Tuesday, August 11, 2009

தென்றல் வந்து தீண்டும் போது...

சை மீது எனக்கிருக்கும் ஆர்வம் பற்றியோ, இளையராஜா பற்றியோ எழுத வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆவல். ஆனாலும் அப்படி ஒரு பதிவெழுதினால் எழுதிச் சொல்ல நினைப்பதைவிட எழுதாமல் விடுபவையே மிகுமென்பதால் எழுதாமலே நாள்கடத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த ஒரு பாடலைப் பற்றி கொஞ்சமேனும் எழுதாமல் போனால் நீயெல்லாம் என்னடாவென்று நானே என்னைப் பார்த்துக் கேட்டுக் கொள்வேனென்பதால்....

அவதாரம் படத்தில் இடம்பெற்ற பாடலிது. திரைப் படப்பாடல்களில் என்னுடைய டாப் டென்னைக் கேட்டீர்களானால் இதுதான் நம்பர் 1. அதில் எந்தவித சந்தேகமுமில்லை.

நாசரின் முதல் டைரக்‌ஷன். அவரே நாயகன். நாயகி ரேவதி. கண்தெரியாத நாயகிக்கு வண்ணங்களைப் பற்றிச் சொல்லும் பாடல்.

இளையராஜாவின் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம். கண் தெரியாதவர்கள் கேட்டால்? ண்ங்ளைப் பார்க்கலாம்!

தானத்தந்தம் தானந்தந்தா தானத்தந்தம் தானத்தான என்று ஆரம்பிக்கிறது பெண்களின் கோரஸ். இருமுறை இந்த வரிகள் வரும்போது எப்போது ஆரம்பிக்கிறது என்று நாம் உணராதபோதே ஆரம்பிக்கிறது இசை. இசை வரவர இளையராஜாவும் வருகிறார்.. அவரது குரலில்.

தந்ததன தான தான தான தான்னா தனனனா

தந்ததன தான தான தான தான்னா தனனனா

ஒரு சிறு மூச்சிழுப்புக்குப் பிறகு ராஜா தொடர்கிறார்.

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

தென்றல் வந்து என்று ஆரம்பிக்கும்போதே பீட் ஆரம்பித்துவிடும். ஆனால் மிக மெதுவான-இதமான பீட். மனசுல- நெனப்புல என்ற வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு சின்ன ஆர்க்கஸ்ட்ரைசேஷன் பண்ணியிருப்பார். ப்பா! வாய்ப்பே இல்லை!

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே

கிராமத்தானின் உச்சரிப்போடு ராஜா அந்த நானுஞ்சொன்னேனைப் பாடுவதை மீண்டுமொருமுறைக் கேட்டுப் பாருங்கள்.

சரணம் முடிந்ததுமே இசையா, கோரஸா என்பது தெரியாதவண்ணம் தும்தும்தும்தும் என்று ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து ஓஓஓ என்றும் பெண்களின் கோரஸ் தொடரும். கூடவே வயலினும் வர பல்லவிக்கும் சரணத்திற்குமான இடைவெளியில் கோரஸை முழுவதும் பயன்படுத்தியிருப்பார்.

பல்லவியில் சேர்கிறார் ஜானகி!

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட இந்த உலகம் அதுபோல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

முதல் பல்லவிக்கு முன் கோரஸோடு இசையையும் கலந்த ராஜா, இந்த இரண்டாவது பல்லவிக்கு முன்னான BGMல் இசையை அதிகமாகக் கொடுக்கிறார்.

ஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அலபோலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா

கிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

இதில் கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே என்று பாடும்போது ராஜாவின் குரலில் வரும் எள்ளலை கவனியுங்கள்.

