மகாபாரதக் கதைகள் மிகுந்த சுவாரஸ்யமிக்கவை. ராமாயணக்கதைகளும்தான்.
அவ்வப்போது மகாபாரதம் அல்லது ராமாயணத்திலிருந்து சில சுவையான கதைகளை பகிர்ந்து கொள்ள சித்தமாய் இருக்கிறேன். (நல்லாத்தாண்டா போய்ட்டிருந்தது???)
அவ்வப்போது பைபிள், குரானிலிருந்தும் வரலாம். எதுவாயிருப்பினும் கிருஷ்ணகதா-தான் தலைப்பு. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்வதால். (நாட்ல இந்த நடிகனுங்க தொல்ல தாங்கலடா.. அவனவன் பொறந்த நாளுக்கு அவனவனே போஸ்டர் அடிச்சுக்கறான் பாரு-ங்கறாமாதிரிதான் இது. பொறுத்தருள்க.)
******************************
அடிக்கடி நாம் உபயோகப்படுத்தும் வாக்கியத்திலொன்று ‘நேரம் ரொம்ப முக்கியம்’ என்பது.
வடிவங்கள் வேறுவேறாயிருப்பினும் அடிக்கடி வெவ்வேறு வகைகளில் இந்த வாக்கியம் வந்துவிழுகிறது.
‘டைம் பார்த்துக்கப்பா.. லேட் பண்ணிடாத’
‘இன்னைக்கு விட்டா அவ்ளோதான்’
‘லாஸ்ட் மினிட்ல ஏண்டா அவசர அவசரமா ஓடறீங்க.. மொதல்லயே ப்ளான் பண்றதில்லையா’
‘அரைமணி நேரம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்’
இன்னும் எத்தனை எத்தனை வடிவங்களில் நேரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் அலுவலகத்தில் எப்போது மீட்டிங் என்றாலும் வெவ்வேறு ஃபேக்டரிகளிலிருந்து வந்து சேர்கிறவர்களால் தாமதமாகும். கஷடப்பட்டு, வேண்டுமென்றே முன்கூட்டிச் சொல்லி நாம் நினைத்த நேரத்துக்கு எல்லாரும் வந்துவிட்டால் எம்.டி. அன்று தாமதப்படுத்துவார். குறித்த கணத்தில் ஆரம்பித்த மீட்டிங் 10%கூட இருக்காது. அதேபோலத்தான் குறித்த நேரத்தில் முடிப்பதும். (பெரும்பாலும் மீட்டிங்கின் முடிவு நேரம் குறிப்பிடுவதில்லை. பலசமயம் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களின் வேலை முடிவுதான் மீட்டிங்கில் தீர்மானிக்கப்படுகிறது!!)
அமெரிக்க ஜனாதிபதி நேர மேலாண்மைக்காக இரண்டு வழிகளைக் கடைபிடிக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
யாரையாவது சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தால் சந்திக்க வருகிறவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட 10 நிமிடமோ, 15 நிமிடமோ அந்த அறைக்கு ஜனாதிபதியே வந்து பேசிவிட்டு எழுந்து சென்று விடுவார். சந்திக்க வருகிறவர்கள் அதன்பின் குறிப்பிட்ட நேரம் வரை இருப்பதென்றால் இருக்கலாம், போவதென்றால் போகலாம். தமது அறைக்கு அழைத்து, ’டைமாச்சு போங்க’ என்று சொல்லவேண்டிய வேலை இல்லை.
அதேபோல அவரது அறையின் நாற்காலியின் அமரும்பகுதி சற்றே முன்பக்க சாய்மானத்தில் அமைக்கப்பட்டிருக்குமாம். (ஸ்லோப்-பாக) அதாவது உட்கார்ந்தால் முன்னோக்கி லேசாக வழுக்கும் அமைப்பில். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே எழுந்து போகலாம் என்று தோன்றுமாம்.
