"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு..”
எந்த ஒரு தகப்பனுக்கும் இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவனை விட அதிர்ஷ்டக்காரன் யாருமிருக்கமுடியாது.
ஆண் குழந்தை பத்து வயதுவரை வீட்டுக்குக் கொண்டுவரும் பஞ்சாயத்துகள் எதையும் பெண்குழந்தைகள் கொண்டுவருவதில்லை. யார் வீட்டுக்கு உங்கள் பெண் குழந்தைகளை அனுப்பினாலும் “என்ன அமைதியா இருக்கா தெரியுமா உம் புள்ள. என் வீட்டுலயும் இருக்குதே ஒரு வாலு..” என்றுதான் கமெண்ட் வருகிறது.
பையனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன விளையாட்டுப் பொருள் வேண்டுமோ அதைக் கேட்டு வாங்குவதோ, போகும் சொந்தக்காரர் வீட்டில் அது இல்லாவிட்டால் “அது இல்லையா” என்று கேட்பதோ நடக்கிறது. அதுவே பெண் குழந்தைகளுக்கு ‘இதுதான் வேண்டும்’ என்று கேட்கும் மனோபாவம் இருப்பதில்லை. என்ன இருக்கிறதோ அதை வைத்து விளையாடுவதும், ஒன்றுமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவோ பழகிவிடுகிறார்கள்.
ஒரு பெண்குழந்தையை பலவித உடைகள் மாட்டி அழகு பார்ப்பதைப் போல, ஆண்குழந்தையை அழகு பார்ப்பதில்லை. ஆண் குழந்தைகள்... ‘அது ஒரு ஆண்குழந்தை’ என்ற ஊறிப்போன பொதுப்புத்தி சந்தோஷத்திலேயே மற்ற சந்தோஷங்கள் எதையும் அடையாமல் இருக்கிறது.
நீங்கள் எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பப்பா வருவீங்க” என்றும் மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை எதிர்கொண்டிருக்கலாம். பெண்கள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.
இங்கே திருப்பூரில் பணிபுரியும் பலரும் பெற்றோரை விட்டு பலமைல் தூரம் வந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகட்டும், பெண்களாகட்டும். ஆனால் பெண்கள் அவர்களின் பெற்றோரோடு உரிய கால இடைவெளியில் பேசிக்கொண்டும், சென்று பார்த்து நலம் விசாரித்துக்கொண்டும் இருப்பதைப் போல... ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!
திருமணமாய் தனிக்குடித்தனத்தில் இருக்கும் தம்பதிகளில் கணவன் தன் வீட்டிற்கு சென்று வருவதும், பெற்றோரைப் பார்த்து வருவதையும் விட மனைவிகள் தங்கள் பெற்றோரைத் தாங்குவது அதிகம்.
ஏதோ ஒரு பொது இடத்திலோ, திருமண மண்டபத்திலோ இருக்கிறீர்கள். உங்கள் வாரிசு ஏதோ ஒரு குறும்புத்தனம் செய்கிறது. மகன் என்றால் கூப்பிட்டு அதட்ட வேண்டியிருக்கும். மகள் என்றால் தூரத்திலிருந்து உங்கள் மிரட்டலான கண்பார்வையிலேயே அவள் சுதாரித்துக் கொள்வாள்.
உங்கள் விட்டிற்குள் நுழைந்தாலே உங்கள் குழந்தை மகனா, மகளா என்பதைச் சொல்லிவிட முடியும். மகள்கள் இருக்கும் வீடுகளின்முன் செருப்புகள் ஜோடியாகத்தான் இருக்கும். மகன்கள் இருக்கும் வீடுகளில் தாறுமாறாக அவை கழட்டிப் போடப்படும். (அப்படியும் நேராக இருந்தால் அம்மா எடுத்து வைத்திருக்கக் கூடும்!) மகள்கள் இருக்கும் வீடுகளில் கூடுமானவரை அவையவை அதனதன் இடத்தில் இருக்கும். மகன்கள் அடங்காமல் போட்டது போட்டபடி வைத்திருப்பார்கள்.
