Saturday, May 2, 2009

கிருஷ்ணகதா-2 (சாதிகள் இல்லையடி பாப்பா)

ஜாதி, மதம்ன்னு அலையற ஒரு கும்பல் இப்பவும் இருக்கு. ஒவ்வொரு தேர்தல் சமயத்துலயும் ஜாதி ஓட்டு, ஜாதிக்குன்னு தனியா கட்சி, இந்த ஜாதிக்காரரைத்தான் இந்தத் தொகுதில நிறுத்தணும்னு ரொம்ப சீரியஸா ஜாதிக்கா செய்திகளைப் படிக்கறப்போ கவலையா இருக்கு.

அதே மாதிரி ‘இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக்கற கிராமங்கள் இருக்குடா’ன்னு என் ஃப்ரெண்ட் சொல்லி, ‘வர்றியா காமிக்கறேன்’ங்கறான். இருக்காதுன்னு சொல்ல பயமா இருக்கு. ஏன்னா ஒரு சில மாசத்துக்கு முன்னாடிதான் எங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல இந்தப் ப்ரச்னை வெட்டுகுத்து வரைக்கும் போனதா பேப்பர்ல படிச்சேன். கேவலமா இருந்தது.

பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல.

“என்ன கிருஷ்ணா.. கௌரவர்-பாண்டவர்களின் சகோதர அன்பு எப்படிப் போய்ட்டிருக்கு?”ன்னு கேட்டார். கிருஷ்ணர் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், “ஐயா.. நான் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் முடியாம ரெண்டு பேருக்கும் போரே நடந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?”ன்னு கேட்டார்.

உதங்கருக்கு பயங்கர டென்ஷனாய்டுச்சு. “நீ இருந்தும் சமாதானம் பண்ணி வைக்கலியா? நீதான் ஏதாவது கபடவேஷம் போட்டு தூண்டி விட்டிருப்ப. இரு நான் உனக்கு சாபம் தர்றேன்”ன்னு கமண்டலத்தைத் தூக்கப் போனார்.

“கூல்.. கூல்..”ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.

“சரி உதங்கரே.. உங்களுக்கு ஒரு வரம் தர நினைக்கிறேன். கேளும்”ன்னார். ‘உன் விசுவரூபத்தைப் பார்த்த்தே போதும்’னு முதல்ல மறுத்த உதங்கர் கிருஷ்ணர் வற்புறுத்தவே ஒரு வரம் கேட்டார்.

“நான் எப்போ எங்க தாகத்துல வேண்டினா தண்ணீர் கிடைக்க வரம் குடுங்க” ன்னு கேட்டார். (திருப்பூர்க்காரரா இருப்பாரு போல!)

”இவ்ளோதானா.. டேக் இட்”ன்னு வரம் குடுத்தார் கிருஷ்ணர்.

கொஞ்ச நாள் கழிச்சு, உதங்கர் காட்டுல அங்க இங்க அலைஞ்சு, தாகத்தோட சுத்திகிட்டிருக்கறப்போ கிருஷ்ணரை நினைச்சார். உடனே அங்க ஒரு மாட்டிடையன் அங்க வந்தார். அழுக்குத் துணியும், கூட அஞ்சாறு வேட்டை நாய்களும், தோள்ல ஒரு பைல குடிதண்ணீரும் வெச்சிருந்தார்.

வந்தவர் நேரா உதங்கரைப் பார்த்து ”தாகத்துல தவிக்கறீங்க போல.. இந்தாங்க தண்ணீர்”ன்னு குடுத்தாராம்.

உதங்கர் மாட்டிடையரை அருவருப்பாப் பார்த்து “வேண்டாம்.. வேண்டாம்”ன்னு மறுத்துட்டார்.

அடுத்த நொடி மாட்டிடையன் எஸ்-ஸாய்ட்டாராம்.

“உடனே மறைஞ்சுட்டானே.. இது யாரு?”ன்னு உதங்கர் கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு கிருஷ்ணர் அவர் முன்னால் வந்து “வாட்டீஸ் திஸ்?”ன்னு கேட்டப்போ..

“இடையன்கிட்ட குடுத்தனுப்பறியே கிருஷ்ணா.. நான் எப்படி வாங்கிக் குடிக்க?”ன்னு கேட்டாராம்.

“அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் ‘மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா’ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில ‘குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்’ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே”ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்.

தன் ஜாதிப்பித்தால் அமிர்தத்தை இழந்த உதங்கரும் வெட்கித் தலைகுனிந்தாராம்.

கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......

33 comments:

வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு...

அறிவிலி said...

கிருஷ்ணகதா காலட்சேபம் சூப்பர்.

