நேற்றைக்கு நள்ளிரவில் நாளைக்கு என்ன செய்யலாம் என்று இன்றைய பதிவிற்காக மூளையைக் கசக்கி, புத்தியைச் சுருக்கி, புருவமத்தியில் கவனத்தைக் குவித்து யோசித்துக் கொண்டும், நல்லதொரு கருவை யாசித்துக் கொண்டுமிருக்கையில் வந்தார் கவிஞர் கோலகொப்பறக் கொய்யான்.
“நாளைக்கு என் செய்யவென
இன்றைக்கு நினைக்கிறான்
நாளைக்கு இருப்போமாவெனத் தெரியாத இவன்”
“ஐ! கோலக் கொய்யா... என்ன அதிசயம் சாட்டுக்கு வர்றீங்க?”
“இல்ல உங்க ஸ்டேடஸ் மெசேஜ்ல நாளைக்கு என்ன எழுதன்னு போட்டிருந்ததப் பார்த்து சும்மா வந்தேன்”
“ஆமாங்க.. நான் இருக்கற வேலைப் பளுல...”
“மூடு.. இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லுவ? வேலை இப்படியேதான் பிஸியாவேதான் இருக்கும். இருந்தாலும் நேரமொதுக்கி எழுதி உன்னை நம்பி படிக்க வர்ற கோடிக்கணக்கான”
“யோவ் மரியாத கெட்டுடும்”
“சரி.. லட்சக்கணக்கான..”
“என்னது?”
“சரி ஆயிரக்கணக்கான?”
“வேணாம்”
“சரி நூத்துக்கணக்கான.. இல்லைனா என் ஒருத்தனுக்காகவாவது நீ ஏதாவது எழுதித்தானே ஆகணும்?”
“ஒக்கார்ந்தா டக்னு ஒண்ணுக்கு மாதிரி வர்றது கவிதைதான்னு அதையாவது எழுதலாம்னா.. எங்க நான் எழுதி நாளைக்கு நோபல் பரிசு வாங்கீடுவேனோன்னு பயந்து கவிதை எழுதினா ஒதப்பேங்கறாங்க”
“அதுக்கெல்லாம் பயப்பட்டா காலம் தள்ள முடியாது. நானெல்லாம் கவிதை எழுத கை காலெல்லாம் ரத்தம் வர அடிவாங்கிருக்கேன்”
“சரி.. டக்னு ஒரு தலைப்பு சொல்லுங்க கவிதை ட்ரை பண்றேன்”
“ம்ம்... இல்லாள்”
“இல்லாள் செல்லாளாய் இருக்கிறாள் - ஒருமினிட்
கல்லாளாய் இருந்தால் பொறுக்கிறாள் - இல்லையேல்
கல்லால் அடிப்பேன் என்கிறாள் ஐயகோ
நல்லா நமச்சிவாயனே கேள்!”
“அதென்னய்யா நடுவுல ‘ஒரு மினிட்’?
“அது அடுத்த அடியை யோசிக்க எடுத்துட்ட நேரம். அதைக் கூட மறைக்காமல் சொல்கிற நேர்மையாளர் இந்தக் கவிஞர்-ன்னு காட்டறோம் நாம!”
“மொத அடியை மட்டும் நீ எழுதினா போதும்.. அடுத்த அடியை படிக்கறவன் கொடுப்பான்”
“என்னது?”
“ஒண்ணுமில்ல விடு.. இந்த நமச்சிவாயம், நல்லாவெல்லாம் வேண்டாம்லே.. நாட்டுல பட்டினத்தாரைப் படிச்சவன் கல்லால அடிப்பான்”
“வேற எப்படி எழுத?”
“தமிழ்நாட்டுலயே மத்தவங்களுக்கு புரியற மாதிரி எழுதறது நானும், ஜீவசுந்தரமும்தான்னு ஒனக்கு தெரியும்ல?”
“உங்களைத் தெரிஞ்சதுக்கே இந்தப் பாடு.. யாரது ஜீவசுந்தரம்?”
“விடுய்யா.. கேள்வி கேட்டுட்டு. அது ஒரு கற்பனை காதாபாத்திரம். நான் மட்டும்தான்னா ஆணவம்னு சொல்லுவானுகன்னு அந்தப் பேரையும் சொல்லிகிட்டிருக்கேன்.. நானொரு கவிதை சொல்றேன் கேளு....
“பொண்டாட்டி ஒதச்சா அழுவாத
கொண்டாட டாஸ்மாக் ஓடாத
**********************************
எந்நாளும் தேடி ஓடாதே”
(அவர் சாட்டில் சொன்ன மூன்றாவது வரியை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தனி மின்னஞ்சலில் வேண்டுவோர் தொடர்பு கொள்க!)