விவரம் தெரிந்தபிறகு மகள்கள் கூடுமானவரை அப்பா அம்மா சாப்பிட்டாச்சா என்று பார்த்தபிறகுதான் சாப்பிடுகிறார்கள். மகன்களை அந்தக் கவலையெல்லாம் ஆட்கொள்வதில்லை.
உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.
ஒருநிமிடத்திற்கு ஷாரூக்கானின் சம்பளத்தைவிட, ரஜினிகாந்தின் சம்பளத்தை விட, அமிதாப்பின் சம்பளத்தை விட, முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட... ஒரு பெண்ணான இந்திரா நூயி-யின் சம்பளம் அதிகம். பெண்கள் எந்த உயரத்தையும் தொட வல்லவர்கள்.
பெண்மையைக் கொண்டாடுவோம்!
****
முக்கியக்குறிப்பு: இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது. இதில் இருக்கும் கருத்துகள் யாவும் அலுவலக நண்பர்கள், தோழிகளோடு கலந்துரையாடி (வேலையே செய்யமாட்டியாடா நீ?) எழுதியவையே.
ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகப் பட்டால்....
விட்டுத்தள்ளுங்க பாஸு!
.
93 comments:
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)
லக்கிலுக்கிற்கு வாழ்த்துகள்!! (ஆமா! அவருக்குக் கல்யாணமாயிடுச்சா? பார்த்தா தெரியலையே? :-)
இவை எல்லாவற்றையும் அனுபவிக்க, ரசிக்க எத்தனை ஆண்கள் விரும்புகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால் ஒரு ஆண்பிள்ளைக்கு ஆசைபட்டு 5 பெண்பிள்ளைகளை பெற்ற தகப்பன்மார்களும் நம்முடன் வாழ்கிறார்கள்.
//ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!//
இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் எல்லோரும் அப்படி அல்ல. என்போல் எத்தனையோ பேர் இருக்கலாம்.
பெண்ணின் பெருமைகளை இவ்வாறு எடுத்துக்கூறக்கூட ஒரு ஆண்மகன் தேவைப்படுகிறான்.நன்றி.
பெண் குழந்தை பெத்த அப்பனுங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க.
வாழ்த்துகள் லக்கி.
லக்கிக்கு வாழ்த்துக்கள்...
பதிவு அருமை..
லக்கிலுக்குக்கு எனது வாழ்த்துக்கள்.
அருமையான...ஒரு யதார்த்த பதிவு . அதுதான் பரிசல்...
@ ஆசிப் மீரான்
அண்ணாச்சி.. ஆரம்பமே பொளேர்ன்னு அடி குடுத்துட்டீங்களே??
@ பாலாஜி
எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் உண்டு.
@ நன்றி கேவிஆர் ராஜா (நேத்து லக்கி பதிவுல HTML கோட் குடுத்ததுக்கும் சேஎர்த்து!)
நன்றி கடைக்குட்டி
நன்றி டி வி ஆர் ஐயா!!
லக்கிக்கு வாழ்த்துகள் ...
எனக்கும் 3 மாத பெண் குழந்தை இருக்கிறது ... மிக நல்ல விஷியம் நண்பா
ரொம்ப சந்தோசமா இருக்கு.
//அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவனை விட அதிர்ஷ்டக்காரன் யாருமிருக்கமுடியாது.
//
நானெல்லாம் ரெட்டை அதிர்ஷ்டக்காரன்ப்பூ. எனக்கு ரெண்டும் பொண்ணு :)
//ஆமா! அவருக்குக் கல்யாணமாயிடுச்சா? பார்த்தா தெரியலையே? :-)//
குழந்தை பிறந்தா :-) கல்யாணம் ஆகிடுச்சுனு தான் அர்த்தம் ஆனா பாத்தா தெரியவில்லை ...
உங்கள் கருத்துடன் நான், ஒத்துப் போவதற்கில்லை. என் அண்ணனுக்கு இரண்டு மகன்கள்.மூத்தவன் நீங்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணங்களுடன் . இளையவன் நேர் எதிர், வால்தனங்களுடன் சில ஒழுங்குகளுடனும். என் மகன் இதுவரை அதிக வால்தனங்களில்லை(11 மாதங்கள்).
அப்பா ஆனதற்கு லக்கிலுக்குக்கு வாழ்த்துகள்!
