முத்தையா...
ஞாபகம் இருக்கிறதா என்ற சம்பிரதாயக் கேள்வியை உன்னிடம் கேட்க முடியாது. உனக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ... உன்னை பலருக்கும் ஞாபகம் இருக்கிறது. பார்... நீ என் நண்பன் என்பதையறிந்து உன்பெயரில்தான் எத்தனை எத்தனை கடிதங்கள் எனக்கு. ஆனால் நீ மட்டும் ஒரே கடிதத்தோடு முடித்துக் கொண்டாய். அதற்குப் பிறகு எழுதவே இல்லை இன்னும்.
அலைபேசியைக் கண்டுபிடித்தவனும், மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவனும் பலருக்குக் கடவுள்போல. ஆனால் எனக்கு அவன்தான் எதிரி.
உன்னிடம் நான் எத்தனை முறை பேசியிருப்பேன். இருந்தாலும் ஒரு கடிதம் தரும் அண்மையை இந்த அலைபேசி அழைப்போ, மின்னஞ்சல் பரிமாற்றமோ தருவதேயில்லையா நண்பா.. அது ஏன்? நாம் டெக்னிகலாக பின்தங்கி இருக்கிறோமா.. அல்லது எமோஷனல் இடியட்ஸாகிவிட்டோமா?
கார்த்திக்கை ஞாபகம் இருக்கிறதா? அப்போது நமக்கு 18, 19 வயதிருக்கும். அவன் யோகா, தியானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பான். ஒருமுறை உன்னையும், என்னையும் அழைத்துக் கொண்டு பழனி மலை போகர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் சொல்லித்தருகிறேன் என்றான். கண்மூடி அமர்ந்து புருவமத்தியில் கவனம் செலுத்தி...
அவன் சொன்னது நினைவுக்கு வந்தது..
‘முதுகுத்தண்டில் குண்டலினிய சக்தியை உணரமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக அது மேலேறி...’
எனக்கு ஏதோ முதுகுத்தண்டில் மேல்நோக்கிச் சென்றது என்றபோது கார்த்திக் சொன்னான்: ‘எறும்பா இருக்கும். அவ்ளோ ஈஸியால்லாம் வராது சாலமா...’
அவனோடு சவால்விட்டு எத்தனை குருக்களைத் தேடினேன் நான்.. ஓஷோ, சாய்பாபா, ரவிஷங்கர் (இவரு வேற..) என்று பயணித்து ஜக்கியில் நிற்கிறது இது இப்போது. ஆனாலும் எனக்கான குரு இன்னும் கிடைக்கவில்லை முத்தையா.
அப்போதெல்லாம் நீ எவ்வளவு ப்ராக்டிகலாகப் பேசுவாய். அன்று பழனிமலைக்கு கீழே நீ சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கிறது..
“சாலமா... கார்த்திக் சொல்றான்.. நீ சொல்றன்னெல்லாம் என்னால எதுவும் செய்ய முடியாது. கேள்விகள் அதிகம் எனக்கு. ‘நான் ஏன் இப்படி உக்காரணும்.. எனக்கு சாயந்திரம் டீக்கு ஒரு ரூபாகூட என்கிட்ட இல்ல. இப்படி உக்கார்ந்து குண்டலினிய ஏத்தி என்ன சாதிக்கப்போறோம்’ இதெல்லாம் என் மனசுல ஓடுது” என்று எப்படி வாதிட்டாய் கார்த்திகிடமும் என்னிடமும். உனக்கிருந்த வெளிப்படையான தர்க்ககுணம் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை நண்பா.
எனக்கு அப்போதைய காலகட்டத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்த்த ஒரே நண்பன் நீதான் முத்தையா. ஞாபகமிருக்கிறதா.. (ச்சே.. இந்தக் கேள்வியை கேட்காமல் ஒரு கடிதமாவது எழுதித் தொலைக்கமுடிகிறதா..) பொள்ளாச்சி முழுவதும் ‘இருபுள்ளிகளுக்கிடையே ஒரு கோடு’ தொகுப்பை நீயும் நானும் தேடியலைந்ததெல்லாம்? எப்படி மறப்பாய் நீ? எஸ்.கே.துரைசாமி எழுதிய அந்தத் தொகுப்பின் கவிதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அலைந்து திரிந்து கிடைக்காமலே போய்விட்டது. பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் வைகறை என்ற இதழொன்றில் அந்தத் தொகுப்பில் வராத கவிதை ஒன்றிருக்கிறது என்று அதை மட்டும் வாங்கிவந்தோம். இப்போதும் அந்த எஸ்.கே.துரைசாமியின் தொகுப்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். எஸ்.கே.துரைசாமி-தான் நகுலன் என்று எத்தனை பேருக்குத் தெரியும் நண்பா...! அவரது
‘எல்லாம்தான் எல்லாருந்தான்
தானேதான் தன்னானத் தானே
தான் தான் தான் தான் தன்னானத்
தானேதான்' கவிதையை மறக்கமுடியாமல் எத்தனை நாள் தவித்துக் கொண்டிருந்தோம்!
