Friday, July 24, 2009

அவியல் 24.07.2009

கோவையில் இருந்து சென்ற வாரம் என் நண்பர் அழைத்து ஓர் அதிர்ச்சியைச் சொன்னார். அங்கே கோபாலபுரம் பகுதியில் (ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் சினிமா விநியோகஸ்தர்களெல்லாம் இருக்கும் பகுதி்) டாஸ்மாக்கிற்கு இவர் சென்றிருக்கிறார். உள்ளே வந்தவர்களிடமெல்லாம் நான்கைந்து கல்கி இதழ்கள்.

ஒரு சிலர் புத்தகத்தைக் கிழித்து கையைத் துடைக்கவெல்லாம் பயன்படுத்தியதைக் கண்டு கொதித்த இவர் என்னடா இது என்று நினைத்து வெளியே சென்று பார்த்திருக்கிறார். ஒருவர் கட்டுக் கட்டாக கல்கியின் சென்ற வார, அதற்கு முந்தைய என்று பல இதழ்களை வைத்துக் கொண்டு டாஸ்மாக் வருபவர்களிடமெல்லாம் இரண்டு, மூன்று என்று கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நண்பர் விசாரித்தபோது அவர் சொன்னது..

“ரிட்டர்ன் எடுக்கறதில்லைங்க. இப்படி விநியோகம் பண்ணச் சொல்லீட்டாங்க”

அடப்பாவிகளா.. என்ன ஒரு பாரம்பரியமிக்க இதழ்! இப்படி டாஸ்மாக் முன்னாலா விற்பீர்கள்? ஒரு கல்லூரி முன்பாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ விற்கலாமே?

**********************************

ச் சின்னப்பையன் என்கிற சத்யா சென்ற ஞாயிறு கோவை வந்திருந்தார். திருப்பூர் பதிவர்கள் ஆளாளுக்கு முக்கியமான வேலைகளில் சிக்கிக் கொண்டிருந்த்தால் திருப்பூரிலே அவரை இறக்கி மதிய உணவு உண்டு அவரை கோவைக்கு பார்சல் செய்வதாக ஏற்பாடானது.



பதிவுகளில் செம ஹ்யூமரான ஆளுமையாக இருக்கும் சத்யா நேரில் கண்டிப்பான அதிகாரி போலத்தான் இருக்கிறார். ஆரம்பத்தில் பயந்து பயந்துதான் ஜோக்கடிக்க வேண்டியதாயிற்று. சந்திப்பில் சிவா (இவர்தான் சாருவின் புத்தகங்களில் வரும் திருப்பூர் சிவா), முரளிகுமார் பத்மநாபன், சாமிநாதன், வெயிலான் ஆகியோரும் இருந்தனர்.

வலையுலகின் தற்போதைய சூழல் குறித்து நீண்டதொரு அலசல் நடந்தேறியது. கடைசியில், இவற்றையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ச்சின்னப்பையன் அருமையான ஒரு தீர்வு சொன்னார்: அது என்னவென்றால்.. சரி.. வேணாம் விடுங்க..

வெயிலானின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தார் சிவா.. 'அதனால்தாங்க அவர் திருப்பூர் வலைப்பதிவர் பேரவைத் தலைவர்’ என்றார் சாமிநாதன்.

‘அப்ப பரிசலை ஏன் செயலாளர்னு சொல்றீங்க?’

'அவர்தான் கொஞ்சமாவது ஆக்டீவா இருக்கார் அதுனால..' என்றார் வெயிலான்.

'சாமிநாதன் ஏன் பொருளாளர்?' என்று கேட்டார்கள்.

“சாப்பிட்டு முடிச்சு பில்லுக்கு பணம் குடுக்கும்போது தெரியும் பாருங்க’ என்றேன் நான்.

