Saturday, July 18, 2009
கிருஷ்ணகதா 18.07.09
ண்ணா.. வணக்கங்ண்ணா..
க்கா.. வணக்கங்க்கா..
ரொம்ப நாளாச்சு. எப்பயாச்சும் எழுதறதால ஒரு வணக்கம் போட்டுக்கலாமேன்னு...
சரி! இன்னைக்கு சின்னதா ஒரு கிருஷ்ணகதா!
ஏன் இவ்ளோ நாளா எழுதறதில்லைன்னா.. வேலைப்பளுதான் காரணம். வேலை கம்மியா இருக்கறப்போ எழுத சுதந்திரம் குடுத்திருக்கற முதலாளிக்கு வேலை அதிகமா இருக்கறப்போ வேலை செஞ்சு நன்றியைக் காட்ட வேணாமா?
அதுவுமில்லாம வீட்டுல சிஸ்டம் வைரஸாண்டவர் பிரச்சினையாலயும், ராம் பிராப்ளத்துலயும் மாட்டிருந்தது. நேத்துதான் ரெடியாச்சு. இனிமே அப்பப்போ வந்து பின்னி பெடலெடுத்துடுவோம்.
நிறைய பிரச்சினைகளைப் பார்த்தாச்சு இந்த கொஞ்ச நாள்ல. சும்மா இருக்கான் பாரு இவன்னு ரொம்ப பேருக்கு கேள்வி. சும்மா இருக்கறதவிட பெரிய எதிர்ப்பு இல்லைங்ண்ணா. உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு? இதுதான் நான் எல்லாருக்கும் சொல்றது!
யார் வேணும்னா என்ன வேணும்னா பண்ணலாமா.. நாம கேள்விக் கேட்கக் கூடாதுங்கறீங்களா பரிசல்?
அப்படியில்ல. அப்படி அவங்க செஞ்சதுக்கு அவங்கதான் கடமைப்பட்டவங்க. அதுல நம்ம பங்கு ஒண்ணுமே இல்லை. எதிர்ப்பு காமிச்சு நாம ஒரு காலைத் தூக்கீட்டோம்னா...
இருங்க... இந்த காலைத் தூக்கறதுன்னு ஏன் சொல்றேன்னா...
முகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்:
“மனிதன் தான் விரும்பியபடி செயல்படக்கூடியவன்தானா.. அல்லது விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறானா? எல்லாமே முன் கூட்டி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் எந்தத் தவறுக்கும் மனிதன் பொறுப்பில்லையே.. தான் விரும்பியதையெல்லாம் மனிதன் செய்ய முடியாதென்றால் அப்படிப் பட்ட மனிதப் படைப்பை படைக்காமலே போயிருக்கலாமே” – இப்படி ஆரம்பிச்சு கேள்வியா கேட்டுக் கிட்டிருந்தார்.
முகமது நபிகளோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா எதையுமே கேள்வி கேட்டவருக்கு ஸ்ட்ரெய்ட்டா புரியறா மாதிரி போட்டுத் தாக்குவாரு.
இப்படிக் கேட்ட அலியைப் பார்த்து நபிகளார் சொன்னார்:
“ஒன்னோட ஒரு காலைத் தூக்கு”
அலி உடனே இடது காலைத் தூக்கி ஒரு கால்ல நின்னாரு.
“சரி... இப்போ உன் வலதுகாலைத் தூக்கு”
அதெப்படித் தூக்கமுடியும்? அலிக்கு கோவம் வந்துடுச்சு.
அவர் முகம் மாறுவதைக் கண்ட நபிகள் சொன்னார்...
“இன்னாச்சுபா? இதான் மேட்டர்! உன் வலதுகாலை முதல்ல நீ தூக்கியிருக்கலாம். ஆனா நீ இடதுகாலைத் தூக்கின. அது உன் இஷ்டம். ஒரு கால்ல நில்லுன்னா நீ விரும்பின எந்தக் காலையும் தூக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா முதல் கால் தூக்கப்பட்ட உடனே அடுத்தகால் பூமிக்கு கட்டுப்படுது. இல்ல நான் என்ன வேணா பண்ணுவேன்னு அந்தக் காலையும் தூக்கினா கீழதான் விழணும்”
ஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.
அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!
எது தேவையானது எது தேவையில்லாததுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?
அதுதான் சூட்சுமம்! வாழ்ந்துதான் பார்க்கணும்!
.
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
suuperrrrrr...
இன்ஷா அல்லாஹ்...!
//அதுதான் சூட்சுமம்! வாழ்ந்துதான் பார்க்கணும்!//
ஹலோ, துபாய்ல இருந்தீங்கன்றது தெரியுது, துபாய்ல எங்கிருந்திங்கன்னுதான் கேக்கறோம்.
புது டெம்பிளேட் அழகுன்னா அப்படி ஒரு அழகு.
@ Cable Sankar
ரொம்ம்ம்ம்ம்ப நாளைக்கப்பறம் யூ த ஃபர்ஸ்ட்!
