ஆஃபீஸ்ல அறிவழகன்-னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். வேலை ரொம்ப அதிகமா இருந்து, டென்ஷனா இருந்தாலோ.. போரடிச்சாலோ நானும் அவனும் ஏதாவது லூட்டி அடிச்சே அந்த டென்ஷனைத் துரத்திடுவோம். நாங்க பண்றது சீரியஸா-காமெடியான்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.
இது ஆரம்பிச்சது மொதமொதல்ல தாமோதரன்ங்கற பையனோட கைங்கர்யத்துலதான். மூணு நாலு வருஷத்துக்கு முன்ன இருக்கும். தாமோதரன்கற பையன் எங்க எம்ப்ராய்டரி செக்ஷன்ல வேலை செஞ்சுட்டு இருந்தான். ஒரு செல்ஃபோன் வாங்கி அதுக்கு ஜிப் வெச்ச மாதிரி கவர் விப்பாங்களே அதைப் போட்டிருந்தான். எனக்கென்னவோ அந்த மாதிரி செல்ஃபோனை கவர் பண்ணினா பிடிக்காது. அதுனால அவனைப் பார்த்து ‘இதெதுக்குங்க’ன்னு கேட்டேன். அவன் நான் அந்த கவரைப் பார்த்த்தே இல்லைன்னு நெனைச்சு அவன் ‘சார்.. இந்த கவர் போட்டா ரொம்ப சேஃப் சார்’ன்னு ஆரம்பிச்சு அதோட மகத்துவங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சான். நான் அவனை ஓட்டறதுக்காக ‘ஐ! இப்படியெல்லாம் கூட விக்கறாங்களா?’ன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்ட அறிவழகன் வந்து நான் தாமோதரனை ஓட்டறேன்னு புரிஞ்சுட்டு “டேய் கிருஷ்ணா.. இதப்பார்றா.. ஜிப் எல்லாம் வெச்சிருக்கு!”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்?”ன்னு கேட்டேன். அறிவழகன் “போடா இங்க பாரு சார்ஜர் போடற இடத்துல ஓட்டை போட்டிருக்கு. ஐ.. இங்க பாருடா இயர் ஃபோன் மாட்டற இடத்துல கூட ஓட்டை இருக்கு. ரோப் மாட்ட ரிங் குடுத்திருக்காங்க. இவ்ளோ வேலை செஞ்சிருக்காங்க. நிச்சயமா இருநூறுரூபாக்கு மேல இருக்கும்”ன்னான். நாங்க சண்டை போட்டுட்டு இருந்தோம். தாமோதரன் ‘சார் வெறும் பதினைஞ்சு ரூபா சார்.. நம்புங்க சார்’ன்னு சீரியஸா சொல்லிகிட்டே இருந்தான். ‘போப்பா.. அவ்ளோ விலைன்னு சொன்னா நாங்க ஏதாவது நெனைப்போம்ன்னு நீ பொய் சொல்ற. ஜிப்பெல்லாம் கூட இருக்கு. அதெப்படிப்பா பதினைஞ்சு ரூபாய்க்கு குடுப்பான்’ன்னு அவனைப் பேச விடாம நாங்க மறுபடியும் 150, 200ன்னு பேசிப் பேசி அவன் பாவம் எங்களை விலக்கி விடற அளவு பண்ணினோம்.
இன்னைக்கும் யாராவது மாக்கானுக மாட்டினா ‘டேய் இன்னொரு தாமோதரன்டா’ம்போம். அவன் என்னதுன்னு கேட்டா ‘எங்களுக்கு தாமோதரன்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தார். ரொம்ப ஜீனியஸ். நீங்களும் அவரை மாதிரியே அறிவாளியா இருக்கீங்க’ன்னு சொல்லுவோம்.
