நேற்றென்னை அழைத்த நண்பர் கேட்டார்: “என்ன கிருஷ்ணா.. கொஞ்ச நாளா பதிவுல தீவிரமா ஒண்ணும் எழுதல? ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துடுச்சா உங்களுக்கு?”
‘அது ரைட்டர்ஸுக்குத்தானே வரணும்... எனக்கேன்’ என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.
வேலைப்பளுவும், என்ன எழுத என்ற யோசனையும்தான் காரணமின்றி வேறொன்றுமில்லை.
இரண்டு வாரம் முன்பு ஓட்டுக் கேட்க வந்தார் ஒருவர். நானும் என் நண்பனும் வீட்டிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்தவரிடம் நட்பு முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் வீட்டுக்கு எதிரில் காலிமனைகளில் குவிந்திருந்த குப்பைகளைக் காட்டி “எலக்ஷனுக்குள்ள இந்த குப்பைகளை எந்த கட்சிக்காரங்க க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு!” என்றபோது அந்த வேட்பாளர் முகமலர்ந்து “அடடே.. தம்பி சொல்றது நல்ல யோசனையா இருக்கே” என்றபடி கூட இருந்த தொண்டரடிப்பொடிகள் சிலரிடம் ‘நம்ம பசங்ககிட்ட சொல்லி ரெண்டொரு நாள்ல இதக் க்ளீன் பண்ணீடுங்கப்பா’ என்றார்.
நான் புல்லரித்துப் புளகாங்கிதமெல்லாம் அடைந்து “இல்லைங்க.. ஜெயிச்சப்பறம் அதப் பண்றேன்.. இதப் பண்றேன்னு சொல்றது வேற. இப்பவே இதப் பண்ணினீங்கன்னா அட்லீஸ்ட் ஓட்டுப் போடற அந்த நிமிஷம் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் விளக்கம் கொடுத்து..
இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு மாற்றமுமில்லை. வெட்கக்கேடான விஷயம், அந்த வேட்பாளருக்கு சப்போர்டாக உடன்வந்த, எங்கள் அபார்ட்மெண்டிலேயே குடியிருக்கும் ஒருவர் இதற்குப் பிறகு தன் வீட்டுக் குப்பைகளையும் அங்கேயே கொட்டுவதைப் பார்க்கிறேன்.
என்னால் இந்தப் பதிவு எழுதுவதைத் தவிர வேறொன்றையும் **** முடியவில்லை.
கோவை சென்றிருந்தபோது என் உறவினர் வீட்டில் கிடந்த நோட்டீஸில் ஒரு கட்சிக்காரர் ‘பாரதத் தாயின்மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்’ என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று. அதில் ஒரு வாக்குறுதி கோவை தொகுதியிலுள்ள டாஸ்மாக் வருமானத்தை வைத்தே தொகுதி வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த உறுதிமொழி மதுவிலக்கை அமல்படுத்தக் குரல் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். முரண்!
‘என்னாங்கடா இது?’ என்று வீறுகொண்டு எழுந்து பைக்கை அந்த வேட்பாளர் வீட்டுச் சுவற்றில் மோதி உடைத்துக் கொண்டு அவர் முன் நிறுத்தி அந்த நோட்டீஸை அவர் முகத்தில் விட்டெறிந்து ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்...
அதில் குறிப்பிட்டிருந்த அவரது அலைபேசிக்கு அழைத்து ‘என்னங்க.. இதெப்படி சாத்தியம்?’ என்று கேட்க அவர் சொல்கிறார்.
“நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார்.
“சாய்ஸ் குடுக்க இதென்ன கொஸ்டின் பேப்பரா? உறுதிமொழிங்க.. அதுவும் யார் மேல குடுத்திருக்கீங்க? ‘பாரதத்தாய் மீது ஆணையிட்டு’ன்னிருக்கீங்க. எல்லாமே விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால் என் சித்தப்பா வீட்டின் இரண்டு ஓட்டுகளை அவருக்குப் போடச் சொல்லி சிபாரிசு செய்யலாம் என்று.. ம்ஹூம்.
‘டேய் ஒரு சி டி இருக்கு. பார்க்கறியா?’ நண்பர் கேட்டான்.
பார்த்தேன். நான்கு நாட்களாக ஒரு வேலையிலும் மனசு ஒட்டவில்லை. ‘இதை ஏண்டா இப்படி பயந்து பயந்து பார்க்கணும்? இதுல என்ன இருக்கு? எங்கயோ நடக்குற கொடுமையை பார்த்து வருத்தப்படக்கூட பயமா?’ என்று கேட்டால்.. அது தடை செய்யப்பட்ட சி டி யாம். தடை செய்ய அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. நிர்வாணங்களும், அசிங்கங்களும் பார்க்க எந்த வெட்கமோ, வேதனையோ தேவையில்லை. அதைப் பார்க்கவும், பார்த்ததை ரசித்து எழுதவும் தயார். ஆனால் இந்தக் கண்ணீரையும், ரத்ததையும் பார்த்து அழ நமக்கு உரிமையில்லை. பயம். பயம்.
