Thursday, April 23, 2009

ஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2

“என்னது... பெரியப்பா இறந்துட்டாரா? அப்பறம் அவர்கிட்ட பேசப்போறேன்னு சொல்றீங்க?”

“அவர்கிட்டன்னா அவரோட ஆவிகிட்ட”

“எதுக்காக?”

இதற்கு ஆட்டோக்காரர் சொன்ன கதை அதைவிட சுவாரஸ்யம்.

இவரது அப்பாவும், பெரியப்பாவும் (அதாவது அண்ணன், தம்பி) ரொம்ப நெருக்கமாம். கொடுக்கல் வாங்கல் எல்லாம் கணக்கு வழக்கில்லாமல் நடக்குமாம். பெரியப்பா ஏதோ அரசு உத்தியோகத்திலிருந்து ரிடர்யர்டாகி கிடைத்த பல லட்சங்களை (கிட்டத்தட்ட 6 லட்சம் என்றார்) அங்கங்கே முதலீடு செய்திருக்கிறார். திடகாத்திரமாக இருந்த அவர் ஒரு நாள் வழக்கமான டெம்ப்ளேட் இறப்பைப் போலவே (தண்ணி கேட்டாருங்க..போய்க் கொண்டு வர்றதுக்குள்ள பேச்சு மூச்சையே காணோம்க) இறந்துவிட்டாராம்.

இவரது பெரியப்பாவுக்கு ஒரே மகள். ஆட்டோக்காரரின் அப்பாதான் அவர்கள் குடும்பத்துக்கு காட்ஃபாதர் மாதிரி. எல்லாருமாய் கணக்குப் பார்த்ததில் இவரது சேமிப்பு, ரிடயர்மெண்ட் பணம், அது இது என்று கிட்டத்தட்ட 15 லட்சம் இருக்க வேண்டிய பணம், வெறும் பத்து லட்சத்துக்குதான் கணக்கு வந்ததாம். “அவன் கணக்கு எழுதிவெக்காமதான் கடன் குடுப்பான். யாருக்கு குடுத்திருப்பான்னு தெரிஞ்சுதுன்னா போதும்” என்று இவரது அப்பா யோசித்து ....

“கோயமுத்தூர்ல எனக்குத் தெரிஞ்ச மீடியம் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட பேசிட்டேன். போய்ப் பேசிட்டு வரலாம்” என்று இறந்தவர் மகள், இவர் எல்லாருமாய் கோவை போயிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆட்டோக்காரரும் கிளம்பிச் செல்கிறாராம்.

“அவங்க நேத்தே போய்ட்டாங்க சார். எனக்கு இதுலயெல்லாம் நம்பிக்கை இல்லை. அப்பா திட்டி வரச்சொன்னார்” என்றார்.

எனக்குள் இருந்த 007 ‘இவன்தான் அதுல பல லட்சத்துல ஆட்டையப் போட்டவன்’ என்று சொன்னது. ஆனால் கேட்கவில்லை. (ஒரு சிறுகதையின் கருவை வெளியே சொல்லிவிட்டேனோ?

ஆவிகளுடன் பேசுபவர்களை மீடியம் என்று அழைப்பார்கள். இதுகுறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி பிறிதொரு முறை எழுதுகிறேன். (என்னது மறுபடியுமா?)

உடுமலையில் நான் இருக்கும்போது ‘அமுதராணி தியேட்டர்கிட்ட ஆவிகிட்ட பேசறவர் ஒருத்தர் இருக்காரு. போலாமா’ என்று நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள். பிறகு நான் கன்னாபின்னாவென கமெண்ட் அடிப்பதற்கு பயந்து என்னை அழைத்துச் செல்லவில்லை.

அவர் ஏ,பி,சி,டி என்று எழுதப்பட்ட கட்டம் எல்லாம் போட்டு அதன் மேல் ஒரு டம்ளரை வைப்பாராம். டம்ளருக்குள்ளே கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் இருக்கும். வந்திருக்கும் இறந்தவருடைய சொந்தக்காரர் அந்த டம்ளர்மேல் ஒரு விரலை வைத்தால் சிறிதுநேரத்தில் அந்த டம்ளர் ஒவ்வொரு எழுத்தாக நகருமாம். அதாவது இறந்தவர் குமார் என்றால் K-U-M-A-R இப்படி.

