Tuesday, April 7, 2009
அர்ஜூனன்-கிருஷ்ணன்-கர்ணன்
‘உன்னிலிருந்து ஒரு கெட்ட பழக்கத்தை எடுத்துக் கொள்வதானால் எதை எடுக்க’ என்றென்னைக் கேட்டால் ‘என் சோம்பேறித்தனத்தை’ என்று சோம்பலே இல்லாமல் சொல்வேன். அப்ப்டி ஒரு சோம்பேறி நான்.
எதற்குச் சொல்கிறேனென்றால் நம்ம யூத் அனுஜன்யாவுக்கு ஒரு புத்தகம் அனுப்பவேண்டும் என்று ரொம்ப நாள் திட்டம். கல்யாண்ஜியின் கடிதங்களை. (அதாவது அந்தத் தொகுப்பை!) திருப்பூரில் கிடைக்காமல் என் நண்பன் ஒருவனிடம் சொல்லி (அவரை அவன் என்று எழுதுவதற்கு மன்னிக்கவும். அவன் என்றெழுதும்போது உணர்கிற நெருக்கத்தை அவர் தரவில்லை என்பதை அவர் அறிவார் என இவன் உணர்கிறேன்) கோவையில் வாங்க ஏற்பாடு செய்தேன். கூடவே நகுலனின் கவிதைத் தொகுப்பும். சரோஜாதேவி புத்தகங்கள் என்ன தலைப்பில் என்றாலும் உடனே கிடைத்துவிடும் இந்த திவ்யதேசத்தில் நகுலனின் கவிதைகள் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கவே நண்பனும் அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.
‘சரி.. அதிருக்கட்டும். கல்யாண்ஜியின் புத்தகம் வாங்கியாயிற்றல்லவா.. அதை எனக்கு அனுப்புங்கள். அனுஜன்யாவுக்கு கொரியர் செய்ய வேண்டும்’ என்றேன். சரி என்றான்.
நேற்று காலை அவனிடமிருந்து அலைபேசி வந்தது. (அலைபேசின்னா அலைபேசியே அல்ல. அழைப்பு வந்தது.) ‘அனுஜன்யாவின் அட்ரஸைக் குடுங்களேன். நானே இங்கிருந்து அனுப்பிவிடுகிறேன். நான் உங்களுக்கு அனுப்பி.. நீங்கள் அவருக்கு அனுப்பி.. ஏனிந்த வீண் சிரமம்’ என்று கேட்டான். எனக்கு சுரீரென்றது.
‘ஹூம்! ‘என்ன இருந்தாலும் உன்னை விட கர்ணன் தானப்பிரபு’ன்னு கிருஷ்ணர் அர்ஜூனருக்குச் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது நண்பா’ என்றேன்.
அதென்ன?
கிருஷ்ணரிடம் ஒருமுறை அர்ஜூனன் (இதே கதையை தருமன், பீமன் என்று எல்லாரை வைத்தும் சொல்வார்கள். கிருஷ்ணரிடம் இது பற்றிக் கேட்டபோது ‘அந்த டைம் அர்ஜூனன் வாஸ் வித் மீ கிருஷ்ணா (இது நான்). மத்ததெல்லாம் உங்காளுக கெளப்பினது’ என்றார்) ‘கிச்சா... நீ எல்லாத்துக்கும் எங்க அஞ்சு பேருக்குத்தான் சப்போர்ட் பண்ற. ஆனா தானதர்மம்ன்னா ஒடனே ‘கர்ணன்தான் தானப் பிரபு’ன்னுடற. எங்களையெல்லாம் துரியோதனன் இப்படி காட்டுக்குள்ள விரட்டிட்டான். தானதர்மம் பண்ண எங்களால எப்படி முடியும். ஆக அவனைவிட நாங்க செல்வத்துல கீழ்நிலைல இருக்கச்சொல்லோ, நீ கம்பேரிசன் பண்றது தப்பு’ன்னான்.
