Saturday, May 23, 2009

டுபாக்கூர் இன்பாக்ஸ்

திவுலக நண்பர்களின் வளர்ச்சி அவ்வளவு சந்தோஷமான விஷயமாக இருக்கிறது. லக்கிலுக் புத்தகங்கள் எழுதித் தள்ளுகிறார். கார்க்கி குறும்படத்தில் நடிக்கிறார். தாமிரா வலையுலகிற்கு வந்து நாளையோடு ஒருவருடமாகப் போகிறது. ஒருவருடத்திற்குள் அச்சு இதழில் கதை வெளிவந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னும் பல எழுதி அனுப்பி பதிப்பாளர்களை ‘கிர்ர்ர்ர்ர்’ரடிக்க வைத்திருப்பதாகக் கேள்வி. அண்ணாச்சி வடகரை வேலன் அச்சில் கதை எழுதி, கவிதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். நர்சிம்.. சொல்லவே வேண்டாம். கதைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான செயல்கள் பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மகுடம் போல அண்ணே அப்துல்லா சொல்ல சொல்ல இனிக்கும் படத்தில் பாடல் பாடியுள்ளார். செல்வேந்திரன் விஜய் டி.வி-யின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக (பங்கேற்பாளராக அல்ல.. சிறப்பு விருந்தினராக!) பங்கேற்று விரைவில் அது ஒளிபரப்பப்பட உள்ளது!

சரி.. இந்த ரேஞ்சில் போனால் இவர்களைப் பற்றி – இன்னும் சிலரைப் பற்றியும் - என்னென்ன நியூஸெல்லாம் வரும்?

ஆனந்தவிகடனின் இன்பாக்ஸ் பாணியில் எழுதப்பட்ட (அத நாங்க சொல்லணும்டா!) ஒரு கற்பனை...
-----------------

னது ராவணன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அடுத்த படமான அசோகவனம் படத்தின் திரைக்கதையை எழுத நேரமில்லாததால் அதற்காக பலரையும் தேடி இறுதியில் யுவகிருஷ்ணா என்பவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளாராம். லக்கிலுக் என்ற பெயரில் பிரபலமான வலைப்பதிவரான இவர், கலைஞர் வரும் தேர்தலில் எம்.எல்.ஏவாக தன்னை நிறுத்தவிருப்பதால் எழுத்துப் பணியில் கவனம் செலுத்த முடியுமா என முதலில் தயங்கினாராம். பிறகு தன் தலைவனின் பாணியில் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டு எழுத்தையும் அரசியலையும் ஒருசேர கலக்கப்போவதாகக் கேள்வி!

.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படத்திற்கு இசையமைப்பது தெரிந்ததே. அதற்காக சிறப்பான ஒரு குரலுக்காக காத்திருந்த அவர் விமானப்பயணத்தின் போது தன்னுடன் பயணித்த மகேஷ் (இவர் துக்ளக் என்ற பெயரில் வலையில் எழுதிவருபவர்) ஐபாடில் ‘காதலொரு பள்ளிக்கூடம் நண்பா’ என்ற பாடலைக் கேட்டு அந்தப் பாடகர் அப்துல்லாவை தேர்வு செய்து தன்னோடு ஹாலிவுட் அழைத்துச் செல்ல உள்ளாராம். ‘தொடர்ந்து ஆஸ்காரை அள்ளும் இந்தப் பாடல்’ என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ங்கர் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கப்போவது ஆதிமூலகிருஷ்ணன் என்ற புதிய இயக்குனராம். ‘நடிப்புப் புயல் கார்க்கி’ ஹீரோவாக நடித்தால்தான் இயக்குவேன் என்று அவர் சொன்னதால் அதற்கும் ஷங்கர் ஒப்புக்கொண்டாராம். (இவர் உடனே ஓகே சொன்னதற்குக் காரணம் கார்க்கி நடித்த ‘நீ எங்கே’ என்ற காவியம் என்பது குறிப்பிடத்தக்கது) விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை பலகோடி ரூபாய்கள் செலவில் உருவாக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். ‘ஒரு டைரக்டரா, ஆதிமூலகிருஷ்ணன்-ங்கற பேர் ஓகேவா?’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆதி!

