
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்றமுறையே மிகுந்த எதிர்பார்ப்பையும், எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெற்றியையும் பெற்று இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களை ஏகத்துக்கும் தயார்படுத்திவிட்டது.
ஐ.பி.எல் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் பாகிஸ்தானில் இலங்கைவீரர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது. ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது தேர்தலும் வருவதால் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமமிருக்குமென்ற கவலையைத் தெரிவிக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் சிதம்பரம்.
ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி பலவித யோசனைகள், சர்ச்சைகளுக்கிடையே ‘போட்டிகளை இந்தியாவில் நடத்தமாட்டோம். இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும். இந்திய ரசிகர்கள் மன்னிக்கவும்’ என்று அறிவிக்கிறார். (நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!)
இங்கேதான் ஆரம்பித்தது அரசியல். உடனே குஜராத் தலைவர் நரேந்திரமோடி ‘இது தேசத்துக்கே அவமானம்’ என்றொரு அறிக்கை வெளியிடுகிறார். கோபம் கொண்ட சிதம்பரமும் ‘இதொன்றும் தேசத்துக்கு அவமானமல்ல. 2002 குஜராத் கலவரங்கள்தான் இதுவரை தேசத்துக்கு அவமானமாக இன்றுவரை இருந்து வருகிறது’ என்கிறார்.
காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டு அலசி ஆராய்ந்து.. ‘மோடி இப்படிச் சொல்கிறாரே.. அவரது குஜராத் மாநில டி.ஜி.பி வாக்குப்பதிவுக்கு 15 நாள் முன்னும் 3 நாட்கள் பின்னும் பாதுகாப்புக் கொடுப்பதில் சிரமமிருக்கும்’ என்றாரே.. அதைத்தானே நாங்களும் சொன்னோம்’ என்கிறார்கள்.
இதற்கிடையில் பாதுகாப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில் பி.சி.சி.ஐ. அவசரப்பட்டு போட்டியிடங்களை மாற்றப் போவதாக அறிவித்தது துரதிருஷ்டவசமானது என்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருகிறது.
‘ஏற்கனவே மூன்று முறை ஷெட்யூலை மாற்றியாயிற்று. இன்னும் காத்திருக்க இயலாது. மேலும் எங்களை நம்பி வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம்’ என்ற லலித்மோடி மத்திய அரசு NO EXTRA TROOPS FOR SECURITY என்றதையும் கர்நாடகா உட்பட சில மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
இடையே அருண்ஜேட்லி சிதம்பரத்தை நோக்கி சில விமர்சன அம்புகளை வீசுகிறார். ‘ஒரு பாதுகாப்பான நாடென்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டாமா? நாளைக்கே கும்பமேளா நடக்கும்.. இத்தனை பேர் வந்தால்தான் பாதுகாப்பு என்பீர்களா? இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதக்கூட்டம், விழாக்கள் என்று எத்தனை இருக்கிறது. இது இப்படியே போய் எங்கே கொண்டுபோய் விடும்? மற்ற நாடுகளில் நம் பெயர் பாதிக்கப்படாதா? ஐ.பி.எல். என்பது ஏறக்குறைய நமது உள்ளூர் போட்டி. இதை வெளிநாட்டில் நடத்துவது என் நாட்டில் எனக்குப் பாதுகாப்பில்லை என்பதாகாதா? இது வளர்ந்து இந்தியச் சுற்றுலாவே பாதிப்புக்குள்ளாகாதா’ என்றெல்லாம் அவர் அடுக்கிய கேள்விகளுக்கு ‘ஜேட்லி எப்போதுமே எதையுமே மிகைப்படுத்திப் பேசி அரசியல் செய்பவர். ஐ.பி.எல் வெறும் ஸ்போர்ட்ஸ் அல்ல. மிக்க புத்திசாலித்தனமாக ஸ்போர்ட்ஸும் பிஸினஸூம் கலக்கப்பட்ட கலவை அது. இவ்வளவெல்லாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை’ என்று பதில் சொல்லிவிடுகிறார் சிதம்பரம்.
இறுதியாக....

நேற்று ‘தென்னாப்பிரிக்காவில்தான் ஐ.பி.எல்-2’ என்று அறிவிக்கப்பட்டு விட்டது! (இனி அது IPL ஆ SAPLஆ?)
ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பத்தாவது நாளே இரண்டாம் T 20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் அங்கே வைத்தால் நம் ஆட்களுக்கு பிட்ச், காலநிலைகள் பழகிவிடும் என்று சச்சின் டெண்டுல்கர் சொன்னது போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏப்ரல், மே-யில் இங்கிலாந்தின் காலநிலைகள் கிரிக்கெட்டுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டு விட்டதாக லலித்மோடி அறிவித்து விடுகிறார். ஏப்ரல் 10ல் ஆரம்பிக்க வேண்டிய ஐ.பி.எல், ஏப்ரல் 18ல் ஆரம்பமாகி மே 24ல் முடிவடைகிறது. (எலக்ஷன் ஏப்ரல் 16-மே 13)
59 ஆட்டங்கள் அடங்கிய ஐ.பி.எல்-2 இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்காக இந்திய நேரம் மாலை 4 மணி, மற்றும் 8 மணிக்கு நடைபெறும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதால் என்ன லாப நஷ்டங்கள்? நிச்சயமாக வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் வருகையால் சுற்றுலாத்துறைக்கு வரும் வருமானம் இழப்புதான்.
வீரர்களுக்கு... யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
நேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்த பெருந்தலைகளுக்கு இது ஏமாற்றம் தரும் செய்தியாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம்! சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை)
இங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா? (இது வேணா நடக்கும்!!)
ரசிகர்கள் இதைப் பார்க்கும் கோணம் வித்தியாசமாக இருக்கிறது.
*இந்தியாவில் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கிரிக்கெட்டிலும் வந்துவிட்டது.
*இனி கிரிக்கெட் சாமானிய இந்தியனுக்கல்லவா? மோடிகளுக்குத்தானா?
*தென்னாப்பிரிக்காவில் சட்டம், ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சிறு பணத்திற்கெல்லாம் கொலைகள் நடப்பது உங்களுக்குத் தெரியுமா? வீரர்கள் பாதுகாப்பு சரி... போட்டிகளைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?
இப்படி கேள்வி மேல் கேள்வி வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.
அந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.
30 comments:
//இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.
//
அட ஆமாங்கண்ணா.. நீஙக் சொல்றது சரிதான்
இறுதியில் நீங்கள் வைத்த முற்றுப்புள்ளி நிதர்சனம்.
தென் ஆப்ரிக்காவில் இந்திய ரசிகர்கள் அதிகம் தான்.ஆனால் அவர்கள் எந்த அணிக்கு ஆதரவளிப்பார்கள்..யார் சிக்சருக்கு விசில் அடிப்பார்கள் என்பது கேள்விக்குறி.
எது எப்படியிருந்தாலும் மஞ்சள் பெயிண்ட் முகத்திலும்,மஞ்சள் நிற டீஷர்ட்டையும் அணிந்து கொண்டு, டோனி அடிக்கும் சிக்சரை மைதானத்தில் சென்று பார்ப்பது ஒரு தனி சுகம்ங்க..
ஒரு முறை அனுபவிச்சி பாருங்க..( 2010ல் ஆவது )
/// இங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா? ///
இது ஒரு நல்ல கேள்வி...
பாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாது
அதே போல நம் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//(நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!)
அட....நம்ம சாதிக்கார பயபுள்ள....
மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை. நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது. அதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(
//
பாதகாப்பு தர முடியாது என்று சொல்வது ஏற்று கொள்ளமுடியாது
//
கிரி,
சென்ற முறை சென்னை ஹைதை அணிகளுக்கிடையேயான போட்டிக்கு சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். சேப்பாக்கம் முழுவதுமே மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் விழாவைப் போல ஜே ஜே என்று இருக்கும். இதற்கு நடுவில், இரண்டு நாட்களுக்கும் தேர்தல் அதற்கான பிரச்சாரம் என்றெல்லாம் இருந்தால் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?
இந்தியக் குடிமகனாக நமக்கு தேர்தல் முக்கியம், அது எவ்வளவு மோசமான பணநாயகமாக இருந்தாலும். அதற்கப்புறம்தான் கிரிக்கெட் எல்லாம். ஒத்துப்போவீர்கள் என்று நினைக்கிறேன்.
IPL இட மாற்றம் பற்றி நான் அறிந்த விஷயங்களைக் கொண்டு ஒரு பதிவு தயார் அப்ன்னிக் கொண்டிருந்தேன்.. உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. நான் ஒரு இந்தியக் குடிமகனிடம் இருந்து தேடிய பல விஷயங்கள் கிடைத்தன..
