எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர் ஒருவர் தமிழ் கற்று வருகிறார்.
ஒரு நாள் வேகமாக வந்தவர் ‘என்ன means what ?’ என்றார். நானும் ‘என்ன means what’ என்றேன். இரண்டு முறை இதையே சொன்னதும் சிரித்தவர், ‘ஓ என்ன மீன்ஸ் க்யாவா’ என்றபடி சென்றுவிட்டார்.
மற்றொரு நாள், நீர் மாசுபடுவதால் எற்படும் பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆண்டுதோறும் 1 மில்லியன் குழந்தைகள் அசுத்த நீரால் இறப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது என்றேன். ‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.
WHO என்றால் World Health Organization.
*************************
நண்பர்களுடன் உணவகத்தில் சென்றிருந்தபோது நடந்தது இது. சிக்கனை வெட்டிய நண்பன், மீன் வேண்டாமென்றான். அவனுக்கு sea food பிடிக்காதாம். அடுத்தவனை, சீ ஃபுட் சாப்பிடுவியா எனக் கேட்டா போது “sea food மட்டுமல்ல், see food எல்லாத்தையும் சாப்பிடுவேன்” என்றான். வடிவேலு நினைவுக்கு வந்தார்.
இது கடலெண்ணய்தானே???????
*******************************************************
ஐ.பி.எல். அதிரடியாய் தொடங்கிட்டது என்றுதான் முதலில் டைப் செய்ய நினைத்தேன். முதல்நாள் ஆட்ட்டங்களில் அதிரடி இல்லை. தென்னாப்ரிக்கா மைதானங்கள் அப்படி. ஆனால் நான் சொல்ல வந்தது, களமிறங்கும் முன் உத்தப்பா செய்ததை கவனித்தீர்களா? காலால் தரையில் சிலுவை போட்டு கும்பிட்டுவிட்டு வந்தார். நம்ம ஸ்ரீகாந்த் சூரியனை பார்த்து கும்பிடுவார். யாரோ ஒரு நடிகர் கூட தன் அலுவலகத்தில் தாம்ஸ் ஆல்வா எடிசனின் படத்தை மாட்டி வைத்திருப்பதாக படித்த ஞாபகம்.
நான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ்.
இது நல்லெண்ணய்தானே??????
*****************************************************
கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.1987ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது கபிலின் தலைமையிலான இந்திய அணி. இரண்டாம் டெஸ்ட்டில் ஸ்ரீகாந்திற்கு பதிலாய் சப்ஸ்டியூட் ஒருவர் ஃபீல்டிங் செய்தார். சில ஓவர்களில் ஸ்ரீகாந்த் வந்துவிட இவர் வெளியே செல்ல மறந்துவிட்டார். 12 பேருடன் சில ஓவர்களும் வீசப்பட்டன. நடுவர் கண்டறிந்து சொல்ல, இருவரும் வெளியேறினார்கள்.
வெறும் 10 பேருடன் ஒரு பந்து வீசப்பட்டது.
இது வெளக்கெண்ணய்தானே??????
*************************************
அன்புமணி இனி மந்திரி ஆகவே முடியாது என்பது சினிமாக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. இனி நானும் திரையில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்ற ’அசல்’ ஹீரோ அஜித் சுருட்டுடன் ஒளிர்கிறார் அசல் ஸ்டில்களில். பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம்.
நல்லவேளை வில்லன் பூஜைக்கு சூப்பர்ஸ்டார் வரவில்லை.
இது தேங்காயெண்ணய்தானே????? (தலைக்கு தடவுவதால்)
*******************************************
கவிதை வேண்டாமென்றுதான் நினைத்தேன். பசுவய்யாவின் இந்தக்
கவிதை..ம்ம்ம்
வருத்தம்
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
இது என்ன எண்ணெய்?
**********
48 comments:
//இது என்ன எண்ணெய்?//
திறந்தே வைத்திருக்கையில் ஆவியாகிப் போகிற மண்ணெண்ணெய்.
[என் சிற்றறிவுக்குத் தோன்றியது:)! சரிதானா சொல்லுங்கள்!]
:-))
kavithai nalla irukku
\\1987ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது கபிலின் தலைமையிலான இந்திய அணி\\
பரிசல் இந்த தொடர் நடைபெற்றது 1986ஆம் ஆண்டு.
பசுவய்யாவின் கவிதை ரீமிக்ஸ் உங்களுக்கு தெரியும்தானே?
