Friday, May 8, 2009

அவியல் 08.05.2009

கஸின் ப்ரதர் திருமணத்திற்காக கேரளா சென்றிருந்தேன். திருமணத்தின்போது மண்டபத்தில் இருக்கும் குழந்தைகளைக் குஷிப்படுத்தலாமென்று நானும் தம்பியும் பலூன்கள் வாங்க ஓரிரு கடைகள் ஏறி இறங்கியபோது ‘எங்களிடம் இல்லை’ என்ற பதில் வந்ததே தவிர, எங்கே கிடைக்கும் என்றதற்கு எவருமே சரியாக பதில் சொல்லவில்லை. வந்து பலரிடமும் இதுபற்றிப் பேசியபோது கேரளா கடைகளின் கஸ்டமர் கேர் மிக மோசமானது என்று பலரும் பல உதாரணங்கள் சொன்னார்கள்.

ஒருத்தர் சர்பத் கடை ஒன்றிக்கு சென்றிருக்கிறார். சர்பத் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம்: “டம்ளர்களைக் கழுவிவிட்டேன். இனி சர்பத் போடமாட்டேன். நாளைக்குத்தான்”

இன்னொருத்தர் சொன்னார்: அவர் ஒரு கடைக்குச் சென்றாராம். மணி 9. கடை பூட்டியிருந்தது. கடைக்கு முன் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தற்கு “கடை 9.30க்குத்தான் திறக்கும்” என்றிருக்கிறார். இவர் போய் 9.30க்கு மேல் வந்தபோது இவருக்கு பதில் சொன்ன நபர்தான் கடைக்காரர் என்றறிந்தாராம்!
**********************************

ரொம்ப நாளாச்சு கிரேசி கிரி பற்றி எழுதி. திருமணத்துக்கு முதல் நாள் வழக்கம் போல சீட்டு விளையாட அவனிடம் கேட்டேன். “கார்ட்ஸ் இருக்கா?” “இருக்கு. ஆனா ஒரு சில கார்ட்ஸ் இல்ல அந்தக் கட்டுல” என்றான்.

“அது சரியிருக்காது. ஒனக்குத் தெரியுமா? ஒரு நல்ல சீட்டு விளையாட்டுக்காரன் ரெண்டு மூணு ஆட்டத்துல கட்டுல கார்ட்ஸ் மிஸ் ஆகியிருந்தா சொல்லீடுவான்” என்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம். “சில பேர் கட்டை கைல எடுத்து டிகிரி போடும்போதே (கார்ட்ஸை கலக்குவது) சொல்லீடுவாங்க” என்றேன்.

உடனே கேட்டான்” “அத விட ப்ரொஃபஷனல்ஸ் இப்போ என் சூட்கேஸ்ல இருக்கறதுல இத்தனை கார்ட்ஸ் இருக்காதுன்னு சொல்லுவாங்க.. இல்லையா?” என்றான்.

இதுக்கு மேலயும் நான் பேசுவேன்?

இதே கிரேசி கிரி கணுக்கால் வரை பேண்ட் அணிந்திருந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கேட்டான்: “ஏண்டா.. பேண்ட் அளவுகுடுத்து தைக்கறதுக்குள்ள வளர்ந்துட்டியா?”

****************************

கிரேசி கிரியின் அண்ணன் மகேஷ் அவனுக்கு ஒரு படி மேல்! (அண்ணனில்லையா.. அதுதான்!)

“ஆரத்தி காட்டும்போது தட்டில் ஏன் நோட்டைப் போடாமல் சில்லறை போடுகிறார்கள்?” என்று கேட்டார். “நனையுமில்லையா.. அதுதான்” என்றேன்.

“இல்லையில்லை... CHANGE (மாற்றம்) ஒன்றுதான் CHANGE ஆகாதது.. அதனால்தான்” என்று கடித்தார். இது விஷயமில்லை.

திருமணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி காட்டும்போது ஒருவர் பத்து ரூபாய் நோட்டை ஆரத்தி தட்டில் போட மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே இவரைத் தேடிப் பிடித்து “என்னமோ சொன்னீங்க? பாருங்க நோட்டு நனைஞ்சாலும் பரவால்லன்னு நோட்டைப் போடறாங்க..” என்றேன்.

உடனே சொன்னார்: “இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல. இனிமே இவங்களுக்குள்ள எந்த CHANGEம் இருக்கக் கூடாதுன்னுதான் CHANGE போடல” என்றார்!


மேற்கண்ட ஆரத்திச் சில்லறை சந்தேமல்லாமல் மகேஷண்ணாவின் சந்தேகங்கள் என்று ஒரு புத்தகமே போடலாம் என்னுமளவிற்கு அவர் பல கேள்விகள் கேட்டார். ஞாபகம் வரவில்லை.

ஒன்றே ஒன்று மட்டும்:

க்யூ என்பது நீளமாக நிற்பது. அதற்கு I தான் சரியான குறியீடு. அல்லது L ஐக்கூட வைத்துக் கொள்ளலாம். ஏன் Q?

நான் சொன்னேன். “எங்கே நின்றிருப்பவர் ஆனாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் எல்லாருமே வரவேண்டியிருக்கிறது. அதனால் O மாதிரி போடுகிறார்கள். அப்படியும் எல்லா க்யூவிலும் யாராவது நடுவில் புகுகிறார்கள் அதனால் அந்தக் கோடு... Q!”

*********************


கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சொன்னார்கள். ஒருத்தருக்கு ஏதோ ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறான் ஒருவன். இவர் கூப்பிட்டால் எடுப்பதில்லை. வேறு பல எண்களிலிருந்து முயன்றும் அவன் எடுக்கவே இல்லை. ஆனால் இவருக்கு பல எண்களிலிருந்தும் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இவர், தனது எண்ணை மாவட்ட எஸ்.பி.க்கு கால் டைவர்ட் செய்துவிட்டார். அவனும் அழைத்து பல முறை பலவாறு பேசியிருக்கிறான். (நீ போலீஸ்காரன்னு சொன்னா பயந்துடுவோமா?)

ஒன்றிரண்டு முறை அவன் அழைப்பை அட்டெண்ட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட எஸ்.பி. அதன்பிறகு எவனோ கிறுக்கன் என்று அந்த எண்ணிடமிருந்து வந்த காலை துண்டிக்க ஆரம்பித்துவிட்டார். ஒருநாள் எஸ்.பி. முக்கியமான ஏதோ மீட்டிங் முடிந்து பார்க்கையில் DOT லைனிலிருந்து பல மிஸ்டு கால்கள் பதிவாகியிருக்கிறது. என்னமோ ஏதோ என்று அழைக்க.. இவன்!

இப்போது அந்த நபர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறானாம். கால்டைவர்ட் செய்தவர் ‘தாங்கமுடியாமத்தான் அப்படிப் பண்ணினேன்’ என்று மன்னிப்புக் கோர ‘உன் வேதனை புரியுது’ என்ற எஸ்.பி. வழக்கில் அவரை சாட்சியாக போட்டுவிட்டாராம்!

********************************

‘நான் எழுத்தாளனாக்கும்’ என்று திரியும் என்னை ஒருபக்கம் கோபிகிருஷ்ணன் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்க... இரண்டொருநாள் முன்பு பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் படைப்புகளை வாங்கி, ஆத்மாநாமிடமும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன்.


குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.

பதில் என்ற கவிதை இப்படி இருக்க....



எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

என்று துவங்கும் எழுதுங்கள் என்ற கவிதை எனக்கு டானிக் போல இப்படி முடிகிறது..

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்.


வெறும் 33 வருடமே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஆத்மாநாம் என்பது துரதிருஷ்டமான ஒன்று!


*ஆத்மாநாம் படைப்புகள்
*தொகுப்பாசிரியர்: பிரம்மராஜன்
*காலச்சுவடு பதிப்பகம்
*ரூ.200

52 comments:

விஜய் ஆனந்த் said...

ஆறு நாளா ஆளக்காணோமேன்னு பாத்தேன்....