“இதை கவிதைகள்னு போட முடியாது. கழிப்பறைக் குறிப்புகள்னு வேணும்னா போடலாம்”
“அட! அருமைய்யா... அதுவும் நல்லாத்தான் இருக்கு”
“ஓஹோவெனப் பாராட்டினான் என் கவிதையை
சரியென்று சொல்லிவிட்டு
தேநீருக்கு காசு கொடுக்கச் சொன்னேன்
முறைத்துவிட்டு எழுந்துபோனான்
ரெண்டு ரூபாய்க்குக் கூட உதவாத கவிதை!’ – இது எப்படி இருக்கு?”
“இதேபோல ஏற்கனவே ஒரு கவிஞர் எழுதிட்டாரு...
மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.”
“ஆனா அந்தக் கவிஞர் டீக்காசுன்னு ஆங்கிலத்துல எழுதினதால அதை நாம புறக்கணிச்சு என்னோடதை ஏத்துப்போமே...”
“கிழிஞ்சது போ.. கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.. அதையும் கவிதையாவே சொல்றேன்”
“சொல்லும்”
“விருத்தக் கவிதைகள் எழுதச் சொன்னால்
வருத்தக் கவிதைகள் எழுதுகிறாய்
அவை எவ்வகைக் கவிதைகள்
என்பதில் இல்லை என் வருத்தம்
அதை நீ கவிதைகள் என்பதுதான் வருத்தம்”
**************************
முக்கியக் குறிப்புகள்:
1) இந்தப் பதிவு அவரையோ, இவரையோ அல்லது எவரையுமோ குறிவைத்துக் குறிப்பிட்டு எழுதியதல்ல. அப்படியெவரையேனும் இது குறிப்பிடும்படி இருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானதே.
2) இதை நவீன கவிதைகளை முன்வைத்து சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஆவணமாக பயன்படுத்த விழைவோர் எனது முன்னனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
3) பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.
4) விவாதத்தின்போது நடுவே வந்துவிழுந்த கவிதை ஒன்றை எட்டி உதைக்க மனமில்லாமல் மெல்ல எடுத்து மேசை மேல் வைத்தபோதுதான் கவனித்தேன். அது பெருங்கவிஞர் செல்வேந்திரனார் எழுதியது. அவருக்கும் அவரது அழியாப் படைப்பான முடியலத்துவத்துக்கும் நன்றி. அந்தக் கவிதையை எதுவென்று சொல்லச் சொல்லி உங்களுக்கு போட்டியெல்லாம் வைப்பதாயில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.. ச்சே.. கொள்ளுங்கள்.
5) அந்தக் கவிதையை நான் இங்கே பயன்படுத்தியதை உரிமைமீறலாக அவர் கருதுவாரேயானால் அந்த கவிதையை மட்டும் கைவைத்து மறைத்துக் கொண்டு முழுப்பதிவையும் படிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
6) பதிவைவிட பின்குறிப்பின் நீளம் அதிகரிப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
.
48 comments:
ரைட்டு.. நேத்து பொக்கிஷம் பாத்திட்டு வந்திங்களோ..?
இந்த கவிதை எழுதறவங்க இம்சை முடியல்:)
அய்யோ, அய்யோ,
யாராவது காப்பாத்துங்களேன்.
//வேலை இப்படியேதான் பிஸியாவேதான் இருக்கும். இருந்தாலும் நேரமொதுக்கி //
கொல்றாங்களே.
(தண்டா) டோன்னு போடணுமோ..?:)
அன்புப் பரிசு!
பதிவு டாப்பு
//“ஒண்ணுமில்ல விடு.. இந்த நமச்சிவாயம், நல்லாவெல்லாம் வேண்டாம்லே.. நாட்டுல பட்டினத்தாரைப் படிச்சவன் கல்லால அடிப்பான்”//
கற்கள் தேடும் ஸ்வாமி ஓம்கார்... :)
@ கேபிள் சங்கர்
பொக்கிஷம் பார்த்துட்டும் உயிரோட இருப்பேன்னு நினைக்கறீங்களா நீங்க?
@ தராசு
பதிவில் உள்ள மிக முக்கியமான வாக்கியங்களையெல்லாம் விட்டுவிட்டு ஏதோவொரு வாக்கியத்தால் காயம்பட்டு என்னையும் காயப்படுத்திய உங்களைப் போற்றி அடுத்த கவிதை எழுத ஆலப்புலவாயனாரை அழைக்கிறேன்!
