
யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து...
பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.
ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.
ஸ்ரேயா – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா! அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது! அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்!

பாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது! ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை! ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்!
வடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம்! குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி! மற்றவை சுமார்.
டைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.
பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.
கிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.
க்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி......
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
என்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம்! அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்......
கந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..
பி.கு: இனி இந்தக் கதையை வேறு விதங்களில் படமாக எடுத்தால் அந்த டைரக்டருக்கும், நடித்தால் நடிகருக்கும் (Mostly விக்ரம்தான் நடிப்பார்!) ரெட்கார்டு போடவேண்டும் என்று கந்தசாமி கோயில் மரத்தில் கடிதமெழுதிக் கட்டப் போகிறேன்!
.
48 comments:
Mee the Firstttt..
அப்பாடா, நல்ல வேள சொன்னீங்க.. Mee the escapeee.. முதல்லையே எனக்கு லைட்டா டவுட் இருந்துச்சு.. இப்ப confirm ஆயிடுச்சு..
நீங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கோனும் சாமி..
starting எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனா finishing தான் சரி இல்லை ........
building strong ங்கு ஆனா basement weak கு
நான் அப்பவே நினைச்சேன் ; இந்த மாதிரி தான் இருக்கும் என்று ..... நல்ல வேளை சன் டிவி இதை வாங்கவில்லை
தாணு ரொம்ப ரொம்ப நல்லவர் போல் இருக்கே .......
இனி கந்தசாமி ஓடுற தியட்டர் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டோம் இல்ல, விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி பரிசல்.......... பாவும், எல்லா படுத்துக்கும் இப்படி போய் முதல் ஆளா மாட்டிகிறிங்களே!
ரிவ்யீ எல்லாம் சூபர், ஸ்மாஷ் ஹிட்டுன்னு போடறாங்க.. தாணு தப்பிப்பாரா?
//பாவும், எல்லா படுத்துக்கும் இப்படி போய் முதல் ஆளா மாட்டிகிறிங்களே//
சகா, அபப்டியா?????????????????????????????
நானும் முதல் ஷோ தான் போனேன் படித்தில் கதை ஒன்றும் புதியதில்லை தேவை இல்லாமல் வெளிநாட்டு பாடல் காட்சிகள் வேறு என்ன சொன்னனுளும் பாடல காட்சிகள் படத்தை மேதுவாகுகிறன .விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார் ஷ்ரேயா நன்றாக இடுப்பை ஆட்டி இருக்கிறார் டைரக்டர் நிறைய DVD பார்த்திருக்கிறார் அவ்வளவே .வில்லன் முகேஷ் கடைச்யில் காமெடி பண்ணுகிறார் வடிவேலு ஏதோ பண்ணுகிறார் நடு நடுவே .என்ன இருந்தாலும் அவர்கள் திரை துறையில் நடுக்கும் கொள்ளைகலை காட்ட மாட்டார்கள் இந்த படமும் விதி விலகு அல்ல .
kanthasaamy-a typical tamil cinemas super hero with a same old task
ரைட்டு தல.... ரெம்ப தேங்க்ஸ்.........!!!
நல்ல விமர்சனம்
பரிசலு..
இந்த விமர்சன மேனியாவில் நீங்களும் சிக்கணுமா..?!!!
/பரிசலு..
இந்த விமர்சன மேனியாவில் நீங்களும் சிக்கணுமா..?!!!
//
ஏன் நீங்க இன்னும் படம் பாக்கலைன்னு காண்டா..? சும்மா இருங்கண்ணே.. பரிசல் நீங்க எழுதுங்க.
கார்க்கி , சமாஷ் ஹிட்டா எங்க அன்டார்டிக்காலையா ? .
பரிசல் , ஷ்ரியா அபாரமாமே ? :P
இருந்தாலும் படம் பாக்க 2 காரணம் இருக்கு .......