(நர்சிம்முக்கு வந்த பின்னூட்டமும், அதற்க்கு நர்சிம்மின் அசத்தலான பதிலும்)
//பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம்//
:) அசல் படத்தின் ஹீரோ அஜித் என்று தானே சொன்னார் !!
ஆஹா, என்ன
ஒரே எண்ணைய் மேட்டராக இருக்கே.
கடைசியில் உள்ளது மண்ணென்னெய்
:)
அந்த who மேட்டர் அருமை, ஆமாம அது என்ன எண்ணெய்..? புரியலையே..?
நானும் கொத்து பரோட்டா போட்டிருகேனாக்கும்.
//‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.//
ரசித்தேன்.!
//“sea food மட்டுமல்ல், see food எல்லாத்தையும் சாப்பிடுவேன்” என்றான்.//
அவனா நீ?
//நான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ். இது நல்லெண்ணய்தானே??????//
வழு...வழு...!!
//பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம். //
பின்ன, அஜித் படப்பூஜைக்கு வந்துட்டு விஜய்தான் ஹீரோ சொல்லமுடியுமா?
அவியல் அளவான சுவை.
நன்றி !
வழுக்கல் இல்லாத நெய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//இது கடலெண்ணய்தானே???????//
:-)))))))
பரிசல்,
சுந்தரராமசாமியின் கவிதை அருமை.
எழுத்தாளர்கள் கவிதைக்கு ஒரு பெயரும் கதைக்கு ஒரு பெயரும் வைத்திருப்பதால் அவர்களின் இன்னொரு பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுப்பது நலம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவும்.
வண்ணதாசன் - கல்யான்ஜி மாதிரி.
ஆங்காங்கே எண்ணெய் இருப்பதால் வழுக்கிக் கொண்டு செல்கிறது :))))
கடைசிக் கவிதை ஒரு அற்புதமான கவிதை...
வேட்டையும் வித்தைகளும் என்னவென்று ஏதேனும் தோன்றுகிறதா?
//எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர் ஒருவர் தமிழ் கற்று வருகிறார்.//
உங்க கிட்டயா??? நெஜமாவா???
அவியல் ஒரு போதும் வாசகர்களை ஏமாற்றுவதில்லை.
சுவையோ சுவை.
தமிழ்மணத்தில் அவியலை காணும் போதே சந்தோசம் தான்.
எப்போது அடுத்த அவியல் என காத்திருக்கும் அளவுக்கு சுவையாக இருக்கிறது.
கடைசி எண்ணெய் டீசல் (இது எண்ணெய் வகை தான் என நினைக்கிறேன்.
பெரியார்தாசன் புதுவருட நிகழ்ச்சி ஒன்றில் அதன் தமிழ் பெயர் ................. எண்ணெய் என சொன்னதாக ஞாபகம்.
பெயர் நினைவில் இல்லை )
கடைசி எண்ணெய் ரிஃபைண்ட் ஆயில் !!!!
எந்த எண்ணையாய் இருந்தாலும்...கலந்துகட்டி இருந்தாலும் (ம.எண்ணைய் தவிர) அவியல் சூப்பர்தான்
pun on wordsnu englishla சொல்வாங்க. அதுல புகுந்து விளையாடி இர்க்கிற கிருஷ்ணாவுக்கு நான் ஜனாதிபதியா இருந்திருந்தா பத்மபூஷ்ன் விருது கொடுத்துருவேன். மவுன ராகத்துல ரேவதி தமிழ் கத்துக் கொடுக்கிறது தான் ஞாபகத்துக்கு வருது . அதும் அந்த ஹு மேட்டர் அசத்தல்பை த பைனு சொன்னா 2 பை எடுத்துப்பியாம்னு எங்க பாட்டி ஒரு வாட்டி சொன்னது தான் கபகம் வருது
pun on wordsnu englishla சொல்வாங்க. அதுல புகுந்து விளையாடி இர்க்கிற கிருஷ்ணாவுக்கு நான் ஜனாதிபதியா இருந்திருந்தா பத்மபூஷ்ன் விருது கொடுத்துருவேன். மவுன ராகத்துல ரேவதி தமிழ் கத்துக் கொடுக்கிறது தான் ஞாபகத்துக்கு வருது . அதும் அந்த ஹு மேட்டர் அசத்தல்பை த பைனு சொன்னா 2 பை எடுத்துப்பியாம்னு எங்க பாட்டி ஒரு வாட்டி சொன்னது தான் கபகம் வருது
pun on wordsnu englishla சொல்வாங்க. அதுல புகுந்து விளையாடி இர்க்கிற கிருஷ்ணாவுக்கு நான் ஜனாதிபதியா இருந்திருந்தா பத்மபூஷ்ன் விருது கொடுத்துருவேன். மவுன ராகத்துல ரேவதி தமிழ் கத்துக் கொடுக்கிறது தான் ஞாபகத்துக்கு வருது . அதும் அந்த ஹு மேட்டர் அசத்தல்பை த பைனு சொன்னா 2 பை எடுத்துப்பியாம்னு எங்க பாட்டி ஒரு வாட்டி சொன்னது தான் கபகம் வருது
நன்றி ராமலஷ்மி மேடம். (பின்னூட்டத்துக்கும் தமிழ்மணத்துல சேர்த்ததுக்கும்!)
