Wednesday, March 4, 2009

அவியல் 04.03.09 – 200ம் 250ம்...!




(பேட், ஹெல்மெட்டுக்கு பதிலா கீபோர்ட், மௌஸை வெச்சுட்டு ரெண்டுமூணு ஸ்டில்ஸ் எடுத்துப் பார்த்தேன். எனக்கே சகிக்கல. அதனால நம்ம சச்சின்!)


நேற்றைக்கு என் வலைப்பூவை பின்தொடரும் ஃபாலோயர் லிஸ்ட் 200ஐத் தாண்டியது. மிகவும் கௌரவமாகவும் நெகிழ்வாகவும் உணர்கிறேன். நேற்றைய பின்னூட்டத்தில் வாழ்த்திய சிலர் 250 பதிவுகள் என்று வாழ்த்தியபோதுதான் கவனித்தேன்.. இந்தப் பதிவு 250வது பதிவு. எனது 250வது பதிவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். எந்திரன் ஷூட்டிங்கில் பிஸியாம். ‘ப்ளீஸ் கிருஷ்ணா.. நான் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டுங்கறது வெளீல தெரிய வேண்டாமே” என்று வேறு சொல்கிறார். ம்ம்ம்.. என்ன செய்ய.. போனாப் போகுதுன்னு அவியலே போட்டுடலாம்னு முடிவு பண்ணி.. இதோ...!

200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும். வாட்டர் தெரபி ஈஸ் பெஸ்ட்.. யு நோ?

**********************

மகள்களின் ஸ்கூலில் ஆண்டுவிழா. முடித்து வெளியே பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தபோது எனக்கு முன்னால் ஒரு தாய், அவரது மகளை அடித்ததற்கு கணவன், ‘ஏய்.. எதுக்கு புள்ளயப் போட்டு அடிக்கற?’ என்று கேட்டார்.

“சும்மா இருங்க. உங்களுக்கென்ன தெரியும்? அந்தக் கார் எவ்ளோ வேகமா போச்சு.. இவ பாட்டுக்கு ஓடறா?”

“அதுக்கு அடிச்சா சரியாப் போச்சா?”

இந்த இடத்தில் இடைமறித்தார், கணவன் வாகனத்தை எடுத்து வர காத்திருந்த இன்னொரு பெண்.. அவர்கள் குடும்ப நண்பியாய் இருக்க வேண்டும்.

“சும்மா இருங்க. உங்களுக்கெல்லாம் நாங்க அடிக்கறதுதான் தெரியும். எதுக்கு அடிக்கறோம்னு தெரியாது. அடிச்சா அதுல எவ்ளோ பாசம் இருக்குன்னு எங்களுக்குத்தான் தெரியும்”

“அப்போ அடிச்சா பாசம் ஜாஸ்தின்னு சொல்றீங்களா?”

“நிச்சயமா”

உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..

அவரது மனைவி சொன்னார்...

“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”

அவியலுக்கு ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷத்தோடு நான் எஸ்கேப்பானேன்!

******************************

ஏர்டெல்லின் புதிய விளம்பரம் பற்றி எழுதலாம் என்றால் ஏற்கனவே இந்த வார காக்டெயிலில் கார்க்கி எழுதிவிட்டார். கலக்கலான விளம்பரம் அது. ‘இந்தக் குழந்தைய விட்டுட்டு அவங்கப்பனுக்கு டெல்லி போகாட்டிதான் என்ன?’ என்று கேட்கவைத்தது.

இன்னொரு அசத்தல் விளம்பரம்... மிரிண்டா. தன்னை, பெண் பார்க்க வந்த பையனின் அப்பா பாடத் தெரியுமா என்று கேட்க.. வீணை எடுத்து வந்து.. அழகாக சுருதி பிடித்து... டமீலென்று ‘யம்மாடி.. ஆத்தாடி..ஒன்ன எனக்குத் தரியாடி’ என்று டப்பாங்குத்து குத்துகிறார். அசினின் நடிப்பு பிரமாதம். அதைவிட, அதை மாப்பிள்ளை ரசிப்பதாக காட்டிய க்ரியேட்டிவிட்டி அதைவிட பிரமாதம். (அவரு முகத்தைப் பாருங்க... அவ்ளோ ரசிப்பார்)

அதோடு நிற்காமல்.. ‘அடுத்து ஆடத் தெரியுமான்னுதானே கேப்பீங்க’ என்றுவிட்டு எழுந்து போடுகிறார் பாருங்கள் ஒரு ஆட்டம்....

