Friday, March 6, 2009

ஒரு கதை.. ஒரு கவிதை



‘எதிர் வீட்டுப் பெண் பார்ப்பாள்
சட்டையை அயர்ன் பண்ணிப் போடு’

‘பேனா எழுதவில்லை’
அதனாலென்ன பந்தாவாயிருக்கும்
பாக்கெட்டில் குத்து.

தெருவில் பார்ப்பவர்கள்
பிரமிக்க வேண்டாமா?
அசத்தும்படி உடையணி.

நண்பர்கள் கேலி செய்வார்கள்
முதலில் செருப்பை மாற்று.
‘காசிருக்கும்போது
ஒரு ஷூவும் கூலிங் க்ளாஸும்
வாங்கிவிடு’

அனைத்தையும் கவனித்த
என் உள்மனசு
பதில் சொல்லமுடியாக் கேள்வியொன்றை
எகத்தாளமாய்க் கேட்டது

‘எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?’

-அனந்த்பாலா

(ஜூன் 1995ல் வெளியான எனது கவிதை)

***************************************************************

கைதி
அவன் ஏறி கதவைச் சாத்திக் கொண்டதும், நான் கியரை மாற்றி காரை விரட்டியபடி அவனை ஆராய்ந்தேன்.

க்ரே கலர் ஷர்ட்டை-கறுப்பு ஜீன்ஸுக்குள் திணித்திருந்தான். காலில் சாதாரண ஹவாய் ஸ்லிப்பர். கழுத்தில் ஒற்றைச் சங்கிலி. வலது கையில் பிடித்திருந்த வெள்ளை பெட்ரோல் கேனை காலுக்கடியில் வைத்தபடி – ஸ்டியரிங் பிடித்திருந்த என்னை ஏறிட்டான்.

“நல்லவேளை... நீங்க நிறுத்தினீங்க” – அவன் குரலில் அசாதாரண முரட்டுத்தனம் இருந்தது. “என் கார் உள்ளே – மண்ல நின்னுடுச்சு”

“ரேடியோ போடலாங்களா?” என்றான்.

கார் ரேடியோவை ஆன் செய்தேன்.

“தனியாவா வந்தீங்க?” கேட்டேன்.

“ஆமாங்க” என்றவன் “ஹோட்டல் எதுனா இருந்தா நிறுத்துங்க. தலை வலிக்குது. காபி சாப்பிட்டுட்டு போகலாம்”

நான் ரேடியோவை செவிமடுத்தேன்.

“கோவை ஜெயிலிலிருந்து தூக்கு தண்டனைக் கைதி ஆரிஸ்பாபு நேற்றிரவு தப்பிவிட்டான்” என்ற செய்தியோடு ஆரிஸ்பாபுவின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவனைப் பார்த்தேன்.

எனக்குள் அந்தச் சந்தேகம் துளிர்விட்டது.

ஒருவேளை.. இவன்....

“சார்... அதோ ஒரு ஹோட்டல்..” என்றான் அவன். ஹோட்டல் கேட்டினுள் செலுத்தினேன்.

எதிர் எதிராய் டேபிளில் அமர்ந்தோம். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த அவனை நோக்கினேன்.

“இப்ப வர்றேன்” என்று எழுந்தான்.

எனக்குள் எதுவோ ‘கிறீச்’சிட்டது.

இவன்... இவன்....

நான் எழுந்து அவன் கண்ணில் படாதவாறு வெளியே வந்தேன். காரை ஸ்டார்ட் செய்தபோது...

அந்த க்ரே ஷர்ட்-கறுப்பு ஜீன்ஸ்காரன் சிரித்தபடி கையில் துப்பாக்கி பிடித்து நின்றிருந்தான்.

“உன்னைத் தேடித்தாண்டா காட்டுக்குள்ள போனேன். பெட்ரோல் தீர்ந்துடுச்சுன்னு ரோட்டுக்கு வந்தா, நீயா மாட்டிகிட்ட. கட்டிங் பண்ணி, கண்ணாடி மாட்டி திருட்டுக் கார்ல வந்தா அடையாளம் மாறிடுமா? இப்ப ஓடப் பார்த்தா ‘ஆரிஸ்பாபு சுடப்பட்டு இறந்தான்’னு காலைல நியூஸ் வரும்” – என்றான்.

