Tuesday, April 14, 2009

'மார்னிங்'-னா சாயந்திரம் இல்லையா?




எதையாவது சம்பந்தப்படுத்தி எழுதுவதொரு கலை என்றால் சம்பந்தமில்லாமல் எழுதுவதென்பதும் ஒரு கலைதான். அதைவிட சம்பந்தமின்றி ஆனால் சம்பந்தமாக எழுதுவதும் ஒரு சிறப்பான கலைதான்.வெறுமனே எதையாவது எழுதுவதே கலை எனும்போது இப்படியெல்லாம் எழுதுவதையும் கலை என்று சொல்வதில் என்ன தப்பு?

தப்பு எனும் வார்த்தைப் பிரயோகம் தப்பாட்டம் என்ற கலையையும் குறிப்பிடுவதாகும். கிராமிய இசையின் முக்கியக் கலையாக விளங்கும் இது இன்றும் புகழடைந்த கலையாக விளங்கிவருகிறது.

கலை அப்படிச் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கலைச் செல்வனை நாங்கள் கலை என்று பல வருடங்களாக அழைத்து வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன் கலா என்ற பெண் எங்கள் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து அவளும் கலை என்றழைக்கப்படுகையில் நேற்று நான் ‘கலை.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது’ என்று நான் ஏதோ கோபத்தில் கலாவைப் பார்த்து திட்டியதை ஏதோ அவனைத்தான் நான் மறைமுகமாகத் திட்டினேன் என்று ஆஃபீஸ் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறான். அவனைத் திட்டுவதென்றால் நேரடியாகவே திட்டுவேனே.. இவனுக்கெல்லாம் பயப்படுவேனா நான்?

பயப்படுவதென்றால் அது தேவகிதான். அவளுக்கு எல்லாப் பெண்களைப் போலவும் கரப்பான் பூச்சி என்றால் மிகவும் பயம். அன்றைக்கு அப்படித்தான் அலுவலக ரிசப்ஷனில் அவள் நின்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பறந்துவந்த கரப்பான் பூச்சி அவள் காலுக்கருகில் விழ.. காலை அவள் உதறியதில் வெள்ளிக்கொலுசு கழன்று..

‘வெள்ளிக்கொலுசு மணி.. வேலான கண்ணுமணி’ என்ற பாடல் அப்போதெல்லாம் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடல்களில் ஒன்று. என்ன படம் இது? சரிவர ஞாபகமில்லை. ராம்கி என்று ஞாபகம்.. ஹீரோயின் கவுதமியா? கவுதமியும், ராம்கியும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா என்ன?

நடிப்புன்னா அது நம்ம சீனியர் சீனிதான். அன்னைக்கு மீட்டிங்ல ஜாலியா சினிமா நியாயம் பேசிக்கிட்டிருந்தாரு. திடீர்னு வந்த எம்.டி. ‘போன வருஷம் இதே ஆர்டரை நாம 40 நாள்ல முடிச்சோம். இப்ப எதுனால டிலே’ன்னு கத்தினப்போ ‘சேம் திங் ஐயம் கொஸ்டினிங் தெம் நவ்’ன்னு ப்ளேட்டை மாத்தினாரே..

ப்ளேட்டை மாத்தினாலும் சரிவரல. அந்தப் ப்ளேட்லயும் கருப்பா ஏதோ கறை மாதிரி இருந்தது. சரி.. பரவால்லன்னு அதுலயே சாப்பிட்டுக்கறேன்னேன். என்ன பண்றது.. பசி காதை அடைக்குதுல்ல..

காதை அடைச்சாலும் அவன் கோரமா பாடறது என் காதுல ஒலிச்சுகிட்டேதான் இருந்தது. ‘போதும்டா நீ நல்லா பாடற’ன்னு சொன்னாலும் நிறுத்தற மாதிரி தெரியல அவன். மினிமம் ஒரு ஆஃப் அல்லது குவாட்டரை கமுத்திருப்பான்னு தெரிஞ்சது. அவ்ளோ போதைல இருந்தான்.

