நண்பர் ஒருத்தர் அந்தப் பெட்டிக் கடைக்குப் போய் நின்று கேட்டார்.
"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ஒரு நிஜாம் பாக்கு குடுங்க"
வேறு யாருக்கோ, எதுவோ கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர், அதை முடித்து இவர் பக்கம் திரும்பி...
"வாங்க.. என்ன கேட்டீங்க?"
"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ஒரு நிஜாம் பாக்கு"
"சிசர் ஃபில்டர்.." என்றபடி பாக்கெட்டை எடுத்து.. "சிசர் ஃபில்டர் எவ்வளவு?"
"ரெண்டு"
"ரெண்டு சிசர் ஃபில்டர்...ம்ம்.. இந்தாங்க.. வேறென்ன கேட்டீங்க? பபிள்கம்மா?"
"பபிள்கம் இல்ல. நிஜாம் பாக்கு"
"பபிள்கம்தானே கேட்டீங்க?"
"இல்லீங்க. பாக்கு"
"ஓ! பாக்கா? என்ன பாக்கு?"
"நிஜாம் குடுங்க"
"நிஜாம் பாக்கு"என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தேடி அந்த ஜாடியை எடுத்து "நிஜாம் பாக்கு எவ்வளவு?"
"ஒண்ணு குடுங்க"
"ரெண்டு வாங்கிக்கோங்க"
"ஒண்ணு போதுங்க.."
"ரெண்டு வாங்கிக்கோங்க. சில்லறைக்கு சரியா இருக்கும்ல"
இவர் வெறுத்துப்போய் "சரி குடுங்க"
"இந்தாங்க"
வாங்கிக்கொண்ட இவர் பத்து ரூபாய் எடுத்து நீட்ட.
"என்ன வாங்கினீங்க?"
"ரெண்டு சிசர்ஃபில்டர்.. ரெண்டு நிஜாம் பாக்கு"
"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ரெண்டும் ரெண்டும் நாலு... அப்பறம்?"
"யோவ்.. பாக்கியே வேணாம் வெச்சுக்கய்யா" என்றபடி ஓடி வந்துவிட்டார் இவர்!
இது ஒரு சின்ன இடத்துல நடக்கற சின்ன உதாரணம். ('சின்ன' உதாரணமா!) எத்தனை இடத்துல இப்படி தேவையே இல்லாம, எக்கச்சக்கமா பேசிகிட்டிருக்கோம் நாம!
எங்க ஃபேக்டரில ஒரு செக்ஷன்ல வேலை செய்யற ரெண்டு பேருக்குள்ள பயங்கர சண்டை. ஃபேக்டரியிலிருந்து நூறடி தூரத்துல இருக்கற ஆஃபீஸ் பில்டிங்குக்கு அவங்க சண்டை போடற சத்தம் கேட்டது.
என்ன சண்டைன்னு எங்க எம்.டி.ரூம்ல கூப்ட்டு விசாரிச்சோம். ரெண்டு பேரும் வந்தாங்க. ஒருத்தன் ஒண்ணுமே பேசல. ஒருத்தன் 'அவன் அந்த ஆர்டர்ல அந்தத் தப்பு பண்ணினான்.. இந்த ஆர்டர்ல இந்தத் தப்பு பண்ணினான்.. அவங்ககிட்ட அப்படிச் சொல்லியிருக்கான்.. இவங்ககிட்ட இப்படிச் சொல்லியிருக்கான்' னு ஆரம்பிச்சு அவனைப் போட்டு இஷ்டத்துக்கு கம்ப்ளெய்ண்ட் பண்ண ஆரம்பிச்சான். மூச்சு விடாம பேசிகிட்டே இருந்தான். எங்க எம்.டி-வேற அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டே இருக்க, இவனுக்கு உற்சாகம் பொறுக்கல.
எல்லாத்தையும் முடிச்சுட்டு எங்க எம்.டி. பேசாம இருந்தவன்கிட்ட திரும்பி, "அவன் சொல்றதெல்லாம் நிஜமா?"ன்னு கேட்டார்.