ப்போது பார்த்தாலும் ஜெனிவா, இந்தியா என்று சுற்றிக் கொண்டே இருப்பதால் தங்கள நாட்டு சுற்றுலாத்துறை சிறப்பு ஆலோசராக இருக்க முடியுமா என்று ‘துக்ளக்’ மகேஷைக் கேட்டுக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் அரசு. தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் அவர்.

விஜய் டி.வி-யில் நீயா நானா நடத்தும் கோபிநாத் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளதால் திறம்பட அதை நடத்த வேறு நபரை தேடிக்கொண்டிருந்ததாம் தயாரிப்புத் தரப்பு. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வேந்திரன் கோபிநாத் போலவே அழகாகவும், அவரைப்போலவே தங்குதடையில்லாமல் பேசுபவராகவும் இருப்பதால் அவரைத் தேர்வு செய்துவிட்டது. கோபிநாத்தின் ‘கோட்’ இவருக்கு ’சூட்’டாகும் பட்சத்தில் உறுதியாக இவர்தான் அடுத்த விஜய் டி வி ஸ்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லையாளப் படவுலகில் ஷகீலா நடிப்பதைக் குறைத்துக் கொண்டபிறகு அந்த மாதிரிப் படங்கள் சரிவர ஓடுவதில்லையாம். என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்டு அதிஷாவைத் தேடி மலையாளப் படவுலகமே திரண்டு வருகிறதாம். ‘என்னாங்கடா நெனைச்சுட்டீங்க என்னை?’ என்று கோபமாக அவர்கள் கண்ணில் படாமல் ஜோதி தியேட்டரில் போய் ஒளிந்து கொள்கிறாராம் இவர்!

மிழக அரசின் இயல்இசைநாடகத்துறைத் தலைவராக நர்சிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கம்பனைப் பற்றிய இவரது பதிவுகளை கலைஞரின் கவனத்துக் கொண்டு சென்ற சிலரால்தான் இந்த பதவி கிடைத்ததாக மகிழ்வுடன் சொல்கிறார் இவர்.

கொசுறுச் செய்தி 1: கேபிள் சங்கர் இயக்கப்போகும் படத்தில் நர்சிம்தான் நாயகன்! ஷங்கர் தயாரிப்பில் இயக்க கதை சொல்ல கேபிள் சங்கர் சென்ற போது ஆதிமூலகிருஷ்ணனின் கதை ஓகே ஆகிவிட்டதை அறிந்த கேபிள், தற்போது விகடன் டாக்கீஸின் தயாரிப்பில் இயக்கும் இந்தப் படம் ஆதியின் படம் ரிலீஸாகும் அதே தேதியில் ரிலீஸாகிறதாம்!

கொசுறுச் செய்தி 2: ஆதிமூலகிருஷ்ணன் படத்தின் பாடல்களை எழுதப்போவது வடகரைவேலன் என்றறிந்ததும் கேபிள்சங்கர் தரப்பு நவயுவக்கவிஞர் அனுஜன்யாவை வளைத்துப் போட்டு பாங்காக் பறந்து பாடல்வேலைகளை ஆரம்பித்துவிட்டதாம்!

டாஸ்மாக்கில் நடக்கும் அத்துமீறல்களையும் ஊழல்களையும் தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அரசு, இறுதியாக ரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த வால்பையன் என்பவரிடம் தமிழக டாஸ்மாக்குகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி அலசி ரிப்போர்ட் செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாம்!

தேபோல அரசு மருத்துவமனைகளின் சுகாதாரமற்ற தன்மை குறித்து அரசுக்கு பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து ப்ளீச்சிங் பவுடரை சிறப்புப் பார்வையாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. (ஒரே நேரத்தில் இருபக்கமும் ஆய்வு நடத்துவது எப்படி என்று வாப்ல்ளீபைச்யசிங்ன் குழம்பிப்போயுள்ளாராம்!)




.

47 comments:

கே.என்.சிவராமன் said...

நைஸ் :-)

இன்பாக்ஸ் மெய்ப்பட வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

எம்.எம்.அப்துல்லா said...

கண்ணில் நீர்வழிய சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்

:)))))))

குசும்பன் said...