எங்கள மாதிரி ஆம்புள புள்ளைங்க வச்சுருக்கவங்க என்ன பாடு பாடுவாங்கன்னு வெளக்கமா சொல்லி வயித்துல புளிய கரைக்கிறியலே!
//ஆசிப் மீரான் said...
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)
//
ம்.
வாழ்த்துக்கள் லக்கி.
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)
நானும்...
//ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது//
வி.ஐ.பிங்களுக்கு எல்லாம் எப்பொழுதும் பெண் குழந்தை தான் பிறக்குமா? :)
உங்க பதிவை அரசுக்கு அனுப்புங்கள். பெண் குழந்தையின் விகிதம் உயர்த்த பிரச்சார வாசகமாக பயன்படட்டும்.
/நானெல்லாம் ரெட்டை அதிர்ஷ்டக்காரன்ப்பூ. எனக்கு ரெண்டும் //
அப்போ நானெல்லாம் அதிர்ஷடக்காரன் இல்லையா?????????
அட ஆமா இல்லை.....சரி தான்...
லக்கிக்கு வாழ்த்துக்கள்.
என்னைய மாதிரி ரெண்டு பசங்க வச்சுருக்கவங்கதான் பாவம்.
ஒரு பிள்ளை பெத்தா உரியில சோறு
நாலு பிள்ளை பெத்தா நாய்சட்டியில சோறு ன்னு பழமொழியே இருக்கு.
அருமையான பதிவு பரிசல்.
பெண்குழந்தைகள் இருந்தாத்தான் வீடே மங்கலமா இருக்கு. ஆனா அவங்க நம்மள விட்டு வேற வீட்டுக்குப் போகும்போது மனசு படும் வேதனை ஆற்ற மாட்டாதது.
லலிதா ஜெவெல்லார்ஸ் விளம்பரத்திலியே எனக்குப் பிடித்தது ஒன்று உண்டு.
”என்னருமை மகளே என் பெருமைக்குரியவளே” ஞாபகமிருக்கா.
//அப்போ நானெல்லாம் அதிர்ஷடக்காரன் இல்லையா????????? //
கல்யாணம் ஆகாதவன் பேரதிர்ஷ்டக்காரன் :))
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)
என்னைய மாதிரி ரெண்டு பசங்க வச்சுருக்கவங்கதான் பாவம்.
லக்கிலுக்கிற்கு வாழ்த்துகள்!!
லக்கிக்கு வாழ்த்துகள்.
லக்கிக்கு: வாழ்த்துகள்
எனக்கு : ஹ்ம்ம்ம்.......
லக்கி நிஜமாவே "லக்கி" !!
என் வீட்டுலயும் ஒரு (ஒரே ஒரு) தேவதை உண்டே !!!!
நன்றி சுரேஷ். உங்களுக்கும் வாழ்த்துகள்!
@ எம்.எம்.அப்துல்லா
//நானெல்லாம் ரெட்டை அதிர்ஷ்டக்காரன்ப்பூ. எனக்கு ரெண்டும் பொண்ணு :)//
என்ன அப்துல்லா இது? ஸ்பெல்லிங் மிஸ்டேக்! னெ அல்ல மெ.
நான் குறிப்பிட்ட எல்லாருமே இரட்டை அதிர்ஷ்டக்காரர்கள்தான்!!!
@ இரா.சிவக்குமரன்
//மூத்தவன் நீங்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணங்களுடன் . //
ஒத்துப்போனதற்கு நன்றி!
@ ஜோதிபாரதி
எங்க அப்பாம்மாக்கும் வூட்ல ரெண்டு பசங்கதான். சமர்த்துப்பசங்க!
@ நன்றி நர்சிம். உங்க ம் முக்கு பின்னால் உள்ள விஷயம் புரியுது!!!
@ சென்ஷி, ஸ்வாமிஜி, கார்க்கி & நிலாவும் அம்மாவும்
நன்றி
@ முரளிகண்ணன்
அப்படியெல்லாம் இலைங்கோஓஓ
@ வடகரைவேலன்
அன்புள்ள அப்பா படப்பாட்டு ஞாபகம் வருது அண்ணாச்சி!
@ இளைய பல்லவன்
நன்றி!
