Thursday, March 5, 2009

எண்ணிப் பார்க்கிறேன்!

“இரவு இந்த நேரத்திலும் தமிழையும், உன்னை நம்பி வரும் வாசிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டியும் நீ ஆற்றும் சேவை என்னைப் புல்லரிக்க வைக்கிறது பக்தா.. என்ன வரம் வேண்டுமென்று கேள்!”

“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”

“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்‌ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்‌ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”

******************************

ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலிடம் வகிப்பது இந்த சைட் அடித்தல்தான். கன்னியர் கடைக்கண் பார்வை பட்டால் என்ன ஆகுமென்று சொல்லாத இலக்கியமில்லை.. ஆட்டோக்கள் இல்லை!

அப்படி என்ன இதில் இருக்கிறது?

‘மனங்கவர்ந்த ஒரு பெண்ணைக் கண்டால் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் ‘அட.. சூப்பர் ஃபிகர்டா’ என்று அட்ரினல் சுரப்பிகளுக்கு அவசர தந்தி கொடுக்க, அந்தச் சுரப்பியிலிருந்து அட்ரினலின் என்ற சமாச்சாரம் பெருக, இதயம் படபடத்து.. வியர்வை பெருக..”

ஹலோ.. சுஜாதா சார்... அதில்ல நாங்க கேட்கறது.. சைட் அடிக்கறதுங்கறது வேற. நீங்க சொல்றது காதலன், காதலியைப் பார்க்கறப்போ.
சைட் அடிக்கறதுல ஒரு சௌகரியம் என்னன்னா.. நாம் சைட் அடிக்கற பொண்ணு மேல நமக்கு எந்த ரெஸ்பான்ஸிபிலிடியும் இருக்கறதில்ல. பார்த்தமா.. போய்ட்டே இருந்தோமான்னு இருக்கும்.

நான் மொத மொதல்ல சைட் அடிச்ச பொண்ணு பேரு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனந்தி. எப்போ.. அஞ்சாங்க்ளாஸ்ல! ஒரு தடவை அவ, ஸ்கூலுக்கு லீவு போட்டப்போ, என் க்ளாஸ் டீச்சர் ‘நாளைக்கு அவ வர்றப்போ இந்தக் கணக்கைப் போட்டுட்டு வரச் சொல்லு. உன் நோட்டைக் குடு’ என்று என்னிடம் சொன்னார். என் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி அவள் வீடு. வீட்டிற்குப் போனது, கை, கால் கழுவி.. என்னிடம் இருந்த ஒரே ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பவுடர் அப்பிக்கொண்டு போய் அவள் வீடு முன் நிற்க வெளியே வந்து ‘வேணாம். நான் சுப்புலக்‌ஷ்மிகிட்ட வாங்கிக்கறேன்’ என்றுவிட்டு மறுபடி வீட்டிற்குள் ஓடிவிட.... ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்’ என்று என்னை உள்ளிருந்து ஒருத்தன் கிண்டலடித்தான்.

சிறிதுகாலம் தொடர்ச்சியாக ஒரே பெண்ணை சைட் அடித்த வரலாறு என்று எடுத்துக் கொண்டால் பஸ் ஸ்டாண்டுக்கருகில் நாங்கள் நண்பர்கள் கூடும் ஒரு கடை வழியே தினமும் செல்லும் ஒரு பெண். மாநிறம். (‘போடா.. அவ கருப்பு. நீதான் மாநிறம்னு சொல்லிக்கற’ என்பான் சசி) எட்டு என்றுதான் பெயர் வைத்திருந்தோம். எட்டு போடுவதுபோல கால்களைப் பின்னிப் பின்னி நடப்பாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது. எங்கள் இடத்தைக் கடந்து செல்லும்போது அவள் பார்க்கும் பார்வை... இன்னும் கண்ணில்... இல்லை! (மஹாவிஷ்ணு வேற வரம் குடுக்காம எஸ்கேப்பாய்ட்டாரு. எதுக்கு வம்பு!) விவேக்-ரூபலா உதவி இல்லாமலே துப்பறிந்து பெயர் மகேஸ்வரி என்று கண்டறிந்தோம்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ‘பேசிப் பார்த்தாத்தான் என்ன?’ என்று தோன்ற, தொடர்ந்து போக பஸ் ஸ்டாண்டில் அவள் ஊர் டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தவளை நெருங்கி.... டக்கென்று கடந்து போய்விட்டேன். ‘என்னடா.. பேசலியா?’ என்ற நண்பனிடம் ‘ப்ச்.. பேசிட்டா இப்போ இருக்கற த்ரில்லும் போயிடும். நானென்ன அவளை லவ் பண்ணவா போறேன்? விடுடா’ என்றேன். அடுத்தடுத்த நாட்களில் அவளை அந்த வழியே காணவில்லை.

