Saturday, April 18, 2009

கடிதங்கள்

எத்தனை வேலைகளுக்கிடையிலும் எழுத என்னைத் தூண்டுவது எது? எழுத்தின் மீதெனக்குள்ள காதல் என்பது சரிதானெனினும் பலரின் ஊக்கமும்தான். அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்.

பல அலைபேசி அழைப்புகள் என் தீதும் நன்றும் சொல்லி என்னைச் செலுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை பதிவு செய்ததில்லை. ஆனால் ஒரு சில கடிதங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணம்...

இன்று மூன்று கடிதங்கள்..


**************************

பரிசல்காரன்..

தங்களின் பதிவை சமீப காலமாக படித்து வருகிறேன். ஏற்கனவெ ஒரு முறை பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன் (முத்தையாவிற்கு ......). இன்று தனியாக மின்னஞ்சலில் எழுதுவதற்கு காரணம். தங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் என் மனத்தில் இருப்பவைதான். என் மனைவிடம் உங்கள் பதிவை படிக்க சொன்னேன்.

படித்த பிறகு அவள் சொன்னாள் “அந்த ஆளுக்கு நடந்த, நடப்பதெல்லாம்

உங்களுக்கும் நடந்திருக்கிறதே” என்று. எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது. எனக்கு 45 வயது ஆகிறது. தங்களுக்கு குறைவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் வெள்ளி கொலுசு மணி பாடல் பிடிபபது, அதில் நடிப்பவர்கள் சரியாக ஞாபகத்துக்கு வராமல் இருப்பது (படம் பொங்கி வரும் காவேரி). பார்த்திபன் குழந்தைகள் பற்றியதும். மனைவி பற்றி எழுதுவது எல்லாம் கிட்டத்தட்ட பொருந்துகிறது.

(இப்படி உங்களைப் போலவே என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பி முடிப்பது வரை)


நன்றாக இருக்கிறது.


-முத்தையா ரத்தினசபாபதி


இந்தக் கடித்த்தில் என்ன ஸ்பெஷல்? அவ்வளவு தூரம் பாராட்டியவர் முடிக்கும்போது சடாரென்று ஒரு யூடர்ன் அடிக்கிறார் பாருங்கள் பல பதிவுகளின் முடிவுகள் தொக்கி நிற்பதைக் குறிப்பிட்டு... அங்க நிக்கறாரு அவரு!

*******************************

அடுத்த கடிதம் விவகாரமான கடிதம். எதிர்கருத்துகளை பதிவு செய்ய வேண்டுமென்ற காரணத்தால் இந்தக் கடித்ததை வெளியிடுகிறேன். தனிமனித தாக்குதலும், அநாகரிக வார்த்தைகளுமின்றி ஆரோக்கியமாக உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் விவாதியுங்கள்.


வணக்கம் திரு பரிசல்காரன் அவர்களே

அன்பே சிவம் , உங்கள்ளுக்கு பிடிச்ச படம்ன்னு சொல்றீங்க , ..... என்னோட ஒரு அலசல்.

படம் , கதை , அதை நாங்க எடுத்தோம், சுவாரசியமாக இருந்ததுன்னு எடுத்துட்டு அப்படியே போயிடலாம், .... ஆனால் படம் ரீலீஸ் ஆகும் சமயத்தில கமல் டி.வி ல வந்து.... சமணர்கள் கழிவிரக்கம் செய்தார்கள்,....சிராபள்ளி ஒரு சமணர் ஊரு, ( திருச்சிராபள்ளி ) , லட்சக் கணக்குல கொலை பண்ணினாங்க .... அப்படின்னு அந்த படத்தோட வில்லன் ஏன் ஒரு சிவனடியார் , அவ்வளவு கொடூரமான ஆள்ன்னு சொல்வார். ..