நன்றி
வித்யா
அறிவிலி
மகேஷ் (சொல்லும்போதே தெரியுது சந்தோஷம்!!)
மைத்துனர் கார்க்கி சொல்ற மாதிரி... பெரியவங்க எல்லாம் ஏதோ பேசிகிட்டு இருக்கீங்க... ஹிஹி...
//”என்னருமை மகளே என் பெருமைக்குரியவளே” ஞாபகமிருக்கா.//
ஆமா.. ஆமா.. அண்ணாச்சி.. நினைவூட்டியதற்கு நன்றி!
நான் படித்த நல்ல பதிவுகளில் நிச்சயம் இதுவும் ஒன்று. ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக இருப்பதில் உள்ள சந்தோஷங்களை மிக சரியாக விளக்கி உள்ளீர்கள்.
நீங்கள் சொல்வதுபோல் நானும் என் நண்பர்களிடம் அடிக்கடி என் மகளை பற்றி (இரண்டரை வயது) சொல்வதுண்டு, அவர்களும் பொறுமையாக கேட்பார்கள் ஆனால் பதில் சொல்ல மாட்டார்கள் (அவர்களுக்கு ஆண் குழந்தைகள்). நான் சொல்லி முடித்தபிறகு யோசிப்பேன், நாம் அதிகமாக சொல்லிவிட்டோமோ என்று. ஆனால் உங்கள் பதிவை படித்த பிறகு எனக்கு நான் சொன்னது எதுவும் அதிகமில்லை என்று தோன்றுகின்றது.
மீண்டும் ஒரு முறை நன்றி நல்ல பதிவிருக்கு.
நன்றி வெங்கிராஜா
மிகவும் நன்றி வாசு!
///@ வடகரைவேலன்
அன்புள்ள அப்பா படப்பாட்டு ஞாபகம் வருது அண்ணாச்சி!///
உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?
லக்கிக்கு வாழ்த்துகள்!!எனக்கும் ஒரு குட்டி தேவதை தன்.இந்த பதிவு படிக்கும் போது இன்னும் இன்னும் என் மகளின் மீது பாசம் அதிகமாகிறது.என்ன அழகா சொல்லிருக்கிங்க..
தமிழ் ததும்பித் தளும்புகிறது
பரிசலுக்குள்ளிருந்து...
ஆற்றில் நானும்
குதிக்கிறேன்..
முதுகு எண் 331.
.....................kartin
(பெண் பெற்றோர்க்கு என் பொன்!! )
:)
லக்கிக்கு வாழ்த்துகள்...
உங்களுக்கு நன்றிகள் இந்த விசயத்தை சொன்னதற்கு..
லக்கிக்கு வாழ்த்துகள்..
பதிவு பத்தி... யோவ், போங்கய்யா, உங்க கூடவெல்லாம் டூ.. ரெண்டு வருசம் கழிச்சி இந்த மேட்டரை எதுனா மீள்பதிவு போடுவீர்ல அப்ப பேசிக்கிறேன்.. :)))
அப்பாவாகிய லக்கிக்கு வாழ்த்துக்கள்
லக்கி லுக் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..
பெண் குழந்தைகள் குறித்து நீங்கள் சொன்னது அனைத்தும் சரி..
யோவ் இன்னா ஆட்டம் போடுறீங்களா.. அதுவும் கூட்டம் சேத்துக்கினு.. பின்பாட்டுபாட வேலன், அப்துல், மகேஷ் வேறயா.. எனக்கு இப்பதாம் கலியாணம் ஆயி நாலு மாசம் ஆயிருக்குது. இன்னும் ஆறு மாசம் கழிச்சி வெச்சுக்கிடுதேன்..
லக்கிக்கு வாழ்த்துகள்.!
//
ஆதிமூலகிருஷ்ணன் said...
எனக்கு இப்பதாம் கலியாணம் ஆயி நாலு மாசம் ஆயிருக்குது.
//
உம்மையும் நம்பி உம்ம தங்கமணி மெட்ராஸ்ல தனியா விட்டுட்டு ஊருக்கு போறாங்களேன்னு ஆச்சர்யமா இருக்கு ஆதி... அவங்க பதிவு படிக்கறதில்லன்ற தைரியத்துல எல்லா உண்மையையும் உளறாதீங்க..