இவன் பொறுமையா சொன்னான். "அவர் சொல்றது எல்லாம் நிஜமில்லைங்க. ஆனா கொஞ்சம் உண்மைதான். அவர் சொல்றப்போதான் நான் இந்தந்த தப்பு பண்ணியிருக்கேன்னு எனக்கே தெரிஞ்சதுங்க. எல்லார் முன்னாடியும் ஸாரி கேட்டுக்கறேன். இவர் அதையெல்லாம் அப்பப்பவே சொல்லி என்னை எச்சரிச்சிருக்கலாம். இருந்தாலும் இப்ப ஒண்ணும் தப்பில்ல"ன்னு சொன்னவன் அவனைக் கம்ப்ளெய்ண்ட் பண்ணினவன்கிட்டயே திரும்பி "ஸாரிங்க"ன்னு மட்டும் சொல்லி டக்னு ரூமை விட்டு வெளில போய்ட்டான்.
எங்க எம்.டி. 'பாவம்ப்பா. உணர்ந்துட்டான் பாரு'ன்னு உருகீட்டார். அதுவுமில்லாம கம்ப்ளெய்ண்ட் பண்ணினவனைப் பத்தி 'என் முன்னாடியே இவ்ளோ பேசறான் பாருங்க"ன்னு சொன்னார்.
பின்னாடி நான் கேள்விப்பட்டது எம்.டி. ரூம்ல ஒண்ணுமே பேசாம இருந்து ஸாரி கேட்டவன்தான் செக்ஷன்ல அளவுக்கதிகமா பேசி அலப்பறை பண்ணுவானாம். அங்க அவ்ளோ பேசறவன் எம்.டி ரூம்ல அமைதி வேஷம் போட்டு நல்லபேர் வாங்கீட்டான்! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு வேறொரு செக்ஷனுக்கு இன்சார்ஜ் தேவைப்பட்டப்போ இவனுக்கு அடிச்சது லக்!
ஆக, எங்கே எவ்வளவு பேசணும்கறதும் முக்கியம்.
எங்கே பேசணும்கறதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் வேணும்னா இதைச் சொல்லலாம்...
நாக்கைப் பார்த்து பல் சொல்லிச்சாம். ‘நான் தான் உன்னை அரண்போல நின்னு பாதுகாக்கறேன். நான் இல்லீன்னா உனக்கு பாதுகாப்பில்லை’ன்னு சும்மா டீஸ் பண்ணிகிட்டே இருந்ததாம்.
நாக்கு ஒண்ணுமே பேசாம இருந்து, ஒரு பெண் வந்தப்ப ‘சூப்பர் ஃபிகர்’ன்னுச்சாம். அந்தப் பொண்ணு விட்ட அறைல ரெண்டு பல்லு கழண்டுச்சாம்.
நாக்கு ‘என்ன? பார்த்தியா? சும்மா லொள்ளு பேசக்கூடாது.. சரியா?’ன்னு எச்சரிச்சதாம்!
அதுனால அளவாப் பேசுங்க.. எடம் பார்த்துப் பேசுங்க..!
டிஸ்கி: டெம்ப்ளேட் மாத்தினதைச் செக் பண்ண இந்த போஸ்ட். மொக்கையா இருந்தா மன்னிச்சுடுங்கப்பா!
47 comments:
டெம்ப்ளேட் சூப்பர்.. அதுமட்டுமிலாம பதிவும் தேவையானது தான் பரிசல்.
நா சொன்னது சரியா போச்சுது..
கேபிலை முந்த முடியாது போல..
இனி தினம் ஒரு டெம்ப்ளேட் எதிர்பார்க்கலாமா...?
டெம்ப்ளேட் நல்லா இருக்கு பரிசக்கார அண்ணே.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எழுதினது.
"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே
கொட்டி விட்ட மொக்கைக்கு
பின்னூட்டத் தயக்கமா?
மொக்கை பதிவுலகச் சாபமா?"
-சர்வேசன்
;)
செல்லுல கூட அளவாத்தான் பேசனுமா..?