ஒவ்வொருமுறையும் வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் சாமிநாதன் முன்னிலையில் இருப்பதைப் பாராட்டும் விதமாக நானும் வெயிலானும் வரும் ஞாயிறு சாமிநாதனுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்ய இருக்கிறோம். ,

விருந்துக்கு தண்ணீர் பாட்டில்(அக்வாஃபீனா) வாங்கும் செலவை வெயிலானும், விருந்து முடிந்து பீடா வாங்கித் தரும் செலவை நானும் ஏற்றுக்கொள்வதாக ருமனதாக முடிவாகியிருக்கிறது. விருந்துக்கு வரும்போது மறக்காமல் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டுவருமாறு சாமிநாதனுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

****************************

கூகுள் சாட்டில் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடுவதில் பலர் கில்லாடியாக இருக்கிறார்கள். நான் எப்போதோ போட்டிருந்த ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ யைத்தான் இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அஹம் ப்ரம்மாஸ்மி-யைப் பார்த்து சாட்டில் வந்த ஒருவர் ‘அகம் ப்ரம்மாஸ்மின்னா புறம்?’ என்று கேட்டார். இன்னொருத்தர் ‘அஹம் சபனா ஆஸ்மி’ என்றுவிட்டுப் போனார். (இவர் யாரென்று சொன்னால் ஷாஆஆஆஆக்காய்டுவீங்க!)

எனக்கு நண்பர் நாடோடி இலக்கியனின் ஸ்டேட்டஸ் மெசேஜ் மிகப் பிடித்திருந்தது. ‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ என்று போட்டிருந்தார்.

ங்கொய்யால!

**********************************

ரிசஷன் படுத்தும் பாட்டைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. சென்னையில் என் நண்பர் ஒரு நிறுவனத்தில் A.O.வாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ரிசஷன் சமயத்தில் தினமும் காலை நேராக வந்து செக்யூரிட்டி வாசலில் தன் வாகனத்தை நிறுத்துவார்.

செக்யூரிட்டியைப் பார்த்துக் கேட்பார்: “யாருப்பா இந்த கம்பெனில ஏ.ஓ?”

செக்யூரிட்டி: “சார்.... நீங்கதான் சார்” என்று ஒரு சல்யூட் வைப்பார்.

“அப்ப சரி” என்று வாகனத்தை உள்ளே செலுத்துவாராம்!

“என்ன பண்றது கிருஷ்ணா.. நாம இருக்கோமா இல்லையான்னு செக்யூரிட்டியைக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கறது நல்லதில்லையா” என்பார் நக்கலாக!

**************

மீரா பிறந்தநாளின் போது நடந்த நிகழ்விது. குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க கேமராவை செட் செய்து கொண்டிருந்தேன். மருமகன் ருத்ரேஷ் போஸ் குடுக்காமல் ஆடிக் கொண்டே இருந்தான். நான் LCDல் வ்யூ பார்த்தபடியே அவனிடம் ‘ருத்ரேஷ் இங்க பாருடா.. இங்க பாரு..’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.

திடீரென்று ஓடிவந்து நான் பார்த்துக் கொண்டிருந்த கேமராவின் LCDஐப் பார்த்தபடி என் அருகில் நின்றான். ‘இங்கதான பார்க்கச் சொன்ன?’ என்பது போல. எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தபோது அழகானதொரு புகைப்படம் வந்தது!

*****************************

என்னுடைய பெண்கள் ரசிக்கும் ஆண்களின் பத்து-க்கு ஆதியில் தாமிராவாக இருந்த ஆதிமூலகிருஷ்ணனின் எதிர்பதிவு கவிதை என்றால் நேற்றைக்கு நான் எழுதிய தலைப்பில்லாத கவிதைகளுக்கு நண்பர் பித்தன் எழுதிய எதிர்வினைக் கவிதைகள் எக்ஸலெண்ட் ரகம்! இதோ லிங்க். எழுதிவிட்டு எனக்கு மின்னஞ்சலிட்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்றதுதான் பிடிக்கவில்லை. நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் பாஸூ!

கவிதைகள் என்றதும் இன்றைக்கு ஸ்வாமி ஓம்கார் எழுதிய ஜோதிட கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நியூமராலஜி
------------------
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.


இது சாம்பிள்! மற்றவற்றிற்கு இங்கே க்ளிக்குங்கள்!