‘யட்சகுஞ்சர நாளகத்தி பிஸிபேளாஹூளி சாமுத்ரிகா லட்சண சுந்தரவராந்திர குடமுருட்டி சீதா லட்சுமி நரசிம்மன்’ என்றொருத்தரை எனக்குத் தெரியும். அவர் இறந்தால் அவரது பெயரிலுள்ள எழுத்துகளில் நகர்ந்து நகர்ந்து டம்ளர் தேய்ந்தே போய்விடாதா என்ற யோசனை வந்தது.

Jokes apart, அந்தப் பெயர் எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் வந்த பெயர். எஸ்.வி.சேகர் அவரது அப்பாவின் ஆவியுடன் அடிக்கடி பேசுவாராம். பல பேட்டிகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘ஃபேமலில ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கணும்னா அவர்கிட்ட கேட்பேன். சரியா கைடு பண்ணுவாரு. இதுவரைக்கும் அவர் சொன்ன எதுவுமே தப்பி நடந்ததில்லை’ என்பார்.

எஸ்.வி.சேகர் நாடிஜோசியத்தை மிகவும் நம்புபவர். அது இன்னொரு கூத்து! இது பற்றியும் விரைவில் உங்கள் பரிசல்காரனின் வலைப்பூவில் எதிர்பார்க்கலாம்! (ம்ஹூம்.. இதுக்கெல்லாம் அழக்கூடாது. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்!)

இதில் புரியாத புதிர் என்னவென்றால் ஆவிகளின் மீடியமாக பேசுபவர் இறந்தவரின் மேனரிசங்களையும், ஸ்டைலையும் அப்படியே பிரதிபலிப்பாராம். அவர் சம்பந்தப்பட்ட சில தனிப்பட்ட ரகசியங்களைச் சொல்வாராம். இதே போல ஒரு மீடியத்திடம் பேசச் சென்றபோது இறந்தவரின் உறவினர் ஒருத்தரைப் பார்த்து ‘டேய் தனசேகரா.. நம்ம ஊர் ஆலமரத்துக்குப் பின்னாடி லட்சுமி கைய நீ புடிச்சு இழுத்தத கடைசிவரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லவேல்லியேடா’ என்று மீடியம் சொன்னதாம். என்னைப் பொறுத்தவரை அந்த தனசேகரன் இதை மீடியத்தைப் பார்க்கப் போன இடத்திலோ, இறந்தவர் பற்றி புலம்பும்போதோ சொல்லியிருக்கலாம். அதைவைத்து மீடியம் சொல்லியிருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

(மேற்கண்ட தனசேகரன்-லட்சுமி சம்பவம் ஒரு உதாரண உடான்ஸ்தான்)

*********************

நேற்றைய ஆவி சம்பவங்கள் சிறுகதையா, உடான்ஸா என்றெல்லாம் கேட்டு லட்சக்கணக்கான விசாரிப்புகள். (ஒன்று = ஒரு லட்சம் எனக்கொள்க!) சம்பவங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால் ஆவி உண்மையா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தெரியாத பாஷை பேசுவார்கள் என்பது நானே கண்ட உண்மை.

இதுகுறித்து நேற்று என்னிடம் பேசியதில் இரண்டு முக்கிய அழைப்புகளை இங்கே பதிவு செய்கிறேன். (இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா-னெல்லாம் புலம்பக்கூடாது.. ஆமா...)

“நீங்க எழுதினது உண்மைதான் கிருஷ்ணா. என் சொந்தக்காரரோட பொண்ணுக்கு அவங்க அப்பாவோட ஆவி உள்ள புகுந்துடுச்சு. அப்போ அந்தப் பொண்ணு அவங்க குடிக்கற மாதிரியே பீடி கேட்டு வாங்கிக் குடிச்சுது. அதுமட்டுமில்லாம அவங்கம்மாகிட்ட ரொம்ப அந்நியோந்நியமா பேசிச்சு. குரலெல்லாம் மாறி அவங்கப்பா மாதிரியே மாடுலேஷன்ல பேசிச்சு. அதுமட்டுமில்லாம அவங்க அம்மாகிட்ட சொன்ன சில தனிப்பட்ட விஷயம் பத்தியெல்லாம் பேசிச்சு. நானே கண்ணால பார்த்தேன்”

Again இதுவும் அந்த மகளிடம் தாயே இது உனக்கும் எங்கப்பாவுக்கும் மட்டும் தெரியும் என்று விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். மகள் அப்பாவின் பாடி லேங்கிவேஜையும், மாடுலேஷனையும் பேசுவது பெரியவிஷயமில்லையே...