(இதோ இதை எழுதும்போது மனைவி திட்டத் திட்ட பழைய புத்தகங்களைக் கிளறி அந்த வைகறையைக் கண்டுபிடித்து பார்க்கும்போது மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதைகள் இரண்டு சட்டென கண்ணில் படுகிறது..
விரிந்த பூவைக் கண்டதுண்டு
பூ விரிவது கண்டதில்லை
எனினும் நான் அகங்கரிக்கிறேன்
நானொரு கவியாம்!
சிறகடி ஓசை எழுப்பாது
பறக்கும் பட்சிக்கு
ஒரு சிறகு ஆகாயம்
மறுசிறகு எதெனத் தெரியாது
தெரிவது வரையும்
அரைக்கவிதை இக்கவிதை)
அந்த சமயங்களில்தான் நாம் ஞானக்கூத்தனை அப்படிப் படிக்க ஆரம்பித்தோம். ‘டேய்.. என்னடா நாம நினைக்கறத நினைக்க முடியாதத எல்லாம் இந்தாளு 1970க்கு முன்னாடியே எழுதீட்டாரு’ என்று சிலாகித்துக் கொண்டிப்போம் நினைவிருக்கிறதா? இன்றும் 1968லோ, 69லோ அவர் எழுதிய
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவுபோகாமல் இருக்க கையருகே வை
என்று மனதில் நின்ற கவிதை தரும் தாக்கம் அப்படியே இருக்கிறதே நண்பா... நமக்கு வயசாகிவிட்டதா?
ஆத்மாநாமின்
‘என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை’
அப்புறம் பசுவய்யாவின் கவிதைகள், தருமு சிவராம் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருந்த நாம் எங்கே தேங்கினோம் என்று இப்போதும் புரியவில்லை முத்தையா.. வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே..
ஒரு வருடங்களுக்கு முன் நம் நண்பர்களில் ஒருவனான சதீஷைப் பார்த்தேன். ‘உன்னையும் முத்தையாவையும் பார்த்தா பொறாமையா இருக்குடா.. எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குதுடா. வாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா உங்ககிட்ட கத்துக்கணும்’ என்று அந்த பௌர்ணமி இரவில் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் புலம்பினானே அவனேதான். சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ-வாம். அவன் விசிட்டிங் கார்டுக்கு முன்னாலேயே நான் நிற்கமுடியவில்லை. அவனுக்கு முன்னால் நிற்கவே கூசியது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-க்கு கோவையில ஸ்டிக்கர் டிசைன் செய்ய வந்தேன் என்றான். வாயைப் பிளந்து ஸ்கார்ப்பியோவா என்று கேட்டபோது.. ‘இது எக்ஸ்ட்ராவா வேணும்னு வாங்கினது. எனக்கு என் வொய்ஃப் லாண்ட் க்ரூசர் ப்ரசண்ட் பண்ணிருக்கா’ என்றான். பதிலுக்கு உன் வண்டி எங்க என்று கேட்டுத் தொலைக்கப் போகிறானோ.. எங்கே என் சர்வீஸுக்கு விடாத பைக்கைப் பார்த்துவிடுவானோ என்று பயந்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. ‘இன்னும் அதே கதை, கவிதை, உலகசினிமா ஞாயம் நடக்குதா’ என்று கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் போனான்.
அவன் கிடக்கிறான்! வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா? நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...
ஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை நண்பா. அதைப் பகிர்ந்துகொள்ள உன்னைவிட எனக்கு யாரிருக்கிறார்கள்?
எனவே எங்கிருந்தாலும் வா...
அளவில்லா அன்போடு
-சாலமன்
***************************************************
தலைப்பு எவ்வளவு அதிகாரத்தனம்... இது கடைசி கடிதம் என்றும், முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது என்றும் சொல்ல நான் யார்? அது தொடரட்டும் எங்காவது... அதுசரி... முத்தையாக்களின்/சாலமன்களின் மனைவிகளுக்கும் சொல்ல எவ்வளவோ இருக்கும். ஒருவேளை இவர்களுக்கு மனைவிகள் இருந்து அவர்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதை தோழி.ஸ்ரீமதியும், புதுகைத் தென்றலும் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி உணர்த்துவார்கள்..
விளையாட்டின் விதி.... அப்படியேதும் இல்லை! ஆம்.. எதுவுமே இல்லை.