நன்றி MayVee
@ முரளிகண்ணன்
1986ஆ? அப்ப கார்க்கி என்கிட்ட தப்பான தகவல் குடுத்துட்டான்னு அர்த்தம்.
நன்றி கோவி-ஜி.]
@ கேபிள் சங்கர்
கொத்துபரோட்டாவை சாப்பிட்டுட்டுதான் இங்கயே வந்தேன்.
@ கணிணிதேசம்
//அவனா நீ?//
அவன் நானில்ல. வேறொரு ஆளு!
@ சுரேஷ்
நீங்க மட்டுந்தாம் சரியா சொல்லியிருக்கீங்க..
@ கிரி
:-)))) நன்றி நண்பா./
@ வடகரை வேலன்
ஆமாண்ணா. சொல்லீடறேன்.. ச்சே.. செஞ்சுடறேன்.
@ கார்க்கி
ஹி..ஹி.. இன்னைக்கு உன் காக்டெய்ல்தான் சூப்பர் சகா!
@ அறிவன்
ம்ம்ம்.. புரிஞ்சது தல.
@ தராசு
நம்புங்கப்பா. அவ்வ்வ்வ்வ்...
@ என் இனியவன்
/அவியல் ஒரு போதும் வாசகர்களை ஏமாற்றுவதில்லை.
சுவையோ சுவை.
தமிழ்மணத்தில் அவியலை காணும் போதே சந்தோசம் தான்.
எப்போது அடுத்த அவியல் என காத்திருக்கும் அளவுக்கு சுவையாக இருக்கிறது.//
மிக்க மகிழ்ச்சி. அவியல் என்ற பெயர் ப்ராண்ட் ஆகிவிட்டதோ...
@ அ.மு.செய்யது
ரூம் போட்டு யோசிப்பீங்களா?
@ டி.வி.ஆர் ஐயா
மிக்க நன்றி ஐயா...
@ தமயந்தி
//நான் ஜனாதிபதியா இருந்திருந்தா பத்மபூஷ்ன் விருது கொடுத்துருவேன்.//
இதுக்காகவாவது நீங்க ஜனாதிபதி யாகணும் மேடம்.
ஆமா.. அத ஏன் மூணு வாட்டி சொல்லியிருக்கீங்க? எஃப்.எம்.ல வேலை செய்யறதாலயா?
என்ன பண்ண .. நாங்க ஒரு வாட்டி சொன்னா மூணு வாட்டி சொன்னாப்ல இருக்கு..
அவியல் அருமை. அவியலின் ஆயிள்(ல்) அதிகம்.
பழையபஞ்சாங்கத்தில் உங்களை பத்தி ஒருவிஷயம் நான் சொல்லி இருக்கேன்.
தெரியும? :)
கவிதைக்கு கமெண்ட் பண்ணலான்னு யோசிக்கும் பொழுது
கவிதையின் தலைப்பு தான் நியாபகத்துக்கு வருது..
மத்த படி அவியல் சுடு இல்லைனாலும் சுவை இருக்கு..
நீங்க 2008 நு ஒரு கதை எழுதுங்க..
எல்லாரும் ஒடிவாங்க...
பரிசல்காரன் பின்னூட்டத்திற்கு பதில் சொல்றாராம்..!
சொல்ல நினைத்ததை முரளி சொல்லிவிட்டார்.