மற்றொரு ஃபோன் இன்னும் சுவாரஸ்யம்:

“எல்லரையும் சமமா பார்க்கற தன்மை உங்ககிட்ட இல்ல கிருஷ்ணா”
“என்ன சொல்றீங்க.. புரியல”

“பதிவுல பொண்ணுக பேரை மாத்தி எழுதினீங்கள்ல? அவங்க மேல இருக்கற அந்த அக்கறை ஏன் உங்களுக்கு ஆவிகள் மேல இல்ல?”

“.....................”

“அதெப்படி அந்த ராஜன் ஆவி பத்தின ரகசியத்தை நீங்க பேரோட வெளில சொல்லலாம்? அதுவும் மிஸ்டர்.ராஜன் சார்’ன்னு பேரை எழுதினதுலயே நக்கல் வேற. இதெல்லாம் சரின்னு படுதா உங்களுக்கு? இதுதான் நடுநிலைமையா?”

நல்லவேளை ஃபோன் பண்ணினது நண்பர்தான். ஆவியெல்லாம் இல்ல!

39 comments:

Mahesh said...

இந்தப் பதிவு கூட ஏதோ ஒரு ஆவி எழுதின மாதிரி இருக்கே !!

தராசு said...

//ஆவிகளுடன் பேசுபவர்களை மீடியம் என்று அழைப்பார்கள். இதுகுறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி பிறிதொரு முறை எழுதுகிறேன். (என்னது மறுபடியுமா?)//

//நாடிஜோசியத்தை மிகவும் நம்புபவர். அது இன்னொரு கூத்து! இது பற்றியும் விரைவில் உங்கள் பரிசல்காரனின் வலைப்பூவில் எதிர்பார்க்கலாம்//

ஸ்ஸ்ஸ்ஸ்ச், இப்பவே கண்ண கட்டுதே, இன்னும் நாங்க என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்குதோ???

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சுவாரசியமான பதிவு.கண்டினியு பண்ணுங்க.

VIKNESHWARAN ADAKKALAM said...

//எஸ்.வி.சேகர் நாடிஜோசியத்தை மிகவும் நம்புபவர். அது இன்னொரு கூத்து!//

அவரு எது செய்தாலும் கூத்தாக தானே இருக்கும்... இதில் புதுசா வேற கூத்து இருக்கா...

கார்க்கிபவா said...

நான் ஆவின்னே உடனே ஆனந்த விகடன் கதையோ நினைச்சுட்டேன் சகா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனி வரபோற உங்க லட்சம் பதிவுக்கு நான் பின்னூட்டம் போடலன்னாலும் தப்பு இல்லை போலயே.. ? :)

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாரோட பதிவுலயும் போய் பின்னூட்டம் போட்டு வர்ற மாதிரி ஏதாவது ஆவி இருந்தா சொல்லுங்க. சீக்கிரம் அதோட ஒரு MOU அக்ரிமெண்ட் போட்டுருவோம்.

(நட்புடன் ஜமால் கையில அப்பிடி ஒரு ஆவி இருக்கதா ரகசியத் தகவல் வந்துருக்கு)

பரிசல்காரன் said...

@ மகேஷ்

அப்படீன்னா? நல்லாருக்குன்னு சொல்றீங்களா?

@ தராசு

வேற வழியே இல்ல. விதியேன்னு படிச்சுதான் ஆகணும்!

@ ஸ்ரீதர்

நன்றிங்க. நீங்களாவது இருக்கீங்களே எனக்கு...

@ விக்கி

:-)))

@ கார்க்கி

அடச்சே.. நான் முடிக்கும்போது நான் நம்பற ஒரே ஆவி ஆனந்த விகடன்தான்-னு எழுதணும்னு நெனைச்சிருந்தென். விட்டுப்போச்சு பாத்தியா சகா..