@ மறுபடி கேபிள்ஜி
//(தண்டா) டோன்னு போடணுமோ..?:)//
பு த செ வி
@ லதானந்த்
நன்றி அங்கிள்!
@ ஸ்வாமி ஓம்கார்
நீங்கள் நிறைய கற்றவராயிற்றே... கற்கள் தேடுதல் தகுமோ?
// பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.//
நம்புற மாதிரி இல்லயே
ரைட்டு தலைவா ரைட்டு...
சார் ..... நல்ல முயற்சி. சாட்டில் நீங்க சொன்ன மாதிரியே எழுது தேடல் இருக்கு இந்த பதிவில்..... தொடர்ந்து தேடல் இருக்கட்டும்..... எதாவது புதுசா வருதான்னு பார்போம்
(நான் தான் அன்று உங்களோடு நடு இரவில் மொக்கை போட்டது)
:))))))))
பரிசலண்ணே, தாங்க முடியல, வலிக்குது, அழுதுடுவேன்...
பிரபாகர்.
பதிவு டாப் ....
இந்த அருமையா இருக்குன்னு நினைக்கிறேன் அங்கிள்
Anna are you alright?? :((
//3) பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.//
Ippadi pOttirundhaalum namba mudiyala... :((
என்னா வில்லத்தனம்?
ஆனா டாப் கிளாஸ் மொக்கை சகா.. சான்ஸே இல்லை
வேனா...
விட்டுடு...
வலிக்க்க்க்குது...
அளுதுடுவேன்
ஸ்ஸ்ஸ் அப்பா!!!! இப்பவே கண்ண கட்டுதே!!!!
செம ஷார்ப் மொக்கை ....
அட,இதுவும் நல்லாத்தான் இருக்கு.
சரி விடுங்க.... அந்த சீவசுந்தரம் வால்பையன்தான்கறதை நான் யார் கிட்டயும் சொல்லலை.... :))
//மூளையைக் கசக்கி, புத்தியைச் சுருக்கி//
ரொம்ப மூளைய கசக்கிட்டிங்க போல இருக்கு......
-
-
-
அப்புறும் ஒரு எழுத்து பிழை; ஜீவராம் சுந்தருக்கு பதிலா ஜீவசுந்தரம் என்று போட்டிருகின்றீர்கள் :-)
நீங்க எங்கேயோ போய்டீங்கனா!!!
//“மூடு.. இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லுவ? வேலை இப்படியேதான் பிஸியாவேதான் இருக்கும். இருந்தாலும் நேரமொதுக்கி எழுதி உன்னை நம்பி படிக்க வர்ற கோடிக்கணக்கான”
“யோவ் மரியாத கெட்டுடும்”
//
வர வர உங்க Word எல்லாம் ரெம்ப Bad'ஆ இருக்குதுனா.. :))
இப்படிப் பல இடங்களில் தெரிகிறார் உங்களுக்குள் இருக்கும் வடிவேலு..
@ நாஞ்சில் நாதம்
நம்புங்கப்பா.. பாருங்க நல்லவிதமா ரிப்ளை பண்றேன்ல..
@ நர்சிம்
இருங்க ஒரு நிமிஷம் செகண்ட் கால் வருது..
@ திருச்சிக்காரன்
//நான் தான் அன்று உங்களோடு நடு இரவில் மொக்கை போட்டது)//
அது சரி! உஙகளைத்தான் தேடிகிட்டிருக்கேன்..
@ திகழ்மிளிர்
கவிதைன்னு என்ன இருந்தாலும் வந்துடறீங்களே
@ பிரபாகர்
ம்ம்... அழக்கூடாது.. இது சும்மா ட்ரெய்லர்தான்
@ டம்பீமேவி
அங்கிளா? வேற எங்கயோ போடற பின்னூட்டத்த இங்க போட்டுட்டீங்க தாத்தா...
@ ஸ்ரீமதி
வேணும்னா டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் அனுப்பவா?
@ கார்க்கி
என்ன இருந்தாலும் உன்ன நெருங்க முடியுமா சகா?
@ ghost
நீங்க எழுதினதுல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கைப் பார்த்தா நானும் அழுதுடுவேன்..
@ இளவட்டம்
கி கி கி!
@ நாடோடி இலக்கியன்
அப்படியா???
@ மகேஷ்
சிங்கப்பூர்லேர்ந்து குண்டு போடறீங்களே தல...
@ RR
ஐயையோ.. எப்படியெல்லாம் யோசிக்கறீங்கய்யா... அவரை ஏன் இங்க வம்புக்கு இழுக்கறீங்க? பாவம்க.. ஏதோ உருப்படியா பல வேலைகள் செஞ்சுட்டிருக்காங்க..