லக்கிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததை தவிர, சொல்லபட்டவை கிட்ட தட்ட எல்லாமே கற்பனை குப்பைகள்.
இரண்டு பெண் குழந்தைகள் பெற்றதில்
மிக்க மகிழ்ச்சியுடையோர் பட்டியலில்
எனக்கு முதலிடம் ரிசர்வ் பண்ணிடுங்க
//ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகப் பட்டால்...//
பட்டால் இல்லை படுத்து.
//விட்டுத்தள்ளுங்க பாஸு!//
விட்டுட்டேன்
35 வருடங்களுக்கு முன்னெல்லாம் பெண் பிறந்தால் வசவுதான்.
பிறகு அப்பாமகளாக ஆனது உண்டு என்றாலும்...
பாதிக்கப்பட்டவளாக சொல்கிறேன்.
பெண்ணைப்போற்றும் இந்தப் பதிவுக்கு நன்றி பரிசல்.
இங்கேயும் லக்கி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது என்னைப் பார்த்து பெருமைபடுகிறார் அப்பா. (நான் எம்டன் மகளாச்சே :)) ))
49
மீ த 50. :))
//ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது.//
என் பெயர் தெரியாமல் விடப்பட்டிருக்கும் என நம்புகிறேன்! எனக்கும் ஒரே ஒரு பெண் குழந்தை தான்!
தோழர் லக்கிலுக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு .
//உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.//
முற்றிலும் உண்மை...
என் வாழ்க்கைக்கு இறைவன் தந்த பரிசு என் மகளே !
// முக்கியக்குறிப்பு: இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது. இதில் இருக்கும் கருத்துகள் யாவும் அலுவலக நண்பர்கள், தோழிகளோடு கலந்துரையாடி (வேலையே செய்யமாட்டியாடா நீ?) எழுதியவையே.//
ஈரவெங்காயமும் - லிஸ்டுல சேர்த்துங்கண்ணே...
ரஜினிகாந்த் மாமா, கமலஹாசன் மாமா, வடகரை வேலன்மாமா, பரிசல்காரன் மாமா, எம்.எம்.அப்துல்லா மாமா, யுவகிருஷ்ணா மாமா அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
:)))))))
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
//”என்னருமை மகளே என் பெருமைக்குரியவளே” ஞாபகமிருக்கா.//
அண்ணாச்சி,
”உங்க குலதெய்வம் எது : : என்னோட குல தெய்வம் பாவாடை தாவணி போட்டுட்டு காலேஜ் போகுது’’ - இது சாலமன் பாப்பையா சொல்லக் கேட்ட ஞாபகம்...
சத்தியமான உண்மை தானே..??
@ Mrs. MenagaSathia
மிக மிக நன்றி
@ Kartin
:-) ரசித்தேன்!
@ புரூனோ & தீப்பெட்டி
நன்றி!
@ வெண்பூ
//ெண்டு வருசம் கழிச்சி இந்த மேட்டரை எதுனா மீள்பதிவு போடுவீர்ல அப்ப பேசிக்கிறேன்//
வாவ்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!
@ சுரேஷ் குமார், லோகு,
நன்றி!
@ ஆதி
ஐ! கங்கிராட்ஸ்!
@ களப்பிரர்
//சொல்லபட்டவை கிட்ட தட்ட எல்லாமே கற்பனை குப்பைகள்.//
உங்களப்பாத்தா எனக்கு பாவமா இருக்கு! உங்க பின்னூட்டத்தப் பாத்தா சிரிப்பா வருது!
@ அறிவே தெய்வம்
ஐ! அப்டியா!
@ சின்னக்கவுண்டர்
சரிங்க நாட்டாமை!
@ ஃபிஃப்டி அடிச்சதுக்கு நன்றி புதுகைத்தென்றல்!
@ வால்பையன்
நாஞ்சொன்னதெல்லாமே ரெண்டும் பொண்ணுக!
@ நன்றி மலர்
@ ஈரவெங்காயம்
சரியாச் சொன்னீங்க!
/
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)
/
நானும்
லக்கிலுக்கிற்கு வாழ்த்துகள்!!
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்,
வாழ்த்துகள் லக்கி
லக்கியின் தேவதைக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் லக்கி.