//மலையாளப் படவுலகில் ஷகீலா நடிப்பதைக் குறைத்துக் கொண்டபிறகு அந்த மாதிரிப் படங்கள் சரிவர ஓடுவதில்லையாம். என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்டு அதிஷாவைத் தேடி மலையாளப் படவுலகமே திரண்டு வருகிறதாம். ‘என்னாங்கடா நெனைச்சுட்டீங்க என்னை?’ என்று கோபமாக அவர்கள் கண்ணில் படாமல் ஜோதி தியேட்டரில் போய் ஒளிந்து கொள்கிறாராம் இவர்!//

:)))))))))))))))))))

Ganesan said...

தமிழக முதல்வர் கலைஞர் தன் மகள், மகன், பேரன், ராசா , பாலு மற்றும் பல எம்.பிக்களூக்கு அமைச்சர் பதவி வாங்கி தருவதற்கு காங்கிரசுடன் போராட வேண்டி இருப்பதால் personal management ல் திறம் பெற்ற பதிவர் பரிசல் கிருஷ்ணாவிடம் அந்த பொறுப்பை கலைஞர் அவ்ர்கள் ஓப்படைக்க போவதாக வரும் செய்திகள் பதிவர்கள் மத்தியில் நெஞ்சில் பால் வார்பது போல் உள்ளது.

புருனோ Bruno said...

//என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்டு அதிஷாவைத் தேடி மலையாளப் படவுலகமே திரண்டு வருகிறதாம். //

ஹி ஹி ஹி

கார்க்கிபவா said...

படிக்க படிக்க இனிக்கிறது..

ஏன் வலையுலக ஜாம்பாவான் “அவர” பத்தி சொல்லாம விட்டீங்க :)))

அப்புறம், ஒரு விஷயம் இல்ல, ரெண்டு டவுட்.... இன்பாக்ஸில் இருக்கும் இளமை இதில் இருக்கிறதா? எல்லா மேட்டரில் கடைசியா ஒரு பன்ச் வருமே இன்பாக்சில்!!! அதை கவனிக்கலையா நீங்க?

பரிசல் ஸ்டைலிலே அருமையாக இருக்கு. இன்பாக்ஸை விட சுவாரஸ்யம்..

நாஞ்சில் நாதம் said...

நல்லாதானே போய்க்கிட்டு இருந்தது

ஏன் இந்த கொல வெறி

மட்டில்லா மகிழ்ச்சியுடன்
நாஞ்சில் நாதம்

Venkatesh Kumaravel said...

என்னா வில்லத்தனம்.... ஹிஹி..

Suresh Kumar said...

இன்பாக்ஸ் கலக்கல்

லக்கிலுக் said...

மரியாதை வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் நல்லக்கதை ஒன்றில் நடிக்க விஜயகாந்த் ஆர்வமாக இருக்கிறாராம். வலைப்பதிவு விக்கிரமன் என்று அறியப்படும் பரிசல்காரன் என்பவரிடம் வெயிட்டான செண்டிமெண்ட் கதைகள் இருப்பதை கேள்விப்பட்டு அவரை தொடர்பு கொண்டிருக்கிறாராம். பரிசல்காரனோ நேரமில்லை என்று கேப்டனின் அழைப்பை தட்டிக் கழிப்பதாக தகவல்.

☼ வெயிலான் said...

// பரிசல்காரனோ நேரமில்லை என்று கேப்டனின் அழைப்பை தட்டிக் கழிப்பதாக தகவல். //

:))))))

ஆதவா said...



எல்லாம் சொன்னீங்க.... நான் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதை மட்டும் விட்டு வெச்சுட்டீங்க???

வருத்தத்தில்
ஆதவா

நாடோடி இலக்கியன் said...

அருமை...!

Truth said...

Parisal,
You are back to form. Rasichu padichen :-)

Bleachingpowder said...

மற்ற எல்லாருக்கும் சம்பந்தமில்லாத துறையை ஒதுக்கி விட்டு, எங்களுக்கு மட்டும் சரியான துறையை ஒதுக்கி, எங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பரிசலுக்கு நன்றி.நன்றி.நன்றி.

அறிவிலி said...

//‘துக்ளக்’ மகேஷைக் கேட்டுக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் அரசு. தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் அவர்.//

ஆமா.. ஆமா.. சஹானாவோட தீவிர ஆலோசனை.

பரிசல்காரன் said...

@ பைத்தியக்காரன்

நன்றி அண்ணா.

@ அப்துல்லா

உங்க படத்தைப் பார்த்தாலே தெரியுது!

