும் சக்தி பெற்ற வமதேவா, சற்ற பெண்மை கலந்த முகம். நடுவில் இருக்கும் முகம்தான் சிவா, ஞானம் தரும் முகம். இடது புறம் இருக்கும் முகம் தான் அகோரா, அழிக்கும் சக்தி பெற்றது. இதில் சிவனின் மூன்றாம் முகமான அகோர ருத்ராவை வணங்குபவர்கள் அகோரி என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் தாமாக உயிரை கொள்ளமாட்டார்கள் ஆனால் இயற்கையாக இறந்த உடலை பூஜை செய்து அப்படியே சாப்பிடுவார்கள்.
அதை பற்றிய ஒரு வீடியோ
இங்கே

பரிசல்காரன் said...

@ Nilofewr Anbarasu

WoW! Great n thanks..

Cable சங்கர் said...

//என்னைப் போயி இப்படிச் சொல்லலமா ஜி? //

சும்மா கூட செல்லமா சொல்லக்கூடாதா..? ஆனாலும் நீங்க ரொம்ப சென்சிடிவ்ண்ணா..

(என்னை வேற ரொம்ப பிடிக்குமாம்.. எதுக்கும் ஐஸ் வச்சிருவோம்)

M.Rishan Shareef said...

நல்லதொரு விமர்சனம் !

அசோசியேட் said...

பரிசல்காரன்-ங்க ! நல்லா விமர்சனம் செஞ்சுட்டீங்க. இன்னும் இங்க எங்க குழுமம் படம் பாக்கலை. (அதாவது கிடைக்கலே .ஹீ!ஹீ!)

Thamira said...

என்ன ஒரே பின்னூட்ட களேபரம் நடந்துகினுருக்கிற மாதிரி தெரியுது.. எதுக்கும் சேஃப் சைட்'வழக்கம் போல் கலக்கல்'னு சொல்லிட்டு எஸ்ஸாகிவிடுகிறேன்..

Truth said...

நான் பார்த்த படங்களில் இது ஒரு quality movie ன்னு சொல்லுவேன். எனக்கு தெரிஞ்சி ஒவ்வொரு frameமும் பாத்து பாத்து எடுத்திருக்காரு.

இப்படி பட்ட படங்களையெல்லாம் விஜய், அஜித், பரத், பேரரசு எல்லாம் பாக்கவே மாட்டாங்களா? நாங்கெல்லாம் இருக்கோம், எங்கள யாரும் மறந்திடக்கூடாதுன்னு தான் இவங்க படம் எடுக்றாங்கன்னு தொனுது.

பாலா, தன் கையில் நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் எடுப்பது போல் தெரிகிறது. நல்ல விஷயம்.

ஆதவன் said...

hi really nice article.. we have to appreciate good movie...

if possible please provide your mobile no. to thamizhstudio@gmail.com

thanks,
www.thamizhstudio.com

Unknown said...

//இப்படி பட்ட படங்களையெல்லாம் விஜய், அஜித், பரத், பேரரசு எல்லாம் பாக்கவே மாட்டாங்களா?//

இவுங்க எல்லாம் படம் பார்த்து (director, hero)பாராட்டி பெயர் எடுக்கத்தான் லாயக்கு!

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
இந்தப் படம் புரியல. நல்லயில்லைனு சொல்றவங்க அதிமேதாவினு காட்டறதா அர்த்தம் இல்ல குசும்பரே. படம் சூப்பர் உனக்கு புரியலனு சொல்றவங்கதான் அப்படி.
//

kaarki,
pirichi meyarapa... kalakal comment :)

IlayaDhasan said...

எனக்கு என்ன வருத்தம்னா கடவுளே இல்லைங்கற மாதிரி கொண்டு போய்ட்டு கடைசியில் பூஜா வசனத்தில் ...என்னை நம்புங்கள் பாவங்கள் கரையும்னும் ஒருத்தர் சொன்னார் ..நான் என்ன பாவம் செஞ்சேன் , இந்த பாடு படுறேன் ...எல்லா புகழும் இறைவனுக்கே சொல்ராங்களே ...என்ன இப்படி படச்சது தான் அந்த இறைவனுக்கு பெருமையா? என்று இரண்டு மத கடவுளை மட்டும் சாடி விட்டு ஒரு மாதிரி முழுமை இல்லாம வசனத்தில் கோட்டை விட்டாரு ஜெமோ ...கடவுள் ஒரு பம்மாத்து வேலை , எந்த மதமா இருந்தாலும் சரி அப்படின்னு கொண்டு போக வேண்டியது ...ஒட்டு மொத்தமா எல்லா மதத்தையும் குற்றம் சொன்ன அப்புறம் ஆகுற கொஞ்ச நஞ்ச வசூலும் கேட்டு போகுமின்னு பாலா அல்லது தயாரிப்பாளர் நெனச்சு கை விட்டுடன்களோ ??

Tech Shankar said...

அருமைங்க

நாடோடிப் பையன் said...

Nalla review.
The picture on your post is very interesting.

narsim said...

பரிசல்.. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. முதல் முதலாக படம் நல்லா இருக்குனு இந்த படத்துக்கு வந்த விமர்சனம் உங்கதுதான்.. படத்த பார்த்துட்டு பதில் சொல்றேன்..

Kumky said...

