அன்புள்ள பரிசல்காரன்
வணக்கம்.
நீங்கள் வலைப்பூ எழுதவந்த நாளிலிருந்து உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (மே 2008?) ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு தொடர்ந்து இல்லையென்றாலும் சுவாரஸ்யம் குன்றாமல் வலைப்பூவை நடத்திவருகிறீர்கள்.
உங்கள் பதிவுகளில் முதலில் என்னைக் கவர்ந்தது ‘தந்தை எனக்கெழுதிய கடிதம்’தான். அதேபோல ’உமாவுக்கு’. இரண்டுமே சீரியசான விஷயத்தை அழகுணர்ச்சியோடு சொல்லும் கடிதங்கள். அதுவும் தந்தை உங்களுக்கெழுதிய கடிதத்தின் கடைசி வரி… இன்னும் மறக்கமுடியாது.
சீரியசான எழுத்துகளில் நர்சிம் உங்களை அழைத்த ஏதாவது செய்யணும் பாஸ் எனக்குப் பிடித்த ஒன்று. தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் என்பதில் எனக்கும் உடன்பாடு என்பதால் அது பிடித்திருக்கலாம். மின்சார காண்டம் என்ற பெயரில் எழுதிய மின்பற்றாக்குறை பற்றிய கட்டுரையும் பிடிக்கும்.
ஆனால் நீங்கள் சீரியசான விஷயங்களை ஏன் அதிகமாக எழுதுவதில்லை? அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளும் உங்களிடமிருந்து வருவதில்லை. இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதுவதில்லை. (உங்களுக்கு இசை பிடிக்கும் என்பதை சர்வேசன், தேன்கிண்ணம் பதிவுகளில் உங்கள் சில பின்னூட்டங்களின் மூலம் அறிவேன்)
அதேபோல சில விவாதங்களில் உங்கள் வழவழ கொழகொழா போக்கும் பிடிக்கவில்லை. அதனால் உங்கள் கருத்து என்னவென்பதையே என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. யார் சண்டைக்கு வந்தாலும் உடனே அடங்கிப் போகிறீர்கள்.
பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவருக்கும் விரிவாய் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரே வாரத்தில் பிஸி மாறி ப்ரீயாகிவிட்டீர்களா என்ன? (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)
உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது பரிசல்காரருக்கு நன்றி, அவரால்தான் நான் எழுதுகிறேன் என்று பதிவு ஆரம்பிப்பதுதான்.
1. இந்தக் கடிதத்தை வெளியிடும்போது தயவுசெய்து எழுத்துப் பிழைகளை சரிசெய்து வெளியிடவும்.
2. மெய்ல் ஐ.டியிலுள்ள என் பெயரைக் குறிப்பிடவேண்டாம். கீழே உள்ள பெயரையே குறிப்பிடவும். காரணம் கடிதத்தை வெளியிட்ட பின் சொல்கிறேன்.
3. உங்கள் மின்னஞ்சலின்போது அளவில்லா அன்போடு என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு.
வாழ்க வளமுடன்
-சந்திரசேகர்.
*********************
முதலில் இந்த மாதிரி கடிதங்களை வெளியிட்டு சொந்த விஷயங்களை பிரஸ்தாபித்துக் கொள்வதைப் பொறுத்து படித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி. இன்றைக்கு வேறொரு பக்கம் பிஸியாக இருப்பதாலும், பதிவெழுத வேறு மேட்டர் இல்லாததாலும் இதை வெளியிடவேண்டியதாயிற்று. அதுவுமில்லாமல் இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு….