ஒரு நாளைக்கு ரெண்டு பேருமா வெளில போக வேண்டி வந்தது. எப்பவுமே பைக்ல போகும்போது அவன் ஓட்டீட்டு போவான். (பைக்கை) நான் பின்னாடி உட்கார்ந்து ஐபாட்ல ஏதாவது பாட்டு போட்டுட்டு சத்தமா பாடீட்டே வருவேன். அவனும் கத்தி பாடீட்டே வருவான்.. ரோட்ல போறவங்களைப் பத்தி எங்களுக்கு கவலை இருக்காது. இந்த மாதிரி வந்துட்டு இருக்கறப்போ ஒரு வேன் போய்ட்டு இருந்தது. அந்த வேன் சடார்னு ப்ரேக் போட்டது. பார்த்தா ஒரு மொபெட்கார்ர் அந்த வேனுக்கு முன்னாடி க்ராஸ் பண்ணிருக்காரு. அவர் க்ராஸ் பண்ணி வந்து நின்னது - எங்களுக்கு ஜஸ்ட் சில இஞ்ச்கள் முன்னால. அறிவழகன் சடார்னு ப்ரேக் அடிச்சு ரொம்ப கோவமா திட்டறதுக்கு வாயெடுத்தான். நான் உடனே இறங்கினேன். நான் திட்டத்தான் போறேன்னு அவன் அமைதியா இருந்தான். டிவியெஸ்காரரை ரொம்ப எரிச்சலோட, சுத்தி இருக்கற ஆளுக பத்து பதினைஞ்சு பேர் பார்த்துட்டிருந்தாங்க. நான் இறங்கி நேரா அவர் மொபட் முன்னாடி நின்னு ‘கைகுடுங்க’ன்னு கை நீட்டினேன். அவர் முழிச்சாரு. ‘சும்மா கைகுடுங்க சார்’ன்னு சொல்ல அவர் கையை நீட்டினார். பிடிச்சு ரொம்ப அன்பா ஷேக் ஹாண்ட் பண்ணி ‘சூப்பர் ட்ரைவிங்’ன்னு பாராட்டி பைக்ல வந்து ஏறிட்டேன். கிளம்பும்போது அவர்கிட்ட சத்தமா ‘இது உங்களுக்கு செகண்ட் லைஃப். புதுசா பிறந்திருக்கீங்க.. அதான் கைகுடுத்தேன்’ன்னு சொன்னேன்.
இன்னொரு நாளைக்கு நான் என் பைக்லயும் அவன் அவன் பைக்லயும் வந்துட்டிருந்தோம். பாதி தூரம் வந்துட்டு இருந்தப்போ ‘என்னமோ மாதிரி இருக்குடா’ன்னான். ‘இப்ப என்ன மூடை மாத்தணுமா.. இரு’ன்னு முன்னாடி போன பைக்குக்கு ஒரு சைடு அவன் போகவும் நான் அந்த பைக்குக்கு வலது பக்கம் என் பைக்கை விட்டேன். (அதாவது எங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு புதியவரின் பைக்!) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற? எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற?’ன்னு உரக்க திட்ட ஆரம்பிச்சேன். அறிவழகனுக்குப் புரிஞ்சுடுச்சு. அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பிச்சான். நடுவுல பைக்ல வந்தவர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டு ஸ்பீடா போகப் பார்த்தார். நாங்க விடாம பைக் ஓட்டீட்டே வாக்குவாதம் பண்ணிட்டு வரவும் அவர் ‘விடுங்க சார் விடுங்க சார்’ன்னு ரெண்டு பேரையும் பார்த்து மாறி மாறி சொல்லிட்டு ஒரு கட்டத்துல எஸ்கேப் ஆகிட்டார். உடனே நாங்க வேறொரு பைக்காரரை செலக்ட் பண்ணி இதே மாதிரி பண்ணினோம். கிட்டத்தட்ட ஆறெழு பேர்.
இதோட க்ளைமாக்ஸ் நல்லா இருந்தது. எங்க ஆஃபீஸ் இருக்கற ரோட்ல வந்து இதே வேலையைச் செஞ்சுட்டே வந்தமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவர் என்னடா சண்டை போட்டுட்டே ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்குள்ள போறாங்க’ன்னு நெனைச்சிடக்கூடாதுல்லயா... அதுனால அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. என் பைக்கை இடிச்சியில்ல.. வாய்யா உள்ள வந்து எங்க ஓனரைப் பார்த்து பதில் சொல்லீட்டு போ’ன்னு அவனை கூப்ட்டேன். அவனும் ‘தப்பு உன்மேலதான். வா.. எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்’ன்னு சொல்லீட்டே பைக்கை உள்ளே விட்டான்.
பைக்கை ஸ்டாண்ட்ல போடும்போது அறிவழகன் தாங்க முடியாம சிரிக்க ஆரம்பிச்சான். அப்போதான் கவனிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவரும் யாரையோ பார்க்க எங்க ஆஃபீஸ்தான் வந்திருக்காரு. அவரைப் பார்த்ததும் நான் சைகை காமிச்சேன். அறிவழகன் உடனே சுதாரிச்சுட்டு ‘வா.. மேனேஜரா.. ஓனரா.. யாரை வேணும்னாலும் கூப்டு’ன்னுட்டே எங்கூட வந்தான். அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்துட்டே செக்யூரிடிகிட்ட பாஸ் போட போனாரு.