அவ்ளோ போதைலயும் அவரு பாடிகிட்டே கெணத்து மேல நடந்துகிட்டே.. ஜெயப்ரதாவை ஒரு லுக்கு விடுவார் பாரு. என்னா ஆக்டிங்கு.. ச்சான்ஸே இல்ல மச்சி...

சான்ஸ் இல்லன்னா உடனே மனசு விட்டுடறதா? எத்தினி பேர் எத்தினி வர்ஷமா ட்ரை பண்ணிகினு இருக்கானுக? ஒரே வருஷத்துல ஈரோவாகி ஒப்பனிங் சாங் குடுக்க முடியுமா? அவ்ளோ சுளுவுன்னு நெனைச்சுகினியா நீ? இன்னும் ஒரு மாசம், ரெண்டு மாசத்துக்கு அந்த டைரக்டர் கண்ல பட்டுகினே இரு. எதுனா ஆப்டுச்சுன்னு வையி... டபக்குன்னு புட்ச்சுக்கோ. அப்பாலிக்கா உன்னிய எவனும் தொடமுடியாதுங்கறேன்..

தொடறதுன்னா ஒவ்வொரு தடவை ஒவ்வொரு அர்த்தம் வருதுல்ல? அவன் என்னைத் தொட்டுட்டான்னு ஒரு பொண்ணு சொன்னா ‘ரேப் பண்ணீட்டான்’னு அர்த்தம்கூட வருது. கோவைல பல இடங்கள்ல செருப்பு போடறத ‘செருப்பத் தொட்டுகிட்டயா?’னுதான் கேட்கறாங்க.

கேட்கறதுன்னா உடனே கேட்டா நல்லாருக்கும். இவ்ளோ நாள் கழிச்சு கேட்டு, அவ இன்னும் ஞாபகம் வெச்சிருப்பா... அவ மனசைத் தொடறேனா இல்லியானு சவால் விட்டா...

சவால்னாலே சரத்பாபு கமல்தான் ஞாபகத்துக்கு வர்றாங்க. சரத்பாபு எல்லா படத்துலயும் ஃப்ரெண்டாவே வர்றாரு.. நல்ல கேரக்டர். மாதவியும் நல்லா நடிச்சிருப்பாங்க. நெஞ்சைத் தொடற நடிப்புன்னு பார்த்தா அது கமல்தான்.


தொடறதுன்னா அப்படி வலிக்கற மாதிரி இல்ல. மெதுவா.. மெதுவா.. ஆங்.. அப்படித்தான். ம்ம்.. இப்படி மெதுவா தொட்டாலே வலிக்குது தெரியுமா? நல்ல அடின்னு நெனைக்கறேன். ஜவ்வு கிவ்வு கிழிஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

சந்தேகம்னு வந்தப்பறம் யாரையும் அதே கண்ணோட்டத்துலதான் பார்க்கச் சொல்லும். ராமர் சீதாவையே சந்தேகப்படலியா?

சீதா இப்போ என்ன பண்றாங்க? கீர்த்தனா அவங்கப்பா கூட இருக்கான்னு கேள்விப்பட்டேன். இன்னொரு பொண்ணு.. அபியா என்னவோ பேரு... யார்கூட இருக்கா? என்ன பண்றா? ரெண்டுக்கப்பறமும் ராக்கின்னு ஒரு பையனை தத்து எடுத்தாங்களே.. அவன் வயசென்ன இப்போ.. என்ன பண்றான்? இதை யாராவது நிருபர்ங்க எடுத்துப் பண்ணலாம்.

நிருபருங்க பாடு திண்டாட்டம்தான் போல. இந்த வாரம் விகடன்ல ஆரம்பிச்ச நிருபன் தொடர் நல்லாப் போகும்னு தோணுது. நாங்கூட கேள்விப்பட்டேன். யாரோ ஒரு நடிகை ‘கம் மார்னிங் ஃபைவ்’ன்னு ஒரு நிருபர்கிட்ட சொன்னாங்களாம். இவரு அதிகாலை அஞ்சு மணிக்குப் போனா வேறொரு நடிகர் அந்த வீட்லேர்ந்து இவரை கோபமா பார்த்துகிட்டே வெளில வந்தாராம். நடிகை வந்து நிருபரை முறைச்சுகிட்டே ‘சாயந்திரம்தானே வரச்சொன்னேன்’னு திட்டினாராம். இல்லீங்க.. மார்னிங்குன்னுதான் சொன்னீங்கன்னு சொன்னதுக்கு அந்த நடிகை சொல்லீச்சாம்..