:-)))...

ஸ்வாமி ஓம்கார் said...

ஞான் ஜோலிக்காரியத்தில் பிஸியானோனு விஜாரிச்சூ.

நாட்டில் ஆள்க்கார் பங்கியானோ?

கேரள பாணி காய்கறி மிகுந்த அவியல்..!

சரவணகுமரன் said...

பிசினஸ்'ல கட் அண்ட் ரைட்டா இருக்காங்களாம்... :-)

Cable சங்கர் said...

அவியல் அருமை.. அதிலும் அந்த முக்கா பேண்ட் சூப்பர்.

கடைக்குட்டி said...

அவியல்... ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு...:-)

Unknown said...

ம்ம்ம் அவியல் சூப்பர் அண்ணா :))

தமயந்தி said...

vitta see ngira englipish vaarthaiku 2 kannu vara maathiri thaan letter varanumnu soliruvinga polirukee..C na appa enna..paathi vaazhkaiyai kadanthavana

Truth said...

:) ellaame super :-)

நாடோடி இலக்கியன் said...

ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கீங்க இன்னமும் காரசாரமா இருந்திருக்கலாம் அவியல்.ஆனாலும் கேரளா மேட்டர் நன்று.

ங்கொய்யா..!! said...

:)

:)))

அறிவிலி said...

வழக்கமான் அவியலை விட கொஞ்சம் சுவை குறைவு. ஊருக்கு போயிட்டு வந்து ஃப்ரிட்ஜ்ல காய்கறியெல்லாம் கம்மியா இருந்துதோ.

தீப்பெட்டி said...

அவியல் சுமார் தான்..

எதுக்கும் இன்னொரு தடவை அவியலை ருசிச்சுட்டு சொல்லுறேன் பாஸ்...

முரளிகண்ணன் said...

வழக்கமான பரிசலின் அவியல். அலைபேசி எண்ணை மெயில் செய்ய முடியுமா?

SK said...

/*கடை 9.30க்குத்தான் திறக்கும்” என்றிருக்கிறார். இவர் போய் 9.30க்கு மேல் வந்தபோது இவருக்கு பதில் சொன்ன நபர்தான் கடைக்காரர் என்றறிந்தாராம்!*/
எங்க ஊருல எல்லா கடைலயும் இத தானே சொல்லுறானுங்க .............
மேற்கு ஆஸ்திரேலியா வில எல்லா கடையும் சாயங்காலம் ஆறு மணியோட க்ளோஸ்...........எதாவது அவசரம் நா கூட அடுத்த நாள் காலைல எட்டு மணிக்கு தான்.......................வாங்கணும்..

எம்.எம்.அப்துல்லா said...

ஏதோ மிஸ்சாகுற மாதிரி இருக்கே தல. அவசரத்துல எழுதுனதா???

ப்ரியமுடன் வசந்த் said...

சுகம்தன்னே

எவட போயி ஆறு திவசம்

சிவக்குமரன் said...

///“ஏண்டா.. பேண்ட் அளவுகுடுத்து தைக்கறதுக்குள்ள வளர்ந்துட்டியா?”///
ஹா ஹா ஹா ம்ம்ம்ம்

கயல்விழி நடனம் said...

//எங்கே நின்றிருப்பவர் ஆனாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் எல்லாருமே வரவேண்டியிருக்கிறது. அதனால் O மாதிரி போடுகிறார்கள். அப்படியும் எல்லா க்யூவிலும் யாராவது நடுவில் புகுகிறார்கள் அதனால் அந்தக் கோடு... Q!”

ரூம் போட்டு யோசிப்பீங்களோ இப்படி எல்லாம் பதில் சொல்ல???? :P

வால்பையன் said...

நீங்களும் கல்யாணத்துக்கு போயிருந்திங்களா?

//“டம்ளர்களைக் கழுவிவிட்டேன். இனி சர்பத் போடமாட்டேன். நாளைக்குத்தான்”//

கேரளாவுல சர்பத் குடிக்க தனி டம்ளர் தான் வாங்கிட்டு போகணும் போல!
அப்படியே போனாலும் உயர்சாதி திமுருன்னு சொல்வாங்களோ!