67 comments:
வெகு நன்று.
//வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா? //
அத்தானே நானும் கேட்கிறேன்? என்ன ஆனந்தம் இருக்கிறது?
உ இல்லாட்டி
//ஸ்ரீ கணேஷாய நம://
பின்னூட்டத்துக்கு மேல இல்லாம இடுகைக்கு மேலேயே போட்டா டபுள்
பர்ப்பஸ் சால்வ் ஆயிருக்கும்.
கடிதம் பிரமாதம்.முத்தையா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதிவு எழுதுகிராறா?
//ஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை //
பூக்களுக்கும் காயங்களுக்கும் இடையேயான ரேஷியோதான் ஒருவருக்கொருவரை வித்தியாசப்படுத்துகிறது.
//ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்!)//
Ithu remba jooberu ;)
வழ வழ கல கல தல தல
ஸ்ரீ கணேஷாய நம \\
யோவ் கூ கெ கூ நீங்க ஒரு பச்சமண்ணு... இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே
கணேஷ் அண்ணே பரிசல்காரன் கமேன்ட் மாடரேசன் தூக்கிட்டாரு எங்கிருந்தாலும் வாங்க!
ம்ம்.. ஆகட்டும் ஆகட்டும்.. கணேஷ் மட்டும் வெளியூர் போகட்டும்..
டிஸ்இ: பதிவை முழுவதுமாய் இரு முறை படித்தேன் சகா
//எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குதுடா. வாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா உங்ககிட்ட கத்துக்கணும்’ //
நிஜமாத்தான், உங்க கிட்ட கத்துக்கணும்
உங்கள் கடிதம் நன்றாக இருக்கிறது.
((அதுசரி, கடிதத்தை இப்படியா பப்லிக்கா கொடுப்பது??? ))
நிறைய வாசிக்கிறீர்கள். அந்த வாசிப்பின் வெளிப்பாடு உங்கள் எழுத்தெங்கும் பரவிக்கிடக்கிறது. கடிதம் முடியும் பொழுது, ஒரு சில நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். வறட்டுப் பிடிவாதத்தினால் நானாக இழந்தவர்களை மீண்டும் அழைக்கத் தூண்டுகிறது உங்கள் கடிதம்!!!
!!!!!!
எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குது.
வாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா அத உங்ககிட்ட கத்துக்கணும் திரு பரிசலாரே
ராமலஷ்மி மேடம் - மிக்க நன்றி.
ஸ்வாமிஜி.. நீங்களே சொல்றீங்க பாருங்க.. சந்தோஷமா இருக்கு!
அறிவிலி.. சரிதான்! (ஆனா இந்த ரேஷியோவ நான் ஒத்துகல. அதப்பார்க்க ஆரம்பிச்சா அவ்ளோதான்!)
நன்றி நாதாஸ்.
நன்றி அதிஷா.
நன்றி கார்க்கி. (நம்பறேன்)
தராசு, தியாகு, ஆதவா..
அதெல்லாம் இல்லை நண்பர்களே.. ச்சும்மா ஃபிலிம் காட்டறது இது..! (ஆதவா உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி!)
//அப்புறம் பசுவய்யாவின் கவிதைகள், தருமு சிவராம் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருந்த நாம் எங்கே தேங்கினோம் என்று இப்போதும் புரியவில்லை முத்தையா.. வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே..//
படித்தேன். ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
- பொன். வாசுதேவன்
arumai thalaiva
நல்லா இருக்கு.கொஞ்சம் romanticizationனும் இருக்கு.
வாழ்த்துக்கள்!
நன்றி அகநாழிகை சார்.
நன்றி சுரேஷ்ஜி..
@ ரவிஷங்கர்
//கொஞ்சம் romanticizationனும் இருக்கு.//
பு த செ வி
இவரு வேற// கலக்கல் கமா பரிசல்.
வாசிப்பில் வசிக்கிறீர்கள் எனத் தெரிகிறது.
என்னவொரு சர்வாதிகாரம் ரெண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி
இதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்
இதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்
இதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்
இதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்
-நம:
சர்வாதிகாரமா மேலும் சில மா ஒரு கமா ஒரு கேள்விக்குறி செமிக்கோலன்
நீங்கள் quote செய்திருக்கும் ஞானக்கூத்தனின் கவிதை பற்றி தருமு சிவராமின் விமர்சனம் படித்திருக்கிறீர்களா :)
எனக்கென்னவோ பிரமிள் சொன்னதுதான் சரியென்று படுகிறது :)
//ரமேஷ் வைத்யா said...
என்னவொரு சர்வாதிகாரம் ரெண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி//
கொ-நெடில் ட+உ ம+ஐ அண்ணே ஆச்சர்யக்குறி!