‘ஐயையோ.. மார்னிங்க்னா சாயந்திரம் இல்லியா?’


**********************************

1) செண்டர்ஃப்ரெஷ்ஷின் ரேடியோ விளம்பரத்தைக் கேட்ட பாதிப்பில் எழுதியது.

2) படித்துவிட்டு வரும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

3) இதையே எனது படைப்பின் இறுதித் தகுதியாக பாவிக்க வேண்டாம். இன்னும் பல மொக்கைகளோ, பின்நவீனத்துவங்களோ, கோக்குமாக்குகளோ, நல்லபதிவோ வந்து சேரலாம். எதுவும் என் கையில் இல்லை.

4) சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

5) இன்னைக்கு லீவு. அதுனால வெளில குடும்பத்தோட போறேன். பின்னூட்டங்களுக்கு உடனே உடனே பதில் சொல்றது கஷ்டம். ஒட்டுமொத்தமா வந்து பதில் போடறேன். ஒக்கே?

6) அவ்ளோதான்.

32 comments:

அறிவிலி said...

அவ்ளோதான் அப்படின்னு எதுக்கும் முடிவே கிடையாது. நாம அவ்ளோதான்னு நெனைக்கறது மத்தவங்களுக்கு இன்னும் இருக்குன்னு தோணலாம்.
(நான் பரிசலோட கடைசி வார்த்தைலேருந்து தொடர்ந்திருக்கேன். விருப்பப்பட்டா மத்தவங்களும் தொடரலாம்).

பரிசல்காரன் said...

தொடரறது நல்ல விஷயம். நல்ல காரியத்துக்கு ஒருத்தரை தொடரலாம். தொடர்ந்து எனக்கு பின்னூட்டம் போடறதுக்கு அறிவிலி.. உங்களுக்கு நன்றியைத் தவிர வேற என்ன சொல்ல?

பெருசு said...
This comment has been removed by a blog administrator.
Prabhu said...

அட, பேபல் மாதிரி, கேயாஸ் தியரி மாதிரி போகுதே.

Truth said...

டார்வின் தியரி பத்தி உங்களுக்குத் தெரியும், டார்வின் அவார்ட்ஸ் பத்தி தெரியுமா? இங்கே படிக்கவும்.

ICANAVENUE said...

அய்யா பின் நவீன பித்தன் ஆகி விட்டீர்களா?

தராசு said...

அய்யய்யோ,

அடுத்த பின் நவீனத்துவம் வந்துருச்சய்யா

வால்பையன் said...

கலையில ஆரம்பிச்சு கொலையில(மொக்கையில) முடிச்சிடிங்க!

நல்லாயிருங்க!

priyamudanprabu said...

////
எதையாவது சம்பந்தப்படுத்தி எழுதுவதொரு கலை என்றால் சம்பந்தமில்லாமல் எழுதுவதென்பதும் ஒரு கலைதான். அதைவிட சம்பந்தமின்றி ஆனால் சம்பந்தமாக எழுதுவதும் ஒரு சிறப்பான கலைதான்.வெறுமனே எதையாவது எழுதுவதே கலை எனும்போது இப்படியெல்லாம் எழுதுவதையும் கலை என்று சொல்வதில் என்ன தப்பு?
////


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணகட்டுதே

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்கு..ஆனா இதே மாதிரி கப்பி எப்பவோ எழுதிட்டாரு

. said...

சுப்பர் பரிசல். பிரமாதமான பதிவு. ஷண்டிங்கு அடிக்கிற கூட்ஸ் எஞ்சின் மாதிரி முன்னேயும் பின்னேயும் அடிச்சு விளையாடுது.