@ மு.க.

பின்னூட்டம் போடலைன்னா ராஜன்சார்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன்.. ஆமா..

@ அப்துல்லா

அப்படியே பின்னூட்டத்துக்கு பதில் சொல்றதுக்கும் ஒரு ஆவியை அரேஞ்ச் பண்ணுங்க அப்துல்லா..

Prabhu said...

பரிசில்,
தமிழ் மீடியம், இங்கிலீஷ் மீடியம் தெரியும். அதென்ன ஆவி மீடியம்?

Prabhakaran said...

நல்லா போகுது !!!. பார்ட் 3 காக காத்திருக்கிறேன்.

பிரபாகரன்

தீப்பெட்டி said...

என்ன பாஸ் இப்படி முடிச்சுட்டீங்க...

ஏதோ கடைசியில முடிச்ச அவிழ்க்க போறீங்கனு நினைச்சேன்.....

சரி விடுங்க.. அதுக்காக 3 ஆவதா ஒரு பதிவு போட்டுராதீங்க.

சம்பவங்களை கேட்ட பயத்திலேயே பதிவு போட்டு இருப்பீங்க போல. ஆவிய எழுதும்போது எல்லாம் அப்படி ஒரு பயபக்தி...

@pappu

//அதென்ன ஆவி மீடியம்?//

'ஆவி மீடியம்'னா 'ஆத்ம விளையாட்டு'னு அர்த்தம் எதுக்கும் பரிசல்கிட்ட கேட்டு கன்ஃபாம் பண்ணிக்கோங்க பாஸ்

சிவக்குமரன் said...

:)

என்.இனியவன் said...

சின்ன வயதில்,
நான் எனது நண்பனின் வீட்டுக்கு சென்ற போது நிலத்தில் எண்களும்
A,B,C எழுத்துக்களும் yes, no என்றும் எழுதியிருந்தார்கள்.

என்ன என்று விசாரித்த போது, தாம் தமது தாத்தாவுடன் (இறந்தவர்)
கதைத்ததாக கூறினார்கள்.
(உயிரோட இருக்கும் போது ஒருவரும் தத்தாவுடன் கதைத்ததை நான் பார்க்கவில்லை)

நான் முதலில் நம்பவில்லை எனினும் அவர்கள் பொய் சொல்பவர்கள் இல்லை.

எனது நண்பன், மீடியம் எப்படி ஆவியை கூப்பிட்டார் என்று
நுணுக்கமாக பார்த்து வைத்திருந்ததால்,
நானும் நண்பனும் சேர்ந்து ஆவியோட கதைக்க
முயற்சித்தோம்.
நண்பன் ஆவியை கெஞ்சி கூட பார்த்தான்.
டம்ளர் நகருவதாக‌ இல்லை.

ஆவியை வரவழைத்தால் அதை அனுப்பும் முறையும் தெரிய வேண்டும்.
இல்லாவிட்டால் ஆவி இங்கேயே இருந்துவிடும் என பயம் காட்டியதால்
நாமும் முயற்சியை கைவிட்டோம்.


ஆனால் உயிரோடு இருக்கும் போது A ,B என்ற எழுத்து இருப்பது கூட அறியாத தாத்தா எப்படி English
இல் கதைத்தார்/ நகர்ந்தார் என்பது தான் புதிராக இருக்கிறது.
முடிந்தால் நீங்கள் ஆவியிடம் கேட்டு சொல்லவும்.

ஆ.சுதா said...

ஆஹா..! ஆவி கதை சுவாரசியமா போகுது.. அடுத்த ஒரு ரவுண்டு ஆவிய பறக்கவிடுலங்க.

Vee said...

//உடுமலையில் நான் இருக்கும்போது ‘அமுதராணி தியேட்டர்கிட்ட...

இந்த தியேட்டர் எந்த பக்கம் இருக்கு? கேள்விப்பட்ட மாதிரி இல்லயே.

வால்பையன் said...