எங்கள் நண்பர் நாகராஜின் பாக்யா ஆர்ட்ஸுக்கு ஒரு ஆர்டர் சம்பந்தமாக வந்திருந்த பெண்களில் தீபா என்ற பெண் என்னிடம் உரிமையோடு பேசுவாள். அடிக்கடி தோழிகளோடு வரும் அவளை நல்ல நண்பியாக நினைத்திருந்தேன். என் நண்பன் சசி அவளைக் காதலிப்பதாகச் சொல்ல.. ‘சரிடா.. நான் பேசறேன்’ என்று சமாதானப்படுத்தினேன். ஒரு நாள் அவளிடம் சொல்ல... அவள் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாள். அடுத்த நாள் அவளது தோழி ஒருத்தி வந்து ‘தீபா உங்களை ரொம்ப நாளா சைட் அடிச்சுட்டு இருக்கா. (இப்படித்தான் சொன்னாள்!) நீங்க என்னடான்னா சசிக்காக பேசினீங்களாம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். ‘என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்க வண்டில ஒரு நாளாவது போய் காலேஜ் வாசல்ல எறங்கணும்’ என்று கோரிக்கை வைத்திருந்தாள். (டி.வி.எஸ்.சாம்ப்!) என்ன விநோதமான கோரிக்கைடா என்று நினைத்தபடி ‘வண்டில போய் எறங்கணும் அவ்ளோதானே.. இங்க வைக்கறேன். நாளைக்கு அவளை எடுத்துப் போகச் சொல்லு’ என்றேன் நான்.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டல் முன் தீபா தனது குழந்தையுடன் நிற்க நான் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பைக்கில் அவளது கணவன் வர ‘வந்துட்டார். வண்டில போய் உட்காருங்க’ என்றபோது அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்! ஒருவேளை அவளும் தன் கணவனிடம் சொல்லியிருக்கக்கூடும்!

காலச் சக்கரம் சுழல்கிறது.....

இரண்டு நாட்கள் முன் நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் என் மகள் தாவணி உடுத்தி ஆடுகிறாள். ‘இவ்ளோ சின்னப் பொண்ணுக்கு இந்த ட்ரஸ்ஸா’ என்றபடி வியக்கிறேன் நான். நாளை அவளோடு நான் நடந்து செல்கையில் கடந்து செல்லும் இளைஞர்கள் அதே கடைக்கண் பார்வையை வீசக்கூடும். எப்படி உணர்வாள் அவள்? எப்படி எதிர்கொள்வேன் நான்? எதுவும் கேட்பாளா என்னிடம்? என்ன சொல்ல வேண்டும் நான்? எத்தனை திரைப்படம் பார்த்து ‘இப்படித்தான் அவங்கப்பன் டீல் பண்ணியிருக்கணும்’ என்று வியாக்கியானம் பேசுகிறேன். என் மகளுக்கு என்ன அறிவுரை தரப்போகிறேன்? பாலகுமாரன் படி.. ருத்ரன் படி.. சொல்லலாம். ‘என்ன ஞானத்தை நீ பெற்றாய்? எனக்குச் சொல்லிக்குடு’ என்று நிற்பாளே அவள்... ‘நீங்களும் இப்படித்தானாப்பா? பொண்ணுங்களை ஃபாலோ பண்ணியிருக்கீங்களா’ கேட்பாளே....

என்ன சொல்ல?

கேள்விகள்.... கேள்விகள்.... காலம் மட்டுமே விடை சொல்லும் கேள்விகள்.

48 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

me the first

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”//


நாங்க எல்லா சாமியையும் கும்பிடுரோமே..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்’ என்று என்னை உள்ளிருந்து ஒருத்தன் கிண்டலடித்தான்.
//


சிவப்பு ரோஜக்கள் பார்த்த நேரம்..? (வந்த நேரம்?)

கணினி தேசம் said...

//“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்‌ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்‌ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”
//

சர்வம் "சக்தி"மயம் !!

கணினி தேசம் said...

//“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்‌ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்‌ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”
//

ஹலோ.. சுஜாதா சார் கனவுல கினவுல வந்து சொன்னாரா?

இந்த பத்தி அப்படியே சுஜாதாதான் !

