கவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....
அவனுக்குக் கவிதைகள் மீதான ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கவேண்டும். ஆனால் அவனுக்குக் கவிதைகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. ஒன்று அவனுக்குக் கவிதைகளைத் தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது கவிதைகளுக்கு அவனைப் பிடிக்காமல் இருந்திருக்கும்.
கவிதைகள் அவனுக்குப் பிடிக்குமென்றாலும் கவிதைகளுக்கென அவனொதுக்கிய நேரம் மிகக் குறைவு. எழுத மட்டுமல்ல.. படிக்கவும்.. அவனும் கவிதைகள் எழுதியிருக்கிறானென்றாலும் அதைக் கவிதைகள் என்று சொல்வதில் அவனுக்குத் துணிச்சலில்லை. அவை கவிதைகளாகவே இருந்த போதிலும். ஆனால் ரசிக்க அவனுக்கு நிறைய வாய்ப்பிருந்தது.. காரணம் நண்பர்கள்.
நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதாவதொரு கவிதையைச் சொல்லி அவனைப் பித்துப் பிடிக்க வைத்துவிடுவார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. ஏதோவொரு பிரபலத்தின் ஏதோவொரு கவிதை அவனுக்கு எம்.வி.வி-யின் ‘காதுகளி’ல் வருவதுபோல அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே அவனைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தது.
‘இந்தச் சாவிலும் சுகமிருக்கிறது’ என்று முடியும் கவிதைக்காக அவன் என்னவும் செய்யத்தயார். அதை எழுதியவர் அப்படி.
இந்தக் கவிதையும் அப்படித்தான். ‘டைரி எழுத எத்தனிக்கும்போது மட்டும் இத்தனை போலித்தனங்கள் எப்படி வந்து விழுகின்றன அப்பா’ - இதை எழுதியது யாரென்று தெரியவில்லை. ஏன்.. இதன் வடிவம் கூடத் தெரியவில்லை அவனுக்கு. ஒரே நேர்கோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறான் அவன்.
இதையெல்லாம் சொல்வதைக் கூட சிலர் பரிகசிக்கக் கூடும். அதுபற்றிய பிரக்ஞை இல்லாமல் இதை எழுதிக்கொண்டிருக்கிறான் அவன். அவனுக்கு இதையெல்லாம் சொன்ன நண்பர்களுக்கான அவனும் கவிதை எழுதுவேன் பேர்வழியென்று நேற்று ஒரு முயற்சியெடுத்தான்.
அதைத் தற்கொலை முயற்சி என்கிறார்கள் சிலர். சொல்லக் கேட்டவர்கள் “இதை நீயாக நினைத்துக் கொண்டால் தற்கொலை முயற்சி. எங்களுக்குச் சொன்னால் ‘கொலை முயற்சி’” என்கிறார்கள்.
அப்படியென்ன சொல்லிவிட்டான் அவன்?
அவன் சொன்ன கவிதை.. அல்லது கவிதை போலொன்று.. முதலில் வேறு..
அதை இங்கே சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதைச் சொல்லிக் கேட்டான்...
இது நல்ல கவிதையா என்று...
இதே போலவொரு கவிதையை ஏற்கனவே படித்துவிட்டதாகச் சொன்னானொரு நண்பன். இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
காரணம்..
இதோபோல ஏதோவொன்று இதற்கு முன்னால் என்றால்...
இது கவிதை என்றுதானே அர்த்தம்????
ஆனாலும் அந்த சந்தோஷத்தை நீட்டித்துக் கொள்ள எண்ணிய அவன்.. அவருக்கு அலைபேசினான்.
“இந்தக் கவிதை போலென்று ஏற்கனவே வந்ததா?” எனக் கேட்டான். ‘இல்லை.. இருந்திருக்கலாம்.. இல்லாமலிருந்துமிருக்கலாம்’ என்றார் அவர். ‘நான் கேட்டதில்லை. ஆனாலும் சரியாகத்தான் இருக்கிற’தென்றார் அவர். அது போதுமானதாயிருந்தது அவனுக்கு.
அதோடு நின்றிருக்கலாம்.. ஆனால் அவன் கவிதாவிசாரணை அதோடு நிற்கவில்லை. தேவதச்சன், பிரம்மராஜன் என்று ஒருநாளில் பயணித்த அது... பசியோடு ஒருவிடம் வந்து சேர்ந்தது..