பாருங்க எனக்குன்னு வர்ர சந்தேகத்த...
ஊப்ஸ், விளம்பரம் போட மறந்துட்டேன்.
கவுஜ இடம்பெற்ற பதிவு:
http://surveysan.blogspot.com/2009/02/blog-post_17.html
சரி! சரி! அளவாப் பேசுங்க பரிசல்! ;)
வார்ப்புருவெல்லாம் நல்லா இருக்கு. வேர்ட் பிரஸ்காரங்களும் பின்னூட்டம் போடற மாதிரி ஆப்ஷன் மாத்தலாமே?
இப்படி நேரம் காலம் இல்லாம செல் பேசி...சென்னைல ஒருத்தர் காது வீங்கிப்போய்...ஹை கோர்ட் படியேறிட்டார்.
அப்புறம் செல்லே எடுக்கமாட்டேன்னு சத்யம் பண்ணபொறவுதான் சமாதான் ஆனார்.
Me the 10 :):)
Template super.. :))
:-))
என்ன சார் புதுசா டெம்ப்ளட் எல்லாம் போட்டு அசத்துறீங்க ...
சரி இனிமே ஒரு ஸ்கேல் கூடவே வச்சுக்கிட்டு பேசுறோம்.
திரு பரிசல்,
கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்ததுற்கு பாராட்டுக்கள்.
வார்ப்புரு நல்லா இருக்கு ஆனா லைட்கலரா பொட்டிருக்கலாம்.
எங்க கிட்ட யோசனை கேட்டா இப்படிதான் சொல்லுவோம் :))
இரண்டும் சூப்பர்
என்னா கருத்து!! என்னா கருத்து....
//
டெம்ப்ளேட் மாத்தினதைச் செக் பண்ண இந்த போஸ்ட்.
//
டெம்ப்ளேட் சூப்பர்..
//
மொக்கையா இருந்தா
//
இதுல சந்தேகம் வேறயா?
//
மன்னிச்சுடுங்கப்பா!
//
ஆச்சு.. ஆச்சு..
//வார்ப்புருவெல்லாம் நல்லா இருக்கு. வேர்ட் பிரஸ்காரங்களும் பின்னூட்டம் போடற மாதிரி ஆப்ஷன் மாத்தலாமே?//
வெயிலான்..
நாங்க என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம்?
என்ன பண்ணனும் அதுக்குன்னு சொல்லுங்கப்பா!
முதல்ல கைய குடுங்க. டெம்ப்ளேட் ரொம்ப அருமையா இருக்கு. kudos to whoever did it.
பதிவும் அக்மார்க் உங்க பதிவு தான். அனுபவங்கள் முன் எந்தக் கற்பனையும் நிற்க முடியாது.
அனுஜன்யா
:)
(நீங்க அளவாப் பேச சொல்லிட்டீங்க...அதுனால வெறும் ஸ்மைலி மட்டும் போட்டுக்கிறேன்)
.
(ஆமா அண்ணன ரிப்பீட்டிகறேன்)
மொக்க பதிவுக்கு மொக்கயா பின்னூட்டம் போடலாமில்ல...
அப்புறம் இவிங்கள வச்சுகிட்டு என்னய்யா பண்றதுன்னு பொலம்ப கூடாது.
/*டிஸ்கி: டெம்ப்ளேட் மாத்தினதைச் செக் பண்ண இந்த போஸ்ட். மொக்கையா இருந்தா மன்னிச்சுடுங்கப்பா!*/
அட, செக் போஸ்ட்டுன்னா இதானா...!?
அடப்பாவிகளா...
என்கிட்டே லாரிய மறிச்சு பைசா கேக்குற இடம்னு சொல்லி வச்சிட்டாங்களே......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
/*மொக்க பதிவுக்கு மொக்கயா பின்னூட்டம் போடலாமில்ல...
அப்புறம் இவிங்கள வச்சுகிட்டு என்னய்யா பண்றதுன்னு பொலம்ப கூடாது.*/
ஹேய்.... ஹேய் .... நானும் ஆட்டத்திற்கு வரேனே.....
ஒரு பரிசை ஓபன் பண்ற த்ரில், சந்தோசம் எல்லாம் இருக்கு - இந்த " புதிய முகத்தில்" - உள்ள இருக்குற பரிசலின் பரிசும் அளவா - அருமை !
அன்புடன்
மாசற்ற கொடி
டெம்ப்ளேட் பேக்ரவுண்ட் கலர் மட்டும் லைட் கலராக மாற்றினால் இன்னமும் அழகாக இருக்கும்.
ஆவன செய்யவும்.
பதிவும் டெம்ப்ளேட்டும் சூப்பர்.
தலைப்பைப் பார்த்துட்டு என்னைப் பத்தி எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன்.
சாரிங்க... பின்னூட்டத்துல கிகிகி போட மறந்துட்டேன்.
@ ரமேஷ் வைத்யா
எக்ஸலண்ட் டைமிங் அண்ணே!!
இப்பதான் எப்ப பார்த்தாலும் என்ன பேச்சுன்னு எங்க மேனேஜர் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு வந்து இங்க வந்து பார்த்தா .......:)
இந்த டெம்ப்ளேட்டை மிகவும் கண்டிக்கிறேன்.
காரணம்:
பிப்ரவரி மாதம் முடிய முழுசாக பதினொரு நாட்கள் இருக்கையில் இம்மாத பதிவர் என்ற அறிவிப்பும் அடியேனின் புகைப்படமும் காணாமல் போய்விட்டது.
தங்களது பதிவில் இடம்பெற்ற அந்த 'மகா நடிகனை' அடுத்த பதிவர் சந்திப்பிற்கு அழைத்துவரும்படி தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன்.
புது டிசைன்..
புது கலர்..
கலக்கறீங்க பரிசல்..!!
Super appu
கவன சிதறல் கிறைபாடுள்ளவர்கள் நாட்டில் அதிகம்(நான் உட்பட)
அவர்களை பதிவுக்கு பயன்படுத்தும் போது நகைச்சுவையை தூக்கி அவரது குறையை வெளிதெரியாமல் பார்த்து கொள்ளவும்
//டெம்ப்ளேட் மாத்தினதைச் செக் பண்ண இந்த போஸ்ட். மொக்கையா இருந்தா மன்னிச்சுடுங்கப்பா!//
மற்ற மொக்கைகளுக்கு இது பரவாயில்லையே!
அளவு:)
டெம்ப்ளேட் சூப்பராக இருக்குது அண்ணா.ஆனால் புரொபைல் புகைப்படங்கள் தெரியவில்லை என நினைக்கிறேன்.
பதிவு நன்றாக இருந்தது அண்ணா..
அருமை! (அளவு முக்கியம் அமைச்சரே)
Nalla post! How did you set the template? Very nice!
Please give info in a new post. The commentators profile pictures are not visible.
\\குசும்பன் said...அருமை! (அளவு முக்கியம் அமைச்சரே)//
வழிமொழிகிறேன்..
//ஆக, எங்கே எவ்வளவு பேசணும்கறதும் முக்கியம்.//
மனசில வச்சிக்கிறேன்.......டெம்பிளேட் பின்னுது
பரிசலு
நல்லாத்தான் இருக்குது டெம்ப்ளேட்டு
ஆனா சைடுலே இருக்குற ஆட்டோ ஸ்டைப்பர் கலர்
சரி செய்யலாம்.
நடுவுலே இருக்குற ஸ்கீரின் பிரிண்ட் சூப்பரு.
,
பதிவு மேட்டர் ஓகே.
template சூப்பர்.
ஆரம்பக்கதையை எப்போதாவது நான் அனுபவிக்கிறதுதான்.. இங்கே படிக்கையில்.. ROTFL..
சிரித்து உருண்டேன்.. தடங்கலேயில்லாத எழுத்து பரிசல் உங்களோடது.! உங்கள் வெற்றியின் ரகசியம் இதுதானோ.?
Post a Comment