கூடத்தில் வானொலியில்
வழிந்து கொண்டிருந்தது நல்லதொரு
சங்கீதம்.
முற்றத்தில்
ஐந்தாறு மழலைகள்
உரக்கச் கத்தியபடி
விளையாடிக் கொண்டிருக்க
உள்ளிருந்து கேட்டது
அப்பாவின் குரல்-
‘எல்லாரையும் துரத்துடா.
கீர்த்தனை கேட்க விடாம
என்ன கூச்சல் இது’
நான் யாரையும் துரத்தவில்லை;
துரத்த மனமில்லை.
அப்பா வெளியே வந்து
‘சங்கீதத்தை
ரசிக்கத் தெரியாத ஜடமே’
என்றெனைத் திட்டிப் போனார்
மறுபடி மழலைகள்
கலகலவெனச் சிரித்தனர்
நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அப்பாவை நினைத்துச்
சிரித்தபடி.
(ஜூன் 1 – 1996 – மனோரஞ்சிதம் இதழில் வெளியானது)
***********************************
சேர்த்து வைத்த கவிதைகள்
எழுதி முடித்த பழைய டைரிகள்
எப்போதோ
உயிருக்குப் போராடி மீண்டு வந்தபோது
டாக்டர் தந்த ப்ரிஸ்க்ரிப்ஷன்
இறந்துபோன பாட்டியின் கடிதம்
நண்பர்களின் ஆட்டோகிராஃப்
இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
புரட்டிப் பார்க்க.
*************************************
‘உங்கள் கவிதை
என்னைக் கவர்ந்தது
அலுவலக மேஜைக்
கண்ணாடிக்கடியில்
அதை வைத்துள்ளேன்’
அறிவித்தார் நண்பர்.
எனக்கும் பிடித்த கவிதைகள்
எத்தனையோ உண்டு.
அப்படிப் பாதுகாக்க
எனக்கும்தான் ஆசை.
யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு வேலையும்-
கண்ணாடி வைத்த மேஜையும்?
(ஜூலை 94 உங்கள் ஜூனியரில் வெளியானது)
(இந்தக் கவிதை எழுத்தாளர் உமாசம்பத் அந்தக் காலகட்டத்தில் என் கவிதையொன்றைப் பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் எழுதி... வெளியானது)
.
54 comments:
கடைசி கவிதை மிகவும் அருமை.
அட!ரொம்ப நாளைக்கு அப்புறம் மீ த ஃபர்ஷ்ட்டூ :))
முதலும் கடைசியும் A 1.
மூன்று கவிதைகளுமே பிடித்திருக்கு.
கடைசி கவிதை வெகுவாக ரசிக்க தக்க கவிதை. முதல் உள்ளுக்குள் அசைபோடக் கூடியது.
கவிதைகள் பிரமாதம் பரிசல்!
அழகான கவிதை.
முதல் கவிதையும் கடைசி கவிதையும் அருமை.
//உங்கள் கவிதை
என்னைக் கவர்ந்தது//
ஆமாம் தல, இன்னுமொருமுறை உங்கள் கவிதை என்னைக் கவர்ந்தது.
nice!
முதல் கவிதை அசத்தல்...
சின்ன அம்மிணி சொன்னதே.
ஒன்றும் மூன்றும் பிரமாதம்!!
//இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
புரட்டிப் பார்க்க.//
அருமை..
கடைசி கவிதை நெருக்கமான அனுபவம்
எல்லோருக்குமாக
இல்லையா பரிசல்
கடைசி கவிதை நச்...
ஆதி, இது என்னன்னு கேட்க மாட்டிங்களா?
நீங்க மூணு கவித போட்டா, மூணாவது the besta இருக்கே. ஏன்?
கே.கே.
மூணுமே நீங்க எழுதியதா? நல்லா இருக்கு.
