‘பிறந்தநாள் கொண்டாடுவது என் பழக்கத்தில் இல்லை. நாமெல்லாம் எதற்குப் பிறந்தாள் கொண்டாடிக்கொண்டு..’ இப்படியாக இல்லை நான். நான் ஒவ்வொரு பிறந்தநாளையும் என்னளவில் நினைவில் கொள்ள ஏதாவது செய்து அதைக் கொண்டாடுபவன்தான்.
ஆனால் இந்தப் பிறந்தநாளை நான் மறக்கவேமுடியாதபடிக்கு பல தரப்பினரும் பலதும் செய்து என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். எங்கள் எம்.டி. தங்கள் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டிக்குப் பிறகு என்னையும், என் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு காஃபி டே சென்று அங்கே சரியாக இரவு 12 மணிக்கு அவர்களும், அலுவலக நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொல்ல.. காஃபி டே ஊழியர்கள் புஸ்வாணமெல்லாம் வெடித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்கள். எங்கள் மேடத்துக்கும், நண்பர்களுக்கும், உடனே வந்து பலூன் உடைத்து, பட்டாசு பற்ற வைத்த காஃபி டே-யின் ஊழியருக்கும் என் அன்புகள் என்றும்.
பதிவுலகின் பல நண்பர்களின் அழைப்பைத் தொடங்கிவைத்தது குசும்பன்! இதுவரை வாழ்த்திய வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைவர்க்கும்....
பிறந்தநாள் என்றதும் ஒரு துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ஹாலிவுட் நடிகர் தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தனது பெற்றோருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவாராம். ஒரு நிருபர் இதுபற்றிக் கேட்டபோது அவர் சொன்னாராம்: “நான் பிறந்த எனது முதல் பிறந்தநாள் அன்று யாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. என் பெற்றோருக்குத்தான் சொன்னார்கள். அதற்குப் பிந்தைய பிறந்ததினங்களின் யாரும் என் பெற்றோரை வாழ்த்துவதில்லை. என்னைத்தான் வாழ்த்துகிறார்கள். சரி நானாவது அவர்களுக்கான வாழ்த்தைத் தொடரலாமே என்றுதான்..”
சரியான காரணம்!
இந்தப் பிறந்தநாள் எனது முதல் பிறந்தநாள்.. (மயக்கம் போட்டுடாதீங்க... வலையுலகில்னு சொல்ல வந்தேன்) இதை நாற்பெரும் விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் சென்றவாரம் கேட்டபோது புளகாங்கிதமடைந்தேன். எப்படியும் 2 லட்சம் ஹிட்ஸை எட்டிவிடுவேன்.. மே 15 வந்தால் வலைப்பூ ஆரம்பித்து ஒருவருடம் நிறைவு பெறுகிறது.. எப்படியும் 300 ஃபாலோயரைத் தொட்டுவிடும்.. இப்படியெல்லாம் கணக்குப் போட்டு கேட்டார்கள். (அடிங்...)
கடந்த பத்து நாட்களாக சரிவர எழுதாததால் 2 லட்சம் இன்னும் தொடவில்லை. ஆகவே இது முப்பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. (ச்ச்ச்ச்சே!) இன்றைக்கு ஒரு நாள் மட்டும் யாரும் கழண்டுகொள்ளாமல் 300 ஃபாலோயர் என்றிப்பதைக் காப்பாற்றி மானம் கப்பலேறாமலிருக்க உதவுமாறு ஃபாலோயர்ஸைக் கேட்டுக் கொள்கிறேன்! (ஃபாலோயர்ஸாக சேர விரும்பும் புதிய வாசகர்கள் வலதுபுறம் ‘என்னைத் தொடரும் நண்பர்கள்’ கீழே ஃபாலோ-வைக் க்ளிக்கி ஃபாலோ செய்து பிறவிப்பயனை அடையவும்)
எல்லாவற்றையும் மீறி பெரிய தலைவர்கள் பிறந்தநாள் ரேஞ்சுக்கு என் பிறந்த நாளை ஃபீல் பண்ண வைத்த (பின்ன? டாஸ்மாக்கெல்லாம் லீவுல்ல!) தேர்தல் கமிஷனுக்கு நன்றி.
இந்தியாவின் வருங்காலப் பிரதமரைத் தீர்மானிக்கும் தேர்தலை இன்றைக்கு வைத்து எல்லாருக்கும் விடுமுறை வேறு வாங்கிக் கொடுத்து என் பிறந்தநாளை எல்லாரையும் கொண்டாட வைத்ததற்கும் நன்றி! ஒரேயொருவேண்டுகோள்... ‘ஓ’ட்டுப் போடுங்கள்!