@ ஜ்யோவராம் சுந்தர்
தல.. கவிதைகளைப் படிச்சு முடிக்கறதுக்குள்ளயே வயசாகிட்டுது. அதோட விமர்சனம் வேறயா.. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்.
(BTW நகுலன் கவிதைகளைப் பத்தி ஜெயமோகன் ஒருதடவை எழுதினப்போ தன் சொந்த சரக்குகளை அடிச்சுவிட்டிருந்தாரு ஞாபகம் இருக்கா? - - சுசீலா பேரோட...)
ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி போன்ற பெரும் ஆளுமைகளை தருமு பிரேமிள் ஜீவராமு அல்லது தர்மோ பிரமிள் சிவராம் அல்லது தர்ம ப்ரமிள் ஜேவ்ராம் எவ்வளவு லகுவாகவும் மூர்க்கமாகவும் தகர்த்திருக்கிறார் என்பதை, பரிசல் அவசியம் படிக்கவும். அதன் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டியவர் பிரேமிளின் சீடர் என்று குறிக்கத்தக்க காலசுப்ரமணியன் (என்னமாப் பேர் வைக்கிறாங்கப்பா..!)
'தொடர்ச்சியாக நாம் படிக்க வேண்டியவர்' என்று திருத்தி வாசித்துக்கொள்க
(எப்பவும் போல )நல்ல பதிவு.
ஸ்ரீ கணேஷாய நம:
:-)))
விதி..ரொம்ப நல்லாயிருக்கு ;)
வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே...
what a real words which comes from wounded heart..!
...ஆனாலும் எனக்கான குரு இன்னும் கிடைக்கவில்லை முத்தையா...
we will discuss about these lines later, if you have time..!
பரிசல், ஜெமோ எழுதிய அந்த நகுலன் ‘எழுதாத' கவிதையைப் படித்துள்ளேன்... அதெல்லாம் சும்மா நாம பெரிய ஆளுன்னு காட்ட செய்வது. வேணும்னா சொல்லுங்க, ஜெமோ மாதிரி ஒரு உருப்படாத கதைய நான் எழுதிக் காட்டறேன் :)
அது சரி... அப்ப நீங்க கோஸ்ட் கவிதைகள் படிச்சீங்களா... ?
எனக்கு ஞானக்கூத்தனின் சில கவிதைகள் மட்டுமே பிடித்திருக்கின்றன. அவருடைய பல கவிதைகளைக் கண்டாலே கோபம் வரும் :(
ரமேஷ் வைத்யா, பிரமிள் மிகத் தெளிவாகவே சு.ராவை ஒரு கலைஞன் என ஒப்புக் கொள்கிறார். அனாலும் சில சிக்கல்கள் இருக்கின்றன :)
//வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா? நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...
ஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை நண்பா. //
இந்த வரிகள் பிடிச்சிருக்கு. ரசித்தேன்.
பரிசல்,
கடிதம் ஓகே. ஆனால்,
//முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது.//
என்று நீங்கள் எழுதியிருக்கும் வரி ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. விளையாட்டில் பங்கு பெறுவதும், பங்கு பெறாமல் போவதும் அவரவர் உரிமை. ஆனால், விளையாட களம் இறங்கியபின், விளையாட்டின் விதிகளை ஏற்கவேண்டியது அவசியமல்லவா? ஒரு தொடர் ரிலே விளையாட்டின் நடுவில் பங்கேற்ற ஒருவர் நீதிபதியாக விளையாட்டை கலைக்க முடியும் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். வாழ்க.
விளையாட்டை ஆரம்பித்த மாதவராஜ், விளையாட்டின் போக்கில் நானே கூட திரும்பவும் கடிதம் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். பாவம்.
உங்களை 'பின்தொடர்பவர்கள்' 256 பேர் என உங்கள் வலைப்பூ சொல்கிறது. அதில் ஒருவர் கூட கடிதம் எழுத தகுதியற்றவர்கள் என நீங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள். நல்லது.
அனுஜன்யா, மண்குதிரை, ரமேஷ்வைத்யா, செல்வேந்திரன், யாத்ரா, ச.முத்துவேல், வடகரைவேலன், ஈரவெங்காயம், வெயிலான், அகநாழிகை, சுகுணா, அய்யனார், அப்துல்லா, ஆசிப் மீரான், அபி அப்பா, குசும்பன், கோவி.கண்ணன், பாரி.அரசு, டிபிசிடி, கேபிள்சங்கர், டாக்டர் புரூனோ மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவரும் இந்த விளையாட்டை தொடர்வார்கள் என எதிர்பார்த்தேன். இதில் ஒன்றிரண்டு பேர் மவுனமாக இருக்கவும் செய்யலாம். சூழ்நிலை காரணமாக அய்யனார் அழைத்தும் சினிமா தொடர் விளையாட்டில் பைத்தியக்காரன் கலந்துகொள்ளாமல் விட்டதை போல.