இது ஒரு கதை , கதை படி ஒரு சிவனடியார் ( அல்லது சிவ பக்தர் ) ரொம்ப மோசமான ஆளு , ...அதுக்கு ஏன் வரலாற்றை தூக்கி பிடிக்கணும், அப்படி பார்த்தால், வரலாற்றிலும் சரி, நிஜ வாழ்கையிலும், மொகலாய சாம்ராஜ்யத்தை பாருங்க , அல்லது இப்ப உள்ள பாகிஸ்தானை பாருங்க, இல்ல ஆப்கானிஸ்தானை பாருங்க , .... underworld எனப்படும் , கருப்பான சாம்ராஜ்யத்தில் , பிறப்பால் முஸ்லிமான ஆட்கள் நிறைய உண்டு. இப்பவும் மலை மலப்புரம் ஜில்லாவுல , கடத்தல் ஆளுங்க யார் நிறைய பேர்ன்னு கேட்டுப் பாருங்க ... விடை கிடைக்கும், அது போல அந்த சினிமாவில் கட்டியது போல், எத்தனையோ கடவுள் பக்தி உள்ள, கோவிலுக்கு போகும், பட்டை , நாமம் எல்லாம் போட்ட மிக மோசமானவர்கள் நமக்குள் - நம்மை சுற்றி - இருக்காங்க... ஆனால் அதற்கும் மேல் நல்லவங்களும் அதை விட நிறைய இருக்காங்க .


அது போல அந்த கிறிஸ்துவ சிஸ்டர் , ஒரு தேவதை போலவும் ... தன்னலமற்றவர், சேவை, மட்டுமே அவரது நோக்கம் என்று காமிப்பார்கள், அது எப்படி.. இந்து சாமியார்னா , அது பொறுக்கி, மொள்ளமாரி ....


அப்பறம், அந்த கம்யூனிஸ சித்தாந்தம் , ... வரிக்கு வரி, பாட்டுக்கு பாட்டு, வசனத்ல, இப்படி எல்லாத்லயும் அமெரிக்காவை ஏசி, ஆனா சொந்தமா தன்னோட தனி பட்ட வாழ்கையில் , imported கார் வைச்சுக்கிறது , ( made in இத்தாலி , ஜெர்மனி அல்லது இங்கிலாந்து ). மேக் அப் பற்றி படிக்க ஹாலிவூட் போறது, மேக் அப் பொருட்கள் எல்லாம் அங்கிருந்து தான் வாங்குவது, , மேக் அப் மேன் கூட அங்கிருந்து தான் வருவார். ..மகளை படிக்க அங்கு தான் அனுப்புவது .குறைந்த பட்சம் ஒரு ஜட்டியாவது ரஷ்யாவில் இருந்து வாங்கணும், அப்பறம் இது மாத்ரி எல்லாம் பாடம் / படம் எடுக்கணும்.


சினிமா வேற , அது ஒரு கற்பனை உலகம் ... அதுக்கு சப்பைகட்டலாம் வேண்டாம், சினிமாவுல யார் வேணும்னாலும் வில்லனாய் இருக்கலாம் ... நிஜம் வேற.


அன்புடன்
சுந்தர்
--------------------------------
நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சமுதாயத்திலும், எல்லா குடும்பத்திலும் உண்டு சுந்தர். எதற்கு இத்தனை உணர்ச்சிவசப்படல் என்று புரியவில்லை. நல்ல/கெட்ட என்று அமைந்த கலவைதானே ஒவ்வொரு மனிதனும். இதில் ஏன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்து நண்பர்களை அண்டர்வேர்ல்ட் டான்களாகச் சொல்லி கோபப்பட்டிருக்கிறீர்கள் என புரியவில்லை!

*******************************

அடுத்த்து ICANANENUE என்ற பெயரில் எனக்கு அடிக்கடி பின்னூட்டமிடும் நண்பரிடமிருந்து... ஏதோ ஃபாரினர் என்று நினைத்தால் அவர் பெயருக்கான காரணமும், அவர் செய்து வரும் சேவையும் பிரமிக்க வைக்கிறது!

Hi KK

I've been meaning to write you for some time.

You are having simple and elegant writing style which i admire. My wife says your success lies in your ability to make the reader to identify himself/herself very easily with you.

I'm from coimbatore. Worked in Tirupur, Bangalore and now living in London for few years (5 to be precise) and my parents have moved to our native (Dharapuram).

