முத்திரை படத்தின் ஐஸ் ஜோக்கைப் போலவே கடந்த வாரம் ஒன்று நடந்தது. என் மகள்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது அன்றைய நாளிதழ் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. என்னைப் பார்த்தாலே நான் வாங்கும் நாளிதழ்களை கடைகாரர் கொடுத்தனுப்புவார் என்பதால், வழக்கமான கடையில் நிறுத்தி, பைக்கில் அமர்ந்தவாறே மேகாவை மட்டும் இறங்கச் சொல்லி 'போய் பேப்பர் வாங்கீட்டு வா’ என்றேன். மேகா இறங்கியவாறே கேட்டாள்:
“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”
***********************
இரண்டு தினங்களுக்கு முன் ஸஸி என்றொரு நட்பைப் பற்றிய பதிவு எழுதியிருந்தேனல்லவா? அதைப் படித்த என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் முருகேசன் என்பவர் ஒரு ஆச்சர்யமான விஷயம் சொன்னார். அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்றைக்கும் வருடத்துக்கு மூன்று நான்கு முறை சந்தித்துக் கொள்வதுண்டு” என்றார்.
சபாஷ்!
******************************
ஆதிமூலகிருஷ்ணனின் கதை ஒன்று விகடனில் வெளிவந்திருந்தது. அழைத்துச் சொன்னார். “பரிசல்.. உங்களையும் நர்சிம்மையும் முந்திட்டேனே” என்றார். புரியவில்லை. கேட்டதற்கு சொன்னார். ‘உங்களுது 26ம் பக்கம் வந்தது. நர்சிம்முது 91ம் பக்கம் வந்தது. என்னோடது 19ம் பக்கம்ல?’ என்று கெக்கலித்தார்.
அடக் கடவுளே என்று இதை நர்சிம்மிடம் சொன்னபோது அவர் சொன்னார்
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”
அதுசரி! நல்லாதான்யா சோடி போட்டுக்கறாங்க!
********************
வந்து ரொம்ப நாளானாலும் ‘குளிர்’ படத்தில் சிம்பு பாடிய ‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’ பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தற்போது ‘வாமனன்’ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்’ பாடல்களின் இடையே யுவனின் இசை விளையாட்டு அபாரம். விஜய் ஏசுதாஸின் குரலில் ‘யாரைக் கேட்பது’ நல்ல மெலடி இருந்தாலும் ‘ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது’தான் அதிக முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரூப்குமார் ரத்தோடின் குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் இதையே ஹரிஹரன் பாடியிருந்தால் இன்னொரு ‘வெண்மேகம் பெண்ணாக’ கிடைத்திருக்கும்.
******************************
கல்யாணங்களுக்குப் போனால் மொய் கவரில் வித்தியாசமாக வாழ்த்துகள் எழுதிக் கொடுப்பது என் வழக்கம். எனக்கு மட்டும் எழுதிக் கொள்ளாமல் கூட வரும் நண்பர்களின் மொய் கவரையும் வாங்கி (காசு போடுவீங்களா-ன்னு கேட்கக் கூடாது!) வித்தியாசமான வாசகம் எழுதிக் கொடுப்பேன். சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு அதே மாதிரி எழுதிக் கொடுக்கும்போதுதான் கவனித்தேன்.
மொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
பணத்தோடு எங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் எசமானர்களே என்று சொல்லிவிட்டு வந்தேன்.
****************
சமீபத்தின் அரசியல் ஸ்டண்டுகளில் மிகக் கவர்ந்தது கலைராஜன் – எஸ். வி. சேகர் சண்டைதான். ‘எஸ்.வி.சேகர் பன்றிகாய்ச்சல் வந்து இறந்தாலும் என்னைக் குற்றம் சொல்லுவார்’ என்று கலைராஜன் சொன்னதுக்கு ஒரு நிருபர் ‘அத்தனை நோயிருக்க பன்றிக்காய்ச்சலை ஏன் சொன்னீர்கள்?’ என்று கேட்டார். (நல்ல கேள்வி!) கலைராஜனோ ‘அதுதானே ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே என்று அலைகிறது. அதனால்தான்’ என்றிருக்கிறார்.
அடுத்ததாக நிருபர் போனது எஸ்.வி.சேகரிடம். ‘கலைராஜன் உங்களை பன்றிக்காய்ச்சல் வந்து சாவார் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டிருக்கிறார். எஸ்.வி.சேகர் சொன்னாராம். ‘அதெல்லாம் வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்’
நல்லாதான் பேசிக்கறாங்கய்யா மக்கள் பிரச்சினையை!
*************************
பதிவரும் நண்பருமான ராமன் வெய்ட் லாஸுக்கு ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பர் சாமிநாதன் சென்று அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்.
