அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது என்று சொன்னார் ஒரு நண்பர். எப்படி என்று கேட்டேன். மிகவும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைத்துவிடுகிறது. தடை செய்யப்பட்ட இடத்தில் சிகரெட் பிடித்தால் உடனடியாக ஆஜராகிற போலீஸ், யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் அதிகமாக ஆராயாமல் விட்டுவிடும் என்றார். ‘அதுதான் சட்டம் இருக்கிறதே’ என்றால் ‘அது சில சமயம் முட்டாள்தனமாக செயல்படுகிறது’ என்று சொல்லி ஒரு உதாரணம் சொன்னார்.
ஒரு பெண்மணி மெக். டொனால்டில் ஒரு காஃபி வாங்குகிறார். வாங்கி காலுக்கிடையில் வைத்துக்கொண்டு காரை ஓட்டிக் கொண்டுபோகிறார். சூடான காஃபி காலுக்கிடையில் கொட்டுகிறது. அவர் அடுத்த நாள் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். “கண்ட இடத்தில் கொட்டிய காஃபியால் அன்று இரவு தாம்பத்தியத்தில் சரிவர ஈடுபட முடியவில்லை. காஃபி அவ்வளவு சூடு. ‘கவனமாகக் கையாளவேண்டும்’ என்ற எந்த எச்சரிக்கை வாசகமும் காஃபி கப்பில் எழுதவில்லை” என்று வழக்குப் போட்டு நீதிபதியும் ‘ஆமாமாம்’ என்று மெக்டொனால்டிற்கு நஷ்டஈடு விதித்தாராம். என்ன கொடுமை சார் இது? கேட்டால் நுகர்வோருக்கு அவ்வளவு மரியாதை என்றார்கள்.
எனக்கு நேற்றைக்கு தியேட்டரில் நடந்தது ஞாபகம் வந்தது.
***********************
அயன் படத்திற்குப் போயிருந்தேன். சிலர் சொல்வது போல ‘ஆஹா.. ஓஹோ’வெல்லாம் இல்லை. கே.வி. ஆனந்த்-தின் கனாகண்டேன் என்னைக் கவர்ந்ததில் முக்கால் பாகம்கூட அயன் கவரவில்லை. ஓகே.. தியேட்டரில் இடைவேளையில் கொறிக்க முட்டை போண்டா வாங்கினேன். 7 ரூபாய் என்பது முட்டை போண்டாவிற்கு டபுள் ரேட். சரி போகட்டும். நன்றாக இருந்ததால் மீண்டும் போய் ஒன்று வாங்கினேன். அப்போது 8 ரூபாய் என்று பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)
‘என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8 ரூபாய் ஆய்டுச்சா? ஒருவேளை கால்மணிநேரத்துல விலைவாசி ஏறிடுச்சா?’ என்றேன்.
அவர் என்னை ஒருமாதிரிப் பார்த்தபடி ஒரு ரூபாய்க்கு இன்னொரு சின்ன சாக்லெட் கொடுத்தார்.
எனக்கு கோபம் அதிகமானது.
‘கத்தி ஏதாவது வெச்சிருக்கீங்களா?’
‘எதுக்கு’ என்பதுபோல தலையுயர்த்தினார் கேண்டீன்காரர்.
‘இல்ல.. கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடுங்கிக்க வேண்டியதுதானே? அதவிடக் கொடுமை பண்றீங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன்.
ஏதோ... என்னால் முடிந்தது அவ்வளவுதான்.
*********************************
ஒரு சிலர் பின்னூட்டம் போடும்போது கிழே பெயர் எழுதுவது எதற்கென்று புரியாமலே இருந்தேன். நர்சிம்மைக் கூட ஒருமுறை ‘அதுதான் மேல நர்சிம்னு வருதுல்ல. எதுக்கு எல்லாத்துக்கும் கீழ பேரு போட்டுக்கறீங்க’ என்று கேட்டேன்.
நவயுவக் கவிஞர் அனுஜன்யாவிடம் இதுபற்றிக் கேட்டபோது ‘இல்லப்பா. சில பதிவுகளைத் திறந்தா பின்னூட்டம் போட்டவங்க பேரு ‘)))))’ இப்படித் தெரியும்லியா. அதுக்காகத்தான்’ என்றார். ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத்துக் கொண்டேன். நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது....