முழுப்பாடலின் வரிகள்:-

ராஜா:தந்ததன தான தான தான தான்னா தனனனா

தந்ததன தான தான தான தான்னா தனனனா

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே

ஜானகி: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

ராஜா: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஜானகி: ஓட நீரோட இந்த உலகம் அதுபோல

ராஜா: ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

ஜானகி: நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே

ராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ராஜா:ஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஜானகி: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அலபோல அழகெல்லாம் கோலம் போடுது

ராஜா:குயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா

ஜானகி: கிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா

ராஜா: கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

ஜானகி:: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ராஜா: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

ஜானகி: வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ராஜா: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

ஜானகி: உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

ராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஜானகி: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

எந்த இடத்தில் அசர வைக்கும் அடி இல்லை. உச்சஸ்தாயி இல்லை. மென்மையாக மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தாற்போல இசையும் வரிகளும் பாடலும் அமைந்தது இந்தப் பாடலின் சிறப்பு!


கடைசிவரும்போது “உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே” என்று ராஜா சரணத்தில் பாடிய வரிகளை கண்தெரியாத நாயகி பாடும்போது “உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன” என்று மாற்றி எழுதி வாங்கிய ராஜாவும், எழுதிய வாலியும் வெற்றிக்கூட்டணியல்லாமல் வேறென்ன?

இது என் நம்பர் 1 பாடலென்றால் நம்பர் டூ? – இங்கே போய்ப் பாருங்கள்!

இந்தப் பாடல் ராஜாவின் LIVE CONCERTல் காண இங்கே க்ளிக்குங்கள்.



.

44 comments:

யாசவி said...

nice melody

Anonymous said...

ஜானகி அற்புதமா கொஞ்சி பாடியிருப்பார்.

GHOST said...

அழகான பாடல்

கார்க்கிபவா said...

யுவன் ஒரு பேட்டியில் சொன்னார். இந்த மாதிரி ஒரு பாடல் அவரால் போட முடிந்தால் அன்றுதான் அவர் ஒரு இசை அமைப்பாளர் என்று அர்த்தமாம்.

அவரது காரில் எப்போது அமர்ந்தாலும் முதல் பாடல் இதுதானாம்.. எனது டாப்டென்னிலும் இது நிச்சயம் உண்டென்றாலும் முதல் அல்ல.

//- நெனப்புல என்ற வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு சின்ன ஆர்க்கஸ்ட்ரைசேஷன் பண்ணியிருப்பார். ப்பா! வாய்ப்பே இல்லை!//

கூர்ந்து கவனிக்கும் எவரையும் இழுக்கும் இடம் இதுதான் சகா

இது வாலியாக இருக்குமென்று சத்தியமாக நினைக்கவில்லை. ராஜாவே எழுதி இருக்க கூடுமென்றே நினைத்தேன்..

அருமை சகா. அடிக்கடி எழுதுங்கள். இசையைப் பற்றி. ராஜாவைப் பற்றி.

ச்சே.. ரெண்டும் ஒன்னுதானா?

தராசு said...

தல,

பாட்டு சூப்பர்,

anujanya said...

ஏன்யா,

பேசி வெச்சுக்கிட்டு பதிவு போட்டு, அப்புறம் என்ன 'what a coincidence!' ?

போங்கையா - போயி புள்ள குட்டிங்களப் படிக்கவெச்சு அவங்களையாச்சும் உரையாடலில் ஜெயிக்க வெய்யுங்க.

btw - One of the finest songs of IR.

அனுஜன்யா

பாசகி said...

கலக்கல்-ஜி, பின்னீட்டீங்க. ராஜா ராஜா-தான்.

//ஓட நீரோட இந்த உலகம் அதுபோல
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல
நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே//

ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே

எனக்கு மட்டும் இப்படி கேக்குது...

இதையும் பாருங்களேன்

http://www.envazhi.com/?p=9701

http://www.envazhi.com/?p=9490

thamizhparavai said...

பரிசல் உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு பதிவை ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.. கொடுத்திட்டீங்க...
இன்னும் எழுதிருக்கலாம்னு தோணுது...
ராஜாவைப் பத்தி யார் எழுதினாலும் படிச்சிட்டே இருக்கணும்னு தோணுது...
நன்றி...
பாடல் பற்றி...
நானென்ன சொல்ல...ஊருக்கே தெரியும்...

கார்க்கிபவா said...

