Monday, July 6, 2009

அ-

திகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...

லுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ்! ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன? அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

ந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.

வர்கள் கேட்டது…

'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர்? ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா? கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே?' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.

திஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ!

ண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா?’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!

டுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு! மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

வியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற?) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.

.

88 comments:

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

பதிவை இன்னும் படிக்கல.. படிச்சிட்டு வரேன் :)

நட்சத்திர வாழ்த்துகள்!!!

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!

அ- முழுசும் படிச்சுட்டேன் :)

அ.மு.செய்யது said...

// இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ! //

உங்க‌ நேர்மை பிடிச்சிருக்கு பாஸு...ப‌திவுல‌கில்
இதெல்லாம் பாக்குற‌து கொஞ்சம் க‌ஷ்ட‌ம் தான்.

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌மான‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ் அல்ல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸ்டாருக்கு வாழ்த்துகள்.. கொஞ்சல் ஓல்டுன்னாலும் நீங்க கோல்ட் ஆச்சே

எம்.எம்.அப்துல்லா said...

சூப்பர்ஸ்டாருக்கு நட்சத்திர வாழ்த்துகள்

:)

எம்.எம்.அப்துல்லா said...

வந்த புதுசுல ரெண்டுபேரும் போட்டிபோட்டு பதிவு போடுவோமே!!! அத இந்த நட்சத்திர வாரத்திலும் செய்வோமா???

(முதல்ல எல்லாருக்கும் ஒழுங்கா பின்னூட்டம் போடுடா வெண்ண என்று நீங்கள் சொல்வது காதில் விழுகின்றது )

வெட்டிப்பயல் said...

அ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா?

எம்.எம்.அப்துல்லா said...

//அ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா?

//


:))))

சரவணகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

பரிசல்,
நட்சத்திர வாழ்த்துகள்,

(இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.)

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!!!

குசும்பன் said...

வாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்!

முரளிகண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல்

நர்சிம் said...

ரைட்டு தலைவா.. மிக மகிழ்வாக உணர்கிறேன்.

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

தராசு said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்,

//இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ//

தல, உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

//இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.//

ஆமா ஜாலிதான், எங்கயாவது ஆணி அதிகம், அப்பிடி இப்பிடின்னு டிமிக்கி குடுத்தீங்க, ரணகளமாயிப்போயிரும் ஆமா, சொல்லீட்டேன்.

AvizhdamDesigns said...

நிச்சயமாகவே இயற்கையை ரசிக்க நல்ல ரசனை வேண்டும்.
இயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த காதல் புரிகிறது பரிசல் சார்.
நம்மால் முடிந்த வரை இயற்கையை காப்பாற்றுவோம்...


நட்பு :
இது மரணத்தை விட அதிகம் பாதிக்கக் கூடியது என்று நான்
புனித பைபளில் படித்திருக்கிறேன்.

நட்பு உலகில் உன்னதமானது.



ஆலோசனை சொல்லுவதற்கோ, திட்டுவதற்கோ பரிசல்காரனுக்கு என்றைக்குமே
உரிமை உண்டு.

"அவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல" என்று நீங்கள் சொன்னாலும் இதில் ருசி இருக்கிறது.

வாழ்த்துக்கள் சார்..!

ரமேஷ் வைத்யா said...

அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை

☼ வெயிலான் said...

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கிருஷ்ணகுமாரா!!!!!!!

வாழ்த்துக்கள்!!!

பரிசல்காரன் said...

@ வெட்டிப்பயல்

நட்சத்திர வாரத்துல முதல்ல வந்து சரித்திரத்துல இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்! (ஹி..ஹி..)

நன்றி சென்ஷி, செய்யது, கார்க்கி, அபதுல்லாண்ணே.. (கொழுப்புய்யா உமக்கு.., சரவண குமரன், நாடோடி இலக்கியன், ஜெகதீசன்!

மங்களூர் சிவா said...

வாழ்த்துகள்!!!

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

வாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்!
/

ரிப்பீட்டு!

Kumky said...

ச்சால சந்தோஷ்ஷமண்டி...

பரிசல்காரன் said...