ஆனா இது மாதிரித்தான் எழுதனும்னா ஒராயிரம் எழுதலாமேன்னும் தோணுது.

மண்குதிரை said...

நல்ல சுவாரஷ்யமா இருக்கு.

தொடர்ந்து வாசித்தாலும் முதல் பின்னூட்டம் இதுதான் என்று நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

@ பெருசு

பு த செ வி

நன்றி பப்பு

@ ட்ரூத்

ஆஹா...!

@ IVANAVENUE

நன்றி. போனதடவை நீங்க எனக்கு பின்னூட்டம்போட்டப்போ சில கேள்விகள் கேட்டேன். நீங்க இன்னும் பதில் சொல்லல தலைவா..

நன்றி தராசு, வால்பையன், சென்ஷி

பரிசல்காரன் said...

நன்றி ப்ரியமுடன் பிரபு. முடிச்சப்போ என்ன ஆச்சோ...

@ நான் ஆதவன்

சரிங்க நண்பா..

@ padukali

நன்றி.. (ஏங்க.. உங்கள என்னன்னு கூப்டறதுங்க???)

@ மண்குதிரை

அப்படியா... ஏற்கனவே ஒரு வாட்டி கமெண்ட் போட்டதா ஞாபகம்.. இல்லையா? சரி.. விடுங்க.. நன்றி!

Venkatesh Kumaravel said...

//அட, பேபல் மாதிரி, கேயாஸ் தியரி மாதிரி போகுதே//
ஏனுங்க எல்லாரும் இந்த படம் பத்தியே பேசுறீங்க? இந்த ட்ரைலாஜியில உள்ள மீதி ரெண்டு படமும் இதவுட ஒஸ்திங்க. (ஏதோ சம்மந்தமா தான் பேசணுமாம்ல..)

Thamira said...

கலக்ஸ்.!

அன்புடன் அருணா said...

இது பின் நவீனத்துவ,முன் நவீனத்துவம் மாதிரி தொடர் நவீனத்துவப் பதிவா??? தலை சுற்றியது!!!
அன்புடன் அருணா

ICANAVENUE said...

மன்னிக்க வேண்டுகிறேன்! கேள்விகளை பார்த்தமாதிரி ஞாபகம் இல்லையே சார்! உங்களுக்கு பதில் சொல்லாமலா?

பெருசு said...

அறிவிலி அய்யா, //தோணாலாம்// அப்படின்னு
முடிச்சிருக்காரு,
சும்மா எதுகையா இருக்கட்டுமேன்னு தோணான்
அப்படின்னு ஆரம்பிச்சேன்.

ஆரம்பிச்சா கிட்டத்தட்ட அந்தாதி மாதிரி போகுது பதிவு.
அதனாலே போட்டதுதான் அந்தா, தீ.

அந்தா பாரு தீ மாதிரி.

மாதிரி தான் இருக்கே தவிர அந்தாதி இல்லே.

Venkatramanan said...

தளபோட்சுத்ரி! - 1 & 2

பரிசல்காரன் said...

நன்றி வெங்கிராஜா

நன்றி ஆதி

அருணா.. பார்த்துங்க..

icanavenue போன என் பதிவுல உங்க பின்னூட்டத்துக்கு கீழ கேட்டேன்.

இதுதான் அந்தக் கேள்விகள்

//
தங்களை எப்படி தமிழில் எழுத? ஐகேனவென்யூ என்றா? பெயர்க்காரணம் என்னவென அறியலாமா??? தங்கள் பெயர், எழுத்துக்களைப் பார்த்தால் தமிழ் தாய்மொழி மாதிரி தெரியவில்லை. அப்புறம் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்.. ஆர்வம் காரணமாய் பயின்றீரா?

பகிர்ந்து கொள்வீர்களா பதில்களை?//


இதுதான்!

நன்றி வெங்கட்ரமணன். மோகன்கந்தசாமியை படித்திருக்கிறேன். மிக நேர்த்தியாக விளக்கியிருப்பார்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

பரிசல்காரன் said...