அதிகபட்சமாக ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ என்று காலர்ட்யூனை மாற்ற மட்டுமே முடிகிறது நம்மால். ச்சே!
நான் சொன்ன மூன்று நிகழ்வுகளிலும் என்ன செய்ய முடிந்திருக்கிறது என்னால் என்று யோசித்தால் வெட்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த லட்சணத்தில்... என்ன எழுத?
29 comments:
தலைப்பையே இப்படி வச்சிட்டா என்னத்த சொல்றது?
அய்யா,
பரிசல் எத்தனை ஆண்டுகளாக ஓட்டு போடுகிறீர்கள்?
அவரவர்கென்று ஒரு பாலிஸி(?)உண்டு.அதன் படி அரசியல்வாதிகள் சரியாகத்தான் போகப்போக தரம் தாழ்ந்து ஓட்டை போட்டு பூமிக்கடியிலேயே போய்விட்டார்கள்.
இன்னுமா இவங்கள நம்பி வெம்பி ....ஹைய்யோ ஹைய்யோ.
நமக்கு ஒரு தடவை பார்த்தா அது ஆக்ஸிடெண்ட் மற்றும் ரத்தம் உயிர் இத்யாதி.ஆனால் தினம் போஸ்ட்மார்டம் செய்பவனுக்கு இதெல்லாம் தோன்றுமா?
ஒன்னும் செய்ய முடியாது...இது நமக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒருசேர பொருந்தும்.
சகா, இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.. அரசியல்வாதியை பத்தி.. சேம் ப்ளட்..
என்ன எழுதுவது என்ற தலைப்புக்கு பதிலாய் என்ன செய்வது என்று வைத்திருக்கலாம்.. பரிசல்.. ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்களில் எல்லாம் நம்மால் எதுவுமே செய்ய முடியாத விஷயஙக்ள். அட்லீஸ்ட் நீங்க அந்த வேட்பாளருக்கு போனாவது போட்டு கேட்டீங்க.. அதுவே பெரிசு..
வாங்க புதிய பதிவரை! வந்து கலக்குங்க:)
வணக்கம் பரிசல்,
ஒரு சராசரி இந்திய குடிமகனின் ஆதங்கம் உங்களின் எழுத்தில் உள்ளது. இதில் வெட்க்கப்பட எதுவுமில்லை. என்னுடைய நண்பர் அடிக்கடி சொல்லுவார் "தமிழன் சிறந்த அறிவாளி யோசிக்க ஆரம்பித்துவிட்டால்" என்பார். தொடர்ந்து இதைப்பற்றி பேசுங்கள் நண்பர்களிடம் பேசுங்கள், அலுவலகத்தில் பேசுங்கள், தெரிந்த எல்லோரிடமும் பேசுங்கள். எழுதுங்கள் இன்று உங்கள் பேச்சை, எழுத்தை ஒருவர் கூடவா கேட்க்காமல் இருந்துவிடபோகிறார்கள். தினமும் ஒருவர்.
எதிர்த்து நம்மால் ஒன்னும் ************ முடியாதபோது எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்த "ஒ" போடலாமே! 49'O போடலாமே.
தல,
உண்மையை சொல்லியுள்ளீர்கள். பதிவிட்டு ஆதங்கத்தை கொட்ட மட்டுமே முடிகிறது.
நாம் பெரும்பாலும் கையாலாகாதவர்கள் தாம். கேபிள் சொல்வது போல நீங்க போன் பண்ணியாவது கேட்டீங்க. நா அதுவும் இல்லை. ஏனென்றால் ... முஜே ஹிந்தி நஹி மாலும் ஹை.
விடுங்க கே.கே. நமக்கெல்லாம் பதிவுலக அரசியலே கண்ணக் கட்டுது. சென்னையில் பதிவர்கள் செய்தது போல் கோவை/திருப்பூரில் ஒரு கலந்துரையாடல் போன்ற அரசியல் சாராத சமூக அக்கறை விடயங்களில் ஆர்வம் செலுத்தலாம்.
அனுஜன்யா
\\நண்பர் கேட்டான்.\\
இதுவும் முரண்தான்..!
என்ன செய்யவது ...:-( என்று நமக்கும் வருத்தம் தான்
//
விடுங்க கே.கே. நமக்கெல்லாம் பதிவுலக அரசியலே கண்ணக் கட்டுது//
நீங்க பதிவு போட்ட அவருடைய அரசியல்ல சொல்றீங்களா? இல்லை, அதுக்கு மறுப்பு போட்ட அரசியல சொல்றீங்களா தல?
ஆனாலும் நீங்க நம்ம அரசியல்வாதிகளிடம் நிறைய எதிர்பார்க்குறிங்க!
@கும்க்கி
மிகச் சரியான வார்த்தைகள்.