நான் மெனமாய்- விலங்கிற்காய் - கை நீட்டினேன்.

(ஜனவரி 1996ல் வெளியான எனது கதை)

28 comments:

சின்னப் பையன் said...

me the 1st...

சின்னப் பையன் said...

கவிதை நச்!
கதை சூப்பர்.

பழமைபேசி said...

நல்லா இருக்கு....

வடக்கத்த ஆள் முந்திட்டாரே?

Cable சங்கர் said...

கவிதை சூப்பர்..

அன்புடன் அருணா said...

கதை,கவிதை ரெண்டுமே சூப்பர்.....
அன்புடன் அருணா

Anonymous said...

கதை ஓகே.

Thamiz Priyan said...

ஒரு பக்க கதை ட்விஸ்ட் நலம்!
கவிதை மாற்றமில்லாத வாழ்க்கையின் ஒரு பகுதி!

அ.மு.செய்யது said...

இரண்டுமே கிளாஸ்ங்க...

கவிதையை வெகுவாக ரசித்தேன்.

Unknown said...

//
‘எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?
//

இந்த வரிகள் நச்.... வாழ்த்துக்கள்...

Unknown said...

கவிதை கதை ரெண்டும் சூப்பர் :)))

கார்க்கிபவா said...

அடடே.. 1996? 30 வயுசிலே
உங்களுக்கு அவ்ளோ திறமை இருந்துருக்கு பாரேன்..

ஜீவா said...

கதை,கவிதை இரண்டுமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது அனந்த்பாலா :)

கணினி தேசம் said...

//
‘எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?
//
நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் வாக்கியம்.


நல்ல பதிவு.

pudugaithendral said...

எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?//

நாமே நம்மளைப்பார்த்து கேட்டுகாத ஒரு கேள்வி. கவிதை அழகு.

அப்புறம் உமாவிற்கும் உங்க வீட்டு இளவரசிகளுக்கும் மகளீர் தின வாழ்த்தை சொல்லிடுங்க.

anujanya said...

கதை 'நச்'. நல்லா இருக்கு.

கவிதை - நோ கமெண்ட்ஸ் (அதாவது 'அது எங்க ஏரியா. உள்ள வந்து பொழப்புல மண்ணப் போடாதே' என்னும் புகைச்சல்).

அனுஜன்யா

narsim said...

நீ
உனக்காய் வாழ்வதெப்போ?’ //

என்னத்தச் சொல்ல.. யோசிக்க வைக்கும் கேள்வி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//‘பேனா எழுதவில்லை’
அதனாலென்ன பந்தாவாயிருக்கும்
பாக்கெட்டில் குத்து.//



ச்சூப்பர்....

நையாண்டி நைனா said...

கவுஜ, கத எல்லாம் சூப்பர் அண்ணே...

ஆ.சுதா said...

உன்மை இப்படிதான்
பலபேர் நமக்காக வாழ்வதில்லை
எல்லாம் வேசம்...
கவிதை 'உன்மை'

புருனோ Bruno said...

அசத்தல்

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை அருமை பரிசல்.. என்னுடைய தளத்துக்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி..

Mahesh said...

ரெண்டுமே சூப்பர் பரிசல்... கதைக்குள்ள ஒரு கவிதை இருக்கு... கவிதைக்குள்ளயும் கதை இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

கதையும் கவிதையும் சூப்பர்...

தமிழன்-கறுப்பி... said...

அப்பவே கலக்கியிருக்கிறிங்க...!

வால்பையன் said...

அனந்த்பாலாவை திரும்பவும் கவிதை எழுத சொல்லுங்க!

பரிசல் கவிதையோட அது நல்லாருக்கு!

பேருல்லா என்ன இருக்குன்னு கேட்க கூடாது!
அது உங்களுக்கே தெரியும்.

Kumky said...

:-)

பட்டாம்பூச்சி said...

கவிதை எளிமையாவும் நன்றாகவும் இருக்குங்க.
கதை எதிர்பார்த்த ட்விஸ்ட் என்றாலும் நீட்டி முழக்காமல் நீட்டான குட்டி குட்டி வசனங்கள்.நன்றாக இருந்தது.

ஆர்வா said...

மணிரதனம் பட வசனம் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கு.