வால்பையன் said...

கிரேசிகிரியின் புத்திசாலி கேள்விகள் தொடரும்னு நம்புறேன்!

வால்பையன் said...

கிரேசி கிரி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், மகேஷ் அண்ணன் ஏழுவின் சாயலில் இருக்கிறார்!

கலந்துகட்டி அடிச்சிடிங்களா?

புருனோ Bruno said...

//ஒருத்தர் சர்பத் கடை ஒன்றிக்கு சென்றிருக்கிறார். சர்பத் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம்: “டம்ளர்களைக் கழுவிவிட்டேன். இனி சர்பத் போடமாட்டேன். நாளைக்குத்தான்”//

கேரளாவில் டம்ளர் கழுவுவது, கடையை பூட்டும்போது வியாபாரம் முடிந்த பின் தீபம் ஏற்றுவது ஆகியவை சாஸ்திர சம்பிரதாயங்களுடன் சம்மந்தப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

தோசை கல்லை கழுவிவிட்டேன். இனி தோசை ஊற்ற முடியாத என்று கோட்டயத்தில் ஒரு கடைக்காரர் கூறியபோது, “தோசை ஊற்றியபின் திரும்ப கழுவக்கூடாதா” என்ற எங்களின் கேள்விக்கு அளித்த விளக்கத்திலிருந்து தெரிந்து கொண்டது

மற்றப்படி செய்தித்தாள் படித்த கடைக்காரரை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை :) :) :) வாழ்க்கையை வாழ தெரிந்தவர் என்பது தவிர

புருனோ Bruno said...

//க்யூ என்பது நீளமாக நிற்பது. அதற்கு I தான் சரியான குறியீடு. அல்லது L ஐக்கூட வைத்துக் கொள்ளலாம். ஏன் Q?//

queue என்ற சொல்லிற்கு ”வால்” என்று பொருள்

அதே போல் நீண்ட முடியை கூட இந்த சொல் குறிக்கும்

வால்பையன் said...

//queue என்ற சொல்லிற்கு ”வால்” என்று பொருள்//

டாக்டர் எதாவது புரளிய கிளப்பி விடாதிங்க!
என்னை எல்லோரும் ”கியூபையன்னு” கூப்பிட போறாங்க!

புருனோ Bruno said...

//பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இவர், தனது எண்ணை மாவட்ட எஸ்.பி.க்கு கால் டைவர்ட் செய்துவிட்டார். //

டாப் ஐடியா.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் (எஸ்.பி) செல்லிடப்பேசி தெரிந்த நபர்களிடம் விளையாட கூடாது என்பது இந்த கதையின் moral

அது சரி, அப்படி என்றால் இவருக்கு மற்றவர் அழைக்கும் அழைப்புகளும் அந்த காவல் துறை அதிகாரிக்கா சென்றது

--

எனக்கென்னவோ இது புனைவு போலிருக்கிறது :)

பரிசல்காரன் said...

மூன்று நாட்கள் இல்லாததால் வேலை பெண்டெடுக்கிறது. உடனுக்குடன் பதில் சொல்ல இயலாமைக்கு ஸாரி தோழர்களே. புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

நன்றி

விஜய் ஆனந்த்
ஸ்வாமி ஓம்கார்
சரவணகுமரன்
கேபிள்சங்கர்
கடைக்குட்டி
ஸ்ரீமதி
தமயந்தி
ட்ரூத்
நாடோடி இலக்கியன்
நமிதா (ங்கொய்யால..)

அறிவிலி
தீப்பெட்டி
முரளிகண்ணன் (அனுப்பியாச்சு)
கீர்த்தி
எம் எம் அப்துல்லா (ஹி.ஹி..)
ப்ரியமுடன் வசந்த் (சுகம்தன்னே..)

இரா சிவக்குமரன்
கயல்விழி நடனம்
வால்பையன் (க்யூபையன்???)

பரிசல்காரன் said...