கிருஷ்ணர் சிரிச்சுகிட்டே ‘சரிதான். சம அளவு செல்வம் இருந்தாலும் இன் தட் மேட்டர் ஐ வில் சப்போர்ட் கர்ணா ஒன்லி’ என்றார் கிருஷ்ணர்.
சொன்னதோடு நிற்காமல் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திலேயே வெள்ளியினாலான மலைக்குன்று ஒன்றையும், தங்கத்தினாலான மலைக்குன்று ஒன்றையும் உருவாக்கினார்.
“அர்ஜூனா.. இதோ இந்த இரண்டு மலைகளும் உனது. இதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்றார்.
அர்ஜூனன் பூரிப்படைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தக் காட்டில் யார் வருவார்கள்? அருகிலுள்ள கிராமமொன்றிற்குச் சென்று எல்லாரிடமும் அறிவித்து எல்லாரையும் அங்கே வரச் செய்து ‘யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ன்னான்.
ஆளாளுக்கு தங்க, வெள்ளி மலைகளை வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டு போக மலை கரைந்து குண்டூசி முனையளவு தங்கமும், வெள்ளியும் மீதமிருந்தது.
“பார்த்தியா கிச்சா.. எல்லாரும் என்னை தானப் பிரபு’ன்னு புகழ்ந்துட்டு போறத’ என்றான்.
‘சரி..சரி’ என்று சிரித்த கிருஷ்ணர் கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல் சட்டென்று மீண்டும் அதேபோல இரண்டு மலைகளை உருவாக்கினார். கர்ணனை அந்தக் காட்டுக்குள் அழைத்தார். (ஏர்செல்.. எப்பொழுதும்.. எங்கிருந்தாலும்..)
வந்தான் கர்ணன்.
“கர்ணா.. இதோ உனக்கு முன்னால் இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று தங்கத்தாலானது. இன்னொன்று வெள்ளியினாலாதது”
“பார்த்தாலே தெரியுது. மேட்டருக்கு வாங்க”
“இவையிரண்டும் உனக்குத்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்றார்.
கர்ணன் பார்த்தான். காடு. அவன், அர்ஜூனன், கிருஷ்ணரைத் தவிர யாருமங்கில்லை. அடுத்த நொடி சொன்னான்.
“அர்ஜூனா.. நீ ஒரு மலையை எடுத்துக் கொள். கிருஷ்ணா (இது நானில்ல. கடவுள்) நீ ஒன்றை எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு ‘டைமாச்சு. நிறைய ஃபைல் கையெழுத்துக்காக வெய்ட்டிங். பை’ என்று சொல்லி போயே விட்டான்.
கிருஷ்ணர் கேட்டார்...
“பார்த்தாயா அர்ஜூனா.. கொடுப்பது என்று முடிவானபின் இவன் கடவுள் இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ... இவன் என் எதிரி இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ.. இவர்களை விட இல்லாதவர்க்குக் கொடுக்கலாம் என்றோ.. யாருக்கு எதைக் கொடுக்க என்றோ, எவ்வளவு கொடுக்க என்றோ எதையாவது சிந்தித்தானா கர்ணன்? கணநேரத்தில் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டான் பார்த்தாயா.. அந்தப் பண்புதான் கொடுப்பதில் இருக்க வேண்டும். நௌ யூ அண்டர்ஸ்டேண்ட் வொய் ஐயம் சப்போர்ட்டிங் ஹிம்?”
*** *** *** *** *** *** ***
அனுஜன்யாவிற்கு புத்தகத்தை அனுப்ப நினைத்த நான் நண்பனிடம் ‘வாங்கி அனுப்பிடுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதும். நான் வாங்கி ட்யூப்லைட்டில வெளிச்சத்தை மறைத்து பேரெழுதிக் கொள்வதுபோல பேரெழுதி என் கையாலதான் அனுப்பவேண்டும் என்று நினைத்ததால்தானே அது எனக்குத் தோன்றவில்லை? சட்டென்று கேட்ட அந்த நண்பனின் மனதின் விசாலம் இதனால் புரிபடுகிறதல்லவா?