சில வருடங்களுக்கு முன் என் வழக்கறிஞ நண்பரின் வாட்ச் கடை ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் வந்தார். ஒரு திருமணத்திற்கு பரிசளிக்க வாட்ச் ஒன்றை வாங்கினார். கிஃப்ட் பேக் செய்யுமுன் விலையை அழிக்க முயன்றபோது ‘வேண்டாம்.. வேண்டாம்’ என்றார். கேட்டபோது சொன்னார்..
“இல்லப்பா. இவரு ஜட்ஜ்., இவரு குடுத்த வாட்ச் இவ்ளோ இருக்கும். அவ்ளோ இருக்கும்னு அவங்களா பெரிசா நெனைச்சுக்கக் கூடாதுல்ல. என்னால இவ்ளோதான் முடியும்’னு தெரியட்டுமே.. என்ன தப்பு” என்றார்.
வித்தியாசமான கோணமாக இருந்தது.
**********************************
எழுத்தாளார் அகதாகிறிஸ்டியின் கணவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். உங்க கணவரைப்பத்தி.. ‘ என்று நிருபர்கள் கேட்டபோது சொன்னாராம்.. “வழக்கமா கணவர்களுக்கு நாளாக நாளாக மனைவியின்மீது ப்ரியம் கம்மியாகும். ஆனா இவரு தொல்பொருள் ப்ரியர் அல்லவா. அதுனால நான் பழசானா இன்னும் ப்ரியம் அதிகமாகுமே” என்றாராம்!
*****************************
தீப்பெட்டி திறந்தால்
பிஞ்சு விரல்கள்
-ஸ்ரீகுமாரன்
வண்ணத்துப் பூச்சி
மழையில் நனைகிறது
ஐயோ வர்ணங்கள்
-நா.விச்வநாதன்
மழை போல் மனசு
கடல் போல்
துயரம்
-விக்ரமாதித்யன்
(கணையாழி – ஏப்ரல் ’91)
55 comments:
///ஸ்ரீ கணேஷாய நம:////
என்னங்க இது? அரோகரா!
கொஞ்ச நாட்களிலயே இதுதான் நல்ல பதிவு.
“இல்லப்பா. இவரு ஜட்ஜ்., இவரு குடுத்த வாட்ச் இவ்ளோ இருக்கும். அவ்ளோ இருக்கும்னு அவங்களா பெரிசா நெனைச்சுக்கக் கூடாதுல்ல. என்னால இவ்ளோதான் முடியும்’னு தெரியட்டுமே.. என்ன தப்பு” என்றார்.
வித்தியாசமான கோணமாக இருந்தது./////////////////
அட...ஜட்ஜ் தெளிவா இருக்காரே
அயன் பிடிக்கலையோ..?
//கே.வி. ஆனந்த்-தின் கனாகண்டேன் என்னைக் கவர்ந்ததில் முக்கால் பாகம்கூட அயன் கவரவில்லை//
அந்த படம் நல்லாயிருந்ததாலேதான் ரொம்ப சுமாரா போச்சு.. பரிசல். எப்பவுமே நல்லதுக்கு காலமில்ல.
என்னா ஒரு கோயிண்ஸிடென்ஸ்.. நானும் இதே சில்லறை பிரச்சனையை எழுதியிருக்கிறேன்.
//இல்லப்பா. இவரு ஜட்ஜ்., இவரு குடுத்த வாட்ச் இவ்ளோ இருக்கும். அவ்ளோ இருக்கும்னு அவங்களா பெரிசா நெனைச்சுக்கக் கூடாதுல்ல. என்னால இவ்ளோதான் முடியும்’னு தெரியட்டுமே.. என்ன தப்பு” என்றார்//
அட...!
டிபரெண்டான திங்கிங்கா இருக்கே
டிரைப்பண்ணலாம் போல....!
அவியல் அருமை. ரசித்தேன்.
நஷ்ட ஈடுன்னாக்கா பரவாயில்லை. சிலபேர் கடையைவே எழுதி வாங்கிடுவாங்க... எல்லாம் நடந்திருக்கு...
முட்டை போண்டா பிரச்சனை.... சகஜமாயிடுச்சுங்க.
பின்னூட்டத்திற்குப் பின்னாடி பெயர் போடறதுக்கு, ... நான் பல தளங்களில் எழுதறேன். அதனால நார்மலாவே வந்திடும்... சிலசமயம் விட்டுடுவேன்.