@ டாக்டர் ப்ரூனோ

//அது சரி, அப்படி என்றால் இவருக்கு மற்றவர் அழைக்கும் அழைப்புகளும் அந்த காவல் துறை அதிகாரிக்கா சென்றது//

இந்தக் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை, நானும் கேட்டேன் சார்! ஒருவேளை கால்டைவர்ட் செய்தவர் மற்றவர்களுக்கு எண் மாறிவிட்டதாய் எஸ்ஸெம்மெஸ்ஸி இருக்கலாம்!



//எனக்கென்னவோ இது புனைவு போலிருக்கிறது :)//

இல்லை டாக்டர் சார்..
மலையாளம் எழுத்துக் கூட்டிப் படிப்பேன். ஒரு தினசரியில் (மலையாள மனோரமா) இதைப் பெட்டிச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். நானே படித்தேன்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். அழைத்தவன் ஆலப்பி மாவட்டம். கால் வந்தது கோட்டயம் மாவட்டக்காரருக்கு. கோட்டயம்காரர் டைவர்ட் செய்தது இடுக்கி மாவட்ட எஸ்.பிக்கு!

புன்னகை said...

அவியல் சூப்பர்! :-)
எங்க ரொம்ப நாளா காணாம போய்டீங்க??? காக்கா ஏதும் தூக்கிட்டு போயிடுச்சா என்ன உங்கள??? ;-)

தராசு said...

இது அவியலா இல்லை கடியலா

கோபிநாத் said...

எனக்கு என்னாமே அவியலில் சுவை கொஞ்சம் கம்மி தான்.

சின்னப் பையன் said...

பரிசல் தொடவில்லை... (டச் இல்லைன்னு சொல்ல வந்தேன்!)...

பரிசல்காரன் said...

// புன்னகை said...

அவியல் சூப்பர்! :-)
எங்க ரொம்ப நாளா காணாம போய்டீங்க??? காக்கா ஏதும் தூக்கிட்டு போயிடுச்சா என்ன உங்கள??? ;-)//

நன்றிங்க. கல்யாணத்துக்குப் போயிருந்தேன்!

@ தராசு

என்ன வேண்ணா வெச்சுக்கோங்க...!

@ கோபிநாத்

சரிங்க.. பார்த்துக்கறேன்.

@ ச்சின்னப்பையன்

நெக்ஸ்ட் வீக் கரெக்ட் பண்ணீடலாம் தோழர்!

வாசகன் said...

ஆத்மநாம் முழுத் தொகுப்பு படித்தீர்களா?

பெருசு said...

ம்ம்ம்ம்ம்ம்,

நாட்டுக்கு போயோ!!!!

சுகவாசியானு(?)

பீர் | Peer said...

அவியலில் தேங்காய் அதிகம்.

Venkatesh Kumaravel said...

ருசியான அவியல்! அதுவும் அந்த முக்கால் பேண்டு பட்டாசு ரகம்! 297 ஃபாலோயர் வந்தாச்சு.. ட்ரிபிள் செஞ்சுசிக்கு முங்கூட்டியே வாழ்த்திடுறேன் அண்ணே!

எனி இந்தியன்-ல ஆத்மாநாம் கிடைக்குதுங்களா? நீங்க பெரிய புத்தகப்பிரியரா இருக்குறதுனால் கேட்குறேன்.. நிறைய விசயங்கள் தெரிஞ்சு வச்சிருப்பீங்க... கலாப்பிரியா, பிரமீள், ஸ்ரீஸ்ரீ (தெலுங்கிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு), பசுவய்யா போன்றவர்களோட தொகுப்பெல்லாம் எங்க கிடைக்கும்னு விசாரிச்சு சொல்ல முடியுங்களா? தெரிஞ்ச தயவு செஞ்சு ஒரு மெயில் தட்டி விடுங்க ஐயா!

Prabhu said...

கேரளாகாரங்கட்ட அசட்டை ஜாஸ்தியோ?

ஆ.சுதா said...

கலகலப்பா சிரிக்க முடிந்தது.
ஆத்மாநாம் படைப்புகள்..
நல்லா இருக்கு.