You have spelt ICANAVENUE correctly in Tamil.

I'm running a small helping centre in Dharapuram where I sponser educational expenses to poor students and my intention is to help atleast 10000 students in next 5 years(now thare are about 20!). Icanavenue is the name of the helping centre and the message I always give to the students is:

Incanavenue is a place where people believe in being part of supreme universe. Here everything is possible, every body is loved, every body is understood and every body's presence in life is appreciated. Nothing stops us in getting what we want. Here people are kind. Kind to each other, kind to parents, kind to friends, kind to foes and kind to nature.

Hopefully oneday, I'll learn to write like Selvendran or yourselves in the near future.

Congratulations and keep up the good work.

Best regards
Sreeranga


எப்படீ? எங்களுக்கும் இங்கிலீசுல லெட்டர் வருமுல்ல? நாங்களும் ரௌடிதான்.. ரௌடிதான். ரௌடிதான்....

41 comments:

சரவணகுமரன் said...

நீங்க தான் பெரிய ரவுடியாச்சே? :-)

தாரணி பிரியா said...

உண்மையில எனக்கு என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியலை.

//அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்.//

இந்த வரிகள் ரொம்பவே பிடிச்சுருக்கு :)

நாதஸ் said...

//எங்களுக்கும் இங்கிலீசுல லெட்டர் வருமுல்ல? நாங்களும் ரௌடிதான்.. ரௌடிதான். ரௌடிதான்....//

நான் கூட உங்களுக்கு ஜெர்மன் மொழியில் கடிதம் எழுதலாம்னு இருந்தேன். எனக்கு ஜெர்மன் தெரியாது, உங்களுக்கும் புரியாதுன்னு லூஸ்ல விட்டுட்டேன் :P

ICANAVENUE said...

பரிசல், உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் உங்கள் புகழ்ச்சி என்னை மிகவும் கூச்சமடைய வைக்கிறது. நான் செய்வது சேவை என்று கூட சொல்லமுடியாத மிகச்சிறிய விஷயம். தயவு செய்து பெரிது படுத்தாதீர்கள்

Kumky said...

சுந்தருக்கு என் வருத்தங்களும்...
ஸ்ரீரங்காவிற்க்கு எனது (பங்கெடுக்கவும் தயாரான) வாழ்த்துக்களும்.

Kumky said...

சுந்தர்., உண்மையில் அந்த படத்தினை சரியான கோணத்தில் புரிந்து கொண்டதாக தோன்றவில்லை.
பல பத்தாண்டுகளுக்கு பின் வந்த உருப்படியான தமிழ் படம்.அதைப்பற்றி இப்படிக்கூட ஒருவர் யோசிப்பதை ஆச்சரியமாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Cable சங்கர் said...

ஏ.. நான் ரவுடிங்கோ.. ரவுடிங்கோ.. ரவுடிங்கோ.. அதென்னங்க மூணு வாட்டி.. ரவுடிக்கு எக்கோங்கோ..கோ..கோ..

Anonymous said...

சுந்தர்,

அன்பே சிவம் சில குறைபாடுகளுடன் இருந்தாலும் அது முன் வைத்த கருத்து சிறந்த ஒன்று.

படத்தின் முன்பாதி இளைஞர்கள் மீது முதியோர் வைக்கும் விமர்சனமாகவும், பின் பாதி இளைஞர்களுக்குப் புரியும்படி பிரச்சினைகளை எடுத்துச் சொன்னால் சரியாகச் செயலாற்றுவார்கள் எனச் சொல்கிறது.

மாதவன் பாத்திரம் எதைப் பற்றியும் கவலைபடாத தன்னலமிக்க ஒருவனாக இருந்து பின் பிறர்நலம் பேணும் ஒருவனாக மாறுவதுதான் படத்தின் அடிநாதம். பிறவெல்லாம் வெறும் வியாபாரச் சேர்க்கையே.

எல்லாத் திரைப் படமும் கதாநாயக, நாயகி மனோபாவத்திலேயே நாம் பார்த்திருப்பதால் சில சேர்க்கைகள் வியாபார நிமித்தம் அவசியமாகிறது.