தமிழகத்தின் தொழிலதிபர் ஒருவரது அறையில் ‘எனக்கு இன்றைக்கு முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் காத்திருக்கிறது. உங்களுக்கு?’ என்றொரு அறிவிப்பை மேஜையிலேயே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சரி.. இப்போது அந்த மகாபாரதக் கதை...(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது!)
திண்ணையில் அமர்ந்திருந்த தருமரிடம் பிச்சை கேட்கிறான் ஒருவன். ஏதோ வேலையாய் இருந்த அவர் ‘நாளைக்கு வாப்பா’ என்கிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் உடனே முரசை எடுத்துக் கொண்டுபோய் கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு முரசடிக்கிறான்.
“தம்பி... என்னப்பா செய்கிறாய்? எதற்கு இப்போது முரசடித்து ஊரைக்கூட்டுகிறாய்?” என்று கேட்கிறார் தர்மர்.
“எங்கள் அண்ணன் காலத்தை வென்று விட்டான்’ என்று இந்த ஊருக்கு அறிவிக்கப்போகிறேன் அண்ணா..”
தருமருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “காலத்தை வென்றேனா.. நானா..?” குழப்பத்தோடே கேட்கிறார்.
“ஆமாம் அண்ணா. பிச்சைக்காரரை நாளைக்கு வரச் சொன்னீர்களே? நீங்கள் நாளைக்கு இருப்பீர்களா? அவன் நாளைக்கு இருப்பானா? நீங்கள் இருந்தால் பிச்சையிடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? அவன் இருந்தால் நாளைக்கும் அவன் பிச்சைக்காரனாகவே இருப்பானா? நாளைக்கு உங்கள் இருவரின் சந்திப்பு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பிச்சை போடுவீர்களா? எவ்வளவு நிச்சயமாய் இத்தனை கேள்விகளின் சாத்தியங்களை உணர்ந்து நாளை அவனை வரச் சொன்னீர்கள்? அப்படியானால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? என்னை விடுங்கள். இப்போதோ இதை ஊராருக்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை. அதனால்தான் இப்போதே அறிவிக்கிறேன் என்று அவசரப்படுகிறேன்” என்றான் பீமன்.
“பொறு தம்பி. தவறுதான். அவனை அழை. இப்போதே உதவுகிறேன். நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்” என்று சொல்கிறார் தருமர்.
ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!
39 comments:
ஜூப்பரப்பு ....
அடடே நான் தான் பர்ஸ்டா ...
ஓ.கே... ஓ..கே...
இப்போதே பின்னூட்டம் இட்டு விடுகிறேன்..
கதா”கால”ஷேபம் செய்ய ஒரு நல்ல ஆள் உருவாகிட்டார்.
அடுத்த வருஷம் ராம நவமிக்கு புக் பண்ணிட வேண்டியது தான்.
சாரி... தர்மர் மாதிரி அடுத்தவருஷம்னு சொல்லிட்டேன். இப்பவே புக்பண்ணுக்கப்பா..
பெயர் மட்டும் கொஞ்சம் மாத்திக்கனும்,
சேங்காளிபுரம் சுந்தரராம தீட்சிதர்,திருச்சி கல்யாண சுந்தரம் மாதிரி
திருப்பூர் கிருஷ்ணகுமார பட்டாச்சாரியார் ஆயிடுங்க :)
நான் கூட உங்க பதிவை வார இறுதில படிச்சுக்கலாம்ன்னு நினச்சேன்...
அப்புறம் இருப்போமோ , மாட்டோமோன்னு தான் இப்போவே...
நல்ல கதை.....சொன்ன விதமும் நல்லா இருக்கு
காலத்தை வென்ற பரிசல்காரர் வாழ்க.. (ஏனென்றால் அவர் தான் இனிவரும் நாட்களில் ஓஷோ, மகாபாரதகதைகளை எழுத போவதாய் தெரிவித்திருக்கிறார்) எனவே காலத்தை வென்ற பரிசல்காரன் வாழ்க்.. வாழ்க...:):):):)
பரிசல்,
நான் பார்த்து ரசித்த ஒரு வாசகம்.