‘ஹாங்காங்கில் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா கொழுப்பு இருக்கும் இடத்தில் ஒரு ஆய்ண்ட்மெண்டை தடவி தீயால் கொளுத்திவிடுவார்களாம். அந்த இடத்தில் கொழுப்பு முழுவதும் கரைந்து விடுமாம். அப்புறம் எடை குறைந்துவிடுமாம்.
“இப்படிப் பண்ணினா நம்ம வெய்ட்டே தெரியாதுங்க. ரொம்ப லேசா தெரியுமாம்” என்றார் சாமிநாதன் வெகு சீரியஸாக.
நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”
**************************
நேற்றைக்கு என் மகளின் பிறந்தநாளை ஏன் சொல்லவில்லை, பதிவெழுதவில்லை என்று பல மிரட்டல்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. நட்சத்திரம் ஆனாலும், பிறந்தநாள் ஆனாலும் எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது முதல் பதிவு/அன்றைய பதிவு ‘நான் இந்த வார நட்சத்திரம்’ அல்லது பிறந்தநாள் என்று மட்டும் போடுங்கள். இரண்டு மூன்று மணிநேரம் கழித்து பதிவு போட்டுக் கொள்ளலாம். என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்ற பின்னூட்டம்தான் அதிகம் வரும்.
இதைக் குறித்து ஒரு பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நான் 200வது பதிவுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நான் ஒரு பொண்ணை சந்திக்கறா மாதிரியும்.. அவ என் பதிவுகள் பத்தி பேசிகிட்டே வர்றா மாதிரியும்….” என்று ஆரம்பித்து சொன்னார். அபாரமாக இருந்தது. “சூப்பர் பாஸு! செம ஃபார்ம இருக்கீங்க.. எழுதுங்க.. கலக்குங்க” என்றேன். ‘ங்கொய்யால.. இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.
வழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது.
***************************
அவியலில் அக்டைசியில் ஏதாவது கவிதையைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு கவிதைக்கு பதில் கவிதைகளைப் பற்றி..
நேற்றைக்கு நான் எழுதிய கவிதைகளைப் படித்து ஒரு பதிவர் அலைபேசினார். ‘நீங்க மொதல்லயே கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்களா.. எனக்கு அவ்வளவா வராது’ என்றெல்லாம் சொன்னவர் அடுத்து சொன்னார். “நீங்க எழுதினதுல சிலது சூப்பர். ஒண்ணு சுமார்தான்” என்றார். “ஏன் சுமார்?” என்று கேட்டதற்கு “அந்தக் கவிதை எனக்கு படிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சுங்க” என்றார். நம்புங்கள்.. இதை அவர் வெகு சீரியஸாகச் சொன்னார்!
ஜ்யோவ்ராம், அனுஜன்யா போன்றவர்கள் ‘நேற்றைய கவிதையின் விளக்கம்’ என்று எழுதும் கவிதைக்கு அடுத்த நாள் விளக்கம் போட்டு இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுகிறேன்!
.
54 comments:
//“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”//
நீங்க முரசொலி, நமது எம்ஜிஆர் படிப்பிங்கன்னு இப்பதான் தெரியுது.
****
டெம்ப்ளேட் குறைபாடுகள் : பின்னூட்ட லிங்க் எங்கிருக்கிறதென்று தேடவேண்டி இருக்கிறது.
\\அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி.//
அடடே
//உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”\\
அட நம்மாளு
//நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”//
அப்பிடிப் போடு அருவாளை
என் கவிதைகளுக்கு விளக்கங்கள் பின்னூட்டங்களில் இருக்கும். அதாவது, நானே அவற்றைப் பார்த்து 'ஓ, இதுதான் மீனிங்கா' என்று புரிந்து கொள்வேன் :)
அனுஜன்யா
முதலில் www.parisalkaaran.com என்ர முகவரிக்கு வந்தால் தலைப்புக்கு கீழே அலசல்கள் என்ற லின்க் பின்னுட்டஙக்ளை குறிக்கும்.நேராக பின்னூட்டங்களுக்கு செல்ல அதை க்ளிக்குங்கள்.
தலைப்பை க்ளிக்கியவுடன் அலசல்கள் வராது. பதிவின் முடிவில், பின்னுட்டஙக்ளுக்கு கீழே post comment என்று இருக்கும். அதில் க்ளிக்கு பின்னூட்டம் போடலாம்.இது லேட்டஸ்ட் டெம்ப்ளேட்டுகள் எல்லாவற்றிலும் இருக்கும் முறைதான்.
கார்க்கி,
பரிசலின் blog administartor
விகடன் பின்னாடி இருந்து படிக்கும் பழக்கம் எனக்கு முன்னாடியிருந்து இருக்கிறது.
சாமிநாதன் - கொழுப்பு - தீ ஜோக்குக்கு ஸ்பாட்டிலேயே சிரிச்சாச்சு.