பாதகமில்லை.
நண்பர் அதிஷா ஐவரை அழைத்திருந்தார். நீங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்கள். மற்ற நால்வரின் சூழல் விளையாட்டை தொடர வைக்கிறதா என்று பார்ப்போம்.
கடைசியாக ஒரு வேண்டுகோள். எழுத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி அதிகாரத்தை கையில் எடுக்காதீர்கள். அது படைப்பிலும், பழகுவதிலும், வாசிப்பிலும், எழுத்திலும் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
கடந்த சில நாட்களாக நானும் உங்கள் பதிவை படித்து வருகிறேன். இன்று எழுதுவதற்கு காரணம் என் பெயரும் முத்தையா தான். அதில் குறிப்பிட்டுள்ளதை போல் சம்பவம் என் வாழ்விலும் நடந்துள்ளது. கடிதம் எனக்கு எழுதியதைப் போலவெ இருந்த்து. நான் சென்னைவாசி. நன்றாக உள்ளது உங்கள் பதிவு. தொடர்கிறேன்.
பரிசல்,
//தலைப்பு எவ்வளவு அதிகாரத்தனம்... இது கடைசி கடிதம் என்றும், முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது என்றும் சொல்ல நான் யார்? அது தொடரட்டும் எங்காவது...//
வேலை நெருக்கடிக்கு இடையில் சூட்டோடு சூடாக திருத்தியதற்கு நன்றி.
//விதி: ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்!)//
:-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பரிசலுக்குப் பரிசு "முத்தையா" தான். அவர் எங்கிருந்தாலும் வருவார்.
சூப்பர்.
நன்றி ரமேஷண்ணா
நன்றி ஸ்ரீதர்.
நன்றி கோபிநாத் (விதி வலியது)
மிக்க நன்றி மீனவன்
நன்றி வள்ளி (உங்க வலைப்பூ பேரை ரசிச்சேன்)
@ பைத்தியக்காரன்
அண்ணா.. உணர்த்தியதற்கு நன்றி. நீங்கள் அந்தப் பின்னூட்டத்தை போடுமுன் மாற்றி விட்டேன்.
என்னைவிட எழுத எல்லாருமே தகுதியானவர்கள்தான். ஆனால் இதில் எவரை அழைப்பது என்ற குழப்பத்திலேயே அப்படி எழுதிவிட்டேன். மன்னிக்கவும்... மீண்டும்.
////விதி: ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்!)//
:-)//
இதையும் மாற்றிவிட்ட்டேன் அண்ணா..
(அதிஷா.. உன்னை ஒதைக்கணும்!)
@ முத்தையா
//. கடிதம் எனக்கு எழுதியதைப் போலவே இருந்த்து.//
இந்தப் பதிவிற்கு இதைத்தான் பரிசாக எண்ணுகிறேன்.
@ உழவன்
மேல பாருங்க.. வந்துட்டார்!
//உங்களை 'பின்தொடர்பவர்கள்' 256 பேர் என உங்கள் வலைப்பூ சொல்கிறது.//
அண்ணா இப்போதான் கவனிச்சேன்.
261 அண்ணா...
ச்
சரியான பாதையில் நேர் கோட்டில் பயணித்திருக்கிறது கடிதம்.
வாவ்.
லாண்ட் க்ரூஸர் ,ஸ்கார்ப்பியோ சமாச்சாரங்களை தவிர்த்து,கடிதம் முழுக்க நெருக்கமாக உணர்கிறேன்.
ஆனால் ஜக்கியையும் தாண்டி ஜிக்கி(கிருஷ்ணமூர்த்தி)க்கு போயாகிவிட்டது.
பசுவய்யாவின் கவிதைகள் எதுவும்குறிப்பிடாதது ஒரு வருத்தமே நகுலனை விட..
உதாரணங்களில் ஆத்மாநாம் தவிர பிற இன்னமும் சிறப்பாக தேடி பதிந்திருக்கலாம்..அவசரத்தில் தேட தேடாமல் விடுபட்டிருக்கலாம்.
மேலும்..மேலும் வாழ்க்கை பற்றியதான கண்ணோட்டம் எக்ஸலண்ட்.
காலியான வீட்டு லைப்ரரியில் குஞ்ஞுண்ணியின் கவிதைகளை மறு வாசிப்பிற்காய் தேடிக்கொண்டிருந்தேன்.