If you have nothing to do with me please do it elsewhere.
//காலத்தை வென்ற பரிசல்காரர் வாழ்க.//
என்ன? கோவி.கண்ணனை பரிசல் வென்றுவிட்டாரா?????எப்படி?
சகா, கதை சூப்பர்..
//ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!//
அண்ணே, அசத்திட்டீங்க.
ஸ்ரீ பரிசலானந்தா மகாராஜ் கீ ஜே.
உங்க பதிவுகளிலேயே எனக்கு பிடித்தது அவியல் தான். இப்போது கிருஷ்ணகதாவும் தான்.
தெளிவாச் சொன்னீங்க. சூப்பர்.
மிக்க நன்றி சம்பத். நீங்கதான் ஃபர்ஸ்டூஊஊஊ..
நன்றி சுரேSH.. நல்ல டைமிங்.
நமஸ்காரம் ஸ்வாமிஜி.. பேமெண்டை அட்வான்ஸா குடுத்துடுங்க.. நாளைக்கு என்ன ஆகுமோ!
@ நிலாவும் அம்மாவும்
ஆஹ்ஹ்ஹ்ஹாஹா! தேங்க்ஸூங்க!
கால மேலாண்மையைப் பற்றி எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது. கதையும் அருமை.
@ கேபிள் சங்கர்
உருவத்துல பீமனா இருக்கற நீங்க.. அவரை மாதிரியே அறிவிச்சது எத்தனை பொருத்தம்! :-)) நன்றி சங்கர்ஜி!
@ வடகரை வேலன்
சூப்பர்ல அண்ணா?
@ கார்க்கி
ஏன் சகா... காலைலயே ஆரம்பிச்சுட்டியா? (கதை சூப்பர்னு எழுதினது ஏன்னு எனக்குத் தெரியுமே...)
@ தராசு
உங்களை மாதிரி வாசகர்கள்தாங்க எனக்கு மகாராஜ். (கேமராவைப் பார்த்து ஹீரோ சொல்றது ஞாபகம் வரக்கூடாது... ஓக்கே..??)
@ ட்ரூத்
நெஜமாவா? நன்றிங்க..
@ Enathu Payanam
பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா. உங்க பேர் நல்லாயிருக்கு. செட்டிங்க்ஸ்ல போய் அதை தமிழ்ல எழுதுங்களேன். (எனது பயணம்)
மிக அருமை
:)
சுபாஷ்
நன்றி...
நன்றே செய் அதை இன்றே செய்.. time management.
ம்ம்ம் அருமை அண்ணே..
கேபிள், கார்க்கி:)
நல்ல கதை! :)
அப்போ இது தொடருமா.......???? சரி... சரி.....
அப்போ மார்கழி மாசம் பூராவும் நெம்ப பிசியா இருப்பீங்கோ ....????
தொடரை எதிர்பார்ர்த்து......
லவ்டேல் மேடி......
//குரானிலிருந்தும் வரலாம் //
குரானில் கதைகள் இல்லை. ஹதீஸில் உண்டு. அனுப்பி வைக்கிறேன்ணே.
அந்த தொழிலதிபர் பெயர் சஞ்சய் காந்தியா? புதசெவி.. ;-)
ஹை கத சொல்ல இன்னொரு தாத்தா கிடைச்சாச்சு ;)))))))
Good story on time management! super!
நன்றி லோஷன்
நன்றி ஆகாயநதி
நன்றி லவ்டேல் மேடி
நன்றி அப்துல்லா. (உங்கள நம்பித்தானே சொல்லிருக்கோம்!)