லக்கிக்கு வாழ்த்துக்கள்...
//.. ஆசிப் மீரான்..
ஒரு ஆணாதிக்கவாதியாக இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன் :-)..//
யானும் அவ்வண்ணமே..
நவம்பர் 2 வரைக்கும் நானும் ஆணாதிக்கவாதியா தான் இருந்தேன்... அன்னைக்கு ராத்திரி பர்மிதாவைப் பார்த்ததும் மாறிட்டேன்...
ஆனா நான் எப்பவும் நம்பற ஒரு விஷயம், பெண் குழந்தை இருக்குற வீட்ல தான் காசு தங்கும். மகாலஷ்மி வாசம் செய்யும் :)
பதிவு ரொம்ப ரொம்ப அருமை :)
Congrats to Luckylook...
While i can understand the background of the article ( nalla manasudan thaan ezhuthi irukkireerkal ) .... a generic thought is ... in order to appreciate something, we dont have to deprecate/defame others. (Piravatrai thaazthi, ondrai uyarvikka vendiya avasiyamillai)
Nandri
Unmai Sudum
எது எப்படியோ!! தல லக்கிக்கு வாழ்த்துக்கள் ;))
//ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது.//
எங்கள் (அண்ணன், நான் மற்றும் தம்பி) குழுவில் உங்கள் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம்.
:-)
உங்கள் பதிவு அருமை.
//பெண்குழந்தைகள் இருந்தாத்தான் வீடே மங்கலமா இருக்கு. ஆனா அவங்க நம்மள விட்டு வேற வீட்டுக்குப் போகும்போது மனசு படும் வேதனை ஆற்ற மாட்டாதது.//
உண்மை தான்.ஆனால் பெண் குழந்தைகளுக்கு கடைசி வரை பெற்றோரிடம் அக்கறை இருக்கும் என்பதில் சின்ன மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சி ஆண்களைப் பெற்றவர்களுக்கு இருப்பது சந்தேகமே!
(இப்போதெல்லாம் ஆண்களும் வீட்டோடு இருப்பதில்லை)
அப்ப என் அண்ணனும் அதிர்ஷிடகாரன் தான்ன்னு சொல்லுங்க
congrats lucky
பரிசல்,
இதுதான் உங்களுக்கான எனது முதல் பின்னூட்டம்.
கிருஷ்ணாவிற்கு உங்களின் வாழ்த்து அருமை, புதுமை.
நானும் எனது வாழ்த்தினை ஒரு பதிவாய் செய்திருக்கிறேன்... நேரமிருப்பின் படியுங்கள்.
http://abiprabhu.blogspot.com/
பிரபாகர்.
வாழ்த்துகளால் நிரம்பி நெகிழ்ச்சியில் வழிகிறது மனசு. நன்றி தோழர்களே!
வாழ்த்துக்கள் லக்கி !
பெண் குழந்தை பெத்த அப்பனுங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க.
வாழ்த்துகள் லக்கி.
பெண் குழந்தைகள் பெற்றவர்கள் உண்மையில் பேறு பெற்றோர்.
வாழ்த்துக்கள் லக்கி.
I strongly differ.
Varanam ayiram was more emotional than Abhiyum naanum!!!
எனக்கு நிஜமாவே இந்த பதிவு சுத்தமா பிடிக்கலை பரிசல்.வரிக்கு வரி பதில் சொல்லனும்னு இருக்கு. குழந்தைகளில் ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது. ஏதோ பொண்ண பெத்தவங்க மட்டும் ரொம்ப கொடுத்து வச்சவங்க மாதிரியும், பையனை பெத்தவங்க எல்லாம் பாவம் செஞ்சவங்க மாதிரி இருக்கு இந்த பதிவு. அவரையும் சேர்த்து தான் செல்றேன். பையன் தவழுல வரைக்கும் தான் குழந்தை அப்புறம் குரங்குகாயிடுவாங்களாம். தயவு செய்து இப்படியெல்லாம் எழுதாதீங்க. அவருக்கு பையன் பிறந்திருந்தால் இப்படி எழுதியிருப்பீங்களா, மாட்டீங்க தானே?, ஏன்? ஏன்னா அவர் மனசு சங்கட படும். அப்பொ மத்தவங்க மனசு சங்கடப்பட்டா பரவாயில்லையா?