Anonymous said...

பரிசல்கார அண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

VIKNESHWARAN ADAKKALAM said...

//DOT லைனிலிருந்து பல மிஸ்டு கால்கள் பதிவாகியிருக்கிறது. என்னமோ ஏதோ என்று அழைக்க.. இவன்!//

இது புரியலை பரிசல்... dot என்ன அர்த்தம்..

Kumky said...

“ஆரத்தி காட்டும்போது தட்டில் ஏன் நோட்டைப் போடாமல் சில்லறை போடுகிறார்கள்?” என்று கேட்டார். “நனையுமில்லையா.. அதுதான்” என்றேன்.

உடனே இவரைத் தேடிப் பிடித்து “என்னமோ சொன்னீங்க? பாருங்க நோட்டு நனைஞ்சாலும் பரவால்லன்னு நோட்டைப் போடறாங்க..” என்றேன்.

ரெண்டும் நீங்க சொன்னதுதானே பரிசல்...நீங்களே மொதல்ல அப்படி சொல்லிட்டு மறுபடியும் அவரை கூப்ட்டு கேக்கலாமா?
(அவியல்ல எல்லாத்தையும் விட்டுட்டு இவன் கண்ணுக்கு இதான் தெரிஞ்சுதா...அப்படின்னு நெனக்கப்படாது.)

Kumky said...

கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவுதான்...வேளை பளுவா?

கார்க்கிபவா said...

கேரளா போயிட்டு வந்து ‘அத’ பத்தி ஒரு வரி கூட எழுதாமால், நானும் அனுஜன்யா செட்டுதான்.. யூத்து மாதிரின்னு நிரூபிச்சிட்டிங்க சகா..

பரிசல்காரன் said...

@ வாசகன்

படித்துக்கொண்டேஏஏஏ இருக்கிறேன்...

@ பெருசு & ச்சில் பீர்

நன்றி!!

@ வெங்கிராஜா

வாழ்த்துக்கு நன்றி நண்பா...

புத்தகங்கள் எங்குகிடைக்கும் என்று விசாரிக்க முயல்கிறேன். பிறகு மெயில்கிறேன்...

@ பப்பு & ஆ. முத்துராமலிங்கம்

தொடர் ஆதரவுக்கு நன்றி.. நன்றி!!

@ ராசுக்கண்ணு

வாரேன்கண்ணு.. இங்கிட்டு நெட்டு வெரசா இல்ல. அப்பாலிக்கா வாரேங்கண்ணு...

@ விக்கி

DOT = Department Of Telecommunications

அதாவது லேண்ட்லைன். (இப்படியேசொல்லியிருக்கலாமோ...)

@ கும்க்கி’

ரொம்ப யோசிக்காதீங்க தோழர்!!!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

நன்றி நண்பா... அத MFM ல எழுதறேன்...

ஆதவா said...

நிகழ்வுகளை நன்கு கவனிக்கிறீர்கள்... வாழ்த்துகள்!!!

நான் படித்தவரையிலும் உங்களது அவியல்கள் சிறப்பாக முடிகின்றன. ஏதாவது ஒரு கவிதையை மையப்படுத்தி..

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஆதவா...

@ இது நம்ம ஆளு

வந்துட்டு வந்துட்டேன்...

Prabhu said...

என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது.

ஒய்?...ஒய்?....ஒய்?

ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?

கலையரசன் said...

பரிசல்காரன் அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
http://www.kalakalkalai.blogspot.com

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அவியலின் கவிதைகள் நன்றாக இருந்தன...

ஆத்மநாம் புதுக்கவிதைகளில் ஒரு தவிர்க்க இயலாத புள்ளி...

நானும் சிலகாலமாக முழுத் தொகுதியையும் இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்..

விக்னேஷ்வரி said...

கேரளா மக்கள் கேரளாவைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உழைக்கும் உழைப்பாளிகள் பரிசல்.

Q விளக்கம் நல்லா இருக்கு. :)

நல்ல எஸ்.பி.