என்னுடம் நெருக்கமாக இருக்கும் பதிவுலக நண்பர்கள் என்னைப் பற்றி அதிகம் அறிவார்கள். நேரடியாய் இல்லாமல் எழுத்தின் மூலம் மட்டுமே என்னை அறிந்த பலருக்கும் இதுபோன்ற பல கேள்விகள் இருக்கலாம். இதுபோல விளக்கம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கும் தெளிவு கிடைக்கும் என்பதால்.. (டேய்.. போதும்.. மேட்டருக்கு வா…)
சீரியஸான விஷயங்களை நான் எழுதுவதில்லை என்பதற்கு காரணம் நான் சீரியஸானவன் இல்லை என்பது மட்டுமே காரணம். அரசியல் குறித்தும் கட்சிகள் குறித்தும் எனக்கு எந்த தெளிவான சிந்தனையும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொள்கிறேன். ஏதாவது அரைகுறையாய் எழுதி மாட்டிக்கொள்வானேன் என்பதும் ஒரு காரணம். ‘எக்ஸ் என்ற அரசியல்வாதி இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நான் எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது. இந்த நிலையில் நான் என்ன எழுத அரசியல் பற்றி?
இசை பற்றி..
நான் ஒரு இசை ப்ரியன். ஆனால் உயிர்மையில் ஷாஜி போன்றோரது கட்டுரைகளைப் படித்து விட்டு நானும் இசை பற்றி எழுதுகிறேன் என்று எழுதுகிறது துணிவு எவருக்கும் வருமா என்ன? எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது! இளையராஜா பற்றி எழுத மிகுந்த ஆவலுண்டு. டாக்டர்.புரூனோ YYY என்பாரோ என்ற பயமும் காரணம்! (டாக்டர் சார்.. ச்சும்மா….!)
விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.
பின்னூட்டத்திற்கு பதில் சொல்வது குசும்பன், வால்பையன் உள்ளிட்ட நண்பர்களின் அறிவுரைகளினால்தான். அது அல்லாமல் வேறொரு காரணமும் உண்டு:
நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை! இன்னொன்று நெருங்கிய நண்பர் ஒருவரே ‘ஓ.. லக்கி மாதிரி நீங்களும் பதில் சொல்றதை குறைச்சுட்டீங்களா?’ என்று கேட்டது! லக்கி பதில் எழுதுவதில்லை என்றால் அந்த நேரத்தை அச்சு எழுத்துக்காக ஒதுக்கி உருப்படியாக புத்தகம் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாம பதில் கூட சொல்லலைன்னா எப்படி?
********
என்னைப் பார்த்து பதிவெழுத வந்தார்கள் என்றால் ‘இப்படி எழுதறவனெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன?’ என்ற காரணமும் இருக்கலாம். ஆதிமூலகிருஷ்ணனை உங்களை சிறுகதை எழுத தூண்டுவது எது என்றால் சில வார இதழ்களில் சிறுகதை என்ற பெயரில் வரும் கதைகள்தான் என்பார். அதுபோல…
சரிதானே?
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா
46 comments:
me tha first
அப்டி போடு..!
//மாதத்துக்கு ஒருவராவது பரிசல்காரருக்கு நன்றி, அவரால்தான் நான் எழுதுகிறேன் என்று பதிவு ஆரம்பிப்பதுதான்.//
ஹிஹி. நான் அப்படிச் சொல்ல மாட்டேன்:). ஆனாலும் இவ்வருடத்தின் எனது முதல் பதிவு உங்கள் பெயரினை ஆரம்பமாகக் கொண்டுதான் மலர்ந்தது:)!
பதில்கள் தருவதைத் தொடரலாம் என்பது என் அபிப்பிராயம்.
மிக நல்ல,உண்மையான அக்கறையுடன் எழுதப்பட்ட நல்ல கடிதம்.. உங்கள் பதி வழவழ இல்லாமல் சரியாக இருந்தது..
கடிதம் எழுதியவருக்கு வாழ்த்துகள். சரியான கேள்விகளைக் கேட்கிறார். உங்க பதிலும் பொருத்தமாக - அதைவிட முக்கியமாக - உண்மையாக இருக்கு.