ரெண்டுமூணு நாள் முன்னாடி நானும் அறிவழகனும் பயங்கரமா சிரிச்சுட்டே ஃபேக்டரிக்குள்ள போய்ட்டு இருந்தோம். எதிர்ல பார்த்தா அன்னைக்கு நடுவுல மாட்டிட்டு ஆஃபீஸ்க்கு வ்ந்த ஆளு. அன்னைக்கு இண்டர்வ்யூ வந்தாராம். ‘உள்ளதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்’ன்னார். ‘ரெண்டு பேரும் அன்னைக்கு அவ்ளோ சண்டை போட்டுட்டீங்க?’ன்னு கேட்டார். ‘ஆமா சார். பஞ்சாயத்துக்கு ஓனர்கிட்ட கூப்ட்டு போனேன்ல.. பைக்ல சைடு மிர்ரர் உடைச்சதுக்கு இவன் காசு தரணும்னு வந்தது. பார்த்தா இவனுக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சது. உடனே ஓனர் இங்கயே வேலை செய். முதல் மாச சம்பளத்துல கழிச்சுக்கலாம்’ன்னாரு. இங்கயே வேலைக்கு சேர்ந்துட்டான். இப்போ ராசியாய்ட்டோம்’ன்னேன். அவரும் ‘ச்சே.. செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க’னாரு.
இன்னொரு தாமோதரன்!
.
51 comments:
ஆச்சரியமா இருக்கு! முதல் முதலா முதல் பின்னூட்டம் போடறேன்.
அவனா நீங்களெல்லாம்..
ஐ .......!
இது நல்ல ஐடியாவா இருக்கே!
கிருஷ்ண கதா ன்னு கூட தலைப்பு குடுத்துருக்கலாம். :)
சூப்பருங்க
--இப்படிக்கு இன்னொரு தாமோதரன்
@ HVL
எனக்கு சந்தோஷமா இருக்குல்லா...
@ கேபிள் ஜி
ஆமா!
@ சின்ன அம்மணி
அட.. ஆமால்ல!
@ நிகழ்காலத்தில்
ஏன்க இப்படிச் சொல்லீட்டீங்க....??
சிரிச்சு சிரிச்சு...
கிகிகிகி,,முடியல
பத்திரம் பரிசல்.. தேவையில்லாமல் உங்க போதைக்கு ஏன் நடுவுல (பைக்குகளுக்கு நடுவுலப்பா (நாங்க பிராக்கெட்குள்ளவே பிராக்கேட் போட்டு சொல்லுவோமில்ல)) போறவங்கள ஊறுகாய் ஆக்கறீங்கன்னு யாராவ்து சொல்லப் போறாங்க...
இத படிக்கிற நாங்களும் தாமோதரன் தானா?
அசத்தல்....
அடப்பாவி அண்ணா.. :)))))
நல்லாத்தான்யா கலாய்க்குறீங்க! அப்படியே மெயிண்டெயினும் பண்ணுறீங்க! கலக்கல்!
அய்யோ கடவுளே..
எப்படி இப்படியெல்லாம்.
சத்தியமா முடியல...
சிரிக்காம இருக்க
400க்கு வாழ்த்துக்கள்..
பரிசல்..மிக நல்ல பதிவு என்று சொல்வதை விட அசரடிக்கும் கம் பேக் இதுவே..இனி கவலையில்லை..உங்கள் டவுன் தி ட்ராக் ஷாட்கள் வந்துகொண்டே இருக்கும்..மகிழ்ச்சி.
நல்ல காமெடி.
நல்லா சிரிச்சேன் பரிசல் :) நல்ல டைம் பாஸ் உங்களுக்கும், படிக்கிற எங்களுக்கும்
400க்கு வாழ்த்துக்கள்..
உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா
அவனா நீங்களெல்லாம்
அவன்தான்
எப்படி தல இதெல்லாம்,
ரூம் போட்டு யோசிப்பீங்களா????
கிண்டல் பண்ணியது வரை மட்டும் எழுதினால் எப்பிடி?
வாய் உடைஞ்சு ரத்தம் ஒழுகுனதையும் எழுதனுமில்ல?
ஹி ஹி நீங்க ஒருநாள் குசும்பன்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க!
அதுக்கப்புறம் நாங்களும் சொல்லுவோம்ல இன்னொரு பரிசல்-னு!
:))))))))))
@ கிறுக்கன்
நன்றி!
