வோடஃபோனின் விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய கான்செப்டோடு அசத்துவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்திய விளம்பரம்... ‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’ ‘TELL THE WORLD’ என்ற கான்செப்ட். அதாவது மெசேஜூக்கு வெறும் பத்து காசுதானாம். அதுனால நீங்க ஏதாவது பகிர்ந்துக்கணும்ன்னா எல்லார்கிட்டயும் வெறும் பத்து பைசா செலவுல (தலா – பத்து பைசா எனக் கொள்க!) எஸ்ஸெம்மெஸ் பண்ணலாமாம்.
ஒரு பெண் லிஃப்டில் பயணிக்கிறார். அவருக்கு அருகில் ஒரு செலிப்ரெட்டி. செலிப்ரெட்டியின் முகத்தைக் காண்பிக்காமல் இந்தப் பெண்ணின் முகபாவங்கள் மூலமும், லிஃப்டிலிருந்து வெளியே வரும்போது அந்த செலிப்ரெட்டியை சூழும் கூட்டங்கள் மூலமும் அந்தப் பெண் அப்பேர்ப்பட்டவருடன் சிறிது நேரம் தனியாகப் பயணித்தார் என்பதை உணர்த்துகின்றனர். வெளியே வந்ததும் யாரிடமாவது இதைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று துடிக்கிறார் அப்பெண். எவருமில்லை. அப்போது விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
**
அந்த மாணவன் தனது ரிசல்ட்டைப் பார்வையிடச் செல்கிறான். அவனது உடல்மொழியிலேயே அவனொரு டோண்ட் கேர் டைப், இவன் பாஸாகப் போவதில் இவனுக்கே நம்பிக்கையில்லை என்று உணர்த்தி விடுகிறார்கள். ரிசல்டைப் பார்வையிடும் போது தொடர்ந்த ‘ஃபெயில்’களுக்கு இடையில் இவன் ‘பாஸ்’ எனக் காண்பிக்கிரார்கள். உடனே திரும்பித் திரும்பிப் பார்க்கிறான். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
**
அந்தப் பெண் குளியலறையில் பல்துலக்கிக் கொண்டே தனது எடை பார்க்கிறார். 70 என்பது போலக் காண்பித்து.. 55ல் நிற்கிறது. சந்தோஷத்தில் அப்படிக் குதிக்கிறார் அவர்.. பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
**
அசத்தலான விளம்பரங்கள் என்பதையும், எல்லோருக்கும் எளிதில் செய்தி சென்று சேர்கிறது என்பதையும் சொல்லத்தேவையில்லை. எல்லோரும் எஸ்ஸெம்மெஸ்ஸின் விலைக்குறைப்பைப் பற்றிச் சொல்கிறார்களோ இல்லையோ.... இந்த விளம்பரங்களைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! சரி... கான்செப்ட் சூப்பர். இதையே இன்னும் எத்தனை விதமாய்க் காண்பிக்கலாம்? இதோ சில யோசனைகள்...
*************
மாலை நேரம். முதல்வர் அறிவாலயத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். வெளியே ஏதோ சத்தம். மெதுவாக எட்டிப் பார்க்கிறார். ஒரு போலீஸ்காரரை எதற்கோ ஒரு பொதுஜனம் கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறார். யாருமே இல்லை அங்கே.
திடீரென்று ஒரு வழக்கறிஞர் அங்கே வருகிறார். ‘அவ்வளவுதான் அந்தக் காவல்காரர்’ என்று முதல்வர் நினைக்க, எதிர்பாராமல் அந்த வழக்கறிஞர் போலீஸுக்கு சாதகமாகப் பேசி அந்தப் பொதுஜனத்தை விரட்டாத குறையாகத் துரத்தி (விரட்டறதுக்கும் துரத்தறதுக்கும் என்னடா வித்தியாசம்?!?) போலீஸ், வக்கீல் இருவருமே ஒரே பைக்கில் தோள்மீது கைபோட்டுப் பயணிக்கின்றனர்.