ஒரு முறை படித்தவுடன் நண்பர்களுக்கு பரிசளித்துவிடும் பழக்கத்தினால் நாலா திசைகளையும் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதிகார வரம்பு பற்றிய பைத்தியக்காரனின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகின்றேன்.(நெனச்சேன்..என்று நீங்க புலம்புவது கேட்கிறது)
ஒவ்வொரு பின்னூட்டம் போடுகின்ற போதும் மேலே உள்ள வாசகத்தை பார்த்தால் உறுத்தலாக உள்ளது.
இது தேவையா......?
கனேஷ் போனால் தினேஷ் வருவான்.
அவனும் போனால் ருமேஷ் வருவான்.
இவன்களுக்கெல்லாம் அடிபணிந்தா ப்லோக் எழுதிக்கொண்டிருக்க முடியும்.
சின்ன ஆட்களை பெரிசாக்கிவிடுகிறீர்களோவென்ற வருத்தங்களும் உண்டு.
அருமையானதொரு தலைப்பு.அதனை நீங்கள் குறிப்பிட்ட பின் அதற்கொரு தனி கவனிப்பு:வள்ளி.
fine boss :)
மிக்க நன்றி கும்க்கி. என்னைப் போட்டுத் துவைப்பது என்று நீங்கள் என்றைக்கோ முடிவெடுத்துவிட்டீர்கள் என அறிவேன். எத்தனையோ தாங்கியாச்சு.. இதைத் தாங்க மாட்டேனா?
:-))))))))))
நன்றி கார்த்திகேயன்.
ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். நிறைய பரிசல் டச்.
//நாம் டெக்னிகலாக பின்தங்கி இருக்கிறோமா.. அல்லது எமோஷனல் இடியட்ஸாகிவிட்டோமா?//
//ரவிஷங்கர் (இவரு வேற..)//
இவைகளுடன், இந்தப் பதிவுக்காக emotional chord strike பண்ணியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தில் சில அழகிய வரிகள்.
//நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...//
ஒரு விதத்தில் இந்தப் பதிவை எழுதிய அனுபவம் (போஸ்ட் பண்ணும் முன்னும் பின்னும்) உங்களுக்கு மொக்கை பதிவுகளின் சிக்கலில்லாத அனுகூலங்களை பிறிதொருமுறை அடிக்கோடிட்டு உணர்த்தியிருக்கும் :)
ஆயினும் அவ்வப்போது இப்படியும் எழுதுங்கள். உங்கள் வாசிப்புக்கு நீங்கள் செய்யும் பிரதி அதுவே.
Whatever, I am proud of you buddy.
அனுஜன்யா
பரிசல்காரன் said...
மிக்க நன்றி கும்க்கி. என்னைப் போட்டுத் துவைப்பது என்று நீங்கள் என்றைக்கோ முடிவெடுத்துவிட்டீர்கள் என அறிவேன். எத்தனையோ தாங்கியாச்சு.. இதைத் தாங்க மாட்டேனா?
இதென்ன கலாட்டா...?
:-((
மிக அருமையான கடிதம்! நிறைவான படைப்பு
//ஒரு விதத்தில் இந்தப் பதிவை எழுதிய அனுபவம் (போஸ்ட் பண்ணும் முன்னும் பின்னும்) உங்களுக்கு மொக்கை பதிவுகளின் சிக்கலில்லாத அனுகூலங்களை பிறிதொருமுறை அடிக்கோடிட்டு உணர்த்தியிருக்கும் ://
இதைப் படித்ததும் என்னையுமறியாமல் கைதட்டிவிட்டேன். எவ்வளவு உண்மை.
மிக்க நன்றி அனுஜன்யாஜி.
@ கும்க்கி
:-))))))))))))))
@ ICANAVENUE
மிகவும் நன்றி.
தங்களை எப்படி தமிழில் எழுத? ஐகேனவென்யூ என்றா? பெயர்க்காரணம் என்னவென அறியலாமா??? தங்கள் பெயர், எழுத்துக்களைப் பார்த்தால் தமிழ் தாய்மொழி மாதிரி தெரியவில்லை. அப்புறம் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்.. ஆர்வம் காரணமாய் பயின்றீரா?
பகிர்ந்து கொள்வீர்களா பதில்களை?
பைத்தியக்காரன்,
//விளையாட்டில் பங்கு பெறுவதும், பங்கு பெறாமல் போவதும் அவரவர் உரிமை. ஆனால்//
//ஆனால், விளையாட களம் இறங்கியபின், விளையாட்டின் விதிகளை ஏற்கவேண்டியது அவசியமல்லவா?//
எல்லாம் சரி. விளையாட்டை ஆரம்பித்த மாதவராஜ் நான்,பரிசல்,அதிஷா ஆடிய விளையாட்டைப் பற்றி ஒன்றும் பின்னூட்டமிடவில்லை.
மறந்து போயிருப்பார்.உஙகளுக்கும்
சுந்தருக்கும்,நர்சிம்முக்கும் மறக்காமல் போட்டார்.
இங்கும் “இரட்டை குவளை” முறை?
பரிசல் உங்கள் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.
@ ரவிஷங்கர்
உங்கள் ஆதங்கம் எனக்கு சரியென்று தோன்றவில்லை. வேண்டுமென்றே அவர் பின்னூட்டம் போடவில்லை என்ற தொனி தவறென்று தோன்றுகிறது. அதுவும் இதுக்கெல்லாம் 'இரட்டைக் குவளை முறை' என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்குப் பிடிக்கவில்லை தோழர்!
நன்றி பரிசல்காரன்.
மாதவராஜ், பைத்தியக்காரன் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வர வர ரவிஷங்கர் எங்கே பின்னூட்டம் போட்டாலும் கரைச்சல் ஆகிவிடுகிறதே? மனிதர் சர்ச்சையோடு தான் கீபோர்டில் கைவைப்பார் போலிருக்கிறது :-)
அவர் பதிவை விட அவரது பின்னூட்டங்களை ரசிக்கிறேன். யாராவது ரவிஷங்கரின் மொத்த பின்னூட்டங்களையும் ஒரு தனி பிலாக் ஆக உருவாக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்.
நல்லா கேளுங்க லக்கி...
//அவன் கிடக்கிறான்! வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா? நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. //
படிக்க மிகவும் அருமையாக இருக்கு நண்பா!
ஒன்னும் இல்லாமல் ஒருத்தன் படும் கஷ்டங்களை அனுபவிக்கும் பொழுது அதை வார்தை ஜாலங்களால் போட்டு மறைத்துவிட முடியாது நண்பரே!!!
ரவிஷங்கர்,
பின்னூட்டம் வழியே உரையாடலுக்கு அழைத்ததற்கு நன்றி.
உங்கள் உணர்வு எனக்கு புரிகிறது. அதில் நியாயமும் இருக்கிறது. கேள்வி சரிதான். ஆனால், 'இரட்டைக் குவளை' என்ற வார்த்தை இடிக்கிறது.
மாதவராஜ் எந்த சூழலில் இருக்கிறார், அவரது வேலை நெருக்கடி என்ன, பதிவுகளை பார்த்தாரா, படிப்பதற்கு நேரம் இருக்கிறதா, அவரது வீட்டு சூழல் - இயக்கச் சூழல் இதற்கு அனுமதிக்கிறதா, தேர்தல் வேலை... போன்ற பல கோணங்கள் தெரியாமல் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்.
இதுதவிர, எந்தவொரு இணைய விளையாட்டு அல்லது தொடர் விளையாட்டை ஆரம்பிக்கும்போதும், ஆரம்பித்தவர்களுக்கு தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் நாளாக நாளாக தொடர்பவர்களை வாசிப்பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான். இதை நான் சொல்வது எனது மனநிலையை வைத்துதானே தவிர, பொதுவான கருத்தாக இதை நான் முன்நிறுத்தவில்லை.
பரிசல் மீது கோபப்பட்டு பின்னூட்டம் எழுதியதற்கு காரணம், புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்லது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் பதிவுலக நண்பர்கள் யாருமே இன்னமும் இந்த விளையாட்டை ஆரம்பிக்கவில்லை. அவர்களிடம் இந்த பந்து செல்லவேயில்லை. அதற்குள் பரிசல் தன் போக்கில் விளையாட்டை முடித்துவிட்டார். அதை வாசகனாக ஏற்க முடியவில்லை. நண்பர்களுக்கு அவர்கள் எழுதும் கடிதம் உயிர்ப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தொலைபேசியிலும் பின்னூட்டத்திலும் அந்த கண்டிப்பு.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி குசும்பா.. இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நான் சொல்றதுல உள்ள உண்மை புரியும்.
:-))
@ பைத்தியக்காரன்
//
பரிசல் மீது கோபப்பட்டு//
கோபப்பட்டு என்பது சரியா அண்ணா? எனக்கென்னவோ நீங்க என் மேல் கோபப்பட்டமாதிரியே தெரியல.
மற்றபடி நீங்கள் சொன்ன பதிலைத்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேனென நினைக்கிறேன்.
இப்பத்தான் பாத்தேன். மாட்டிவிட்டாச்சா?
சரி பதிவு போடறேன்.
பைத்தியக்காரன் நன்றி.
//இரட்டைக் குவளை' என்ற வார்த்தை இடிக்கிறது//
போட்டதற்க்கு வருந்துகிறேன்.விலக்கிக்
-கொள்கிறேன்
”கண்டுக்கொள்ளவில்லை” என்ற மென்மையான சொல்லைப் போடலாமா?