@ கார்ல்ஸ்பெர்க்
சரிங்ணா..
naan thaththa illai ....
naan youth thAN
sir....
shadows of library nnu oru book irukku ....
padichu parunga..
unga thedalukku udavum
மெரிசலாயிட்டேன் பரிசல்
You have a good humour skill with poetic mood. Congrats
என்ன ஆச்சு? நேரில வந்து பாக்கணுமா..........
க..க..க..போ..!
.
.
.
கருத்துக்களை கச்சிதமாக கவ்வுகிறீர்கள்.. போங்கள்..!
@ டம்பீமேவி
ஐ! தொர இங்க்லீஸ் பேசுது!
@ தண்டோரா
ஏன்?
@ சம்பத்குமார்
மிக்க நன்றி!
@ வெயிலான்
நேத்து உங்ககூட சாட்னதுல வந்த விலை!
@ பேருந்து காதலன்
நன்றி மன்னா!
//கவிஞர் கோலகொப்பறக் கொய்யான்.//
இவரை நான் நன்கு அறிவேன்!
பதிவர் பாலபத்ர ஓணாண்டியின் தவபுதல்வரே இவர்!
//நானெல்லாம் கவிதை எழுத கை காலெல்லாம் ரத்தம் வர அடிவாங்கிருக்கேன்”//
நான் இனி தான் அடி வாங்க இருக்கிறேன்!
//பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.//
டாக்டர் சர்டிபிகேட் போஸ்ட் பண்ணுங்க!
ஆஹா.......பின்றார்ரா.....பின்றார்ரா..... நோட் பண்ணுங்கப்பா.......ஏய்...ஏய்....நோட் பண்ணுங்கப்பா..........
ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..
மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..
கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...
இருட்டினதும் விளக்கை அணைக்கிறேன்...
டிமென் திஷியா..
வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...
பல்லவன் படிக்கட்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..
விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்
சட்டென்று பெயர் மறந்து போகிறது..
அல்சைமர்..
இதெல்லாம் சரிதான்...
இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்தி..ங் ராங்க்...
ரைட்டு தலைவா ரைட்டு...
@ வால்பையன்
நீங்கதான் எழுதி எழுதி எங்களை அடிக்கறீங்கள்ல?
@ நேசன்
இதை நோட் பண்ணி தொகுத்து புக் பண்ணுங்க..!
@ தண்டோரா
இது வேற யாரோ எழுதினமாதிரி இருக்கே.... அவ்...வ்,.வ்.வ்.வ்.வ்.வ்.
@ ச்சின்னப்பையன்
சரி!
இன்னா சொல்றதுன்னே புர்ல..
உங்கள என்னவோ பெருசா நெனெச்சேன் சும்மா பேருக்கு எழுதக்கூடாது...
கடைசி வரி மிகவும் அருமை.
எழுதப்பட்ட கவிதைகள் வாசிக்கும்படியாக இருக்கிறது அந்த விட்டுப்போன வரியைத் தவிர.
விலைமதிக்க முடியாத நேரத்தை விவாதத்துக்கு, விதண்டாவாதத்துக்கு ஒதுக்கியது என்னவோ சற்று இடருகிறது.
:))))))))
சல்லிக்கற்கள்-(செல்வேந்திரன்)
மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.”
கவிதையை இப்படி எழுதி (கொன்று) குவிக்கிறீர்களே கிருஷ்ணா.....
உங்களை என் பிளாக் க்கு கொலை வெறி உடன் அழைக்கிறேன்
கொன்னுட்டீங்க...போங்க...
/
“அதென்னய்யா நடுவுல ‘ஒரு மினிட்’?
“அது அடுத்த அடியை யோசிக்க எடுத்துட்ட நேரம். அதைக் கூட மறைக்காமல் சொல்கிற நேர்மையாளர் இந்தக் கவிஞர்-ன்னு காட்டறோம் நாம!”
/
சர்தான்
:))))))))))
/
5) அந்தக் கவிதையை நான் இங்கே பயன்படுத்தியதை உரிமைமீறலாக அவர் கருதுவாரேயானால் அந்த கவிதையை மட்டும் கைவைத்து மறைத்துக் கொண்டு முழுப்பதிவையும் படிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
/
கொக்க மக்கா
இது ஜூப்பரு!
:)))
என்னை சபையில் நினைவு கூர்ந்த அன்புடன் வசந்திற்கு அன்பு முத்தங்கள்.
பரிசலுக்கு:
"பாத்துக்கறம்யா..."
Post a Comment