.

51 comments:

பொன்னர் said...

கல்கி மலம் துடைக்கத்தான் மிகவும் பயனுள்ளது. எழுதுவதெல்லாம் தமிழர் விரோத கருத்துகக்ள்

நர்சிம் said...

அவியல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தரமான சுவையில் பரிசல்.

Suresh said...

Chinna payan enakku migavum piditha pathivar valthukkal...

Madam Meera vukku valthukkal solunga .. nan call seiyalam endru irunthen ungaluku to convey my wishes en seiya phone 3 varam service ..

GHOST said...

gud romba nalla iruku

இராம்/Raam said...

//எனக்கு நண்பர் நாடோடி இலக்கியனின் ஸ்டேட்டஸ் மெசேஜ் மிகப் பிடித்திருந்தது. ‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ என்று போட்டிருந்தார்.//

ஹி ஹி

//ங்கொய்யால!/

பாஸ்.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமின்னு நினைக்கிறேன்.. தயவு செய்து உபயோகப்படுத்தாதீங்க.. :)

தராசு said...

//அடப்பாவிகளா.. என்ன ஒரு பாரம்பரியமிக்க இதழ்! இப்படி டாஸ்மாக் முன்னாலா விற்பீர்கள்? ஒரு கல்லூரி முன்பாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ விற்கலாமே?//

தல,

சூடா இருந்தாதான் தணலு,
ஆறிப்போனா கரிக்கட்ட தான.

கார்க்கிபவா said...

நானும் சில நக்கல் ஸ்டேட்ட்ஸ் மெசெஜ் வச்சிருந்தேன்.. ஒரு நாள் எங்க டீம் பொண்ணு(பெஙக்ளூரில் இருககங்க) அவசரத்துக்கு(அஃபிஷியல் சேட் வேலைசெய்யல. அந்த அவசரங்க) ஜிடாக்கில் சேர்த்துட்டாங்க.. அபப்டியே அங்க இருந்த இன்னொரு டேமஜரும்(தமிழ்தன) சேர்ந்துட்டாரு.. இப்பவெல்லாம் பிசிதான் :)))

அவியல் அருமை..

Anbu said...

அவியல் அருமைங்க..

Anonymous said...

//விருந்துக்கு வரும்போது மறக்காமல் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டுவருமாறு சாமிநாதனுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.//

உங்களுக்கும் ஒரு கைப்புள்ள கிடைச்சுட்டாரா :)

சிவக்குமரன் said...

///விருந்துக்கு வரும்போது மறக்காமல் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டுவருமாறு சாமிநாதனுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
///

முதலில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை ஏற்றுக்கொள்கிறார்களா என்று தெரிந்து கொள்வது நலம்.

மங்களூர் சிவா said...

/கல்கி/

விக்காம போனா என்ன செய்ய?
:))))

அவியல் நல்லா வெந்திருக்கு.

Anonymous said...

//பதிவுகளில் செம ஹ்யூமரான ஆளுமையாக இருக்கும் சத்யா நேரில் கண்டிப்பான அதிகாரி போலத்தான் இருக்கிறார். ஆரம்பத்தில் பயந்து பயந்துதான் ஜோக்கடிக்க வேண்டியதாயிற்று//

அதுக்காக போட்டோல கூட யாரும் சிரிக்க மாட்டீங்களா, சாமிநாதன் மட்டும் தான் சிரிக்கறார்.

கே.என்.சிவராமன் said...

வேலை நெருக்கடியிலயும் 'அவியல்' சமைக்க நீங்களும், 'சாப்பிட' நாங்களும் மறக்கலை :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அ.மு.செய்யது said...

நேற்று பித்தனின் எதிர்கவுஜையில் "ஸ்நேகா ஒயின்ஸ் அருகில் நடந்தது" பார்த்து சிரிப்பை அடக்க‌
வெகுநேரம் பிடித்தது.

