ஒரு பூ மலர்வதுபோல
உறங்கும் குழந்தையின்
புன்னகை போல
ரயிலில் செல்லும்போது
வெளியே சிரிக்கும் சிறுவர்களின்
கையசைப்புக்கு அனிச்சையாய்
அசையும் கைபோல
அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல
அதுவாக ஒரு கவிதை
வந்து சேரும்வரை
இதுபோல ஏதோவொன்றை
எழுதிக் கிழிக்கவேண்டியதாகத்தான்
இருக்கிறது.
.
41 comments:
ச்சே, இப்படியெல்லாம் கூட எழுதலாமா. நீங்க அனிச்சையாய் எழுதுற கவிதை கூட அழகா இருக்கு பரிசல்.....
arumai sir
வாவ், அட்டகாசம். இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சீங்க?
அனுஜன்யா
அடடா...பின்னிட்டீங்க போங்க!
நல்லாயிருக்கு பரிசல்.கிட்டத் தட்ட இதே சூழலுக்கு சேரல் ஒரு கவிதை எழுதியிருந்தார்.சேரலின் கவிதை:.அதுவும் நன்றாக இருந்தது.
இது சும்மா லுலுலாயிக்கு,
குறிஞ்சி மலர்வது போல,
வலம்புரிச் சங்கு கிடைப்பது போல,
விஜயிடம் ஒரு
காதலுக்கு மரியாதை போல,
பரிசலின் வேலைப் பளு
குறையும் வரை
இப்படியான பதிவுகளையும்
படிக்கத்தான் வேண்டியிருக்கிறது..!
நன்றி விக்னேஷ்வரி!
நன்றி பாலா!
@ அனுஜன்யா
நீங்களே சொல்லிட்டீங்களே! அப்ப சரிதான்!
@ நிஜமா நல்லவன்
நிஜமா?
@ நாடோடி இலக்கியன்
அதுசரி!
நல்லா இருக்கு பரிசல்.
நிறைய எழுதுங்க.
நீங்க கவிதை எழுதுனா, எனக்கும் எழுதனும் போல இருக்கு.
@ இனியவன்
இவனே எழுதறானேன்னா?
:-))))))
"அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல"
.
.
.
தலைவா,
உண்மைதான்...!
.
.
.
.
.
ஆமா உங்களுக்குமா..?
மயிலிறகால்
மென்மையாக வருடி,
செல்லமா ஒரு அடி கொடுத்த மாதிரி
இருக்கு சாரே..!
ஆனா நல்லாயிருக்கு..!
\\Blogger மீனவன் said...
"அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல"
.
.
.
தலைவா,
உண்மைதான்...!
.
.
.
.
.
ஆமா உங்களுக்குமா..?\\
பரிசலுக்கு என்ன மீனவன்.,
இங்க உல்டாவா இவர் நடந்து போனா பெண்கள் திரும்பிப் பார்த்துட்டு இருக்காங்க :))
இங்கே ஒரு கவிதையும்,
கருத்துரையில்
அதன் எதிர் கவிதையும்..
http://sekarblog-sherlyn.blogspot.com
பரிசல் சார்..
நேரம் இருந்தால்
தங்களது மோதிர கையால்
குட்டோ அல்லது பாராட்டோ...!
ஏதாவது...!!!???
கொஞ்சம் edit செய்து என்னாலும் ரசிக்க முடிந்த ஒரு கவிதை ஆக்கிக் கொள்கிறேன் இப்படி ...
//
காத்திருக்கிறேன்
உறங்கும் குழந்தையின்
புன்னகை போல
ரயிலில் செல்லும்போது
வெளியே சிரிக்கும் சிறுவர்களின்
கையசைப்புக்கு அனிச்சையாய்
அசையும் கைபோல
அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல
அதுவாக ஒரு கவிதை
வந்து சேரும்வரை
//
//அதுவாக ஒரு கவிதை
வந்து சேரும்வரை//
தல,
அதுவா வந்தாதான் அது கவிதை
நீயா வரவெச்சா அது கதை.
கவிதை வரலைனு கூட கவிதை எழுதுவீங்களா :)
இல்லாததை கூட உள்ளதாய் எழுதும் நேர்மறை சந்தனை :)
சூப்பர்ணே..!