கணினி தேசம் said...

//பொண்ணுங்களை ஃபாலோ பண்ணியிருக்கீங்களா’ கேட்பாளே....
என்ன சொல்ல?//

தோழமைக் காட்டி வளர்க்கும்போது இதுபோன்ற விடயங்களை தயக்கமின்றி விவாதிக்க இயலும் என்பது என் கருத்து.

சின்னப் பையன் said...

கலக்கல் பரிசல்... ஜாலியா ஆரம்பிச்சி ஒரு சீரியஸான விஷயத்தை பேசியிருக்கீங்க...

சரி சரி. ஒரு பத்து வருஷம் வெயிட் பண்ணுங்க... நான் பதில் சொல்றேன்...

:-))

சிவக்குமரன் said...

கிருஷ்ணா, உங்களுக்கு தங்கச்சி இருந்திருந்தா இந்த பீலிங் முதல்லயே வந்திருக்கும். ///என்ன சொல்ல?

கேள்விகள்.... கேள்விகள்.... காலம் மட்டுமே விடை சொல்லும் கேள்விகள்.///

ILA (a) இளா said...

Boys படத்துல ஒரு வசனம்தான் முடிவு. அவுங்க வயசுல அப்படித்தான் இருப்பாங்க

Thamiz Priyan said...

எல்லாருக்கும் குழந்தைகள் வந்த பிறகு இதை நல்லாவே உணர முடியுது..:) அந்த டீன் ஏஜைக் கடக்கும் வரை இந்த குறுகுறுப்பு இருக்கத்தான் செய்யும் போல

முரளிகண்ணன் said...

மீ தி எஸ்கேப்

Cable சங்கர் said...

வாழ்கையில் பல கேள்விகளுக்கு பதிலில்லை பரிசல்.. அது சக்கரம், திரும்ப திரும்ப, நம்மகிட்டயே நம்மளை காட்டும்.

pudugaithendral said...

கடைசி பத்தி மிக அருமை.

என்னன்னவோ சொல்ல விழைகிறேன். ஆனால் எதைச் சொல்லன்னு புரியாமல் விடுகிறேன்.

pudugaithendral said...

மொளனகீதங்கள் படப்பாட்டு ஞாபகம் வருது.

டேடி டேடி ஓ மை டாடி பாட்டில்
ஒரு வரி, அப்பாக்கள் சில பேரு அறியாமல் செய்கின்ற தப்பைத்தான் அந்நாளில் அடியேனும் செய்தேனப்பா..

அது என்ன தப்பு????

இந்தப் பாட்டை சமீபத்தில் பாத்தீங்களோ?

அ.மு.செய்யது said...

ஓபனிங்லர்ந்து ஃபினிஷிங் வரை எந்த தொய்வும் இல்லை...

அசத்தல் பரிசல்..

Anonymous said...

அஞ்சாவதுலியே ஆரம்பிச்சாச்சா?

எல்லாம் சரி, கொஞ்ச நாள் கழிச்சு உங்க பொண்ணு படிப்பாங்களே பரவாயில்லையா????

ஆனா சீரியஸான மேட்டரை இயல்பா கேட்டிருக்கீங்க?

எப்போதோ படித்த கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

“கெமிஸ்ட்ரி லேபில்
ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக
முத்தமிட்டது
இப்போது வலிக்கிறது!
தாவணியில்
பள்ளிக்குச் செல்லும்
மகளை பார்க்கும்போது!”

Anbu said...

மிகவும் அழகாக உள்ளது அண்ணா.நல்ல கருத்துக்கள்!

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கத்தான் செய்யும்!!

என்ன சொல்றீங்க

Vidhya Chandrasekaran said...

சூப்பர் பதிவு. கடைசு பத்தி பற்றி - ரொம்ப அலட்டிக்கவேணாம் சார். இந்தக் காலத்து பசங்க ரொம்ப ஷார்ப்:)

narsim said...

பரிசல்...

//ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலிடம் வகிப்பது இந்த சைட் அடித்தல்தான்//

ஆமா தல..

// எட்டு போடுவதுபோல கால்களைப் பின்னிப் பின்னி நடப்பாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது.//

அப்பிடித்தான் தோணும்.. இடமாறு தோற்றப்பிழை..

கடைசி பாரா.. ரொம்ப எண்ணாதீங்கன்னு வித்யா சொன்னது கரெக்ட்..

கார்க்கிபவா said...