முதல்வர் சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
*******************
நம்ம பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க.. தாமிரா.. இன்று முதல் ஆதிமூலகிருஷ்ணன்!) ஆஃபீஸுக்கு கிளம்பறார். ரொம்ப நாள் டைட்டா இருக்குன்னு போடாத சட்டை ஒண்ணு எடுத்து போடறார். கரெக்டா ஃபிட் ஆகுது. அப்போதான் கவனிக்கறார்.. அட! தொந்தி குறைஞ்சுடுச்சே!
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
****************
வால்பையன் ஒரு பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு நடக்கிறார்... நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்.
தூரத்தில் ஒரு தண்ணீர் பானை தென்படுகிறது. ஆர்வத்தோடு அருகில் போய் எட்டிப் பார்க்கிறார்... உள்ளே தண்ணீர் இல்லை.
ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
*********************
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக சத்தியமூர்த்தி பவன் வருகிறார் தங்கபாலு. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அவர் கட்சி அலுவலகத்துக்கு அவரே வருகிறாரா என்று கேட்காதீர்கள். வாசன், இளங்கோவன், பீட்டர் அல்ஃபோன்ஸ், போன்றவர்களோடுதான் பேச்சு வார்த்தை. டென்ஷனோடு எல்லோருக்கும் முன்னாலேயே வந்தவர்.. அறையில் ஒரு கடிதம் இருப்பதைக் காண்கிறார். எடுத்துப் பிரித்துப் படிக்கிறார்.
‘தலைவரே.. நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் எங்களுக்கு உடன்பாடுதான். நாங்கள் கட்டுப்படுகிறோம். உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம்’ என்று மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட பலரது கையெழுத்துடன் ஒரு கடிதம்!
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
*********************
பகடன் பொறுப்பாசிரியர் பா.சீனிநேசன் அந்த வழியே சென்று கொண்டிருக்கிறார். தியேட்டர் ஒன்றில் சிவா மனசுல சக்தி போஸ்டர். ‘அட.. இன்னும் ஓடுதுப்பா’ என்று சந்தோஷப் பட்டபடி அருகில் செல்கிறார். வாசலில் ஹவுஸ்ஃபுல் போர்ட்!
சந்தோஷத்தில் உடலெல்லாம் வியர்க்க சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
**************************************
இன்னும் நெறைய இருக்கு.... இப்போதைக்கு இது போதும்!
34 comments:
இந்த விளம்பரங்கள்/யோசனைகள் வோடபோன வளர்க்கறதுக்கா/கவிழ்க்கறதுக்கா?
கடைசி விளம்பரம் அதி அற்புதம்.
ஆதிமூலகிருஷ்ணனுக்கு என் முன்கூட்டிய வாழ்த்துக்கள்!
எங்கே கேபிளார்,ஜீவா பின்னூட்டமெல்லாம் காணோம்.
வோடபோன் லெவலில் எனக்கு விளம்பரம் போட்டதுக்கு நன்றி பாஸ்.! சான்ஸே இல்ல.. வால்பையன் என்று நினைக்கும்போதே அதை விழுங்கும் அளவில் சத்தியமூர்த்திபவன்.. பிரமாதம் என்று நினைக்கையிலேயே சிவா மனசுல சக்தி.. பின்னிட்டீங்க..
நம்ம பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க.. தாமிரா.. இன்று முதல் ஆதிமூலகிருஷ்ணன்!) ஆஃபீஸுக்கு கிளம்பறார். ரொம்ப நாள் டைட்டா இருக்குன்னு போடாத சட்டை ஒண்ணு எடுத்து போடறார். கரெக்டா ஃபிட் ஆகுது. அப்போதான் கவனிக்கறார்.. அட! தொந்தி குறைஞ்சுடுச்சே!
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்க//
கலக்கல் விளம்பரம்
சொல்லியாச்சு போல எல்லோரிடமும்..??
