Tuesday, July 21, 2009
பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10!
1) பைக்கில வந்து, இறங்கிப் போகறதுக்கு முன்னாடி குனிஞ்சு கண்ணாடில முகம் பார்த்து அவசர அவசரமா தலைகோதுவீங்களே... அது பிடிக்கும்.
2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.
3) பைக் ஓட்டும்போது ஒரு சைட்ல சாய்ஞ்ச மாதிரி உட்காராம, கைய ரொம்ப அகட்டி ஹேண்டில பிடிக்காம நேரா உட்கார்ந்த மாதிரி ஓட்டறப்போ ஏதாவது திருப்பம் வந்தா திரும்பும்போது சைட் அடிப்போம்.
4) கார்ல போகும்போது ஜன்னல்ல ஒரு கைய வெச்சுட்டு, அந்தப் பக்கம் இருக்கறவர்கிட்ட சீரியஸா பேசிட்டு வர்ற போஸை விரும்புவோம்.
5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல ரெண்டு கையையும் வெச்சுட்டு அந்நியோந்நியமா போவீங்கள்ல அந்த போஸ் பார்க்க ரொம்ப விருப்பம் எங்களுக்கு. (அப்படிப் போகும்போது ஓட்டறவரை சைட் அடிப்பீங்களா, பின்னாடி உட்கார்ந்திருக்கறவரையா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை!)
6) சேர்ல உட்கார்ந்திருக்கும்போது கம்பீரமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கறதும், நாற்காலியோட (அ) டெஸ்க் (அ) பின்னாடி உள்ள மேஜையோட பின்பகுதில ரெண்டு கை முட்டியையும் வெச்சு உட்கார்ந்திருக்கறதும் பிடிக்கும்.
7) நாற்காலியை திருப்பிப் போட்டு அதன் சாய்மானத்துல முகம் வெச்சுட்டு பேசறது பிடிக்கும்.
8) பொண்ணுங்க க்ரூப்பா வரும்போது ஒண்ணுந்தெரியாத மாதிரி பம்மிகிட்டு போவிங்கள்ல அது பிடிக்கும்.
9) நாலஞ்சு பசங்க பைக்ல சாஞ்சுட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போஸ் குடுத்துட்டு நின்னுகிட்டிருக்கறத ரொம்ப ரசிப்போம்.
10) பத்தாவது பாய்ண்ட்டா நிறைய வருது.. நேருக்கு நேர் பார்த்துப் பேசற பசங்க.., நாலைஞ்சு பேர் இருக்கறப்போ ரொம்ப ஹ்யூமரா பேசற ஒரு குறிப்பிட்ட பையன், கல்யாணவீட்ல இல்ல பொதுவான இடங்கள்ல ஒருத்தன் பிஸியா வேலை செஞ்சுட்டு இருப்பான்-பல பேர் அவனைச் சார்ந்து இருப்பாங்க-அந்த மாதிரி பசங்க... இது மாதிரி எக்கச்சக்கமா இருக்காம். உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க!
டிஸ்கி: அப்துல்லாவா.... ஆதிமூல கிருஷ்ணனா..? ரெடி ஸ்டார்ட் மீஜிக்!
.
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
என் கேர்ள் பிரண்ட் என் கிட்ட பிடிச்சதுன்னு சொன்னது எதை பத்தியும் யோசிக்காம சட்னு பொய் சொல்றதுன்னா..
// Cable Sankar said...
என் கேர்ள் பிரண்ட் என் கிட்ட பிடிச்சதுன்னு சொன்னது எதை பத்தியும் யோசிக்காம சட்னு பொய் சொல்றதுன்னா..//
இந்த மேட்டர் உங்க வூட்டம்மிணிக்கு தெரியுமா ஜி?
நல்லாத்தேன் ரூம் போட்டு யோசிச்சிருக்கீங்க
இதுக்கு சஞ்செய் எதிர்பதிவு போடப் போறாராம்
@ சின்ன அம்மணி
இல்லைங்க வீட்ல யோசிச்சதுதான் :-)))))))
@ கோவி கண்ணன்
வேற யாரோ போடப்போறதா இப்போ தகவல் வந்தது!
இந்த 10 பாயிண்டையும் ப்ரிண்ட் அவுட் எடுத்து வைச்சுக்கிறேன். அப்பறம் வேற ஏதாச்சும் நல்ல விசயங்கள் இருந்தா தனி மெயில்ல அனுப்புங்கண்ணே. இப்டி பப்ளிக்கா பதிவுல போட்டுட்டிங்கன்னா, எல்லாரும் அதையே ஃபாலோ பண்ணுவாங்க. காம்படீசன் அதிகமாயிரும்ல?