@ கார்க்கி
குட்!
@ கேபிள் சங்கர்
:-))))
@ குசும்பன்
ங்ங்கொய்யாஆஆஆஆல! புதிய பதிவரா??? 15ம்தேதியோட ஒரு வருஷமாகுது!!
@ முரளிகுமார் பத்மநாபன்
//"தமிழன் சிறந்த அறிவாளி யோசிக்க ஆரம்பித்துவிட்டால்" //
ப்ப்பாஆஆ! என்ன வீரியமான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி நண்பா!
@ தராசு
நன்றிங்க.
@ அனுஜன்யா
நீங்க சொன்ன ஒரு காரணத்தாலதான் கொஞ்ச நாளா எதுவும் எழுதமுடியல!!!!!!!
@ டக்ளஸ்
:-))
@ சுரேஷ்
நன்றி!
@ வால்பையன்
இதுவே அதிகமா! சரியாப்போச்சு!
அண்ணே,
நல்லது நினைச்சா நல்லது நடக்கும்ணே.
ஊர்ல நாலு பேரு இதே மாதிரியே நினைச்சா, நிச்சயமா நல்லது நடக்கும்.
நம்ம மனசுக்கு ஒரு வலிமை இருக்கு.
புதிய கீதை கிளைமாக்ஸ் மாதிரி.
நாலு எட்டாகணும், எட்டு பதினாறகனும்...
நிச்சயமா நாடு வளமாகும்.
வருத்தம் நம்ம எல்லாருக்குமே இருக்கு.
மாற்றாம் வரும்னு உறுதியா நம்புவோம்.
வரும்.. வரும்.. நிச்சயம் வரும்..!
அந்த நாளை நோக்கி............................
சரியான தருணத்தில் சரியான பதிவு.
வாழ்த்துக்கள்.
அனுஜன்யா, திருப்பூர் எம் பி தேர்தல்ல நிக்கறவங்க கிட்ட தொலைபேச உங்களுக்கு எதுக்கு ஹிந்தி தெரியனும் ???? :)-
குசும்பனை வழிமொழிகிறேன். புது பதிவர்களுக்கு இருக்கும் ஒரு தடைக்கல் !!
கேபிள் சங்கர் said,
//நீங்க அந்த வேட்பாளருக்கு போனாவது போட்டு கேட்டீங்க.. அதுவே பெரிசு..//
வழிமொழிகிறேன்...
//அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால்//
ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்க பாஸ்..
எதுவும் செய்யமுடியாட்டி என்னாங்க? எழுதலாமே..
Write about voting patterns that you have seen and how people behaved with different parties! (Please!)
என்ன எழுதுவது என்று யோசித்த மூன்றுமே முத்துக்கள். நன்று. அருமை. (வைரமுத்து ஸ்டையில்ல இருக்கோ!) :)))
ஹாய் பரிசல்
பிறந்தநாள் வாழ்த்துகள்.(நன்றி வால்) பிறந்தல்னல் பரிசு
நான் தான் உங்களோட 300வது follower
markkamal ootu podavum
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன்
அரவிந்தன்
பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக. (நன்றி - வால்பையன்)
இன்று பிறந்தநாள் கொண்டு ஆடும் பரிசலுக்கு வாழ்த்துக்கள்.
நியுட்டனின் மூன்றாம் விதி.
"என்ன எழுதுவது" வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
என்ன செய்துவிட முடியும் சகா,
வேண்டாம் என்று சொன்னாலும், எங்கள் வீட்டில் வந்து 10 'கவர்' திணித்துவிட்டு போயிருக்கிறார்கள். என்ன செய்துவிட முடியும்?
திருப்பதிக்கு எப்படி லட்டு கொடுப்பது.
திருநெல்வேலிக்கு எப்படி அல்வா கொடுப்பது.
திருப்பூருக்கு எப்படி t-shirt கொடுப்பது.
அதனால உங்களுக்கு புடிச்ச t-shirtஐ
நீங்களே தேர்ந்து எடுத்து போட்டுக்கங்க கிருஷ்ணா.
treat வேலன்லியா இல்ல ஆரிய பவன்லியா.
எங்கெங்கேனாலும் எனக்கு o.k.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!என்சாய் மாடி.
இந்த லட்சணத்தில்... என்ன எழுத?/////
இப்படி சொல்லிக்கிட்டே கலக்கிருக்கீங்களே!
//தமிழ் வலையுலக வரலாற்றில் 300 ஃபாலோயரைத் தொட்ட முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்... (அடிங்......!)//
ஹா..ஹா..ஹா...
‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்... //
தமிழ்ப் படம் பார்த்து, அதுலேயும் விஜய் படம் பார்த்து ரொம்ப கேட்டுப் போய்ட்டீங்க.
"நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார். //
வெக்கமா இல்ல அந்த ஆளுக்கு.
இந்த லட்சணத்தில்... என்ன எழுத?
சரி தான் பரிசல்.
Post a Comment