//ஏன்//

அவங்க மறந்தாலும் அரசியல்வாதிகள் அடிக்கடி ஞாபகப்படுத்திட்டே இருக்காங்களே.

ஆ.சுதா said...

அறிவார்ந்த பதிவு,நல்சிந்தனை!
|கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......|

அவங்களெல்லாம் யாரு இதுல தலையிட சொன்னது, இது ஒன்னும் கடவுள் உருவாக்குனதில்ல... நாங்க... நாங்களே உருவாக்குனது-
மனுசன்!!!

Cable சங்கர் said...

அருமையான பதிவு பரிசல்..

எம்.எம்.அப்துல்லா said...

/ஜாதி, மதம்ன்னு அலையற ஒரு கும்பல் இப்பவும் இருக்கு. //

அந்த சனியன்கள் எப்பவும் இருக்கும்.

என்.இனியவன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.
கிருஷ்ணகதா, அவியல் இரண்டுமே super.


எதிர்காலத்தில் இரட்டை குவளைமுறை இல்லாமல் போகும் என நினைக்கிறேன்.
சாதி என்பது அழிப்பது கஸ்ரம் தான்.

ஆனால் முன்பு போல் இப்ப இல்லை என நினைக்கிறேன்.
இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் ஓரளவு திருந்திவிட்டார்கள் ??.
அதெல்லாம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை.

தராசு said...

கலக்கல்.

//“கூல்.. கூல்..”ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.//

இந்த அவதாரங்கள் எல்லாம் எங்க போயிட்டாங்க, கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லுங்க. கண்டிப்பா இந்த யுகத்துலயும் ஒரு அவதாரமாவது தேவை.

கயல்விழி நடனம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

பரிசல்காரன் said...

நன்றி வெட்டிப்பயல்

@ அறிவிலி

உண்மைதான்க.

@ ஆ.முத்துராமலிங்கம்

ச்சே.. எப்பேர்ப்பட்ட உண்மையை ஈஸியா சொல்லிட்டுப் போய்ட்டீங்க!

நன்றி கேபிள் சங்கர்ஜி.

@ எம்.எம்.அப்துல்லா

நீங்கள்லாம் அரசியலுக்கு வரணும்னு நான் ஆசைப்படறதே இந்த மாதிரி உங்களோட பரந்த மனசுக்குத்தான் அப்துல்லா. ஐ லவ் யூ!

@ என்.இனியவன்

//முன்பு போல் இப்ப இல்லை என நினைக்கிறேன்.
இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் ஓரளவு திருந்திவிட்டார்கள் ??. //

இல்லை என்பதுதான் கசப்பான உண்மை இனியவா. சில நிகழ்ச்சிகளைக் கேள்விப்படும்போது வலிக்குது!

@ தராசு

அவதாரங்களை நாம் எதிர்பார்க்க வேண்டாம். நாமே அவதாரமாக மாறுவோம்... (க்கும்!!)

மிக்க நன்றி கயல்விழி நடனம்!

தீப்பெட்டி said...

நல்ல கருத்துள்ள பதிவு...

//கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......//

கடவுளும் முனிவர்களும் சொல்லித்தான் மக்கள் எல்லாம் பண்ணுறாங்கனு நினைக்குறீங்க....
அப்போ ரொம்ப கஷ்டம் தான் :-(

பரிசல்காரன் said...

@ தீப்பெட்டி

//கடவுளும் முனிவர்களும் சொல்லித்தான் மக்கள் எல்லாம் பண்ணுறாங்கனு நினைக்குறீங்க...//


உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரியலயா.. இல்ல நீங்க சொல்றது எனக்குப் புரியலயா..

ஒரே கொளப்பமா கீது....

sriraj_sabre said...

"பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல."

"“அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் ‘மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா’ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில ‘குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்’ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே”ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்."

"கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்......."


துறவி முனிவர் ரெண்டும் ஒன்னுதானே..

கடவுள் தான் ஜாதி இல்லைன்னு சொல்றாரு,
சில துறவி(முனிவர்) தான் இருக்குனு சொல்றாங்கோ..

என்னமோ ஒன்னும்புரியலபா ..

ஆனா ஜாதிகள் இல்லையடி பாப்பா..

மங்களூர் சிவா said...

கலக்கல் பதிவு...

Kumky said...

ஆஹா....அங்க சூட்ட குறைக்க இங்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா...

ஸ்வாமி ஓம்கார் said...

பரிசல் காலஷேபம் சூப்பர்,

உண்மை கதையை வெளியே சொல்ல முடியாது. காரணம் இந்திரன் குடுவையில் அமிர்தம் கொண்டுவரவில்லை. :)

சென்ற கிருஷ்ண கதா போல ஹைடெக் சமாச்சாரம் (செல் பேசுவது போல) எதுவும் இல்லை.