உங்களது பல கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. முக்கியமாக..
//எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!
யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம்! சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை etc etc
ஆனால் இறுதியில் வெண்பூ சொன்ன விஷயம் மிகச் சரியே.. (வெளி நாட்டவனாக இருந்தாலும் இந்தியா பற்றி அறிந்தவகையில் சொல்கிறேன்)
இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.
அந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.
MIKA MIKA SARI SARIYANA VARTHAIKAL
அதிலும் இப்போது தேர்தல் நாளிலேயே போட்டி நடத்தப்போகிறார்கள். சும்மாவே 60% வாக்குப்பதிவு தாண்டாது, இதில் இது வேறு. வெறுப்பாக இருக்கிறது. :(
EPOTHUM ELORUM CRICKET THAAN PARKA POKIRARKAL TVYIL OTU PODA POVATHILAI NAM MAKAL
நல்ல நேர்மறையான கருத்துக்களைகூறியிருக்கிறீர்கள் தல..
சர்வதேச அனுபவத்திற்காக இடம் மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தல
@ வெண்பூ
//மன்னிக்கணும் பரிசல், இதில் எனக்கு உடன்பாடில்லை.//
@ SUREஷ்
//ஆனால் பாதுகாப்பு காரணங்கள் சொல்லி இடம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தல//
வெண்பூ என்கிட்ட எதுக்குங்க மன்னிப்பு கேக்கறீங்க? நானெங்க இது சரியான முடிவு, தப்பான முடிவுன்னு விமர்சனம் பண்ணியிருக்கேன்?
ஒரு செய்தியை அப்படியே சொல்லியிருக்கேன் அவ்ளோதான். இதுல எங்கயுமே என்னுடைய கருத்த சொல்லலியே.?
அதேசமயம் கடைசி பாரால சொல்லப்பட்ட மாதிரி ஆரம்பிச்சா எல்லாம் காணாம போகும்கறது உண்மை.
FYI... ஓட்டுப்பதிவு காலைலயே ஆரம்பிக்கும். போய் போட்டுட்டு வந்து அப்பறமா மேட்ச் பார்க்கலாம்! :-))))
தேர்தலைவிட கிரிக்கெட் முக்கிய்மா என்றால்...
இல்லை.
@ LOSHAN
//உங்களை நான் பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. //
ஏன்.. இல்ல ஏன்னு கேட்டேன்....?
@ வெண்பூ
பார்ட்னர்.. ஒருவேளை நீங்க உடன்பாடில்லைன்னு சொன்னது இந்த நேரத்துல தேர்தலை விட்டு கிரிக்கெட் பற்றி பதிவு தேவையா=-ங்கற அர்த்தத்துலயா?
அப்படீன்னா என் பதில்..
ஒரு செய்தியை முழுக்க ஃபாலோ பண்ணி தொகுத்தா எப்படி வரும்னு சோதனை பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டு.. அதுக்கு இந்த ஐ.பி.எல்லை தேர்ந்தெடுத்து குறிப்பெடுத்துக் கொண்டெ வந்தேன். அதுதான் இந்தப் பதிவு.
இதையே ஏன் அரசியல் பற்றீ எழுதலன்னா..
ஹி..ஹி,.. மாத்தி மாத்தி பேசறாய்ங்கபபா... ஒரே கொளப்பமா கீது...!
பரிசல், நான் உடன்பாடில்லைன்னு சொன்னது, பி சி சி ஐயும், அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை வெச்சி அடிக்கிற கூத்தைத்தான்.. உங்களை இல்லை..
உங்களை நான் follow பண்ணுவதால் தளம் வந்தேன் படித்தேன்.. :)
ஏன்யா எனக்குப் பிடிச்ச எழுத்துக்களை follow பண்றதும் தப்பா? அண்ணே என்னுடைய பதிவும் இது பற்றி கொஞ்ச நேரத்தில வரும் பரவாயில்ல தானே?
ellam sari app intha vatti cheer girls parkka mudiyatha.....
he he he
naan basketball player...
athanal cricket en avvalava puthiyathu
mukkiyama enakku cricketai patriyum theriyathu.....
நானும் ஒரு கிரிக்கெட்டர்தான். இருந்தாலும் சொல்கிறேன், எங்கு நடந்தால் எனக்கென்ன? மலேசியாவில் நாங்கள் ஓசியில் பார்க்க முடியாது? ஒரு 100 வெள்ளியாவது பணம் கட்ட வேண்டும்.