அந்த வாழ்த்துகள் பின்னூட்டமும் மிகச் சரியே.
(கமெண்ட் போட திண்டாடுறவங்க older post என்ற லின்க்கிற்கு மேலாக இருக்கும் இடத்தில் மௌசால் செலக்ட் செய்து பாருங்கள் லின்க் தெரியும்.)
இப்போ கலர் சேஞ்ச் பண்ணிட்டீங்களா. முன்னாடி தெரியல அதனால்தான் அந்த பின்னூட்டம்.
:)
//உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”\\
unmaithan!!
naan appdithan padippen
//முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”/
அவர்கள் பின்நவீனத்துவவாதிகளோ!
நல்ல அவியல்..
வாழ்த்துகள் பற்றி சொன்னது உண்மை.. சபை நாகரிகம் கருதி சும்மானாச்சுக்கும் சொல்ல வேண்டி இருக்கு..
“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?” //
So sweet of her.
இரண்டாவது விஷயம் ஆச்சரியம்.
நீங்க நடுவுல மாடிக்கிட்டீங்களா? :D
குளிர் - ம்ம், பாட்டு நல்லா இருக்கா.... கேட்டுடுவோம்.
நீங்க மொய் கவர பொண்ணு, மாப்பிள்ளை கைலேயே குடுக்க வேண்டியது தானே.
அரசியல் - ஹாஹாஹா... வேற என்ன செய்யறது? :O
தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும் //
:)))))))))))
வழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது. //
வேலை அதிகமாகிடுச்சோ?
கவிதையின் வாழ்த்துக்கு வாழ்த்துக்கள்.
அவியல் அட்டகாசம்.
ஹையா! ஒரு வழியா பின்னூட்டம் எப்படிப் போடறதுன்னு தெரிஞ்சுகிட்டேன். யப்பா! இதுக்கு ஒரு பதிவே எழுதியிருக்கலாம் போல :)
Older Postக்கு மேலே கர்ஸரை வச்சுப் பார்த்தா post a comment என்று வருகிறது. மற்றபடி வெள்ளியாகத் தெரிகிறது.
எப்படி சார் உங்களால மட்டும் இப்படி...?
//இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.//
அப்போ இதுவரைக்கும் எனக்கு பின்னூட்டம் போட்டதும் இப்படி தானா :(
அவ்வ்வ்வ்.... இப்பத்தான் தெரியுது நீங்க ஏன் என் 100வது இடுகைக்கு வாழ்த்த வரலைன்னு....
:)))))))))))))))))))))))))))))
//“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”
ரூல்ட் பேப்பர்-னா, முன்பு ஆட்சி செய்தவர்களின் பேப்பரா?
அன்ரூல்ட் பேப்பர்-னா, ஆட்சியே செய்யாதவர்களின் பேப்பரா?
எப்படி எல்லாம் யோசிக்கிறேன் இல்ல :)
******************
//அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை.
இதை விட ஆச்சர்யம், அவர்கள் வருடத்திற்கு மூன்று நான்கு முறை சந்திப்பது தாங்க.
*******************
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”
நானும் தான் :)
**********************
//மொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கும் நடந்திருக்கு இது மாதிரி.
ஹாய் கிருஷ்ணா
இந்த வார அவியல் அத்தனை சுவை இல்லை (பேப்பர் மேட்டர் தவிர), என்ன missing என்று சொல்ல தெரியவில்லை, ஆனா எதோ missing.
பெயர் ஒற்றுமை என் மனைவிக்கும் அவர் தோழிகளுக்கும் நடந்துள்ளது. பள்ளி நாட்களில் 3 நெருக்கமான தோழிகள் அவர்கள், மூவரின் கணவரின் பெயரும் N.Sriram.
இதுவும் தற்செயலான நிகழ்வே.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
! நல்லாதான்யா சோடி போட்டுக்கறாங்க!
நாங்கல்லாம் நடுவுல உள்ள சினிமா பக்கத்தில் இருந்து தான் ஆரம்பிப்போம்..
சிரிக்க வைச்சு ஏமாத்திட்டீங்க..
கவிதை எங்கே?!!
கவுஜைக்கு விளக்கம் சொல்வது எப்படி? - இந்தப் பதிவைப் பாருங்க.
மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு
டெம்ப்ளேட் குறைபாடுகள் ://
ரிப்பீட்டேய்- Links- Color Change pannunga
Blogger--> Parisal Blog->Layout->Fonts and Colors-அங்கன link Colorவெள்ளையில இருந்து வேறெதுக்காவது மாத்திக்குங்க.
அவியல் சுவை, வழக்கம் போலவே.
அய்யா... நானும் லிங்க் கண்டுபுடிச்சிட்டேன்.
அவியல் நல்லா இருந்தது.