1 ........... ஸ்ரேயா cock man னுக்கு எத்த செம வெடக்கோழி அதிலும் பாத டாப் பிலிருந்து வரும்போது நம்மையும் எட்டி பாக்க வைக்கிறார் (ஒன்னும் தெர்லே)
2............. ஒரு நல்லா தயாரிப்பாளரை தமிழ் சினிமா இழக்க வேண்டாம் .
தல, நாங்களும் சிக்கிட்டம்ல.. சோஃபியா எபெக்ட் படு கண்ராவி, அழகான இயற்கை காட்சிகளைகூட மஞ்சளா... படுபாவம்.
எனக்கென்னவோ ஸ்ஸ்ஸ்ரேயாவைவிட ச்சீயாந்தான் அழகா இருந்ததா தோனுது
//ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் //
ஆக நீங்க வேற எந்த மூவ்மெண்டையும் பார்க்கல?!!! சரி நம்பிட்டோம்!
//இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார்.//
எப்படி தெரிகிறார் மங்கலாவா இல்லை பளீச் என்று தெரிகிறாரா?
/
அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது!
/
:)))
படமே பார்த்த மாதிரி இருக்கு கிருஷ்ணா.......
//யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது.//
நேத்தே அந்த கோயிலுக்கு தாணு சீட்டு எழுதிப் போட போயாச்சு
//முதல்லையே எனக்கு லைட்டா டவுட் இருந்துச்சு.. இப்ப confirm ஆயிடுச்சு..//
எங்களுக்கும் அதே டவுட் தான் வேட்டைக்காரன் மேல
இப்படிக்கு ஒரு விக்ரம் ரசிகன்
விக்ரமுக்கு காது கேட்காதோ? வாழ்க்கையை அதிகம் வேஸ்ட் பண்ண நல்ல நடிகர்! தாணு இன்னும் எத்தனை தடவைதான் ஏமாறுவாரோ?
திருமணநாள் வாழ்த்துக்கள் பரிசல்..
திருமணநாள் வாழ்த்துக்கள் பரிசல்..
//பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார்,/// எங்க சார்.பிரபு கடைசில செம கொமெடி பீஸ் ஆயிட்டாரு... தாங்கமுடியல....ஸ்டண்ட் யார்னு தெரியல...செம காமெடி...
If you see Gayathri's Blog (Paalaithinai) in 2008 itself we have said this film will be boring and not upto expectation.
You could see Gayathri's blog about kaadhalil vizundhen. That time one asscoiate director fired us, how can u say this film will be boring etc.
Sus Ganesan and all have that muhc stuff only, he cant be shankar.
திருமணநாள் வாழ்த்துக்கள் பரிசல்..
மணநாள் காணும் பரிசல் அண்ணனுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்லுங்க ....
அத நினைவு படுத்துன கார்கி அண்ணனுக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்க ...
மறுபடியும் வாழ்த்துக்கள் அண்ணா கும் உமா அண்ணிக்கும் ( பெயர் கரெக்ட் னு தான் நினைக்குறேன் )
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா & உமா...
//டம்பி மேவீ said...
நல்ல வேளை சன் டிவி இதை வாங்கவில்லை//
ஏன் நீங்க என்ன sun tv n partner-a? r managing directora?
தல திருமணநாள் வாழ்த்துக்கள், அவசியம் உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
திருமணநாள் வாழ்த்துக்கள்
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இதை ஞாபகப்படுத்திய நண்பர் கார்க்கி-க்கு நன்றியும் வாழ்த்தும்
http://www.karkibava.com/2009/08/blog-post_22.html
innum ethanai nalaikkuthan ippadi padam edupangalo theriyala... very good critic parisal.. i think director is watching english movie dvd and wants to do the same here in tamil cinema..as evertody said producer thanu romba pavam...
//: இனி இந்தக் கதையை வேறு விதங்களில் படமாக எடுத்தால் அந்த டைரக்டருக்கும், நடித்தால் நடிகருக்கும் (Mostly விக்ரம்தான் நடிப்பார்!) ரெட்கார்டு போடவேண்டும் என்று கந்தசாமி கோயில் மரத்தில் கடிதமெழுதிக் கட்டப் போகிறேன்!