ஆர்னிகா நாசர் ஒரு நாவல் எழுதியிருந்தார், கதை சுருக்கம்:

ஒரு எழுத்தாளன் அமானுஷ்ய கதைகள் எழுத வேண்டி சாவை விளிம்பு வரை சென்று பார்க்க பல முறை தற்கொலை செய்வான். விளிம்பில் காப்பாற்றபட்டு பின்னாளில் ஆவி உலகுக்கு அடிக்கடி வந்து போவதால் நன்றாக பழக்கமாகி விடுவான்,

அந்த ஆவிகள் அவனது முதுகில் கதை எழுத இவன் அப்படியே பேப்பரில் எழுத,
முழுதாய் படிக்க பழைய புத்தக கடையில் தேடி பிடித்து வாங்கி படியுங்கள்!

ஸ்வாமி ஓம்கார் said...

//தீப்பெட்டி,
ஏதோ கடைசியில முடிச்ச அவிழ்க்க போறீங்கனு நினைச்சேன்.....
//

பரிசலை தகாத வார்த்தையில் திட்டும் இவரை வன்மையாக கண்டிக்கிறேன் :))

வெண்பூ said...

மனுசங்களுக்கு இந்த மாதிரி ப்ளாக் மேஜிக் மேல எப்பவுமே ஒரு கவர்ச்சி இருக்கு பரிசல்.. நல்லா எழுதியிருக்கீங்க.. ஹாய் மதன் எழுதுன "மனிதனும் மர்மங்களும்" படிச்சிருக்கீங்களா?

Thamira said...

தீப்பெட்டி
23 April, 2009 5:49 PM என்ன பாஸ் இப்படி முடிச்சுட்டீங்க...

ஏதோ கடைசியில முடிச்ச அவிழ்க்க போறீங்கனு நினைச்சேன்.....

சரி விடுங்க.. அதுக்காக 3 ஆவதா ஒரு பதிவு போட்டுராதீங்க.

//

ரிப்பீட்டு.!

வசந்த் ஆதிமூலம் said...

முதல் இன்னிங்க்ஸ் ல வூடு கட்டி அட்ச்சியே... இப்போ கொஞ்சம் ஸ்லிப் ஆயிடுச்சு இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் மாமு...

சிவக்குமரன் said...

///தீப்பெட்டி
23 April, 2009 5:49 PM என்ன பாஸ் இப்படி முடிச்சுட்டீங்க...

ஏதோ கடைசியில முடிச்ச அவிழ்க்க போறீங்கனு நினைச்சேன்.....

சரி விடுங்க.. அதுக்காக 3 ஆவதா ஒரு பதிவு போட்டுராதீங்க.///

எங்க ஊருல சொல்லுவாங்க, பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளியமரம் ஏறித்தான் ஆகணும்னு. அது மேரி, படிக்கிறதுக்குனு வந்தாச்சி. பேயப்பத்தி எழுதினா ப்டிக்கிறதுக்கு ஷோக்காத்தான் கீது மாமு. இதுக்குலாம் நீ கவலப்படாத நைனா. நீ மேட்டுக்கு எழுதினே இரு. இன்னா புர்தா?

தமயந்தி said...

மர்மங்கள் எப்பவுமே சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.கொடைல சாமி யாடுறவங்கட்டயும் இது மாதிரி ஒரு புதிர் எனக்குத் தோணிருக்கு. சில விஷயங்கள்ல கேள்விகள் கேக்காம இருக்கது தான் நல்லதோ

புருனோ Bruno said...

//(உயிரோட இருக்கும் போது ஒருவரும் தத்தாவுடன் கதைத்ததை நான் பார்க்கவில்லை)//

யோசிக்க வேண்டிய விஷயம்

Unknown said...

ம்ம்ம் அப்பறம்??

வசந்த் ஆதிமூலம் said...

புட்ச்சா வந்த நம்மள மாதிரி ஆளுங்களுக்கு ஸ்பெஷல் கட்டிங் ஏதும் உண்டா மாமு ? நம்மளுக்கு தெரிஞ்சு பக்கத்தில டாஸ்மாக் ஏதும் இல்லியே.. அப்புறம் என்னய்யா மீட்டிங் ?

தாங்க்ஸ் மாமு.... நல்லா யூஸ் பண்ணிக்கோ நம்ம பேர... பட்ஒன் கண்டிசன் ... ரியல் லைப் ல தான் பேரு ரொம்ப கெட்டு போயி இருக்கு ... கதயிலவாவது ஒரு நல்ல கேரக்டேர் கொடு மாமு ...