அளவுக்கு மீறிய இந்தச் சுயவிளம்பரப் பதிவை என் பிறந்தநாளை முன்னிட்டு மன்னித்து படித்தமைக்கும்..... அதேதான் – நன்றி!
(இந்தப் பதிவை தமிழ்மணம்.. தமிழிஷ்ல் இணைக்கப் போகும் நண்பருக்கும் நன்றி!)
73 comments:
எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். கிருஷ்ணா
வாழ்த்தி மகிழ்கிறேன்
இனிய வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.
முப்பெரும் விழா வாழ்த்துகள்
என் இனிய எழுத்தாளர் சுஜாதா மறைந்தாலும், தன்னுடைய ஒவ்வொரு பதிவால் எனக்கு சுஜாதாவை நினைவுப்படுத்திகொண்டிருக்கும், என் இனிய நண்பர் பரிசலுக்கு என்னுடைய மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்களும், உங்கள் மனைவி, பிள்ளைகளும் எல்லா நலனும் பெற்று நல்லபடியாக வாழ எல்லாம்வல்ல என் ஏழுமலையானையும், வேளாங்கண்ணி மாதாவையும், அல்லாவையும், மலேசியா கெமாமன் மாரியம்மனையும் பிரார்த்திக்கிறேன்.
எல்லாம் வல்ல இறையருள் உங்களை காக்கட்டும்.
உங்கள் எழுத்துச்சிறகுகள் உலகம் முழுவதும் விரிவடைய எனது ப்ரார்த்தனைகள்.
உங்க வீட்டுக்கும் வந்து வாழ்த்தியாச்சு !
வாழ்க நீ எம்மான் !
வாழ்த்துக்கள் தோழரே...,
இரட்டை வாழ்த்துக்கள் பரிசல் கிருஷ்ணா,
முன்னூறுக்கும், முதல் வலையுலக பிறந்தநாளுக்கும்.
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
அட 303 ஆகிட்டே.
வாழ்த்துக்கள் பரிசல்.....!!!
வாழ்க வளமுடன்....!!!!
வாழ்த்துக்கள் பரிசல்!!!
வாழ்த்துக்கள்.
யூத் ஐகான் பரிசலாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பரிசல்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்,
சீ கனகராசு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்!
வாழ்த்துக்கள் பரிசல்.....!!!
வாழ்க வளமுடன்....!!!!
பிறந்த நாள் வாழ்த்துகள் கே.கே.
கடந்த ஒரு வருடம் உங்களுக்கு ஒரு சாதனை வருடம் - வலையுலகில்.
வரும் வருடம் இன்னும் பெரிய சாதனைகள் புரிய வாழ்த்துகள் - அச்சு ஊடகத்திலும்.
இதை விட முக்கியமாக, குடும்பம், சுற்றம், நட்பு மற்றும் அலுவலகத்தில் எப்போதும் போலவே மிக நல்லவராகத் தொடரவும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
வாழ்த்துக்கள் பரிசல்.. எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்.
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல்காரரே. வாழ்க பல்லாண்டு, எழுதுக பல்லாண்டு.
உங்க பிறந்தநாளுக்கு லீவு என்பது மகழ்ச்சியான செய்தி தான்!
ஆனா டாஸ்மாக்குக்கு லீவு விட்டது,
தேடி வந்து............போல் இருக்கு!...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து(க்)கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் கிரிஷ்ணா அவர்களே. படித்தவுடன் உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்த முயற்சி செய்தேன், மருந்துக்கும் உங்களுடைய தொலைபேசி என்னை எங்கும் குறிப்பிட காணோம். விடுங்க மன்னிச்சிட்டேன். மீண்டும் எனது உண்மையான வாழ்த்துகள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்....
வாழ்த்துக்கள் பரிசல்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல். தொலைப்பேசி எண் தெரிந்திருந்தால் கால் பண்ணி வாழ்த்தியிருப்பேன் :-)
நல்வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல் அண்ணே..
பரிசல், பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் பரிசல்!
பிறந்தநாள் வாழ்த்துகள்!
உங்கள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள்!!