//
ஹி ஹி ஹி
திரு & திருமதி பரிசலுக்கு எண் அன்பார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!
நினைவுபடுத்திய கார்கிக்கு நன்றிகள்!
சண்டே போகலாம்னு நினச்சேன். போகவா.... வேண்டாமா....
ஷ்ரேயா என்ற மொக்கை பிகரை ரசித்ததுமில்லாமல் அந்த ஜொள்ளில் படத்தை அளவுக்கு மீறி புகழ்ந்திருக்கிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது..
ஆமா அதென்ன கோழிமனிதனா? ஏண்டா புதுமையா சிந்திக்கவே தெரியாதாடா உங்களுக்கு படுத்துறீங்க. ஹாலிவுட்ல ஸ்பைடர்மேன், பேட்மேன் அப்படின்னா நமக்கு கோழியா என்னங்கடா இது.? ஏன் பன்றிமனிதன்னு வைக்கிறதுதானே.. வில்லன்கள்லாம் பக்கத்திலயே வராம ஓடிப்போயிருவானுங்கள்ல.. சை.!
வாழ்த்துகள் பரிசல்.! (ஹிஹி.. யாருக்கும் திருமணநாள் வாழ்த்துகள் மட்டும் சொல்றதில்ல.. கொள்கைமுடிவு. இருந்தாலும் உங்களுக்காக தளர்த்திக் கொள்ளப்படுகிறது)
ஆஹா.. நான் தனி ஆள் இல்ல அப்டினு பஞ்ச் அடிக்கலாம் போல இருக்கே!!! ;)
வாங்கோ வாங்கோ
உங்க ப்ட லிஸ்ட்ல் சிவாஜிய விட்டுவிட்டீர்களே(அந்த கருப்பு பணம் மேட்டர்)
ரசித்தேன்.
நீங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கோனும் சாமி..:))
கிருஷ்ணா.. ஸ்ரேயா வீட்டுக்கு அடுத்த வீடு உங்களுக்காகவே காலியாருக்க கலைஞர் உத்தரவு போட்டிருக்க்காராம்
parisal anna and anni..
thangalakku thirumana naal vaazhthukkal
//ஷ்ரேயா என்ற மொக்கை பிகரை ரசித்ததுமில்லாமல் அந்த ஜொள்ளில் படத்தை அளவுக்கு மீறி புகழ்ந்திருக்கிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது..
//
என் வாழ்க்கையில் கொடுமை என்றால் இந்த படம் பார்த்ததுதான்
உங்கள் விமர்சனம் ஓரளவு மட்டுமே உண்மை.. அனைத்து சினிமா பிரியர்களும் பார்க்க வேண்டிய ஒரு தரமான படம். விக்ரமின் உழைப்பிற்காகவே கட்டாயம் பார்க்க வேண்டும். படத்தின் மைனஸ் போய்ண்ட் ஸ்ரேயா. அவரைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் 100 நாடகள் அதிகம் ஓடியிருக்கும். ஒரே மாதிரியாக நடித்து, நடனம் ஆடி போரடிக்கும் நடிகர்களின் படத்திற்கு மத்தியல் , ஒரு நல்ல கருவை எடுத்து பிரமாண்டமாக்கிய இயக்குனருக்கும் நன்றி. இம்மாரிதியான படங்களைக் குறை கூறுவதை நிறுத்திக் கொண்டு, மற்றவர்கள் பார்ப்பதற்கு வழிவிடுங்கள். நான் விக்ரமின் ரசிகன் அல்ல. விஜய் ரசிகன். ஆனால் இப்படத்தைப் பார்த்ததும், விஜயின் ரசிகன் என்று சொல்வதற்குக் கேவலமாக இருக்கிறது. good luck vikram... thanks for a really entertaining movie..
hello film first week collection 37 crore maamu
superrrrrrr
Post a Comment