அலப்பறை!

*******************

செல்ஃபோனில் SMS அடிக்க நான் எப்போதுமே T9 டிக்‌ஷனரியைத்தான் பயன்படுத்துவேன். மிகவும் வேகமாகவும், சுலபமாகவும் அடிப்பேன். ஒரு வார்த்தையை அடிக்க, அந்தந்த எழுத்துகள் இருக்கும் எண்களை ஒருமுறை அழுத்தினாலே.. வார்த்தைகளைக் கோர்க்கும். ஒரே எழுத்துக் கோர்வையில் பல வாசகங்கள் இருந்தால்.. ஸ்டாரை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!

ஒரு க்ர்யேடிவிட்டிக்காகத்தான் குறிப்பிட்டேன். யாரும் திட்டித் தீர்த்துடாதீங்கப்பூ.. நான் பச்சப்புள்ள...

***************************

அண்ணே - எம்.எம்.அப்துல்லா அனுப்பிய சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகம். ராமானுஜம் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பல விஷயங்களை பதிவு செய்த இப்பேர்ப்பட்ட புத்தகம் என்ன விலை இருக்கும் (நம்ம புத்தி!) என்று பார்த்தால் ‘த.மு.எ.ச. 11வது மாநில மாநாட்டிற்காக எம்.எம். அப்துல்லாவும் அவரது தோழர் பிரகதீஸ்வரனும் இலவசமாக வழங்கியது.. விற்பனைக்கல்ல’ என்றிருந்தது!

அதில் இருந்து ஒரே ஒரு சொற்சித்திரம்....

பிரிவினையின்போது ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க ஒரு கூட்டம் செல்ல.. அந்தக் கூட்டத்திலிருந்த ஒல்லியான மனிதன் ‘இந்த வீட்டில் நிறைய செல்வங்கள் இருக்கின்றன. பொறுமையாக நாம் கொள்ளையடிதுப் பிரித்துக் கொள்வோம்” என்கிறான். கூட்டம் ஆர்ப்பரித்து அவனைப் பின்பற்றுகிறது. இது இங்கே இருக்கிறது.. இதன் விலை இவ்வளவு என்றெல்லாம் கூறியவாறே அவன் அந்தக் கூட்டத்தை வழிநடத்துகிறான். எல்லாம் முடிந்து அவனை ‘ஆமா.. நீ யார்?’ என்று கேட்க அவன் சொல்கிறான்.

“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்”

*************************

பதிவுலகுக்கு வந்து நான் எழுதாமல் தள்ளித் தள்ளிப் போவது இளையராஜாவுடனான எனது நெருக்கத்தைத்தான். (நேரிலல்ல.. பாடல்கள் மூலம்) ரகுமான் ஆஸ்கார் வாங்கியபோது அவருக்கு (ராசாவுக்கு) ஒரு கடிதம் மாதிரி ஒன்று எழுதி... முடிக்காமல் வைத்திருந்தேன். ‘நம்ம தமிழன் ஒரு அவார்ட் வாங்கிருக்கான்யா.. நீங்க கூப்ட்டு பாராட்டினா நல்லா இருக்கும்ல? எங்களுக்கிருக்கற சந்தோஷம் உங்களுக்கில்லையா ஐயா?” இப்படியெல்லாம் போகும் அந்தக் கடிதம். ஏனோ.. பதிவிடவில்லை. நேற்று சர்வேசனின் இந்தப் பதிவைப் படித்ததும் மிக மகிழ்ச்சியுற்றேன்!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

******************

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் பாடல்களில் யுவன் பாடிய ‘கடலோரம் ஒரு ஊரு' ஹிட். ஆனால் எனக்கு அதைவிட வேல்முருகன் என்பவர் பாடிய ‘என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது. என்ன ஒரு சோகமான பாடலுக்கு, என்னா ஒரு டப்பாங்குத்து அடி. YUVAN IS BACK என்று சொல்லத் தோன்றியது.

பலரைக் கூப்பிட்டு இந்தப் பாடலைப் பகிர்ந்துகொண்டபோது பலருக்கும் இந்தப் பாடல் இருப்பதே தெரியவில்லை. எல்லாரும் 'நெட்ல இல்லியே' என்கிறார்கள். அப்புறம்தான் பார்த்தேன் நெட்டில் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட உரலில் மட்டும்தான் கிடைக்கிறது என்றார் நண்பர் கார்க்கி.