@ கார்க்கி
ஆமா.
முடிஞ்சுடுச்சு!
@ தமிழ்பிரியா
இல்லைங்க. அப்படியெல்லாம் இல்லைங்க!
@ விக்னேஸ்வரன்
நன்றி!
@ ஸ்ரீமதி
அது சரி!
@ நாமக்கல் சிபி
சரிங்க!
திருப்பூர்லயே இருந்துருந்தா உங்களமாதிரி சுவாரசியமான ஆட்களோட பழக வாய்ப்பு கிடைச்சுருக்குமேனு அப்பப்ப நினைச்சதுண்டு, இப்போதான் புரியுது கடவுள் எதை செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு :)))))
@ கதிர்-ஈரோடு
நன்றி!
@ நர்சிம்
நீங்கதான் மொத வாழ்த்து! நன்றி பாஸ்!
நன்றி ஸ்ரீ!
@ நான் ஆதவன்
வெறும் டைம்பாஸ்ன்னு புரிஞ்சுட்டதுக்கு நன்றி.
@ ghost
நன்றி. (என்னா பேருங்க!)
இது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். ஆனா, உங்க கிட்ட மாட்டுறவங்க ரொம்பப் பாவம்
"be careful"
நான் என்னைச் சொன்னேன்..!
அறிவழகன் கூட,
கோயமுத்தூர் வந்தீங்கன்னா
முதலிலேயே
சொல்லிருங்கய்யா..! சொல்லிருங்க..!
400௦௦ கிலோ மீட்டர்
தாண்டியாச்சா..?
பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.!
அடுத்தவங்களுக்கு பல்பு கொடுத்த கதை இருக்கட்டும்!
எங்களுக்கு ஆர்வம் நீங்க பல்பு வாங்கின கதை தானே!
அந்த ஊரு தண்ணி அப்படி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்.. :)
ஹா ஹா! மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சியாக வைத்து பலராலும் ரசிக்கப்படுகிறது. பிரச்சினையெல்லாம் தாமோதரன்கள் சிக்கினால் நன்றாகவேச் சிரித்து மகிழலாம். அருமை.
adanga maatingala?
seekram neengalum thamotharan aaga vazhthukkal
\\@ நிகழ்காலத்தில்
ஏன்க இப்படிச் சொல்லீட்டீங்க....??\\
:))அப்படி ஏதும் இல்ல பரிசல் (தாமோதரா)
நல்லா இருக்கு அண்ணே....
//எங்களுக்கு ஆர்வம் நீங்க பல்பு வாங்கின கதை தானே!//
ஆமாங்கோ.....
:))
செம நடை . ஜாலியான read :)
Gud One!!!
400க்கு வாழ்த்துக்கள் பரிசல்! பதிவு அருமை! சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலியே எடுத்துடுச்சு! :-)
:)
கேண்டிட் கேமரா மாதிரி நல்லாருக்கு.
ஆனா, நாலஞ்சு பிட்டு சேத்து போடுற மாதிரி இருக்கு.
400 ! :D
வாழ்த்துகள்... படிச்சிட்டு வர்றேன்!
செம்ம காமெடி சார் நீங்க! குறிப்பா அந்த செல்ஃபோன் கவர்... ROFLMAO அந்த மாதிரி நாங்களும் செஞ்சிருக்கோம்.. செல்ஃபோனை செகண்ட் ஹாண்டில் தள்ளி உடுறதுக்கு எங்க ஃபோனையே வேற ஒருத்தனோட ஃபோன் மாதிரி மாத்தி மாத்தி கெத்தா பேசி எவன் தலையிலயாச்சும் தள்ளி உட்ருவோம்..
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... LOL
400க்கு வாழ்த்துக்கள்..
இன்னும் ரொம்ப தூரம் இதே உற்சாகத்தோட போக வாழ்த்துக்கள்
// Blogger விக்னேஷ்வரி said...
இது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். ஆனா, உங்க கிட்ட மாட்டுறவங்க ரொம்பப் பாவம். //
அனுபவத்துல பின்னூட்டுன மாதிரி இருக்கு :)
உங்க நிலையில இருந்து பார்க்கும் பொழுது ஏதோ காமெடி போல தான் இருக்கு.
தாமோதரனை கலாய்த்தது கூட ஒகே, ஆனா நடுவில் மாட்டின பைக் நபரின் நிலயில் இருந்து பார்க்கும் பொழுது ரொம்ப ஒன்னு ரசிக்கும் படி இல்ல. மன்னிக்கவும்.
// RR said...