@ குசும்பன்

நன்றி ஸ்வாமி!

நன்றி முரளி..

@ நர்சிம்

நானும்...

@ தராசு

பின்னீடலாம்...

@ மீனவன்

மிக்க நன்றி நண்பரே..

@ ரமேஷ் வைத்யா

அட்றா சக்கையா? நேத்து.. சரி விடுங்க.. நல்லாயிருங்க...

@ வெயிலான்

ஏன்ம்ப்பா??? ஏன் இந்த கொலவெறி?

பரிசல்காரன் said...

மங்களூர் சிவா..

ரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி!

@ கும்க்கி

மீக்கும்..

மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

மங்களூர் சிவா..

ரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி!
/

என்னது ரொம்ப நாள் கழிச்சா? உங்க பதிவு எதும் மிஸ் பண்ணலையே??

பரிசல்காரன் said...

சிவா..

மூணு பின்னூட்டம்ன்னு சொன்னேன் தல..

அப்ராணியா இருக்கியே...

ஜோசப் பால்ராஜ் said...

நட்சத்திர பரிசலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

இயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள பாசம் பாராட்டுக்குறியது.
இந்த இயற்கையை பாதுகாக்க என்ன செய்யலாம் என " எதாச்சும் செய்யணும் பாஸ்" டைப்ல ஒரு பதிவையாச்சும் நீங்க இந்த நட்சத்திர வாரத்துல எழுதணும்கிறது தம்பியோட கோரிக்கை.

குசும்பன் said...

எனக்கு இந்த அ தலைப்பை படிச்சதும்
ஒருபடத்தில் வயசான பெருசுங்களுக்கு டீச்சர் அ
ஆ கத்து கொடுக்குமே பெருசுங்களும் ஆஆஆஆஆன்னு கோரஸ் கொடுக்குங்களே அது நினைவுக்கு வருவது மட்டும் இன்றி அந்த டீச்சராக உம் முகம் நினைவுக்கு வருது பரிசல் ஏதும் பிரச்சினையாக இருக்குமோ?

☀நான் ஆதவன்☀ said...

"அ"து!! வாழ்த்துகள் பரிசல்...

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..... :)

மணிகண்டன் said...

தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். அந்த மணிகண்டன் நானா ?

பரிசல்காரன் said...

@ ஜோசப் பால்ராஜ்

சரிங்க பால்ராஜ் அண்ணா. ஆனா அதுக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஆடக்கூடாது!

@ குசும்பன்

பிரச்னை இல்லை குசும்பா. (மேலதிக விபரங்களுக்கு MFM வாங்க!)

நன்றி நான் ஆதவன்!

@ இராம்

நன்றி நண்பா.

@ மணிகண்டன்

இல்ல. இல்ல. இல்லவே இல்ல!
அது நீங்க இல்ல!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நட்சத்திர வாழ்த்துகள் பரிசல். நீங்க அண்ணாச்சியைப் பத்தி சொன்னது மிகச் சரியானது.

மணிகண்டன் said...

***
இல்ல. இல்ல. இல்லவே இல்ல!
அது நீங்க இல்ல!
***

அதானே !

அறிவிலி said...

அ- ருமை

தமிழ் said...

வாழ்த்துகள்

இந்த மாதம்
தமிழ்மணத்தில் என்ன
கோவை வாரமா

:)))))))))))))))))

திகழ்

Venkatesh Kumaravel said...

நட்சத்திர வாழ்த்துகள்! :D

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

திரு.பரிசல்..

எதிர்பார்ப்புடன்..

அமுதா said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!

நாஞ்சில் நாதம் said...

பரிசல்

வலையுலகில் உங்களுக்கு நிறைய நண்பர்கள். எல்லோரையும் DIPLOMATIC க்கா ஹண்டில் பண்ணுறீங்க. (இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ)

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌மான‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

கே.என்.சிவராமன் said...

நட்சத்திர வாழ்த்துகள் பரிசல் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அக்னி பார்வை said...

'அ’ --ஆஹா

seik mohamed said...

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌மான‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

iniyavan said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் பரிசல்.

Vijayashankar said...