!!!!கவிதைகள்!!!!!
ஆச்சரியம்... சின்னத் துளி, பெருந்தீ!~!
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூ கெ கு
புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவரே,
அவியல் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கு,
நுகர்வோர் உரிமைகள் என்பது ஒரு வரியறைக்குட்படாத விஷயம்தான்.
kv Anand sir shootyai compose pannura alavukku kadhaiyai enno compose pannala....
Aktha Christy .....
sema nakkal party pol irukku.....
trichy meha star theatre la bread bajji nalla irukkum... trichy ponnal try panni parunga
happy chitirai allathu tamil new year wishes
அமெரிக்கர்கள் லூசு என்பதற்கு மற்றுமொரு எ.கா. இதுவரை வந்ததில் இது ரொம்ப குட்டி அவியலோ? என்ன பாஸ் காஸ்ட் கட்டிங்கா?
அமெரிக்காவின் Federal Set-up இல் மாகாணங்களுக்கு நிறைய அதிகாரங்கள். அதனால் மாகாணத்துக்கு மாகாணம் வெவ்வேறு சட்டங்கள். பல சட்டங்கள் படு விநோதமானவை - அதாவது நாம் கேள்விப் படுவது உண்மையாக இருந்தால். ஏதோ ஒரு மாகாணத்தில் தவளைகள் சத்தம் செய்யக் கூடாது என்றும் சட்டம் உள்ளது :)
இப்போ பெயரைக் கீழே போடலாமா கூடாதா?
கவிதைகள் நல்லா இருக்கு. அதிலும் விக்கி!
அனுஜன்யா (ஹி ஹி பலக்கம் ஆகிடிச்சி)
@ pappu
அது ‘அதுக்காக’ எழுதினது. மாத்தீட்டேங்க.. ஓகேவா?
@ நிலாவும் அம்மாவும்
ஆமாங்க மேடம்..
@ கேபிள் சங்கர்
அவ்வளவா பிடிக்கல சங்கர். ஆனா ஆனந்த்-தோட உழைப்பு பிடிச்சிருக்கு.
@ ஆயில்யன்
நான் அப்பவே அவரைப் பார்த்து சல்யூட் சார்-னு சொல்லீட்டேன்! நானும் அதை ஃபாலோ பண்ணுவதுண்டு.
@ மாதவராஜ்
மிக்க நன்றி சார்.
@ ஆதவா
ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிப்பிட்டு சொன்னதுக்கு தனித்தனி நன்றி!
@ அதிஷா
நன்றி தோழர். (கோவை வந்துட்டு திருப்பூருக்கு வராம போனதுக்கு மீரா மேகா சார்பில கண்டனங்கள் சொல்லச் சொன்னாங்க!)
@ தராசு
அவியலுக்கு காய்கறி கிடைக்க லேட்டாய்டுச்சு. கிடைச்ச காய்கறிய உங்கள்ல (அதாவது தராசுல) போட்டப்ப சரியான ’வெய்ட்’ இல்ல! அதான் லேட்...
@ mayvee
//trichy meha star theatre la bread bajji nalla irukkum... trichy ponnal try panni parunga//
mikka nanree nanbare. eankku suvaikalil pirachinai illai. thavaraga atthigaram seivathaiththaan thaanga mudiyathu! (படிக்க எவ்ளொ கஷ்டம் இப்படி அடிச்சா-ன்னு பாருங்க!!!!!)
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மேவீ!
@ கார்க்கி
C C எல்லாம் இல்ல சகா. இது சரியான சைஸ் இல்லையா? ரொம்பப் பெரிசுன்னாலும் படிக்காம போயிடறாஙக். சீரியஸா இந்த மாதிரி சின்னதா எழுதறதுக்கு மினி மீல்ஸ்னு பேர் வெச்சுடலாமானுகூட யோசிச்சேன்.
@ அனுஜன்யா
தவளை சத்தம் - புதிய தகவல். சுத்த *&^^%&ஆ இருப்பானுக போலிருக்கே.
நன்றி.
