![](http://2.bp.blogspot.com/_3BA7KTgeENE/Sk7XiWcolUI/AAAAAAAAAsw/fwQwa4Lhb5o/s400/Time_confusion.jpg)
கன்னத்தில் கைவத்தபடி
பூனையொன்றைப் பார்த்தபடி
அமர்ந்திருந்த அந்தக் குழந்தை
அழகாயிருந்தது.
‘புதுசா குடிவந்திருக்காங்க..’
என்றாள் மனைவி
‘அந்தக் குழந்தை பேரு கூட...’
யோசிக்க ஆரம்பித்தவளிடம் சொன்னேன்..
“பேரு வேண்டாம்..
குழந்தைன்னே இருக்கட்டும்..”
******************
என் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில்
எனக்கெந்தத் தயக்கமும் இல்லை.
உங்கள் கவலைகளையும்
பகிர்ந்து கொள்ளுங்களேன் என
இறைஞ்சப் போவதுமில்லை.
‘என் கவலைகள் எனக்கு
உங்களது உங்களுக்கு’ என்ற
வாசகமேதும் சொல்லப்போவதுமில்லை.
என் கவலைகள் குறையும்போது
அதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்
எனக்கு சந்தோஷம்தான்.
ஆனால் உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.
******************
‘எனக்கு நிகழ்ந்த எல்லாமும்
உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’
என்ற வரிகளில் ஆரம்பித்த
என் அடுத்த கவிதையை
எப்படித் தொடர்வதென்ற
யோசனையில் இருக்கிறேன் நான்.
எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...
.
75 comments:
//எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...//
டச்சிங் தல,
நீண்ட மௌனத்துக்கு பிறகு அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிட்டிருக்கீங்க போலிருக்குது, சீக்கிரம் வாங்க.
//என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது//
ரொம்ப நல்லாயிருக்கு பரிசல்.
parisal back to form.
நல்லா இருக்குங்க.
///“பேரு வேண்டாம்..
குழந்தைன்னே இருக்கட்டும்..”///
ரொம்ப ரசிச்சேன்.
எப்பவோ படிச்ச ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ரோஜா எந்த செடியில/வண்ணத்தில பூத்தாலும் ரோஜாதான்.
இரா.சிவகுமாரின்.. பின்னூட்டம் ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்..
ஆனா அந்த கவலை கவிதை எனக்க்கு பிரியலையேன்னு ஒரே கவலையாருக்கு.. அந்த கவலை என் கவலையா..? இல்லை எழுதின உங்க கவலையா./ இலலை.. கவலைய, கவலையா மட்டுமே எடுத்துகிடணுமா..?/ ஏன்னா.. உங்க கவலை உங்களது.. என் கவலை என்னுது.. இது புரியாத கவலை யாருது..?:)
எல்லாமே நல்லா இருக்குங்க அண்ணா..
முதல் கவிதை ரொம்ப பிடிச்சு இருந்தது..
அல்லேலுயா..
பரிசல், முதலில் வாழ்த்துகள் இந்த வித்தியாசமான முயற்சிக்கு.
முதல் கவிதை பிடித்திருக்கிறது; மூன்றாவதும். இரண்டாவது தர்க்கரீதியான வார்த்தைச் சேர்க்கைகளாக ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.
2nd one amazing.. enakku romba pidichirukku... :)
குழந்தை கவிதை அழகு
முதல் கவிதையில அந்த ”அழகாயிருந்தது ” தேவைப்படாதுன்னு நினைக்குறேன்.
ஜ்யோவ்ராம் சுந்தர்
4 July, 2009 10:29 AM
பரிசல், முதலில் வாழ்த்துகள் இந்த வித்தியாசமான முயற்சிக்கு.
முதல் கவிதை பிடித்திருக்கிறது; மூன்றாவதும். இரண்டாவது தர்க்கரீதியான வார்த்தைச் சேர்க்கைகளாக ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.///
சுந்தர்ஜீயே சொல்லிட்டார் இது கவிதைன்னு அப்ப இது எங்களுக்கு கவிதை இல்லீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ:))
@ தராசு
மிக்க நன்றி பாஸூ! (நேத்து கிலியைக் கெளப்பீட்டீங்களே....)
@ நாடோடி இலக்கியன்
உங்கள் வார்த்தைகள் எனக்குத் தரும் உற்சாகத்திற்காக மிகவும் நன்றி!
நன்றி இரா.சிவா
@ கேபிள் சங்கர்
ஏன்.. இல்ல.. ஏன்னு கேக்கறேன்?
@ லோகு
நன்றி!
@ அதிஷா
உன்ன உதைக்க ஆளில்ல...
@ ஜ்யோவ்ராம் சுந்தர்
குருஜி.. ரொம்ப மகிழ்வா உணர்றேன்.
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
@ ஸ்ரீமதி
நன்றிம்மா!
நன்றி செந்தில்வேலன்
@ சென்ஷி
நான் அதை எழுதும்போதே யோசிச்சேன். எப்படியிருந்தாலும் அழகுன்னும்போது அழகாயிருந்தது-ங்கறது எதுக்குன்னு. ஆனா அது ஒரு இது!
@ குசும்பன்
நன்றி மாப்ள!
பரிசல்,
முதலும் மூன்றும் அற்புதமான கவிதை. நேரில் மேலும் பேசுவோம்.
உன் தடைகளைத் தாண்டி நீ மீண்டு வந்ததில் வேறெவரையும் விட ஆகக் கூடுதலாக நான் மகிழ்கிறேன். உயிர்த்தோழன் பரிசளித்த விலை மதிப்பற்ற ஒரு பொருள், தொலைந்து பின் திரும்பக் கிட்டும்போதிருக்கும் பரவச நிலயெனக்கு.
தொடரட்டும் உன் பயணம் மீட்டெடுத்த உற்சாகத்துடன். செல்வாவின் வலைப்பூவின் தலைப்பை மீண்டுமொருமுறை சொல்லத் தோன்றுகிறது.
The BEST revenge is living WELL.
நல்ல இருக்கு பரிசல்..இன்னும்..நிறைய எழுதுங்கள்.
@ வடகரைவேலன்
நன்றீ அண்ணாச்சி. உங்கள் வழிகாட்டுதல் என்னை வழிதவறி நடத்தியதில்லை.
@ தண்டோரா
மிக்க நன்றி பாஸூ!
வணக்கம் பரிசல் அவர்களே, மூணாவது கவிதை ரொம்ப பிடித்திருந்தது.
ஏன்ப்பா கணேஷா இந்த கொடுமையெல்லாம் என்னானு கேக்கமாட்டியா!
புதுக்கவிதை க் குழந்தை அழகாயிருந்தது பரிசல்!
வாங்க பரிசல்.... நீண்ட இடைவெளி ஏனோ?
//மிக்க நன்றி பாஸூ! (நேத்து கிலியைக் கெளப்பீட்டீங்களே....)//
தலைவரே,
உங்களுக்கு அப்புறமா மெயில் அனுப்புனனே, வந்துதா???
////என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது//
ரைட்டு தல.
குழந்தை கவிதை.. குழந்தை போலவே...
பரிசல்... வாய்ப்பே இல்லை... கவிதைகள் மூன்றும் அருமை.. மூன்றாவது அற்புதம்.. கலக்கிட்டீங்க.. பாராட்டுகள்..
பிரமாதம்
வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
//“பேரு வேண்டாம்..
குழந்தைன்னே இருக்கட்டும்..”//
மெய்சிலிர்க்கவைத்து விட்டீர்கள்.. :-))))
//என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்//
பலர் செய்யும் தவறை நன்றாக கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.
Dear அதிஷா,
I can't understand and digest your comment.
Any relation between your comment and this poem..?
@ முரளிகுமார் பத்மநாபன்
மிக்க நன்றி நண்பா!
நன்றி வெயிலான்.
@ மகேஷ்
வேலை சாரே.. வேறென்ன?
@ தராசு
வந்துச்சு. ஒரே குழப்பம்.. ஏன் இப்படின்னு தெரியல..
@ நர்சிம்
என்னா ரைட்டு? ஒத விழும் வேற அர்த்தம் எடுத்துகிட்டா... ஆமா..
@ வெண்பூ
அழைத்தும் பாராட்டிய உங்கள் பண்புதான் என்னைச் செலுத்துகிறது தோழா!
@ இது நம்ம ஆளு
வர்றேங்க..
@ ராகவேந்திரன்
மிகவும் நன்றி!
@ மணிநரேன்
அப்படியெல்லாம் இல்லீங்...
@ மீனவன்
விடுங்க நண்பா... அவிங்க எப்பயுமே இப்படித்தான்...
முதல் கவிதை ரசிக்க..
இரண்டாவது திருந்த..
மூன்றாவது யோசிக்க..
நிஜமா நல்லாயிருக்கு சார்..
மீனவன் உங்களுக்கு ஜீரணம் ஆகவில்லையென்றால் டைஜின் வாங்கி அருந்தவும் அது மாத்திரைகளாகவும் அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.
கவிதைக்கு தொடர்பாகத்தான் பின்னூட்டமிடவேண்டும் அகில உலக பதிவுலக நீதிமன்றத்தில் எந்த சட்டமும் இதுவரை இடப்படவில்லை நண்பா.
மீனவ நண்பா கோபப்பட வேண்டாம்..
ஆசுவாசத்தில் அல்லது பிரமிப்பில் கடவுளேனு சொல்வதில்லையா..!
*************
பரிசல்காரன் என் மீது கோபமிருந்தால் நேரடியாக எனக்கு போனில் அழைத்துச்சொல்லி இருக்கலாம் அதைவிடுத்து இப்படி மீனவன் என்றபெயரில் திட்டுவது முறையல்ல..
போலி பெயராவது சரியாக வைக்கவும்.. பரிசல்காரன் மீனவன் என தண்ணியில் மிதப்பவர்கள் பேர்தான் வச்சுப்பீங்களா!
உங்கள் நேர்மையில் எருமை சாணி போட
Super
ஆரம்பிசுட்டீங்களா..?
நியாயமா நான்தான் கோபப்படணும்..
நீங்க எதுக்கு வீணா டென்சன் ஆகறீங்க..?
மீனவ நண்பா உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி.
தெரியாத நீங்களே எனது பின்னூட்டத்தை சர்வஜாலியாக எடுத்துக்கொண்டது குறித்து மகிழ்ச்சி.
நன்கு பழகிய பரிசல்காரன் போன்ற நண்பர்கள் முதுகில் குத்தும்போதுதான் வலிக்கிறது.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
முதல் கவிதை ரசிக்க வைத்தது.
நன்றி அதிஷா.,
ஒரு சின்ன திருத்தம்,
பரிசல்காரன் என்றைக்குமே முதுகில் குத்துபவரல்ல..
முதுகில் தட்டி கொடுப்பவர்தான் அவர்..!
//manikandan said...
டேய் புறம்போக்கு அதிஷா, உங்க சண்டை எல்லாம் சாருவோட வச்சிக்கோங்க.. இது எல்லாம் இலக்கியம் படைக்க்கற இடம். என்ன கிசு கிசு , வாரமலர் துணுக்கு மூட்டை எழுதற சாரு ஆன்லைன் நினைச்சுகிட்டியா ?//
:((
பரிசல் பதிவிலுமா?!
//ஆனால் உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.//
வாவ். அருமையான வரிகள். உண்மையில் ரசித்தேன்.
/
ஆனால் உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.
/
கரெக்டா சொன்னீங்க!
:)))
மேற்கூறியவர்கள் போல் எனக்கும் முதற்கவிதையும் மூன்றாவதும் வாசிப்பின்பம் தருகிறது...
ஆனாலும் என் choice..
இரண்டாம் கவிதையே... அது அத்தனைத்துவமும் கொண்டது.
(i really admire... jus keep writin poems too..)
பரிசல், எனக்கு மூன்றும் பிடித்திருக்கிறது. என்னளவில் நல்ல கவிதையின் ஆதாரமாகக் கருதுவது எளிமையும், புரிதலும். எவ்விதச் சிக்கல்களும் இல்லாத கவிதைகள்.
இங்கு என்ன நடக்குது?
sorry ..wrong number
நம்ப டீம்ல இரண்டு பேர் கவிதை எழுதுனா எனக்கு புடிக்காது. இனி அப்படிச்சொல்லமுடியாது போல தெரியுது. அவரும் பின்றார், நீங்களும் அதெப்படி சொல்லலாம் என்பது போல முயற்சித்து வருகிறீர்கள்.
மூணும் நல்லாருக்குது!
இரண்டாவது மனசுக்குள நடக்குற தர்க்கத்த வெளிப்படுத்துற மாதிரி.... ம்ம்ம்...குட்.