நன்றி தமிழ்ப்ரியன் (அவர் டேபிள்ல வேற வாசகம்தான் இருக்கு)
நன்றி ஸ்ரீ பேத்தி
நன்றி ஜோ.
:))))
\\என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை\\
இதை சரியாக பிடித்துக்கொண்டால்
வாழ்க்கையின் இரகசியமே விளங்கும்.
தொடர்ந்து இதுபோல் வழங்குங்கள்..
வாழ்த்துக்கள்...
//நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்//
யாவரும் உணர வேண்டிய, ஆனால் உணரத் தவறும் உண்மை.
அடுத்த கிருஷ்ணகதா எப்போது??? ஆவலுடன் காத்திருக்கிறோம்! :-)
நன்றி அறிவிலி
நன்றி அறிவே தெய்வம்
நன்றி புன்னகை
(’அறிவிலி’-க்கு அடுத்து ’அறிவே தெய்வம்’ பின்னூட்டமிட்டதை ’புன்னகை’யுடன் ரசித்தேன்!)
கதை நல்லா இருக்குங்க....
//குறித்த கணத்தில் ஆரம்பித்த மீட்டிங் 10%கூட இருக்காது. அதேபோலத்தான் குறித்த நேரத்தில் முடிப்பதும்.//
மீட்டிங்-ஆலோசனைக்கூட்டம் ன்னு சொல்லலாமா? (ரொம்பப் பெருசா இருக்கோ??)
//என்ன? கோவி.கண்ணனை பரிசல் வென்றுவிட்டாரா?????எப்படி?//
:))))))
thanks Kathir!
ஹை.. சூப்பர் தொடர் டாபிக்.!
அதோடு முதலாவதாக கிளாஸ் கதை.! எனக்கு இந்த மாதிரி கதைகள் ரொம்ப பிடிக்கும்.. என்ன.. திரும்பச்சொல்ல நியாபகம்தான் இருந்து தொலைக்கிறதில்லை..
///நன்றி அறிவிலி
நன்றி அறிவே தெய்வம்
நன்றி புன்னகை
(’அறிவிலி’-க்கு அடுத்து ’அறிவே தெய்வம்’ பின்னூட்டமிட்டதை ’புன்னகை’யுடன் ரசித்தேன்!)///
:)))))))))))))))))))))
//சேங்காளிபுரம் சுந்தரராம தீட்சிதர்,திருச்சி கல்யாண சுந்தரம் மாதிரி
திருப்பூர் கிருஷ்ணகுமார பட்டாச்சாரியார் ஆயிடுங்க :)//
அதே அதே.
பதிவுக்கு இனி தொடர்ந்து மேட்டர் கெடச்சிடும் உங்களுக்கு இல்ல :).
பின்னூட்டம் அப்புறமா போடலாம்னு நெனைச்சேன் வேணாம் வேணாம் இப்பவே போட்டுடறேன்.
:))))
/
கதா”கால”ஷேபம் செய்ய ஒரு நல்ல ஆள் உருவாகிட்டார்.
/
ரிப்பீட்டு
//thanks Kathir!//
:))
மிகவும் நன்றி ஆதி
@ அறிவிலி
ரசிச்சீங்கள்ல?
@ பட்டாம்பூச்சி
பட்டாச்சாரியாரெல்லாம் இல்லீங்க. வாழ்க்கைல ரொம்ப அடி
’பட்ட’சிறியர்’ன்னு வேணும்னா சொல்லலாம்.
ரிப்பீட்டு நன்றி சிவா.
நன்றிக்கு சிரிச்சதுக்கும் நன்றி கதிர் அண்ணா!
ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!
posted by பரிசல்காரன் at 6:20 AM on 17 Apr, 2009
ஓ.. அதனால் தான் இன்றைக்கு 6:20 AM ௦ க்கே பதிவா....?
ஓகே..! ஓகே..!
@ மீனவன்
ஹி...ஹி....
Post a Comment