அது... சரவணபவன்.
இதோ.. இந்த நிமிடம் வரை நல்லதொரு பதிவாய் அல்லது நல்லதொரு பதிவுபோலப் போய்க்கொண்டிருக்கும் இது இப்போது தடம் மாறப் போகிறதென்பதை இந்த நிமிடத்தில் நீங்கள் உணரக்கூடும்... அவனைப் போலவே..
மிக்கப் பசியோடு ஐந்து இட்லியை ஆர்டர் செய்தவனுக்கு இரண்டு இட்லிகளே தரப்பட்டது. சண்டையிடச் சென்ற அவனுக்கு.. சர்வர் இரண்டாயிருந்த அந்த இட்லியில் முதலை எடுத்து இதோ இரண்டென்றும்.. இன்னொன்றை எடுத்து இதோ மூன்றென்றும் பிரித்துப் போட்டபின்தான் அந்த இரண்டில் ஐந்து ஒளிந்திருந்தது அவனுக்குப் புலப்பட்டது.
அந்த கணம்தான் அவனுக்கோ.. கவிதைக்கோ சிறு சலனம் ஏற்பட்டது. அவன் மனதில் அந்தக் கவிதை தோன்றியது...
சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.
இட்லி முடியுமுன்னே வந்துவிழுந்த இந்தக் கவிதை அவனுக்குப் பசியைப் போக்கி விட்டது. (கவிதைப் பசியை அல்ல...)
இதையும் வழக்கம்போல அவனது நண்பனைக் கூப்பிட்டுச் சொன்னபோது... ‘என்ன சொல்ல வர்றே-ன்னு சொல்லீடு’ என்றான் அந்த நண்பன்.
விளக்கினபிறகு அந்தப்பக்கத்தில் நண்பன் சிரித்த சிரிப்பு இவனுக்குப் பாராட்டா நக்கலாவெனத் தெரியாமலிருக்கிறான் இப்போதுவரை.
அடுத்ததாக அவன் தேர்ந்தெடுத்தது அவரை. கவிதைகளில் பிரபலமாயிருந்த அவரிடம் இதைச் சொல்லி... ‘இந்தக் கவிதை எப்படீண்ணே’ என்றபோது அவர் சொன்னார்...
உடனே சொன்னாரவர்...
“இதெப்படியிருக்குன்னு கேளு. நியாயம். இந்தக் கவிதை-ன்னு கேட்காதே”
“ஏண்ணா?”
“இது கவிதையே அல்ல”
“எப்படீ?”
“‘என் வீட்டுக் குழாயைத் திறந்தேன். தண்ணீர் வரவில்லை’ இப்படி நான் சொல்றேன். இத நீ கவிதைம்பியா?”
“புரியலண்ணா..”
“சரி.. அதுல நீ என்ன சொல்ல வர்ற?”
“பலவிஷயம் இருக்கு. அந்த இட்லி அவ்ளோ ச்சின்னது. (சி-க்கு முன் ‘ச்’சைக் கவனிக்கவும்!) அவன் சாப்பிடறதுக்கு முன்னாடியே அது முடிஞ்சிருச்சு”
“சரி...”
“இன்னொரு கோணம் இருக்கு. இவன் இட்லியை ஆர்டர் செஞ்சு சாப்பிட ஆரம்பிச்சப்போ... சரவணபவன்லயே இட்லி முடிஞ்சிருச்சு. அடுத்து வர்றவங்களுக்கு இல்ல. அதைச் சொல்றான் அவன்.. ‘சாப்பிட ஆரம்பித்தான்-முடிந்துவிட்டது’ ன்னு”
“சரி”
“இன்னொரு உலகியல் கோணத்துல இதை நீங்க பார்க்கணும்”
“என்ன?”
“சரவணபவன்ல ஆர்டர் செஞ்சு சாப்பிடறான் இவன். ஆனா பலருக்கு இட்லியே இல்லைங்கறதயும் சொல்றோம்”
கொஞ்ச நேரம் எதிர்முனையில் நிலவிய மௌனம் இவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
“அண்ணா...”