/ வித்யா said...
சூப்பர் பதிவு. கடைசு பத்தி பற்றி - ரொம்ப அலட்டிக்கவேணாம் சார். இந்தக் காலத்து பசங்க ரொம்ப ஷார்ப்://

போன தலைமுறை சேர்ந்தவர் என்றாலும், எங்கல நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க மேடம்..

சகா,

ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. ஆனா என்ன சொல்ரதுன்னு தெரியல..

Vinitha said...

அசத்தல் பதிவு.... கடைசி பத்தி அருமை!

புன்னகை said...

என் தந்தையை நான் வம்பிற்கு இழுக்கும் போதெல்லாம் நான் சொல்லுகின்ற ஒரே விஷயம், "உங்க வயசுல நீங்க ஆடின ஆட்டத்திற்கு தான் உங்களுக்கு ரெண்டும் பெண் குழந்தையா கடவுள் குடுத்திருக்கிறார் போலப்பா" என்று! உங்கள் வாழ்விலும் கூட அப்படி தான் போல? ;-)
ஒவ்வொரு மகளுக்கும் அவள் அப்பா தான் முதல் ஹீரோ. அந்த ஹீரோயிசத்தை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. "நான் ரொம்ப நல்லவன்" என்றில்லாமல், "நானும் கூட ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தேன்" என்று ஒப்புக்கொள்கிற மனதைரியமுள்ள தந்தையால் மட்டுமே என்றும் ஹீரோவாக நிலைத்திருக்க முடியும் என்பது நான் என் வாழ்வில் காணும் உண்மை; காரணம், இன்றளவும் கூட எனக்கும் சரி, என் அக்காவிற்கும் சரி, எங்க அப்பா தான் "ஹீரோ"! :-)

Test said...

//‘என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்க வண்டில ஒரு நாளாவது போய் காலேஜ் வாசல்ல எறங்கணும்’ என்று கோரிக்கை வைத்திருந்தாள். (டி.வி.எஸ்.சாம்ப்!) என்ன விநோதமான கோரிக்கைடா என்று நினைத்தபடி ‘வண்டில போய் எறங்கணும் அவ்ளோதானே.. இங்க வைக்கறேன். நாளைக்கு அவளை எடுத்துப் போகச் சொல்லு’//

"இதல்லாம் ரொம்ப ஓவரு " வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் :-)

தங்கள் மகள் நன்கு வளர்ந்து "பரிசல்காரன்" பதிவு படித்து "பரவாயில்ல நம்ம அப்பா ரொம்ப நல்லவரா தான் இருந்துருகாறு" என்று பெருமை கொள்வாள்.

மேவி... said...

irunga....
en annan kitta kettu sollugiren.....

Thamira said...

என்ன சொல்ல.? ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள்.. நம் பிள்ளைகளே ஆனாலும்..

Thamira said...

ஹை.. மீ த 25!

Thamira said...

அழகு.!

வால்பையன் said...

நல்ல கொசுவத்தி
எனக்கும் கூட பொண்ணு தான் ஆனா எப்படி இத பத்தி பேசுரதுன்னு தான் தெரியல!
ஆனா கண்டிப்பா பேசனும்.

Thamira said...

அழகு என்ற பின்னூட்டம் வேற கடைக்கு எழுதினதை கவனிக்காம இங்கே போட்டுட்டேன்..ஜாரி.!

சந்தனமுல்லை said...

:-)

தமிழன்-கறுப்பி... said...

நான் நினைக்கிறத எழுதறதே வழக்கமா போச்சு ஒரு மாசம் லீவு விடுமய்யா..:)

அனுபவங்கள் கற்றுத்தரும் அண்ணே...
உங்கள் மகளுக்கும்...

யாத்ரா said...

நம் வாரிசுகளை நம் உலகத்திற்கு வெளியிலிருந்து பார்ப்பதால் தான் இந்த கேள்விகளுக்கு பதிலிறுக்க முடியாமல் போகிறது,

இந்த இடைவெளிகளை குறைக்க நினைத்தாலும், நாம் எவ்வளவு முற்போக்காக தோழைமையாக இருந்தாலும் இப்படி தான் இருக்க நேர்கிறது

கே.என்.சிவராமன் said...

பரிசல்,

'எண்ணிப் பார்க்கிறேன்' ...

பெண் குழந்தை தாவணி அணிந்ததை பார்த்ததும் உள்ளம் பதைபதைத்திருக்கிறது. சரி. இதுவே ஆண் குழந்தை வேஷ்டி அணிந்து ஆண்டுவிழாவில் ஆடியிருந்தால் இப்படி நினைத்திருப்பீர்களா?