2வது நல்லாருக்கு கே.கே.
அருமை
நன்று.
நான்காவது கவிதை நெம்ப சூப்பர் ....!!! நெம்ப டச்சபுளா இருந்துது..!!! வாழ்த்துக்கள்....!!!!
வாழ்த்துகள் பரிசல்!
//உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.//
அருமையான வரிகள்... ஆயிரம் அர்த்தம் இருக்கிறது
பரிசல் தான் இந்தவார நட்சத்திரம் என்று சென்றவாரம் ஊகித்தேன்.
வாழ்த்துகள் பரிசல்.
ரொம்ப அருமையா இருக்கு!
:)))
மூன்றுமே அருமை, அதிலும் இரண்டாவது மிகவும்.
அனைத்தும் அருமை..2வது சூப்பரு ;)
அன்பின் பரிசல்
கவிதை நன்கு இருக்கிறது
அனைவருமே நமது கவலைகளை அனைவரிடமும் பகிரத் தயங்குவோம் - ஆனால் அடுத்தவர் கவலைகளை அனைவரிடமும் பகிர்வோம். இது இயற்கை. மாற வேண்டும் நாம். மாறுவோமா ?
//நம்ப டீம்ல இரண்டு பேர் கவிதை எழுதுனா எனக்கு புடிக்காது//
என்னாது டீமா? ங்கொக்கமக்கா.. டீமெல்லாம் வச்சிருக்கிங்களா? அதுல சேர எதும் குறைந்த பட்ச தகுதி இருக்கா? :)
//Your comment has been saved and will be visible after blog owner approval.//
அடங்கொன்னியான்.. இது எப்போ இருந்து?
Welcome back :-)
"பேரு வேண்டாம்
குழந்தைன்னே இருக்கட்டும்"
வேறு கவிதை வாசிக்கவேண்டாம்
இந்த ஒரு நாளுக்கு..
நாக்குலேயே இருக்கட்டும்
நல்ல கவிதை!
கடைசிக் கவிதை எனக்கு
மிகவும் பிடித்தது
அருமையான கவிதைகள்
நட்சத்திர வாரம் ஜொலிக்குது..
//நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...//
இல்லியே.....அடுத்த வரி என்னவாயிருக்கும்னு யோசிச்சுட்டிருக்கேன்!
இவ்வளவு லேட்டா வந்தா,பின்னூட்டம்ல கூட originality இருக்க முடியாது :(.
சுந்தர் சொன்னது தான் என் கருத்தும். மூன்றாவது மிகப் பிடித்தது.
கவிதையுலகுக்கு நல்வரவு நண்பா. இனிமேல் சரா, முத்துவேல், யாத்ரா, நந்தா, மண்குதிரை, சேரல், பிராவின்ஸ்கா, முத்துராமலிங்கம், லாவண்யா மாதிரி பரிசல் பெயரும் 'அடிபட' வேண்டும் :).
Seriously, அவ்வப்போதாவது கவிதை எழுதவும். உரைநடையின் அனுகூலங்கள் புலப்படும்.
அனுஜன்யா
நல்ல கவிதையைப் படித்தால் வாழ்நாளின் உன்னத கணங்களில் இருந்த நிறைவு ஏற்படுவது வழக்கம். இப்போது அது எனக்கு.
நன்றி.
இரண்டாவது கவிதை அருமை தல..
:)))
சொல்ல வார்த்தை இல்லை, உங்கள் வார்த்தைகளுக்கு!
வார்த்தைகளை சொல்லிவிட்டாலும் சொல்ல வந்த வார்த்தைகளில் பாதி ஒளிந்தே கொள்கின்றன!
என்னத்தை சொல்ல உங்கள் எண்ணத்தைப்பற்றி!!
முடிந்தால் முட்டிப் பாருங்கள் இந்த பிஞ்சு கவியின் கொஞ்சத்தை!
mirthonprabhu.blogspot.com /////
nanri munru kavithaiku
http://apdineshkumar.blogspot.com/
http://apdineshkumar.blogspot.com/ nanri
உங்களின் மூன்று கவிதைகளை நான் என் பத்திரிக்கையில்
பிரசுரிக்கலாமா...
உங்களின் மூன்று கவிதைகளை நான் என் பத்திரிக்கையில்
பிரசுரிக்கலாமா...
Post a Comment