அந்த நண்பர் – செல்வேந்திரன்.
1) அந்தப் புராணக்கதையை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். நானொன்றும் கர்ணனோ, அர்ஜூனனோ அவர்களுக்கு அருகில் நினைத்துப் பார்க்கக்கூட முடிகிற தகுதியுள்ள கொடையாளி அல்ல. யாரும் அதை நம்பி புத்தகம் கேட்கவேண்டாம்! (கொடுத்தா வாங்கிக்கத் தயார். அதுவும் அந்த நகுலன் கவிதைத் தொகுப்பு அனுப்பித்தந்தீங்கன்னா** உங்க வீட்டுப்பக்கம் கூம்புவடிவ மைக் யாரும் கட்டாமலிருக்க எல்லாம் வல்ல ஸ்ரீரங்கரங்கநாதரைப் பிரார்த்திப்பேன்.)
2) இவ்வளவு நாள் பதிவுக்கு வராம, வந்தாலும் மத்தவங்க பின்னூட்டத்தை எனக்குப் போடற, ஃபோன் பண்ணினாலும் எடுக்காத ‘நவயுவக்கவிஞர்’ அனுஜன்யா அறிவது: பதிவைப் படிச்சுட்டு கொரியர்காரனை எதிர்பார்த்து வாசல்லயே உட்காராதீங்க. இன்னைக்குத்தான் செல்வா அனுப்பறார். நான் அட்ரஸைக் கொடுக்க ரொம்ப லேட் பண்ணீட்டேன். (முதல் பாராவை மீண்டும் ரெஃபர் பண்ணிக் கொள்ளவும்)
** சென்னை நண்பர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தை அனுப்புவதாகச் சொல்லுங்கள். நம்புவேன். சென்னை நண்பர்கள் அனுப்புவதாக இருந்தால் சொல்லாதீர்கள். சொல்லாமல் அனுப்புங்கள். அப்படி புத்தகம் அனுப்பவதாகச் சொன்னால் அது நடப்பதே இல்லை. (என் ராசி அப்படி) சொல்லாமல் அனுப்பினால் நான் எங்கிருந்தாலும் ‘அண்ணே’ என்று என்னை வந்து சேர்ந்துவிடுகிறது.
3) அந்தப் புராணக்கதையில் மசாலா கலந்ததற்கு ஸ்வாமி ஓம்கார் மன்னிப்பாராக.
4) மேலே புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.
5) ஒண்ணுமில்ல.
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
மன்னிச்சாச்சு மன்னிச்சாச்சு :)
மசால மட்டுமா கலந்துடீங்க? கதையில சில மாட்டரே கலந்துடீங்களே ஐயா :)
அந்த கதையை டாமேஜ் பண்னினதுக்கு மகரிஷி வியாசர்தான் மன்னிக்கனும்.
நன்னா இருக்கு ஓய்..
கர்ணன் கதை சூப்ப்பர்..
பரிசல்காரன்,
”மன்னவர் பொருள்களைக் கைகொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்
மான்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வர்”
இப்போ குளோபல் ரிசஷன் அதனால ஆத்துல போட்டாலும் அளந்து போடு.