குழந்தைகள், பிள்ளைகள் என பொதுவாக 'எண்ணிப் பார்ப்பதில்' அர்த்தம் இருக்கிறது. அதென்ன பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பார்வைக் கோணல்?

ஆண்களின் கண்கள் தன் பெண் மீது மொய்க்குமே என்று கவலைப்படும் தந்தைகள் ஏன் நம் மகன் எத்தனை பெண்களை பார்வையால் பருகப் போகிறானோ என்று கவலைப்படுவதில்லை?

எனில் பெண்கள், கடைக் கண் பார்வையால் ஆண்களை ரசிக்கக் கூடாதா? கிண்டல் செய்யக் கூடாதா? ஆண்களுக்கென்றே விதிக்கப்பட்ட வயதுசார் இன்பங்களா இவை? இப்படி வரையறுக்க உங்களுக்கு / நமக்கு யார் அனுமதி வழங்கியது?

அந்தந்த வயதில் அனைத்து பாலினத்துக்கும் அந்தந்த ஈர்ப்புகளும், சலனங்களும் வரவே செய்யும்.
அதை ஏற்பதும், கடப்பதும் அவரவருக்கு தெரியும்.

டீச்சராக வாழ்க்கையை போதிக்காதீர்கள். அறிவுரை சொல்லாதீர்கள். ஞானத்தை வழங்காதீர்கள். சக தோழனாக கூடவே பயணம் செய்யுங்கள்.

குழந்தைகள் நம்மை வழிநடத்துவார்கள்.

எண்ணிப் பாருங்கள்...

பரிசல்காரன் said...

@ பைத்தியக்காரன்

அண்ணா... ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்! ஒரு முழுப்பதிவாக வர வேண்டிய விடயம் வெறும் பின்னூட்டமாய்..

நன்றி சொன்னால் அந்நியனாவேன்.

manjoorraja said...

நகைச்சுவையாக தொடங்கி யோசிக்கவைக்கும் முடிவை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.

இருந்தாலும் பைத்தியக்காரன் எழுதியதே சரியான வழியென தோன்றுகிறது.

Kumky said...

பைத்தியக்காரனின் கருத்துக்கள் ரொம்ப யோசிக்கவைக்கின்றன.அதேபோல உங்கள் பதிவும் . எது சரி..? எது தவறு..?
நியாயங்களா...அல்லது நடைமுறை வாழ்வு சார்ந்த எண்ணங்களா..?
காலத்தின் போக்கில் யோசிப்பதென்றால் பெண்குழந்தை பெற்றவர்கள் மிகுந்த பயத்திற்க்கும் பதட்டத்திற்க்கும் உள்ளாகக்கூடிய சூழ்நிலைதான் எதிர்காலத்தில் வாய்க்குமோ என்ற துயரம் மனதில் எழாமலில்லை.

பாண்டியன் புதல்வி said...

பரிசல்,
பெற்றோராய் இருப்பதும் ஒரு thrill தான். என் தாரக மந்திரம், பின்பற்ற முயற்சித்துக் கொண்டிருப்பது:

Don't walk in front of me, I might not follow
Don't walk behind me, I might not lead
Walk beside me and just be my friend.

இது பெற்றோர்-பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, கணவன் மனைவி, ஆசிரியர் மாணவன் என எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

Relax and enjoy. All childhood memories are made to be cherished.

Babu (பாபு நடராஜன்} said...

ம்ம்ம் பயமா இருக்கா மாம்ஸ் ..........அனுபவங்கள் சொல்லி தரப்படுவதில்லை......புரிதலே வாழ்க்கை ...நம் அனைவருக்கும்

selventhiran said...

"பெண்கள்தாம் இந்த உலகின் வில்முடுக்கிகள்" - வல்லிக்கண்ணன்.

கோபிநாத் said...

ஒவ்வொரு பத்தியும் கலக்கல்...கடைசி பத்திக்கு வித்யா அவர்கள் சொன்னாது தான் சரி..;)

இமைசோரான் said...
This comment has been removed by the author.
இமைசோரான் said...

நன்றி பரிசல் நல்ல பதிவு... நல்ல சிந்தனை. ஆனால் பைத்தியகாரன் அவர்களின் பின்னூட்டம் மேலும் ஆழமாக சிந்திக்க வைத்தது......சாதரணமாக நாமெல்லாம் பார்க்கத்தவறும் ஒரு கோணம்.....அது. நன்றி பைத்தியக்காரன் அவர்களே... (முதன் முறையாக ஒரு பைத்தியகாரனை அவர்கள் என்று மரியாதையோடு அழைக்கிறேன்).....!!!