- பரிசல்காரன்
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
//வழக்கமா கணவர்களுக்கு நாளாக நாளாக மனைவியின்மீது ப்ரியம் கம்மியாகும். ஆனா இவரு தொல்பொருள் ப்ரியர் அல்லவா. அதுனால நான் பழசானா இன்னும் ப்ரியம் அதிகமாகுமே” என்றாராம்!//
ஹி ஹி ஹி இங்கயே ஏதும் சொல்லனுமா பரிசல்:)
தமிழ்யில் பின்னோட்டம் போட்டு இருப்பேன் ; அனால் நான் தற்பொழுது இருக்கும் பெல்லாரி ல இருக்கிற இன்டர்நெட் கபெ ல இருக்கிற எல்லா மௌஸ் வும் பிரச்சன்னை பண்ணுது.....
அதனால் தான் தங்கலிஷ் ல commentgiren
அவியல் நல்லாயிருக்குது பரிசல்....
//*********************************
ஒரு சிலர் பின்னூட்டம் போடும்போது கிழே பெயர் எழுதுவது எதற்கென்று புரியாமலே இருந்தேன்.//
முன்பு நானும் இப்படித்தான் கீழே கையெழுத்திட்டுக்கொண்டு இருந்தேன். கூகிளில் நமது சில பின்னூட்டங்களை பதில் காண்பதற்கு அது சற்று வசதியாய் இருந்தது. பின்பு மறுமொழிபட்டைக்கு கீழேயே தேவையெனில் மறுமொழி நமது மெயிலுக்கு வந்துவிடுவதால் அநாவசியமாய் இடுவதில்லை.. :-)
/
//வழக்கமா கணவர்களுக்கு நாளாக நாளாக மனைவியின்மீது ப்ரியம் கம்மியாகும். ஆனா இவரு தொல்பொருள் ப்ரியர் அல்லவா. அதுனால நான் பழசானா இன்னும் ப்ரியம் அதிகமாகுமே” என்றாராம்!//
ஹி ஹி ஹி இங்கயே ஏதும் சொல்லனுமா பரிசல்:)
/
ROTFL
:)))
அவியல் சூப்பர்!
அவியல் ருசித்தது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
//அயன் படத்திற்குப் போயிருந்தேன். சிலர் சொல்வது போல ‘ஆஹா.. ஓஹோ’வெல்லாம் இல்லை. கே.வி. ஆனந்த்-தின் கனாகண்டேன் என்னைக் கவர்ந்ததில் முக்கால் பாகம்கூட அயன் கவரவில்லை.//
சரிதானுங்க.அவியல் நல்லாருந்தது.
சரி..படத்துக்குப் போனா போண்டால்லாம் சாப்பிடலாமா???
அவியல் அண்ணே..பதிவு கலக்கல் ;))
வழக்கம் போல கவிதைகள் செம ;))
//தீப்பெட்டி திறந்தால்
பிஞ்சு விரல்கள்
-ஸ்ரீகுமாரன்//
ஹ்ம்ம்..! பகிர்ந்ததற்கு நன்றி!
அவியல் நல்ல டேஸ்ட்.
அவியல் சூப்பர்...
//தீப்பெட்டி திறந்தால்
பிஞ்சு விரல்கள்
-ஸ்ரீகுமாரன்//
நச்...
பரிசல்,
அவியல் அருமை.
படித்தேன், ரசித்தேன்.
//நன்றாக இருந்ததால் மீண்டும் போய் ஒன்று வாங்கினேன்//
அப்புறம் எங்கேயிருந்து அயன்
பிடிக்கும்.
பொன். வாசுதேவன்
@ Rajaraman
நன்றி நண்பரே.
//இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி,//
அது இன்னலா.. இல்லலா? ஒருவேளை இல்லாமை என்பதை மரூஉ-வா இல்லல்???
:-))
@ குசும்பன்
சொல்லாமலே கிழிச்சுட்டீங்களே குசும்பா... இதுல சொல்லவேற வேணுமா?
@ MAYvee
ஐயோ தல.. ச்சும்மா சொன்னேன்.. உடனே சீரியஸா பதில் எல்லாம் போடறீங்களே.. எதுனா முடியாத பட்சத்துலதான் அப்படிப் பண்ணுவீங்கன்னு தெரியாதா நண்பா?? லூஸ்ல விடுங்க...
@ சென்ஷி
நன்றி நண்பா..
@ மங்களூர் சிவா
தேங்க்ஸ் ஃப்ரெண்ட்!
# புதுகைத் தென்றல்
என்ன கடிதம் எழுதப்போறீங்களா இல்லையா?