“உனக்கு கவிதைகள் பற்றி நான் சொன்னதுக்கு மன்னிக்கணும். தப்பா நினைச்சாலும் பரவால்ல.. இது கவிதை அல்ல. அப்படியே வெச்சுகிட்டாலும்.. இதுல சரவணபவன் தேவையற்றது”
“ஆனா.. சரவணபவன்லதான் இப்படி”
“அதை நீ சொல்லவேண்டியதில்ல”
“போங்கண்ணா... இட்லி சின்னதாயிருக்கா இல்லையாங்கறத உலகியலோட அழகியலோட பார்க்கறேன் நான். உங்களால அதப் புரிஞ்சுக்க முடியலையாண்ணா”
“சரி.. நாளைக்குப் பேசறேன் நான்”
இதோடு அந்த சம்பாஷணை முடிந்துவிட்டது.
ஆனால் இவன் இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறான்..
எது கவிதையென்று புரியாமல்...
புரிந்துகொள்ளக்கூடுமொருநாளவன்.. அது அவனுக்கோ கவிதைக்கோ நல்ல நாளாகத்தானிருக்கும்.
39 comments:
இது நல்ல கதை !!!
நான் கூட யார்ரா இந்த கவிதான்னு யோசிச்சேன்.
நல்ல கவிதை மாதிரி இருக்கு தல...
//போங்கண்ணா... இட்லி சின்னதாயிருக்கா இல்லையாங்கறத உலகியலோட அழகியலோட பார்க்கறேன் நான். உங்களால அதப் புரிஞ்சுக்க முடியலையாண்ணா”
//
சூப்பருங்கண்ணா...
ஐய்ங்...
:)
//சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.
//
ஹிஹிஹி
ஆமாம்...எது கவிதை
:-))
:) சென்னையில் சூடு ஜாஸ்தியா?
நல்ல கவிதை போங்ங்ணா....!!!
//சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.///
வாஹ்! வாஹ்! வாஹ்!
ஆனாலும் இம்புட்டு கொல வெறி ஆகாதுங்ண்ணா..;-)
//“இன்னொரு கோணம் இருக்கு. இவன் இட்லியை ஆர்டர் செஞ்சு சாப்பிட ஆரம்பிச்சப்போ... சரவணபவன்லயே இட்லி முடிஞ்சிருச்சு. அடுத்து வர்றவங்களுக்கு இல்ல. அதைச் சொல்றான் அவன்.. ‘சாப்பிட ஆரம்பித்தான்-முடிந்துவிட்டது’//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!
கதற கதற கவிதைக்கு பொருள் சொல்றீங்களே !!!!!
இப்போ என் கஷ்டம் புரியுதா கே.கே.?
அனுஜன்யா
ஏன் இந்த கொலை வெறி ...முடியல...
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. அது என்ன?
சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது
(ராஜாகோபால் கேஸ் ”முடிந்து” தீர்ப்பு வந்து “விட்டது” சாப்பிட ஆரமிபிக்கும் போது)
அது என்ன அப்படியொரு தலைப்பு!
கவிதை விசாரணையும்னு போடலம்ல?
நானும் என்னவோ ஏதோனு நினைச்சு பாத்தா வேற என்னமோ?
ம்ம்,, சும்மா கிணடலுக்கு, சரியா!
:))
//சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.//
இதுல பொருட்பிழை இருக்கு.... கவிதை எழுதுனது அவன்.. அப்போ "சாப்பிட ஆரம்பித்தேன்"னுதானே இருக்கனும்?? அதனால இத கவிதைன்னு ஒத்துக்க முடியாது :))
திருப்பூரில் வெயில் ரொம்ப ஜாஸ்தியோ!!!!
சரவணா பவனில் இட்லி மட்டும் அல்ல, என்ன வாங்கினாலும் சாப்பிட நினைகையில் முடிஞ்சு போகுது.
Sathiyama mudiyala padikeravanka nelamaya yochichu parunka sir
ஏன் இந்த கொலை வெறி
திருப்பூரில் வெயில் ரொம்ப ஜாஸ்தியோ!!!!
ஆஹா....... ஓஒஹோ........ !!!
பேஷ் .......பேஷ்.... !!!
பலே.....பலே....... !!!
நெம்ப சூப்பர் ....... !!!
சான்ஸே இல்ல........!!!
பென்டாஸ்டிக்.........!!!
மார்வலஸ்........!!!