மேலே படத்துல இருக்குறதுல யாரு கிருஷ்ணா , யாரு தான பிரபு , யாரு அர்ஜுன்-நு சொன்னா நல்லா இருக்கும்
முத முதல்ல பின்னூட்டம் போடுறேன்....இதோட விட்டுடுறேன்
- பொன்னாத்தா
www.sandaikozhi.blogspot.com
[ஒரு விளம்பரம்
--------------------------
மாமா,...உங்களுக்கு படம் வரையத் தெரியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்......அது கூட பரவா இல்லை....இன்னிக்கு எழுதின பதிவுக்கு பின்னூட்டத்த போன வார பதிவுல போட்டுருக்குறீங்க ...bling bling :-|
-நிலா -
bharatha kadhaiyai ivvalavu youth a sonnatharkku ungalukku oru periya "o"
யப்பா, கிருஷ்னர் பேசின இங்கிலீசுல டவுசர் கிழிஞ்சிருச்சு
பதிவ விட பின்குறிப்புகள் பிரமாதம் :)
"ரீமிக்ஸ்" கதை ஜூப்பரு.
"Laziness is our biggest enemy"- Nehru
"Learn to love our enemies"- Gandhiji
கதை அருமை.
//** சென்னை நண்பர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தை அனுப்புவதாகச் சொல்லுங்கள். நம்புவேன். சென்னை நண்பர்கள் அனுப்புவதாக இருந்தால் சொல்லாதீர்கள். சொல்லாமல் அனுப்புங்கள். அப்படி புத்தகம் அனுப்பவதாகச் சொன்னால் அது நடப்பதே இல்லை. (என் ராசி அப்படி) சொல்லாமல் அனுப்பினால் நான் எங்கிருந்தாலும் ‘அண்ணே’ என்று என்னை வந்து சேர்ந்துவிடுகிறது.//
அது இன்னா, மெட்ராஸ்னாவே அல்லாரும் ஒரு தினுசா லுக் வுடறீங்கோ
/"Laziness is our biggest enemy"- Nehru
"Learn to love our enemies"- Gandhij//
எனக்கு கூட எல்லாப் பொண்ணுங்களும் எதிரிங்க
ஆரு.. அப்துல்லு புக்கு வாங்கியனுப்புறேன்னு சொல்லி டபாய்ச்சிகினுருக்காறா தல.. எங்கிட்ட சொல்லியிருக்கக்கூடாதா.. இப்டி இப்டிங்கிறதுக்குள்ள வாங்கியனுப்பிச்சிருப்பேனே..
(பதிவின் முதல் பாராவை படித்துக்கொள்ளவும்)
//அப்துல்லு புக்கு வாங்கியனுப்புறேன்னு சொல்லி டபாய்ச்சிகினுருக்காறா தல.. //
அவரு ஒருத்தர்தான் இல்லைங்காம ‘இருக்கு’ன்னு பெரிய சைஸ் புக் ஒண்ணை சொல்லாம அனுப்பினார்!! அவரையும் வாரறீங்களே..
அவ்வ்வ்வ்...
@ கார்க்கி
பதிவைப் படிக்காம பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடற பழக்கத்தை நிறுத்தப்போறியா இல்லியா?
//நிலாவும் அம்மாவும் said...
மேலே படத்துல இருக்குறதுல யாரு கிருஷ்ணா , யாரு தான பிரபு , யாரு அர்ஜுன்-நு சொன்னா நல்லா இருக்கும்
//
கீழ குறிப்புகளைப் படிக்கலியாதோழி?
--@ நிலா
பாப்பா.. அது ஒரு டெஸ்ட் பின்னூட்டம். கண்டுக்கப்படாது. ஒரு சாக்லேட் வாங்கித்தரேன். இந்த மேட்டர வெளில யாருகிட்டயும் சொல்லக்கூடாது ஓகே?
@ ஸ்வாமி ஓம்கார்
கேபிள் சங்கர்
கே ரவிஷங்கர்
மேவி
ப்ரேம்குமார்
கணினிதேசம்
ஸ்ரீமதி
தராசு
நன்றி.. நன்றீ
நன்றி நன்றி
நன்றீ நன்றீ!!!!!!!!!!
சில சமயம் ரொம்ப நம்பி வர்ரப்ப பெரிய மொக்கைய போட்டு மண்டை காயவச்சிடுரிங்க(போன பதிவு மாதிரி). பல சமயம் பட்டய கிளப்புரிங்க (இந்த பதிவு மாதிரி). அடிக்கடி பட்டய கிளப்புர பதிவா போடுங்க. மற்றபடி பதிவு + கர்ணன் கதை சூப்ப்பர்..
பதிவை படிக்க முடிந்தால் இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன் வாத்தியாரே!
கிருஷ்ண பரமாத்மாவை கிச்சா-ன்னு செல்லமா கூப்பிட்டது தானுங்க சூப்பரு! சுவாரஸ்யமான பதிவு! ;D
பழைய கதை தான் ...ஆனாலும் புது வித உதாரணத்தோட சொல்லி முடிச்சது நல்லாத்தான் இருக்கு.
/பதிவைப் படிக்காம பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடற பழக்கத்தை நிறுத்தப்போறியா இல்லியா?//
என்ன சகா? நான் அபப்டி செய்வேனா? அதுவும் உங்க பதிவை..
:((((((
நன்றி வெங்கடேஷ் சுரமணியம். (என்ன பண்ண.. வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்? :-) )
லக்கி, வெங்கிராஜா, மிஸஸ் தேவ்
நன்றி.
கார்க்கி
ச்சும்மா...
//@ ஸ்வாமி ஓம்கார்
கேபிள் சங்கர்
கே ரவிஷங்கர்
மேவி
ப்ரேம்குமார்
கணினிதேசம்
ஸ்ரீமதி
தராசு
நன்றி.. நன்றீ
நன்றி நன்றி
நன்றீ நன்றீ!!!!!!!!!!//
8 பேருக்கு 6 நன்றிதான் சொன்னேன். அதுனால் இதோ இன்னும் 2..
நன்றி நன்றி...!!!!!!!!!
(நன்றி வெங்கடேஷ் சுரமணியம். (என்ன பண்ண.. வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்? :-) ))
சுரமணியம். ங்கோய்ல்ல என்ன இது ரொம்ப அர்ஜண்டுனா போய்ட்டு வந்து பதில் போடலாமே. (2 பின்னூட்டம் தெரியாமல் போட்டதற்காக என்னை மிரட்டிய பரிசலாருக்கு பதில் மிரட்டல் கொடுக்க வாய்ப்பளித்த எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி. அரசன் அன்று கொள்வான். தெய்வம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
//அந்தப் புராணக்கதையில் மசாலா கலந்ததற்கு//
தோழர்.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அப்போது ஆட்சியிலுள்ள மக்களின் அல்லது ரசிகப் பெருமக்களின் மொழியினை தமிழாய் கலந்து எழுதுவது வழக்கம்தானே தோழர்.
எங்களுக்கு சமஸ்கிருதமும் ஆங்கிலமும் ஒன்றுதான். இரண்டும் மசாலா வகையறாவாகவே பார்ப்போம்.
//லக்கிலுக்
7 April, 2009 11:28 AM
பதிவை படிக்க முடிந்தால் இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன் வாத்தியாரே!
//
எத்தனை வித அலும்புகள்..
பரிசல் இந்த புக்கு மேட்டர விடமாட்டீங்களா? அய்யய்யய்யய்ய...
Thanks Suresh!
@ Narsim
Thala.. athu ungalukkanathalla.. Aathikku!!!
:-)))))))))))))))))))
உங்கள் Tag Line "ரசிப்போர் விழி தேடி"
நான் இப்போ "கொரியர் வரும் வழி தேடி" ...
தேங்க்ஸ் கரன்-அர்ஜுன். நுண்ணரசியலும் புரிகிறது. இனிமேலாவது 'வாசி'.
ச்சும்மா. கல்யாண்ஜி எவ்வளவு பெரிய கவிஞர். Really appreciate this gesture K.K.