இப்படியும் கவிதை எழுதலாம்....!
எப்படியும் கவிதை எழுதலாம்....!
ஆனால் கவிதையாக வாசகர்களால் படித்து புரியும் வரை....! என்பதை தெளிவா சொல்லிட்டீங்க.....!
// அனுஜன்யா said...
வாவ், அட்டகாசம். இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சீங்க?//
உங்க கவிதையெல்லாம் படிச்சு படிச்சுதான் இப்படி எழுத முடியுது தல.. கலாமின் ஆசிரியர் அவரை விட புத்திசாலியா என்ன? இருந்தாலும் அவர் கலாமுக்கு ஆசிரியர் தானே?
பரிசல், நாம அந்த அக்கவுன்ட்டுல கழிச்சுக்கலாம்..
தல, நீங்க அந்த 15 பின்னூட்டஙக்ளில் கழிச்சுக்கோங்க..
அப்பாடி.. ஒரு பால்ல ரெண்டு சிக்ஸ்...
நல்லா இருக்குன்னு சொன்னா மாறி மாறி முதுகு சொறியுறீங்களேம்பாய்ங்க.
ஆனாலும் சொல்லாம இருக்க முடியல பரிசல்.
நல்லா இருக்கு.
அடடா கவிதை கூட வருமா?
ஒரு பூ மலர்வதுபோல
உறங்கும் குழந்தையின்
புன்னகை போல//
பரிசல்காரரே,
இந்த வரிகளை,
வரியில்லாமல்,
பரிசலில் ஏற்றி வந்தது
நன்று!
எல்லாம் “தலையெழுத்து”????
ரைட்டு நானும் கவிதை எழுதிற வேண்டியதுதான்.. என்ன இவ்வளவு நல்லா எழுத முடியுமான்னுதான் தெரியல..
super:-)
kavithai varalangirathe oru kavithaiya solreengale..
mm..athuthan peria eluthalaro?
பரிசலின் கிறுக்கலையும்
கவிதையாக்கும்
எழுதுகோல் எது
என அறிய அவா
நல்லா இருக்குங்க உங்க கவிதை.
நல்லாயிருக்குது பரிசல், நான் உண்மையிலேயே இப்பிடித்தான் உக்காந்துக்கிட்டிருக்கேன்.. எதையும் கூட கிழிக்காமல்.!
@ மீனவன்
ஆமாங்க.. நானும் மனுஷந்தானுங்களே... :-)))
@ பேருந்துக் காதலன்
நன்றி நண்பரே!
@ நிகழ்காலத்தில் - சிவா
//இங்க உல்டாவா இவர் நடந்து போனா பெண்கள் திரும்பிப் பார்த்துட்டு இருக்காங்க //
ரொம்பப் புகழாதீங்க.. கூச்சமா கீது!
@ நந்தா
ம்! நல்லாருக்கு!
@ தராசு
வாய்யா... ஏன் இந்தக் கொலவெறி???
@ ஸ்வாமி ஓம்கார்
நன்றி (ஆமா சிந்தனை-ங்கறதுல இருக்கற சி-ல என்னமோ தொங்குதுன்னு எடுத்துவிட்டுட்டீங்களா??)
@ பிரவின்குமார்
கவிதை புரியுதோல்லியோ.. உங்க பின்னூட்டம் நாலு வாட்டி படிச்சப்பறம்தான் புரிஞ்சது!
@ கார்க்கி
சகா.. ஏன்ப்ப்பா இப்படி?
@ வடகரைவேலன்
உண்மையைச் சொல்றதுல தப்பே இல்ல!
@ அன்புடன் அருணா
சக்கரம் கண்டுபிடிச்சாச்சாம்!
@ ஜோதிபாரதி
நன்றி! (அத்திவெட்டி எப்ப வந்தது?)
@ கேபிள் சங்கர்
எழுதுண்ணே. வரும்.
@ இயற்கை
நன்றி
@ டி வி ஆர்
நன்றி ஐயா!
@ முத்துராமலிங்கம்
நன்றி
@ ஆதி
அப்ப அத பதிவா போடுங்க!