சாட்டில் வந்து பரிசல் தப்பா நினைக்கலன்னா நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நான் அவர் அப்படியெல்லாம் நினைக்கமாட்டார் என்று ஒரு அனுமானத்தில் தான் சொன்னேன்.நீங்கள் அந்த கவிதைக்கு ஒரு சுட்டி கொடுத்து பாராட்டியே விட்டீர்......நன்றி !!!!

ஈரோடு கதிர் said...

அவியல் அருமை பரிசில்

அடுத்த தடவ சங்கத்த கூட்டும் போது என்னையும் கூப்பிடுங்க...
வந்து...
இருந்து...
சாப்பிட்டுட்டு...
நீங்க பில்லு கொடுத்து மகிழ்ச்சியடைஞ்சதுக்கப்புறம் கிளம்பிர்றேன்...

பாஸ்... ஈரோட்லயிருந்து சீசன் டிக்கெட் வேணா எடுத்திடரேன்

ஊர்சுற்றி said...

எல்லாமே அருமை.

☼ வெயிலான் said...

// முதலில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை ஏற்றுக்கொள்கிறார்களா என்று தெரிந்து கொள்வது நலம். //

அனுபவம் பேசுது.
அவரவர் கவலை அவரவர்க்கு :))))

நாடோடி இலக்கியன் said...

நர்சிம் சொன்னதை வழிமொழிந்து கொள்கிறேன்.
//‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ //

மீனிங் ஒன்னுதான் இருப்பினும் நான் எழுதியிருந்தது,

குழல் இனிது யாழ் இனிது என்பர் நான் பேசி கேளாதார்.
:)

VIKNESHWARAN ADAKKALAM said...

//செக்யூரிட்டியைப் பார்த்துக் கேட்பார்: “யாருப்பா இந்த கம்பெனில ஏ.ஓ?”

செக்யூரிட்டி: “சார்.... நீங்கதான் சார்” என்று ஒரு சல்யூட் வைப்பார்.

“அப்ப சரி” என்று வாகனத்தை உள்ளே செலுத்துவாராம்!

“என்ன பண்றது கிருஷ்ணா.. நாம இருக்கோமா இல்லையான்னு செக்யூரிட்டியைக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கறது நல்லதில்லையா” என்பார் நக்கலாக!
///

நீங்க முன்ன எழுதின பழய ஜோக்க மறுபடியும் எழுதி இருக்கிங்க :)

பரிசல்காரன் said...

@ நாவேந்தன்

ம்க்கும்!

@ நர்சிம்

சரிங்க பாஸூ!

@ Suresh

No prob. I'll inform!

@ Ghost

thanks..

@ இராம்

நன்றி

////ங்கொய்யால!/

பாஸ்.. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமின்னு நினைக்கிறேன்.. தயவு செய்து உபயோகப்படுத்தாதீங்க.. :)//

ஐயைய... சத்தியமா தெரியாது பாஸ். மெயில்ல சொல்லுங்க என்னான்னு.. கலவரப்படுத்தறீகளே...

பரிசல்காரன் said...

@ தராசு

வர வர ஒரே பயமொயியா போட்டுத் தாக்கறீங்க போங்க..

@ கார்க்கி

நெனைச்சேன். அதான் உனக்கு காலைல கூப்ட்டேன்!

Anbuக்கு மிக்க நன்றி!

@ சின்ன அம்மணி

அவர் ரொம்ப நல்லவருங்க... இப்படிப் போட்டு தாக்கீட்டீங்களே..

@ இரா.சிவக்குமரன்

டைம்லி கமெண்ட் நண்பா! பாதிக்கப்படவரின் குரல்!

@ மங்களூர் சிவா

நன்றிங்க!

@ சின்ன அம்மணி

ஹி..ஹி... ஃபோட்டோ எடுக்க ஹோட்டல் ரிசப்ஷன்ல இருந்த ஒரு பொண்ணைக் கூப்ட்டோம். அவங்க வேற ஒருத்தர்கிட்ட கேமராவைக் குடுத்துட்டுப் போயிடுச்சு. அந்த கடுப்புதான்!