சகா அந்த ”. கண் தெரியாதவர்கள் கேட்டால்? வண்ணங்களைப் பார்க்கலா”

வரிகளில் வண்ணங்களை என்ற வார்த்தைக்கு பல வண்ணங்கள் தந்த ஐடியா

சூப்பர்.. அருமை.. அட்டகாசம்..

சொல்லனும்ன்னு தோணுச்சு

சின்னப் பையன் said...

அழகான பாடல்

-- said...
This comment has been removed by the author.
-- said...

இந்தப் பாடலை
நான் பார்க்கும் போதெல்லாம்,
கேட்கும் போதெல்லாம்,
இந்தப் பாடலைக்குறித்து
என் உணர்வுகளை அளவில்லாமல்
என் மனைவியிடம்
பகிர்ந்து கொள்வேன்.

உண்மையிலேயே என் Top 10 - லும்
இது தான் number -1.

என் மன எண்ணங்களை
அப்படியே செதுக்கி உள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சி பரிசல் சார்..!

நிகழ்காலத்தில்... said...

அட, எனக்குப் ரொம்ப பிடிச்ச பாட்டு...

வந்தியத்தேவன் said...

பரிசல் உங்கள் பதிவு சூப்பர்

//கார்க்கி said...

அருமை சகா. அடிக்கடி எழுதுங்கள். இசையைப் பற்றி. ராஜாவைப் பற்றி.

ச்சே.. ரெண்டும் ஒன்னுதானா?//

புல்லரிக்க வைத்த வரிகள் ஆமாம் அவரும் இசையும் ஒன்றுதான்,

ஸ்வாமி ஓம்கார் said...

உங்க பதிவின் மூலம் முதன் முதலாக பாட்டு படிச்சேன் :)

உன்னை முடிவுசெய்ய உன் ரசனையை முடிவுசெய் என்ற பிரஞ்சு பழமொழி உண்டு.

நல்ல பாடல்(ம்).

டாக்டர் புருனோ எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். :)

RaGhaV said...

சூப்பர் பதிவு.. :-))

Jackiesekar said...

பாடலின் முதலில் காட்சிகளில் வண்ணங்கள்...பார்வை குறைபாடு கொண்ட பெண் ஆதலால் அந்த காட்சியை வைத்து இருப்பார் நாசர்.. கேமரா மேன் தரன் ரொம்ப அற்புதமாக காட்சி படுத்தி இருப்பார்... பாடல்களின் வரியைதான் நீங்கள் அனு

அனுவாக ரசித்து விட்டீர்களே....

நல்ல பதிவு

பரிசல்காரன் said...

@யாசவி

நன்றி

@நாஞ்சில்

நன்றி

@சின்ன அம்மிணி

உண்மைதான். நன்றி

@கோஸ்ட்,

நன்றி.(என்ன பேருங்க இது)

@கார்க்கி,

யுவன் கொ.பூ.கொ.பு ஆகிவிட்டார் என்று நீதாம்ப்பா எழுதின!!

@தராசு

நன்றி தராசு

@அனுஜன்யா

பப்ளிக். பப்ளிக்

@பாசகி

ஓட நீரோட, சரிதான். அவர் உச்சரிக்கும் விதத்திலே எழுதினேன். நெறங்களே, நீங்க சொன்னது சரிதான். நன்றி

@தமிழ்ப்பறவை,

நன்றிப்பா.

@ச்சின்னப்பையன்,

நன்றி

பரிசல்காரன் said...

@ பேருந்து காதலன்,

நன்றி!!

@ நிகழ்காலத்தில்,

நன்றி

@ வந்தியத்தேவன்,

நன்றி. சகா கேட்டுக்கோப்பா

@ஸ்வாமி,

அவரு எதுக்கு ஜி? நன்றி :))

@ ராகவேந்திரன்,

நன்றி

@ ஜாக்கி,

கேமராமேன் பார்வை. சரியா சொன்னிங்க ஜாக்கி. எங்களுக்கு அவ்ளோ அறிவு பத்தாதுங்க. நன்றி

-- said...