//“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”//
கேப்பிடல் A ஸ்மால் a போல ஏன்ப்பா கேப்பிடல் அ ஸ்மால் அ இல்ல????
அவியல் சுவை!
ஹைய்யா!!!
நானும் post comments link கண்டுபிடிச்சுட்டேன்!!
//“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”//
பஞ்ச்.....
குமுதமாயிருந்தா, நீங்க பஞ்ச் கொடுத்திருக்கலாம்...
;))
வாழ்த்துகள் !!!
// சாமிநாதன் - கொழுப்பு - தீ ஜோக்குக்கு ஸ்பாட்டிலேயே சிரிச்சாச்சு//
எனக்கு தெரியாம இது எப்ப நடந்தது?
யாருங்க அந்த பதிவர் உங்க கவிதைய பத்தி அப்படி சொன்னவரு.. ???
// manasu said...
//“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”//
கேப்பிடல் A ஸ்மால் a போல ஏன்ப்பா கேப்பிடல் அ ஸ்மால் அ இல்ல????
//
Wow... Super Question :)
வழக்கம் போல அவியல் சுவை :)
:)))
Aviyal super.
/
கோவி.கண்ணன் said...
//“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”//
நீங்க முரசொலி, நமது எம்ஜிஆர் படிப்பிங்கன்னு இப்பதான் தெரியுது.
/
/
விக்னேஷ்வரி said...
“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?” //
So sweet of her.
/
ரிப்பீட்டிக்கிறேன்
:))))))))
அவியல் சூப்பர்!
சூப்பர் அவியல் :)))
கொழுப்பு தீ, பேப்பர் ஜோக் அட்டகாசம்...
(அண்ணே அந்த போஸ்ட் கமெண்ட் ஆப்சனை கலர் மாத்தி வைங்கண்ணே.. புண்ணியமா போகும் உங்களுக்கு)
//நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”//
ஆவ்வ்வ்வ்வ்
குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எஸ்.வி.சேகர் சொன்ன பதில் சும்மா நச் னு இருக்கு .....
கொஞ்ச காலத்திலயே சிறந்த அவியல் இதுதான்,
நட்சத்திர வாரத்தில் சூரியப் பதிவு பரிசல்.அருமை.
Blogger கார்க்கி said...
(கமெண்ட் போட திண்டாடுறவங்க older post என்ற லின்க்கிற்கு மேலாக இருக்கும் இடத்தில் மௌசால் செலக்ட் செய்து பாருங்கள் லின்க் தெரியும்.)
கமெண்ட் போட திண்டாடுறவங்க
மீடூ...
//நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”//
அப்பிடிப் போடு அருவாளை
Blogger அனுஜன்யா said...
என் கவிதைகளுக்கு விளக்கங்கள் பின்னூட்டங்களில் இருக்கும். அதாவது, நானே அவற்றைப் பார்த்து 'ஓ, இதுதான் மீனிங்கா' என்று புரிந்து கொள்வேன் :)
அனுஜன்யா
நெறய பேரு இப்படித்தான்னு நினைக்கின்றேன்...
Blogger ☼ வெயிலான் said...
// சாமிநாதன் - கொழுப்பு - தீ ஜோக்குக்கு ஸ்பாட்டிலேயே சிரிச்சாச்சு//
எனக்கு தெரியாம இது எப்ப நடந்தது?
ரிப்பீட்டூ....
அவியல் அருமை! - Hema
:)))
Yummy aviyal!
:--))
நல்லாருக்கு கே.கே.
யோவ் பரிசல், நீ ஏன்யா மனசு உடைஞ்சு பதிவு போடாம இருக்க???
போட்டு கொஞ்சம் சூட்டை குறைய்யா!
குமாச்சிக்கா ஒரு பதிவு போடுங்க ஒய்!
இந்த பிரச்சினை பற்றி ஏதும் வார்த்தை இல்லாமல்!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நட்சத்திரமானதுக்கு வாழ்த்து(க்)கள் பரிசில்.
பரிசிலா இல்லை பரிசலா?
அவியல் இருக்கு
பொரியல் எங்கே
Thala, "Angaadi Theru" padathoda paadalkala ketu paarunga..... romba nalla irukku.
Ketappuram kandipa oru padhivu poduveenga.....
அவியல் அருமை என சொல்வதறகு ரெண்டு நாளா கர்சரால் உங்க பக்கத்தில் ’போஸ்ட் எ கமெண்ட்’ தேடித தடவி தோற்று விட்டிருந்தேன்! இப்போதுதான் மாட்டியது:)!
நடசத்திர அவியலும் அருமை!
உண்மையைச் சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டீங்களே...
ஃபேமிலி பேக் மெயிண்டெயின் பண்ணி பாருங்க, அப்போ தெரியும்...ஹாங்காங் சிகிச்சையோட அருமை !
Post a Comment