இன்னும்ம்ம்ம்ம்ம் பயிற்சி எடுக்கனுமோ
/இந்த மேட்டர் உங்க வூட்டம்மிணிக்கு தெரியுமா ஜி//
நான் கேர்ள் ப்ரெண்டுன்னு சொன்னதே எங்கவூட்டம்மிணிதானுங்கோ.. ஐ எஸ்கேப்
ஆதிமூலகிருஷ்ணன் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கார் போல, அப்துல்லா பாருங்க என்ன ஸ்பீடுன்னு
//ஆதிமூலகிருஷ்ணன் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கார் போல, அப்துல்லா பாருங்க என்ன ஸ்பீடுன்னு
//
ச்சின்னஅம்மணி அக்கா, பரிசலுக்கு நல்லா உரைக்கர மாதிரி சொல்லுங்கக்கா. பரிசல் பதிவுக்கு முதல் எதிர்பதிவு எப்பவும் நம்ப பதிவுதான்.
ஐயா... சூப்பர்சானிக் ஜெட் வேகம் அப்படின்னு சொல்வாங்க ... கேள்விப்பட்டு இருக்கோம்... இன்னிக்குத்தான் பார்த்தோமுங்க... அதுதாங்க அண்ணன் அப்துல்லா பதிவைப் பற்றிதாங்க சொல்றோமுங்க...
ஓ.. இதெல்லாம் தெரியாததால் தான் எனக்கு கேர்ள் பிரண்ட் கிடைக்கல போல... இனிமே டிரை பண்ணிப் பார்த்துட வேண்டியது தான்..ஹிஹீஹி
தலைவா நம்ம ஃப்ரண்டிக சொன்னதெல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சுட்டீங்களே........
// "பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10!" //
அண்ணே இது க.மு வா, க.பி யா ..??!! (கல்யாணத்திற்கு முன்னேவா / கல்யாணத்திற்கு பின்பா)
எப்படியோ அடுத்த பத்து ஆரம்பிச்சுருச்சய்யா,
நடத்துங்க.
refreshment...
அப்ப்டியா? (பிதாமகனில் சரக்கபோட்டுகிட்டு பேசும் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)
//பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10!
posted by பரிசல்காரன் at பரிசல்காரன் - 47 minutes ago
ஆப்பு இரசிக்காத பிரபல பதிவர்களின் பத்து
posted by எம்.எம்.அப்துல்லா at ஒண்ணுமில்லை.....ச்சும்மா - 1 hour ago
//
அப்துல்லா சூப்பர் ஃபாஸ்ட் போல.... பரிசல் பதிவு போடறதுக்கு முன்னாலயே எதிர்பதிவா? அது எப்பிடி? என் கூகில் ரீடர்ல இப்பிடி காமிக்குதே !!
:)))
//அப்துல்லா சூப்பர் ஃபாஸ்ட் போல.... பரிசல் பதிவு போடறதுக்கு முன்னாலயே எதிர்பதிவா? அது எப்பிடி? என் கூகில் ரீடர்ல இப்பிடி காமிக்குதே !!
21 July, 2009 9:50 AM
//
ரெண்டு பேரும் போஸ்ட் போட்ட டயத்தை எங்க பிளாக்கில் செக் பண்ணுங்க. பரிசலுக்கு பின்னர்தான் போட்டு இருக்கேன். உங்க கூகில் ரீடர் பொய் சொல்லுது போல :)
:)))
//2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.//
அப்படியா??? சரி, PANT தெரியும், அது என்ன PHANT?
//(அப்படிப் போகும்போது ஓட்டறவரை சைட் அடிப்பீங்களா, பின்னாடி உட்கார்ந்திருக்கறவரையா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை!)//
இது வில்லங்கம் வீராசாமியோட கேள்வி ஆச்சே?
// நேருக்கு நேர் பார்த்துப் பேசற பசங்க.., நாலைஞ்சு பேர் இருக்கறப்போ ரொம்ப ஹ்யூமரா பேசற ஒரு குறிப்பிட்ட பையன், கல்யாணவீட்ல இல்ல பொதுவான இடங்கள்ல ஒருத்தன் பிஸியா வேலை செஞ்சுட்டு இருப்பான்-பல பேர் அவனைச் சார்ந்து இருப்பாங்க-அந்த மாதிரி பசங்க..//
இது உண்மை போல தான் தெரியுது........
தேறுது தேறுது...
இதில் இருக்கும் எல்லா பாயிண்ட்டுகளோடும் நான் முரண்படுகிறேன்.