இசை பற்றிய உங்க சொந்த அனுபவங்களை தாராளமாக எழுதலாம். ஆயினும் அதிலும் சர்ச்சைகள் வர வாய்ப்புண்டு. வரட்டுமே. எங்களுக்குப் பொழுது போகும் :)
அனுஜன்யா
பரிசல்,
இப்படி ஒவ்வொன்றையும் ஒதுக்கினால் நீ எழுத மேட்டர் எதுவுமே கிடைக்காது.
உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் அவ்வளவே. ஷாஜி எழுதியதால் நான் எழுதவில்லை என நீ சொன்னால், பரிசல் மாதிரி ஜாம்பவான்கள் எழுதும் இடத்தில் எங்களுக்கென்ன வேலை என 99% பேர் வேறு வேலைதான் பார்க்கணும்.
உன் பலம் எதையும் சுவராசியமாகச் சொல்லுவது. அது இங்கு எத்தனை பேருக்குக் கைகூடி இருக்கிறது.
எழுது ராசா எழுது.
நீங்கள் ‘எக்ஸ்' என்று எந்த அரசியல்வாதியைக் கூறுகிறீர்கள் என்று தெரிகிறது. இப்படி ஆதாரமற்று அவதூறாக எழுத வேண்டாம்.
:) :)
நிஜமாவே இது சீரியஸான பதிவுதான் பாஸ்...
இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா..
(ஸாரி பாஸ்.. கடைசி 3 அல்லது 4 பதிவுகளை தான் நான் தொடர்ந்து படிச்சுட்டுவர்றேன். நேரம்கிடைக்குறப்போ மத்ததையும் படிச்சு பாக்குறேன்.)
ஒரு சின்ன க்ளூ கொடுங்களேன் பாஸ்.. உங்க தலைப்ப வச்சு அந்த பதிவு மொக்கையா இல்லையானு எப்படி கண்டுபிடிக்கிறது ;-))
@ mythees
எனக்கு நீங்க பின்னூட்டறதும் ஃபர்ஸ்ட் தான்னு நெனைக்கறேன்..
@ டக்ஸஸ்
சரிங்க...
@ ராமலக்ஷ்மி
பதிலக்ள் தருவதை நிச்சயமா தொடர்வே3ங்க..
// நான் அப்படிச் சொல்ல மாட்டேன்:). ஆனாலும் இவ்வருடத்தின் எனது முதல் பதிவு உங்கள் பெயரினை ஆரம்பமாகக் கொண்டுதான் மலர்ந்தது:)//
நீங்கள்லாம் சீனியர்ங்க.. இப்படிப் போட்டுத் தாக்கறீங்களேம்மா...
@ நர்சிம்
நன்றி பாஸ்.
@ அனுஜன்யா
அதானே... எழுதிடவேண்டியதுதான்.. வந்து கும்முங்க..
@ இயற்கை
இய்ற்கை சிரிக்கும்போது எவ்வளவு அழகு!
@ வடகரை வேலன்
நன்றி அண்ணாச்சி. நிச்சயம் எழுதறேன். அவரு இசை கேக்கறதே இப்படித்தான் கேக்கணும்னெல்லாம் எழுதறாரா.. படிச்சு டரியலாய்ட்டேன்!
நீங்க சொல்ற்தும் நிஜமே.. எதுக்கு ஒதுக்கணும்ல?
@ ஜ்யோவ்ராம் சுந்தர்
ஐயையோ,,, ஆரம்பிச்சுட்டாரே...
@ தீப்பெட்டி
தலைப்பை வெச்சுட்டெல்லாம் கண்டு பிடிக்க முடிஞ்சா எத்தனை கொலவெறிலேர்ந்து நாங்க தப்பிச்சிருப்போம்? அவ்வளவு ஈஸியா என்ன?
வேலன் அண்ணாச்சி சொல்வதை வழிமொழிகிறேன்.... உங்களை மாதிரி ஆளுக இரும்படிக்கிற எடத்துல என்ன மாதிரி ஈக்கு என்ன வேலைன்னு நினைச்சுருந்தா நானெல்லாம் எழுத வந்திருப்பேனா?