படம் நேற்றிரவுதான் பார்க்க முடிந்தது.
அஹம் ப்ரம்மாண்டம்....ப்ரமாதம்.
அனேக விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியிருப்பதால் எப்படியாகிலும் ஒரு பதிவாகவே போட்டுவிட ஆவலாயிருக்கிறது.

பரிசல்காரன் said...

//எப்படியாகிலும் ஒரு பதிவாகவே போட்டுவிட ஆவலாயிருக்கிறது.//

கும்க்கி.. அதைச் செய்யுங்க முதல்ல. எழுத சோம்பல்படற உங்களை எழுத வைச்சதே பாலாவோட வெற்றியாக் கொண்டாடலாம்!

Senthil said...

Great Review

Senthil. Bahrain (Tirupur)

☼ வெயிலான் said...

நல்ல! விமர்சனம்.

பரிசல்காரன் said...

வெயிலான் said...

நல்ல! விமர்சனம்.//

அதைச்சொல்ல ரெண்டு நாள் வேணுமாய்யா ஒமக்கு?

prabhu said...

உண்மையில் மிகச்சிறந்து விமர்சனம் உங்களுடையது, ஏனெனில் பாலாவின் பலம், பலவீனம் இரண்டையும் சொல்லியிருக்கிறிர்கள்... பிச்சைகாரர்களின் உணர்வுகளை பதி செய்ய எந்த இயக்குனருக்கு தைரியம் வரும் சொல்லுங்கள்... பாலா மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபணம் செய்துள்ளார்... "வாழ்த்துக்கள் பரிசல்காரன் அவர்களே ...."

பிரபு ஜெ

prabhu said...

உண்மையில் மிகச்சிறந்து விமர்சனம் உங்களுடையது, ஏனெனில் பாலாவின் பலம், பலவீனம் இரண்டையும் சொல்லியிருக்கிறிர்கள்... பிச்சைகாரர்களின் உணர்வுகளை பதிவு செய்ய எந்த இயக்குனருக்கு தைரியம் வரும் சொல்லுங்கள்... பாலா மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபணம் செய்துள்ளார்... "வாழ்த்துக்கள் பரிசல்காரன் அவர்களே ...."

பிரபு ஜெ

Unknown said...

மிகச் சரியான விமரிசனம்..

என் மன உணர்வுகளை அதே அலைவரிசையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்
நண்பரே..

வாழ்த்துக்கள்..

Perumal said...

IT IS REALLY SUPER.A PERFECT WORLD CLASSICAL CINEMA STARTS FROM DASAVATHARAM AND PASSES THROUGH NAN KADAVUL.

butterfly Surya said...

நிறைய எதிர்பார்த்து சென்றால் சொதப்பலாகத்தான் தெரியும். பல பதிவுகளை படித்துவிட்டு அரைமனதாகத்தான் பார்க்க சென்றேன். ஆனால் பாலாவின் ரசிகன் அல்ல நான்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என எத்தனை பேட்டிகளை நம்பி ஏமாந்தது போதும்.

இன்று பாடல் பதிவுடன் ஆரம்பம் என்று பாண்டிபஜார், கோடம்ப்பாக்கம் சுவரெல்லாம் ஒட்டிய பல போஸ்டர்களை பார்ந்து பார்க்க வேண்டும் என எண்ணி நிறைய செலவு செய்துவிட்டு படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ஆனால் பாலா ..??? அப்படி செய்யவில்லை என்றுதான் கூற முடியும். எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை.

பாலாவின் மற்ற மூன்று படங்களை விட இதில் அழுத்தம் அதிகம். ஒருவேளை ஜெயமோகனின் வசனமும் ராஜாவின் இசையும் ஆர்த்தரின் கைவண்ணமும் நன்றாக இருந்ததால் இருக்கலாம்.

சிறப்பு சப்தம் ராஜீ ..வாவ்.. Xlent performance. உலக படங்களுக்கு டெக்னீஷியன்கள் பலர் சென்னைகாரர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

Ganesh Kumar has won an award for his soundtrack for the Hollywood flick “9 Lives of Mara” இதில் என்ன சிறப்பு இவர் சென்னையை சேர்ந்தவர் மட்டுமல்ல. மேற்கு மாம்பலத்தில் உட்கார்ந்து கொண்டே இந்த திரைப்ப்டத்திற்கு சவுண்ட் மிக்சிங் செய்தவர். விருது வாங்க மட்டுமே அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

இது போல பலர் இருக்கிறார்கள். நாம் கண்டு கொள்ளாத பலரை ஹாலிவுட் அணைத்து அவார்டு வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள்.

ஒரு தேசிய விருது கூட கொடுக்காத கண்ணதாசனையும் நாகேஷ் அவர்களையும் பெருமை படுத்தியவர்கள் இந்தியர்கள்..

வித்யாசமாகவும் யதார்த்தமாகவும் இருக்கவேண்டும் என நினைக்கும் மிகச்சிலரையும் நாம் கண்டுகொள்ளாவிட்டால் சுந்தர்.சி யின் 100வது படம் வெகுதூரத்தில் இல்லை. { Minimum Gurantee }அதை டைரக்ட் செய்ய போவது பேரரசுவாக இருந்துவிட்டு போகட்டும். அதில் தமிழ் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்.

வாழ்க தமிழ் சினிமா…