@ நன்றி குசும்பன்

@ காவேரி கணேஷ்

ஏன்ம்ப்பா? முடியல!

@ நன்றி ப்ரூனோ & கார்க்கி (மிஸ் பண்ணீட்டேன்ல!)

நன்றி ஜின், வெங்கிராஜா, சுரேஷ்குமார்

@ லக்கிலுக்

விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமார் என்றாலே கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு ஓடுபவன் நான். ஒருமுறை பேருந்தில் விக்கிரமன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஏறாமல் முக்கால் மணிநேரம் கழித்து அடுத்த பஸ்ஸில் ஏறினவன்.

ஆனாலும் எதற்காக விக்ரமன் என்று சொல்கிறீர்கள் என்ற உள்குத்து புரிகிறது. ரொம்பக் குசும்பய்யா உமக்கு!

@ வெயிலான்

தேங்க்ஸ்!

@ ஆதவா

அப்போ ‘அது’ உண்மையா? சொல்லவேல்ல?

@ நாடோடி இலக்கியன், ட்ரூத்

நன்றி

@ ப்ளீச்சிங் பவுடர்

//மற்ற எல்லாருக்கும் சம்பந்தமில்லாத துறையை ஒதுக்கி விட்டு, //

ஏம்ப்பா? இன்னைக்கு நானா?

பரிசல்காரன் said...

மிக்க நன்றி அறிவிலி!

அறிவிலி said...

அனிமேஷன் படங்களுக்கு வசனம் எழுத வால்ட் டிஸ்னி நிறுவனம் குசும்பனை அழைத்திருக்கிறதாமே?

Hari. R said...

எம்.எம்.அப்துல்லா said...

கண்ணில் நீர்வழிய சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்

Ha Ha Ha!!!!

தீப்பெட்டி said...

கலக்கல் பாஸ்..

பெரிய டுபாக்கூர் பாஸ் நீங்க...

கார்க்கி சொன்ன ஜாம்பவான விட்டுடீங்க..

வெண்பூ said...

சான்ஸே இல்லை பரிசல்.. கலக்கிட்டீங்க.. ரசிச்சி சிரிச்சேன்...

selventhiran said...

கோபிநாத்தின் ‘கோட்’ இவருக்கு ’சூட்’டாகும் பட்சத்தில் //

ஹா... ஹா... ஜூப்பரு...

மணிநரேன் said...

ரசித்தேன்..:)

அ.மு.செய்யது said...

பரிசல் டச்.......

கடைக்குட்டி said...

செமங்க!!!

நான் இவங்க யார்கிட்டயும் பேசுனது கெடயாது.. இருந்தாலும் தொடர்பு படுத்தி சிரிக்க முடியுது..

இதெல்லாம் உண்மையாகப்போவுது பாருங்க!!

பரிசல்காரன் said...

நன்றி Hari

நன்றி தீப்பெட்டி, வெண்பூ, செல்வேந்திரன, மணிநரேன், அ.மு.செய்யது & கடைக்குட்டி!

Anonymous said...

யோவ் பரிசல்,

என்ன சொல்லி உன்னைப் பாராட்டட்றது? ஏற்கனவே உன்னை அதிகம் புகழ்வதாக என் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இருந்தாலும் பரவாயில்லை.

கலக்கல்.

அத்திரி said...

//அதிஷாவைத் தேடி மலையாளப் படவுலகமே திரண்டு வருகிறதாம். ‘என்னாங்கடா நெனைச்சுட்டீங்க என்னை?’ என்று கோபமாக அவர்கள் கண்ணில் படாமல் ஜோதி தியேட்டரில் போய் ஒளிந்து கொள்கிறாராம் இவர்!//

)))))))))))))))

பரிசல்காரன் said...

@ வடகரைவேலன்

போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

@ அத்திரி

சிரிப்புக்கு நன்றிங்க!

Sanjai Gandhi said...