எதற்காக இந்த கவிதையை இந்த அளவுக்கு புகழோ புகழ் என்று புகழ்கிறார்கள் என்று புரியவில்லை பரிசல் :-(
குறிப்பாக அனுஜன்யா. உங்களை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பார் போலிருக்கிறது :-)
ஏதோ கவிதை எழுதியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் கழுத்தை வெட்டிவிடுவார்கள் என்ற கட்டாயத்தில் எழுதியது போல இருக்கிறது. முதலில் இது கவிதைதானா என்ற சந்தேகமும் எனக்குண்டு.
உஷாரா இருங்க. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் ஒட்டுமொத்தமா ரணகளம் ஆக்கிப்புடுவாங்க :-)
எதற்காக இந்த கவிதையை இந்த அளவுக்கு புகழோ புகழ் என்று புகழ்கிறார்கள் என்று புரியவில்லை பரிசல் :-(
குறிப்பாக அனுஜன்யா. உங்களை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பார் போலிருக்கிறது :-)
ஏதோ கவிதை எழுதியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் கழுத்தை வெட்டிவிடுவார்கள் என்ற கட்டாயத்தில் எழுதியது போல இருக்கிறது. முதலில் இது கவிதைதானா என்ற சந்தேகமும் எனக்குண்டு.
உஷாரா இருங்க. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் ஒட்டுமொத்தமா ரணகளம் ஆக்கிப்புடுவாங்க :-)
@ ஜோதிபாரதி
நன்றி! (அத்திவெட்டி எப்ப வந்தது?)//
நான் பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் தாங்க... பிளாக்கிலயும், கமான்டுலயும் தெரிய ஆரம்பிச்சு...
ஆனா பிளாக்கு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிலேருந்து அத்திவெட்டி இருக்குதே...
அதுவா வர்றதுக்கு கவிதை ஒண்ணும் வரமில்ல்லையே
இதுமாதிரி வர்றதுதான கவிதை
விமான சத்தம் கேட்டு
மேல் நோக்கி திரும்பும்
முகம்போல..
நல்லா இருக்கு.. :)
@ யுவகிருஷ்ணா
மிகவும் நன்றி.
@ யுவகிருஷ்ணா
மீண்டும் நன்றி!
@ அ.வெ.ஜோதிபாரதி
//ஆனா பிளாக்கு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிலேருந்து அத்திவெட்டி இருக்குதே...//
ரசிச்சேன்!
@ பிரியமுடன் வசந்த்
கரெக்ட் & நன்றி!
@ சஞ்சய்
//விமான சத்தம் கேட்டு
மேல் நோக்கி திரும்பும்
முகம்போல..//
அட! ரொம்பவே நல்லாயிருக்கு மாப்ஸ்!
ஒரு பூ மலர்வதுபோல
உறங்கும் குழந்தையின்
புன்னகை போல
ரயிலில் செல்லும்போது
வெளியே சிரிக்கும் சிறுவர்களின்
கையசைப்புக்கு அனிச்சையாய்
அசையும் கைபோல
அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல
அதுவாக ஒரு பரிசல் பதிவு
வந்து சேரும்வரை
இதுபோல ஏதோவொன்றை
பின்னூட்டி கிழிக்கவேண்டியதாகத்தான்
இருக்கிறது.
:)))))))))))))))
பி.கு : தமாஸ்க்கு
நன்றி சிவா.
உங்க கவுஜயும் சூப்பர்! (இப்போதான் ரிப்பீட்டேயை விடுத்து பெரிசா எதுவாவது எழுதறீங்க!)
:))
//அதுவாக ஒரு கவிதை
வந்து சேரும்வரை
இதுபோல ஏதோவொன்றை
எழுதிக் கிழிக்கவேண்டியதாகத்தான்
இருக்கிறது.//
கவிதை... கவிதை
இதுமாதிரி எல்லாம் செஞ்சீங்கன்னா அப்புறம் நானும் கவிதை எழுதப்போறேன். அவ்ளோ தான். சொல்லிப்புட்டேன்.
@ செந்தழல் ரவி
நன்றி !!
நேத்து இந்த பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டதா நியாபகம். கொஞ்சம் தேடி புடிச்சு வெளியிட முடியுமா ?
Post a Comment