@ ஸ்ரீதர்
நன்றி
@ நர்சிம்
ஏன் தல? சாப்பிடக்கூடாதா? ரொம்ப ஹைஜீனிக்கா இருன்னு சொல்றீங்களா?
@ கோபிநாத்
நன்றி கோபி!
நன்றி சந்தனமுல்லை
நன்றி லக்கி.
நன்றி விக்கி
@ அகநாழிகை
படம் நல்லாயிருந்தா ஏன் அடிக்கடி வெளில போறோம்...?!!!?!!!
:-)))
அவியல் நல்லா இருக்கு!
ரொம்ப நாள் கழிச்சு படிக்கறேன் அவியல். ரொம்ப ருசி
அவியல் நன்றாக இருந்தது.
நன்றி தமிழ்ப்ரியன், சின்ன அம்மணி & மணிநரேன் (வித்தியாசமான பேரா இருக்குங்க....!)
நல்ல அவியல். சுவையா இருந்தது. புத்தாண்டு ஸ்பெஷல்:)
வாழ்த்துகள்.
ஜட்ஜ் பகுதி சரியானது தான் நான் பரிசு பொருள் வாங்கினால் விலையை அழிப்பதிலலை. அப்ப தான் அவர்கள் நமக்கு திருப்பி பரிசு கொடுக்கும் சந்தர்ப்பத்தில் கொஞ்சம் அதிகமாக செலவு செய்வார்கள் என்பது என் கணிப்பு.
அயன் படம் நான் இங்கு ஷார்ஜாவில் பார்த்தேன் நண்பர்களுடன் அதுவும் முதல் நாள். யாருக்கும் துளி கூட பிடிக்கவில்லை. சன் ரிலீஸ் என்றால் பார்க்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.
:--))
கமெண்ட் போடவே பயமாயிருக்கு பரிசல்.
// என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8 ரூபாய் ஆய்டுச்சா? //
பத்து ரூபாய் கொடுத்துவிட்டு மிச்சம் சில்லறையை எதிர்பார்க்காமல், கொடுப்பதை வாங்கி போகிறவர்கள் தான் திருப்பூர் குடிமகனாக தகுதியுடையவர்கள்.
சுவையான அவியல்.கேபிள் சொன்னா மாதிரி அடுத்த தடவை நீங்க சாக்லேட் எடுத்துட்டு போயிடுங்க.
கடைசி கவிதைகள் சூப்பர். அடிக்கடி இப்படி நல்ல கவிதைகளை அடையாளம் காமிங்க. அப்பதான் ஹைக்கூவுக்கும் லோக்கூவுக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியும்.
//அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது //
அமெரிக்கர்கள் சில விடயங்களில்
திறமையாக இருந்தாலும் பல
முட்டாள்தனமான வேலைகளை செய்வதில் பெயர் போனவர்கள்.
//அப்போது 8 ரூபாய் என்று பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)//
திருப்பூர்ல இரு வழமையான விடயமாகிவிட்டது, வருத்தமே!! சென்ற முறை திருப்பூர் வந்திருந்த பொது நானும் உங்களைப் போலவே சாக்லேட் (சில்லறைக்கு) வாங்கினேன். அனால், தட்டிக்கேட்கவில்லை. :(((
நன்றி
அப்புறம்.. ஒரு வரிக்கவிதைகள் அருமை.
எல்லாமே நலம் அதுல முட்டை போண்டா கோபம்
அப்புறம் அந்த ஜட்ஜ்...கோணம்
ஒரு வரி கவிதைகள் அனைத்தும் அருமை
நன்றி வல்லிசிம்ஹன்
@ முத்தையா
மிக்க நன்றிங்க.
@ கும்க்கி
அதெல்லாம் போகப் போக சரியாப் போயிடும் தல...
@ வெயிலான்
அப்படியா? சொல்லவேல்ல.. இப்படித்தான் சமாளிக்கறீங்களா???
@ அறிவிலி
//ஹைக்கூவுக்கும் லோக்கூவுக்கும் //
எக்ஸலெண்ட் தோழர். ரொம்ப ரசிச்சேன்!
நன்றி கணினிதேசம். அடுத்தமுறை திருப்பூர் வரும்போது மெயிலுங்கள். சந்திப்போம்.
மிக நன்றி சுரேஷ்.
//பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)//
நுகர்வோர் சட்டப்படி இதற்கு வழக்கு தெடரலாம். ஆனா நாமதான் எதுக்குனு விட்டுவிடுவோம். அதனதல்தான் அவர்களுக்கும் பழகிடுச்சி என நினைக்கிறேன்.
சட்டப்படி மிகுதி பணத்தை பணமாகவேதான் தரவேண்டும்.
ஃஃ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத்துக் கொண்டேன். ஃஃ
ம்ம்ம் அப்ப அதுதான் காரணமா??ஃ
நான் மேலே பெயர் வந்தாலும் பதிலோ வாழ்த்தோ மொட்டையாக இருக்கக்கூடாதென ஓர் பாசமான மரியாதைக்காகத்தான் இப்படி இருக்கென்று நினைத்தேன்.
( ம்ம் முறைக்கு அந்த பின்னுட்டுபவர்களின் இடத்திலிருந்து யோசித்துப்பார்க வேண்டும். அவங்களுக்குத்தான் அவங்க பின்னுட்டத்தின் அருமை தெரியும்.)
கணையாளியின் கவிதைகள் மிகவும் அருமை.
ஃஃஇந்த மாதிரி சின்னதா எழுதறதுக்கு மினி மீல்ஸ்னு பேர் வெச்சுடலாமானுகூட யோசிச்சேன்.ஃஃ
அரைவியல்னு வைக்கலாம்ஃ
ஹிஹிஹி
( முட்டை முழு அவியவைவிட அரையவியல்தான் சுவையாக்கும்)
ஃஃ கணினி தேசம் said...
//அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது //
அமெரிக்கர்கள் சில விடயங்களில்
திறமையாக இருந்தாலும் பல
முட்டாள்தனமான வேலைகளை செய்வதில் பெயர் போனவர்கள்.ஃஃ
அவங்க அவங்களுக்கான உரிமையை பெற்றுக்கொள்வதில் அக்கயை காட்டுகிறார்கள். நாம விட்டுக்கொடுத்து( வேற வளியில்லாமங்கறது வேற விசயம்) அவையெல்லாம் லூசுத்தனமாக இருக்கு (ன்று நினைக்கிறேன்)
நமது உரிமைகளை விட்டுக்கொடுப்பதானது மற்றவர்களின் உரிமைகளையும் மற்றவர்கள் பறிப்பதற்கு ஒரு உந்துதல் தரும் விடயம்.
@ சுபாஷ்
தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா..
ஒரு சின்ன தகவல்.. அது கணையாழி. யாளி இல்ல...
சில்லறை மேட்டர்ல நீங்க சொல்றது 100% உண்மை.
அமெரிக்க நுகர்வோரை திட்டுமுன் இதை படிக்கவும்.
http://www.vanfirm.com/mcdonalds-coffee-lawsuit.htm
Srini
//கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடுங்கிக்க வேண்டியதுதானே? அதவிடக் கொடுமை பண்றீங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன்.//
இது எல்லா பக்கமும் நடக்குறது தான்!
1.அந்த கேண்டீன்காரர் உங்களுக்கு கொடுத்ததை மறந்திருப்பார்!
2.வேகத்தில் எதாவது ஒரு போண்டாவுக்கு காசு வாங்க மறந்தது போல் தோன்றியிருக்கும்.
3.அதனை ஈடுகட்ட இப்படி தான் செய்தாகனும்.
4.அவர்களுக்கு சம்பளம் மிக குறைவு
5.சில தியேட்டர்களில் உள்ளேயே வந்து விற்பார்கள், அதற்கு கொஞ்சம் விலை அதிகம்.
வானவில் என்ற படத்தில் அர்ஜுன் சொல்லி கொடுக்கும் முறை அது.
யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. எதேனும் பின்புலம் இருக்கும்.
பிரபஞ்சனின் சித்தன் சிறுகதை தொகுப்பை மீண்டும் ஒருமுறை படிக்க சிபாரிசு செய்கிறேன்.
உனக்கு நடந்தால் என்ன செய்வாய் என கேட்கலாம்.
நான் காசை மதிப்பதேயில்லை.
நன்றி ஸ்ரீ
@ வால்பையன்
உங்கள் மனம் எல்லார்க்கும் வாய்க்க வேண்டுகிறேன்.
ஹிஹி.. முதல் பகுதிக்கு.!
Post a Comment