உங்க நிலையில இருந்து பார்க்கும் பொழுது ஏதோ காமெடி போல தான் இருக்கு.
தாமோதரனை கலாய்த்தது கூட ஒகே, ஆனா நடுவில் மாட்டின பைக் நபரின் நிலயில் இருந்து பார்க்கும் பொழுது ரொம்ப ஒன்னு ரசிக்கும் படி இல்ல. மன்னிக்கவும்//
அட அவருக்கு ஒன்னும் ஆகாதுங்க.. விஷயம் புரிஞ்சாதானே
தல, 400 பக்ராவா?????
வாழ்த்துகள்....
pappu said...
கேண்டிட் கேமரா மாதிரி நல்லாருக்கு.
ஆனா, நாலஞ்சு பிட்டு சேத்து போடுற மாதிரி இருக்கு.
உண்மையை சொல்றாங்க பாஸ்..
@ தராசு
அதுவா வரும்க..
@ அப்பாவி முரு
நீங்க நெசமாலுமே அப்பாவிதாங்க.. இஃகி இஃகி இஃகி..
@ மங்களூர் சிவா
//நீங்க ஒருநாள் குசும்பன்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க!//
ஏற்கனவே மாட்னதே இன்னும் மறக்கல சிவா.. இதுல இன்னொரு வாட்டியா... அவ்வ்வ்வ்வ்...
@ பாசகி
நாங்க உடனேயெல்லாம் ஆரம்பிக்கறதில்லங்க..
@ விக்னேஸ்வரி
//இது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். //
அதுசரி! நாம் காமெடி பீஸுதாங்க... நீங்களாதான் ரொம்ப சீரியஸ்னு நெனைச்சுட்டிருக்கீங்க.. (கரெக்டா இல்லையா..?)
@ பேருந்து காதலன்
சரி தம்பி. சொல்றேன்!
@ வால்பையன்
ஏன்யா இப்படி??
@ SK
கரெக்டு!
@ வெ.ராதாகிருஷ்ணன்
நன்றி சார்!
@ யாசவி (நல்ல பேரு!)
என் இந்த கொலவெறீஈஈஈஈஈ?
@ நிகழ்காலத்தில்..
ஹி..ஹி.. என்னையேவா.. அதுசரி!
@ Kathir, Prakash, Karthik's Thought Applied
நன்றி!
@ புன்னகை
புன்னகைக்கே சிரிப்பா...!
@ ஜெகதீசன்
நன்றி
@ பப்பு
நிச்சய்மா இல்லை. எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கு. நாளைக்கே திருப்பூர் வந்தா நிரூபிக்கிறேன். (பைக்ல வாங்க!)
@ நாஞ்சில் நாதம்
நன்றி
@ வெங்கிராஜா
மிகவும் நன்றி!
@ ஓவியா
தேங்க்ஸ்!
@ நேசமித்ரன்
மிக மிக நன்றி!
@ வெயிலான்’
ஏன்யா எடுத்துக் குடுக்கறீங்க??
@ RR
ரசிக்க முடியாததை ரசிக்காமல் விடுதல் நலம். ஒண்ணும் தப்பில்ல. நேரடியான கருத்து சொன்ன உங்க நேர்மையைப் பாராட்டறேன்!
@ கார்க்கி
நன்றி சகா..
@ கிறுக்கன்
நீங்க யாருக்கு சப்போர்ட் பண்றீங்க பாஸு?
ஹாஹா... :)
inimae naama bykla pogumbothu yaaravdhu namala nadvula vachi sandai potta.. irangi annae neenga parisal annan sonthakararannu? oru vaarthai ketudalamnu nenaikiraen...vaarathin mudhal naalae siripodu aarambithu irukiraen ..nanrigal pala
எல்லாமே ஓகேதான் பரிசல்.. RR சொன்னது போல என்னால் அந்த குறிப்பிட்ட செயலை ரசிக்கமுடியவில்லை. ஒரு பைக் ஓட்டியை இரண்டு புறமும் கவர் செய்துகொண்டு கெரோ செய்வது என்பது எவ்வளவுதான் நீங்கள் கவனமாக இருந்தாலும் (அவர் குழம்பும் பட்சத்தில்) ஹைலி ரிஸ்கி ஜாப்.
கேலி, கிண்டல், விளையாட்டுகளை மிகவும் ரசிக்கிறேன். ஆனால் அது சிறு துளியும் வினையாவதற்கான வாய்ப்பில்லாததாக இருக்கவேண்டும்.
பரிசல்காரன் சரியான குசும்பன் போல
Post a Comment