ஒரிஜினல் கேஸட் வாங்குங்கப்பூ.. சூப்பர் பாட்டு மிஸ் பண்ணாதீங்க!

**********************
சங்கமம்ல ஏதோ போட்டியாம். பூந்து விளையாடணும்னு தோணுது. நானும் களத்துல இறங்கறேன். தலைப்பு கல்லூரியாம். கதை, கவிதை, கட்டுரை, அனுபவம், புகைப்படம், குறும்படம் எல்லாம் அனுப்பலாமாம். இதோ லிங்க்.

ஸ்டார்ட் மீஜிக்....

52 comments:

கணினி தேசம் said...

Me the firstu!!

கணினி தேசம் said...

200 பேரை பின்தொடர வைத்தமைக்கும்,
250 முத்தான பதிவுகளை எங்களுக்கு கொடுத்தமைக்கும்

மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் பரிசல்!

கணினி தேசம் said...

//200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும். வாட்டர் தெரபி ஈஸ் பெஸ்ட்.. யு நோ? //

ரொம்ப தாராள மனசுய்யா உங்களுக்கு.

கணினி தேசம் said...

//“அப்போ அடிச்சா பாசம் ஜாஸ்தின்னு சொல்றீங்களா?”

“நிச்சயமா”

உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..
//

வீட்டுக்கு பொய் யாரு யாருமேல அதிகம் பாசத்த காமிச்சாங்களோ!!
:-)))))

பிரேம்ஜி said...

வழக்கம் போல சுவையான அவியல்.. கலக்குங்க..

கணினி தேசம் said...

அதிகாலைப் பொழுதில் நல்ல சுவையான் அவியல்! நன்றி!

கணினி தேசம் said...

அதுசரி...எப்படி நாலு மணிக்கு எழுந்தீங்க? உங்களுக்கு நடுநிசியாச்சே!!

சின்னப் பையன் said...

வழக்கம் போல சுவையான அவியல்

ILA (a) இளா said...

விளம்பரங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்.

ILA (a) இளா said...

200,300 எல்லாம் ஒரு கணக்கே இல்லீங்க. எவ்ளோ மனசுங்க பின் தொடருதுங்க? அதுக்கு எண்ணிக்கை கூட உண்டா? இப்போ திருப்பூர்னா பனியன், அப்புறம் பரிசல்னு ஆகிருச்சே.

ஸ்வாமி ஓம்கார் said...

நாங்களும் 200ல் இருக்கிறோம் என்பதில் பெருமையே. :)

வாழ்த்துக்கள் பரிசல்.

நாமக்கல் சிபி said...

//200,300 எல்லாம் ஒரு கணக்கே இல்லீங்க. எவ்ளோ மனசுங்க பின் தொடருதுங்க? அதுக்கு எண்ணிக்கை கூட உண்டா? இப்போ திருப்பூர்னா பனியன், அப்புறம் பரிசல்னு ஆகிருச்சே.//

ஆமாங்க்!

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் பரிசல்.. உங்களுக்கு இரண்டு நூறு எல்லாம் பெரிய விஷயமேயில்லை.. இன்னும் பல நூறுகள் காணப்போகிறீர்கள்.

கோவி.கண்ணன் said...

//நேற்றைக்கு என் வலைப்பூவை பின்தொடரும் ஃபாலோயர் லிஸ்ட் 200ஐத் தாண்டியது. மிகவும் கௌரவமாகவும் நெகிழ்வாகவும் உணர்கிறேன். நேற்றைய பின்னூட்டத்தில் வாழ்த்திய சிலர் 250 பதிவுகள் என்று வாழ்த்தியபோதுதான் கவனித்தேன்..//

நல் வாழ்த்துகள் கிருஷ்ணா !

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள் :) :)

ஜீவா said...

வாழ்த்துக்கள் பரிசல்

Anonymous said...

ஏன் சாமி என் பேரு ரெண்டு தரம் வருதே?

அறிவிலி said...

200க்கும், 250க்கும் வாழ்த்துக்கள்

Sundar சுந்தர் said...

//
“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”//
:)

பொன்.பாரதிராஜா said...

வாழ்த்துக்கள் தோழா!!!
பரிசல் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு!!!!

SUBBU said...

KISS - LIPS :)))))))))))))

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா.. எனக்கு இன்னைக்குதான் 200வது போஸ்ட்.. என்ன போடறதுன்னு தெரியல

நந்தா said...