குறிப்பு: எனக்கும் பெண் குழந்தை தான் :)
//
அது ஒரு ஆண்குழந்தை’ என்ற ஊறிப்போன பொதுப்புத்தி சந்தோஷத்திலேயே மற்ற சந்தோஷங்கள் எதையும் அடையாமல் இருக்கிறது.
//
இதே மாதிரி எனக்கு நான்/தங்கை இருவரின் வளர்ந்த விதத்தில் சில சமயம் தோன்றும்
//
பெண்குழந்தைகள் தேவதைகள்.
//
அதுக்குனு ஆம்பிளைபுள்ளைங்க ஒன்னும் அரகர்கள் இல்லை.
எனக்கும் பெண் குழந்தைகள் பிடிக்கும் இருந்தாலும் ஆண் பிள்ளைகள் மட்டம் இல்லை. பெண் பிள்ளைகள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருப்பதால் நல்ல பேரு எடுத்துவிடுகின்றன
//@வால்பையன் said...
என் பெயர் தெரியாமல் விடப்பட்டிருக்கும் என நம்புகிறேன்! எனக்கும் ஒரே ஒரு பெண் குழந்தை தான்!//
என் பெயர் தெரிந்தே விடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனக்கும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணா ஒரு பொண்ணுதானுங்கோவ்.
லக்கிக்கு வாழ்த்துக்கள்
ஆனால் பெண்கள் அவர்களின் பெற்றோரோடு உரிய கால இடைவெளியில் பேசிக்கொண்டும், சென்று பார்த்து நலம் விசாரித்துக்கொண்டும் இருப்பதைப் போல... ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!//
உண்மையான வார்த்தை!!!
தோழர் லக்கிலுக்குக்கு வாழ்த்துக்கள்.
ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது.
இந்த வரிசையில் நம்மளையும் சேத்துக்கங்க.
பெண் குழந்தையை கொண்டாடும் பாங்கு மிகுந்த போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள்
ஆனா அதுக்குக்காக ஆண் பிள்ளைகளை இப்படி போட்டு தாக்கியிருக்க வேணாம். அவர்கள் பெற்றோருக்காக படைக்கும் உலகத்திலும் பற்பல அற்புதங்கள் இருக்கின்றன
:)
இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது.
அண்ணே, என்னையும் இந்த லிஸ்ட்'ல சேர்த்துக்குங்க.
உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.
நன்றி..!
லக்கிக்கு வாழ்த்துக்கள்...
புத்திசாலிகளுக்கு பெண் குழந்தைங்கதான் பிறக்கும்'னு
ஒரு புத்திசாலி என்கிட்ட 1998 லயே சொல்லியிருக்காரு.
நிஜமாவே அது உண்மைதான் அப்படிங்கறதை.......
உங்களுக்கு ரெண்டும் பெண் குழந்தைங்களா போச்சி அதான் சப்பைக் கட்டு கட்டுறீங்க போல!.எல்லாக் குழந்தைகளும் best தான்.
indha padhivu padithapin naanum peNNaga pirandhadharku perumai padukiren............ivvalavu vardam kazhithu.....en vayadhu 52
என்னால், உங்கள் கருத்தை ஒத்துக்கொள்ள முடியவில்லை பரிசல். பெண் குழந்தை தேவதை என்றால் ஆண்குழந்தை அந்த வீட்டின் இளவரசன். அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். எனக்கு தேவதையும் உண்டு, இளவரசனும் உண்டு.
ஒரு தலை பட்சமா இருந்தா விட்டு தள்ள சொன்னதால விட்டு தள்ளிட்டேன் பாஸ்.
அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க
கட்டபொம்மன் kattapomman@gmail.com
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
வாழ்த்துக்கள் லக்கி..
நானும் தான் லிஸ்டில், ரெண்டு அழகான அன்பான ராட்சசிகள் ....
//உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.//
ஹையா...அப்படீன்னு எங்க வீட்டுல ரெண்டு தேவதைகள்....ஹல்ல்ல்ல்ல்லோ என்னையும் சேர்த்துதான் :)
Post a Comment