நல்ல இருக்குங்க பரிசல்.

நண்பர் டிவி சுந்தரவடிவேலு (திருப்பூர்) சொல்கிறார், அங்கு ரசனையற்ற, பணமே குறிகோளாக இருக்கும் வாய்ப்பு தான் அதிகம் என்று. கொஞ்சம் கூட பச்சை இல்லையாம்! (நீங்கள் கட்டிடம் பற்றி எழுதியவை.... ?)

அப்புறம் நாடோடிகள் படம் மூலம் இன்னொரு டி.ராஜேந்தர் கிடைத்துவிட்டார், கண்ணீரை பிழிய வைக்கும் தங்கை (இப்போ நண்பன்) பாசம் என்று ஒரு பதிவர் எழுதியது ஞாபகம் வந்தது! படம் பார்க்க முடியாமல், ஒரு நண்பன் கால் எடுத்தவுடன், நாங்களும் தியேட்டரில் இருந்து நடையை கட்டினோம்!

நிகழ்காலத்தில்... said...

//அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!//


அதில் என்னையும் சேர்த்துக்கோங்க பரிசல்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்:)

KARTHIK said...

நட்சத்திர வாழ்த்துகள் தல

Unknown said...

தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.....!!!!


" அ "... மட்டும் சொல்லீருக்குறீங்க...... அப்போ " ஆ " சொல்லுறதுக்கு
யஸ். ஜெ . சூர்யா வருவாரா.......??

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் பரிசல்காரன். நட்சத்திர வாரத்தை சுவாரஸ்யத்தோடு எதிர்பார்க்கிறேன்

Thamira said...

நான்தான் வழக்கம் போல லேட்டா.? நச்ச்ச்ச்ச்ச்சத்திர வாத்துகள் பரிசல்.!!

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் பரிசல்..

சகாதேவன் said...

ழகு
ருமை
ற்புதம்

சகாதேவன்

மொக்கை மோகன் said...

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

அசத்துங்க
அண்ணாச்சி :-)

வாழ்த்துகள்

வால்பையன் said...

காலையொன்று, மாலையொன்று என இருவேளை அவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்!

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

RRSLM said...

வாழ்த்துகள் பரிசல்!

இந்த வாரம் தினம் ஒரு பதிவு கண்டிப்பாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.......அலுவலுகிடையே எவ்வளவு சிரமம் என்பதும் புரிகின்றது.....

மீண்டும் வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர்
அறிவிலி
திகழ்மிளிர்
வெங்கிராஜா
பேரரசன்
அமுதா
நாஞ்சில் நாதம்
பைத்தியக்காரன்
அக்னிபார்வை
பார்சாகுமாரன்
இனியவன்
விஜயசங்கர்
சிவா (நிகழ்காலத்தில்)

பரிசல்காரன் said...

நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர்
அறிவிலி
திகழ்மிளிர்
வெங்கிராஜா
பேரரசன்
அமுதா
நாஞ்சில் நாதம்
பைத்தியக்காரன்
அக்னிபார்வை
பார்சாகுமாரன்
இனியவன்
விஜயசங்கர்
சிவா (நிகழ்காலத்தில்)

பரிசல்காரன் said...

நன்றி

முத்துலட்சுமி முthulatchumi
கார்த்திக்
லவ்டேல் மேடி
வல்லி சிம்ஹன்
ஆதி
கேபிளார்
சகாதேவன்
மொக்கை மோகன்
ஆசிஃப் அண்ணாச்சி
வால்பையன் (இதுக்கே டகுலு கிழியுது)
ராமலக்‌ஷ்மி
டி விஆர்
RR (Thanks 4 ur Understanding!)

ILA (a) இளா said...

வாழ்த்துகள்!!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

ச.ஜெ.ரவி said...

வணக்கம் கிருஷ்ணகுமார்,
நல்லா இருக்கு பதிவு.
நானும் திருப்பூர் தான்.
நேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.
உங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.

ச.ஜெ.ரவி said...