என்னைப் பொறுத்தவரை, தமிழ்த் திரைப் படங்கள் சில சமரசங்களுடந்தான் எடுக்கபடுகின்றன. அதில் நமக்கு ஒவ்வாதவனவற்றைப் புறந்தள்ளி, பிடித்ததை எடுத்துக் கொள்வதே நல்லது.

எல்லாவித்ததிலும் நல்ல படம், எல்லாத் தரப்பையும் திருப்திபடுத்தக்கூடிய விதத்தில் சாத்தியமாவென்பதே விடை தெரியாத; விடை தேடப்படும் கேள்வியல்லவா?

சிவக்குமரன் said...
This comment has been removed by the author.
சிவக்குமரன் said...

நானும் வடகரை வேலனின் கருத்துடன் ஒத்து போகிறேன். இதுவரை நான் மாதவன் கதாபாத்திரத்தின் தன்னலமிக்க போக்கு அடுத்தர்களை பற்றியும் யோசிக்க ஆரம்பிப்பதாகத்தான் எண்ணிஇருந்தேன்!!இப்படியும் ஒரு பார்வை!! ம் ம் ம்..

Thamira said...

சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்று..//

அவ்வ்வ்..

எனக்கு 45 வயது ஆகிறது. தங்களுக்கு குறைவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். //

தப்பாக எண்ணுகிறீர்கள் முத்தையா..

சுந்தர்//

சரியான பார்வை அல்ல..

Here people are kind. Kind to each other, kind to parents, kind to friends, kind to foes and kind to nature.//

ஸ்ரீரங்காவின் சேவையும், முயற்சியும் போற்றுதலுக்குரியது.

கார்க்கிபவா said...

எனக்கு வந்த லெட்டலாம் போட்டா அவ்ளோதான்.. :)))

u got a lottery from french government..

karki u r tagged

failuer delivery

இது மாதிரி நிறைய லவ் லெட்டர்ஸ்..படிக்காமலே டெலீட் செய்திடுவேன்.. இதெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு.. போங்க பாஸ்...

ILA (a) இளா said...

கார்க்கி, என் இனம்யா நீ..

இமைசோரான் said...

நல்ல பதிவு, பரிசல்.

//(இப்படி உங்களைப் போலவே என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பி முடிப்பது வரை)//
இந்த வரிகள் நாம எல்லாருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்,

நீங்களும் பெரிய ரொளடி தான் அப்டிங்கறது இப்பதான் தெரிஞ்சது. பாத்துங்க தேர்தல் சமயம்....முன்னெச்சரிக்கை நடவடிக்கையா உள்ள தூக்கி வெச்சரப்போறாங்க.

தராசு said...

//அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்//

ம் ம் , சரி சரி, அந்த கும்பல்ல சேந்துடீங்க.


அய்யெ,

வந்த லெட்டரை எல்லாமா வெளில சொல்லீட்டிருப்பாங்க சீ,சீ.

ஆனாலும் ஸ்ரீரங்கன் அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட்.

☼ வெயிலான் said...

கடிதமெல்லாம் போட்டு,ஜெமோ, சாரு மாதிரி நானும் பெரிய எழுத்தாளர்னு(ரவுடி) உலகத்துக்கு சொல்றீங்க.

நடக்கட்டும். நடக்கட்டும்......

பரிசல்காரன் said...

ஒத்துகிட்டதுக்கு நன்றி சரவணகுமரன்!

@ தாரணிபிரியா

நன்றி

@ நாதாஸ்

தப்பில்ல எழுதுங்க. டோண்டூ சாரை வெச்சு மொழிபெயர்த்து படிக்கறேன்.

@ ஐகேனவென்யூ

உங்கள் தன்னடக்கமும் பிரமிக்க வைக்கிறது நண்பரே.

நல்ல பின்னூட்டம் கும்க்கி!

@ கேபிள் சங்கர்:-

ஆமாங்க.. மாங்க.. ங்க.. க..

@ வடகரை வேலன்

பிரமாதமான விளக்கம் அண்ணாச்சி. மிக மிக நன்றி.