சுஜாத்தாவின் விஞ்ஞான கதைகள் தொகுப்பு படித்திருக்கிறீர்களா? அதில் பாண்டவர்கள் கதை ஒன்றை ஃபிக்‌ஷன் செய்திருப்பார். நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக அது போல ஒன்று எழுத முடியும். முயற்சி செய்யுங்கள்...!

பீர் | Peer said...

நல்ல பதிவு கிருஷ்ணா.

என்ன சொல்றீங்க? //இரட்டைக் குவளை முறைகள்// இன்னும் இருக்கா?

பரிசல்காரன் said...

@ தமிழ்விரும்பி

நன்றிங்க.

நன்றி மங்களூர் சிவா, கும்க்கி

@ ஸ்வாமி ஓம்கார்

ஸ்வாமிஜி.. இத நான் வியாசர் விருந்துல படிச்சேன். அமிர்தம்னுதான் போட்டிருக்கு. இல்லையா? நெஜக்கதை என்ன?

@ Chill-Peer

ஆமா நண்பா... இன்னும் வேற பல ரூபங்கள் எடுத்துட்டிருக்கு :-(

புருனோ Bruno said...

சூப்பர் :) :)

Subash said...

கலக்கல் தல

கதைசொல்லும் விதம் ஜீப்பர்
:)

ஊர்சுற்றி said...

முதலில் நீங்கள் சொல்ல வந்த விசயம் நன்று. மனிதர்கள் கடவுளர்கள் பெயரால் செய்த குற்றத்தி்ற்கு மனிதர்களே பொறுப்பு. நாம்தான் இதையெல்லாம் சரிசெய்தாக வேண்டும். சாதிகள் இருப்பதும் தீண்டாமை இருப்பதும் வெவ்வேறான தளத்தில். கடவுளர்கள் சாதியை தீவிரமாக ஆதரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் கூறிய உதாரணத்தில் 'தீண்டாமை' என்கிற கருத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

//கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......//

நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இராமன் 'சம்பூகனைக்' கொன்றது எவ்விதத்தில் நியாயம் என்றும் பரிசல் ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

Thamira said...

உதங்கர் : சே.. வட போச்சே..

தீப்பெட்டி said...

//நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இராமன் 'சம்பூகனைக்' கொன்றது எவ்விதத்தில் நியாயம் என்றும் பரிசல் ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.//

இது யாரு பாஸ் புது கேரெக்டர் சம்பூகன்?

மணிகண்டன் said...

நல்ல பதிவு பரிசல்.

****
நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இராமன் 'சம்பூகனைக்' கொன்றது எவ்விதத்தில் நியாயம் என்றும் பரிசல் ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கு
****

ஊர்சுற்றி,

ராமாயணம் வே மதிமாறன் கிட்டயும், பெரியாரியம் ஏதாவது ஒரு பாகவதர் கிட்டயும் கேக்ககூடாது ! அப்படி கேட்டா உங்களுக்கு இந்த மாதிரி கேள்வி எல்லாம் தான் வரும்.

வசந்த் ஆதிமூலம் said...

திருப்பூர் ல வெயில் இன்னும் அதிகமாயிடுச்சு போலிருக்கு .

வாழ்த்துகள். அறு sorry அருமையான பதிவு .

Truth said...

சாட்டையடி. நல்லா சொன்னீங்க. சூப்பர்.

புன்னகை said...

சூப்பர் பதிவு! :-)

வால்பையன் said...

கடவுள்கள் சாதி பார்க்க சொல்லலைன்னா எதுக்கு சாதிகளை உருவாக்கனும்!

இந்த கதையெல்லாம் சுத்த ஹம்பக்!

பிரச்சனைகளின் ஆணிவேரே கடவுள் தான். அதை தூக்கி எரிச்சிடோம்னா எல்லாம் சரியாகிரும்!

சிவக்குமரன் said...
This comment has been removed by the author.
சிவக்குமரன் said...

எங்க கிராமத்துல இது ரொம்ப சாதாரணம், இந்த லின்க்ல போய் பாருங்க.

http://enmaganezhilan.blogspot.com/2009/05/blog-post_05.html

Anonymous said...

http://enmaganezhilan.blogspot.com/2009/05/blog-post_05.html

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

கிருஷ்ணகதா சொல்லிய விதம் அருமை

விக்னேஷ்வரி said...

குழந்தைகளுக்கு கதை சொல்ற மாதிரி சொல்லி இருக்கீங்க. ரசிச்சு படிச்சேன் பரிசல்.