Sunday, July 12, 2009

அள‌வில்லா ஆ******

சென்ற வாரம் அமைதியாக சென்றது. முதலில் திங்கள்கிழமையும், பின் செவ்வாய்கிழமையும் அதன் பின் புதன் கிழமையும்... இருங்க இருங்க. சரி இதை விட்டுடுவோம்.

ஆறாம் தேதி என் ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் தொட‌ங்கிய‌து. அடுத்து ஏழாம் தேதி வ‌ந்த‌து. அத‌ன் பின்.. அட‌ இருங்க‌ பாஸ்.. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டு ஓடினா எப்ப‌டி? இதையும் விட்டுடுவோம்.

ஒரு வாச‌க‌ர் ம‌ட‌லிட்டார். அட என்னப்பா நீங்க?.இது அதுவல்ல. நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு. அதுச‌ரி. புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா?

என்ன‌தான் காரண‌ம் சொன்னாலும் வாய்ப்பை ச‌‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து உண்மைதான். அத‌னால் என்ன‌ பாஸ்? ந‌ம‌க்கெல்லாம் எப்ப‌வுமே நட்ச‌த்திர‌ வார‌ம் தான். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஆணிக‌ள் குறைந்து, நேர‌ம் கிடைத்து ந‌ம்மால் ஆன‌ டேமேஜை ப‌திவுகல‌கிற்கு செய்வேன் என்று உள‌மாற‌ உறுதி கூறுகிறேன்.

வாய்ப்ப‌ளித்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ந‌ன்றி.. ஆத‌ர‌வ‌ளித்த‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌திற்கும் ந‌ன்றி.


அள‌வில்லா ஆணிக‌ளுட‌ன்,
ப‌ரிச‌ல்கார‌ன்.

19 comments:

கோவி.கண்ணன் said...

//நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு//

பட்டர் ப்ளை எபெக்ட்டா ?

மணிகண்டன் said...

அடிக்கடி எழுதுங்க பரிசல்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள். எப்போதும் கடைசியாக வந்தபடியால் இப்போது சீக்கிரமா வந்து சொல்லிக் கொள்கிறேன்:)!

நாமக்கல் சிபி said...

//நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு//

பன்றி காய்ச்சல் பிரச்சினைக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும் பாஸூ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா? //:-)))

குசும்பன் said...

நட்சத்திரமா நீங்களா? எப்ப ஆனிங்க?

குசும்பன் said...

///பல வருடங்களாக பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்து///

ஓ உங்க ஊரில் யாருக்கும் காது குத்து, மஞ்சள் நீராட்டுவிழா, கல்யாணம் எல்லாத்துக்கும் உங்ககிட்ட வந்துதான் பத்திரிகை எழுதி வாங்கிக்கிட்டு போவாங்களா? இல்லை பத்திரிகையில் அட்ரெஸ் எழுத சொல்லி வாங்கிக்கிட்டு போவாங்களா? டீட்டெயில் பிளீஸ்!

(விவேக்கிடம் ஒருத்தவன் 25 பைசா போட்டுவிட்டு பிளைட் ஆக்சிடண்ட் ஹிஸ்டரி கேட்பானே அதுமாதிரி, நான் ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கேன், எனக்கு கேட்க ரைட்ஸ் இருக்கு!)

குசும்பன் said...
This comment has been removed by the author.
Athisha said...

அளவில்லா ஆபாசம்னு ஆசையோட வந்தவனுக்கு ஆப்படிச்சு விகரமன் பாணில அளவில்லா ஆனந்தம்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்களே தல!

உங்க பேச்சு க்கா

மேவி... said...

"அதிஷா said...
அளவில்லா ஆபாசம்னு ஆசையோட வந்தவனுக்கு ஆப்படிச்சு விகரமன் பாணில அளவில்லா ஆனந்தம்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்களே தல!

உங்க பேச்சு க்கா"

periya repeat.......

RRSLM said...

//வாய்ப்பை ச‌‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து உண்மைதான்.//
இது தான் வாய்ப்பு என்று கருதி, நீங்களும் "அந்த புயலில்" கலந்து விடாமல் எங்களை காப்பாற்றியதற்கு தங்களுக்கு நன்றி! எப்பொழுதும் நீங்கள் ஸ்டார் பதிவர் தான் பரிசல்! வாழ்த்துகள்!

anujanya said...

இன்னும் நிறைய, நல்ல பதிவுகள் எதிர்பார்த்தேன். ஆனால், வேலை முக்கியம். அதனால பரவாயில்ல.

மேலும், ஒரு வேளை அப்படிப்பட்ட நல்ல பதிவுகள் விழலுக்கு இரைத்த நீராகவும் ஆகி இருக்கலாம் - சண்டை/சச்சரவுகள் வாரத்தில் யார் இவற்றைக் கவனிக்கப் போகிறார்கள் :((

அனுஜன்யா

Cable சங்கர் said...

எனக்கென்னவோ.. நட்சத்திர வாரத்தைவிட முன் சென்ற வாரங்களில் இட்ட பதிவுகள் நன்றாக இருந்ததாய் ஒரு எண்ணம்.. இப்படி பின்னூட்டம் போட்டதுக்காக நாளைக்கு ராத்திரி மீட் பண்ணாம இருந்திருராதீங்க.. :)

Anonymous said...

கவலைப்படாதீங்க பரிசல், இன்னொரு முறை நட்சத்திரமாகும் வாய்ப்பு கண்டிப்பா கிடைக்கும்.

Unknown said...

இப்புடியெல்லாம் நல்ல புல்லையாட எழுதுனா ... நாங்க நம்பீருவமா.....???

உங்கள் ஆட்சி சரியில்லாததால்.... பேரிழப்பை சந்தித்த எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும் என்று ...... எங்கள் மாபெரும் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் ....!!





இங்ஙனம் ,


லவ்டேல் மேடி ...

( அ . உ . மொ . ப . ச . )


( அகில உலக மொக்கை பதிவர் சங்கம் )

நாஞ்சில் நாதம் said...

:)))

கடைக்குட்டி said...

post comment தெரிய மாட்டேங்குதுங்க...

கலர் மாத்தவும்...

:-) தொடர்து கலக்க வாழ்த்துக்கள்.

Bleachingpowder said...

//புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா? //

நீ சரி, நீ தப்புன்னு சொல்ல கூட எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்குதுல்ல. பிரபலாமாக இருப்பதும், சில சமயம் நண்பனாய் இருப்பதும், எழுத்தாளனுக்கு எப்போது இடைஞ்சல் தான்.

அப்புறம், "post the comment" கலரை மாத்தினால் தான் என்னவாம், தடவி தடவி கமெண்ட் போட வேண்டியிருக்குது.

Unknown said...

//.. ந‌ம‌க்கெல்லாம் எப்ப‌வுமே நட்ச‌த்திர‌ வார‌ம் தான்..//

அதுதானே..!!

கலக்குங்க பரிசல்..