Saturday, June 20, 2009

முத்திரை - விமர்சன்ம்



படம் ஆரம்பிக்கும் காட்சியில் நிதின்சத்யாவை அவரது அம்மா துரத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊரார் எல்லாம் கம்பும், கடப்பாரையும் வைத்துக் கொண்டு அவரைத் துரத்துகிறார்கள்.

அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று.. எங்கே புரிந்தது மரமண்டைக்கு!

ஊர்க்காரர்களால் துரத்தப்பட்ட நிதின்சத்யா, சென்னையில் (சென்னைதானேப்பா? ஒரு மண்ணும் ஞாபகமில்ல) டேனியல் பாலாஜியைச் சந்திக்கிறார். நிதின் சத்யாவைப் போலவே டேனியல் பாலாஜியும் ஒரு பொறம்போக்கு என்பதால் இருவரும் ஃப்ரெண்டாகி விடுகிறார்கள். டேனியல் பாலாஜி லக்‌ஷ்மி ராயைக் காதலிக்கிறார். அவருக்கு உதவ டேனியலின் அறைக்கு லக்‌ஷ்மி ராயை அழைக்க, அங்கே எதிர் அறையில் இருக்கும் சேத்தனைத் தேடி கமிஷனர் கிஷோர் வர.. தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்றெண்ணி நிதின், டேனியல் மற்றும் அவர்களது இரு காதலிகளும் ஓட.. சேத்தன் தனது லேப்டாப்பை இவர்கள் காரில் போட்டுவிட்டு ஏற முயலும்போது போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார்.

அந்த லேப்டாப்பில் பொன்வண்ணன், தனது அண்ணன் சரவணனைக் கொன்றது பதிவாகி இருக்கிறது. முதலமைச்சராக ஆகப்போகும் முயற்சியில் இருக்கும் பொன்வண்ணனும்..

போங்கப்பா சொல்ற எனக்கே இவ்ளோ போரடிக்குது. படிக்கற உங்களுக்கு என்ன கொடுமையா இருக்கும்னு தெரியுது!

பாலிவுட் ஸ்டைலில் படமெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். குழப்பமான திரைக்கதையால் கோட்டை விட்டுவிட்டார்கள்.

அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ஆனந்த், பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, நிதின் மாறி மாறிப் பேசும்போது திரையக் கிழித்து விடலாமா என்று தோன்றுகிறது!


லக்‌ஷ்மிராயை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் T 20 ல் இந்தியா செமி ஃபைனலுக்குப் போகாமல் திரும்பியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. சரியான ஸ்ட்ரக்சர் என்பதை மறுப்பதற்கில்லை.

டேனியல் பாலாஜி தனது மாடுலேஷனையும், பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரே ரிப்பீட்டடாக இருக்கிறது.

நிதின் சத்யா மட்டும் ஆறுதலளிக்கிறார். சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது ‘குச்சி ஐஸா.. கோன் ஐஸா’ என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது.


யுவனின் மகுடத்தில் இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். இதுவரைக்கும் பாடல் காட்சிகளில் கொத்துக் கொத்தாக இப்படி ஆட்கள் எழுந்து போவதைப் பார்த்ததே இல்லை. மூன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!


மொத்தத்தில் முத்திரை - ஆள வுடு சாமி!

33 comments:

சென்ஷி said...

:))

சென்ஷி said...

என்னக்கொடுமை சார் இது..

பரிசல் பதிவு போட்டு பத்து நிமிசம் ஆச்சு. இதுவரைக்கும் அடுத்த கமெண்ட் வரவே இல்லை!

தராசு said...

உள்ளேன் அய்யா

நர்சிம் said...

நல்ல அலர்ட்.. போஸ்டர் பார்க்கும் போதே நினைச்சேன்.

அன்பேசிவம் said...

நீங்க ஸ்ரீ சக்தியில பார்த்திருந்தா "அது நான்தான்" Same Blood

Anonymous said...

ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!
:))))))

அன்பேசிவம் said...

அந்த "ஜானே தூ " பொண்ணு மஞ்சரி பத்தி ஒண்ணுமே சொல்லல ஹி ஹி ஹி :-)

RaGhaV said...