மிராக்கில்....!!!
பிலீவபில்...........!!!
பின்னிபோட்ட கண்ணு.......!!!!!!.........
ஐயோ ....!! ஐயோ.....!! ஐயோ...!!!
வலைத்தளம் ஹேக் பண்ணிய தகவல் உண்மை தான் போல......
இது பரிசல்காரன் பதிவு மாதிரி தெரியலியே...
Anna plzzzzzzzzz.... :((((((
//
உலகியலோட அழகியலோட
//
சொன்னா கேக்குறாங்களா? வெயில் அதிகமா இருக்கு. ஒரு தொப்பி போட்டுகோங்க, அப்பப்ப குளிர்ச்சியா எதுனா சாப்பிடுங்கன்னு..
அண்ணா இன்னொரு பதிவுல சொல்லப்பட்ட தொலைபேசிக்கும் இங்கே சொல்ல படுகிற புனைவுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா ?? :)
இது மாதிரியெல்லாம் கொல்ல நான் இருக்கேனே..பத்தாதா!!!
இன்னாபா மெட்ராஸ் வெயில கண்டுகினு வந்துகினியா? பொழுது போயி மெட்ராஸ் mansion பசங்க பேசற மேரியே பேசினு கீறியே?
இத இத இதத்தான் தேடிக்கிட்டிருக்கேன். நானும் யோசிச்சிப் பாத்துட்டேன். க்வித என்னன்னு பிடிபடவே மாட்டேங்குது!
:-)))))))))
nalla comedy.
அண்ணே.. எங்கயோ போய்ட்டிங்க..:)
சப்பென்றிருக்கிறதுன்
கவிதைகளென்கிறாய்
வாசிக்கச் சொன்னால்
நக்கியா பார்ப்பது?!
- கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முடியலத்துவப்பா.
வெளியே போய்ட்டு வநதீங்கன்னா ரெஸ்ட் எடுக்கலாமில்ல.. கண்டிப்பா பதிவு போட்டு தான் ஆவணுமா..?
//
“போங்கண்ணா... இட்லி சின்னதாயிருக்கா இல்லையாங்கறத உலகியலோட அழகியலோட பார்க்கறேன் நான். உங்களால அதப் புரிஞ்சுக்க முடியலையாண்ணா”
//
இட்லி முக்கியமுங்ணா...சரவண பவன்ல ரொம்ப சின்னதாருக்குன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை உண்டு..
அப்ப கவித?? அந்த இட்லி இல்லாட்டி இந்த கவிதை இல்ல இல்லியா? அப்ப கவிதை பெருசா இட்லி பெருசா??
:0))
//
சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.
//
சரி கவிதைன்னு பரிசல் அண்ணனே சொன்னப் பெறவு எதுவும் சொல்லாட்டி நல்லாருக்காது...
உண்மையைச் சொன்னா, வாரமலர்ல வர்ற கவிதை மாதிரி இருக்கு...
:0))
வேறு யாரோ ஒரு மூத்த பதிவரின் மொழி நடையை போல் உள்ளது என்ற குறையை தவிர நன்றாக தான் இருக்கிறது!
எனி ஹெல்ப்?
ஒரு லெமன் வாங்கி இரண்டா வெட்டி
செவ செவ செவ செவ செவ செவ செவன்னு ,எப்படி? செவ செவ செவன்னு நல்லா தேச்சா எல்லாம் சரி ஆகிவிடும்!
:--)
//எனி ஹெல்ப்?
ஒரு லெமன் வாங்கி இரண்டா வெட்டி
செவ செவ செவ செவ செவ செவ செவன்னு ,எப்படி? செவ செவ செவன்னு நல்லா தேச்சா எல்லாம் சரி ஆகிவிடும்! //
இதைதான் நானும் சொல்லுறேன்.. ஆனாலும் நாம் எலோரும் ஒன்னை ஒத்துக்கனுங்க.. சரவணபவன்ல பொங்கல் கேட்டா, காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரிதான் வைக்கிறாங்க. ரெண்டு புல் மீல்ஸ ஒரே நேரத்துல சாப்பிடுற நமக்கு இது எந்த மூலைக்கு??
hello
i am new to blooger
plz add my blog to ur link
sankar
http://sankarkumarpakkam.blogspot.com/
Post a Comment