முதல் கவிதையில் 'அப்பாவை' குப் பதில் 'பெரிய குழந்தையை' என்றால் எப்புடி? நாமளும் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்னு தான் :)
அனுஜன்யா
முதல் மற்றும் மூன்றாம் கவிதைகள் அருமை.வெகுவாக ரசித்தேன்.
பரிசல் ,கவிதைகள் அழகு, இதை தயவுசெய்து படிக்கவும்
விளம்பரத்திற்காக அல்ல
http://gg-mathi.blogspot.com/2009/07/blog-post_23.html
பரிசல்
எதோட்சையாக இந்த தலைப்பு "தலைப்பில்லாத கவிதைகள்" எப்பொழுதோ நான் வைத்துள்ளேன்
http://gg-mathi.blogspot.com/2009/03/blog-post_3019.html
கலக்குங்க..ஸாரி கலக்கி இருக்கீங்க..94,96லயே..
ம்
நல்லா இருக்கு..!!
//
மின்னுது மின்னல்
மூன்றாவது கவிதை (மாத்திரம்) பிடித்திருந்தது.
முதல் கவிதையும் மூன்றாவது கவிதையும் தரம்.
இரண்டாவது அழகு.
// 1996 – மனோரஞ்சிதம் இதழில் வெளியானது)//
நான் அப்ப ஆறாம்ப்பு படிச்சிட்ருந்தண்ணே !!!
கடைசி கவிதை சூப்பர்
@ அப்துல்லா, சின்ன அம்மணி
நன்றி!
@ ஆ.முத்துராமலிங்கம்
நன்றி!
ச.ஜெ.ரவி
HVL
தராசு
மிக்க நன்றி!
விஜய் & பிரியமுடன் வசந்த்
நன்றி
ராமலஃஷ்மி, அரங்கப் பெருமாள்
மிகவும் நன்றி
@ J
உண்மைதான் நண்பா!
@ கார்க்கி
ஏன்யா கோர்த்துவிடற?
@ Pappu
தெரியலயேப்பாஆஆஆஆ..
@
//அனுஜன்யா said...
கே.கே.
மூணுமே நீங்க எழுதியதா? //
ஏண்ணா? மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்ததுன்னு நெனைச்சிட்டீங்களோ?
அப்புறம்.. இதுக்கெல்லாம் ‘அனுஜன்யாவுக்கு’ன்னுதான் தலைப்பு வெச்சேன். ஏன்னா பதிவுலகுல கவிதைன்னா நீங்கதான்னு ஃபார்ம் ஆய்ட்டீங்க.. அப்பறம்தான் மாத்தினேன்..
ஹி ஹி
நன்றி நாடோடி இலக்கியன்
@ ஜீவா
கண்டிப்பா படிக்கறேன்
@ நர்சிம்
நன்றி பாஸூ
@ Alif
Thanks
@ ஜ்யோவ்ராம் சுந்தர்
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!
@ அ.மு.செய்யது
தேங்க்ஸூ!
நன்றி விக்கி! மிகவும் நன்றி!
மூன்றுமே அழகுன்னாலும் எனக்கு பிடிச்சது, 2nd one தான்.. :)) மூன்றாவது கவிதையின் வலியும் பிடிச்சிருக்கு... :))
@ ஸ்ரீமதி
அப்டியா? அப்ப சரி! நன்றீ ஸ்ரீ!
வாத்தியாரே நல்ல
மூன்று கவிதகளுமே அருமையாக இருக்கிறது.
முதல் கவிதை சொல்லவரும் கருத்தும், இரண்டாம் கவிதையில் மறக்கமுடியா மலரும் நினைவுகளும்
மூன்றாம் கவிதையில் தெரியும் ஆழ்ந்த வலியும் .....
நன்றி.
முதல் கவிதை அருமை..
கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
சாரி பாஸு...மூனு கமெண்ட் போட்டேன்.ஏனோ கமெண்ட்டும் பிடிக்கல.
முதல் கவிதை அருமை
//முதல் கவிதையும் மூன்றாவது கவிதையும் தரம்.