அய்யய்யோ.......!!!!!
.
.
.
.
.
.
.
அப்புடியா.......???
.
.
.
.
.
ஆமாவா........??
.
.
.
.
அவுணா.....??
.
.
.
.
.
.
.
.
அவுதா.........???
அரசியல் விளையாடுகிறது.
//ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். //
இல்லை இல்லவே இல்லை, அத்தனை கூட்டத்தோடு, அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கு ஓஓஓ வென்று எழும் பேர் இறைச்சலோடும், அடிக்கும் ஒவ்வொரு 4க்கும் அரங்கம் அதிர ஆடும் டான்ஸோடும் பார்பது
என்பது ஒரு தனி அனுபவம். அதோடு எழும் மெக்ஸிகன் வேவ் தன்னையும் அறியாமல் எழ வைக்கும்!இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சுக்கே அத்தனை அனுபவம், அப்பொழுது நண்பரிடம் சொன்னது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் அதுவும் டெண்டுல்கர் 100 அடிக்கவேண்டும் இந்தியா ஜெயிக்கும் அந்த மேட்சை மக்களோடு ஒரு முறையாவது பார்க்கனும் என்று.
வாய்பு கிடைத்தால் ஒரு முறை நேரில் பாருங்கள் பரிசல்!
// நாட்டின் தேர்தலை விட 10 பேர் பணம் சம்பாதிக்க செய்யப்படும் பிசினஸ் முக்கியம் என்று நாட்டின் பெரிய கட்சிகளே குரல் கொடுப்பது அசிங்கமாக இருக்கிறது.//
சரியாச் சொன்னீங் தல
பாப்போம் அங்க என்ன நடக்குதுன்னு.
பெருசா கேட்கலக்சன் இல்லைன மறுபடியும் இங்கையே வந்துடப்போராங்க.
போய்த் தொலையட்டும்.. நாமளாவது நிம்மதியா இருக்கலாம்..!
கிரிக்கெட், கிரிக்கெட்ன்னு பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சு பலரின் வாழ்க்கையும் திசை மாறியதுதான் மிச்சம்.. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்ணில் கோட்டைவிட்டபோதுதான் உறைத்தது அத்தனை பேருக்கும்..
கோடி, கோடியாக அத்தனை பேரும் கொள்ளையடிக்க நாட்டு மக்களின் பணமும் கண் முன்பாகவே கொள்ளை போகிறது..
அப்படியே எல்லா மேட்ச்சையும் வெளிநாட்டுலேயே வைச்சுட்டா.. ரொம்ப, ரொம்ப புண்ணியமாக இருக்கும்..!
என்னமோ போங்கப்பா ...
//அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? //
கண்டிப்பாக ஆர்ப்பரிக்கும்
அரங்கில் வந்து பார்க்கும் ரசிகர்களை விட தொலைகாட்சியில் விளம்பரங்களுக்கு இடையில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களே முக்கியம் என்று கூறாமல் கூறிவிட்டார்கள்
***
ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள்.
***
ஒரு விதத்துல சரி தான் பரிசல். ஆனா கேப்டன் செட் பண்ற fielding arrangment எல்லாம் நுணுக்கமா புரிஞ்ச்கனம்ன்னா மைதானம் தான் பெஸ்ட். தொலைகாட்சில எல்லாம் சரியா வராது.
south africala சம்மர்ல நடக்கற டெஸ்ட் மேட்ச் பாக்க வரும் மக்களை பாத்தா
ஜில்பான்சா இருக்கும். அதே மாதிரி இதுவும் இருக்கும்ன்னு நினைக்கறேன். cheer girls எல்லாம் தேவை இல்ல. அவங்கள விட கம்மியா !
பல கோடிகள் செலவு செய்து ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், சில நாட்கள் தான் காத்திருப்பார்கள்.
அதன் பின் அவர்களது சொந்த நாட்டு டீமில் விளையாட அழைப்பு வரும், போகவில்லையென்றால் மொத்தமாக கல்தா தான்.
Valthukkal
vithiyasamana pathivu thalaiva
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com
எங்க நடந்தா என்னங்க?? போர் அடுச்சா பொண்ணுங்க டான்ஸ் ஆடுவாங்கதான?
நன்றாக அலசியுள்ளீர்கள் பரிசல். இது தொடர்பாக நன் ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே..
http://tamilsam.blogspot.com/2009/03/blog-post_22.html
Post a Comment