வணக்கம் கிருஷ்ணகுமார்,
நல்லா இருக்கு பதிவு.
நானும் திருப்பூர் தான்.
நேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.
உங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள்

♫சோம்பேறி♫ said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல். இப்போ தான் first time ஸ்டார் ஆவுறீங்களா?

I think its too late..

BTW, nice post.. :-)

Prabhu said...

அ- னு விட்டுட்டா நாங்களே பில் பண்ணுவோம்ல. நாங்களாம் ஆறாப்புல முதல் ரேங்க் எடுத்தவனுங்க!

Prabhu said...

நீங்க நட்சத்திரமாமே! பூமிக்கு கிட்ட இருக்க நட்சத்திரம் சூரியன்னு நெனச்சேன்!!

Athisha said...

அல்லேலுயா..

அப்புறம்... அசத்தலாக தமிழ்மண நட்சத்திரமாகிட்டீங்க அடுத்து எப்போ ரிட்டயர்மென்ட் வாங்கப்போறீங்க..வாழ்த்துக்கள்

அநியாயம்... அதிஷால அ இருக்குனு அனாவசியமா அகில உலகம் போற்றும் எனது ஆறுயிர் நண்பர் மணிகண்டனை அளவுக்கதிகமாய் வரம்புமீறி அசிங்கமாக திட்டியதற்காக மீண்டும் என் கண்டனத்தை பதிகிறேன்

அன்போடு
அதே தோழமையுடன்
அதே அதிஷா

*******

அழகான ஒரு ஆயா படமாவது போட்டிருக்கலாம்.என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.

na.jothi said...

வாழ்த்துக்கள் பரிசல்

மாதவராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்... நண்பரே!

மோகன் கந்தசாமி said...

வாழ்த்துக்கள் பரிசல்காரன்!

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்.

நிறைய எழுதுவீர்கள் என்ற எதிப்பார்ப்புகளுடன்...

cheena (சீனா) said...

அன்பின் பரிசல்

நடசத்திரப் பதிவராக - அண்ணாச்சியினைத் தொடர்வதற்கு நல்வாழ்த்துகள்

அருமை
அழகு
அரிய செய்திகள்

தொடர்க

கானா பிரபா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நன்றி இளா
கோபிநாத்
ச.ஜெ.ரவி (மெயில் பண்ணுங்க தோழர். சந்திப்போம்!)

நன்றி முத்துராமலிங்கம்

@ சோம்பேறி (எம் பேரை நீங்க வெச்சிருக்கீங்க... ஹி..ஹி..)

ஏற்கனவே ஒருமுறை தமிழ்மணத்துல மெயில் பண்ணுனாங்களாம். நான் கவனிக்கல. அதான் இப்ப...

@ பப்பு

அட!

@ அதிஷா

ரிடயர்மெண்டா? யோவ்... இந்த மாதிரி உளர்றதாலதான் வர்றவன் போறவன்லாம் திட்டறான். திருந்தவே மாட்டியா மாப்ள?

//என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.//

நீ படிக்கலன்னு எவன் அழுதான்னு சொல்லு? கூ கெ கு!

நன்றி J!

பரிசல்காரன் said...

@ மாதவராஜ்

மிக்க நன்றி ஐயா!

@ மோகன் கந்தசாமி

நன்றி நண்பா

@ மணி நரேன்

நன்றி தோழர்!

@ கானா பிரபா

டேங்க்ஸுப்பா!

@ அன்பின் சீனா ஐயா

நன்றிங்க!

"உழவன்" "Uzhavan" said...

//நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம்//
ஆரம்பமே அட்டகாசம்.. நட்சத்திர வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

ஆ!!வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

அண்ணாச்சி பற்றி சொல்லி இருப்பது சரி.. அண்ணாச்சிக்கு ஒரு பரிசல். அட அதாங்க சல்யூட். :)

புன்னகை said...

வாழ்த்துகள்!!! :-)

கிரி said...

நட்ச்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள் கே கே :-)

பரிசல்காரன் said...

@ உழவன்

நன்றி!

நன்றி ராஜநடராஜன்

@ சஞ்சய்

ஆமா மாப்ள!

@ மாதேவி, புன்னகை, கிரி

நன்றிகள்!

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பரிசல்