இரண்டாவது அழகு.
// 1996 – மனோரஞ்சிதம் இதழில் வெளியானது)//
நான் அப்ப ஆறாம்ப்பு படிச்சிட்ருந்தண்ணே !!!
//
எனக்கப்ப ஆறு வயசுதாண்ணே!
முதலும் முடிவும் ஆழமா இல்லைன்னாலும், ரசிக்கற மாதிரி இருந்துச்சு. ஜ்யோவ் அண்ணனின் பின்னூட்டத்தை ரீப்பீட்டிக்கிறேன்.
/யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு வேலையும்-
கண்ணாடி வைத்த மேஜையும்?
//
இது எப்பவும் புதுசாவே தெரியும்ணே ..
/மறுபடி மழலைகள்
கலகலவெனச் சிரித்தனர்//
:)
பரிசல்,
கவிதைகள் நன்றாக இருக்கிறது.
உங்கள் வலைப்பக்க வடிவமைப்பும்
கவிதையாகவே இருக்கிறது.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
பழையவைகள் என்றுமே இனிமையாக இருக்கும் . old is gold.....என்பார்கள் பழையதை அசை போட்டுபார்க்(இரை மீட்க )எனக்கும் பிடிக்கும் உங்களை போல........
கவிதைகள் அருமை...
third is one of the best in recently read!!
keep goin:)
முதல் கவிதை - மெலோட்ராமா
இரண்டாம் கவிதை - ஓவர் செண்டிமெண்ட்
மூன்றாவது கவிதை - அருமை
சுஜாதா கவிதைகளை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...
@ tamil kadhal
நல்ல?
நல்லா வருது வாயிலன்னு சொல்ல வந்தீங்களோ என்னமோ....
மிக்க நன்றி ம்கஞ்சூர் ராஜா, கார்த்திக் & யாத்ரா
நன்றி கும்க்கி (உங்களைத் திருப்திப் படுத்த முடியுமா பாஸூ!!)
@ திகழ்மிளிர் & வெங்கி ராஜா
மிக்க நன்றி!
@ சூரியன்
கரெக்குட்டு!
@ அகநாழிகை
உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது வாசுதேவன்!
@ நிலாமதி
உங்கள் உணர்வுக்கு வணக்கம்!
நன்றி இரவுப்பறவை
@ Katrin
நன்றி நண்பா!
@ யுவா
நன்றி
//சுஜாதா கவிதைகளை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...//
ரைட்டு....
மூன்று கவிதையுமே நல்லா இருக்குங்க பரிசல். அதைவிட முக்கியமா மூனுமே ஈஸியா புரியுது :))
3 வது கவிதை அருமை..!!
முதல் கவிதை படிக்கும் போது திருக்குறள் ஞாபகத்திற்கு வருகிறது.. :-)
நன்றி சிவா
(அப்ப இது கவிதை இல்லையோ..)
@ பட்டிக்காட்டான்
குழலினிது...
/
பரிசல்காரன் said...
நன்றி சிவா
(அப்ப இது கவிதை இல்லையோ..)
/
நேத்து அனுஜன்யா கவிதை படிச்சீங்கல்ல??
இல்லைன்னு சொல்ல முடியாது உங்க கமெண்ட் அங்க இருந்தது!
படிச்சா பைத்தியம் பிடிக்கணும் அப்பதான்
அது கவித!
:))))
//.. @ பட்டிக்காட்டான்
குழலினிது... //
யாழினிது குழலினிது.. என்று நினைக்கிறேன்..
தங்களின் கவிதைகள் பார்த்தேன். மிகவும் அருமை.
உங்களின் கவிதை பணி தொடர என் வாழ்த்துக்கள்
எனது இடுகையை பார்க்கவும்
www.painiyavan.blogspot.com
அழகாக இருக்கின்றன கவிதைகள்.. :)
Last kavithai Superosuper!!!!!!!!!!!!!!!!!!
Last kavithai Superosuper!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment