நான் ஸ்கூல்ல படிக்கறப்போ (ஸ்கூலுக்குப் போறப்போன்னு சொல்லுடா) எங்க வீட்ல சொல்லுவாங்க.. ‘நீ ஒரு எக்ஸாம்பிளா இருக்கணும்டா’ன்னு. நானும் அப்படி பல விஷயங்கள்ல ‘உதாரண புருஷனா’ இருந்திருக்கேன். (என்னென்னன்னு கேட்காதீங்க!)
சமீபமா வீட்ல என்னை உதாரண புருஷனா பேசிக்கறதப் பார்த்து... ரொம்ப நொந்து போய் இத எழுத வேண்டியதாப் போச்சு.
அன்னைக்கு உமா மீராவை எழுப்பறப்போ சொல்றாங்க..
“மீரா.. எழுந்திரு.. மணி ஏழாச்சு பாரு... உங்கப்பாவே எழுந்திருச்சுட்டாரு.. நீ என்ன இன்னும் தூங்கீட்டு இருக்க?”
சின்னவ மேகா.. சரியா சாப்பிடல. அதுக்கு இப்படிச் சொல்றாங்க..
“என்ன மேகா.. ரெண்டு தோசை போதுமா? உங்கப்பாவே மூணு சாப்பிட்டாரு இன்னைக்கு..”
எங்கயாவது கிளம்பும்போது...
“ஐயையோ... உங்கப்பாவே கிளம்பீட்டார் பாரு.. சீக்கிரம்.. சீக்கிரம்”
“அப்பாவே டி.வி பார்க்காம, புக்கை எடுக்காம உட்கார்ந்துட்டிருக்காரு.. நீ என்னம்மா இப்ப போயி கத புக்கைத் தேடற?”
“அப்பாவே அந்தக் கடைக்காரன்கிட்ட ஒண்ணும் சண்டை போடாம பேசாம வர்றாரு.. நீ எதுக்கு கோவிச்சுட்டுப் பேசற?”
இப்படி நிறைய...
இந்த மாதிரி இன்னும் உங்களை என்னென்னதுக்கு உதாரணமா சொல்றாங்க? பின்னூட்டத்துல சொல்லுங்களேன்.
****************************
நர்சிம்-மோட பதிவு... ச்சே.. படைப்பு இன்னைக்கு வந்திருக்கற ஜூ.வி-ல 15ம் பக்கம் வந்திருக்கு. இதுவும் இன்னமும் அவர் போகப் போற உயரங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்.
கலக்கலா எழுதியிருக்காரு.. படிச்சு வயிறு வலிக்கற அளவு சிரிப்பு வந்துடுச்சு - இதெல்லாம் எனக்கு ஃபோன் பண்ணி சொன்ன நண்பர்கள் கருத்து.
நான் இன்னும் படிக்கல.
ஏன்?
இங்க திருப்பூர்ல ஜீ.வி. 10 அல்லது 11 மணிக்குதான் கடைகள்ல கிடைக்குது. இன்னொரு அரசியல் வார இதழ் 7 மணிக்கு கிடைக்குது. நாங்க 8.30 அல்லது மேக்ஸிமம் 9.30க்கு ஆஃபீஸுக்குள்ள போயிடுவோம். அப்போ கிடைக்கற புக்கை படிச்சுட்டு, அதுக்கப்பறம் ஜூ.வி வாங்குவோமா? (நான் வாங்குவேன்.. எல்லாரும்?)
இதுக்கு ஏதாவது செய்யணும் பாஸ்!
16 comments:
நர்சிம் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...
வலைபதிவர்களே என்ன பிளாக் எழுதுவது குறைஞ்சி போச்சு... பரிசல பாருங்க கடமை தவறாம சனிக்கிழமை கூட பதிவு போடுறாரு...
மீ தெ பர்ஸ்டு & பாஸ்ட்டு :))
கோபில் சங்கர் அண்ணே கோச்சிக்காதீர்...
Nice unkalai polave thaan but china vasil ipadi anubavithu irukeren yenaku sumaraka thann padivarum aanal romba mosamana manavanilai en thambi 1st rank edupavan amma avanudan opitu pesi pesi sarva suthamaka padipu yeramal poi padipil nasamai ponathuthaan misam intha nimasam varai enaku padikavedum endrale veruputhaan
//இங்க திருப்பூர்ல ஜீ.வி. 10 அல்லது 11 மணிக்குதான் கடைகள்ல கிடைக்குது. இன்னொரு அரசியல் வார இதழ் 7 மணிக்கு கிடைக்குது. நாங்க 8.30 அல்லது மேக்ஸிமம் 9.30க்கு ஆஃபீஸுக்குள்ள போயிடுவோம். அப்போ கிடைக்கற புக்கை படிச்சுட்டு,//
நீங்களும் விஜயகாந்துக்கு எழுதைய மாதிரியே இருக்கு..
வாழ்த்துக்கள் கேப்டன்.
எங்க வீட்டுல "பாரு எப்படி மிச்சம் வைக்காம வீணடிக்காம சாப்பிடுறேன்"னு என்னைச் சொல்வாங்க.
பாருங்க இப்ப..இப்பகூட "ஒரு இட்லி மிச்சம் இருக்கு சாப்பிடுங்க"னு என்னைப் பார்த்து தட்ட நீட்டுரங்க.
:((((
//நர்சிம்-மோட பதிவு... ச்சே.. படைப்பு இன்னைக்கு வந்திருக்கற ஜூ.வி-ல 15ம் பக்கம் வந்திருக்கு.//
வாழ்த்துகள் நரசிம்!!
பரிசல பாருங்க கடமை தவறாம சனிக்கிழமை கூட பதிவு போடுறாரு..
இந்த மாதிரி கூட இன்னும்
உதாரணமா சொல்றாங்க.
Tirupur Anuppar palayathula innaiku kalailaye kedachuthe...
Romba nalla irukku.. Nice...
இந்த மாதிரி நிறைய சொல்லலாம் தல..
அப்பாவே குளிச்சிட்டாரு பாரு..
அப்பாவே நிறைய (சாதா) தண்ணீ குடிக்கறாரு பாரு..
அப்படி இப்படின்னு 24 மணி நேரம் போதாது இதெயெல்லாம் சொல்ல... அவ்வ்வ்..
பரிசல பாருங்க எவ்வளவு நல்லா எழுதறாரு? நீங்களும் இருக்கீங்களே.
நர்சிமிற்கு வாழ்த்துக்கள் !!
//பரிசல பாருங்க எவ்வளவு நல்லா எழுதறாரு? நீங்களும் இருக்கீங்களே.//
:)
"VIKNESHWARAN said...
நர்சிம் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...
வலைபதிவர்களே என்ன பிளாக் எழுதுவது குறைஞ்சி போச்சு... பரிசல பாருங்க கடமை தவறாம சனிக்கிழமை கூட பதிவு போடுறாரு..."
MATTER IRUNDHA NANGA ELUTHA MATTOMA???
MATTERE ONNUM ENGU ILLAI....
எங்க வீட்டுல நான் தான் நல்ல தூங்குவேன்.....
+2 எக்ஸாம் எழுதும் போது கூட துங்கி இருக்கேன் .....
"நர்சிம்-மோட பதிவு... ச்சே.. படைப்பு இன்னைக்கு வந்திருக்கற ஜூ.வி-ல 15ம் பக்கம் வந்திருக்கு"
congrats dude
உதாரணபுருஷன் நல்ல நகைச்சுவை.. நர்சிம்முக்கு வாழ்த்துகள்.!
எங்க வீட்டில் ...
****என் பய்யனே கொற சொல்லாம சாப்ட்டுட்டானா பாத்துக்குங்க.*****
வாழ்த்துகள் நரசிம்!!
Post a Comment