@ மகேஷ்
ஏன்... ஏன் இந்தக் கொலவெறி..
உங்களுக்கும் அண்ணாச்சிக்கும் வாய்த்திருக்கும் பயணவரங்கள் எத்தனை அனுபவங்களைத் தரும்? நீங்கள்லாம் எழுதாம வேற யார் எழுதுவாங்க...? உங்க பயணக்கட்டுரைக்கு நான் உட்பட பலர் ரசிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!
சந்திரசேகர் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.
உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் படிக்கும் போது என்னை வியாபித்த சுவாரஸியம் சற்றே தளர்ந்திருக்கிறது.
நான் பெரிதும் மதிக்கும் பதிவர் பரிசல் என்பதால் தயங்காமல் என் கருத்தை சொல்கிறேன்.
//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை! //
நர்சிம் ஓக்கே மொத்தமாக அனைவருக்கும் நன்றி சொல்வார்:)
அப்துல்லாவும் பதில் சொல்கிறாரா? எங்கு தனியாக பின்னூட்டம் பதில்கள் என்றுபிளாக் வைத்து இருக்கிறாரா? லிங் கொடுங்க பரிசல்!:)))
//இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதுவதில்லை. (//
பரிசல் சிம்பொனி செய்வதில் பிஸியா இருக்கும் ரகசியத்தை ஏன் சொல்லவில்லை?:))))
//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே...
//
சார், இந்த மாதிரி வம்புக்கு இழுத்து நக்கலடிச்சா படிக்க எவ்வளவு ஜாலியா இருக்கு. :)
@ அ.மு,செய்யது
நன்றி நண்பரே. அந்த ஒரு கருத்தோடு மட்டும் ஒத்துப் போகிறீர்களா?
:-))
விறுவிறுப்பு குறைதலுக்கு காரணம் அதிக எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இருந்தாலும் இன்னும் நல்ல எழுத்துகளைத் தர முயற்சிக்கிறேன்!
@ குசும்பன்
அப்துல்லா பதில் சொல்வாரேங்க...
சிம்பொனியா... அது சரி.. அப்புறம் அது சிம்ப்னியா ஆரட்டோரியாவான்னு சந்தேகம் வரும், அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வரும்.. அதுல....
@ கார்த்திகேயப்
அது சீரியசாகச் சொன்னது. கிண்டலில்லை.
தலைப்பு
தலைப் பூ...
ஹிஹிஹி
பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுவது குறித்த எனது சிறு கருத்தினை இந்த சந்தர்ப்பத்தில், இந்த சூழலில் இங்கே சொல்லிக்கொள்ள அனுமதி கோருகிறேன் பரிசல்.
வலை எழுத வந்த காலக்கட்டத்தில். நல்ல பதிவு என்று யாராவது பின்னூட்டம் போட்டாலும் அதற்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன். பதிவின் காண்டெண்ட் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
நன்றி சொல்லி அலுத்துவிட்டது.
காண்டெண்ட் குறித்து கேட்பவர்களுக்கு தேவைப்பட்டால் பதில் சொல்கிறேன். அவர்களது கேள்விக்கான விடை பதிவிலேயே இருந்தால் லூசில் விட்டு விடுகிறேன். சில நண்பர்களின் ஆலோசனைபடி நான் எடுத்துக்கொண்ட பாலிசி இது.
இதனால் கர்வம் பிடித்தவன், ஆணவக்காரன் என்றெல்லாம் என்னை நிறைய பேர் நேரில் திட்டியும், அவரவர் வலையில் பதிவு போட்டு சொல்லிக் கொண்டுமிருக்கிறார்கள். பிரச்சினை எதுவுமில்லை. என் கொள்கை எனக்கு. அவரவர் கொள்கை அவரவர்க்கு.
//அந்த நேரத்தை அச்சு எழுத்துக்காக ஒதுக்கி உருப்படியாக புத்தகம் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்//
இதனாலெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை. அச்சு முயற்சிகளுக்கு லம்பாக துட்டு கிடைக்கிறது என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
நன்றி!
//இதனாலெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை.//
”இதனாலெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை என்பதில்லை” என்று முந்தைய பின்னூட்டத்தில் திருத்தி வாசிக்கவும்.
மேலும், இப்போது நான் போட்ட பின்னூட்டத்துக்கு நன்றியோ, பதிலோ சொல்லாமல் இருந்தால் மனம் மகிழ்வேன் பரிசல்.
இந்த பின்னூட்ட கந்தாயம் பற்றி ஒருநாள் டெலிபோன் கான்ஃபரன்ஸ் போடலாமா?
// எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது.//
ஆமாங்க இது அதிகமா நடக்குது..
:)
//என்னைப் பார்த்து பதிவெழுத வந்தார்கள் என்றால் ‘இப்படி எழுதறவனெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன?’//
நல்லாயிருக்கு நண்பா...
அப்ப யாரைப்பார்த்து எழுத ஆரம்பிக்கலாம்னு சொல்லுங்க?
என்னைப்போன்றோருக்காக :)
\\ஆனால் நீங்கள் சீரியசான விஷயங்களை ஏன் அதிகமாக எழுதுவதில்லை?
வாழ்க வளமுடன்
-சந்திரசேகர்.\\
அதுக்கெல்லாம் உள்ளூரிலேயே நாங்க இருக்கம் சந்திரசேகர்.
வாழ்த்துக்கள்
//விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.//
சரியான பதில்..
மேலும் லக்கிலுக் சொன்னது போல்
//என் கொள்கை எனக்கு. அவரவர் கொள்கை அவரவர்க்கு.//
உங்கள் கொள்கை உங்களுக்கு.
உங்களை இப்போதுதான் வாசிப்பதால் எனக்குத் தெரியாது!!! இருப்பினும் பதில் எழுதுவது, எழுதாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்..!!!!
தொடர்ந்து எழுதுங்கள் (பதிலையும் தான்)
@ கார்க்கி
ஹி...ஹி...
@ லக்கிலுக்
//மேலும், இப்போது நான் போட்ட பின்னூட்டத்துக்கு நன்றியோ, பதிலோ சொல்லாமல் இருந்தால் மனம் மகிழ்வேன் பரிசல்.//
சரி.. அடுத்த வரியிலேயே..
//இந்த பின்னூட்ட கந்தாயம் பற்றி ஒருநாள் டெலிபோன் கான்ஃபரன்ஸ் போடலாமா?//
இப்படிக் கேள்வி கேட்டிருக்கிறீர்களே.. பதில் சொல்லாமல் போக முடியுமா?
டெலிஃபோன் கான்ஃபரன்ஸுக்கு நாள் குறியுங்கள்...
@ லோகு
என்ன செய்ய?
@ Chill-Peer
ச்சும்மா தமாஷுக்கு சொன்னது நண்பா. என்னைப் பார்த்து எழுத வந்தா எனக்கு சந்தோஷம்தான்.
(ஆமா.. PeerMohammad என்ற பெயர்தான் Chill-Peer ஆக மாறியிருக்கிறதா? Chill Beerன்னு இருந்திருக்கலாமோ...)
@ அறிவே தெய்வம்
ஏன் பேரை இங்க்லீஷ்ல மாத்தீட்டீங்க?
@ நன்றி ஆ. முத்துராமலிங்கம்
@ ஆதவா
எழுதுகிறேன் நண்பரே..
//(ஆமா.. PeerMohammad என்ற பெயர்தான் Chill-Peer ஆக மாறியிருக்கிறதா? Chill Beerன்னு இருந்திருக்கலாமோ...)//
Peer Mohammed அப்படியேதான் இருக்கிறது, Peer க்கு முன்னால் Chill சேர்த்துக்கொண்டதற்கு 2 காரணங்கள்..