@ பெருசு

உங்கள் கமெண்ட் அறிவிலியைக் குறிக்கிறதா? அறிவிலியை நான் தொடர்ந்ததால் என்னைத்தான் சொல்கிறீர்கள் என நினைத்தேன்.

அறிவிலி மனம் புண்பட்டதாய் அறிந்தேன். ப்ளீஸ் வேண்டாமே..

அறிவிலி... மன்னிக்கவும்.

Ariv said...

////‘வெள்ளிக்கொலுசு மணி.. வேலான கண்ணுமணி’ என்ற பாடல் அப்போதெல்லாம் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடல்களில் ஒன்று. என்ன படம் இது? சரிவர ஞாபகமில்லை. ராம்கி என்று ஞாபகம்..///
Intha paadalil nadithadhu Ramarajan & Rekha...

Ariv said...

///கவுதமியும், ராம்கியும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா என்ன?//

padathin peyar nenaivil illai -- aanal paatin varigal "kannalae kadhal kaditham thandhalae enakaaga..."

பரிசல்காரன் said...

@ Ariv

படம் ஆத்மா.

அதுல கௌதமியா என்ன? குழப்புதே...

Ariv said...

http://en.wikipedia.org/wiki/Rahman_(actor)

//Ithil... Ctrl+F pottu..."Ramki" kuduthu search panunga...

முரளிகண்ணன் said...

பரிசல்,

வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணு மணி பாடல் இடம் பெற்ற படம்

பொங்கி வரும் காவேரி (ராமராஜன் & கௌதமி)

ராம்கி & கௌதமி - பெண்புத்தி முன்புத்தி என்னும் படம் - பாடல் -கொலுசே கொலுசே எச பாடு கொலுசே


ராம்கி & கௌதமி - ஆத்மா - தேதிகளை மையமாக வைத்து ஒரு அருமையான மெலடி பாடல்.

ICANAVENUE said...

உங்களை மாதிரி சூப்பர் ஸ்டார் என் பெயரில்/பதிவில் அக்கறை காட்டுவதற்கு மிக்க நன்றி! நான் கொங்குத்தமிழன் தலைவரே!
நான் தமிழில் எழுத முடியாததற்கு காரணம், இன்னும் தமிழில் டைப் செய்ய கற்றுக்கொண்டிருப்பது தான்.

பெயர்காரணம் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்!

பெருசு said...

அன்பின் பரிசல்

ஒரு வேகத்தில் இடப்பட்ட கமெண்ட் அது.

அறிவிலி அய்யாவின் மனதை அது புண்படுத்தி இருந்தால் பகிரங்கமாக
மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

மங்களூர் சிவா said...

முடியலை
:)))))))))

Unknown said...

morning na saayanthiram illaya?

illai intha blog padichathaaal varra thalaichutralil appadi therikiradha

thalai chutrallukku injichaaru nallathu

nalla visayangalai ippellam yaar ketkiraanga

ketkirrangalo illaya sollavendiyathu namma kadamai....

kadamayavathu, mannavathu, kaalayail seekiram officekku pohanum

office morning poituu saayanthiram vanthuruveengala

morningna saayanthiram illya?

Parisalkararey

rasanayaka irunthatu ungal pathivu

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

ரொம்ப பிஸியா தல? உங்கள வரவைக்கணும்ன்னா இப்படி சினிமா தகவலை தப்பா சொன்னா போதும் போலிருக்கே..

@ பெருசு

ஏங்க பெரிய வார்த்தையெல்லாம்.. அதான் உங்க சார்பா நான் சொல்லீட்டேன்ல..

@ ஐகேனவென்யூ

சூப்பர் ஸ்டாரா? அவ்வ்வ்வ்வ்வ்..

மெயில் படிச்சேன். உங்க மேல மதிப்பு பல மடங்கு உயர்ந்துடுச்சு. நீங்கதான் நிஜ ஸ்டார்!

மங்களூர் சிவா

முடியலன்னா தொடருங்களேன்..

@ shan

தமிழ்ல இதே பின்னூட்டத்தைப் போட்டிருந்தீங்கனா.. பின்னீருக்கும்.

எனிவே.. சபாஷ் & நன்றி