பட்டாம்பூச்சி said...

அய்யய்யோ...தெரியாம இந்த பக்கம் வந்துட்டேனே...பேயி,ஆவி அப்படினு ஒரே அமானுஷ்யமா இருக்கே....எனக்கு பயமே இருக்குப்பா...நான் அப்புறமா வரேஞ்சாமி.

Anonymous said...

Hai parisal,
thank u very much for ur welcome speech.

வெல்கம் டூ வலைப்பூ உலகம். (இதத்தான்யா அவனும் சொன்னான்!) திருப்பூர்ல பெண் ப்ளாக்கர் இல்லையென்ற குறையைத் தீர்க்க வந்த உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

Appa ithu varaikum ladies perla irukara comments ellam yarodathu, athuvum ethavathu avi kivi velaya irukka poguthu

பரிசல்காரன் said...

@ Pappu

ரொம்ப கேள்வி கேட்டா பார்ட் 3 எழுதிடுவேன் ஆமா..

@ Prabhakaran

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது? அவ்வ்வ்வ்வ்..

@ தீப்பெட்டி

என்னா முடிச்சு? ஒண்ணுமே இல்லியே பாஸூ??

@ நன்றி சிவகுமரன்

@ என்.இனியவன்

//உயிரோட இருக்கும் போது ஒருவரும் தத்தாவுடன் கதைத்ததை நான் பார்க்கவில்லை//

படிச்சுட்டு ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா உட்கார்ந்துட்டேன் நண்பா..

@ ஆ.முத்துராமலிங்கம் said...

ஆஹா..! ஆவி கதை சுவாரசியமா போகுது.. அடுத்த ஒரு ரவுண்டு ஆவிய பறக்கவிடுலங்க.//


வேண்டாங்க.. பாவம்.. விட்டுடலாம்.

பரிசல்காரன் said...

@ Vee said...

//உடுமலையில் நான் இருக்கும்போது ‘அமுதராணி தியேட்டர்கிட்ட...

இந்த தியேட்டர் எந்த பக்கம் இருக்கு? கேள்விப்பட்ட மாதிரி இல்லயே.//


எழுதும்போதே இந்தக் கேள்வி வரும்னு நெனைச்சேன்.

உங்க வயசு 25-30ஆ?

ஓகே..

அது எஸ்.வி.புரத்துல இருந்தது. இப்பொ அம்பிகா தியேட்டர்ன்னு அஜால் குஜால் படம் போடறாங்களே அதுக்கு கொஞ்சம் இந்தப் பக்கமா.

காந்திபுரம் (காந்திநகர் அல்ல) ஸ்டாப்புக்கு அமுதராணி ஸ்டாப்னுதான் அப்போ பேரு. (நாங்கள்லாம் வரலாறை ஆராய்ஞ்சுதான் எழுதறது!)

பரிசல்காரன் said...

@ வால்பையன்

படித்த ஞாபகம்.

@ ஸ்வாமிஜி

:-)))

எடுத்துக் குடுத்துட்டீங்களே ஸ்வாமி..

@ வெண்பூ

இல்ல வெண்பூ. (வந்து வந்து போறீங்க பார்ட்னர்..)

@ ஆதி - நன்றி

@ வசந்த் ஆதிமூலம் & இரா.சிவக்குமரன்

- எனக்கே புரியுது.

@ வசந்த் ஆதிமூலம்

டீல் ஓக்கே.

@ தமயந்தி

மிகவும் நன்றி

@ டாக்டர்.புரூனோ
நன்றி

ஸ்ரீமதி - நன்றி

@ ஓகே பட்டாம்பூச்சி. பறந்துடுங்க..

@ Jai

//
Appa ithu varaikum ladies perla irukara comments ellam yarodathu, athuvum ethavathu avi kivi velaya irukka poguthu//

நான் சொன்னது ’திருப்பூர்ல’ பெண் பதிவர்ன்னு.

இவங்கள்லாம் வெளியூரு. பக்கத்துல இருந்தா வீடுதேடிவந்து அடிக்க மாட்டாங்க???

பரிசல்காரன் said...

@ வால்பையன்

படித்த ஞாபகம்.

@ ஸ்வாமிஜி

:-)))

எடுத்துக் குடுத்துட்டீங்களே ஸ்வாமி..