பரிசல் நீங்கள் சொன்ன ஏர்டெல் அவ்ளோவ் அருமை. ஆனா அந்த மிரிண்டா விளம்பரம் சொன்னீங்க பாருங்க. ஒவ்வொரு முறை அந்த விளம்பரத்தை பார்க்கறப்பயும் எனக்கு கடுப்பா வரும்.

கான்செப்ட் எதுவும் யோசிக்காம கேப்ஷனுக்குன்னு (கொஞ்சம் கலாட்டா பண்ணு) மொக்கையாய் ஏதாவது எடுக்கிறது. எக்ஸிகியூஷன் எனக்கு பயங்கர மொக்கையாய் பட்டது. சரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். ஒத்துக்கறேன்.

இந்த வோடஃபோன்ல மெசேஜுக்கு காசு கம்மின்னு “உங்கள் சந்தோசத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்”ன்னு சொல்லாம சொல்ற மாதிரி விளம்பரங்கள் வருது பாருங்க. அது டாப் க்ளாஸ்.

லிஃப்ட்டில் ஒரு பெரிய செலிப்ரிட்டியிடம் தனியே பயணம் செய்வது, தனக்கே நம்பிக்கையில்லாம போய் ரிசல்ட்டை பார்க்கிறப்போ திட்டினு பாஸ்னு இருக்கிறது... அப்பப்பா 30செகண்டுல எப்படி எல்லாம் கவிதையை வடிக்கிறானுங்க பாருங்க.

http://blog.nandhaonline.com

தமிழ் உதயன் said...

வாழ்த்துக்கள் அன்பரே

நன்றி

தமிழ் உதயன்

அருண் said...

வாழ்த்துக்கள் பரிசல். இட்லி வடைக்கு அடுத்து உங்களுக்கு தான் அதிக followers?

SurveySan said...

200 followers
250 பதிவு
ஓசி லேப்டாப்பு
செல்ஃபோன்ல கிஸ்ஸு

பிரமாதம்!

வாழ்த்துக்கள்!


///கீபோர்ட், மௌஸை வெச்சுட்டு ரெண்டுமூணு ஸ்டில்ஸ் எடுத்துப் பார்த்தேன்.//// - ஐடியா நல்லாருக்கே. அமுல் படுத்திடலாம். :)

Mahesh said...

சச்சின் போட்டொவுக்கு நீங்க குடுத்திருக்கற விளக்கம் சூப்பர்... தன்னடக்கம்??!!

ஸ்கூல் மேட்டர் ஜூ.வி. டயலாக் பகுதில படிக்கற மாதிரி இருக்கு :)))

மண்ட்டோ - நேத்துதான் படிச்சு முடிச்சேன். நிதானமா அதப்பத்தி எழுதறேன்.

ராமலக்ஷ்மி said...

200-க்கும் 250-க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

கலக்கல் அவியல்!

200 எல்லாம் உங்களுக்கு ஜூஜிப்பி பரிசல்! உங்கள் எஸ்.எம்.எஸ் கிடைத்தது மிக்க நன்றி!

☼ வெயிலான் said...

200 வாழ்த்துக்கள்
250 பாராட்டுகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!//

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா .நானுந்தான் மொபைல் வச்சிருக்கேன் .என்ன பிரயோஜனம்.200 followers க்கு வாழ்த்துக்கள் பரிசல்.

அமுதா said...

200க்கும் 250க்கும் வாழ்த்துகள்

வால்பையன் said...

//200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும்.//

ஸாரி மிக்ஸிங் செய்யாமல் ராவாக குடிக்ககூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கிறார்.
அதனால ஒரு ஜானிவாக்கர் ஃபுல்லு பார்சல்

வால்பையன் said...

//“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”//

வீட்டுக்கு வாங்க எனக்கு எங்கே வீக்கம் ஜாஸ்தின்னு காட்டுறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள் தலை

பாண்டி-பரணி said...

அவியல் டக்கரு!
250க்கு வாழ்த்துக்கள்
//என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது. என்ன ஒரு சோகமான பாடலுக்கு, என்னா ஒரு டப்பாங்குத்து அடி. //
net link
http://www.tamilmusica.com/index.php?page=1&p=Latest_Songs_2008/Kunguma_Poovum_Konjum_Puraavum

சந்தனமுல்லை said...

மனமார்ந்த வாழ்த்துகள் பரிசல்!ஏர்டெல் விளம்பரத்தோட வோடஃபோன் விளம்பரத்தையும் சேர்த்துக்குங்க! :-)

Karthikeyan G said...

Congrats for 200 & 250


//ஆனால் எனக்கு அதைவிட வேல்முருகன் என்பவர் பாடிய ‘என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது.//

அமாம்.. நானும் இந்த பாட்டை பத்து பேரிடம் ஒலிபரப்பி காட்டிவிட்டேன். :)

'முட்டத்து பக்கத்திலே' பாட்டும் நன்றாக உள்ளது.


'Virgin mobile' Ad too is top class.

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்... :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் பரிசல்

Truth said...

வாழ்த்துக்கள் பரிசல் அண்ணே.

//இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!
ஒரு முறை நான் ஒரு இண்டெர்வியூ ல கேவலமா பண்ணி (வழக்கம் போல) ரிஜெக்ட் ஆயிட்டேன். முடிச்சிட்டு வெளில வந்து என்னோட நண்பனுக்கு ஒரு SMS அனுப்பின்னேன், 'I got rejected' அப்படின்னு. அவன் திரும்பி 'congrats' அப்படின்னு அனுப்பினான். என்ன டா இது கூத்துன்னு sent items ல பாத்தா, 'I got selected' அப்படின்னு இருந்திச்சு. T9 மகிமை. :)

பரிசல்காரன் said...

@ Truth

WOW!!

its interesting!!

ஸ்ரீ.... said...

வார்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க!

ஸ்ரீ....

PPattian said...

Wow...

Kiss - Lips
Rejected - Selected

There may be more such T9 synonyms.. Interesting.

Prabhu said...

//உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..
அவரது மனைவி சொன்னார்...
“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”//

இது நீங்க கேட்ட மாதிரி இல்லயே... உங்களுக்கும் உங்க மனைவிக்கும் நடந்த மாதிரி இருக்கே! உங்க வீக்கத்தை மறைக்க இந்த வேலையா?

கோபிநாத் said...

தல

இதுதான் முதல்முறை உங்க பக்கம் ;))

1. 200+க்கு வாழ்த்துக்கள் ;))

2. ;)

3. தகவலுக்கு நன்றி..

4. ;))

5. ஆகா..!

6. ஆகா...நம்ம இனமா நீங்க!? ரெண்டு நாளாக நானும் தேடி பார்க்கிறேன் சிக்கல உங்க புண்ணியத்துல கிடைச்சிருச்சி...வீடியோ ;)))

எழுதுங்க தல..ராசாவை பத்தி கண்டிப்பாக எழுதுங்கள் ;)

7. அட அட மறுபடியும் ஒரே இனம்! ;))

எனக்கும் அந்த பாட்டு தான்...செம அடி பின்னியிருப்பாரு யுவன் ;))

PPattian said...

Some more interesting facts on T9 synonyms

Here are the most interesting T9 synonyms (i.e,. the ones with the greatest word distances):

2668687: amounts, contour
2787433: astride, brushed, crushed
6333673: Medford, offense
726337: pander, sander, scoffs
7946437: pygmies, swinger

----------------------

Here are the longest T9 sequences with at least one synonym:

25287876746242: claustrophobia, claustrophobic
2427228374937: characterizer, characterizes
2474784264937: Christianizer, Christianizes
7445676744937: philosophizer, philosophizes
732663448737: reconfigurer, reconfigures

----------------------

Here are the T9 key sequences with the most synonyms:

22737: acres, bards, barer, bares, baser, bases, caper, capes, cards, cares, cases
46637: goner, goods, goofs, homer, homes, honer, hones, hoods, hoofs, inner
2273: acre, bard, bare, base, cape, card, care, case
729: paw, pay, Paz, raw, ray, saw, sax, say
76737: pores, poser, poses, roper, ropes, roses, sorer, sores

-----------------------

நெட்டிலிருந்து சுட்டதுதான்..

http://blog.unto.net/work/t9/

dharshini said...

vaazthukkal anna.
aviyal super.

புருனோ Bruno said...

//Kiss - Lips
Rejected - Selected

There may be more such T9 synonyms.. //

Rejected - Selected என்பது synonym அல்ல. antonym

பாண்டியன் புதல்வி said...

வாழ்த்துக்கள் பரிசல். விளம்பரங்கள் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை :(((

PPattian said...
This comment has been removed by the author.
PPattian said...

//Rejected - Selected என்பது synonym அல்ல. antonym//

"T9 Synonym" is different from a "Synonym" ...

You can google for "T9 Synonym" and get an understanding...