மன்னித்துக்கொள்ளுங்கள் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
Look beyond what you see. தமிழில்
சொன்னால் “ கண்ணில் நேரிடையாகத்
”பார்க்கும்” காட்சிகளை விட பின்னால் ஆழ்ந்து ”நோக்கு”.
விவாதத்தை விட்டு விடுவோம்.
மறப்போம்.
லக்கிலுக்,
//வர வர ரவிஷங்கர் எங்கே பின்னூட்டம் போட்டாலும் கரைச்சல் ஆகிவிடுகிறதே? மனிதர் சர்ச்சையோடு தான்//
அண்ணே நா வாயில்லாப் பூச்சிண்ணே.இது வரை எவ்வளவு
கரைச்சல் ஆகியிருக்கிறது.
//அவர் பதிவை விட அவரது பின்னூட்டங்களை ரசிக்கிறேன்//
என் கண்கள் பனித்தது.இதயம் நிறைந்தது.
//பின்னூட்டங்களையும் ஒரு தனி பிலாக் ஆக உருவாக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்//
அண்ணே!கிழக்கு பதிப்பகம் புத்தகமாகப் போடலாம்.
ஹிஹிஹிஹிஹிஹி
பரிசல்காரன்
//மற்றபடி நீங்கள் சொன்ன பதிலைத்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேனென நினைக்கிறேன்//
அதே பதில்தான் உங்களுக்கும்.
நன்றி பரிசல். மறப்போம்.
//கோபப்பட்டு என்பது சரியா அண்ணா? எனக்கென்னவோ நீங்க என் மேல் கோபப்பட்டமாதிரியே தெரியல.//
பரிசல் அண்ணா!
வர வர உங்கப் பின்னூட்டங்களை எங்கு படிச்சாலும் பின்னணியில் ‘லால்ல்லால்ல்லா’ன்னு விக்ரமன் படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் போடற மியூசிக்கு கேட்குது.
யாராவது சண்டைக்கு வந்தாங்களா.. போட்டு கும்மி அனுப்பினோமான்னு இல்லாம... இதென்னா வழக்.. வழக்.. கொழக்.. கொழக்குன்னிக்கிட்டு :-))))))
//யாராவது சண்டைக்கு வந்தாங்களா.. போட்டு கும்மி அனுப்பினோமான்னு இல்லாம... இதென்னா வழக்.. வழக்.. கொழக்.. கொழக்குன்னிக்கிட்டு :-))))))
//
லக்கி ஜி, அமாம், எனக்கும் சேம் பீலிங்.
@ லக்கிலுக்
சரிதான். தேரை இழுத்து தெருவுல விடறீங்களே தோழர்! அதுக்குதான் பல பேர் இருக்கீங்களே.. நாம முடிஞ்ச வரைக்கும் வெள்ளைக் கொடிதான் காட்றது!!!
@ கார்த்திகேயன்
ஏன் இந்தக் கொல வெறி?
மாதவராஜ்.....?
அப்படியல்ல என்றே தோன்றுகிறது ரவி ஷங்கர்.
பதில் சொல்ல விருப்பமில்லாததையும் நாகரிகமாக சொல்லக்கூடியவர்தான்.
இதில்(எதிலும்) பைத்தியகாரனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது.
(நடுவில் கும்மாங்குத்துவிற்க்கு பரிசல் மன்னிப்பாராக)
லக்கி இந்தளவிற்க்கு பதில் சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
@ புதுகைத் தென்றல்
நன்றி தோழி. சீக்கிரம் எழுதுங்க.
@ கும்க்கி
மன்னிப்பா.. எதுக்கு தோழர்? (லல்லால்லால்லா...)
பைத்தியக்காரன் சொன்னதையே நான் மொதல்லயே சொல்லிருக்கேன் அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? (போதுமா லக்கி?)
//@ கார்த்திகேயன்
ஏன் இந்தக் கொல வெறி?
//
கொல வெறி எல்லாம் இல்லே சார்,
"எல்ரோற்கும் நல்லவன் தன்னை இழந்தான்" என்ற எம்.ஜி.யார் பாட்டு நினைவுக்கு வந்ததால் அப்படி சொன்னேன்.
// Karthikeyan G said...
//@ கார்த்திகேயன்
ஏன் இந்தக் கொல வெறி?
//
கொல வெறி எல்லாம் இல்லே சார்,
"எல்ரோற்கும் நல்லவன் தன்னை இழந்தான்" என்ற எம்.ஜி.யார் பாட்டு நினைவுக்கு வந்ததால் அப்படி சொன்னேன்//
அடக்கொடுமையே.. எம்சியாரு இப்படி எப்பங்க பாடினாரு..? ஆள விடுங்க....
Post a Comment