பசுவய்யா (சுரா) கவிதை இன்னும் பதிவுகளில் மட்டும் ஆயத்தம் செய்துகொண்டு இருக்கும் பிரபலங்களுக்கும் பொருந்தும். ஆ.வி., குமுதம், அசிஸ்டன்ட் டைரக்டர், இயக்குனர், தயாரிப்பாளர்னு ஆகணும்ல :)
அனுஜன்யா
வருத்தம்
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
இது என்ன எண்ணெய்?//
இது என்ன எண்ணெயா? என்னோட பதிவுல வாசகன் ஊத்துன பெட்ரோல்ய்யா பெட்ரோலு.. நல்லா கேட்குறீங்கய்யா டீட்டெய்லு
வட இந்தியர் தமிழ் கற்று வருகிறாரா?
அட நானும் தமிழ் இல்லேங்க :-)
இந்த கிரிக்கெட் விஷயங்கள் நானும் நிறைய கேள்விப் பட்டிருக்கேன்.
1) ஒரு முறை ஒரு ஃபீல்டர் பந்தை பிடிக்கும் போது, டௌசர் கிழிஞ்சிடிச்சு. ஆனா, வீணாப் போன அம்பையர் வீரருக்கு அடி பட்டாத்தான் சப்ஸ்டிட்யூட், டௌசர் கிழிஞ்சா எல்லாம் இல்லேன்னு சொல்ல, 10 பேரு மட்டும் வெச்சு மேட்ச் நடந்திருக்கு. இத நான் முத்தாரமோ, கல்கண்டுலேயோ படிச்சிருக்கேன்.
2) ஏதோ ஒரு மேட்சுல ஒரு ஆளு விளையாடவும் செஞ்சிருக்காரு, அம்பயரிங்கும் செஞ்சிருக்காரு. அவரு யாருன்னு ஒரு quiz ல கேட்டாங்க. அப்போ எனக்கு வயசு ஆறோ, எட்டோ. கேள்வி சரியான்னு கூட எனக்கு தெரியாது. நீங்க இப்படி ஏதாச்சும் கேள்விப் பட்டிருந்தா சொல்லுங்க. (இப்போ இதே கேள்வி கேட்டா, ரிக்கி பாண்டிங்ன்னு சொல்லலாம், ஆஸ்திரேலியால கங்குலிக்கு அவரு தானே அவுட் தந்தாரு :-) )
அவியல்ல எண்ணை அதிகமா ஊத்திட்டிங்க போல..
நல்ல கம கமன்னு இருக்கு.
இந்த முறை எல்லாமே டாப்பு (எனக்குப்பிடிக்காத கிரிக்கெட் டாபிக் கூட..) பரிசல்.!
@ வேலன்
அப்ப நானும் கவித எய்தச்சொல்லோ உன்னொரு பேரு வெச்சிக்கணுமா பாஸ்.?
:))))))))))))))
@ தமயந்தி
:-)
@ ஸ்வாமி ஓம்கார்
அங்க வந்து ஆசி வாங்கீட்டேனே ஸ்வாமிஜி...
@ இவன் மொழியும் உயிரும் தமிழ்
//நீங்க 2008 நு ஒரு கதை எழுதுங்க../
புரியல. (பேரை இவ்ளோ பெரிசா வெச்சுகிட்டா என்னங்க பண்றது?)
@ டக்ளஸ்
//எல்லாரும் ஒடிவாங்க...
பரிசல்காரன் பின்னூட்டத்திற்கு பதில் சொல்றாராம்..!//
இப்பதான் கவனிக்கறீங்களா தல? அது ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் முதல்ல குசும்பன்தான். அவருக்காகத்தான் மாறினேன். அவ்ளோ நாள் பதில் சொல்லாம இருந்ததுக்கும் ஸாரி.
@ அனுஜன்யா
ஹா..ஹா..
@ நர்சிம்
இதுக்கு நீங்க என்னை திட்டக்கூடாதுங்க.. வேற ஒருத்தரைத்தான் திட்டணும். நாளைக்குச் சொல்றேன்!
@ ட்ரூத்
நல்ல தகவல்கள் ட்ரூத். நன்றி
@ லோகு
ஆயில் அதிகம்ன்னா? கொழுப்பு கூடும்கறீங்களா?
@ ஆதி
நன்றி நண்பா.. (என்னது.. க்ரிக்கெட் பிடிக்காதா???)
@ ஸ்ரீமதி
பார்த்து... பல்லு சுளுக்கிக்கப் போவுது!