@ இரா.சிவகுமரன்

மிக்க நன்றி சிவா.

@ ஆதி

ஏன்யா? உங்களுக்கேன் இந்தப் பொறாமை? நாங்கெல்லாம் எவ்ளோ யூத்து தெரியும்ல?

@ கார்க்கி

சரி.. அந்த ஃபோட்டோக்களை வெளியிடறது..?

@ இளா

ம்ம்.. நடத்துங்க..

@ இமைசோரான்

அந்த மாதிரி ரௌடியெல்லாம் இல்லீங்க. நாங்கள்லாம் காமெடி பீசு!

@ தராசு

அது என்னன்னா எழுதத் தயங்கற எத்தனியோ திறமையானவங்களும், சொல்லாம செய்யற எத்தனையோ நல்ல நல்ல உள்ளங்களும் இருக்குங்கறத வெளிப்படுத்தத்தான்.

@ வெயிலான்

ச்சும்மாவெ இருக்க மாட்டீங்களா? ஆடிக்கொரு பின்னூட்டம் அமாவாசைக்கொரு பின்னூட்டம்.. அதுலயும் இப்படி மாட்டீ விட்டு அடுத்தவங்க வந்து அடிக்கறத வேடிக்கை பார்க்க வேண்டியது...

புருனோ Bruno said...

//அன்பே சிவம் , உங்கள்ளுக்கு பிடிச்ச படம்ன்னு சொல்றீங்க , ..... என்னோட ஒரு அலசல்.//

படத்தை அலசியதை விட கமலை துவைத்து தான் அதிகம் :)

மணிகண்டன் said...

அன்பே சிவம் - அருமையான படம். எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட.

இதுவே கமல் இல்லாம வேற யாராவது பண்ணி இருந்தா இந்தளவு யோசிச்சி இருக்கமாட்டாங்க. நல்ல விஷயமாக நாம் கருதும் எதன் பின்னணியிலும் கிறித்துவ மதமும், கெடுதலாக கருதும் எதன் பின்னணியுலும் "தென்னாருடைய சிவனே போற்றின்னும்" வந்தா சில மக்கள் எரிச்சல்பட தான் செய்வாங்க. அத தவிர, கமல் வேற படத்த மார்க்கெட் பண்ண ஏதாவது சொல்லுவாரு. அது எல்லாம் தான் இந்த மாதிரி யோசிக்க வைக்கறது. இங்க பல பேரு இந்த விமர்சனத்த முதல் தடவை கேட்டா மாதிரி ரியாக்ட் பண்ணி இருக்கறது ஆச்சர்யமா இருக்கு. கமல் அவருக்கு பிடித்தா மாதிரி படம் எடுத்து இருக்காரு. எதுவும் பொய்யும் சொன்னா மாதிரி தெரியல.(கதை தான) அந்த கதாபாத்திரத்த பொதுப்படுத்தி பாத்தா அதுக்கு அவரு பொறுப்பு கிடையாது.

கெளதம்மேனன் படம் பாத்துட்டு "----- பைய"ன்னு திட்டற அளவுக்கு உணர்ச்சிவச படுபவர்கள் நாம் ! ஏன்னா படம் எடுத்தது கெளதம் மேனன். அதுவே வேற யாராவதுன்னா அந்த விமர்சனம் வந்து இருக்காது. அதே மாதிரி தான் கமலும். அவரை தள்ளி வச்சிட்டு படம் பாக்க முடிஞ்சா பிரச்சனை இருக்காது.

ஜேமோ வசனம்ன்னு தெரிஞ்சவுடன இந்துத்துவா தேடும் மக்கள்(ஒரு பிரபல யூத் வலைப்பதிவர்) மாதிரி தான்னு நினைக்கறேன்.

Venkatesh Kumaravel said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு! முதல் கடிதம் ஒரளவுக்கு பரிச்சயமானதே. இரண்டாம் கடிமும், மூன்றாம் கடிதமும் இன்ப அதிர்ச்சி வகையறா.

//ஜேமோ வசனம்ன்னு தெரிஞ்சவுடன இந்துத்துவா தேடும் மக்கள்(ஒரு பிரபல யூத் வலைப்பதிவர்) மாதிரி தான்னு நினைக்கறேன்//
ஹிஹி.. யாருங்க அது..!