பரிசல்'காருக்கு வாழ்த்துக்கள் ..!

கோபிநாத் said...

தல

உங்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

பதிவை ஒன்னும் சொல்ல போறதுல்ல....நீங்க சொல்லியிருப்பதையும். இசை தெய்வத்தின் இசையை ரசிப்பது தான் வேலை.

\\அருமை சகா. அடிக்கடி எழுதுங்கள். இசையைப் பற்றி. ராஜாவைப் பற்றி.

ச்சே.. ரெண்டும் ஒன்னுதானா?\\

சகாவுக்கு ஒரு ரீப்பிட்டே ;))

அறிவிலி said...

மிக அருமையான பாடல்.

கல்யாணி சுரேஷ் said...

எனக்கு மிக விருப்பமான சில பாடல்களில் இதுவும் ஒன்று.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒரு நல்ல படத்தை நான் பார்த்து வந்த பின் என் நண்பர்கள் குறிப்பிடும் சில இடம் நாம் பார்க்காமல் போனோமே என்று நினைப்பதுண்டு முதல் முறையாக எந்த பாடலும் பிடிக்கும் என்பதோடு நிறுத்தி கொள்ளாமல் இவ்வளவு நுணுக்கமா கவனிக்கணும்னு ஆசையை தூண்டிய ஒரு பதிவு
வாழ்த்துக்கள் பாடலில் லயத்தை மட்டும் கவனிக்காமல் பாடலும் இசையும் பின்ன பட்டிருக்கும் அழகையும் இனி கவனிக்கணும், போலிருக்கே

கார்ல்ஸ்பெர்க் said...

அண்ணா, பரிசல்காரனா இருந்துட்டு பரிசல்'ல பாடிகிட்டே போகுற மாதிரி வர்ற 'Situation Song' எதுவும் பிடிக்காதா?

கைப்புள்ள said...

அருமையான பாட்டுங்க. பகிர்வுக்கு நன்றி.

"இத மாதிரி ஒரு பாட்டை என்னால போட முடிஞ்சதுன்னா, நான் பெருசா சாதிச்சிட்டதா நெனச்சிக்குவேன்னு ராஜாவோட புதல்வர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது ஞாபகம் வருது."

கைப்புள்ள said...

//யுவன் ஒரு பேட்டியில் சொன்னார். இந்த மாதிரி ஒரு பாடல் அவரால் போட முடிந்தால் அன்றுதான் அவர் ஒரு இசை அமைப்பாளர் என்று அர்த்தமாம்.//

ஏற்கனவே சொல்லிட்டாரா?
:))

blogpaandi said...

beautiful song...

விக்னேஷ்வரி said...

நல்லா தான் கூட்டு சேருறீங்க. Good post.

Thamira said...

ஆழ்ந்த ரசனை புரிகிறது, உங்கள் இருவரதும்தான்.!

நானெல்லாம் மெல்லிதாக ஃபீல் பண்ணுவதோடு சரி.!

Thamira said...

அனுஜன்யா said...
போங்கையா - போயி புள்ள குட்டிங்களப் படிக்கவெச்சு அவங்களையாச்சும் உரையாடலில் ஜெயிக்க வெய்யுங்க//

திரும்பத் திரும்ப இதையே சொல்லி வெறுப்பேத்திக்கிட்டிருந்தா திரும்பவும் கதையெழுதிடுவேன். ஜாக்கிரதை.!

சி.வேல் said...

வணக்கம் பரிசல்

அருமை சகா. அடிக்கடி எழுதுங்கள். இசையைப் பற்றி. ராஜாவைப் பற்றி.

ச்சே.. ரெண்டும் ஒன்னுதானா?

நன்றி : கார்க்கி

யாத்ரா said...

இளையராஜாவை தொலைக்காட்சியில் காணும் போதே ஒருவித பணிவும் கனிவும் நிரம்பியதாகிவிடும் மனது. அத்தகைய தெய்வாம்சம் நிரம்பியவர், அவர் இசையின் தீவிர பக்தன் நானும்.