@ பைத்தியக்காரன்

நன்றி அண்ணா. நண்பர் முரளிகுமார் பத்மநாபன் வீட்டு PCஐ சரிபார்த்துக் கொடுத்துவிட்டபடியால் இரவில் கொஞ்சம் நேரமொதுக்கி எழுத முடிகிறது!

@ அ.மு.செய்யது

நெஜமாவே நானும் விழுகாம விழுகாம சிரிச்சேன்க. அதான் குறிப்பிட்டேன்!

@ கதிர்

ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க. கூப்பிடறோம்!

@ ஊர்சுற்றி

நன்றி

@ வெயிலான்

கரெக்டு!

@ நாடோடி இலக்கியன்

எழுதும்போதே ரைமிங்கா இல்லையே அன்னைக்கு ரைமிங் இருந்ததேன்னு நினைச்சேன். குறிப்பிட்டதுக்கு நன்றி!

@ விக்கி

அப்படியா? நான் நண்பர்கள் கிட்ட இதப் பகிர்ந்துகிட்ட ஞாபகம் இருந்தது. பதிவுல எழுதீட்டேனா? சாரி பாஸூ!

Venkatesh Kumaravel said...

நல்லா இருந்துச்சு!
கன்ஸிஸ்டண்டா எப்படி தல பிச்சு உதறிக்கிட்டே இருக்கீங்க?

பரிசல்காரன் said...

@ வெங்கிராஜா

அப்படியா? எல்லாம் உங்க ஆதரவுதான்! (இத கேமராவைப் பார்த்து விரல் நீட்டி நான் சத்தமா சொல்றதா நினைச்சுக்கங்க பாஸூ!)

பரிசல்காரன் said...

@ வெங்கிராஜா

அப்படியா? எல்லாம் உங்க ஆதரவுதான்! (இத கேமராவைப் பார்த்து விரல் நீட்டி நான் சத்தமா சொல்றதா நினைச்சுக்கங்க பாஸூ!)

அன்பேசிவம் said...

ஆமால்ல, பில்லை கொடுத்த சாமிநாதனே ச்சும்மா “கலகலன்னு” சிரிக்கும்போது, நாமும் கொஞ்சம் சிரித்திருக்கலாம். என்ன தல?

நாஞ்சில் நாதம் said...

:)))

anujanya said...

Welcome back to form. நல்லா இருக்கு.

அனுஜன்யா

மௌனமான நேரம் said...

நீங்க present பண்ணற விதம் ரொம்ப அருமையா இருக்கு.

சின்னப் பையன் said...

:-)))))))

மேவி... said...

neenga sema cute ah handsome ah irukkinga

பரிசல்காரன் said...

@ முரளிகுமார் பத்மநாபன்

ஆமால்ல. (அவரு ஏன் அப்படிச் சிரிச்சாரோ....!)

@ நாஞ்சில் நாதம்

நன்றி!

@ அனுஜன்யா

வ.வா.பி.ரி! (நன்றிங்க சாரே...)

@ மௌனமான நேரம்

அத நீங்க சொன்ன விதமும் சூப்பர்ல!

@ ச்சின்னப்பையன்

என்னா சிரிப்பூஊஊஊ?

@ Mayvee

நன்றி & Forwarded to Manirathnam.

நிஜமா நல்லவன் said...

அவியல் சூப்பர்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி அய்யா -:)))

இறுதியா நீங்க போட்டுருக்க கவிதைய நானும் என்னோட பதிவுல போட்டுருக்கேன்... பட் என்னோட ஸ்டைல்ல.

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/07/blog-post_24.html

Prabhu said...

கடைசி கவிதை அறுமையா இருக்குதேன்னு பாத்தா... அது நீங்க எழுதல போல! அதான்!

தினேஷ் said...

//ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.//

ஓரு வேளை கூட ஒரு ஐயாயிரம் கொடுத்து மனைவிய மாத்திருந்தா சந்தோசப்பட்டிருப்பாங்களோ ?

தினேஷ் said...

//‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ என்று போட்டிருந்தார்.

ங்கொய்யால!//

ங்கொய்யாலதான் இப்படில்லாம் திருக்குறள மாத்துவாய்ங்கனு தெரிஞ்சிருந்த பாவம் தாடிக்காரரு இதை எழுதியே இருக்க மாட்டார்.

தினேஷ் said...

//மருமகன் ‘ருத்ரேஷ் இங்க பாருடா.. இங்க பாரு..’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்//

எம்மருமகன் பேரும் அதே .. ஆனா அவன் பொடியன் ஹூம் ஹூம் தவிர வேற தெரியாது கொஞ்ச நாள்ல மொத பிறந்தநாளா கொண்டாடப்போறாரு

ஆதவா said...

அவியல் வழக்கம் போல!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்கியை வாங்கினேன்... ஏமாற்றம்... ஒரு பக்கம் கூட படிக்கவில்லை!!!

கோபிநாத் said...

அவியல் - அட்டகாசம் ;)

@ ச் சின்னப்பையன் தல - ;) தயவு செய்து பெயரை மாத்துங்க தல ;))))

பழூர் கார்த்தி said...

:-)

Unknown said...

நல்ல அவியல்..

ஸ்வாமி ஓம்கார் said...

அவியல் அருமை.
கடைசி வரி கவிதைகள் அவியலுக்கு ருசிசேர்த்தது... இப்படி எல்லாம் யாரும் பின்னுட்டம் போடுவாங்கனு பார்த்த ஒன்னும் வரல :)

வேத வார்த்தையான அஹம்பிரம்மாஸ்மியை கிண்டல் செய்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

நடக்கட்டும் நடக்கட்டும்..

நன்றி பரிசல்

பரிசல்காரன் said...

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி பித்தன் (அதும் ஜூப்பரு!)

@ Pappu
//அறுமையா //
எழுத்துப்பிழை இருக்கு. எதுன்னு கண்டுபிடிங்க..

@ சூரியன்

//கூட ஐயாயிரம் கொடுத்து //

ரொம்ப குசும்பய்யா உமக்கு!

@ ஆதவா

நன்றி நண்பரே!

@ கோபிநாத்

ச்சின்னபையன் பெரிய ஆளுங்க!

@ நன்றி ப்ழூர் கார்த்தி & பட்டிக்காட்டான்

@ ஸ்வாமி ஓம்கார்

அது சரி! ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

பரிசல்காரன் said...

அவியல் அருமை.
கடைசி வரி கவிதைகள் அவியலுக்கு ருசிசேர்த்தது...

ஸ்வாமி ஓம்கார் said...

// பரிசல்காரன் said...

அவியல் அருமை.
கடைசி வரி கவிதைகள் அவியலுக்கு ருசிசேர்த்தது..//

வரும் வாரம் விளம்பர பேமண்ட் கலெக்ட் பண்ணிக்குங்க :)

ny said...

gr8 !

Thamira said...

ஹிஹி படிச்சு மூணு நாளாவுது, கொஞ்சம் பிஸிங்கிறதால பின்னூட்ட லேட்டாயிருச்சு..

அப்புறம் வழக்..

Thamira said...

அப்புறம் அது ஆண்கள் ரசிப்பதில்லை, கணவர்கள் ரசிப்பதுன்னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்..

(நா கூட முதல்ல கண்டுக்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டேன் ஹிஹி..)

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

சரிங்க ஸ்வாமிஜி!

@ கார்டின்

தேங்கஸ்!

@ ஆதிமூலகிருஷ்ணன்

//ஹிஹி படிச்சு மூணு நாளாவுது, கொஞ்சம் பிஸிங்கிறதால பின்னூட்ட லேட்டாயிருச்சு..//

யோவ்.. எழுதினதே நேத்துதான். அதெப்படி படிச்சு மூணுநாளாகும்???

பை த வே..

தேங்க்ஸ்!

Thamira said...

யோவ்.. எழுதினதே நேத்துதான். அதெப்படி படிச்சு மூணுநாளாகும்??//

ஹிஹி.. அப்பிடி ஒரு ஃபீலிங்கி..

selventhiran said...

நர்சிமை வழிமொழி....