இன்பாக்சில் ஒன்னு மட்டும் சகிக்கலை மாம்ஸ்.. மற்ற எல்லாம் சூப்பரு.. ரொம்ப ரசிச்சேன்.. :))

//செல்வேந்திரன் கோபிநாத் போலவே அழகாகவும்//

எங்கள் ஆணழகன் செல்வாவை அசிங்கப் படுத்திய பெரிசு பரிசலின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேபிள் சங்கரின் 25வது படத்தில் நர்சிம் ஹீரோ என்று இருக்க வேண்டும். அப்போது ஆதி 15வது படத்தை எடுத்துக் கொண்டிருப்பார். :))

ஆதிக்கு அண்ணாச்சி, கேபிள் சங்கருக்கு அனுஜன்யா மாமாவா? என்னா வில்லத் தனம்? கேபிள் என்ன பின் நவீனத்துவ படமா எடுக்கப் போகிறார்?. இல்லை அந்தப் படத்தின் பாடல்களுக்கு கலைஞர் தெளிவுரை எழுதப் போகிறாரா? :(

Suresh said...

அழகாய் இருக்கு ;)

பரிசல்காரன் said...

@ சஞ்சய் மாப்பி

எது சகிக்கலைன்னு சொல்லாம விட்டதுக்கு உனக்கு கோடி கும்பிடு மாப்ள!

@ சுரேஷ்

நன்றி!

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு பிரதர்..:))

நர்சிம் said...

//ஒரு டைரக்டரா, ஆதிமூலகிருஷ்ணன்-ங்கற பேர் ஓகேவா?’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆதி!//

Class...கலக்கல்

Rangs said...

அருந்ததி ராய், கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா ஆகியோர் பெற்றுள்ள பெருமை வாய்ந்த புக்கர் விருது முதன் முறையாக தென் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவரும் கடந்த 20 ஆண்டுகளாக விகடனின் தீவிர வாசகரும் எழுத்தாளருமான கே.பி.கிருஷ்ணகுமார் என்ற பரிசல்காரன் மூலம் அந்த சிறப்பு வாய்ந்த விருது நம் வசமாகியிருக்கிறது..

இறுதிச்சுற்றில் கடும் போட்டி நிலவியிருக்கிறது..இறுதிச்சுற்றில் பரிசளுடன் மோதிய நபரின் பெயர்..ஜே.கே.ரவ்லிங்!!!!

பரிசல் இல்ல...லக்சோ லைனர்னு பேரை மாத்தலாமே!


ஜோக்ஸ் அபார்ட்..

ஸுபெர்ப் ப்ரோ!

- ரங்கராஜ்..

Mahesh said...

அவ்வ்வ்வ்... கம்பேனி சீக்ரெட்டெல்லாம் உடைச்சுப்புட்டீங்களே !!!

அப்துல்லா அண்ணனுக்கு ஆஸ்கார் கிடைச்சா ஃப்ரண்ட் சீட் உங்களுக்கு.. பேக் சீட்டு எனக்கு... ஓகேவா?

ஒரு சின்ன திருத்தம்: அது வெறும் சுற்றுலாத் துறை மட்டும் இல்ல... கூடுதலா அறிவியல் வளர்ச்சித் துறையும் !!

இஃகி !! இஃகி !!

Dr.Sintok said...

சினிமா இல்லாட்டி செத்துடுவின்களா...???

Dr.Sintok said...

சினிமா இல்லாட்டி செத்துடுவிங்களா...???

பரிசல்காரன் said...

நன்றி வினோத் கௌதம், நர்சிம், ரங்ஸ்!

@ மகேஷ்

அதுவேறயா?

@ Dr.Sintok

அதுக்கேன்ப்பா நீ இத்தனி தடவ திரும்பற-ன்னு வடிவேல் ரஜினியப் பார்த்து ஒரு டயலாக் கேப்பார் சந்திரமுகில! (இதுக்கும் சினிமாதானா!?!)

கோபிநாத் said...

சூப்பரு ;)

Saminathan said...

நல்ல ரசனை..
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ரிலாக்ஸ் பதிவு...

மங்களூர் சிவா said...

:)))))))))))

பட்டாம்பூச்சி said...

சூப்பரு :)))))))))))))))))))

Thamira said...

ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள் விளாசியிருக்கீங்க பரிசல்.. கெளப்பல்.!

அதிஷாவின் பால் ஸ்டேடியத்தை தாண்டி போயிருச்சு.!

வால்பையன் said...

ஒரே நேரத்தில எப்படிங்க ரெண்டு வேலை செய்யுறது!

நல்லதந்திய விட்டுடிங்களே எனக்கு மூணு வேலை செய்ய தெம்பிருக்குதுங்கோவ்

ஊர்சுற்றி said...

:))))