1. பிரச்சனைகளை கூலாக கையாள ஆசை. அதிலிருந்து மாறும்போது, எனக்குள்ளிருந்து ஒருவன், 'டேய்...உன் பேரிலேயே Chill இருக்கு, கூலா ஹான்டில் பண்ண' சொல்லுவான்னு பட்சி சொல்லுச்சு.
2. எனது பணியிடம் "-20*C"
@ Chill Peer
நன்றி.
உங்க ரெண்டாவது காரணம் புரியல நண்பா..
//அரசியல் குறித்தும் கட்சிகள் குறித்தும் எனக்கு எந்த தெளிவான சிந்தனையும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொள்கிறேன்.//
எஸ்கேப்பிஸம்.
//எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது!//
இக்னோரிஸம்.
//விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.//
பயப்படுமிஸம்.
//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை!//
தன் நிலை உணருமிஸம்.
மொத்தத்தில் இந்தப்பதிவு ஒரு "நச்"சிஸம்
நன்றி தராசிசம்...
எல்லோரும் தமது நேரத்தை செலவு செய்து பின்னூட்டம் போடுகிறார்கள்.
"பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி" என்று ஒரு வசனம் எழுத கூட
அவருக்கு நேரமில்லையாம் என யோசித்தேன்.
நீங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாசகர் பலருக்கு பிடித்த பதிவர்களில் நீங்களும் முக்கியமானவர்.
மற்றவர்களை தேவையில்லாமல் குறை கூறி பதிவெழுதுவதில்லை.
அதனால் மரியாதை இருக்கிறது.
"அவியல்" super.
ஒவ்வொரு வசனமும் வாசிக்க சுவையாக இருக்கிறது.
இசை, அரசியல் பற்றியும் எழுதுங்கள்.
மிகவும் நன்றி வாசுகி.
தொடர்கிறேன்...
லக்கிலுக்க கன்வின்ஸ் பண்ண பாருங்க, நீங்க கன்வின்ஸ் ஆயிடாதீங்க.
\ நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.
\\
குட் தல ;)
//எழுது ராசா எழுது. //
ஆமா ராசா ஆமா :)
//நர்சிம் ஓக்கே மொத்தமாக அனைவருக்கும் நன்றி சொல்வார்:)
அப்துல்லாவும் பதில் சொல்கிறாரா? எங்கு தனியாக பின்னூட்டம் பதில்கள் என்றுபிளாக் வைத்து இருக்கிறாரா? லிங் கொடுங்க பரிசல்!:)))
//
யோவ் குசும்பா கடந்த ஒருமாதம் மட்டுமே நான் பதில் சொல்வது குறைந்து போனது. அதையும் கூட ”இயர்எண்டிங் பிராபளம் முடியும் வரை அவைவருக்கும் பதிலுரைக்க சற்று கடினமாக இருக்கும், ஏப்ரல் முடிந்தவுடன் வழக்கம் போல் தனித்தனியாக பதில் சொல்றேன்னு” முன்கூட்டியே அறிவிச்சோம்ல.
சரி..சரி..குசும்பனுக்கு இன்னைக்கு நா ஊறுகாய் போல.
:))
சாரி நான் எழுதாம மேய்ஞ்சுட்டிருக்கறதுக்கும் பரிசலார்தான் காரணம்.ஆமா.
நான், மகேஷ் போன்றோரெல்லாம் பின்னூட்டம் போட வருபவர்களுக்கு பதில் மட்டுமா போடுகிறோம்.?
பின்னூட்டப்பெட்டி பக்கத்தில் வெத்திலை பாக்கு, கல்கண்டு வெச்சிக்கிட்டு காத்திருக்கிறோம்ங்க.. அப்படியும் யாராவது வந்தாத்தானே ஆச்சு.!
கடிதம் எழுதியவருக்கு நன்றி...
பதில் சொன்ன உங்களுக்கும் சொல்லணுமோ? நன்றி அண்ணே :)
எழுதுங்க பரிசல்...
//பின்னூட்டப்பெட்டி பக்கத்தில் வெத்திலை பாக்கு, கல்கண்டு வெச்சிக்கிட்டு காத்திருக்கிறோம்ங்க.. அப்படியும் யாராவது வந்தாத்தானே ஆச்சு.!
//
யோவ் சிரிச்சு மாளல...போய் தொலயா ;)))))))
நன்றி அறிவிலி. நிச்சயமாய்.
@ கோபிநாத்
நன்றிங்க. (அஜீத் கோவிச்சுக்கப்போறாரு)
அப்துல்லா... குசும்பனுக்கு பதில் சொன்னதுக்கு நன்றி. அவரு அந்தப் பதிவை கவனிக்கல போல...
@ கும்க்கி
ஏன்.. சொல்லித்தரவா? எதாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்க..
@ ஆதி
பின்றீங்க போங்க.. சிப்பு சிப்பா வருது..
@ தமிழன்-கறுப்பி
நன்றி நண்பா.
@ அப்துல்.. ஆமாமா...
@ ஆதி : ஹய்யோ... ஹய்யோ... வெத்தில பாக்கு கல்கண்டு பக்கத்துல அந்த பூரணகும்பத்தை சொல்லாம விட்டுட்டீங்களே !! :))))))
அது போக, என்னைய உங்க லெவலுக்கு ஏத்தி வெச்சு அழகு பாத்ததுக்கு நன்றி !!
:))))))
பின்னூட்டம் வந்திருக்கிறதா என அரை மணி நேரத்திற்கொரு முறை பொட்டீயைத் திறந்து பார்க்க எனக்கு நிறையவே நேரமிருக்கிறது. ஆனால், பதிலூட்டங்களுக்குத்தான் நேரம் போதவில்லை.
சரி, பதிலூட்டங்களுக்கென ஒரு ஆளை நியமனம் செய்தால் போச்சு என ஒருவரைப் பணியமர்த்தினேன். அவரோ யுகங்களைப் புரட்டும் என் நெம்புகோல் எழுத்தில் தன்னையே கரைத்து விக்கித்து போய் நின்று விடுகிறார்.
ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு பதிலூட்டம் போட முன் வருகிறேன் என்று ஒருத்தன் கூட வரலை. இந்தச் சமூகம் உருப்படுமாய்யா?!
- பிரதியங்காரக மாசானமுத்து
@ மகேஷ்
ஆளாளுக்கு இப்படி வாரிக்கறீங்களேப்பா..
@ ஸ்ரீமதி
:-)
@ பிரத்யங்கார மாசானமுத்து
என்னாச்சு.. ரொம்ப நாளா மாசானமுத்துவைக் காணோம்?
நல்ல பதிவு பரிசில்... இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் நட்பு என்பது குறைந்துவிட்டது. இதில் யாரை குற்றம் சொல்ல... கிராமத்திலும் கூட தற்பொழுதெல்லாம் மாறிவிட்டது... நகரத்தை குற்றம் சொல்லுவானேன்.
///‘எக்ஸ் என்ற அரசியல்வாதி இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நான் எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது. இந்த நிலையில் நான் என்ன எழுத அரசியல் பற்றி?//
பரவாயில்லையே அரசியலை நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கிங்களே!
/
வடகரை வேலன் said...
பரிசல்,
இப்படி ஒவ்வொன்றையும் ஒதுக்கினால் நீ எழுத மேட்டர் எதுவுமே கிடைக்காது.
உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் அவ்வளவே. ஷாஜி எழுதியதால் நான் எழுதவில்லை என நீ சொன்னால், பரிசல் மாதிரி ஜாம்பவான்கள் எழுதும் இடத்தில் எங்களுக்கென்ன வேலை என 99% பேர் வேறு வேலைதான் பார்க்கணும்.
/
repeatuuu
Post a Comment