@ வெண்பூ

இல்ல வெண்பூ. (வந்து வந்து போறீங்க பார்ட்னர்..)

@ ஆதி - நன்றி

@ வசந்த் ஆதிமூலம் & இரா.சிவக்குமரன்

- எனக்கே புரியுது.

@ வசந்த் ஆதிமூலம்

டீல் ஓக்கே.

@ தமயந்தி

மிகவும் நன்றி

@ டாக்டர்.புரூனோ
நன்றி

ஸ்ரீமதி - நன்றி

@ ஓகே பட்டாம்பூச்சி. பறந்துடுங்க..

@ Jai

//
Appa ithu varaikum ladies perla irukara comments ellam yarodathu, athuvum ethavathu avi kivi velaya irukka poguthu//

நான் சொன்னது ’திருப்பூர்ல’ பெண் பதிவர்ன்னு.

இவங்கள்லாம் வெளியூரு. பக்கத்துல இருந்தா வீடுதேடிவந்து அடிக்க மாட்டாங்க???

பரிசல்காரன் said...

@ வால்பையன்

படித்த ஞாபகம்.

@ ஸ்வாமிஜி

:-)))

எடுத்துக் குடுத்துட்டீங்களே ஸ்வாமி..

@ வெண்பூ

இல்ல வெண்பூ. (வந்து வந்து போறீங்க பார்ட்னர்..)

@ ஆதி - நன்றி

@ வசந்த் ஆதிமூலம் & இரா.சிவக்குமரன்

- எனக்கே புரியுது.

@ வசந்த் ஆதிமூலம்

டீல் ஓக்கே.

@ தமயந்தி

மிகவும் நன்றி

@ டாக்டர்.புரூனோ
நன்றி

ஸ்ரீமதி - நன்றி

@ ஓகே பட்டாம்பூச்சி. பறந்துடுங்க..

@ Jai

//
Appa ithu varaikum ladies perla irukara comments ellam yarodathu, athuvum ethavathu avi kivi velaya irukka poguthu//

நான் சொன்னது ’திருப்பூர்ல’ பெண் பதிவர்ன்னு.

இவங்கள்லாம் வெளியூரு. பக்கத்துல இருந்தா வீடுதேடிவந்து அடிக்க மாட்டாங்க???

குசும்பன் said...

நண்பர் ஒருவர் ஆந்திரா போய் இருந்த பொழுது ஒரு குடும்பத்து தாத்தா ஆவி புகுந்துவிட்டதாகவும் அவர் அவர்களின் குடும்ப பிரச்சினைகளை தெலுங்கில் பேசிக்கிட்டு இருப்பதாகவும் இனி இங்கு இருந்தால் நல்லது அல்ல வந்து உடனே அழைத்து சென்று விடுங்கள் என்று அங்கிருந்து நண்பர் ஒருவர் சொன்னார்!

நண்பருக்கு ஆங்கிலமே அரை குறை எப்படி தெலுங்கில் பேசினார் என்று புரியாத புதிராக இருந்தது.

சரி சரி பைக்கில் தனியா போகும் பொழுது சில ஆவி பின்னாடி உட்காந்துக்கிட்டு வருமாம் பார்த்து போங்க சித்தப்பு:)))

Anonymous said...

கிருஷ்ணா,

ஆவி பேய் எல்லாம் ஏன் எப்பவும் கீழ்த்தட்டு மக்களையே பிடிக்கிறது. நல்ல பணக்காரங்களாப் பிடிச்சா நல்லா வசூல் பண்ணலாமே?

பரிசல்காரன் said...

@ குசும்பன்

நன்றி குசும்பா.. மொழி மாற்றி பேசுவது குறித்து நான் எழுதியது உடான்ஸ் இல்லன்னு நிருப்பிக்க இன்னொரு ஆதாரத்தை தந்ததுக்கு...

@ வடகரைவேலன்

சரியான கேள்வி அண்ணாச்சி...!

மணிநரேன் said...

அடிமனதில் இருக்கின்ற பயத்தை கிளப்பிவிட்டுட்டீங்களே......

சென்ஷி said...

:))))

vasu said...

its very interesting i'm waiting for part 3.........?

vasu said...

its very interesting i'm waiting for part3......?