அறிவிலி said...

வாழ்த்துகள் ஸ்ரீரங்கா...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.ஸ்ரீரங்காவுக்கு ஒரு சல்யுட்.

கோபிநாத் said...

;-))))

நான் சொல்லனுமுன்னு நினைச்சேன் அதுக்குள்ள சகா கார்க்கி முந்திக்கிட்டாரு..;)

@ஸ்ரீரங்கா

ஸ்ரீராங்கா சார்..உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் முயற்சியில் நாங்களும் பங்கு பெற வாய்ப்பு இருந்தால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி கூற முடியுமா?

அ.மு.செய்யது said...

உங்கள் பதிவோட ரீச் என்னை வியக்க வைக்கிறது பரிசல்.

நீங்க ரவுடிதான்னு தெரியும்..ஆனா இவ்ளோ பெரிய தாதாவா ???

பரிசல்காரன் said...

@ டாக்டர் புரூனோ சார்

சரியாச் சொன்னீங்க சார்.

@ மணிகண்டன்

மிக நெடிய விமர்சனப் பார்வை மிக்க பின்னூட்டம் நண்பா.. மிகவும் நன்றி.


@ வெங்கிராஜா

//யாருங்க அது?//

நமக்கெதுக்குங்க பெரிய இடத்துப் பொல்லாப்பு? விட்டுத்தள்ளுங்க. (அவ்ளோ பெரிய பின்னூட்டத்துல இந்த பாய்ண்டை மட்டும் எடுத்து கேள்வி கேக்குதுபாரு பயபுள்ள..)

மிக மிக நன்றி அறிவிலி, ஸ்ரீதர்

@ கோபிநாத்

//உங்கள் முயற்சியில் நாங்களும் பங்கு பெற வாய்ப்பு இருந்தால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி கூற முடியுமா?//

மிக பெருமையாய் உணர்கிறேன் நண்பரே. க்ரேட்!

@ அ.மு.செய்யது

ஏங்க.. ஏன்? நல்லாத்தானே போய்ட்டிருக்கு? ஏன் இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம்>

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அழுதுடுவேன்!

பரிசல்காரன் said...

ஹை! மீ த 25!

அது ஒரு கனாக் காலம் said...

நன்றி , பரிசல்காரன் அவர்களே... நான் அறியாமலே, நான் உனர்ச்சி வசப்பட்டது, உங்களின் பதில மூலம் எனக்கு தெரிகிறது. ...திரு ப்ருனோ சொன்னது தான் சரி, படத்தை விட சற்று காட்டமாக கமலை பற்றி எழுதி விட்டேன்... ( கமல் போல நிறய பேர் ) பேசுவது ஓன்று, ஆனால் கடைபிடிப்பதோ வேறு... அது தான் என்னோட கடிதத்தின் குறிக்கோள், அது வெளிவரவில்லை என்றல் என் தவறு...

நன்றி
சுந்தர்

அது ஒரு கனாக் காலம் said...

நன்றி , பரிசல்காரன் அவர்களே... நான் அறியாமலே, நான் உனர்ச்சி வசப்பட்டது, உங்களின் பதில மூலம் எனக்கு தெரிகிறது. ...திரு ப்ருனோ சொன்னது தான் சரி, படத்தை விட சற்று காட்டமாக கமலை பற்றி எழுதி விட்டேன்... ( கமல் போல நிறய பேர் ) பேசுவது ஓன்று, ஆனால் கடைபிடிப்பதோ வேறு... அது தான் என்னோட கடிதத்தின் குறிக்கோள், அது வெளிவரவில்லை என்றல் என் தவறு...

நன்றி
சுந்தர்

குடுகுடுப்பை said...

அன்பே சிவம் என்ற பெயரில் தென்னாடுடைய சிவனே போற்றி என்று ஒரு வில்லன்.

--------------------

கடிதங்கள் நன்றாக இருந்தது, எனக்கும் ஒரு மெயில் வந்திருக்கு பதிவா போட்டா தமிழகமே அதிரும்..