உங்கள நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்.. :-(

பரிசல்காரன் said...

நன்றி சென்ஷி, தராசு, நர்சிம்

@ முரளிகுமார் பத்மநாபன்

அங்கயே தான்! நீங்களுமா? நானும் என் ஃப்ரெண்டும் கன்னா பின்னான்னு கைதட்டிகிட்டே இருந்தோம்!

மஞ்சரி அவ்ளவா கவரல முரளி, அவங்க் பேரு என்னவோ கன்னாபின்னான்னு இருந்ததே?

@ விஜய் , ராகவேந்திரன்

நன்றி/.

கார்க்கிபவா said...

padathoda usp paththi sollave illa..

தீப்பெட்டி said...

//அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க”//

:)))

மேவி... said...

ungalai partha pavama irukku

மேவி... said...

"கார்க்கி said...
padathoda usp paththi sollave illa.."

appadi ellam onnum illainga

உண்மைத்தமிழன் said...

உங்களுக்குத்தான் எவ்ளோ பரந்த மனசு..?

இன்னிக்கு சாயந்தரம் போலாம்னு இருந்தேன்.

காப்பாத்திட்டீங்க தெய்வமே..!

நன்றி..!

மங்களூர் சிவா said...

/
ன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!
/

ஹா ஹா
:)))))))))

Beski said...

ரொம்ப டேங்ஸ்.
காப்பாத்திட்டீங்க.

---

அப்புறம் பதிவு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி...
தாங்கள் போடும் கமண்ட் மட்டும் வேறு கலரில் இருக்கிறதே... இது டெம்ப்லேட்டிலேயே உள்ள வசதியா? இல்லை நீங்களே செய்த மாற்றமா?

Kumky said...

அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று..
அது.

Kumky said...

அது சரி...சர்வம் பாத்தீங்களா..இல்லையா?

வெண்பூ said...

ஆஹா.. ஏன் தல ஒரு ரெண்டு நாள் பொறுத்திருந்தா நம்ம அண்ணன் கேபிள் சங்கர் விமர்சனம் போட்டுடுவாரே? அதுக்கப்புறம் போயிருக்கலாம்ல :))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஸ்ரக்ட்சர் நல்லா இருந்ததால தான் நம்ம ஆளு(ங்க) விழுந்து ஸ்டெர்ச்சர்ல போற அளவுக்கு ஆக்கீட்டாங்க..

Unknown said...

கிருஷ்ணா சார்.... படம் குப்பைனாலும் பாட்டு எல்லாம் நெம்ப சூபரா இருக்கு.... வேணுமின்னா... பாட்டு சீனுக்கு மட்டும் உள்ள வந்து பாத்திட்டு , கத வந்தனையும் வெளியில போய் தம் கட்ட வேண்டியதுதான்........!!!!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

////சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது ‘குச்சி ஐஸா.. கோன் ஐஸா’ என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது./////

பார்க்கலாம்னு ஐடியா இரிந்திச்சு....இப்போ வேணாம்னு சொல்லுது அக மனது...

நம்ம ஊருக்கும் அப்படியே வர்றது....

selventhiran said...

சரியான ஸ்ட்ரக்சர் // உம்ம ரசனையில மண்ணள்ளிப் போட!

கயல்விழி நடனம் said...

Escape....

Thamira said...

இதும் போச்சா.?

பட்டாம்பூச்சி said...

நல்ல வேளை...நான் பிழைத்துக்கொண்டேன்.
என் நன்றியை உங்களிடம் அனுப்பி வைத்தேன் :)))

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

AvizhdamDesigns said...

என்னது..
திருட்டு CD' லயும்
பார்க்க வேண்டாமா..?!..

கிர்பால் said...

பசங்க மாதிரி சிறந்த படங்கள் இருக்க. இந்த மொக்க படத்துக்கு விமர்சனம் அவசியம் தானா???

ஒரு பரிந்துரை:-
இந்த மாதிரி படங்களை எல்லாம் "எச்சரிக்கை - மொக்கைகள் ஜாக்கிரதை" என்று தலைப்பிட்டு பட்டியலிடலாமே (பட்டியல் மட்டும்).