அப்படியே உங்களுக்கும்.
www.kalakalkalai.blogspot.com
பரிசல் இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியாது என்று தெரிவித்துள்ளார். மதியம் முழுவதும் தண்ணியில் இருக்கப்போவதாக சொல்லியிருக்கிறார் (ஸ்விம்மிங் பூல்லப்பா.. வேற ஒண்ணும் இல்ல)
அதனால் அவர் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லவில்லை என்று யாரும் கோபிக்க வேண்டாம்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுந்தர்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பரிசல்...
கலக்கல் பரிசல்.
பிறந்தநாள் வாழ்த்துகள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
May god bless you and your family with abundance of joy, wealth and great health!
Many more Happy Returns of the Day.
இனிய வாழ்த்துகள் பாஸ்...
கலக்கல் :)
பிறந்தநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் அண்ணே..
ஆமா நீங்க 1969 ஆ......
49
ஹை 50......
தமிழகமே நாற்பது யாருக்குனு மண்டைய பிச்சுட்டு இருக்கும் போது அது எனக்கு தாண்டான்னு சொல்லி பிறந்த நாள் கொண்டாடும் பரிசலுக்கு என்னுடைய வாழ்த்துகள்
//தமிழகமே நாற்பது யாருக்குனு மண்டைய பிச்சுட்டு இருக்கும் போது அது எனக்கு தாண்டான்னு சொல்லி பிறந்த நாள் கொண்டாடும் பரிசலுக்கு என்னுடைய வாழ்த்துகள்//
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்......
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//தமிழகமே நாற்பது யாருக்குனு மண்டைய பிச்சுட்டு இருக்கும் போது அது எனக்கு தாண்டான்னு சொல்லி பிறந்த நாள் கொண்டாடும் பரிசலுக்கு என்னுடைய வாழ்த்துகள்//
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்......
//தமிழகமே நாற்பது யாருக்குனு மண்டைய பிச்சுட்டு இருக்கும் போது அது எனக்கு தாண்டான்னு சொல்லி பிறந்த நாள் கொண்டாடும் பரிசலுக்கு என்னுடைய வாழ்த்துகள்//
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்......
happy birthday... velan hotel oppsotie coffee day thana.. sonna vanthuruppamilla...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
முப்பெரும் விழா வாழ்த்துகள்
many many more happy returns of the day
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
//தமிழ் வலையுலக வரலாற்றில் 300 ஃபாலோயரைத் தொட்ட முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்..//
நீங்களுமா?
ஏன் ஏன் இப்படி.
இந்த உலகம் உங்களை இப்படி விளம்பரம் எழுத வைக்கும் அளவுக்கு மாத்திட்டுதா??
ஒரு வருடத்திற்குள் 306 நண்பர்கள் உங்களை தொடர்கிறார்கள்.
இது விளம்பரப்படுத்தி சேர்த்த கூட்டம் இல்லை, அன்பால தானாக சேர்ந்த கூட்டம்.
இருந்தாலும் விளம்பரம் சூப்பர்.
நான் கூட 300ஆவது நபராக உங்களை தொடருவம் என்று இருந்தன்.
கடைசியாக பார்க்கும் போது 297 ஆக இருந்ததாக நினைவு.
இரவோடு இரவாக 9 பேர் புகுந்திட்டாங்களே.
வாழ்த்துக்கள் பரிசல்!!!
மென்மேலும் வளர ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;)
ரசனையான பதிவு பரிசல்.. அதுவும் அந்த ஹாலிவுட் நடிகர் குறித்த செய்தி வித்தியாசமானது.
அப்படியே வாழ்த்துகளும்.! உங்கள் உண்மையான வயசை நான் எங்குமே (பின்னூட்டங்கள் மூலமாக) பரப்பவில்லை என்று சொன்னால் நம்புங்கள்.
அப்புறம் நம்ப கடையில் ஊறுகாய் ரெடியாக உள்ளது வரவும்.(சாப்பிடுற விஷயங்களுக்கு உங்க கடையில் வந்து விளம்பரம் போட்டு எம்மா நாளாவுது இல்ல.?)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல்!!
வாழ்த்துக்கள் பரிசல்
வாழ்த்துக்கள் பரிசல்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா.. மேலும் மேலும் வளருங்க.. வாழ்த்துக்கள்..
:)
அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் அவர்களே... :)
வாழ்த்துக்கள் பரிசல்.
தொடருங்கள்.....
Belated wishes anna.. :))
பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தல :)
வாழ்த்துக்கள் உங்கள் சிறுகதை ஆனந்த விகடனில் வந்துள்ளது
சுய விளம்பரம் கொஞ்சம் அதிகமாவே இருக்கே அண்ணே.
Belated Birthday wishes Parisal.
Post a Comment