@ ஸ்வாமிஜி
அருமை!
@ தராசு
//ஹலோ, துபாய்ல இருந்தீங்கன்றது தெரியுது, துபாய்ல எங்கிருந்திங்கன்னுதான் கேக்கறோம்.
//
கலக்கல் கமெண்ட் தல!
நல்ல கதை ..
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவில் என்னால் பின்னூட்டமிட முடிகிறது. நட்சத்திரவார சமயத்தில் இங்கே பதிய இயலவில்லை என்பதால் 1,2,3 க்கு போடவேண்டிய கமெண்ட்டையும் சேர்த்து 4,5,6 க்கு போட்டேன்... :)
வெல்கம் பேக் பரிசல்... உங்க எண்ணங்களை அழகா புரிய வெச்சிட்டீங்க..
அற்புதமான பதிவு
நன்றி பரிசல்
ஆமென்!
போட்டுத் தாக்கு
//உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு?//
இந்த வார்த்தைகள் எனக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கு பரிசல்.
நன்றி.
/
ஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.
அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!
/
மிக அருமை!
Simply superb...
everyone should think about this
//அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!//
க்ரேட்!
காலை வைச்சே இப்படியொரு கதையா..?!!
நல்லாயிருக்கு..!
@ முத்துலெட்சுமி
வெண்பூ
கதிர்
குசும்பன்
அது ஒரு கனாக்காலம்
நாடோடி இலக்கியன்
மங்களூரார்
அதிலை
நான் ஆதவன்
உண்மைத்தமிழன்
நன்றி! நன்றி!!
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
@ ஆப்பு
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு
மிகவும் நன்றி!
வெல்கம் பேக்... அடிச்சு ஆடுங்க!
\அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!\\\
ம்ம்..ரைட்டு ;)
நன்றி வெங்கிராஜா
ரைட்டு கோபி!
வாழ்ந்துதான் பார்க்கணும், அருமை கிருஷ்ணா.
நன்றி பீர்!
"முகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்"
முகமது நபிகளாரோட உடன் இருந்தவர்களை சீடர்கள் என்று சொல்வதில்லை, தோழர்கள் என்று தான் சொல்கிறோம்.
அதுவும் அலி (ரலி) அவர்கள் முகமது நபிகளாருடைய மருமகனும் ஆவார்கள்.
இனி பின்னூட்டங்கள் பற்றி:
"நல்ல கதை .." - முத்துலெட்சுமி அவர்கள்
"காலை வைச்சே இப்படியொரு கதையா..?!!" - உண்மைத் தமிழன் அவர்கள்
இது கதையல்ல நண்பர்களே!
1400 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம். நமக்கு எல்லாமே கதை தான்
- பரிசல்காரனுக்கு நன்றிகள்
இப்ப ஒரு காலைத் தூக்கி நின்னுக்கிட்டு இருக்கற சிலபேருக்கு இப்பக் கூட புரியலைன்னா..... மேல்மாடியை வாடகைக்கு விட்டுத்தான் வருமானம் பாக்கணும்...
பரவாயில்ல நீங்களும் குட்டி கதல்லா சொல்லி புரியவக்கிரீங்க!!!!
மேட்டரு சூப்பரு!!
நல்ல பதிவு, சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விட்டீர்கள். எளிமையாய் புரிகிறது
சரிங்க சாமிகளே..
நெம்ப கரக்ட்டு.......!!!!
எவ்ளோ கும்முனாலும் தாங்குறீங்க......!!! நீங்கோ நெம்போ நல்லவருங்நோவ்.....!!!!
ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................!!!!
நபிகள் கதை அருமை..
@ Nagore Ismail
நன்றி. ஆனா உங்க டென்ஷன் தேவையற்றது நண்பா!
@ மகேஷ்
உண்மைதான்!
@ ஆ.மு.ரா.
சரிங்க்கோவ்வ்வ்வ்வ்
@ முரளிகுமார் பத்மநாபன்
நன்றி! (உங்க சிஸ்டத்துலேர்ந்து உங்களுக்கே நன்றியா...!)
@ ஆதி/லவ்டேல்/பட்டிக்காட்டான்
நன்றி!!
நன்றி கே.கே.
நானும் கேட்க நினைத்தது துபாய் கததான்.
:))))))
//உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு? //
நச்சுன்னு நடுமண்டையில அடிச்சுப்புட்டீங்ணா.
நபிகள் கதை மிக அருமை.
ரொம்ப முதிர்ந்த மனநிலை. ( முதிர்ந்த என்பதை மெச்சூர்டு என்ற அர்த்தத்தில் மட்டும் படிக்கவும், பரிசல் அண்ணா மிக இளமையாவனர் என்பதால் இந்த டிஸ்கி). உங்கள் மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும் என ஆசைபடுகிறேன்.
ஆனா ஒன்னுங்ணா, இந்தப் பிரச்சனையெல்லாம் நிறையா பேர அடையாளம் காண உதவுச்சு பாருங்க. அது தான் இந்த சண்டைகளோட நன்மை.
Post a Comment