//பரிசல்காரன் said...
@ ஸ்ரீமதி
பார்த்து... பல்லு சுளுக்கிக்கப் போவுது!//
Haiiiiiiiiiiiii enakku mattum thaniyaa... :)))))))
No tamil font in office... adhaan ellaarukkum :)))))))))))....
////‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.//
//
சூப்பர்
ஃஃநான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ்.ஃஃ
அவரோட கம்பியுட்டர்ல இங்க ஒருத்தரு அவியல்னும் பொரியல்னும் ( இது சில வெப்சைட்ல படம் பார்த்தேன். நிஜமாவே பொரிப்பாங்கோ ) ஆளாளுக்கு வறுத்தெடுப்பாங்கனு கனவில கூட நினச்சிருக்க மா்டாரு.
ஹிஹி
கவிதை நல்லாருக்குனு பின்னூட்டங்களில் படித்தேன். எனக்குத்தான் ஒன்னும் விளங்கல. :(
ம்ம்ம்
மொத்தத்தில் அவியல் நல்லாருக்கு
"கிருஷ்ணா"யில் ?
(ஏன்னு தெரில, கெரொசின இப்படி சொல்லுவாங்க, ஒரு வேளை கெரோசின் ஆயில்தான் இப்படி மாறிருச்சோ!!!)
அவியல் எல்லாம் எண்ணையா ருசியாதான் இருக்கு :-)
இப்பதான் கவனிக்கறீங்களா தல? அது ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் முதல்ல குசும்பன்தான். அவருக்காகத்தான் மாறினேன். அவ்ளோ நாள் பதில் சொல்லாம இருந்ததுக்கும் ஸாரி.
//
ம் இப்பவெல்லாம் குசும்ம்ம்ம்பன் பதில் சொல்லுறது இல்லை கவனிச்சிங்களா.. :)
//‘ஓ என்ன மீன்ஸ் க்யாவா’ என்றபடி சென்றுவிட்டார்.
‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.
WHO என்றால் World Health Organization.//
பல மொழி வித்தகர் போல நீங்க? ஏன் நீங்க ஒரு ஆங்கில பிளாக், ஹிந்தி பிளாக் எல்லாம் ஆரம்பிக்க கூடாது:)))
//இது வெளக்கெண்ணய்தானே??????//
”ஆமாம் வெளக்கெண்ணய்!” சரியாக சொல்லி இருக்கீங்க:)
சரி வெளக்கெண்ணய் என்று பதில் சொல்லக்கூடாது:)
நமிதா..! said...
இப்பதான் கவனிக்கறீங்களா தல? அது ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் முதல்ல குசும்பன்தான். அவருக்காகத்தான் மாறினேன். அவ்ளோ நாள் பதில் சொல்லாம இருந்ததுக்கும் ஸாரி.//
இது என்ன புது கதை? அவ்வ்வ்வ்
//ம் இப்பவெல்லாம் குசும்ம்ம்ம்பன் பதில் சொல்லுறது இல்லை கவனிச்சிங்களா.. :)//
நமி செல்லம் நான் கவனிக்கிற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லம்மா:))
ஓகே ஸ்ரீமதி. டோண்ட் வர்ரி!
@ சுபாஷ்
வேட்டையென்பதை வேறர்த்தப்படுத்திப் பாருங்கள்!
@ அறிவிலி
எக்ஸலெண்ட் திங்கிங்க்!
@ அமுதா
நன்றிங்க.
@ நமிதா
ஐயோ.. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல...
@ குசும்பன்
மூணு பின்னூட்டத்துக்கும் நன்றி குசும்பா.
குட்டி கி.வா. ஜ பரிசலுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் சிலேடைகளை எதிர்நோக்கி....
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
ஏதோ உள்குத்து நடக்குது.
ஹூம்....நடக்கட்டும்.
:-))
@ Bostan ஸ்ரீராம்
மிக மிக நன்றி. கி வா ஜ எல்லாம் பெரிய வார்த்தைங்க. இது வெறும் காமெடி பீசுங்க..
@ கும்க்கி
பு த செ வி
அவியல் சூப்பர் :))))
கார்க்கியின் பதிவுகளில் தாரளமாக எள்ளல் இருக்கும் அது இங்கேயும் இருக்கிறது தவிர பெரிதாக ஒன்றும் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை!
அடுத்த பதிவையும் படித்து விட்டேன்
Post a Comment