சார் .... நான் போடுற மொக்கை யாருகாவது பிடிக்குமா ????
"நர்சிம் said...
இதில் இருக்கும் எல்லா பாயிண்ட்டுகளோடும் நான் முரண்படுகிறேன்."
naanum
ரைட்டு.. இன்னைக்கு ஜூப்பர்தான்
//3) பைக் ஓட்டும்போது ஒரு சைட்ல சாய்ஞ்ச மாதிரி உட்காராம, //
காதல் படத்தில் பரத் மூலம் வந்தவன் மாதிரி ஒரு ஓரமாக உட்காந்து ஓட்டுவாறே அதுமாதிரி ஓட்டினால் பிடிக்காதா?
எச்சூஸ் மி , நானும் ஒரு பத்து போட்டுக்கலாமா?
பதிவையும் ரசித்தேன். ஜோஸப்பின் கமெண்டையும் ரசித்தேன்.!!
கலக்கிட்டீங்க பரிசல்....
எதிர்பதிவுகளையும் படிச்சிட்டி வரேன்.
கடைசி கல்யாண வீட்டு பையன் மேட்டரு சூப்பர்.
இதையெல்லாம் எங்க ரூம் போட்டு யோசிச்சு எழுதுறீங்க பரிசலு..?!!!
தலைப்பு பொதுவானதா இருக்கே! எல்லா பெண்களுக்கும் எல்லா ஆண்களிடமும் பிடித்த பத்தாக இதை ஏத்துக்க முடியாதுஜி.
அடுத்த பத்து எப்ப வரும்.?
இதுக்கு முன்னாலேயே இது போல ஒரு பதிவு எழுதுனதா ஞாபகம்....... :o
இதுக்கு முன்னாலேயே இது போல ஒரு பதிவு எழுதுனதா ஞாபகம்....... :o
நல்லாத்தான் ஆராய்ச்சி பண்றீங்க..
என் தோழிகிட்ட இதைச் சொன்னேன்... அதுக்கு அவ, இதில எதுவுமே உண்மையில்லைன்னு சொல்றா.
எதை நம்பறது?
ரசித்தேன்!!
உண்மைய சொல்லணும்னா...
ஆதியோட எதிர் பத்துதான் அசத்தல்.
வீட்டுப் பக்கம் வராதடா நாயேன்னு சொன்னா போயிடப் போறேன். அதற்காக கல்லெடுத்தா அடிப்பது?!
இந்த பத்தும் பைக் வைத்திருக்கும் ஆண்களுக்குதான?!!!
//2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.//
உண்மையாலுமா...?!!!
ஆமா இந்த தகவல்களெல்லாம் உண்மையிலேயே பெண்களிடம் சேகரித்தவையா?!
ஆழமான ஆராய்ச்சி பரிசல்...
:) மிக இரசித்தேன்...
தலைவா, இது எல்லாம் உண்மைதானா? ஏதும் உள்குத்து இல்லையே?
நீங்களா இப்படி எதாவது கற்பனை பண்ணி சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான் :)))
இன்னும் கூட நிறைய விஷயங்கள் இருக்குங்க பரிசல்! நீங்க இன்னும் வெகுளியாவே இருக்கீங்க போல ;-)
//.. viji said...
நீங்களா இப்படி எதாவது கற்பனை பண்ணி சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான் :))) ..//
அப்போ உண்மைய நீங்களே சொல்லிடுங்க..??
வசதியா இருக்கும்ல..
;-))
/
Cable Sankar said...
என் கேர்ள் பிரண்ட் என் கிட்ட பிடிச்சதுன்னு சொன்னது எதை பத்தியும் யோசிக்காம சட்னு பொய் சொல்றதுன்னா..
/
:)))))))))))
என்ன இது சாக்ஸ் மற்றும் பைக்
இது மட்டும் தான் உங்களுக்கு பிடித்ததா??
இருந்தாலும் எங்கல போல உங்களுக்கு ரசிக்க தெரியாது
10 commandlw enakku ethum ilaye?
innum Ethir pakkeran
சொன்ன படி நடந்துக்கிற ஆம்பிளைய
பெண்களுக்கு மரியாதை தரும் ஆண்களை
ஓவர்-ஆ ஜொள்ளு விடாத ஆண்களை
கொஞ்சமா அதே சமயம் தெளிவா அழகா பேசும் ஆண்களை....
50௦ வயசு பாட்டிக்கும் பிடிக்கும்.
I defer your views, even girls do not know what they like it depends on their mood. But they know what they dont like. (Please teach me how to post comments in tamil)
Post a Comment