அனுஜன்யா
பரிசல், இந்த மாதிரி ஒரு கதை எழுதி பதிவு போடுவார்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா புத்தகமே கேட்டிருக்க மாட்டேன்னு அனுஜன்யா இப்பத்தான் போன்ல சொன்னார் :)
மாடர்ன் மஹாபாரதம் சூப்பர்.
//(ஏர்செல்.. எப்பொழுதும்.. எங்கிருந்தாலும்..)//
தோ பார்ரா... மலையெல்லாம் உருவாக்குறாரு... ஆனா கூப்புடறதுக்கு ஏர்செல் வேண்டியிருக்கு...
எவ்ளோ பெரிய பதிவு... படிச்சாச்சு.. நல்லா இருக்கு..
திருப்பூர் ல எங்க இருகீங்க தல..
என் கடைக்கும் அடிகடி வரலாமே..
http://muttalpaiyan.blogspot.com/
//மேலே புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.//
மாடல்களுக்கு சம்பளம் எவ்ளோ கொடுத்தீங்க.. ரொம்ப இயல்பா போஸ் கொடுத்திருக்காங்க.
எனக்கும் சில ஸ்டில்ஸ் தேவைபடுகிறது. அவர்கள் அட்ரஸ் கொடுக்க முடியுமா Pls?
///5) ஒண்ணுமில்ல////
நல்ல கருத்து. சிந்திக்க வைத்தது. தல காலைக் கொஞ்சம் காட்டுங்க.
என்னமோ தளபதி படத்தை ரீமேக் பண்ணினாப்ல இல்லே இருக்கு
வரம்பில்லாம நன்றி சொன்னதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி பரிசல்.
//அந்தப் புராணக்கதையை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். நானொன்றும் கர்ணனோ, அர்ஜூனனோ அவர்களுக்கு அருகில் நினைத்துப் பார்க்கக்கூட முடிகிற தகுதியுள்ள கொடையாளி அல்ல. யாரும் அதை நம்பி புத்தகம் கேட்கவேண்டாம்!//
பத்தாததக்கு ஒரு டிஸ்கி!
நல்லாயிருக்கு கடவுள்கள்களே!
நிகழ்சிகுறிப்புகள் பெரும்பாலும் உங்களை சுற்றி வரும் போது விமர்சனங்களும் உங்களை சுற்றி வரத்தான் செய்யும்!
வலையுலகில் எந்த வேலையும் இல்லாததால், மேலும் சில காலங்கலாக யாருக்கும் பொழுது போகாததால் ஒன்லி விமர்சனங்கள் தான்.
”கலக்கல் தல”
”பின்றிங்க தல”
”சூப்பர்”
:)
இப்படி கமெண்டெல்லாம் போடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.
அனுஜன்யா
வெயிலான் (அவரெங்கே கேட்டாரு, நானாத்தாங்க குடுக்கறேன்..)
அறிவிலி
டேங்க்ஸ்!
லோகு - வர்றேங்க நிச்சயமா.
கார்த்திகேயன் - ரொம்ப காஸ்ட்லி மாடல்ஸ். விட்டுடுங்க.. :-))))))
@ பாண்டியன் புதல்வி
ஆசிர்வாதங்கள் சகோதரி! (இங்கிருந்தே சொல்லிக்கறேன்..!!)
@ இளா
அடடா... இது மகாபாரதம்க!
@ கும்க்கி - நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றீஈஈஈஈஈ!!
@ வால்பையன்
//
”கலக்கல் தல”
”பின்றிங்க தல”
”சூப்பர்”
:)
இப்படி கமெண்டெல்லாம் போடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.//
நன்றி வாலு. தன்யனானேன்!
நன்றி
அது அதுக்கு
இன்னொரு நன்றி மீண்டும் நன்றி சொல்ல ஆரம்ப்பித்தற்கு!
தனியா பேசிகிட்டு இருந்தா அதுக்கு அர்த்தம் வேற நண்பா
பதில் சொல்லவில்லை என்றால் அப்படி தான் ஆகி போகிறும்
Post a Comment