இந்தப் பாடலும், கார்க்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலும் அற்புதங்கள்.

Kumky said...

சாரி.,
ரொம்பவே லேட்டு.

கே.கே.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாட்டு உச்சமில்லையா....
எனக்கு,

இளமையெனும் பூங்காற்று.....

ஈடு இனையே இதுவரை தோனலை.


சரி அத விடுங்க.

தென்றல் வந்து” தீண்டும் போது

சிச்சுவேஷன் சாங்காக போட்டிருக்கலாம்.அற்புதமான பாடல்.இதோ இதை டைப்பும் போது கூட மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சில பாடல்கள் படத்தில் பார்க்காமல் கேட்க மட்டுமே பிடிக்கும்.சில பாடல்க்ள் படத்துடன் சேர்ந்து பார்த்தால்தான் பிடிக்கும்.
ஆனால் இந்த பாடல் மட்டும் எப்படியும் ரசனை கொள்ள வைக்கிறது.
காலங்கள் கடந்தும் கேட்கிற ரகமோ....?

Sampath said...

Thalai ... check this youtube playlist ...

http://www.youtube.com/view_play_list?p=62A6C7841581D6D5

Unknown said...

Super anna.. :))))

பரிசல்காரன் said...

@ கோபிநாத், அறிவிலி, கல்யாணி சுரேஷ்

நன்றி

@ ராஜ்குமார்

ரொம்ப ஃபீல் பண்றீங்க பாஸூ!

@ கார்ல்ஸ்பெர்க்

உங்க பேரை அடிச்சுட்டு சரியா அடிச்சுட்டோமான்னு பார்க்க வேண்டியதாயிருக்கு! என்ன அர்த்தம்பா இந்தப் பேருக்கு?

@ கைப்புள்ள

சரியாச் சொன்னீங்க..

@ ப்ளாக்பாண்டி

நன்றி!

@ விக்கி

கி கி கி .....!

@ ஆதி

நீங்க எவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு மசினகுடில பார்தோமே நண்பா! (தேரே மேரே பீச்சுமே கைஸா ஹய பந்தன்...)

@ வெட்டிப்பையன்

நன்றி!

மிகச்சரியான வார்த்தைகள் யாத்ரா!

@ கும்க்கி

கரெக்ட்! பார்க்கவும் அற்புதமாக அமைகிற பாடல்களில் இதுவுமொன்று!

@ சம்பத், ஸ்ரீமதி

மிக்க நன்றி

நேசமித்ரன் said...

ஏ .ஆர். ரஹ்மானைப் பற்றி ஒருமுறை சுஹாசினியிடம் கேட்ட போது இந்தப் பாடலை மேற்கோள் காட்டி யுவன் சொன்ன பதிலைத்தான் சொன்னார்
பாடலை மைக்ரோ அனாலிசிஸ் செய்திருக்கிறீர்கள் பரிசல்

ஆ.சுதா said...

அருமையான பாடல் அதற்கான பதிவு ரசனை!

அத்திரி said...

அருமையான ரசனை, அருமையான பாடல்

JDK said...

பரிசல்..நன்றி... . ராஜாவின் மேலோடிகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ... அது சரி ராஜாவின் மெலடி என்று வந்து விட்டால் நான் 1,2,3 என்று வரிசை படுத்த மாட்டேன்.நான் இந்த பாடலை எனது கைபேசியில் கூட வைத்து இருந்தேன், பயணங்களில் போது இந்த பாடலை பலமுறை கேட்டுக்கொண்டே செல்வேன்.

லிங்காபுரம் சிவா said...

Mr. பரிசல்காரன்.

This blog layout is good? Can guide me how to get this template?
siva1102@gmail.com

Thanks
Siva

சங்கணேசன் said...

இத்தனை நாள் இதைப்பத்தி எழுதாம இருந்ததற்கே உங்களுக்கு ஒரு கொட்டு வைக்கனும்...

சங்கணேசன் said...

அவதாரம் படம் வருவதற்கு முன் எந்த பாடல் நெ.1 ஆக இருந்தது??..