ஞாபகம் வருதே... said...

//“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”//
அப்படியே ஆகட்டும்

Vijay said...

பரிசில், மணி பத்து. இந்த பதிவை சும்மா படிச்சிட்டு தூங்க போகலாம் என்று எண்ணி இருந்தேன். மலைக்க வச்சிட்டீங்க. கடைசி பாராவில கல(ங்)க்கல். இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடாமல் தூங்கினால் அது நியாயமே இல்ல. வித்யா மேடம் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை. அது ஒரு வகை எஸ்கேப்பிஸம் என்றே நினைக்கிறேன். சாரி வித்யா மேடம். உங்கள் கருத்தை குறை சொல்லவில்லை. என் பார்வையைதான் முன் வைக்கிறேன். பைத்தியகாரன் சார் கேள்விகள் நியாயமானவையே. ஆனாலும் பெண் பற்றி தோன்றுவது போல் பையன் பற்றி தோன்றவில்லைதான். அது ஏன் என்று யோசிக்கணும்.

நிற்க. உங்கள் கடைசி பாராவின் கேள்விகள். கேள்விகள்…….இதுதான் வாழ்க்கையின் திருந்தும் கணமோ? திருந்தும் கணம் அப்பிடிங்கறது எல்லாம் ஒவர்னா..டர்னிங் பாய்ண்ட்ன்னு சொல்லலாமோ?

மொத்தத்தில் ரொம்ப நன்றி பரிசில் என்ன தூங்க விடாம பண்ணதுக்கு.

அறிவிலி said...

பதிவு மிகவும் பிரமாதம்.நாற்பதுகளில்
இருக்கும் (கரெக்ட்டா?) தந்தைகளுக்கு
பிரதானமான குழப்பம் இது போன்ற விஷயங்கள்தான்.

பைத்தியகாரன் கேட்டது சரிதான்.ஆனால் என் போன்ற ஆண் பிள்ளை பெற்றவர்களுக்கும் இந்த கவலைகள் உண்டு.

//நானென்ன அவளை லவ் பண்ணவா போறேன்? விடுடா’ என்றேன்//

வெறும் சைட் அடிப்பதோடு நிறுத்திக் கொள்ள, அடுத்த கட்டத்துக்கு போகமால் இருக்க ஏதோ ஒன்று நம்மையெல்லாம் தடுத்துவிட்டது.
வாய்ப்புகள் இருந்தும் (டி.வி.எஸ் சாம்ப் மாதிரி) கூட.

ஆனால் இதே போன்று நம் பிள்ளைகளும் அபாய கட்டத்தை தாண்டாமல் இருக்க என்ன உத்தரவாதம் என்பதுதான் நம் சந்தேகம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மிக அருமையான பதிவு.நெஞ்ச தொட்டுட்டீங்க பாஸ்.சூப்பர்.

Suresh said...

ithae pathivae unga wife eluthi iruntha, nan 5th std la orunthan .. parthan .. sight adicha... 7th oruthan.. 10th oruthan... 12th oruthana parthu pidichu pochu nalla sight adichan nu .. soli irunthan neenga atha padikum pothu eppadi irukum mr.parisal nan romba jovial nu summa kathai vendam kandipa light a oru vali irukum, athuvum sight adicha payan peru soli eluthina eppadi irukum.
Neenga kandipa antha perula neenga vera oru nabare parkum pothu meet panum pothu oru neyabagam pass agum kandipa kasthama irukum ungaluku

nanum ungala mathiri than summa jolly suthi sight adichatha jolly a autograph mathiri sonna kalam iruku, but namma pasanga point of view la pesuraom, kandipa pengal atahe mathiri sonnalum nanum jolly a eduthukuven nu sollalam kandipa oru possesive irukum boss

unga karuthai solunga...

iniyavan said...

பரிசல்,

என்னோட பதில் என்ன தெரியுமா? ஒண்ணுமே சொல்லகூடாது? வாழ்க்கைய அது போக்குல விட்டுடனும். நம்ம மாதிரியே அவங்களும் பாதைய கடந்து வரட்டுமே? எல்லாமே நம்ம வளர்ப்பு முறையில்தான் இல்லையா? நாம நல்லது நினைச்சா நல்லதுடான் நடக்கும். நல்லதே நினைப்போமே?