Sanjai Gandhi said...

என்ன தான் இருந்தாலும் மாமா எழுதிய மனம் திறந்த மடல் மாதிரி வருமா மாம்ஸ்? ;))

Sanjai Gandhi said...

//u got a lottery from french government..

karki u r tagged

failuer delivery//

அட சகா, அந்த பார்மசி மெயில் எல்லாம் உங்களுக்கு வரதில்லையா? ;))

Sanjai Gandhi said...

// பரிசல்காரன் said...

ஹை! மீ த 25!//

இவரை பெரிய எழுத்தாளர்ன்னு எல்லாரும் அங்கீகாரம் பண்ணிட்டு இருக்கோம். இந்த பெரிசு பன்ற ரவுசு பாருங்க ஜங்களே.. :))

இதுக்காகவே பகிரங்க கடிதம் பாகம் 2 எதிர்பார்க்கிறோம். :))

Saminathan said...

// எப்படீ? எங்களுக்கும் இங்கிலீசுல லெட்டர் வருமுல்ல? நாங்களும் ரௌடிதான்.. ரௌடிதான். ரௌடிதான்.... //

ஜீப்புல ஏறிட்டீங்களா...

பரிசல்காரன் said...

@ அது ஒரு கனாக்காலம்

சுந்தர்..

நல்லமுறையில் எடுத்துக் கொண்டு பதிலளித்தமைக்கு நன்றி நண்பா.

@ குடுகுடுப்பை

வெளியிடுங்க தல. பிச்சுக்கட்டும்.

@ சஞ்சய்காந்தி

எலக்‌ஷன் வேலையைப் பார்க்காம இதென்ன மூணு கமெண்டு?

@ ஈரவெங்காயம்

எப்ப லஞ்ச் சாப்பிடலாம்?

குசும்பன் said...

//அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்.//

ஏன் ஏன் ஏன் இப்படி?

ஆமா லெட்டர் வர என்ன செய்யனும்???

Sanjai Gandhi said...

//அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்//

இதை வச்சி நிறைய பேர் பின்னூட்டம் போட்டிருக்காங்க. எனக்கும் டமில்ல மொழிபெயர்த்து சொன்னா நானும் இதை வச்சி ஒரு கமெண்ட் போடுவேனே. :)

வால்பையன் said...

//(இப்படி உங்களைப் போலவே என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பி முடிப்பது வரை)

நன்றாக இருக்கிறது.//

உங்களை பயங்கர வாட்ச் பண்ணிருப்பார் போல!
இவ்வளவு கரிகிட்டா சொல்றார் பாருங்களேன்.

(எனக்கு எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியாது, எங்கிருந்து முடிகிறது)

வால்பையன் said...

//சினிமா வேற , அது ஒரு கற்பனை உலகம் ... அதுக்கு சப்பைகட்டலாம் வேண்டாம், சினிமாவுல யார் வேணும்னாலும் வில்லனாய் இருக்கலாம் ... நிஜம் வேற.//

அன்பே சிவம் பிடிச்ச படம்ன்னு சொன்னதுக்கா இம்புட்டு அலசல்!

அமெரிக்காவில் கார் வாங்குவது, அதனுடன் ரஷ்யாவில் ஜட்டி வாங்குவது என்று ஒரு உதாரணம்.

அமெரிக்காவில் ஒரு கம்யூனிஷகாரன் கூட இல்லையா!
ரஷ்யாவில் ஒரு முதலாளி கூட இல்லையா!
அட போங்கய்யா!

வால்பையன் said...

//எங்களுக்கும் இங்கிலீசுல லெட்டர் வருமுல்ல? நாங்களும் ரௌடிதான்.. ரௌடிதான். ரௌடிதான்....//

தண்ணி போட்டா நான் உங்களை விட பெரிய ரவுடி தெரியுமுல்ல!
i can walk english
i can run english
i can swim english
i can sit english

Unknown said...

//எப்ப லஞ்ச் சாப்பிடலாம்?//

மத்தியானத்துல?? இல்ல நைட்ல??

Unknown said...

me the 40 :):)