அக்மார்க் பரிசல் பதிவு. உங்களுக்கு மிகப்பிடித்த துறை வேறு (விளம்பரம்). Really gud ones. (நீங்க யோசித்த புது விளம்பரங்களைச் சொன்னேன்!).
ஆதிமூலகிருஷ்ணன் தெரியும். அது யார் சார் தாமிரா? ஏதாவது மூத்த பதிவரா? நட்பு என்றால் இப்படி இருக்கணும். உங்களுக்கு என்ன பாசு, எழுத பல மேட்டர் இருக்கு. நடுவுல நண்பருக்கு இப்பிடி இலவச விளம்பரம் கிடைக்கும். நா என்ன செய்வது? ஒரு அறிவிப்பு என்று வேண்டுமானால் போடலாம். அடப் போங்கையா, இன்னிக்கி இது வரைக்கும் ஹிட்ஸ் இரண்டு பேர் (ஒருவன் நான்). இதுல போட்டா என்ன, போடாட்டா என்ன, திரும்பத் திரும்பப் படிக்கப் போறது நா மட்டுந்தான் :)
அனுஜன்யா
Advocate and police super timing concept boss..!
இஃகி !! இஃகி !! ஒரிஜினல் சூப்பர்னா... புது ஐடியாக்கள் கலக்கல்.
// நா என்ன செய்வது? ஒரு அறிவிப்பு என்று வேண்டுமானால் போடலாம். அடப் போங்கையா, இன்னிக்கி இது வரைக்கும் ஹிட்ஸ் இரண்டு பேர் (ஒருவன் நான்). இதுல போட்டா என்ன, போடாட்டா என்ன, திரும்பத் திரும்பப் படிக்கப் போறது நா மட்டுந்தான் :) //
வரிக்கு வரி ரிப்பீட்ட்ட்ட்டூ......
தலைவா வந்துட்டேன்...
செம..அதுவும் தங்கபாலுவுக்கான விளம்பரம் அருமையா இருக்கும்.
வாழ்த்துக்கள்..
கலக்கிட்டீங்க.
நான் புது பதிவு போட்டுட்டு, தமிழ் மணத்துல இணைக்ககூட இல்லை, அதற்குள் பரிசலுடைய பின்னூட்டம்!!!
சந்தோஷத்தில் அப்படிக் குதிக்கிறேன். சுத்தி முத்தி பார்க்கிறேன்.பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது... வெறும் பத்து பைசாதான் எஸ்ஸெம்மெஸுக்கு....
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
//ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’//
நீங்களா இருந்தா இத எல்லோரிடமும் சொல்லுவீங்களா?
பரிசலாரே பட்டய கிளப்பிட்டீங்க
அதிரடியான ஐடியாக்கள்.. அதிலும் பகடன் ஆசிரியர் ஐடியா சூப்பரோ..சூப்பர்..
:))
அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..
ஒரு புதிய வலைப்பதிவர்(ஆண்ட்ரு சுபாசு) பதிவை பதிந்து விட்டு மறுநாள் வந்து பார்கிறார்..50 பின்னூட்டம் மட்டபடுத்துதலுக்கு காத்திருக்கிறது ..
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
ஒரு புதிய பதிவர்(என்னைய போல) மொக்கையா எழுதி அது அன்னைக்கு பூரா சூடான இடக்கையில இருக்கு. ஆயிரம் ஹிட்ஸ் வேற...
சுற்றும் முற்றும் பார்க்கிறார்..யாரும் இல்லை..
"எல்லோரிடமும் சொல்லுங்கள்"
அய்யோ கொஞ்சம் டைப் பண்ண லேட்டாக்குனா ஆண்ட்ரூ சுபாசு முந்திகிட்டாரே....
தங்கபாலுவுக்கான விளம்பரம் அருமையா இருக்குங்க.
super aa irukkuppa intha padivu....
thamira annakku free promoter a neenga....
pesama lollu thalaivan parisalkaran....
appadinnu neengalum name vaichikongo
//வால்பையன் ஒரு பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு நடக்கிறார்... நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்.
தூரத்தில் ஒரு தண்ணீர் பானை தென்படுகிறது. ஆர்வத்தோடு அருகில் போய் எட்டிப் பார்க்கிறார்... உள்ளே தண்ணீர் இல்லை.
ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
//
வாலு பகிர்ந்துக்க துடிக்கிதா? அதுவும் ஒரே ஒரு பாட்டிலு மட்டும் இருக்கற அந்த இடத்துல!
அவரை நொம்ப்ப்ப்ப்ப் நல்லவன்னு முதல்ல எல்லாருக்கும் சொல்லுங்கப்பு :))))
//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...//
விளம்பரத்தில் கான்செப் பிழை, வால் எப்படி அதை பகிர்ந்துக்கு முனைவார். அப்படியே சட்டைக்குள் சொருவிக்கிட்டு ஓடிவிடுவார்:)
"அண்ணேன் அப்படியே இதையும் சேத்துகோங்க ..
ஒரு புதிய வலைப்பதிவர்(ஆண்ட்ரு சுபாசு) பதிவை பதிந்து விட்டு மறுநாள் வந்து பார்கிறார்..50 பின்னூட்டம் மட்டபடுத்துதலுக்கு காத்திருக்கிறது ..
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’"
periya repeat en name udan...
விளம்பர ஐடியா, விவகார ஐடியாவா இருக்கே.
கே கே உங்க ஐடியா வும் நல்லா இருக்கு ..பின்னூட்டத்தில் வந்த பல ஐடியாக்களும் ரசிக்கும் படி இருக்கு :-)
//பகடன் பொறுப்பாசிரியர் பா.சீனிநேசன் அந்த வழியே சென்று கொண்டிருக்கிறார். தியேட்டர் ஒன்றில் சிவா மனசுல சக்தி போஸ்டர். ‘அட.. இன்னும் ஓடுதுப்பா’ என்று சந்தோஷப் பட்டபடி அருகில் செல்கிறார். வாசலில் ஹவுஸ்ஃபுல் போர்ட்!
சந்தோஷத்தில் உடலெல்லாம் வியர்க்க சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’//
இவரு சந்தோசப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு!
என் பெயர் வர்ற விளம்பரம் இன்னைக்கு கனவுல வந்து தொலைக்குமே!
:-))
எல்லோர் பேரும் சொல்லிட்டீங்க... அதென்ன பகடன் பா.சீனிநேசன்? ஓ! இது அவுங்க பாணியா?
Funny thoughts and ideas. Keep it up.
//ஆனால்.. ஒரு ஃபுல் பாட்டில் ஷிவாஸ் ரீகல் ஒளித்துவைக்கப் பட்டிருக்கிறது.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...//
இந்த "சுற்றுமுற்றும்" ஒளித்து வைத்தவன் அருகில் இருக்கனா? இல்லை கம்பனிக்கு யாராவது இருக்காங்களா ? என்று பார்க்கிறார் ...
கலக்கிடீங்க பரிசல், இதோ என்னோட ஐடியா...!!!
திடீர்னு நம்ம அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் வாரிசுகளுக்கு கட்சியில தனி சலுகையெல்லாம் கிடையாது, திறமை இருப்பவர்கள் யாராயிருந்தாலும் முன்னுரிமையும், வாய்ப்பும் அளிக்கப்படும்ன்னு முடிவு எடுத்து விட்டதாக ஒரு குறுஞ்செய்தி வர, சுற்றுமுற்றும் பார்க்கிறார். பகிர்ந்து கொள்ள எவருமில்லை. விளம்பரம் சொல்கிறது...
‘எல்லோரிடமும் சொல்லுங்கள்’
கலக்கிடீங்க பரிசல், அதி அற்புதம்
Post a Comment